வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 31, 2014

அதிகாரிகள் பொறுப்பாக்கப்படனும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُونُواْ قَوَّامِينَ لِلّهِ شُهَدَاء بِالْقِسْطِ وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلاَّ تَعْدِلُواْ اعْدِلُواْ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ 

சமீப காலத்து தமிழகத்தின் வரலாற்றில் மறக்க முடியாத இரண்டு பெரு விபத்துக்கள்
2004 டிஸம்பரில்  ஏற்பட்ட சுனாமி
அதே 2004 ல் ஜூலையில் நடைபெற்ற கும்பகோணம் பள்ளிக் கூட்த்தில் நடந்த தீ விபத்து. 
காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் தான் ஒரு சமூகத்தின் அழகுக்கு சான்றாக இருப்பவர்கள். ஒரே சீருடையில் அணியணியாய் செல்லும் குழந்தைகளைப் பார்க்கையில் யாருடைய இதயத்திலும் ஒரு உற்சாகம் வந்து ஓட்டிக் கொள்ளும்.
அத்தகைய சின்னக் குழந்தைகள் 94 பேர் உடல் கருகி இறந்த பரிதாபம் இப்போது நினைத்தாலும் நெஞ்சை உருக்க கூடியது.
பள்ளிக் கட்டிட்த்தின் அமைப்பும் ஊழியர்களின் அலட்சியமும் தமிழகம் மறக்க முடியாத விபத்துக்கான காரணங்களாக அமைந்தன.
இந்தக கொடூர விபத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கான் தீர்ப்பு மிகச் சரியாக விபத்து நடந்து 10 வருடங்கள் 15 நாட்கள்  கழித்து இப்போது வந்திருக்கிறது.
நமது நாட்டில் அரசியல் ரீதியான அழுத்தம் கொண்ட வழக்குகள் மட்டுமே 4 – 5 வருடங்களுக்குள் முடிக்கப் பட்டு தண்டனைகள் நிறைவேற்றப் படுகின்றன. அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் தண்டனைக்கான நீதியின் கைகள் அவசரமாக நீள்கின்றன,
2008 ல் நடைபெற்ற மும்பை தீவிர வாத தாக்குகளில் தொடர்புடைய அஜ்மல கசாபுக்கு மரண தண்னை விதிக்கப் பட்டு அவனை புதைத இடத்தில் புல் முளைத்துப் போயிருக்கும்.
அரசியல் ரீதியான அழுத்தம் இல்லாத வழக்குகளில் அல்லது எதிர் அழுத்தம் உள்ள வழக்குகளில் தீர்ப்புக்கள் தலை முறைகளை தாண்டி தாமதமாகிறது.
சமுதாயத்தில் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திய இந்த வழக்கும் அப்படித்தான் 10 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்திருக்கிறது.
கிடைத்த தீர்ப்பு அங்கு கூடியிருந்த யாருக்கும் திருப்தி அளிக்கவில்லை. பத்ரிகையாளர்களரும் பார்வையாளர்களும் கூட அதிருதியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கான் காரணம் என்ன?

இது ஒன்றும் ஆழ்ந்த புலன் விசாரணை தேவைப்படுகிற வழக்கல்ல. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட குற்றமும் அல்ல.

பெரும் விபத்து நடந்து விட்டது. ஆயினும் இது திட்டமிட்டு செய்யப் பட்ட குற்றமல்ல. என்னினும் இதில் தவறுகள் இருக்கிறது. இதில் தவறுகள் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை விரைவாக வழங்கப்பட்டிருக்க வேண்டும் 

நீதி உடன்டியாக வழங்கப்பட்டால் தான் நீதி நிலைக்கும்

மக்கா வெற்றியின் போது கஃபாவின் சாவியை தர தல்ஹா மறுத்தார், அலி ரலி பிடுங்கிக் கொடுத்தார். சாவியை பெறுவதில் அப்பாஸ் ரலி போட்டி போட்டார்.  மீண்டும் சாவியை அவரிடமே பெருமானார் உடன்டியாக ஒப்ப்டைத்தார்கள் , அந்தச் சாவி அந்தக் குடும்பத்திடமே இன்று வரை இருக்கிறது. உடனடியாக வழங்கப்பட்ட நீதி தான அது நிலைக்க காரணமாகிறது.

ففي في فتح مكة أغلق عثمان بن طلحة بن عبد الدار باب الكعبة، وأبى أن يدفع المفتاح إلى الرسول (صلى الله عليه وسلم) ليدخل فيها وقال:
«لو علمت أنه رسول الله لم امنعه»
فلوى علي كرم الله وجهه يده وأخذ المفتاح منه عنوة، فدخل رسول الله (صلى الله عليه وسلم) وصلى فيها ركعتين، ولما خرج سأله عمّه العباس (رضي الله عنه) أن يدفع له المفتاح ويجمع له السقاية والسدانة فنزل قول الله تعالى:
Ra bracket.png إِنَّ اللّهَ يَأْمُرُكُمْ أَن تُؤدُّواْ الأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُواْ بِالْعَدْلِ إِنَّ اللّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا Aya-58.png La bracket.png
فأمر رسول الله (صلى الله عليه وسلم)، عليًّا (رضي الله عنه) بأن يرد المفتاح إلى عثمان بن طلحة ويعتذر إليه ففعل ذلك عليّ، فصار ذلك سببًا لإسلامه. ونزل الوحي بأن السدانة في أولاده أبدًا.

சட்டத்தை மீறீ நடப்பவர்களுக்கும் உறவுகளை வெட்டி வாழ்பவர்களுக்கும் அல்லாஹ் விரைந்து தண்டனை வழங்கி விட நினைப்பதாக பெருமானார் (ஸல்) கூறினார்கள்

عَنْ أَبِي بَكْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ مِنْ الْبَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

உமர் ரலி உன்னதமான நீதியுணர்வுக்கு பெயர் பெற்றவர்.
அவருடை நீதி உணர்வு தான் பெருமானாரை கொல்லப் போய்க் கொண்டிருந்த அவரை உன்னுடைய சகோதரியே முஸ்லிமாகி விட்டாரே என்ற வார்த்தையை கேட்டு சகோதரி வீட்டுக்கு திருப்பியது.

சகராத்துடைய நிலையில் பெருமானாருக்கு பக்கத்தில் அடக்க அனுமதிக்குமாறு தன் மகன் அப்துல்லாஹ் மூலம் ஆயிஷா அம்மையாரிடம் கேட்க வைத்தது.
 உமர் (ரலி) கூறினார்கள் அப்துல்லாஹ்வே ஆயிஷாவிடம் அமீருல் முஃமினீன் என்று கூறாதே உமர் பின் கத்தாப் கேட்கிறார் என்று கூறு எனச் சொல்லி அனுப்பினார்.

இத்தகைய நீதி உணர்வு அவருக்குள் வேர் விட ஒரு முக்கிய நிகழ்வு காரணமாக அமைந்த்து,

அவர் வெளி நாட்டுக்கு வியாபாரத்திற்கு சென்ற போது அங்கு அவருடை பை திருடப் பட்ட்து, மன்னர் நவ்சேர்வானிடம் முறையிட்டார். சிறிது காலம் தங்கியிருக்குமாறு மன்னர் கூறினார். இரண்டு நாள் கழித்து அழைப்பு வந்த்து, அவருடை பை திருப்பி தரப்பட்டது, கூடவே துணி போட்டு மூடப் பட்ட ஒரு தட்டும் இருந்தது, எங்களது நாட்டில் இப்படி ஒரு தாமதம் தடை ஏற்பட்டதற்காக இந்தப் பரிசு என்றார் , திறந்த போது அதில் வெட்டப் பட்ட ஒரு கை இருந்தது.

ஒரு இட்த்தில் நீதி உரிய முறையில் வழங்கப்படும் என்றால் அது தனி வழக்கிலானா நீதியாக மட்டும் இருக்காது. மனித சமூகத்திற்கு செய்கிற பெரிய உபகாரமாகவும் ஒரு பாரம்பரியத்தை நீதியின் அடிப்படையில் வார்த்தெடுப்பதாகவும் அமையும்.

அதனால் மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் ஏழு பேர்களை குறிப்பிடுகிற போது நீதியான தலைவன் என்பதை பெருமானார் முதலாவதாக குறிப்பிட்டார்கள்.

ن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : " سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ، إمام عادل وشاب نشأ في عبادة الله ، ورجل قلبه معلق بالمساجد ، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله . ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ، ورجل ذكر الله خالياً ففاضت عيناه " متفق عليه(
 
நீதி உடன்டியாக வழங்கப்பட்டால் தான் குற்றத்திற்கான தண்டனை செய்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உரைக்கும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றப் பட்டன.
 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ الْيَهُودَ جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الْجَنَائِزِ عِنْدَ الْمَسْجِدِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُمَا قَالَا إِنَّ رَجُلًا مِنْ الْأَعْرَابِ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْشُدُكَ اللَّهَ إِلَّا قَضَيْتَ لِي بِكِتَابِ اللَّهِ فَقَالَ الْخَصْمُ الْآخَرُ وَهُوَ أَفْقَهُ مِنْهُ نَعَمْ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَأْذَنْ لِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْ قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَى بِامْرَأَتِهِ وَإِنِّي أُخْبِرْتُ أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَوَلِيدَةٍ فَسَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ وَأَنَّ عَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ الْوَلِيدَةُ وَالْغَنَمُ رَدٌّ وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ اغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا فَإِنْ اعْتَرَفَتْ فَارْجُمْهَا قَالَ فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَتْ

தண்டனைகள் நிறைவேற்றப்படுவது உலகில் 40 நாள் மழை பொழிவதை முக்கியமானது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدٌّ يُعْمَلُ بِهِ فِي الْأَرْضِ خَيْرٌ لِأَهْلِ الْأَرْضِ مِنْ أَنْ يُمْطَرُوا أَرْبَعِينَ صَبَاحًا

தஞ்சை நீதிமன்றம் வழங்கிய தண்டனை  மக்களுக்கு திருப்தி அளிக்காத்தற்கு மற்றொரு முக்கிய காரணம் அதிகாரிகள் விடுதலை செய்யப் பட்டதாகும்.

அதிகாரிகள் தங்களது பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதே இல்லை. அதிகாரிகள் தங்களை மன்னர்களாக கருதிக் கொள்கிறார்கள்.

உமர் ரலி சொன்னார்கள். எனது ஆட்சிகாலத்தில் நாவறண்டு ஒரு நாய இறந்து போய்விடும் என்றாலும் அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்.

ஒரு காலத்தில் தமது நிர்வாகத்தில் ஒரு தவறு நடந்தால்  அதிகாரம் படைத்தவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் அரியலூர் ரயில் விபத்து ஏற்பட்ட போது அதற்கு பொறுப்பேற்று இரயில் வே அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இத்தகைய தார்மீக நடை முறைகள் இப்போது வழக்கிழந்து விட்டன.

ஹிந்து பத்ரிகை சமீபத்தில் ஒரு கட்டுரையில் சென்னையில் பல அடுக்கு மாடி இடிந்து விழுந்த்தற்காக யாரும் இராஜினாமா செய்யாத்தையும் ஒரு அதிகாரி மீது கூட துறை ரீதியான விசாரணை நடைபெறாத்தையும் சுட்டிக் காட்டியிருந்தது.

தார்மீக பொறுப்பேற்காத அதிகாரிகள் கணக்குப் போட்டு இலஞ்சம் வாங்க மட்டும் தவறுவதில்லை.

கும்பகோணம் தீ விபத்திற்கு பிறகு பள்ளிக் கூடங்கள் ஆண்டுக்கு ஒரு முறை தீயணைப்புத்துறை அதிகாரியிடமிருந்து சான்றிதழ பெற வேண்டும் என்றும் அது இருந்தால் தான் அனுமதி புதுப்பிக்கப்படும் என்றும் அரசு உத்தரவு போட்டது.

இதனால் நடந்த்து என்ன?
ஆண்டு தோறும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளிடமிருந்து இலஞ்சம் வாங்குவது வசதியாகி விட்டது.

எனக்குத் தெரிந்த ஒரு வெளிநாட்டு இந்தியர். தன்னுடைய கிராம மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் மிக தரமான ஒரு கல்லூரிக்குரிய வசதிகளோடு ஒரு பள்ளிக் கூட்த்தை நடத்திவருகிறார்.

அவர் தன்னுடை ஊருக்கு வந்திருந்த சமயம அவருடைய பள்ளிக் கூட்த்தில் ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார்.

அந்த நேரம் பார்த்து பையர் இன்ஸ்பெக்ஸனுக்காக தீயணைப்பு அதிகாரி வந்திருக்கிறார். அந்தப் பள்ளிக் கூட்த்தில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் கூட பள்ளிக்கூட அலுவலர்கள் அவருக்கு 2000 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் 4000 ஆயிரம் வேண்டும் என்று கேட்டார். இந்தச் செய்தியை ஊழியர்கள் முதலாளியிடம் வந்து சொன்னார்கள். அப்போது அவர் அழுத்துக் கொண்டு ஒரு வார்த்தை சொன்னார். கிராமத்து மக்கள் பயன்பட்டுமே என்று நான் இங்கு வந்து ஒரு பள்ளிக் கூட்த்தை ஆரம்பித்தேன் பாருங்கள்! அது தான் நான் செய்த தவறு. இந்தப் பள்ளிக்கூட்த்தால் எனக்கு வருமானம் எதுவும் இல்லை. ஆனால் இத்தகைய அதிகாரிகள் மிரட்டி இலஞ்சம் கேட்கிறாங்க பாருங்க ! அப்பதான் நான் ரொம்ப நொந்து போகிறேன் என்றார்.

இவ்வளவு இலஞ்சம் வாங்குகிற அதிகாரிகள் தங்கள்து செயலுக்கு ஒரு சிறுதும் பொறுப்பாக முடியாது என்றால் அது என்ன நியாயம்.

எந்த இட்த்திலும் அதிகாரத்திலிருக்கிறவர்கள் சரியாக பொறுப்பாக்கப் படாவிட்டால் நாடு நிர்வாகம் சீரழிந்து விடும். இப்போது அப்படித்தான் நடக்கிறது.

உமர் ரலி அவர்கள் தன்னுடைய அதிகாரிகள் விசய்த்தில் மிகவும் கவனம் செலுத்துவார்கள்.

எகிப்தில் கவர்னர் அம்ருப்னுல் ஆஸீன் மகன் ஒரு எகிப்தியரை அடித்து விட்டார். புகார் உமர் ரலியிடம் வந்த்து. உடனே இருவரையும் மதீனாவுக்கு அழைத்த உமர் அந்த எகிப்தியனிடம் சாட்டையை கொடுத்து கவர்னரின் மகனை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அதன் பிறகு கவர்னரையும் அடிக்கு மாறு கேட்டுக் கொண்டார்கள். அதிர்ந்து போன எகிப்தியர் தயங்கினார் உமர் கூறினார்
ا ضربك إبنه إلا بسلطان أبيه
பிறகும் அந்த எகிப்தியர் மறுத்துவிட்டார். அப்படியானால் சரி என்று சொன்ன உமர் சொன்னார். இவர்களால் எதுவும் தொல்லை வரும் என்று தோன்றினால் என்னிடம் புகார் செய்யத் தவறாதே என்றார்.
பிறகு அம்ரு ரலி பார்த்து உமர் கேட்டார்.
ثم أقبل على عمرو بن العاص وقال: منى تعبدتم الناس وقد ولدتهم امهاتهم احرار

அதிகாரிகள் மக்களை அடிமைகளாக கருத்க் கூடாது என்றால் அதற்கு தேவையான பொறுப்புணர்வு அவர்களுக்கு கட்டாயப்படுத்தப் பட வேண்டும்

தவ்றுகளுக்கு  நேரடியாக அவர்கள் பொறுப்பல்ல என்றாலும் அதற்கேற்ற அளவுக்கு தண்டனை அபராதம் அவர்களுக்கு விதிக்கப் பட்டிருந்தால் இனி வரும் காலத்திலாவது அதிகாரிகள் கவனமாக இருக்க வாய்ப்புண்டு.

இல்லை கும்பகோணம் தீவிபத்துக்கள் இனியும் நிகழக்கூடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் இந்த உலகிலும் நெருப்பிலும் மறுமையின் நெருப்பிலிருந்தும் பாதுகாப்பானாக!

No comments:

Post a Comment