திருக்குர் ஆன்பில் மூன்று விசயங்களை ஜோடியாக இணைத்தே அல்லாஹ்
கூறுகிறான்
·
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
إِحْسَانًا
·
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
·
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
தொழுகையைப் பேன்றே ஜகாத்தும் மிக முக்கிய கடமை
ஒருவர் தொழுகிறார். அவர் மீது ஜகாத் கடமையாக இருந்தும்
நிறைவேற்றவில்லை எனில் அவரது தொழுகையை அல்லாஹ் ஒப்புக்கொள்ள மாட்டான் என முபஸ்ஸிர்கள்
கூறுகிறார்கள். நான் சேர்த்த்து வைத்தை பிரிக்க நீ யார் என அல்லாஹ் கேட்பதாக அவர்கள்
மேலும் கூறுகிறார்கள்.
ஜகாத்தை கடமையாக்கில் மூன்று தத்துவங்கள் இருக்கின்றன,
1.
அல்லாஹ் செல்வந்தனை
சோதிக்கிறான், இவன் தனக்காக வாழ்கிறானா? தன் சொல்படி வாழ்கிறானா?
وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ
حُبِّهِ
உடைய ضمير அல்லாஹ் என முப்தி முஹம்மது ஷபீ சாஹிப்
அவர்கள் மஆரிபுல் குர் ஆனில் கூறுகிறார். அப்படியானால் அல்லாஹ்வின் மீதான நேசத்தில்
தர்மம் செய்பவர் என்று பொருள்.
2.
இதயத்தில் கஞ்சத்தனம் பேராசை படியாமல் பாதுகாக்கிறது.
3. சமூகத்தில் ஏழை
பணக்காரகளுக்கிடையே அமைதி நிலவு
உள்ளார்த்தமாக
ஜகாத் கொடுப்பவர்களுக்கு இந்த மூன்று வகையான நனமைகள் கிடைக்கின்றன. அத்தோடு சமுதாயமும்
நனமை அடைகிறது.
முந்தைய
ஷரீஅத்த்துகளில் ஜகாதை மக்கள் சாப்பிடக் கூடாது. அது திறந்த வெளியில் அல்லது மலையின்
மேல் விட்டு விடப் வேன்டும். அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் எனில் வானத்திலிருந்து வரும்
ஒரு நெருப்பு அதைச் சாப்பிட்டு விடும்.
حَتَّى يَأْتِيَنَا بِقُرْبَانٍ
تَأْكُلُهُ النَّارُ
இல்லை எனில் அதை துர்ச்சகுனமாக கருதுகிற மக்கள் அதை கண்டு விரண்டோடிவிடுவார்கள்.
ஜகாத் கொடுப்பவர்களே! கவனியுங்கள்!!
நீங்கள் கொடுக்கும் ஜகாத்தின் நன்மை உங்களுக்கே!
ஜகாத் உங்களை உங்களது சொத்துக்களை சுத்தப் படுத்துகிறது.
அதில வளர்ச்சியை தருகிறது.
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ
وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ
سَمِيعٌ عَلِيمٌ(103)
சில பேர் ஜகாத்தை ஏழை வரி என்று சொல்லி – ஏழ்மையை
ஒழிக்கும் பொருளாதார திட்டம் என்று சொல்லி
ஜகாத்தை வலியுறுத்திப் பேசுவதால் பணக்காரர்கள் சிலர் ஏழைகளுக்கு நன்மை செய்வதற்காக
தாங்கள் ஜகாத் கொடுப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இத்தகைய எந்த வாசகமும் இஸ்லாமின் மூலங்களில் இல்லை.
திருக்குர் ஆன் என்ன சொல்கிறது.
ஜகாத் பணக்கார்ர்களின் சொத்தை சுத்தப் படுத்துவதற்காக
என்கிறது.
சில வருடங்களுக்கு முன் ஒரு மதிய நேரத்தில் சில
ஆயிரங்களை கையில் எடுத்துக் கொண்டு ஒரு பெரியவர் வந்தார். ஹஜ்ரத்! ஜகாத் கொடுக்க வேண்டும்
என்றார், சரி போகலாம் என்று அப்போதே அவருடன் புறப்பட்டேன். ஒரு வீட்டை தேடி அடைந்து
அந்த வீட்டிலிருந்த்அ அம்மாவிடத்தில் அவர்
8 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். அதை வாங்கிய அந்த அம்மாவுக்கு ஒரு நன்றி கூட சொல்லத்
தெரியவில்லை. அல்லது தோன்ற வில்லை. ஆனால் தன்னுடைய காசை கொடுத்து விட்டு அந்தப் பெரியவர்
சொன்னார். “அம்மா துஆ செய்யுங்கள்.”
இத்தகைய மனோ நிலை ஜகாத் கொடுப்பவரிடம் இருக்க வேண்டும்.
அல்லாஹ் நாம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்று அஞ்சவேண்டும்.
கொடுப்பவர் பாதிப்புக்கு ஆளாக மாட்டார்.
وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ وَمَا
تُنفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ
إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ(272البقرة )
கொடுப்பவர் வெற்றி பெறுவார்.
فَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ
السَّبِيلِ ذَلِكَ خَيْرٌ لِلَّذِينَ يُرِيدُونَ وَجْهَ اللَّهِ وَأُوْلَئِكَ هُمْ
الْمُفْلِحُونَ(38) الرووم
கொடுப்பவருக்கு பன் மடங்கு திருப்பித்தரப் படும்,
وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ
اللَّهِ فَأُوْلَئِكَ هُمْ الْمُضْعِفُونَ(39) الرووم
நல்லதை கொடுங்கள். நல்ல விதமாக கொடுங்கள்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِنْ طَيِّبَاتِ
مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنْ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ
مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا
أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ(267)
மோசமானதை கொடுக்காதீர்கள். மக்களை கஷ்டப்படுத்தாதீர்கள்.
அப்படி செய்வதால் ஒரு நன்மையும் இல்லை. வீண் பெருமையை தவிர.
மற்றவர்கள் உங்களுக்கு கொடுத்தால் நீங்கள் முகம்
சுளிக்கும் படியானதை பிறருக்கு கொடுக்காதீர்கள். அது போன்ற நடைமுறையிலும் கொடுக்காதீர்கள்.
நல்லதை கொடுத்தால் குறைந்து விடும் என்று ஷத்தான்
எச்சரிக்கிறான். அல்லாஹ்வோ இன்னும் அதிகமாக கிடைக்கும் என வாக்களிக்கிறான்.
الشَّيْطَانُ يَعِدُكُمْ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ
يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ( البقرة 268)
அல்லாஹ்வின் வாக்குறுதி 2 – مَغْفِرَةً –َفَضْلً
َفَضْلً
என்றால் துன்யா ஆகிரத் இரண்டின் நனமைகளையும் குறிக்கும்
ரஹ்மத் என்பது ஆகிரத்தின் நன்மையை குறிக்கும்.
அதனால் தான் பள்ளிவாசலுக்குள் நுழைகிற போது ரஹ்மத்தை கேட்கிறோம்.
வெளியேறுகிற போது பழ்லை கேட்கிறோம்.
வாங்கிக் கொள்ளுங்கள் என்ற வார்த்தையை விட கொடுங்கள
என்ற வார்த்தையை தான் இஸ்லாம் அதிகம் பயன்படுத்துகிறது. அதனால் ஒவ்வொருவரும் கொடுக்க
ஆசைப்பட வேன்டும்.
தங்கம் வெள்ளி ஆடு மாடு ஒட்டகை விவசாயப் பொருட்கள்
காசு முதலீடு ஒவ்வொன்றிலிருந்தும் கொடு என்று இஸ்லாம் உத்தரவிடுகிறது. நம்மிடமிருக்கிற
அனைத்திலிருந்தும் கொடுக்க வேன்டும் என்பதை அது வலியுறுத்துகிறது.
وعن عائشة
قالت: قال رسول الله صلى الله عليه وسلم: "اتقوا النار ولو بشق
تمرة".
கொடுப்பது என்பது ஒரு பெருந்தன்மை. அதற்குரிய அழகோடு
அதை நிறைவேற்றுங்கள்.
ஜகாத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
·
ஒரு வருடம் கையிருப்பில்
இருக்கிற பணத்துக்கு மட்டுமே ஜகாத் கடமையாகும்.
·
ஜகாத் பொத்தம் பொதுவாக
நிறைவேற்றப் படக் கூடாது. கணக்கிட்டு கொடுக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் ஜகாத்தாக்
கொடுத்தாலும் இன்னும் பத்தாயிரம் பாக்கியென்றால் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
பல பெரும் செல்வந்தர்களும் தோராயமாக ஒரு தொகையை கொடுத்து விட்டு நான் அதிகமாகவே கொடுத்து
விட்டேன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது சரியல்ல.
·
ஜகாத்தின் பணம் முழ்வதுமாக
பயனாளியின் விருப்ப்ப் படியான பயன்பாட்டுக்கு தரப்பட வேன்டும். கடனாக , சுழல் தொகையாக,
தருதல் கூடாது.
·
அமைப்புக்கள் இயக்கங்களிடம்
ஜகாத் கொடுத்தால் அது உடனடியாக நிறைவேறாது. அவகர்கள் உரிய முறையில் செலவிட்டார்களா
என்பதை கவனிக்க வேன்டும். உரியவர்களிடம் சேர்த்து விட்டார்கள் என்பதை உறுதிப் படுத்தினால்
மட்டுமே ஜகாத்தின் பொறுப்பு நீங்கும்.
·
நமது கண் முன்னாள்
தேவையுள்ளோர் இருக்கும் போது. முகம் தெரியாதவர்களுக்கு சேர்ப்து சரியல்ல. அது பொறுப்பை
தட்டிக் கழிக்கிற செயலேஆகும்.
·
ஜகாத்தை வசூலித்து
விநியோகிக்கும் அதிகாரப் பூர்வ அமைப்பு என்பது இஸ்லாமிய அரசாங்கத்தின் பைத்துல் மால்
மட்டுமேயாகும்.
·
நம் நாட்டில் பைத்துல்
மால் என்ற பெயரில் இயங்குபவை சேவை அமைப்புக்களே. அவற்றிடம் ஜகாத்த்தை ஒப்படைக்க வேண்டும்
என்ற நிர்பந்தம் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் அவற்றிடம் ஜகாத் பணத்தை ஒப்படைக்கும்
போது சரியாக வழங்கினார்கள் என்பதற்க்கான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
·
ஜகாத் முஸ்லிம்களில்
தேவையுடையோருக்கு கொடுக்கப்படும் தர்மமாகும். இன்னவர்களுக்கு என்று பட்டியல் திருக்குர்
ஆனில் தரப்பட்டிருக்கிறது. தம்மிஷ்டத்திற்கு ஒருவர் ஜகாத் வழங்கினால். அது நிறைவேறாது.
·
ஜக்காத் யாருக்கு கொடுக்க
வேண்டும்?
·
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே
யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக்
கூறுகிறான்.
·
அல்லாஹ் கூறுகிறான்: -
(ஜகாத்
·
பிச்சைக்காரர்களுக்கும்
·
ஏழைகளுக்கும்,
·
ஜகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
·
இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுகிறவர்களுக்கும்,
·
அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
·
கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
·
அல்லாஹ்வின் பாதையில் அறச்செயல்களுக்கும்
·
வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த
கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க
ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)
இந்த எட்டுவகையினரில் யார் நமக்கு தகுதியானவர்களாக
அறியக் கிடைக்கிறார்களோ அவர்களுக்கு முழு உரிமைப்படுத்துதல் என்ற வகையில் ஜகாத்தை தந்து
விட வேண்டும்.
அல்ஹம்து லில்லாஹ் அருமை
ReplyDelete