வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, October 29, 2014

ஆஷூரா தொகுப்பு


ஆசூரா
ஆஷூரா - அக்கிரம அரசியலின் முடிவு

ஆஷூரா நாளுக்கு மேலும் சில சிறப்புக்கள் சொல்லப்படுகிறது
·         பூமியில் முதல் முறையாக மழை பெய்த நாள் 
·         ஆதம் (அலைபடைக்கப்பட்ட நாள்
·         இஸ்மயீல் (அலை) பிறந்த நாள்
·         யூசுப்  (அலைசிறையிலிருந்து விடுதலையான நாள்
·         யூனுஸ் (அலைஅவர்களின் துஆ மக்பூல் ஆன நாள்
·         கஃபாவிற்கு புதிய துணி (கிஸ்வா) மாற்றும் நாளாக இந்நாளே இருந்ததுதற்போது அரபா நாளில் மாற்றப்படுகிறது என்றாலும்அரைவாசி திரை தான் அன்று மாற்றப்படுகிறதுமுழு திரை ஆசூரா அன்று போடப்படுகிறது.
·         பெருமானார் (ஸல்அவர்கள் கதீஜா (ரலியை நிக்காஹ் செய்த நாள்
·         கியாமத் நா:ள் ஒரு ஆஷூரா தினத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவகள் சொன்னார்கள்.

ஆசூராவிற்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்திற்கு காரணம் மூஸா அலை காப்பாற்றப்பட்டார்கள் என்பதே!

ஆசூரா அன்று என்னென்ன நன்மைகள் நடந்ததோ அதில் மிக உன்னதமான நிகழ்வு இறை நம்பிக்கையாளர்கள் அழிவின் விளிம்பில் ஆச்சரியமாக காப்பாற்றப் பட்டதும் அக்கிரமக்காரர்கள் அழிக்கப்பட்டதுமாகும்.

அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை மக்கள் என்னென்றும் நினைவில் வைக்க வேண்டும். அவனது அருளை தேடவும் - கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முயறி செய்ய வேண்டும். 

அல்லாஹ்வைப் பற்றிய ஆசையோடும் அச்சத்தோடும் நாம் இன்று நோன்பு நோற்றுள்ளோம். 

அல்லாஹ் நமது நோன்பிற்கு உயர்ந்த கூலியை தந்தருள்வானாக! 

ஆசூரா நாளை முஹர்ரம் பண்டிகை என்றும் ஹுசைனாரின் நாளென்றும் நம்ம்மில் சிலபேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது விசயத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வெண்டும். 

 இந்த நாளை மார்க்கம் சிறப்பித்துச் சொன்னதற்கும்  - முஹ்ர்ரம் பண்டிகை என்ற பெயரில் நடை பெறுகிற கூத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

பெருமானாரின் பேரர் ஹுசைன் ரலி அவர்கள் கர்பலா வில் இதே நாளன்று கொடூரமாக் கொல்லப்பட்டார்கள் என்பது நபி (ஸல்) வபாத்தாகி ஒரு 50 வருடத்திற்குப் பின் நடைபெற்ற ஒரு எதோச்சையான நிகழ்வாகும். ஆசூராவோடு அதை தொடர்பு படுத்துவதும் துக்கம் அனுஷ்டிப்பதும் தவறாகும். 
  
மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பை வாசிக்கவும்

ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

இன்னும் ஒரு முக்கிய தலைப்பு உண்டு அதையும் பார்க்க தவற வேண்டாம்.

யூதர்களாகிவிடாதீர்கள்

6 comments:

  1. பாகவியாரே' அற்புதமான ஆக்கம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந் நாளில் தான் முதலில் மழை பொழிந்தது என்பதும் அற்புதமான தகவல் நன்றி

    ReplyDelete
  3. உங்களின் அனைத்து ஆக்கங்களும் பயனுள்ளதே! என்றும்
    நான் உங்கள் மாணவனே. தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  4. முஹம்மது ஹதீஸ்.11:07 PM

    ஹழரத், உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.ஒரு குறிப்பிட்ட. வட்டத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்த ஆஷூரா சிந்தனைகளை விசாலப்படுத்தியுள்ளீர்கள்.இன்னும் விசாலமடையட்டும் தங்களின் மகத்தான சேவை.ஜஸாக்கல்லாஹ்...

    ReplyDelete
  5. الحمد لله تقبل الله منا ومنكم صالح الاعمال

    ReplyDelete