வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Monday, July 28, 2014

பெருநாள் சிந்தனை 2014 ஈமானிய வாழ்வில் நிலைத்திருப்போம்.அனைவ்ருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்ள்

இஸ்லாம் நமக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளது.
திரு லேனா தமிழ் வாணன் ஒரு முறை சொன்னார். இஸ்லாமிய பெருநாட்கள் எனக்கு பிடிக்கும் காரணம் வருட்த்திற்கு இரண்டே பெருநாட்கள் அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்றார்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ لِأَهْلِ الْجَاهِلِيَّةِ يَوْمَانِ فِي كُلِّ سَنَةٍ يَلْعَبُونَ فِيهِمَا فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ قَالَ كَانَ لَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ فِيهِمَا وَقَدْ أَبْدَلَكُمْ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى –النسائي
முஸ்லிம்களுடைய பெருநாட்கள் இரண்டு மட்டுமே என்றாலும். அவை இரண்டும் அர்த்தமும் மரியாதையும் மிக்கவை

அர்த்தமற்ற செலவுகளோ ஆடம்பரங்களோட் அவற்றில் இல்லை. உலகில் மிக படோபடமாக கொண்டாடப் படுகிற கிருஸ்துமஸ் திருவிழாவில் வசதி படைத்த கிருத்துவர்கள் கிருஸ்மஸ் மரம் வைக்கிறார்கள். அதற்கு மட்டுமே இலட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். அது போல வீடுகளுக்கு முன் நட்சத்திரங்களை மாட்டும்கிறார்கள். இந்துக்களுடைய திருவிழாக்களில் வீணடிக்கப் படுகிற பணத்திற்கும் பொருளுக்கும் கணக்கே இல்லை.

முஸ்லிம்களுடைய பெருநாளின் முதல் அம்சம் பக்தி ஈமான் . இரண்டாவது அம்சம் ஈகை

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ - أبوداوود

பணத்தையோ நேரத்தையோ வீணடிக்கிற எந்த அர்த்தமற்ற செயலும பெருநாட்களில் இல்லை.

நாம் ஒரு பண்பாடு மிக்க சமுதாயத்தின் உறுப்பினர்கள் எனற பெருமையை இது நமக்கு தருகிறது. அதற்கேறப் நாம் நடந்து கொள்ள வேண்டு,

நம்முடைய வாழ்வில் பாக்கியமான நிமிடங்களை கொண்ட ரமலான் இதோ நிறைவு பெற்று விட்ட்து,  அந்த மகிழ்ச்சியில் இதோ பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

நமக்கும் உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தந்தருள்வானாக! இன்றைய மகிழ்ச்சியை அல்லாஹ் என்றும் பொங்கச் செய்வானாக!

அதே நேரத்த்தில் இந்த மகத்தான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் அக்கிரமச் சக்திகளின் ஆதிக்க வெறியாட்டத்தால் உலகின் சில பாகங்களில் முஸ்லிம்கள் சொல்லனா துயரை அனுபவித்து வருகிறார்கள். பாலஸ்தீனின் காஸா பகுதியிலும், மியான்மரிலும் இராக்கிலும் எழுகிற ஓலம் நமது இதயத்தை கண்களை குளமாக்க்குகிறது. இதோ இப்போது நமது நாட்டிலும் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் தலை நீட்டுகின்றன,

இந்தப் புனிதமான நேரத்தில் நாம் அல்லாஹ்விட ம் கையேந்து வோம். யா அல்லாஹ் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியத்தை தநதருள்வாயாக!


பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நட்த்துகிற மிருகத்தனமான கொடூர தாக்குதலில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப் பட்டு விட்டனர்.

israeli forces have also succeeded in destroying at least 475 houses and 2,644 have been partially damaged. Some 46 schools, 56 mosques and seven hospitals had also suffered varying degrees of destruction, say Palestinian officials.

However, three-fourths of the Palestinians killed in more than two weeks of Israel-Hamas fighting were civilians, according to UN figures. One in four was a minor, it said.

4,100 were wounded

ஜூன் 28 முதல் இதுவரை 3,250 தாக்குதல்களை இஸ்ரேல் காஸாவின் மீது நட்த்தியுள்ளது.

இஸ்ரேலின் இத்தகைய் கொடூர தக்குதல்கள் புதியவை அல்ல. ஆண்டுக்கொருமுறை இத்தகைய தாக்குதல்களை நட்த்திக் கொண்டு தான் இருக்கிறது.

கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப் படும் போது மட்டுமே உலகம் கவலைப் படுகிறது. நாமும் வருத்தப் படுகிறோம்.

ஆனால் உண்மையில் பால்ஸ்தீனம் எனப்து அதிலும் குறிப்பாக காஸா முனைப் பகுதி என்பது ஒரு மிகப் பெரும் திறந் வெளி சிறைச்சாலையாகும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற் பாலஸ்தீன அரசு என்று சொல்வதெல்லாம், ஒரு ஏமாற்று வேலையாகும்.

காஸாவில் கடல் இருக்கிறது, கரையில் கால் வைக்க மக்களுக்கு அனுமதியில்லை. வானம் இருக்கிறது, அந்த வானம் இஸ்ரேலுக்கு சொந்தமானது, இஸ்ரேல் அனுமதித்தால் மட்டுமே பாலிருந்து மருந்துப் பொருட்கள வரை அனைத்தும் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும்.

இன்றைய பாலஸ்தீனம் என்பது உண்மையில் பாண்டிச்சேரியை போல துண்டு துண்டாக பிர்ந்து கிடக்கிற நிலப்பரப்பிற்கு பெயராகும். ஜெரூசலத்தில் கொஞ்சம் , மேற்கு கரையில் கொஞ்சம், காஸா முனைப் பகுதியில் கொஞ்சம் என பாலஸ்தீனம் குதறப்பட்டிருக்கிறது.

இதில் காஸா பகுதியில் இஸ்ரேலிற்கு பிடிக்காத ஹமாஸ் நகராட்சி அதிகாரத்தை கைப் பற்றியதால் அந்த கோபத்தை மக்கள் மீது காட்டுகிற இஸ்ரேலிய அரசு அடிப்படையான மனித உதவிகள் எதுவும் காஸாவுக்குள் சென்று விடாதவாறு தடுத்து மக்களை பட்டினி போட்டு வருகிறது, பல ஆண்டுகளாக!

சிறு குழந்தைகள் தினசரி பால இன்றி  அடிப்படை உணவின்றியும் இறக்கின்றனர், முதியவர்கள் பெண்கள நோயளிகள் மருந்தின்றி இறக்கினறனர், மக்கள் அன்றாடம் அனுபவித்துவருகிற தொல்லைகள் சொல்லில் அடக்க் முடியாது.

பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் தந்திருப்பதாக் சொல்லி உலகை ஏமாற்றி விட்டு பாலஸ்தீன பகுதி மக்களை உலகின் மாபெரிய திறந்த் வெளிச்சிறையில் வைத்திருக்கிறது இஸ்ரேலிய அரசு. எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் ஒரு சமூகத்தை சன்னம் சன்னமாக சாகடிக்கிற வேலையை அது செயது வருவதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கருதித்தான் எகிபதின் சமாதான யோசனையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இஸ்ரேலின் மனிதாபிமாற்ற ஆக்ரமிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப் படவேன்டும் என்று ஹமாஸ் கோருகிறது.

ஹமாஸ் தலைவர் காலித் மிஷேல் நேற்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

We are not fanatics, we are not fundamentalists. We are not actually fighting the Jews because they are Jews per se. We do not fight any other races. We fight the occupiers,” he said.
“I’m ready to coexist with the Jews, with the Christians and the Arabs and non-Arabs,” he said. “However, I do not coexist with the occupiers.”
 “But Palestinian people can have their say when they have their own state without occupation.”

உண்மையில் பாலஸ்தீனம் விச்யத்தில் உலக முஸ்லிம் சமுதாயம் காட்டும் அக்கறை மேம்போக்கானதாகும். அங்கு மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிற போது மட்டும் ஆர்ப்பாம் துஆ நிதி உதவி என அலறும் இஸ்லாமிய சமுக்கங்கள்.

பாலஸ்தீன மக்களின் நிரந்த தீர்வுக்கான தொடர் முயற்சி எதையும் எடுப்பதில்லை என்பதே எதார்த்தமாகும்.

இரண்டாம் உலக யுத்த்த்தின் கால கட்ட்த்தில் சுவிட்ஸர்லாந்தின் ஒரு சூதாட்ட விடுதியில் நான் ஐந்து பேர் கூடிப் பேசிய முடிவில் உருவான இஸரேல் என்கிற அரசு யூதர்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஆனால் பாலஸ்தீன விச்யத்தில் உலக முஸ்லிம்கள் பாலஸ்தீன் மக்களுக்கு தேவையான தொடர் முயற்சி எதையும் மேற்கொளவ்தில்லை,

இதோ சவூதி அரேபியாவில் நேற்றைய தினம் பெருநாளை கொண்டாடி சவூதி அரசர் அப்துல்லாஹ் நூறு மில்லியன் டால்ர் காஸாவுக்கு தருவதாக அறிவித்துள்ளார். நேற்று பாலஸ்தீன் அதிபர் மஹ்மூது அப்பாஸையும் அவர் சந்தித்துள்ளார்.

இத்தைய தற்காலிக நடவடிக்கைகள் போதுமானதல்ல. ஒரு தொடர் முயற்சி முழு பாலஸ்தீனையும் பைத்துக் முகத்தஸையும் இஸ்ரேலியர்களின் பிட்யிலிருந்து மீட்கும் முய்ற்சியில் மேற்கொள்ளப் பட வேண்டும். அப்போது தான் பாலஸ்தீன மக்களின் அழுகைகு ஒரு முடிவு பிறக்கும்.

தற்போதையை முஸ்லிம்களின் வரலாற்றில் பெரும் சோகம் என்ன வென்றால் ? அத்தகைதை விடிவுக்கான ஒரு வெளிச்சப் புள்ளியை கூட காண முடியவில்லை.

அதை விட பெரிய சோகம் உலகின் நியாயவான்கள் இஸ்ரேலின் அக்கிரம் தாக்குதலை வாய் மூடி வேடிக்கை பார்க்கிறார்கள். நம்முடைய இந்தியா உட்பட.

இவர்களுக்கு கண்கள் இல்லையா? பாலஸ்தீனக் குழந்தைகளின் அழுகுரல்கள் இவர்களத்உ காதுகளுக்கு இன்னும் எட்டவில்லையா? அல்லது இவர்களுக்கு இதயமே கிடையாதா? என்று தான் கேடகத் தோன்றுகிறது.

இந்தச் சூழ்நிலையில் அல்லாஹ்விடம் ச்ரண்டைவதை தவிர வேறு மார்க்கம் எத்வும் தென்படக் காணோம்.

அல்லாஹ்விடம் முறையிடுவோம்.أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ(214)

யா அல்லாஹ்! அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கேட்கும் நிலைக்கும் நாங்கள் ஆளாகி விட்டோம், துவண்டு போய்விட்டோம் இறைவா! எங்களது வாக்களித்த வெற்றியை வெகு சீக்கிரம் தந்தருள்வாயாக!

நாங்கள் அனுபவிப்பது போல் பெருநாளின் மகிழ்ச்சியை எங்களது சர்வதேச சகோதரச் சமுதாயமும் அனுபவிக்க நாங்கள் வெகு சீக்கிரம் நீ கிருபை செய்வாயாக

இத்தகைய நெருக்கடியிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றியிருப்பதற்கு
அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வோமாக!

இந்த ரமலானில் நம் வீடுகளுக்கு முன் ஜகாத் கொடுங்கம்மா என்று பலரும் கேட்டு வந்தார்கள். அவர்களுக்கு நாம் முடிந்த்தை கொடுத்தோம்.

அந்த ஏழை மக்களிடமிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் நம்மை அவர்களைப் போல ஆக்கவில்லையே !
அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்

அல்லாஹ் நமது அமல்களை அங்கீகரித்து உயர்ந்த கூலியை மறுமையில் தந்த்ருள்வானாக!

இந்த வருடம் யாரெல்லாம் ஜகாத் என்கிற கடமையை நிறைவேற்றினார்களோ. அவர்கள் அனைவரும் சமுதாயத்தின் துஆ வுக்கு உரியவர்கள்.

மக்களிடம் ஜகாத்தை வசூலித்த பிறகு அவர்களுக்காக துஆ செய்யுங்கள் என அல்லாஹ் பெருமானாருக்கு உத்தரவிட்டான்.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ(103)

தப்ஸீர் இப்னு கஸீரில் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த துஆக்களை பற்றி  ஹதீஸ்கள் அறிவிக்கப்படுகின்றன

·       رواه مسلم في صحيحه عن عبدالله بن أبي أوفى قال: كان النبي صلى الله عليه وسلم إذا أتي بصدقة قوم صلى عليهم فأتاه أبي بصدقته فقال " اللهم صل على آل أبي أوفى ".

·         وفي الحديث الآخر أن امرأة قالت يا رسول الله صلى الله عليه وسلم صل علي وعلى زوجي فقال " صلى الله عليك وعلى زوجك "

·         عن حذيفة عن أبيه أن النبي صلى الله عليه وسلم كان إذا دعا لرجل أصابته وأصابت ولده وولد ولده

இன்றைய காலத்தில் ஜகாத்தை வசூலிக்கிற் அதிகாரம் படைத்தவர்கள் இல்லாத நிலையில், மக்கள் தனித்தனியாகவே ஜகாத் கடமையை நிறைவேற்றி விடுகிறார்கள்.

அத்தகைய வள்ளல்களுக்காக துஆ செய்ய நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

இந்த ஆண்டு உரிய முறையில் ஜகாத் கடமையை நிறைவேற்றிய பெருமகளுக்கு அல்லாஹ் அவனது கிருபையை சமாதானத்தையும் வழங்கியருள்வானாக! அவர்களது ஈருலக வாழ்வை அல்லாஹ் வெற்றியானதாக ஆக்குவானாக!

சரியாக முறையாக ஜகாத் வழங்காதவர்கள் யாரும் இருந்தால் ரமலானுக்குப் பிறகும் ஜகாத்தை நிறைவேற்றி உங்களது செல்வத்தை சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறோம்,

ஜகாத் வழங்கியவர்கள். நான் இவ்வளவு கொடுத்தேன் என்று பெருமைப் பட்டுக்கொள்ள எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்க்களோ அதை உங்களது பரிசுத்த்திற்காகவே கொடுத்தீர்கள்.

ஜகாத் என்பது பணத்திற்கான வரியே தவிர. ஏழைகளுக்கான வரி அல்ல.

ஜமாத்தே இஸ்லாமிய போன்ற சில அமைப்புக்கள் புரட்சிகரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஜகாத்தை ஏழை வரி என்று பேச ஆரம்பித்தார்கள்.

இதனால் ஜகாத் கொடுக்கிற செல்வந்தர்களுக்கு ஏதோ ஏழ்மையை ஒளிக்க தாங்கள் அவதாரம் எடுத்த்து போல நினைத்துக் கொள்கிறார்கள். ஏழைகளுக்கு தாங்கள் கொடுப்பதாக பெருமை கொள்கிறார்கள்.

உண்மையில் ஜகாத் கொடுப்பவர் தன்னுடைய சொத்தை சுத்தப் படுத்திக் கொள்வதற்காகவும், தன்னுடைய சொத்தில் வளர்ச்சியை கருதியுமே ஜகாத் கொடுக்கிறார்.

அதனால் பணத்தை தர்ம்ம் செய்கிற செல்வந்தர் ஜகாத கொடுக்கிற போதும் கொடுத்து முடித்த பிறகும் யா அல்லாஹ் எனது தர்மத்தை ஏற்றுக் கொள்வாயாக என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நாம் பாடுபட்டுச் சேர்த்த காசு வீணாகிப் போய்விடுமல்லவா?

ஆகவே ஜகாத் கொடுத்த பெருமக்கள் தங்களது ஜகாத்திற்கு அங்கீகாரம் வேன்டுமென அல்லாஹ்விடம் இன்று துஆ செய்யுங்கள்.
முஸ்லிம ச்முதாயத்திற்கு இன்றையை பெருநாளின் செய்தியாக ஒரு விச்யத்தை ஞாபகப் படுத்திகிறோம்.

இஸ்லாமிய வாழ்வு நாம் ரப்புனல்லாஹ் என்று சொன்னதில் தொடங்குகிறது

ரப்புனல்லாஹ் என்று சொல்லி விட்டால் மட்டும் போதாது. அப்படி சொன்னவுடன் நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் , நாம் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகள் பல உடனே நம்மோடு வந்து ஒட்டிக் கொள்கின்றன.

அந்த கடமைகளை நாம் உறுதியோடு கடைபிடிக்கிற போது ஈமானுக்கு அல்லாஹ் தருகிற அனைத்து வெற்றியும் கிடைக்கும்.

திருக்குர் ஆன் கூறுகிறது.

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمْ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ(3041:

தனக்கு ஒரு தனிப்பட்ட விசேஷ அறிவுரை வேண்டுமென் ஒரு நபித்தோழர் கேட்ட போது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ وَفِي حَدِيثِ أَبِي أُسَامَةَ غَيْرَكَ قَالَ قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِمْ  - مسلمஇன்றைய நமது உலகு ஈமானிய வாழ்விலிந்து நம்மை பிரிக்க எல்லா வகையிலும் முயற்சிக்கிறது.

நம்முடைய எதிரிகள் மட்டுமல்ல நாம் காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிற விஞ்ஞான சாத்ன்ங்கள் கூட நம்மை தடம் மாற்ற முயசிக்கின்றன,

ஈமானிய வாழ்க்கையில் உறுதியோடு நிலைத்திருப்பது என்பதை நாம் முடிவு செய்து விடுவோம் என்றால் அல்லாஹ்வின் உதவிகள் நாம் எதிர்பாராத் வகையில் கிடைக்கும்.

அவுரங்க சீப் இந்தியாவை ஒருங்கிணைந்த முதல் பேரரசர் என்ற வரலாற்றுப் புகழுக்குச் சொந்தக்கார்ர்.  காபுலில் இருந்து தமிழ்நாடு செஞ்சி  வரை  52 ஆண்டுகள் கட்டியாண்டவர்.  பேர்ர்சாக  வாழ்ந்த போதும் ஈமானிய வாழ்வை எந்த இட்த்திலும் விட்டுக் கொடுக்காதவர்.

அவுரங்கசீப்பிற்கு எதிரான் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை, அவுரங்க சீப்பின் பிரதான எதிரி  என்ரு கருதப்படுகிற சிவாஜியின் பேரன் ஸாகு அவுரங்கசீப் இறந்த பிறகு அவரது கப்ரை அடிக்கடி தரிசிக்க வருவார் என்று வரலாறு சொல்கிறது. இது ஒன்று போதாதா அவுரங்கசீப்பின் மரியாதை பறைசாற்ற.

அவுரங்க சீப்பை பற்றி ஒரு செய்தியை வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள். புகழ் பெற்ற வரலாற்ற்றாசி ரியர் ஆர் சி மஜும் தாரும் ஹெச் சி ராய்ச் சவ்திரியும் இணைந்து எழுதிய இந்திய வரலாறு எனும் நூலில் அவுரங்க சீப்பை பற்றி இப்படி ஒரு செய்தி சொல்கிறார்.

பால்க் யுத்தம் நடந்து கொண்டிந்த தொழுகை நேரம் தப்பி விடக்கூடாது என்பதற்காக போர்க்களத்தில் தன்னைச் சுற்றி சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தனது குதிரையிலிருந்து இறங்கி அவுரங்கசீப் தொழுது கொண்டிருந்தார்.

Once durig the balk campign he knelt down to finish his prayer at the praper time though the figting was going on all around him.
RC majumdar +  Dr hcRray chowdri = an advance history of india
இவர்கள் இருவரும் இத்தோடு நிறுத்தி விடுகிறார்கள், ஆனால் வரலாறு இத்தோடு நிற்கவில்லை.;

அந்த பால்க படக்‌ஷான் யுத்த்தில் அவுரங்கசீப்பை எதிர்த்த மன்னர் அப்துல் அஸீஸ்கான் போர்க்களத்தில் ஒரு காட்சியை கண்டார். யுத்தம் நடந்து கொண்டிருக்கிற போது ஒர் யானையின் நிழலில் அவுரங்கசீப் தொழுது கொண்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே சணடையை நிறுத்தினார். இத்தகைய மனிதரோடு போர் செய்வது அழிவை தேடிக் கொள்வதேயன்றி வேறில்லை. என்று சொல்லி அவுரங்கசீப்பிடம் சரண்டைந்தார்.


ஒன்றல்ல இது போல பல நூறு சான்றுகளை இஸ்லாமிய வரலாறு தாங்கி நிற்கிறது, ஈமானிய வாழ்வில் உறுதியோடு நின்றவர்கள் பெரும் வெற்றியை பெருவார்கள். ஈருலகத்திலும்.

இன்றைய நிலையில் என்னால் முடிந்த வரை ஈமானிய வாழ்கைக்கு முயற்சிப்பேன் என்று ஒருவர் உறுதி ஏற்பார் எனில் அவரது மறுமை வாழ்க்கை மட்டுமல்ல இம்மை வாழ்க்கை சிறப்படையும். இதில் சந்தேகமில்லை,

அல்லாஹ் கிருபை செய்வானாக!
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஈத் முபாரக!


No comments:

Post a Comment