வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 08, 2014

கிப்லா - ஒருங்கிணைக்க ஒரு திசைஒரு ரஜப் மாத்த்தின் மத்தியில் கிப்லா மாற்றம் நடந்த்து,
عن ابن عباس ان القبلة بأمر الله تحولت من بيت المقدس إلى الكعبة في منتصف شهر رجب من السنة الثانية للهجرة

11 February 624 – the Qiblah became oriented towards the Kaaba in Mecca

முஸ்லிம்களின் வாழ்க்கையில் கிப்லாவை முன்னோக்குதல் என்பது முக்கியமான ஒரு செய்கையாகும்.

கிப்லா என்ற அரபி வார்த்தைக்கு முன்னோக்குமிடம் என்று பொருள். தொழுகையிலும் மற்ற சில சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் கஃபாவை முன்னோக்கி செயல்படுகிற காரணத்தால் கஃபா முஸ்லிம்களின் கிப்லாவாகும்.

இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் மதீனாவில், 17 மாத காலம் ஜெரூஸலத்திலிருக்கிற பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது வந்த முஸ்லிம்களை மக்காவிலிருக்கிற கஃபாவை நோக்கி தொழுமாறு அல்லாஹ் உத்த்ரவிட்டான்.  

இந்த மாற்றம் ஆரம்ப கால முஸ்லிகளின் சமூக வாழ்வில் இஸ்லாமின்  அடையாளத்தை தனித்துவத்தோடு நிலைநிறுத்தும் ஒரு ஏற்பாடாகவும் அல்லாஹ் விசயத்தில் இஸ்லாமின் கோட்பாட்டை தெளிவாக விளக்கும் ஒரு குறீயீடாகவும் அமைந்த்து.  

இஸ்லாமிய  சட்ட அமைப்புல் நடைபெற்ற முதல் மாற்றம் கிப்லா மாற்றம் என்பதும் குறிப்பிட்த்தக்கதாகும்

عن عكرمة والحسن البصري قالا: أول ما نسخ من القرآن القبلة.
  
தொழுகை மிஃராஜ் இரவில் கடைமையாக்கப்பட்ட்து.
அதற்கடுத்த இரண்டு நாட்களில் ஜிப்ரயீல் அலை அவர்கள் பெருமானாருக்கு தொழுகையின் மற்ற விபரங்களையும் நேர அளவுகளையும் கற்றுக் கொடுத்தார்கள்.

அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கி தொழுதார்கள்.

மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான்.

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. எனினும் பிரதான காரணம் மதீனாவைச் சுற்றி வசித்து வந்த யூதர்கள் பைத்துல் முகத்தஸை கிப்லாவாக கொண்டிருப்பதால் அதே கிப்லாவை முஸ்லிம்கள் பின்பற்றினால் யூதர்கள் இஸ்லாமிற்கு நெருங்கி வருவதற்கு அது காரணமாக அமையலாம் என்பதனால் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். பல திருக்குர் ஆன் விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள்.

ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கோ கஃபாவை நோக்கி தொழ வேண்டும் என்பதே விருப்பமாக இருந்த்து, அப்படி உத்தரவிட்டு ஒரு வசனம் அருளப்படாதா என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுத பிறகு ஒரு ரஜப் மாத்த்தின் மத்தியில் கஃபாவை நோக்கி தொழுது கொள்ளுமாறு அல்லாஹ் உத்த்ரவிட்டான்,

لما هاجر رسول الله صلى الله عليه وسلم إلى المدينة صلى إلى بيت المقدس ستة عشر شهراً وكان يحب أن يصرف إلى الكعبة لما بلغه أن اليهود قالوا: يخالفنا ويتبع قبلتنا، فقال: «يا جبريل وددت أن الله صرف وجهي عن قبلة يهود». فقال جبريل: إنما أنا عبد فادع ربك وسله، وجعل إذا صلى إلى بيت المقدس يرفع رأسه إلى السماء ينتظر أمر الله لأن السماء قبلة الدعاء، فنزلت عليه: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَآء فَلَنُوَلّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا} (البقرة: 144)، فوجه إلى الكعبة إلى الميزاب،
يقال: بل زار رسول الله صلى الله عليه وسلم أم بشر بن البراء بن مُعرور في بني سلمة فصنعت له طعاماً وحانت الظهر فصلى رسول الله صلى الله عليه وسلم بأصحابه ركعتين ثم أمر أن يتوجه إلى الكعبة فاستدار إلى الكعبة واستقبل الميزاب فسُمِّيَ المسجد مسجد القبلتين وذلك يوم الإثنين للنصف من رجب على رأس ثمانية عشر شهراً، 

கிப்லா மாற்றம் செய்யப்பட்ட போது முஸ்லிம்களில் சிலருக்கு ஒரு சந்தேகம் வந்த்து.  பெருமானார் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தார்கள்

فقال رجال من المسلمين وددنا لو علمنا من مات منا قبل أن نصرف إلى القبلة وكيف بصلاتنا نحو بيت المقدس فأنزل الله "وما كان الله ليضيع إيمانكم"


முஸ்லிம்கள் ஏற்கெனவே தெளிவு பெற்றிருந்தார்கள்.
وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ(115)

பைத்துல் முகத்த்ஸோ அல்லது கஃபாவோ தொழுகையின் போது முன்னோக்க தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு திசை தானே தவிர அங்குதான் அல்லாஹ் இருக்கிறான் என்று அர்த்தம் கிடையாது. அல்லாஹ் எங்கும் இருக்கிறான். நாம் செய்ய வேண்டியது அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்படுவது மாத்திரமே ! அல்லாஹ் எங்கு திரும்பச் சொன்னாலும் திரும்ப வேண்டியதுதான்

இது விச்யத்தில் முஸ்லிம்களுக்கு தடுமாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல்  சட்ட மாற்றம் இது என்றாலும் இதற்குரிய நியாயம் தோழர்களுக்கு புரிந்தே இருந்த்து,

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கிடையே சந்தேக்கத்தை விதைக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் யூதர்கள் இதை கடுமையாக விமர்ச்சித்தார்கள், பல நாட்களாக இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிது படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

இதென்ன சட்டங்களை மாற்றுகிறீர்கள் ? இதெப்படி சத்தியமாகும் ? என்ன காரணத்திற்காக மாற்றினீர்கள்?  அப்படியானால் இத்தனை நாட்கள் செயத்த்தெல்லாம் தவறா? நபிக்கு அழகு இப்படி மாற்றிக் கொண்டிருப்பதா? என்றெல்லாம் கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

(ஒன்றுக்கும் உதவாத விச்யத்தை வைத்துக் கொண்டு ந்ம் நாட்டில் இப்ப்து ஹிந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சி செய்கிறார்கள் அல்லவா அது போல )

ஆனால் முஸ்லிம்கள் எந்த மிக நிதானமாகவும் தெளிவாகவும் அவர்களது பிரச்சாரத்தை எதிர் கொண்டார்கள். திருக்குர் ஆனின் அல்பகரா அத்தியாயத்தின் 142 வது வசனத்திலிருந்து 150 வரைக்கு முன்டான வசன்ங்களில் யூதர்களின் பலதரப்பட்ட ஊகங்களுக்கும் அல்லாஹ் பதிலளித்தான்.

கிப்லா மாற்றத்தில் தவறு ஏதும் இல்லை என்பதை புரிந்து கொண்டிருந்தும் கூட தங்களது அற்பத்தனமான குணத்தின் காரணமாக அதில் தவறு கண்டுபிடிக்க முயன்றவர்களை முட்டாள்கள் மடையர்கள் என்று அல்லாஹ் விமர்ச்சித்தான், குர் ஆன் கடுமையான சொற்களை பிரயோகித்த மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும்

سَيَقُولُ السُّفَهَاءُ مِنْ النَّاسِ مَا وَلَّاهُمْ عَنْ قِبْلَتِهِمْ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(142)

நபியின் விச்யத்தில் சஞ்சலமில்லாமல் அவரைப் பின்பற்றுவது யார் என்பதை கண்டு கொள்வதற்கு இந்த கிப்லா மாற்றத்தின் மூலம்  வழி ஏற்படும் என்றும் அல்லாஹ் விவரித்தான்,

 وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ


இந்த மாற்றம் தேவை என பெருமானார் (ஸல்) அவர்கள் ஏற்கெனவே ஆசைப் பட்டுக் கொண்டிருந்த்தை சுட்டிக்காட்டி அந்த ஆவலை தான் பூர்த்தி செய்த்தாக அல்லாஹ் கூறினான்

قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ
.
இந்த மாற்றங்கள் சரிதான் என்பது யூதர்களுக்கு தெரிந்த செய்திதான் என்பதையும் அல்லாஹ் வெளிப்படுத்தினான்

وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ(144)

இவர்களை திருபதி படுத்துகிற நோக்கில் என்ன சொன்னாலும் இனி அவர்கள் திருந்தப் போவதில்லை என்றும் நம்முடைய கிப்லா மாறப் போவதில்லை என்றும்  அல்லாஹ் தெரியப்படுத்தினான்

وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ

என் இனிமேல் குழப்பம் செய்கிற வழியை விட்டு விட்டு ஒவ்வொரு சாராராருக்கும் இறைவன் ஒரு வழி முறை கொடுத்திருக்கிறான் என்ற் அடிப்படையில் நன்மை செய்வதில் முந்திக் கொள்ளுமாறு அல்லாஹ் அறிவுறுத்தினான்.

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمْ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(148)

முஸ்லிம்களின் மார்க்க விச்யத்தில் குழப்பத்தை ஏற்படுத்த யூதர்கள் செய்த முதல் முயற்சி பழிக்கவில்லை,

கிபலா மாற்றம் என்ற இந்த முதல் சட்ட திருத்தத்தை முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி சரியாக எடுத்துக் கொண்டார்கள்.

இது தங்களுக்கு இறைவன் செய்த பேரருள் என் மகிழ்ச்சி யடைந்தார் கள்,

عناية عظيمة
 إذ هداهم إلى قبلة إبراهيم خليل الرحمن وجعل توجههم إلى الكعبة المبنية على اسمه تعالى وحده لا شريك له أشرف بيوت الله في الأرض
கஃபா மாற்றத்தில் யூதர்கள் குழப்பம் செய்ய இன்னொரு காரணம் அவர்களுடைய பொறாமையாகும் என்  பெருமானார் (ஸல்) அவரகள் விளக்கினார்கள், அவர்களுடை கிப்லாவை விட நம்முடைய கிப்லா சிறந்த்தாகி விட்ட்தல்லவா? இது இபுறாகீம் நபியின் கிப்லா அல்லவா? இபுறாகீம் (அலை) கட்டியதல்லவா?

وقد روى الإمام أحمد -عن عائشة قالت: قال رسول الله صلى الله عليه وسلم يعني في أهل الكتاب "إنهم لا يحسدوننا على شيء كما يحسدوننا على يوم الجمعة التي هدانا الله لها وضلوا عنها وعلى القبلة التي هدانا الله لها وضلوا عنها وعلى قولنا خلف الإمام آمين".
கஃபாவை கிபலா என்று சொல்கிற போது நம்முடைய சட்ட அறிஞர்கள் அன்றே தெளிவாக சில விசயங்களை சொல்லி வைத்தார்கள். அது இன்றைக்கு மிக பயனுள்ளதாக ஆகிவிட்ட்து.

கஃபாவின் கட்டிடம் மட்டும் கிப்லா அல்ல. கஃபாவின் இடம் திசை முழுவதுமே கிபலா தான் என்று வரையறுத்தார்கள்,
 المراد بالقبلة موضع الكعبة،
وما فوق الكعبة إلى السّماء يعدّ قبلةً، وهكذا ما تحتها مهما نزل، فلو صلّى في الجبال العالية والآبار العميقة جاز ما دام متوجّهاً إليها، لأنّها لو زالت صحّت الصّلاة إلى موضعها، ولأنّ المصلّي على الجبل يعدّ مصلّياً إليها‏.‏

இன்று வானளாவிய கட்டிடங்கள் கஃபாவைச் சுற்றியும் உலகம் முழுவதிலும் வந்து விட்ட நிலையில் அதே போல அண்டர் கிரவுண்டில் பள்ளிவாசல்கள் உருவாகி விட்ட சூழலில் (சிங்கப்பூரில் ரபல் பிளேஸில் மிக உயரமான் பில்டிங்கில் அண்டர் கிரவுண்டில் மௌலான முஹ்ம்மது அலி பள்ளிவாசல் இருக்கிறது.) அங்கிருந்த படியும் கிபலாவை முன்னோக்க முடியும என்று அவர்கள் அன்று விளக்கம் சொல்லி வைத்து வசதியாகிவிட்டது.

நன்மைகள்
முத்லாவதாக இந்த கிப்லா மாற்றம் மூலமாக் முஸ்லிம்களின் சமய அடையாளம் மற்ற சமூகத்தவரின் குறிப்பாக யூதர்களின் சம்ய அடையாளத்திலிருந்து மாறு பட்டு தெளிவாகியது. இதன் பிறகு முஸ்லிம் சமூகத்தின் தனிப்பட்ட அடையாளங்களை நிறுவும் பணி தொடங்கியது.

இதற்குப் பிறகுதான்
1.   பாங்கு
2.   நோன்பு
3.   ஜகாத்
4.  ஜிஹாது
அனைத்தும் வரிசையாக கடைமையாக்கப்பட்டன.

இந்த வகையில் கஃபா மாற்றம் என்ற சட்ட திருத்த்த்தின் சமூக முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
  
இரண்டாவதாக முஸ்லிம்களின் இறையியல் கோட்பாடு அல்லாஹ்வை பற்றிய கருத்தோட்டம் தெளிவாகியது.

நாம் கஃபாவை நோக்கி தொழுகிறோம் இதன் பொருள் இறைவன் அங்கு தான் இருக்கிறான் என்ற அர்த்த்தமல்ல. இதற்கு முன் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதோம் அப்போது இறைவன் அங்கிருந்தான் என்று அர்த்தமல்ல . இறைவனுக்கு இடமோ காலமோ கிடையாது அவன் எங்கும் இருப்பான், எப்போதும் இருப்பான்.

(த்ற்கால முஸ்லிம்களும் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்)

நாம் மேற்கு நோக்கி தொழுகிறோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்படி அல்ல நாம் கஃபாவை நோக்கியே தொழுகிறோம்.. கஃபா நமக்கு மேற்கே இருக்கிற்து, மதீனாவில் தெற்கு நோக்கி தொழுகிறார்கள், காரணம் கஃபா மதீனாவிற்கு தெற்கே இருக்கிறது, அப்படியே எமன் நாட்டு மக்கள் வடக்கு நோக்கியும் எகிப்தியர்கள் கிழக்கு நோக்கியும் தொழுகிறார்கள்.

இந்த உண்மையை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் பாரதியார் திக்கை வணங்கும் துருக்கர் என்று பாடிவிட்டார்.

ஏன் கஃபாவை நோக்கி தொழுகிறோம்,

கஃபாவில் கஃபாவைச் சுற்றி எட்டுத்திசையிலும் மக்கள் தொழுகிறார்கள், அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்பதை பல இலட்சம் மக்கள் ஒன்றுபட்டு உலகிற்கு  உணர்த்துகிறார்கள்.

கஃபாவிற்கு வெளியே அதே ஒற்றுமையை நிலை நாட்டுவதற்காக உலகின் எல்லா திக்கிலுமிருக்கிற மக்கள் தொழுகையில் கஃபாவை முன்னோக்குகிறார்கள்.  இது தொழுகையாளிகளிட்த்தில் அற்புதமான ஒற்றுமையை நிலை நாட்டுகிறது. உருவமற்ற இறைவனை வணங்க இப்படி ஒரு தீர்மாணம் இல்லை எனில் ஒரு பள்ளிவாசலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் தொழுவார்கள். மக்கள் சிதறிப் போவார்கள்.  

முஸ்லிம்களிடையே தொழுகையில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக ஒரு கிப்லாவை இஸ்லாம் சுட்டிக் காட்டியது.

யாரவது ஒருவர் பூமிக்கு மேலே நின்று உலகம் முழுவதிலும் தொழுகிற முஸ்லிம்களின் பாத அடிகளில் கோடு வரைவார் என்றால் அது கஃபாவை சுற்றி இருப்பது போலவே உலகளாகவிய வட்டமாக இருப்பதை காணலாம், கஃபாவில் மட்டுமல்ல. முழு உலகிலும் இறைவனை எண் திசையிலும் முஸ்லிம்கள் வணங்குகிறார்கள். எங்கும் இருக்கிற இறைவனுக்கு பொருத்தமான வணக்கமாக அது அமைகிறது.

இந்த வகையில் உலகில் வேறு எந்த ஆலயங்களுக்கு இல்லாத சிறப்பு முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு உண்டு அவை அனைத்தும் ஒரே திக்கில் அமைந்திருக்கின்றன, - மற்ற சமயத்தவரின் ஆல்யங்களைப் பாருங்கள் அப்படி ஒன்று இப்படி ஒன்று அமைந்திருக்கும் பள்ளிவாசல்கள் ஒரே திசை நோக்கி அமைந்திருக்கும்.

தொழுகையில் கஃபாவை முன்னோக்குவது, சரியான கஃபாவின் திசையில் கஃபாவை அறிந்து பள்ளிவாச்ல்களை கட்டுவது முஸ்லிம்களின் மீத் க்டமையாகும். ஏனெனில் தொழுகையில் கஃபாவை முன்னோக்குவது ருக்னு அதாவது கட்டாய கடமையாகும்.  கஃபாவை கண்டறிவதில் கவனம் செலுத்தாமல் தொழுதால் அந்த தொழுகை செல்லாது.

لا خلاف في أنّ من شروط صحّة الصّلاة استقبال القبلة، لقوله تعالى‏:‏ ‏{‏فولّ وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولّوا وجوهكم شطره‏}‏ أي جهته

தொழுகையில் கிப்லாவின் திசையை விட்டு நெஞ்சை திருப்பினால் தொழுகை முறிந்து விடும்
أنّ من مفسدات الصّلاة تحويل المصلّى صدره عن القبلة بغير عذرٍ اتّفاقاً، وإن تعمّد الصّلاة إلى غير القبلة على سبيل الاستهزاء يكفر، وهذا متّفقٌ مع القواعد العامّة للشّريعة

ஒருவேளை ஒரு முஸ்லிம் அலட்சியத்தாலோ அல்லது கிப்லாவை கேலி செய்யும் நோக்கிலோ இவ்வாறு நடந்து கொண்டால் அது குப்ராகிவிடும் என்று சட்டநூல்கள் எச்சரிக்கின்றன.

கிப்லாவை முன்னோக்குகிற விசயத்தில் சட்ட அறிஞர்களின் ஆழமான ஆய்வு இதன் முக்கியத்துவத்தை புலப்படுத்துகிறது.

ஹனபி மத்ஹபில் கிப்லாவின் திசையை முன்னோக்கினால போதுமானது என்கின்றனர், ஷாபி மத்ஹபில் நேர் கிப்லாவையே முன்னோக்க வேண்டும் என்கின்றனர்,

مذهب الحنفيّة، وهو الأظهر عند المالكيّة، والحنابلة، وهو قولٌ للشّافعيّ‏:‏ أنّه يكفي المصلّي البعيد عن مكّة استقبال جهة الكعبة باجتهادٍ، وليس عليه إصابة العين، فيكفي غلبة ظنّه أنّ القبلة في الجهة الّتي أمامه، ولو لم يقدّر أنّه مسامتٌ ومقابلٌ لها. واستدلّوا بالآية الكريمة‏:‏ ‏{‏وحيثما كنتم فولّوا وجوهكم شطره‏}‏ وقالوا‏:‏ شطر البيت نحوه وقبله

والأظهر عند الشّافعيّة، وروايةٌ عن أحمد اختارها أبو الخطّاب من الحنابلة‏:‏ أنّه تلزم إصابة العين‏.‏ واستدلّوا بقوله تعالى‏:‏ ‏{‏وحيثما كنتم فولّوا وجوهكم شطره‏}‏ أي جهته، والمراد بالجهة هنا العين؛ وكذا المراد بالقبلة هنا العين أيضاً،

இது பொதுவான சந்தர்ப்பத்தில் தான் பள்ளிவாசல்கள் அமைக்கும் போது இன்றைய வளர்ச்சியடைந்த் சூழ்நிலையில் நேர் கிப்லாவையே அமைக்க வேண்டும்.

கருவிகளின் துணையோடு அல்லது ஆய்வு அடிப்ப்டையில் கிப்லாவை கண்டறியும் கல்வியை படிப்பது வாஜிபு கிபாயா என்று இமாம் ஷாபி ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

تعلّم العلامات الّتي تعرف بها القبلة مطلوبٌ شرعاً، وقد صرّح الشّافعيّة في الأصحّ عندهم بأنّ هذا واجبٌ على سبيل الكفاية

தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் முஸல்லாவை போட்டு தொழ  முடியாது. கிப்லா திசைய அறிய முயற்சிக்க வேண்டும். அருகிலிருப்பவர்களை விசாரிக்கனும் அல்லது பள்ளிவாசல்களின் திசையை வைத்து அனுமானிக்கனும் அல்லது சூரிய உதயம அஸ்தமனத்தை வைத்து முடிவு செய்யனும். இவ்வாறு முயற்சி செய்யாமல் தொழுத பிற்கு கிப்லாவை மாற்றி தொழுதிருப்பதாக தெரிவ வந்தால் அத்தொழுகை செல்லாது. தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்றாலும்.
اتّفقت المذاهب الأربعة على وجوب الاجتهاد في القبلة في الجملة‏.‏
وصرّح ابن قدامة بأنّ شرط الاجتهاد لا يسقط بضيق الوقت مع إمكانهசரியான கிப்லாவை கண்டு பிடிப்பது இன்றையை காலத்தில் ஒரு சிரமமான காரியமல்ல. நமக்கு கிப்லா மேற்கே இருக்கிறது. காம்பஸ் கருவியின் உதவி கொண்டு மேற்கு எது என்பதை தீர்மாணித்துக் கொள்ளலாம்.
மேற்கு எது என்று தெரிந்து கொண்ட பிறகு நம்முடை ஊரின் அட்சசைய ரேகை தீர்க்க ரேகை எண்களை கொடு இண்டெர்னெட்டில் இருக்கிற கிப்லா காட்டும் சாப்ட் வேர்களில் கொடுத்தால் சரியான மேற்கிலிருந்து எத்தனை டிகிரி வட புறமாக அல்லது தென்புறமாக சாய்ந்து கொள்ள வேண்டும் என்பதை அது காட்டும். அந்த அளவுக்கு வடபுறமாக (தமிழ் நாட்டில் இருப்பவர்கள்) திரும்பிக் கொண்டால் சரியான கிப்லா கிடைத்து விடும்.
உதாரணத்திற்கு கோயமுத்தூரின் அட்சரேகை தீர்க்க ரேகை இது.
11.02 -76.96 என்பதை கொடுத்தால் 21.9 டிகிரி அளவுக்கு மேற்கிலிருந்து வடக்காக திரும்பிக் கொள்ள வேண்டும் என்ற தகவல் கிடைக்கிறது.(eqiblq.com)
இயற்கையாக இண்டெர்னெட்டில் முக்கிய நகரங்கள் பெரும்பாலானவற்றிற்க் கிப்லாவிற்காக திரும்பிக் கொள்ள வேண்டிய டிகிரியின் அளவை கொடுத்திருக்கிறார்கள்.  
ஆண்ட்ராய்ட் செல்போன்களில் டிஜிட்டல் காம்பஸ்கள் வந்து விட்டன.   ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டில் கிடைக்கிற தொழுகை நேர அப்ளிகேஷன்களில் திசை காட்டும் ஆப்சன் இருக்கிறது.
 
ஒரு செல்வந்தர் தன் வீட்டுகு பக்கத்திலிருந்த ஒரு இட்த்தை பள்ளிவாசல் கட்டினர்ர். கட்டுகிற போது கிப்லா குறித்த எந்த சிந்தனையும் அவரிடம் இருக்கவில்லை. கட்டிட வசதிக்கேற்ப ஓரளவு மேற்கில் இருக்கிற மாதிரி கட்டிவிட்டார். பிறகு தொலை பேசியில் தொடர்பு கொண்டார். என்ன செய்வது என்று கேட்டார். முன்னதாக செய்ய வேண்டியதை முடித்த பிறகு கேட்கிறீர்கள். தகுந்த ஒரு நபரை வைத்து கிப்லாவை கனித்த பின் தொழுகைக்கு பாய் விரியுங்கள் என்றேன். மிஹராப் எல்லாம் கட்டி விட்டேனே வேறு வழியில்லையா > என் பில்டிங்க் அமைப்பிற்கு இப்படி கட்டினால் தான் ந்ன்றாக இருக்கும் அதனால் இப்படி க்ட்டினேன். நீங்கள் சொல்வது படி மாற்றினால் அசிங்கமாக இருக்குமே என்றார் பாருங்கள் நான் அசந்து போனேன்.

மார்க்கத்தின் இது என்ன வகையான அசமஞ்சித்தனம்? அல்லது தைரியம்? அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

கஃபாவை முன்னோக்க முடியாத சில நெருக்கடியான நேரங்களுக்கு மார்க்கம் சில சலுகைகளை கொடுத்து இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும், இது நிர்பந்த நிலைக்க்கு மட்டுமே பொருந்தும்,

ذهب الأئمّة الأربعة إلى أنّ من به عذرٌ حسّيٌّ يمنعه من الاستقبال كالمريض، والمربوط يصلّي على حسب حاله، ولو إلى غير القبلة،
واشترط الشّافعيّة، والصّاحبان من الحنفيّة لسقوط القبلة عنه أن يعجز أيضاً عمّن يوجّهه ولو بأجر المثل

உதாரணமாக பேருந்து இரயில் விமானம் குதிரை போன்ற வற்றில் பய்ணம் செய்கிற போது கீழே இறங்கி கஃபாவை முன்னோக்கித் தொழுவது  சாத்தியப்படாது – தொழுகை கழாவாகிவிடும்  என்ற நிலையில் தொழுகையை ஆரம்பிக்கும் போது கஃபாவை நோக்கி ஆரம்பிக்க வேண்டும். இடையில் வாகனம் திரும்பினால் கஃபாவை நோக்கி திரும்ப முடியும் என்றால் திரும்பிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் வாகனம் செல்லும் திசை நோக்கி தொழுது முடித்துவிடலாம்
أمّا من به عذرٌ شرعيٌّ يمنعه من الاستقبال فله حينئذٍ أن يتوجّه إلى جهةٍ قدر عليها
·        كالخوف على النّفس
·        وكالخوف من سبعٍ وعدوٍّ، ،
·        الخوف من الانقطاع عن رفقته، لما في ذلك من الضّرر‏.
·        ‏والعجزه عن النّزول،
·        الخوف على ماله - ملكاً أو أمانةً - لو نزل عن دابّته‏.‏
·        و العجز عن الرّكوب فيمن احتاج في ركوبه بعد نزوله للصّلاة إلى معينٍ ولا يجده،
·        والخوف وقت التحام القتال،

اتّفقت المذاهب الأربعة على وجوب استقبال المفترض على السّفينة في جميع أجزاء صلاته، وذلك لتيسّر الاستقبال عليه‏.‏ ونصّ الحنفيّة والمالكيّة والحنابلة على أنّه يدور معها إذا دارت‏.‏ وتفصيل ذلك في مصطلح‏:‏

பர்ளு தொழுகைகளுக்கு இத்தகைய கட்டாயமான விதிகள் கவனிக்கப்படும்

நபில் தொழுகையாக இருந்தால் பயண நேரங்களில் பிரயாணப்படுகிற திசையில் தொழுது கொள்ளலாம்ம்

اتّفق الفقهاء على جواز التّنفّل على الرّاحلة في السّفر لجهة سفره ولو لغير القبلة ولو بلا عذرٍ، لأنّه صلى الله عليه وسلم‏:‏ «كان يصلّي على راحلته في السّفر حيثما توجّهت به» وفسّر قوله تعالى‏:‏ ‏{‏فأينما تولّوا فثمّ وجه اللّه‏}‏ بالتّوجّه في نفل السّفر
  

கிப்லாவை முன்னோக்குதல்  என்பது  தொழுகையில் கட்டாயமாக கவனிக்கப்பட்டாலும் அது தொழுகையில் மட்டுமே கவனிக்கப்படுகிற செய்கை அல்ல.
பொதுவாக கிப்லாவை பார்த்து உட்காருவது சிறப்பு
قرّر الفقهاء أنّ جهة القبلة هي أشرف الجهات، ولذا يستحبّ المحافظة عليها حين الجلوس، لقوله صلى الله عليه وسلم‏:‏ «إنّ سيّد المجالس ما استقبل القبلة»‏.‏
வணக்கங்களுக்கு கிப்லாவை நோக்கி அமர்வது சிறப்பு
. يستحبّ استقبال القبلة في مواطن خاصّةٍ طلباً لبركتها وكمال العمل باستقبالها
كما في توجيهٍ المحتضر إليها، وكذا الميّت في قبره عند الدّفن
ومثله من أراد أن ينام، أو أراد أن يذبح ذبيحةً فيسنّ له أن يستقبل بها القبلة
ومن هذه الطّاعات‏:‏ الوضوء، والتّيمّم، والأذان والإقامة، ومنه الدّعاء بعد الوضوء، والدّعاء في الاستسقاء، والذّكر، وقراءة القرآن، وانتظار الصّلاة في المسجد،
وشرب ماء زمزم،
وقضاء القاضي بين الخصوم
 கிப்லாவை முன்னோக்கியோ முதுகை காட்டியோ மல ஜலம் கழிக்க கூடாது, என்பது கிப்லாவை கண்ணியப்படுத்த நபு (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த வழிமுறையாகும்.
கட்டிட்த்திற்கு உள்ளேயும் கிப்லாவின் கண்ணியத்தை பேணவேண்டும் என இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்காள். அந்த அடிப்படியில் தான் முஸ்லிம்கள் பள்ளிவாசலிலோ வீடுகளிலோ கிப்லாவை நோக்கி கால் நீட்டி அமர்வதில்லை.
இது கட்டாயம் அல்ல என்றாலும் கிப்லாவை கண்ணியப்படுத்துவதற்காக இதை தவிர்த்துக் கொண்டால் அது பேணுதலாகவே அமையும். .
ஒருமைப் பாடும் ஒற்றுமையும் ஓங்க கிப்லாவை கண்ணியப்படுத்துவோம்


.

5 comments:

 1. طلحة مصباحي5:42 PM

  جزاكم الله خيرا كثيرا

  ReplyDelete
 2. அல்ஹம்துலில்லாஹ் அற்புதமான கட்டுரை பல கேள்விகளுக்கு பதிலாக உள்ளது,

  ReplyDelete
 3. sirapaana katturai anaivarukkum payanullathu janab abdul aziz bakavi avarkalukku thanks

  ReplyDelete
 4. மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமான தலைப்பு. மிகவும் அருமை. جزاك الله حضرت

  ReplyDelete
 5. அல்ஹம்துலில்லாஹ் வழக்கம் போல் அருமையான பதிவு உஸ்தாத் அவர்களே !!

  ReplyDelete