வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Tuesday, November 04, 2014

உணவு தான் பெரும் பிரச்சினையா ?

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ(6)

ரிஜ்கை பற்றிய கவலை தான் மனிதனுடைய மிகப்பெரிய கவலை.
உணவுப் பிரச்சினை தான் உலகின் பெரும் பிரச்சனை என்று பலரும் பேசுவதை கேட்கிறோம்.
அதை தேடுகிற அவசரத்தில் ஹராமான வழியில் மனிதர்கள் செல்கிறார்கள், சிலர் பேராசையால் மிகப் பெரிய அளவுக் சேர்த்து வைக்கிறார்கள்.

உணவுப் பிரச்சினை பெரியதுதான். ஆனால் அதுவே மனித வாழ்வின் எல்லாம் என்ற சிந்தனையை நாம் கொஞ்சம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

நாம் தேடுகிற வழியில் நமக்கானது கிடைத்துவிடுமா?
நாம் சேர்த்து வைப்பதேல்லாம் நமக்கு பயன்பட்டுவிடுமா?
இன்னொரு வார்த்தையில் நமக்கான ரிஜ்காகிவிடுமா?

நேற்று வட நாட்டில் ஒருவரிடமிருந்து 13000 ஆயிர்ம கோடி ரூபாய் கட்டுக் கட்டாக கைப்பற்றியிருக்கிறது அமலாக்கத்துறை .

ஆவலாதியாக சேர்த்தவை அனைத்தும் அவருக்கு ரிஜ்காகி விட்டதா?

நமக்கான ரிஜ்கு குறித்தும் அது நிறைவாக கிடைக்கும் வழிகள் குறிந்த்தும் சில அடிப்படையான செய்திகளை நாம் பார்க்க இருக்கிறோம்.

வாழ்க்கையின் அடிப்படையான பிரச்சினை அல்லவா? மிக கவனமாக நினைவில் இந்த விசய்ங்களை நிறுத்துங்கள். அல்லாஹ் நல்வழிக்கு நமக்கு தவபீக் செய்வானாக!

உணவு மட்டுமே ரிஜ்க் அல்ல. தேவைகள் நிறைவேற எது தேவையோ அதுவெல்லாம் ரிஜ்கு தான்.

நமக்கு ரிஜ்கு தருபவன் தீர்மாணிப்பவன் அல்லாஹ் மட்டுமே!
அல்லாஹ் மனிதர்களுக்கு மட்டுமல்ல படைப்புக்கள் அனைத்திற்கும் ரிஜ்கு வழங்குகிறான்
இபுறாகீம் அத்ஹம் வைத்திருந்த இறைச்சித் துண்டை தூக்கிச் சென்ற பூனை ஒரு பொந்தின் அருகே பாதுகாப்பாக வைத்தது. உள்ளே இருந்த வெளியே வந்த ஒரு குருட்டுப் பாம்பு அதை இழுத்துச் சென்றது,

جلس إبراهيم بن ادهم رحمه الله يوما ووضع بين يديه بعضا من قطع اللحم المشوي فجاءت قطة فخطفت قطعة من اللحم وهربت،فقام وراءها واخذ يراقبها فوجد القطة قد وضعت قطعة اللحم في مكان مهجور أمام جحر في باطن الأرض وانصرفت فازداد عجبه وظل يراقب الموقف باهتمام وفجأة خرج ثعبان أعمى فقأت عيناه يخرج من الجحر في باطن الأرض ويجر قطعة اللحم إلى داخل الجحر مرة أخرى،فرفع الرجل رأسه إلى السماء وقال سبحانك يا من سخرت الأعداء يرزق بعضهم بعضا. 
 அவனது தீர்மாணமின்றி நமக்கு அனுவும் கிடைக்காது. அவன் திட்டமிட்டது நமக்கு கிடைக்காமல போகாது.

உங்களுக்கான ரிஜ்கு தாமதமாவதாக நினைக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்கள் பெருமானார்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் எல்லாம் கிடைக்கும். தனக்குரிய ரிஜ்கை பெற்றுத்தீராமால் இந்த உலகிலிருந்து ஒருவரும் விடை பெற மாட்டார்,

عن ابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم قال ليس من عمل يقرب إلى الجنة إلا قد أمرتكم به ولا عمل يقرب إلى النار إلا قد نهيتكم عنه لا يستبطئن أحد منكم رزقه أن جبريل عليه السلام ألقى في روعي أن أحدا منكم لن يخرج من الدنيا حتى يستكمل رزقه فاتقوا الله أيها الناس واجملوا في الطلب فإن استبطأ أحد منكم رزقه فلا يطلبه بمعصية الله فإن الله لا ينال فضله بمعصية ( الحاكم في مستدركه

இன்று வாட்ஸப் பில் ஒரு இமேஜ் வந்தது, அதில் ஒரு செய்தி

إذا كنت لا تعرف عنوان رزقك فإن رزقك يعرف عنوانك
உனது ரிஜ்கின் முகவரி உனக்கு தெரியாது என்றாலும் உனது முகவரி உன்னுடைய ரிஜ்கிற்கு தெரியும்.

ரிஜ்கு தீர்மாணிக்கப்பட்டுவிட்டது.

عبد الله بن مسعود - رضي الله عنه - قال: حدثنا رسول الله - صلى الله عليه وسلم - وهو الصادق المصدوق، قال: ((إن أحدكم يُجمع في بطن أمه أربعين يومًا، ثم يكون علقةً مثل ذلك، ثم يكون مضغةً مثل ذلك، ثم يبعث الله ملكًا فيؤمر بأربع كلمات: بِرِزْقِه وَأَجَلِه وشَقِيّ أو سعيد...)). (أخرجه البخاري 

அல்லாஹ் நாடிய அளவு ரிஜ்கு நமக்கு வந்தே தீரும்.

உமய்யா மன்னர் ஹிஷாமி பின் அப்துல் மலிக்கிடம் ஒரு கவிஞர் குழு வந்தது. அவர்களில் عروه بن أذينة வும். இருந்தார்

عروه بن أذينة  : تابعي جليل وشاعر من شعراء المدينة المنورة وهو معدود في الفقهاء والمحدثين وأحد ثقات أصحاب حديث رسول الله سمع من ابن عمر
இவர் அல்லாஹ்வின் ரிஜ்கு நான் உட்கார்திருக்கிற இடத்திற்கு வந்து சேரும் என்ற கருத்தி ஒரு கவிதை பாடியுள்ளார். அது பிரபலமானது, அக்கவிதை ஞாபகத்தில் வைத்திர்ருந்த மன்னர் ஹிஷாம் அவ்வாறு கவிதை பாடியது நீர் தானே? இப்போது ஹிஜாஸிலிருந்து சிரியாவிற்கு ரிஜ்கை தேடி வந்திருக்கிறீரே என்றார்.
திடுக்குற்ற அவர் எனக்கு புரியும் படு சரியாக உபதேசித்து விட்டீர்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்று வேகமாக திரும்பினார்.
அன்று மன்னரின் உறங்கப் போன போது இது நினைவில் வந்தது என்னை தேடி வந்த் ஒரு குறைஷி ஞானியை நான் திருப்பி அனுப்பி விட்டேனே அவர் என்னை ஏதாவது சொல்லி விட்டால் என்னாவது என்று நினைத்தார். வேலைக்காரனை அழைத்து இரண்டாயிரம் தீனார்களை கொடுத்தனுப்பினார். அவன் தேடி வந்த போது அவர் நாட்டை விட்டே வெளியேறியிருந்தார், அவருடை ஊருக்கே தேடிவந்து அவரது வாசல் கதவை தட்டி அந்தப் பணத்தை பணியாளன் ஒப்ப்டைத்தான்.

அப்போது உர்வா சொன்னார்; நீ அமீருல் முஃமினீனிடம் சொல்
நான் முய்ற்சித்தேன் தோற்றுப் போனேன். வீடு திரும்பினேன் என ரிஜ்கு எனக்கு கிடைத்தது,

قدم مجموعه من الشعراء على هشام بن عبد الملك وكان بينهم الشاعر عروه بن أذينة فلما دخلوا عليه عرف عروه فقال ألست القائل:
لقد علمت ُ وما الإسراف من خُلقي* * * أنَّ الذي هو رزقي سوف يأتيني 
أسعى إليه فيعييني تطلُّبُه* * * ولو قعدتُ أتـاني لا يـُعـنّيـني
وأراك قد جئت من الحجاز إلى الشام في طلب الرزق?  

فقال له يا أمير المؤمنين زادك الله بسطة في العلم والجسم ولا ردَّ وافدَك خائباً والله لقد بالغتَ في الوعظ وأذكرتني ما أنسانيه الدهر ،،
وخرج من فوره إلى راحلته فركبها وتوجه راجعاً إلى الحجاز فلما كان في الليل ذكره هشام وهو في فراشه فقال رجل من قريش قال حكمه ووفد إلي فجبهته ورددته عن حاجته وهو مع ذلك شاعر لا آمن ما يقول فلما أصبح سأل عنه فأُخبر بانصرافه فقال لا جرَم ليعلم أن الرزق سيأتيه ثم دعا مولى له وأعطاه ألفي دينار وقال الحق بهذه ابن أذينة وأعطه إياها قال الرجل فلم أدركه إلا وقد دخل بيته فقرعتُ الباب عليه فخرج إلي فأعطيته المال فقال أبلغ أمير المؤمنين قولي سعيتُ فأكديتُ ورجعتُ إلى بيتي فأتاني رزقي . 


அனுமதிக்கப்பட்ட வழிகளிலேயே ரிஜ்கை தேடுவோம்.

ஹராமான வழியில் தேட அவசரப்பட்டால் ஹலாலுக்கான வாய்ப்பு தடுக்கப்படும். கிடைக்காமல் போய்விடும்.

அவசரப்பட்டு ஹலாலை தவறவிட்ட சிறுவன்,

رُوِي عن علي رضي الله عنه أنه دخل مسجد الكوفة فأعطى غلامًا دابته حتى يصلي، فلما فرغ من صلاته أخرج دينارًا ليعطيه الغلام، فوجده قد أخذ خطام الدابة وانصرف، فأرسل رجلا ليشتري له خطامًا بدينار، فاشترى له الخطام، ثم أتى فلما رآه علي رضي الله عنه، قال سبحان الله! إنه خطام دابتي، فقال الرجل: اشتريته من غلام بدينار، فقال علي رضي الله عنه: سبحان الله! أردت أن أعطه إياه حلالا، فأبى إلا أن يأخذه حراما!

தனக்கான ரிஜ்கு தன்னை வந்து சேரும் என்ற திட சிந்தனையுள்ள மனிதர்
அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராகிறார்.

ஹஸனுல் பஸரி (ரஹ்) ன் அருமையான ஆன்மீக சிந்தனை. நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள் உதவும் அற்புதமான அறிவுரை


قيل للحسن البصري: ما سر زهدك في الدنيا؟ فقال:علمت بأن رزقي لن يأخذه غيري فأطمأن قلبي له. وعلمت بأن عملي لا يقوم به غيري فاشتغلت به . وعلمت أن الله مطلع علي فاستحييت أن أقابله على معصية. وعلمت أن الموت ينتظرني فأعددت الزاد للقاء الله.

இந்த எண்ணத்தில் உறுதி கொண்டவருக்கு துக்கமில்லை.
இபுறாகீம் பின் அத்ஹமின் மூன்று கேள்விகள்

مر إبراهيم بن أدهم على رجل ينطق وجهه بالهم والحزن فقال له إبراهيم : يا هذا إني أسالك عن ثلاثة فاجبني : فقال له الرجل نعم فقال له إبراهيم : أيجري في هذا الكون شي لا يريده الله ؟ فقال : لا قال : أينقص من أجلك لحظة كتبها الله لك في الحياة ؟ قال لا قال : أينقص رزقك شي قدره الله.قال لا ، قال إبراهيم : فعلام الهم إذن ؟؟؟

இந்த என்ணம்  நம்மிடம் உறுதிப்படும் எனில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை.

அறுபது வருடமாக நடக்கிறாய். சீக்கிரம் உனது இடத்தை அடைந்து விடுவாய் என்று தன்னை சந்தித்த ம்னிதரிடம் புழைல் (ரஹ்) சொன்னார். அவர் இன்னாலில்லாஹ் சொன்னார், இதன் விளக்கம் தெரியுமா என புழைல் கேட்க தெரியும் என்று சொன்ன அவருக்கு புழைல் நிலைமையை விளக்கினார். வந்தவர் அழுதார். என் இறைவனிடம் நிற்கும் போது அவனது கேள்விகளை விட்டும் தப்பிக்கும் வழி என்ன என்று அவர் கேட்டார். புழைல் சொன்னார். எளிதானதுதான். இனியுள்ள வாழ்வில் அல்லாஹ்வை பயந்து கொள் அல்லாஹ் மன்னித்துவிடுவான்.   

لقي رجل الفضيل بن عياض فسأله الفضيل عن عمره فقال الرجل: عمري ستون سنة، قال الفضيل : إذاً أنت منذ ستين سنة تسير إلى الله، يوشك أن تصل.فقال الرجل: إنا لله وإنا إليه راجعون، قال الفضيل : هل عرفت معناها؟ قال: نعم، عرفت أني لله عبد، وأني إلى الله راجع، فقال الفضيل : يا أخي! إن من عرف أنه لله عبد وأنه إلى الله راجع عرف أنه موقوف بين يديه، ومن عرف أنه موقوف عرف أنه مسئول، ومن عرف أنه مسئول فَلْيُعِدَّ للسؤال جواباً، فبكى الرجل وقال: يا فضيل ! وما الحيلة؟ قال الفضيل : يسيرة.قال: ما هي يرحمك الله؟ قال: أن تتقي الله فيما بقي، يغفر الله لك ما قد مضى وما قد بقي.
( الزمخشري : ربيع الأبرار (

அல்லாஹவை பய்ந்து நடந்து கொள்வது நமது ரிஜ்கிற்கான தேடலை முறைப்படுத்தும்.

ரிஜ்கை தேடிய நமது பயணத்தில் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய மற்றொரு நபி மொழியை நினைவூட்டுகிறேன்.

عَنْ أَبِي ذَرٍّ؛عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى ، أَنَّهُ قَالَ : يَا عِبَادِي ، إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي ، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا ، فَلاَ تَظَالَمُوا يَا عِبَادِي ، كُلُّكُمْ ضَالٌّ إِلاَّ مَنْ هَدَيْتُهُ ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ ، يَا عِبَادِي ، كُلُّكُمْ جَائِعٌ إِلاَّ مَنْ أَطْعَمْتُهُ ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ ، يَا عِبَادِي ، كُلُّكُمْ عَارٍ إِلاَّ مَنْ كَسَوْتُهُ ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ ، يَا عِبَادِي ، إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ ، يَا عِبَادِي ، إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي ، وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي ، يَا عِبَادِي ، لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ ، وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ ، كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا ، يَا عِبَادِي ، لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ ، وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ ، كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا ، يَا عِبَادِي ، لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ ، وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ ، قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي ، فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ ، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي ، إِلاَّ كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ ، يَا عِبَادِي ، إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا ، فَمَنْ وَجَدَ خَيْرًا ، فَلْيَحْمَدِ اللهَ ، وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ ، فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ. (أخرجه البخاري في "الأدب المفرد" 490. و"مسلم" 8/16(6664)

நம்முடைய ரிஜ்கு எங்கேயும் போய்விடாது. நாம் நமது வாழ்வில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளை குறித்து அதிகம் சிந்திப்போம். நற்செயல்களில் கவனம் செலுத்துவோம்.

وعن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (إذا أراد الله بعبده خيراً استعمله) قالوا: كيف يستعمله؟ قال: (يوفقه لعمل صالح قبل موته) (رواه الإمام أحمد 

அல்லாஹ் நமக்கு விசலாமான ரிஜ்கை தருவத்ற்க் சில காரணிகள் உண்டு அவற்றை இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்.


2 comments:

  1. Good article. I will speak this on today jumuaa.... jazakallahu khairan fiddharain

    ReplyDelete
  2. முஹம்மது ஹதீஸ்6:08 PM

    சில வாரங்களுக்குப்பிறகு இப்போதுதான் கமர்ஷியல் சபஜெக்டுக்குள் திரும்பியிருக்கிறீர்கள்.

    ReplyDelete