வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 05, 2014

அகால மரணமா ?




16 வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்ஆளும் கட்சி எதிர்ப்பின்றி மிருக பலம் பெற்றிருப்பதால் - பெரும் மகிழ்ச்சியோடு நடைபெறவேண்டிய கூட்டம்சோகத்தோடு ஆரம்பமகியிருகிறது.

அரசியல் சக்த்வாயந்த மத்திய அமைச்சர் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றபின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் முன் மரணமடைந்து விட்டார்..

ஜப்பான் டோக்கியோ விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிரங்க இருந்த்து. இன்னும் 3 நிமிட்த்தில் நாம் தரையிரங்கி விடுவோம். வெளிப்பகுதியில் இன்ன தடப்வெடபம் நிலவு கிறது என்றும் விமானி அறிவித்து விட மக்கள் நீண்ட பய்ணம முடிந்து வரவேற்க வந்திருக்கிற தங்களது உறவினர்களை காண தாயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென் விமானத்தின் டயர் பகுதியில் தீப்பிடித்து விமானம் சாமபலானது, நிமிட நேரத்தில் 250 க்கும் மேற்பட்டோர்  அடையாளம் தெரியாமல் கருகிப் போயினர்.

(கேரளாவின் பிரபல் சொற்பொழிவாளர் ரஹ்மதுல்லாஹ் காஸிமி சொன்ன் ஒரு செய்தி )

கேரளாவில் வசதியான் குடும்பத்தைச் சேர்ந்த 22 வ்ய்துப் பெண், இரண்டு குழந்தைகளின் தாய். ஒரு திருமண நிகழ்ச்சியில் குளிந்த தண்ணீர் குடித்த போது தொண்டை கரகரத்த்து.

சிறு சிறு வைத்தியங்கள் செய்து சரியாகாமல் பரிசோதனை செய்து பார்த்த போது கான்சர் என்று தெரிந்த்து. கடுமையான மருத்துவ சிகிட்சைக்குப் பின் அப்பெண் மணி தேறினாள். அவர் தேறினால் உம்ராவுக்கு வருவதாக குடும்பத்தினர் நேர்ந்திருந்தனர். உமராவுக்கு சென்று வந்தார். அடுத்த வாரத்தில் மவ்த்தானார். குடும்பத்தினரின் சோகத்திற்கு அளவே இல்லை.

இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ரஷயாவின் தாஷ்கண்டில் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்த்தில் கையெழுத்துப் போட்டு விட்டு உறங்கப் போனார். எழுந்திருக்க வில்லை. 

இது போன்ற மரணச் சமபவங்களை அகால மரணம் என்று எல்லோரும்  சொல்வது வாடிக்கை. 

இன்னொரு நிகழ்வு 

2012 ம் ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது நடந்த ஒரு மரண் நிகழ்ச்சி.

நாங்கள் ஹஜ்ஜை முடித்துக் கொண்ட பிறகு மதீனாவுக்கு சென்றிருந்தோம். ஹஜ் கமிட்டியில் எங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய தகப்பனார் மனைவியுடன் வந்திருந்தார். அன்று மாலை சென்னைக்குப் பயணமாக இருந்தனர். காலை 7 மணிக்குள் லக்கேஜ்களை ஒப்படைத்து விடுமாறு ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியிருந்த்து. அதனால் சுபுஹ் தொழுகைக்குப் பிறகு லக்கேஜ்களை கட்டி முடித்த அந்த இளைஞர் சற்று சாய்ந்த் உட்கார்ந்து நெஞசில் இலாசாக ஒரு வலி என்று சொன்னார். சற்று நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிற வழியில் வபாத்தானார்.

இந்த செய்தியை கேட்டு விட்டு எங்களது ஹஜ் நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு செய்தி சொன்னார். நான் மதீனாவில் பல வருடங்கள் உத்தியோகம் நிமித்தம் தங்கியிருந்தேன். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வசதியான மூதாட்டி பல வருடங்களாக தன்னுடைய நாட்டை விட்டு இங்கு வந்து தங்கியிர்ருந்தார். மதீனாவில் மவ்தாக வேண்டும் என்ற ஆசையில்  7 வருடங்கள் எங்களுடன் இருந்தார். அவருக்கு எது வும் நேரவில்லை. நான் ஊருக்கு திரும்பிவிட்டேன். இப்போது அந்தப் பெண் எப்படி இருக்கிறார் என்று தெரியாது. ஆணால் மதீனாவில் ம்வதாகும் ஆசையில் 7 வருடங்களாக அவர் தங்கியிருந்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்த்து என்றார்.

நான் சொன்னேன் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் இந்த வாய்ப்பு தவறிப்போய்விடக்கூடாது என்பதால் தான் அரசர் ஹாரூன் ரஷீத் விரும்பி அழைத்த போதும் மதீனாவை விட்டு அவர்கள் வெளியே செல்ல வில்லை. அரசர் மதீனாவுக்கு வந்து இமாமின் சபையில் மாணவர்களோடு சரிசம்மாக உட்கார்ந்து முஅத்தாவைப் ப்யின்றார். இமாம் அவர்களுக்கு அவர்கள் விரும்பிய பிரகாரமே மதீனாவில் மவ்தாகிற வாய்ப்புக் கிடைத்த்து. இன்றும் அவருடை கப்ரு ஜன்னத்துல் பகீஃ கபரஸ்தானில் இருக்கிறது.

நபிமார்களுக்கு அவர்களது சம்மதம் பெற்ற பிறகே உயிர் கைப்பற்றப்படுகிறது.

சில நல்லடியார்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் மரணம் அமைகிறது. தங்கள்து மரணத்தின் நெருக்கத்தை உணர்ந்தவாறு அவர்கள் மவ்தாகிறார்கள். ஒரு முழுமையான தயார் நிலையில் அவர்கள் இஸ்ராயீலை (அலை) வரவேற்கிறார்கள்.

ஜுனைதுல் பக்தாதி ஹிஜ்ரி 3 ம் நூற்றாண்டில் வாழ்ந்த் மிகச் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். தன்னுடைய உரைகளால மக்களுக்கு ஈமானிய விழிப்பை ஊட்டியவர்.

7 வயது சிறுவராக இருந்த போது மாமா இறைஞானி சிர்ரி சிக்தியின் முன்னாள் விளையாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் சுக்ர் – ந்ன்றி – பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். ஜுனைதுல் பக்தாதியின் அறிவுக்கூர்மையைப பற்றி தெரிந்த ஒரு வர் அவரிடம் நன்றி என்றால் என்ன தெரியுமா என்று கேட்டார். ஜுனைது பதில் சொன்னால் அல்லாஹ்வின் நிஃமத்களை அனுபவித்த பிறகு அவனுக்கு மாறு செய்யாமல் இருப்பது, மாமா சிர்ரி சிக்தீ அதிர்ர்ந்து போனார். உனது நாவாண்மையை கண்டு நான் பயப்படுகிறேன் என்றார்.

பக்தாதியின் 15 வயதில் அவரே தன்னுடையை பள்ளிவாசலில் மேடை அமைத்துக் கொடுத்து பேசுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது மறுத்த பக்தாதி, கனவில் பெருமானாரைக் கண்டு அவர்கள் பேசுமாறு சொன்ன பிறகு பேச ஆரம்பித்தார். அந்தப் பேச்சு பல்லாயிரம் பேருக்கு நல்வழிகாட்டியது..

¨    قال: "كنت بين يدي سري ألعب، وأنا ابن سبع سنين، وبين يديه جماعة يتكلمون في الشكر؛ فقال لي: "يا غلام! ما الشكر" قلت: "الشكر ألا تعصي الله بنعمه". فقال لي: "أخشى أن يكون حظك من الله لسانك!" قال الجنيد: "فلا أزال أبكي على هذه الكلمة التي قالها لي السري".
¨    وقال: "قال لي خالي سري السقطي: "تكلم على الناس!" وكان في قلبي حشمة من ذلك، فاني كنت أتهم نفسي في أستحقاق ذلك، فرأيت ليلة في المنام، رسول الله - وكانت ليلة جمعة -فقال لي: "تكلم على الناس!". فانتبهت، وأتيت باب سري قبل أن أصبح، فدققت الباب، فقال: "لم تصدقنا حتى قيل لك!". فقعدت في غد للناس بالجامع، وأنتشر في الناس أني قعدت أتكلم، فوقف علي غلام نصراني متنكر وقال: "أيها الشيخ! ما معنى قوله : (أتقوا فراسة المؤمن. فإنه ينظر بنور الله) فأطرقت، ثم رفعت رأسي فقلت: "أسلم! فقد حان وقت إسلامك!" فأسلم".
  
அன்னாரது உணர்ர்சியூட்டுகிற உபதேசங்களுக்கு ஒரு சொல் சான்று

·        الغفلة عن الله اشد من دخول النار

அவரது அற்புதமான மரண வேளை

¨    وقال أبو محمد الجريري: "كنت واقفاً على رأس الجنيد وقت وفاته -وكان يوم جمعة- وهو يقرأ، فقلت: "أرفق بنفسك!" فقال: "ما رأيت أحداً أحوج إليه مني في هذا الوقت، هو ذا تطوى صحيفتي".
¨  இயலாமையிலும் ஓதிக்கொண்டிருந்தார். கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே என்று நான் சொன்னேன். இப்போது அது எனக்கு மிகவும் தேவை என்று சொன்ன அவர் மேலும் சொன்னார் இதே எனது ஏடு சுருட்டப் படுகிறது.

¨    وقال ابن عطاء: "دخلت عليه، وهو في النزع، فسلمت عليه، فلم يرد، ثم رد بعد ساعة، وقال: "اعذرني! فإني كنت في وردي"، ثم حول وجهه إلي القبلة ومات".

எல்லோருக்கும் இது போன்ற மரணங்கள் வாய்ப்பதில்லை. பல சந்தர்பத்திலும் திடீர் மரணங்கள் சம்பவித்துவிடுகின்றன்.

பக்கத்து தெருவில் நடந்த ஒரு நிகழ்ச்சி .  கணவருடன் படுக்கையில் படுத்திருந்த ஒரு பெண் மணி காலையில் எழுந்து பையனை பள்ளிக் கூட்த்திற்கு அனுப்பி விட்டு கணவனை வந்து எழுப்பு கிறார். கணவன் உயிரோடு இல்லை.

இது போன்ற மரணச் சமபவங்களை அகால மரணம் என்று சொல்வது வழக்கம்.

இஸ்லாத்தில் அகால மரணம் என்ற் ஒரு வார்த்தை கிடையாது. எல்லா மரணங்களும் அதற்குரிய காலத்திலேயே நடைபெறுகின்றன.

يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ(4)71 :
சர்வாதிகார அரசனைப் போல அல்லாஹ் நம்முடைய குற்றங்களுக்கு உடனடியாக தண்டனைகள் தந்து விடுவதில்லை.

நமது விருப்ப்படி நடக்க நம்மை அவன் அனுமதிக்கிறான். அவன் நிர்ணயித்திருக்கிற ஒரு தவனை வரை. அந்த தவனை வந்து சேருகிற போது நொடியும் சமயம் தராமல் – கோப்பில் ஒரு கையெழுத்துப் போட – மனைவியிடம் ஒரு ரகசியத்தை சொல்ல – மக்களிடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்ள – ஒரு போன் நம்பரின் கடைசி எண்ணைச் சொல்ல – எதற்கும்
வாய்ப்புக் கிடைக்காது. அல்லாஹ்வின் நிர்ணயம் தப்புவதில்லை.

ஷரஹு பிக்ஹுல் அக்பர் முல்லா அலி காரி கூறுகிறார் (ரஹ்)
(பக்கம் 152.)
அகால் மரணம் என்று கூறக் கூடாது

காலமாகிவிட்டார்' என்றால் அவரது 'ரிஸ்க்' முடிந்து அவருக்காக நிர்ணயிக்கப்பட்ட காலம் நிறைவாகி இறந்து விட்டார் என்பது பொருள்.அகால மரணமாகிவிட்டார் என்றால் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்(ரிஜ்க்) முடிவடைவதற்கு முன்பே இறந்து விட்டார் என்பது பொருள். இது குர்ஆனுக்கும், ஒரு முஃமீன் நம்ப வேண்டியதற்கும் முற்ற முற்ற முரணாகும். கொலை செய்யப்பட்டு மரணித்தவர் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம், அவரது மௌத்துடன் முடிந்தபின்புதான் மரணிக்கிறார். அவர்களது காலம் வந்துவிட்டால் ஒரு மணிநேரம் முந்தவோ மாட்டாது என அல்லாஹு தஆலா கூறுகின்றான்

மரணம் யாருக்கும் அகாலமாக வருவதில்லை. அவசரமாகவும் வருவதில்லை

حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمْ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ

தினசரி சாலை விபத்துக்களில் நிமிடச்சருக்கில் பலர் காலமாகிவிடுவதை தினசரி பத்ரிகையில் படிக்கிறோம். விபத்துக்குள்ளான வாகன்ங்கள் அப்பளம் போல நொருங்கி இருக்கும். இத்தகைய விபத்தில் யார் தான் தப்ப முடியும் என்று நான் சமாதானம் பேசிக் கொள்வோம்.

நம்முடைய மத்திய அமைச்சரின் காரையோ அவர் மீது மோதிய காரை யோ பார்த்தால் ஒரு பெரிய விபத்திற்கான அடையாளம் எதுவுமே இல்லை. மற்ற யாருக்கும் பெரிய காயம் கூட இல்லை. அமைச்சர் பதவியேற்பின் புது மெருகு கலைவதற்குள்ளாக காலமானார்.

நமக்கான் ஒரு முக்கியமான செய்தி இதில் இருக்கிறது.

நமக்கான நேரம் தீர்மாணிக்கப் பட்டிருக்கிறது.

நேரம் வரும் போது ஜ்ஸ்ட் மினிட் டு க்க்கான் வாய்ப்பு தரப்படாது. யாரும் மலக்குல் மவ்திடமிருந்து தப்பவும் முடியாது,

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمْ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ(60)56

அவ்வாறு நிச்சயிக்கப் பட்ட மரணம் நெருங்குகிற போது தப்ப முடியாது.
وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ(60)

நம்மிடமிருந்து  தப்பிக்க முடியாது என்கிறான் அல்லஹ்..

மரணத்திடமிருந்து  தப்ப முடியுமா பெருமானார் (ஸல்) சொன்ன உதாரணம்  ) இப்னு கஸீர் )

عن سمرة قال: قال رسول الله صلى الله عليه وسلم "مثل الذي يفر من الموت مثل الثعلب تطلبه الأرض بدين فجاء يسعى حتى إذا أعيا وأسهر دخل جحره وقالت له الأرض يا ثعلب ديني فخرج وله حصاص فلم يزل كذلك حتى تقطعت عنقه ومات"
பூமியிடம் கடன் வாங்கிய குள்ளநரி, பூமி க்டனை திருப்பிக் கேட்ட்தும் ஓட்டம் பிடித்த்து. கலைத்து ஓயந்து பொந்துக்கு வந்த போது பூமி கேட்ட்து என்னுடை கடனை திருப்பிக் கேட்ட்து. குள்ள நரி ஓடியது .. கடைசியில் கழுத்து முறிந்து இறந்த்து. பூமியிடமிருந்து தப்பி நரி எங்கே ஓடிவிட முடியும்?

எத்தகைய சிறந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும்   சுலைமான் (அலை) அவர்களுக்கு வந்த மரணம் .

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتْ الْجِنُّ أَنْ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ(14)


நமக்கான் நேரம் தீர்மாணிக்கப்பட்டிருக்கிறது, அது எப்போது என்று நமக்கு தெரியாது. எப்போதும் நிகழலாம்.

எச்சரிக்கையும் பயமும் கொள்ள வேண்டிய நிதர்சனமான உண்மை இது?

தீடீர் மரணங்கள் அதிகரிப்பது கியாமத்தின் அடையாளங்களில் ஒன்று
حديث أنس بن مالك رضي الله عنه أن النبي -صلى الله عليه وسلم- قال : (إن من أمارات الساعة أن يظهر موت الفجأة)، رواه الطبراني وحسّنه الألباني.
நாம் வாழ்கிற காலம் அதற்கான் சாத்தியக் கூறுகளை அதிகமாக்கியிருக்கிறது.

நம்மைச் சுற்றி நடக்கிற அனுபவங்கள் நம்மை எச்சரிக்கின்றன.

தாவூது அலை கேட்ட எச்சரிக்கை சிகனலும் மலக்குல் மவ்தின் பதிலும்

روي أن ملك الموت دخل على داود عليه السلام فقال : (( من أنت ؟ فقال ملك الموت : أنا من لا يهاب الملوك ، ولا تمنع منه القصور ، ولا يقبل الرشوة ، قال : فإذًا أنت ملك الموت ، قال : نعم ، قال : أتيتني ولم أستعد بعد ! قال : يا داود أين فلان قريبك ؟ أين فلان جارك ؟ قال : مات ، قال : أما كان لك في هؤلاء عبرة لتستعد ؟!

திடீரென்று ஏற்படக் கூடிய மரணத்திலிருந்து பாதுகாப்புத்தேடுவோம்.

وأما الحديث الثاني فهو عن أبي أمامة رضي الله عنه، قال: كان النبي -صلى الله عليه وسلم- يتعوّذ من موت الفجأة، وكان يعجبه أن يمرض قبل أن يموت. رواه الطبراني في معجمه الكبير

அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பான் என்று நல்லெண்ணம் வைப்போம்,

أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي فَلْيَظُنَّ بِي مَا شَاءَ ) رواه أحمد .

இந்த நல்லெண்ணம் இறையடியார்களின் பெரும் சொத்து

எந்த அடிப்படையில் இறைவன் உங்களுக்கு  கருணை காட்டுவான் என சுற்றியிருந்தோர் கேட்ட போது அப்துல் அஜீஸ் பின் சுலைமான் சொன்னார். அல்லாஹ் வின் மீதான நல்லண்ணத்துடனேயே நான் போகிறேன்.

حدث حاتم بن سليمان قال : دخلنا على عبد العزيز بن سليمان وهو يجود بنفسه فقلت : كيف تجدك ؟ قال : أجدني أموت ، فقال له بعض إخوانه : على أية حال رحمك الله ؟ فبكى ثم قال : ما نعول إلا على حسن الظن بالله ، قال : فما خرجنا من عنده حتى مات .

நல்லெண்ணம் வைக்கிற அதே நேரத்தில் எச்சரிக்கையாகவும் பக்குவமாகும் நடந்து கொள்வோம்.

الحافظ ابن حجر في فتح الباري، من قول الإمام البخاري:

اغتنم في الفراغ فضل ركوع* فعسى أن يكون موتك بغتة
كم صحيح مات من غير سقم *ذهبت نفسه الصحيحة فلتة


நமக்குப் பின்னால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள். என்று யோசிப்பதே பெரிய சோகம்
மனைவி மக்கள் பெற்றோர் நணபர்கள் பணியாளர்கள் உறவினர்கள் என்ன துடி துடிப்பார்கள் என்று யோசிப்பதே மிக்க் கஷ்டமான விசயம். நம்மில் பலரும் இதை யோசிப்பதுண்டு . அதற்காக செயல்படுவது சேமிப்பது பாதுகாப்பது உத்தரவாதம் பெறுவது உண்டு

இதற்குப்பின்னால் நமக்கு என்ன ஆகும் என்று யோசிப்பது அதை விட முக்கியமானது.

நமக்குப்பினால் நம்மைச் சார்ந்தவர்களுக்கு அல்லாஹ் இருக்கிறான். நமக்குப்பின்னால் நமக்கு அல்லாஹ் இருப்பானா ?

ஆகவே நமது இறுதி நிமிடம் குப்ரின் இருள் சூழ்ந்த்தாக இல்லாமல், நிபாக்கின் புகை சூழ்ந்த்தாக இல்லாமல். ஈமானிய வெளிச்சம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று கையேந்துவோம் அதற்கான வழி களை கடைபிடிப்போம்.  

பெருமானாரின் பிரார்த்தனைகள் சில

اللهم احفظني بالإسلام قائماً ، واحفظني بالإسلام قاعداً واحفظني بالإسلام راقداً ولا تشمت بي عدواً ولا حاسداً . اللهم إني أسألك من كل خير خزائنه بيدك ، وأعوذ بك من كل شر خزائنه بيدك

للهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك .
اللهم إني أعوذ بك من التردي والهدم والغرق والحرق ، وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت ، وأعوذ بك أن أموت في سبيلك مُدْبراً وأعوذ بك ان أموت لديغا .

اللهم اصلح لي ديني الذي هو عصمة أمري ، واصلح لي دنياي التي فيها معاشي واصلح لي آخرتي التي فيها معادي ، واجعل الحياة زيادة لي في كل خير ، واجعل الموت راحة لي من كل شر .

اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين ، واصلح لي شأني كله ، لا إله إلا أنت ، طهرني من الذنوب والخطايا ، اللهم نقني منها كما ينقى الثوب الأبيض من الدنس ، اللهم طهرني بالثلج وبالبرد والماء البارد .

اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها .

·         அகால மரணம் என்பதில்லை
·         ஒவ்வொரு மரணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
·         நமது தவனை எப்போது என்று நமக்கு தெரியாது,
·         நமக்கான எச்சரிக்கைப் பலகைகள் நம்மை சுற்றி வைக்கப்பட்டு வருகிறது.
·         அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்போம்
·         நற்காரியங்களால் வாழ்வை நிறப்புவோம்
·         அல்லாஹ்விடம் கையேந்துவோம்
·         நமது வாழ்வையும், மரணத்தையும், அதற்குப் பிந்தைய வாழ்வையும் அல்லாஹ் சிறப்பானதாக ஆக்கி வைப்பானாக!

.

6 comments:

  1. அகாலமரணம் பற்றிய விளக்கம் அருமை...

    ReplyDelete
  2. மௌலானா! உங்களால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது! தேவையான தகவல்! இறைவா! அஜீஸ் பாகவியை அவர் பெயருக்கு தக்கவாறு சிறப்பாக
    வாழவும், நீண்ட ஆயுளையும் உன்னிடம் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  3. அருமை அருமை

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete