வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 26, 2014

ரமலான் 2014



நபி (ஸல்) அவர்கள் ரஜபிலிருந்து ரமலானுக்கு ஆயத்தமாகி விடுவார்கள்.

நம்முடைய முன்னோர்களில் பலர் – இன்றைய வியாபாரிகள் எப்படி தீபாவளியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ அதே போல – ஆண்டு முழுவதையும் ரமலானை எதிர்பார்த்தே வாழ்ந்தார்கள்

يقول التابعي إبن الفضل : كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان ، ثم يدعونه ستة أشهر أن يتقبله منهم

ஆறு மாதம் ரமலானுக்கான பிரார்த்தனை மீதி ஆறு மாதம் கபூலுக்கான பிரார்த்தனை

ரமலான் நன்மைகளுக்கான மாதம் - நிறைய கூலி கிடைக்கிறது.

சொர்க்கம் மலிவாக கிடைக்கிற மாதம்.

எது எடுத்தாலும் ஐந்து ரூபாய பத்து ரூபாய என்று கூவி அழைக்கிற இடங்களில் குவிவது நம்முடைய பழக்கம்.
இதோ அல்லாஹ் கூவி அழைக்கிறான்.

கடைகளில் sale போடுவது வது போல அல்லாஹ் அழைக்கிறான . நாம் மகிழ்ச்சியோடும் காரியச் சிந்தனையோடும் ரமலானை அனுக வேண்டும்.

ரமலானுக்காக ஒன்பது வழிகளில் தயாராகனும் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்


أذكر نفسي وإياكم بتسعة أمور :
أولاً :بادرْ إلى التوبة الصادقة , المستوفية لشروطها , وأكثرمن الاستغفار .
பொதுவாக எந்த நல் அமலுக்கு முன்னாலும் தவ்பா அவசியம். தவ்பா அமல்களுக்கான தவ்பீக்கை த்ரும். அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட காரணமாகு

ثانياً:تعلَّمْ ما لابد منه من فقه الصيام وأحكامه وآدابه, والعبادات فيه كالاعتكاف والعمرة وزكاة الفطر وغيرها .
ச்ட்டங்களை அறிந்து கொள்ளுங்கள். நோன்பின் சட்டங்கள் ஸஹர் கடைசி நேரம். இப்தார் நேரம். ஊசிபோடுதல். போன்ற தமக்கு தேவைப்படும் சட்டங்களை உரிய ஆலிம்களிடம் சென்று கேட்டுக் கொள்ளுங்கள் அல்லது தகுதியான புத்தகத்தை வாசித்துக் கொள்ளுங்கள்.

ثالثاً:اعقد العزم الصادق والهمة العالية على استغلال رمضان بالأعمال الصالحة , قال تعالى: {فإذا عزم الأمر فَلَوْ صَدَقُوا اللَّهَ لَكَانَ خَيْرًا لَهُمْ}, وقال جلا وعلا: {وَلَوْأَرَادُواْ الْخُرُوجَ لأَعَدُّواْ لَهُ عُدَّةًَ} ، وتحر أفضل الأعمال فيه وأعظمها أجراً .

رابعاً:خُذ ورقة واكتب خطة شهر رمضان الإيمانية , وخطة شهر رمضان العلمية , وكذلك الاجتماعية والدعوية ,اكتب سأقرأ من القرآن كذا وسأشارك في الدعوة في مجال كذا, وسأقرأ من الكتب كذا وكذا ,اكتب وسل الله التوفيق واعلم أن يعطي كل ناوِ مانوى إما عيناً أو عوضا.

خامساً: حاول أن تشتري احتياجات العيد في هذه الأيام أو في بداية رمضان حتى لا تنشغل بها عن الطاعة في رمضان .
سادساً: اشتري بعض المواد الغذائية للشهر بكامله إن استطعت وتغرف لعبادة ربك ولا تنس نصيبك من الدنيا .
ரமலானுடைய அற்புதமான பொழுதுகளை பலரும் ஷாப்பிங்கில் இழக்கிறார்கள். குறிப்பாக ரமலானுடைய அதி அற்புதமான கடைசி பத்துக்கள் மொத்தமும் கடைவீதிக்குறியதாகிவிடுகிறது. பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பவர்களின் எண்ணிக்கையை விட கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக பெண்கள் ரமலான் அவர்களுக்கு ஷாப்பிங்க் மாதமாகவே மாறிவிடுகிறது. இந்த உணர்வு குழந்தைகளிடம் தொற்றிக் கொள்கிறது,

பல பெரியவர்கள் பெருநாளுக்கான ஆடைகளை மற்ற தேவைகளை ரமலானிலேயே முடித்து விடுகிற பழக்கம் கொண்டிருந்தனர்.

சிலர் காயகறிகளை கூட் மொத்தமாக வாங்கி வைத்து விடுவர்.

குற்றாலத்திற்கு செனறிருந்தேன், ஒவ்வொரு க்டையிலும் வியாபாரிகள் எவ்வளவு சுருசுருப்பாக இருக்கிறார்கள். மலையிலிருந்து தண்ணீர் விழுகிற வரை தான் அவர்களுக்கு சான்ஸ். அப்படி தண்ணீர் விழுகிற சந்தர்ப்பத்தில் அதை அதிகபட்ச வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சாதராணமாக சாமான்கள் வைக்கிற லாக்கருக்கு 10 ரூபாய் வசூலிப்பார்கள். நேர நிர்ணயம் இருக்காது, அரைநாள் ஒரு நாள் கூட வைத்துக் கொள்ளலாம். இப்போது அரை மணி நேரத்திற்கு 20 ரூபாய் வசூலிக்கிறார்கள்.   

ஞாபகம் இருக்கட்டும் ரமலான் நன்மைகளுக்கான சீஸன் ஆக்கும். சீஸனில் எவ்வளவு இலாபம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ள வேண்டும்

سابعاً: استحضر أن رمضان كما وصفه الله عزَّ وجلَّ أيام معدودات ، فهو موسم فضيل ، ولكنه سريع الرحيل .. واستحضر أيضاً أن المشقة الناشئة عن الاجتهاد في العبادة سرعان ما تذهب بعد أيام ، ويبقى الأجر ، وشَرْحُ الصدر بإذن الله ، أماالمفرِّط فإن ساعاتِ لهوه وغفلته تذهب سريعاً ، ولكن تبقى تبعاتها وأوزارها .

அல்லாஹ்வே குர் ஆனில் சொல்வது போல ரமலான் சில நாட்கள் தான். அதுவும் சீக்கிரமாக கடந்து விடும் என்பதை மறக்க வேண்டாம். இபாத்த்துகளில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய சிரமங்கள் அசெள்கரியங்களும் கூட சீக்கிரமாகவே சென்று விடும் ஆனால் அதனுடைய நன்மைகள் நீடித்திருக்கும். அதனலால் ஏற்பட்ட மனத் தெளிவும் சுத்தமும் கூட நீடித்திருக்கும். இந்த நாட்களை வீண் கேளிக்கைகளில் கழித்து விட்டால் அப்போதும் நேரம் விரைவாக கடந்து விடும். ஆனால் பாவம் பெரும் சுமையாக தங்கி விடும்/


ثامناً :حاول أن تصوم رمضان وتجعلة مائة رمضان وذلك بالدعوة إلى الله وإفطار الصائمين وإطعام المحتاجين وكفالة الأرامل والمساكين.
நோன்பை தவிர மற்ற அமல்களில் ஈடுபடுவதன் மூலம் ஒரு ரமலானை நூறு ரமலான்களாக ஆக்கி கொள்ள முடியும்.

தான தர்மங்கள்- உதவி ஒத்தாசைகள்- ஏழைகள் தேவையுடையோருக்கு நன்மைகள் சென்றடைய காரணமாகுதல்

ஒரு நோயாளிக்கு நோன்பு  திறக்க உதவினால் என்ன நன்மை என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் பல வித்த்திலும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.


تاسعاًً:وأخيراً : التخطيط والترتيب لبرنامج يومي للأعمال الصالحة كقراءة القرآن ، والجلوس في المسجد، والجلوس مع الأهل ، والصدقة ، والقيام ، والعمرة ، والاعتكاف ، والدعوة وغيرها من الأعمال ، فلا يدخل عليك الشهر وأنت في شَتات ، فتحرمَ كثيراً من الخيرات والبركات .

ரமாலானின் நாட்களை பகுத்து நன்மைகளுக்கு திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட திட்டமில்லாத கலவையான சிந்தனையில் ரமலான் வந்து போய்விட வேண்டாம்.

இந்த ஆண்டு நமக்கு நொன்பு 14 மணி நேரம்.

அர்ஜென்டீனா 9.30 மணி நேரம் – உலகில் மிக குறைந்த நோன்பு நேரம்.
ஆஸ்திரேலியா 10 மணி நேரம்
ஜப்பான் 14.30 மணி நேரம்
சவூதி 15.30 மணி நேரம்
இங்கிலாந்து 16.30 மணி நேரம்
கனடா 18 மணி நேரம்
ஹாலாந்து 18.30 மணி நேரம்
ஐஸ்லாந்த் 20.20
டென்மார்க்  21.30 மணி நேரம் - உலகில் மிள நீளமான் நோன்பு

تختلف عدد ساعات الصوم في العالم باختلاف المنطقة الجغرافية. ويعتبر الأطول بالنسبة لمسلمي أوروبا حيث سيصل الى 21 ساعة كحد أقصى في الدنمارك بينما لن تتجاوز مدة الامساك بالنسبة لمسلمي الأرجنتين تسع ساعات ونصف.
ويتراوح عدد ساعات الصوم في الشرق الأوسط بين 14 و 15 ساعة كما هو الحال في السعودية واليمن.
ولا يختلف الحال في شمال افريقيا، حيث يصل عدد ساعات الصوم الى 14 ساعة في كل من ليبيا والمغرب، وترتفع الى 16.30 في مصر.
أما في أستراليا فيصوم المسلمون هناك نحو عشر ساعات.
ولن تزيد مدة الصيام في جنوب أفريقيا عن عشر ساعات ونصف.
الملاحظ أنه كلما اتجهنا شمالا فإن عدد ساعات الصوم تزيد، بينما تقل حالما إتجهنا صوب الجنوب.
أما متوسط الصيام في باقي دول العالم، فيتراوح ما بين 14 ساعة إلى 16 ساعة.
ورغم طول ساعات الصيام فإن المسلمين في شتى أصقاع العالم يحرصون على آداء هذه الفريضة، ويتحملون مَشقّات الإمساك عن تناول الُمفطرات طيلة أيام الشهر الفضيل.


خريطة ساعات الصيام رمضان العالم

 

நேரம் எவ்வளவு கூடினாலும் - அது கோடயானாலும் குளிர்பிரதேசமானலும்- முஸ்லிம்களிட்மிருக்கிற நோன்பின் ஆர்வம் குறைவதில்லை என்பது – இஸ்லாத்தின் வெற்றிக்கும் முஸ்லிம் உம்மத்தின் கடப்பாட்டு உணர்வுக்கும் சான்றாகும்.

சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிற இந்த மாத்த்தை நரகத்தின் கதவுகள் பூட்டப்பட்டு சைத்தானுக்கு விலங்கிடப்படுகிற இந்த மாத்த்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம்.
இமாம் அபூஹனீபா ரமலானில் 63 குர் ஆன் ஓதுவார்.
பகலில் 1 இரவில் 1 – தராவீஹில் 3

வட இந்தியாவின் அறிஞர் பெருமகனார் அப்துர்ரஹீம் ராய்ப்பூரி ஷஃபான் பிறை 29 ல் சீடர்கள் நணபர்கள எல்லோரையும் அழைத்து முஸாபஹா செய்து இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக் கிடைத்தால் ரமலானுக்குப் பின் சந்திக்கலாம் என்று சொல்லி அனுப்பி விடுவார்.

தபால்களை பார்க்க மாட்டார். ஒரு கூடையில் போட்டு வைக்குமாறும் ரமலானுக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ் படித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிடுவார்.

ரமலான் முழுக்க இஃதிகாபில் இருப்பர்.

முஜத்தின் அல்பஸானி (ரஹ்) சொல்வார் .ரமலானின் பரகத் கடல் போன்றது, மற்ற மாதங்களின் பரக்கத் அதில் ஒரு துளி அளவுக்குத் தான்.

ரமலானின் நன்மையை பெற்றுக் கொள்ளாதவரை ஜிப்ரயீல் அலை அவர்கள் சபித்துள்ளார்கள்.

நாம் நம்மால் இயன்றவரை உள்ளச்சுத்தியோடு முயற்சி செய்வோம்.

ஒரு கிழவி யூசுப் அலை அவர்களை விலைக்கு வாங்க போய்க்கொண்டிருந்தாள். உன்னால் வாங்க முடியுமா? என்று அவளிடம் கேட்கப்பட்ட்து.
என்னால் முடியாது என்றாலும் விலை கேட்டேன் என்ற பெருமை கிடைக்குமல்லவா என்று அம்மூதாட்டி பதில சொன்னாராம்.

ரமலானுக்குர் உரிய அளவு முக்கியத்துவம் தர முடியாவிட்டாலும் நம்க்கு உகந்த அளவு உண்மையாக ரமலானை பெற்றுக் கொள்ள் முயற்சிப்போம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!
أسأل الله أن يبلغنا وإياكم رمضان ، اللهم بلغنا رمضان وأحسن عملنا فيه ، إنك أجود مسؤول وخير مأمول

3 comments: