வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 24, 2014

ஓதுவோம் குர்ஆனை இன்றைய ஜும் ஆவிலும் சிறப்புரையிலும் கூட இதையே உரையாக ஆக்கிக் கொள்ளலாம். )

புனித ரமலான் மாதத்தின் இந்த நிறைவு ஜும்ஆ வில் சமுதாயத்தின் ஒரு முக்கிய  பலவீனம் குறித்து நினைவூட்டுகிறோம், இந்த பலவீனத்தை சரி செய்வதில் சமுதாயத்தின் ஆன்ம பலம் அடங்கியிருக்கிறது. மட்டுமல்ல சகல வெற்றிகளுக்குமான சூத்திரம் இதில் இருக்கிறது.

தமிழக முஸ்லிம் சமூகத்தில் குர் ஆன் ஓதுகிற  பழக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது.

பள்ளிவாசல் நிறைய குர்ஆன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஓதுவார் யாருமில்லை.

பலரும் குர்ஆனை பள்ளிக்கு வக்பு செய்கிறார்கள். அது திறந்து பார்க்க கூட படுவதில்லை.

வீடுகளில் கூட பெண்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். ஆண்கள் குர் ஆனை கையில் எடுப்பது அரிதாக இருக்கிறது.

நம்மில் எல்லோரும் கட்டாயமாக சிறு பிராயத்தில் குர் ஆன் மக்தபுகளில் ஓதி முடித்திருப்போம். பிற்பாடு ஓதும் வழக்கத்தை கைவிட்ட காரணத்தால் நம்மில் பலருக்கும் குர் ஆன் அன்னியமாகிவிட்டது.

அரபு நாடுகளில் – பள்ளிவாசல்களில் ஆங்காங்கே எடுப்பதற்கு வசதியாக குர் ஆன் வைத்திருப்பார்கள். ஆனால். அதை ஓதவும் செய்வார்கள்.

பள்ளிவாசலில் குர் ஆன் ஓதக்கூடிய ஆட்களை அங்கு நிறைய பார்க்கலாம்.

நம்முடைய ஊர்களில் தான் குர் ஆன் இப்படி கைவிடப் பட்ட நிலையில் இருக்கிறது
நாம் மிகவும் கவலைப் பட வேண்டிய விச்யம் இது

இந்த மாதத்தில் தான்  குர் ஆன் அருளப்பட்டது.   

ரமலானுக்கு சிறப்பு எதனால்? أنزل فيه القرآن

திருக்குர் ஆனில்  உள்ள ஒரு வசனம் நம் அனைவருக்கும் தெரிந்த்து.

واعتصموا بحبل الله جميعا

இந்த ஆயத்திற்கான அர்த்தமும் நாம் அதிக மாக் கேள்விப்பட்டிருப்போம்,

ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்.

ரைமிங்காகவும் பரவலாகவும் சொல்ல்ப் பட்ட இந்த அர்த்தம் இந்த வசனத்தின் உண்மையான கருத்தை முழுமையாக  நாம் புரிந்து கொள்ள் விடாமல் செய்து விட்டது.

உண்மையில் இந்த ஆயத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

அல்லாஹ்வின் கயிற்றை ஒன்றாக சேர்ந்து பற்றிப் பிடியுங்கள் எனபதாகும்.

அல்லாஹ்வின் கயிறு என்றால் என்ன?

திருக்குர் ஆன் தான்.

குர் ஆன் பூமியில் தொங்கிக் கொண்டிருக்கிற அல்லாஹ்வின் கயிறு.

குர் ஆனை ஓதுகிற வரை நாம் அல்லாஹ்வினோடு தொடர்பிலிருக்கிறோம். அந்த தொடர்பிலிருக்கிற வரை அல்லாஹ்விடமிருந்து நமக்கு எல்லாம் கிடைக்கும்.

குழந்தை அம்மாவின் வயிற்றிலிருக்கிற போது தொப்புள் கொடியின் வழியே அதற்கு தேவையானது எல்லாம் கிடைக்கிறதே அது போல.

முஸ்லிம் சமூகத்தின் எல்லா தேவைகளுக்கும் குர் ஆனை தீர்வாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பாத்திஹா சூராவுக்கு சூரத்து ஷிபா என்று பெயருண்டு .
அது  விசக்கடிக்கு மருந்தாக அமையும்.
ويقال لها "الشفاء" لما رواه الدارمي عن أبي سعيد مرفوعا "فاتحة الكتاب شفاء من كل سم"

قال البخاري في فضائل القرآن

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الْحَيِّ فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ شَيْءٌ فَقَالَ بَعْضُهُمْ لَوْ أَتَيْتُمْ هَؤُلَاءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ فَأَتَوْهُمْ فَقَالُوا يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ فَهَلْ عِنْدَ أَحَدٍ مِنْكُمْ مِنْ شَيْءٍ فَقَالَ بَعْضُهُمْ نَعَمْ وَاللَّهِ إِنِّي لَأَرْقِي وَلَكِنْ وَاللَّهِ لَقَدْ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنْ الْغَنَمِ فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ وَيَقْرَأُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ قَالَ فَأَوْفَوْهُمْ جُعْلَهُمْ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ فَقَالَ بَعْضُهُمْ اقْسِمُوا فَقَالَ الَّذِي رَقَى لَا تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ فَقَالَ وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ ثُمَّ قَالَ قَدْ أَصَبْتُمْ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  -2276 

வீட்டிலிருந்து சைத்தான் தீய சக்திகளை ஓட்டும்

பகரா ஒதப்படுகிற வீட்டிலிருந்து சைத்தான் விரண்டோடுகிறான், ஹதீஸ்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ - مسلم  - 1300

عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ مَنْ قَرَأَ أَرْبَعَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْبَقَرَةِ وَآيَةَ الْكُرْسِيِّ وَآيَتَانِ بَعْدَ آيَةِ الْكُرْسِيِّ وَثَلَاثًا مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ لَمْ يَقْرَبْهُ وَلَا أَهْلَهُ يَوْمَئِذٍ شَيْطَانٌ وَلَا شَيْءٌ يَكْرَهُهُ وَلَا يُقْرَأْنَ عَلَى مَجْنُونٍ إِلَّا أَفَاقَ – الدارمي

வறுமை தீண்டாது
عن ابن مسعود -رضي الله عنه- أن النبي صلى الله وسلم قال: "من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبداً"- رواه البيهقي
அமைதியுண்டாகும். மலக்குகள் வருவார்கள்

سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَرَأَ رَجُلٌ الْكَهْفَ وَفِي الدَّارِ الدَّابَّةُ فَجَعَلَتْ تَنْفِرُ فَسَلَّمَ فَإِذَا ضَبَابَةٌ أَوْ سَحَابَةٌ غَشِيَتْهُ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اقْرَأْ فُلَانُ فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ- البخاري 3614

أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ حَدَّثَهُ أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ بَيْنَمَا هُوَ لَيْلَةً يَقْرَأُ فِي مِرْبَدِهِ إِذْ جَالَتْ فَرَسُهُ فَقَرَأَ ثُمَّ جَالَتْ أُخْرَى فَقَرَأَ ثُمَّ جَالَتْ أَيْضًا قَالَ أُسَيْدٌ فَخَشِيتُ أَنْ تَطَأَ يَحْيَى فَقُمْتُ إِلَيْهَا فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فَوْقَ رَأْسِي فِيهَا أَمْثَالُ السُّرُجِ عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا قَالَ فَغَدَوْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَيْنَمَا أَنَا الْبَارِحَةَ مِنْ جَوْفِ اللَّيْلِ أَقْرَأُ فِي مِرْبَدِي إِذْ جَالَتْ فَرَسِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ ابْنَ حُضَيْرٍ قَالَ فَقَرَأْتُ ثُمَّ جَالَتْ أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ ابْنَ حُضَيْرٍ قَالَ فَقَرَأْتُ ثُمَّ جَالَتْ أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ ابْنَ حُضَيْرٍ قَالَ فَانْصَرَفْتُ وَكَانَ يَحْيَى قَرِيبًا مِنْهَا خَشِيتُ أَنْ تَطَأَهُ فَرَأَيْتُ مِثْلَ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ السُّرُجِ عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ الْمَلَائِكَةُ كَانَتْ تَسْتَمِعُ لَكَ وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَرَاهَا النَّاسُ مَا تَسْتَتِرُ مِنْهُمْ

குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு

عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْف عُصِمَ مِنْ الدَّجَّالِ

ثُمَّ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ أُمَّتَكَ مُخْتَلِفَةٌ بَعْدَكَ قَالَ فَقُلْتُ لَهُ فَأَيْنَ الْمَخْرَجُ يَا جِبْرِيلُ قَالَ فَقَالَ كِتَابُ اللَّهِ تَعَالَى بِهِ يَقْصِمُ اللَّهُ كُلَّ جَبَّارٍ مَنْ اعْتَصَمَ بِهِ نَجَا وَمَنْ تَرَكَهُ هَلَكَ مَرَّتَيْنِ قَوْلٌ فَصْلٌ وَلَيْسَ بِالْهَزْلِ لَا تَخْتَلِقُهُ الْأَلْسُنُ وَلَا تَفْنَى أَعَاجِيبُهُ فِيهِ نَبَأُ مَا كَانَ قَبْلَكُمْ وَفَصْلُ مَا بَيْنَكُمْ وَخَبَرُ مَا هُوَ كَائِنٌ بَعْدَكُمْ

சஹாபாக்கள் தங்களது எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக வழிகாட்டியாக குர் ஆனை கருதினார்கள்.
குர் ஆன் அலாரம்

قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا
இந்த  ஆயத்தை ஓதி விட்டு படுத்தால் நினைத்த நேரத்தில் எழுந்திருக்கலாம் என முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அனுபவ தகவலை தப்ஸீரில் எழுதுகிறார்.

முஸ்லிம் உம்மத்தின் எல்லா தேவைகளுக்குமான தீர்வாக அல்லாஹ் வழங்கிய திருவேதம் இருக்கிறது.

வியாபார சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்திற்கு நஷ்டமடையாத வியாபாரத்திற்கு வழிகாட்டுகிற அல்லாஹ் முதல் கடமையாக குர் ஆன் ஓதுதலை கூறுகிறான்.

إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ(29)
குர் ஆன் ஓதுவதற்கு என்ன நன்மை என்று பெருமானார் (ஸல்) நிறைய சொல்லியிருக்கிறார்கள்
·        عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ
·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا
·         குர் ஆன் ஓதுகிற நேரத்தில் துஆ செய்ய தவறிவிட்டால் பரவாயில்லை அப்போது துஆ கேட்பவர்கள் அனைவரின் துஆவிலும் நமக்கு பங்கு கிடைக்கும்

·        عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ مَنْ شَغَلَهُ الْقُرْآنُ وَذِكْرِي عَنْ مَسْأَلَتِي أَعْطَيْتُهُ أَفْضَلَ مَا أُعْطِي السَّائِلِينَ وَفَضْلُ كَلَامِ اللَّهِ عَلَى سَائِرِ الْكَلَامِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ -  ترمذي
11ம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த தாத்தாரியர்கள் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து பிரிக்கும் முயற்சியாக குர் ஆண்களை பறித்து திஜ்லா நதியிலும் புராத் நதியுலும் கொட்டினர்கள். சில இடங்களில் அவ்வாறு கொட்டப் பட்டவை ஒரு பாலம் போல மேடாகித் தெரிந்தன.

ஆனால் அவர்களது முயற்சி வெற்றி பெற வில்லை. தாதாரியர்கள் தான் முஸ்லிம்களானானார்கள்.

முஸ்லிம்களையும் குர் ஆனையும் பிரிக்க ஆங்கிலேயர்கள் முய்ற்சி செய்தார்கள்.  அவர்களது முய்றசியும் வெற்றி பெறவில்லை.

நமது கண்கள் பார்க்க 1917 ல் ரஷயப் புரட்சிக்குப் பின் ரஷ்யாவிலும் அதை தொடர்ந்து அவர்கள் கைப்பற்றி இஸ்லாமின் கேந்திரங்களாக இருந்த தஜ்கிஸ்தான் துர்கமெனிஸ்தான் போன்ற பால்டிக் நாடுகளிலும் குர் ஆனை தடை செய்தார்கள். வீடுகளில் குர் ஆன வைத்துக் கொள்வது சட்ட விரோதமாயிற்று. எங்கும் குர் ஆன் கிடைக்காதவாறு செய்தார்கள். பள்ளிவாசல்களை பூட்டினார்கள். தொழுகையை நிறுத்தினார்கள்.

புகழ் பெற்ற் மார்க்க அறிரும் நக்ஷபந்தி தரீக்காவின் ஷைகுமான  துல்பிகார் சாஹிப் ரஷயாவில் தனக்கு ஏற்பட்ட அனுப்வங்களை சொல்கிறார்.

நாங்கள் தாஷ்கண்ட் சென்ற போது எங்களை அணுகிய ஒரு பெண்மணி நீங்கள் முஸ்லிமா? உங்களிடம் குர் ஆன் இருக்கிறதா என்று கேட்டார்.

எங்களிடமிருக்கிற குர்ஆனை எடுத்துக் காட்டியதும் அதை கண்ண்லும் நெஞ்சிலும் ஒத்திக் கொண்ட அந்தப் பெண் அதை முத்தமிட்டுக் கொண்டே சொன்னார்.
என பெற்றோர்களும் முஸ்லிம்கள் தான். எனக்கு  49 வயதாகிறது, நான் இப்போது தான் குர்ஆனைப் பார்க்கிறேன், என்றாராம்.

இப்படி வளர்க்கப் பட்ட ரஷ்ய சமுதாயத்தில் இஸ்லாம் உயிர் துடிப்போடு இருந்த்து. எப்படி என்றால் அவர்கள் மன்னமாக குர் ஆனை ஓதிக்கொன்டிருந்தார்கள்

மாஸ்கோவுக்குச் சென்ற ஸ்டீல் ஆலை அதிகாரி ஒருவர் அங்குள்ள ஒரு வீட்டுக்கு சென்ற சிறுவர்களிடம் குர் ஆனை காட்டியிருக்கிறார். அவர்களுக்கு குர் ஆனைப் பார்த்து ஓத தெரியவில்லை.

அவர்களுக்கு குர் ஆனே தெரியாது போல என்று நினைத்துக் கொண்டு தஹ்ரீம் அத்தியாத்தின் கூ அன்புஸகும் ன்ற ஆயத்தை ஓதிக் காட்ட ஆரம்பித்திருக்கிறார். அவர்  ஓரிரு வார்த்தை ஓதியது தான் தாமதம். குர்ஆனை பார்த்திராத அந்த சிறுவர்கள் ராகமாக அவரை தொடர்ந்து குர் ஆனை ஓத ஆரம்பித்து விட்டார்கள்.  

இஸ்லாமிய வாழ்க்கை தடுக்கப் பட்டிருந்த நிலையிலும் ரஷ்ய மக்களின் ஈமானைப் பாதுகாத்த்து அவர்களுக்கு குர் ஆனோடு உள்ள தொடர்பு தான் என்பதை வரலாறு புலப்படுத்துகிறது.

குர் ஆனை ஓதுவது தான் மக்களுக்கு இதயப் பரிசுத்த்தை வழங்க கூடியது.
பெருமானார் (ஸல) அவர்கள் திருக்குர் ஆனை ஓதிக் காட்டியதன் மூலம் மக்களின் இதயங்களைப் பரிசுத்தப் படுத்தினார்கள் என்று குர் ஆனின் பல வசன்ங்களும் கூறுகின்றன,

يتلو عليهم أياته ويزكيهم
இரும்பிலே துருப்பிடிப்பது போல
وعن ابن عمر قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء " قيل : يا رسول الله وما جلاؤها ؟ قال : " كثرة ذكر الموت وتلاوة القرآن " روى البيهقي

குர் ஆனை ஓதுகிற வழக்கம் இல்லாமல் – அதை படிக்கிறேன் என்று சமுதாயத்தின் ஒரு சாரார் புறப்பட்ட போது சமுதாயத்தில் சர்ச்சைகள் பெருகியதை நாம் பார்த்தோம்.

இன்று எங்கு பார்த்தாலும் READ QURAN  என்ற வாசகம் காணப்படுகிறது. இது முறையல்ல. குர் ஆனுக்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை குர் ஆனை ஓதுவதாகும்.
அதனால் READ QURAN   என்பதற்கு பதிலாக recite QURAN  என்ற கோஷமே முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

குர் ஆன் ஓதுவதன் மூலமே சமுதாயத்தின் இதயச் சுத்தி சாத்தியமாகும். இதயம் சுத்தப் பட்டிருந்தால் மட்டுமே அதில் போடப்படுகிற அறிவு பயனுள்ளதாகும். அதனால் தான்

يتلو عليهم أياته ويزكيهم என்று சொன்ன பிறகு يعلمهم الكتاب والحكمة  என்று அல்லாஹ் சொல்கிறேன்.

(ஒரே ஒரு இட்த்தில் இதற்கு  மாற்றமாக சொல்லப்பட்டிருக்கிறது. அது இபுறாகீம் நபியின் துஆ வாகும்.)

என்வே இன்றைய கால கட்டத்தில் குர் ஆன் ஓதப்படுகிற – பள்ளிவாசல்களில் – வீடுகளில் – கூட்டாகவும் – தனியாகவும் கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேன்டும்.

இது ஒரு இயக்கமாக நடை பெற வேண்டும்.

ஒரு பள்ளிவாசலில் நாளு பேர் சேர்ந்து இந்த பழக்கத்தை ஆரம்பித்தால் – வீட்டு உறுப்பினர்கள் சேர்ந்து உட்கார்ந்து ஓதும் கலாச்சாரம் தொடங்கப் ப்ட வேண்டும்.

பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாவது குறைந்த் பட்சம் இந்தப் பழக்கத்தை தொடங்க வேன்டும்.

பள்ளிவாசல்களில் குர் ஆன் அலங்காரத்திற்கு அல்ல. எப்போதாவது இமாமோ ஹாபிஸாவோ எடுத்துப் பார்ப்பதற்கு அல்ல. எப்போதும் ஓதப்படுதற்கு என்ற சிந்தனை பரவலாக்கப் பட வேண்டும்.

குர் ஆன் என்றாலே ஓதப் படக் கூடியது என்று தானே பொருள்?

அதை இப்படி தரிசாக விடாலாமா? அப்படி விட்டு விட்டால் நஷ்டம் நமக்கல்லவா?No comments:

Post a Comment