வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 30, 2014

நெருக்கடியிலும் நேரிய வழி நடப்போம்.

சுமார் கிபி 412 ல் பெருமானாரின் ஐந்தாவது பாட்டனார் கிலாபு அரபு மாதங்களுக்கு பெயர் சூட்டினார்.
முதல் மாததிற்கு முஹர்ரம் என்று பெயரிடப்பட்டது.  யுத்தம் தடை செய்யப்பட்ட மாதம் என்பதாலும் இதன் புனிதத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் இப்பெயர் சூட்டப்பட்டது.

يقول المؤرخون إن أول من سمى الأشهر العربية بهذه الأسماء هو كلاب الجد الخامس لنبينا محمد صلى الله عليه وسلم في عام 412 تقريبا.
وشهر محرم سمي بذلك لأنه شهر محرم فيه القتال وسمي بذلك تأكيدا لحرمته.
இதை அல்லாஹ்வின் மாதம் என்று பெருமானார் (ஸல்) சிறப்பித்தார்கள்

الشهر الوحيد الذي خُص في الشرع بالإضافة إلى الله

قال الإمام ابن رجب –رحمه الله-: وقد سمى النبي صلى الله عليه وسلم المحرم شهر الله وإضافته إلى الله تدل على شرفه وفضله؛ فإن الله تعالى لا يضيف إليه إلا خواص مخلوقاته
( ஆலிம்கள் கனத்த்திற்கு! 
இஸ்லாத்திற்கு முன் இது ஸபர் அவ்வல் என்று இருந்ததாகவும் அடுத்த மாதம் சபர் சானி என்று இருந்த்தாகவும். யுத்ததின் தடையை தாங்கள் விரும்பும் மாத்திற்க் ஜாஹிலிய்யாவினர் தள்ளிவைத்து வந்த்தாகவும். இஸ்லாம் இந்த முறையை மாற்றி. முதல் மாத்தையே ஹரராமாக ஆக்கியதால் இதற்கு முஹர்ரம் என்று சொல்லப்பட்டதாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அது பிரபலமல்ல

இது ஹ்ஜிரீ வருடத்தின் தொடக்க மாதமாக இருப்பதால் – இப்புதிய வருடத்தின் தொடக்கத்தில் நாம் செய்ய வேண்டியது.

1.       தவ்பா
ஒரு கவிஞன் சொன்னான்

وتستقبل العام الجديد بتوبة  *** لعلك أن تمحو بها ما تقدما

தவ்பா கடந்து கால தவறுகளை அழிக்கும்.
எதிர்கால பரக்கத்திற்கு வழி வகுக்கும்.

وَأَنْ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ(3)

أي وآمركم بالاستغفار من الذنوب السالفة والتوبة منها إلى الله عز وجل فيما تستقبلونه وأن تستمرواعلى ذلك

இஸ்திக்பா தவ்பா என்ன வித்தியாசம்
இஸ்திகபார் கடந்த கால பவங்களுக்காக மன்னிப்பு கோருவது
தவபா வரும் காலத்தில் செய்ய மாட்டேன் என்பது

இஸ்திகபார் செய்தால்
நல்ல வாழ்வும் - தகுதிக்கேற்ற நல்லவைகளும் கிடைக்கும்

يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ

هذه ثمرة الاستغفار والتوبة, قيل: يمتعكم يعمركم; وأصل الإمتاع الإطالة,.وقيل: هو القناعة بالموجود, وترك الحزن على المفقود.

إِلَى أَجَلٍ مُسَمًّى என்றால் மறுமையின் சோதனைகளிலிருந்தும் விடுதலை என்றும் ஒரு கருத்து உண்டு,

قيل: دخول الجنة. والمتاع الحسن على هذا وقاية كل مكروه وأمر مخوف, مما يكون في القبر وغيره من أهوال القيامة وكربها)குர்துபி )

2.       எதிர்காலத்தில் நன்மை செய்வதற்கான - வெற்றியடைவதற்கான  திட்டங்களை வகுத்தல்.

பெருமானாரின் ஹிஜ்ரத் என்பது மிகப்பெரிய ஒரு செயல் திட்டத்தின் வரைவு என்பது நாம் அறியாததல்ல.
3.    فأما عليّ فأقام بمكة حتى يؤدي ودائع النبي صلى الله عليه وسلم
4.   فقال أبو بكر: الصحبة يا رسول الله، قال: الصحبة
5.    واستأجر عبد الله بن أريقط الديلمي
6.    فدفعا إليه راحلتيهما ووعداه غار ثور بعد ثلاث ليال
7.    وأمر أبو بكر ابنه عبد الله أن يستمع لهما بمكة ثم يأتيهما ليلاً
8.    وأمر عامر بن فهيرة مولاه أن يرعى غنمه نهاره ثم يأتيهما بها ليلاً ليأخذا حاجتهما من لبنها
9.    وكانت أسماء بنت أبي بكر تأتيهما بطعامهما
10.                       فأقاما في الغار ثلاثاً
11.  அலி ரலியிடம் தனது படுக்கையில் படுக்கச் சொன்னது,
12. அமானிதங்களை ஒப்படைத்து விடச் சொன்னது.
13. ஒட்டகைகளை அப்துல்லாஹ் பின் அரீகத்திடம் கொடுத்து முன்று நாள் கழித்து தவ்ருக்கு வரச் சொன்னது.
14.   அபூபக்கர் ரலி மகன் அப்துலலாஹ்வை செய்திகளை சேகரிக்க ஏற்பாடு செய்தது
15.   பணியாளர் ஆமிரை உணவுக்காக ஏற்படுத்திக் கொண்டது.
16.   அஸ்மா (ரலீ) உணவு கொண்டு சென்றது.
17.   மூன்று நாட்கள் குகையில் தங்கி தேடுவோர்களின் தீவிரம் குறையும் வரை மக்காவின் வாசலிலேயே காத்திருந்தது. (சவ்ரு மக்காவிற்கு தென்மேற்கே மூன்று மைல் தொலைவில் தான் இருக்கிறது)
மதீவாவிற்கு சென்று சேர்ந்தது. மஸ்ஜித் அமைத்தது. அன்சாரிகளுடன் முஹாஜிர் களுக்கு சகோதரத்துவத்தை ஏற்படுத்தியது, அக்கம் பக்கது யூதர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டது என்ற பெருமானாரின் தொடர் நடவடிக்கைகளில் ஒரு திட்ட வரைவை நாம் உணரலாம்.

என்வே இனிவரும் நாட்களை நன்மைகளும் முன்னேற்றமும் கொண்டதாக அமையும் திட்டமும் சிந்தனையும் வேண்டும்.

அடுத்த ஆண்டுக்குள் எனது நன்மைகளின் பேலன்ஸ் ஷீட்டும்
முன்னேற்றத்தின் பேலன்ஸ் ஷீட்டும் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிய்யத் அவசியம். ஓளுவுக்கு கூட நிய்யத் வைக்கிற நாம் வாழ்க்கைகு ஒரு நிய்யத் இல்லாமல் இருக்கலாமா?

வெளிநாடுகளில் முஹர்ரம் மாத்தில் பள்ளிவாசல்களில் கூட ஒரு வருடத்திற்கான செயல் திட்ட பட்டியலை தயாரிக்கிறார்கள்.

மாணவர்கள்/ இலைஞர்கள்/ குடும்பத்தலைவர்கள்/ தலைவர்கள் அனைவருக்கும் அவரவருடைய தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப அமைய வேண்டும்.
நாம் நிய்யத் வைத்தால். அல்லாஹ் அதை நிறைவேற்றீத்தருவான்.

நாம் எல்லாவற்றையும் திட்டமிடுவோம். அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைப்போம்.

முஹர்ரம் 10 ம் நாளின் நோன்பு மூஸா (அலை ) அவர்களுடை மக்களும் காப்பாற்ற பட்ட நாளின் அடையாளமாக நாம் கடைபிடிக்கிறோம்.

அல்லாஹ்வின் உத்தரவுப்படி புறப்பட்ட மூஸா அலை அவர்களின் திட்டம் இரவின் இருட்டில் தடம் மாறிப்போனது.
இதற்கு முன்னால் எகிப்திலிருந்து மூஸா (அலை) தப்பிச் சென்ற  அகபா முனையின் தரைப்பகுதிக்கு வருவதற்கு பதிலாக கொஞ்சம் முன்னதாக திரும்பிவிட்டார்கள். எதிரே செங்கடல் விரிந்து கிடந்தது, பின்னாலோ பிர் அவ்னின் படைகள். மக்கள் கதறினார்கள். மூஸா அலை பதறவில்லை.

فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ(61)قَالَ كَلَّا إِنَّ مَعِي رَبِّي سَيَهْدِينِي(62)

அல்லாஹ் வழிகாட்டினான். அற்புதமான் வழி. கற்பனை செய்து பார்க்க முடியாத வழி.

விமான விபத்தில் தப்பியவர்கள். கப்பல் கவிழ்ந்தும் தப்பியவர்கள். மலையிலிருந்து விழுந்தும் தப்பியவர்கள் என உலகத்தில் மனிதர்கள் காப்பாற்றப்பட்டதற்கு பல செய்திகள் உண்டு, ஆணால் மூஸ் அலை அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் காப்பாற்றப்பட்டதற்கு ஒப்பான ஒரு நிகழ்வு இந்த உலகில் இல்லை எனலாம்.

அல்லாஹ் வழிகாட்டுவான். அல்லாஹ் உதவி செய்வான் . அல்லாஹ் பாதுகாப்பான். என்ற உறுதியோடு காரியங்களை திட்டமிடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

மூஸா அலை என்னோடு அல்லாஹ் இருக்கிறான் என்று ஒருமையில் சொன்னார்கள். ஹ்ஜிரத்தில் தவ்ர் குகையில் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என பெருமானார் சொன்னார்கள், இந்த வார்த்தையில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த  முஸ்லிம் உம்மத்தையும் பெருமானார் இணைத்துக் கொண்டார்கள்

முஸ்லிம் உம்மத் எத்தகை நெருக்கடியான நிலையிலும் மனந்தளர்ந்து விடக் கூடாது.

பெருமானார் (ஸல்) அவர்களும்  அபூபக்கர் சீத்தீக் (ரலி) அவர்களும் தவ்ரில் தங்கியிருந்த அந்த நொடிகளை விட இந்த சமூகத்திற்கு – முஸ்லிம் உம்மத்திற்கு என்ன பெரிய நெருக்கடி என்ன வந்து விடப் போகிறது.

அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து நாம் நமது சத்தியப்பாதையில் தொடர்ந்து பயணம் செய்வோம்.

நல்ல காரியங்களை திட்டமிட்டு நாம் செயலாற்றுவோம்.

நமது வெற்றியும் முன்னேற்றத்தையும் தீய சக்திகளால் ஒருபோதும் அழித்துவிட முடியாது.

நமது முன்னேற்றத்திற்கான பாதைகளை அல்லாஹ் காட்டுவான்.

தாயிப் பயணத்தின் போது உத்பா ஷைபாவின் அடிமை அதாஸ் ரலி இஸ்லாமானது போல.

சமீபகாலத்தில் பத்ரிகைகள் முஸ்லிம்களை பாராட்டி எழுதுவதே இல்லை. நேற்று மகிச்சியளித்த ஒரு செய்தி

தி ஹிந்து தமிழ் பத்ரிகையில் புதன் கிழமை மதுவின் பிடியிலிருந்து மக்களை காப்பது சம்பந்தமான் ஒரு கட்டுரை

தமிழகத்தில் மக்களி எந்த அளவு மதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது,

சரக்கு இல்லை என்று அறிவிக்கும் கடைக்காரனின் காலைப் பிடித்து கெஞ்சும் ஒரு ஆணுடைய பெண்ணுடைய போட்டோவும் இருந்தது,
அந்தக் கட்டுரை மது ஒழிப்பிற்காக போராடியவர்களின் பட்டியலில் இஸ்லாமிய அமைப்புக்களின் பெயர்களை பிரதானமாக  இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தி அலாதியான மகிழ்ச்சியை தந்தது.

இந்த பெருமைக்கு சொந்தக்காரர் முஹம்ம்து நபி (ஸல்) அவர்கள் அல்லவா என்ற பெருமிதமும் எழுநதது.

தமிழகததில் இன்றைய ராம்தாஸோடும் வைக்கோ வோடும் பெருமாள் சாமியோடும் ஆயிரத்தி 400 ஆண்டுகளுககு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இன்றைய போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்,

அல்ல, முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய பயணத்தில் இந்த தலைவர்களும் கைகோர்க்கிறார்கள். அது தான் உணமை.

முஸ்லிம்களுக்கான பாதையில் இந்தியாவில் இருட்டாக தோன்றினாலும் நாம் இஸ்லாமின் கொள்கை வழி நடக்கிற போது அதன் கோட்பாடுகளுக்காக போராடுகிற போது வெளிச்சம் தானே தேடி வரும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்தக் கட்டுரை அமைந்தது,

·         நாம் வெற்றிகரமான முஸ்லிம்களாக நடந்து கொள்வோம்  
·         இஸ்லாத்தின் அழகுகளை எடுத்துச் சொல்ல அக்கறை செலுத்துவோம்
·         சமூகத்தின் பொதுவான தீமைகளுக்கு எதிராக இஸ்லாமிய கோட்பாடுகளை நிலை நிறுத்தும் வகையில் நாம் உரத்து குரல் கொடுத்து வருவோம். தீர்க்கமாக செயல்படுவோம்.

நெருக்கடியிலும் நேரிய வழி நடப்போம். வெற்றியின் சாவி இறைவனிடம் இருக்கிறது,

(நண்பர்களே
முஹர்ரம் 9 10 நோன்பு குறித்த ஹதீஸ்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கர்பலாவை பேசுவதை தவிருங்கள். 10 ம்நாள் ஷியாக்கள் நடத்தும் கூத்துக்களுக்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை என்பதை தேவை எனில் விவரியுங்கள்.)

1 comment:

  1. Anonymous10:13 PM

    ஆஷுரா கர்பலா இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை வேரறுத்து தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.ஜஸாகல்லாஹ்

    ReplyDelete