அல்லாஹ் தான் ரிஜ்கு தருபவன்.
விசாலமான ரிஜ்கை பெறுவத்ற்கு இந்த உலகம் சில காரணிகளை
வைத்திருக்கிறது.
·
உயர் கல்வி
·
திறமை
·
விடா முயற்சி
இன்றைய சூழலில்
·
கல்லூரிகள் திறப்பது.
·
அரசியல் வாதி ஆவது
ஒரு கஜல் நான் எப்போதோ படித்தேன்.
மக்களின் சொத்தை
அடித்து பிடுங்காதீர்கள்
பேசாமல்
மருமகனாகி விடுங்கள்.
உண்மை தான்.
ஆனால் ஞாபகத்தில் வையுங்கள்
நம்மிடம் நமக்கு தேவையானவை இருக்க வேண்டும். அது நமக்கு பயன்பட
வேண்டும். என்பது தான் ரிஜ்க்.
என்ன பணம் இருந்து என்ன பயன் ? ஜெயில் தண்டனையிலிருந்து
தப்பிக்க முடிந்த்தா என்று நம்மில் பலரும் பேசிக் கொண்டோம். ஞாபகம் இருக்கிறதா?
ரிஜ்க் என்பது வெறும் பணம் மட்டுமல்ல. நமக்கு தேவையானது
நமக்கு பயன்படும் அளவில் வகையில் இருப்பது.
இதை தருவதற்கான சக்தி முழுக்க அல்லாஹ்விடம் இருக்கிறது.
ரிஜ்கை தருவதற்கு அல்லாஹ் சில காரணிகளை வைத்திருக்கிறான்.
என்பதை ஆயத்துகளும் ஹதீஸ்களும் உணர்த்து கின்றன, முஃமின்கள் அவற்றில் கவனம் செலுத்த்
வேண்டும்
இன்னொன்றையும் ஞாபகத்தில் வையுங்கள். இந்த காரணங்கள்
அல்லாஹுவும் ரஸூலும் சொனனவை. வெளிப்பார்வைக்கு இவை மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவது போல தோன்றினாலும். இவற்றிற்கிடையே ஆழமான கண்ணுக்கு புலப்படாத தொடர்பு
இருக்கிறது.
விசாலமான ரிஜ்கிற்கான முதல் காரணி : தொழுகை
وَأْمُرْ أَهْلَكَ
بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ
لِلتَّقْوَى(132)
தனி நபரும் தொழனும். குடும்பமும்
தொழுகனும்.
நம்மில் பலரும் குடும்ப்த்தின்
தொழுகையில் கவனம் செலுத்துவதில்லை.
குடும்பத்திற்கு இந்த செய்தியை
சொல்லுங்கள்.
இந்த வார ஜும் ஆவுல் ஹஜ்ரத்
இப்படி சொன்னார் என்று குடும்பத்திற்கு இந்த செய்தியை சொல்லுங்கள்.
ரிஜ்கிற்கான மாஸ்டர் கீ
இது என அறிஞர்கள் கூறுவதுண்டு.
இரண்டாவது அத்கம் இஸ்திக்பார்
செய்வது
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا(10)يُرْسِلْ
السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا(11)وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ
لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا(12)
மூன்றாவது தேவையான விச்யத்திற்கு தாராளமாக செலவு
செய்தல
وَمَا أَنفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ
وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ(39)
ராபியத்துல் பஸ்ரிய்யா ரஹ் அவர்களிடம் திடீரென்
ஒரு விருந்தாளி வந்தார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் வீட்டுக்கு கதவை தட்டி 9 ரொட்டிகளை
கொடுத்தார். இது எனது அல்ல என் திருப்பி விட்டார். பிறகு சற்று நேரத்தில் 10 ரொட்டு
வந்தது, இது எனக்குரியது என்று வாங்கிக் கொண்டார்.
வேலைகாரப் பெண் காரணம் கேட்டார்.
ராபியா அம்மையார் சொன்னார் காலை ஒரு ரொட்டி
தர்மம் செய்தேன். இப்போது நமக்கு தேவை இருக்கிறது அல்லாஹ் தருவான் என நினைத்தேன். அல்லாஹ்
10 தருவதாக வாக்களித்திருக்கிறான். அதனால் தான் 10 கிடைத்த போது எனக்குரியது என வாங்கினேன்
என்றார்
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ
فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
நான்காவது : தக்வா
இறையச்சத்துடனான வாழ்க்கை ரிஜ்கிற்கு நம்மை தகுதியுடையவராக்கும்.
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا
لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنْ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا
فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ(96
ஐந்தாவது
; ஹிஜ்ரத
அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தால் அதுவும் ரிஜ்கு
விசாலத்திற்கு காரணமாகும்
وَمَنْ يُهَاجِرْ
فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً
உறவுகளை ஆதரித்தல்
LAST
BUT NOT LEEST .
உறவுகளை ஆதரித்தல்
செல்வல்ல. வரவும். ரிஜ்கின் பரக்கத்திற்கான அழுத்தமான காரணி இது. சிறந்த வாழ்வின்
ரகசியம் இது.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ
سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ
فَلْيَصِلْ رَحِمَهُ ) روى البخاري
يُنْسَأَ
لَهُ فِي أَثَرِهِ معناه :
بَقَاءُ ذِكْرِهِ الْجَمِيلِ بَعْدَ الْمَوْتِ ..
ரிஜ்கு விசாலமாக வேண்டுமா?
அவனுக்கு பின் புகழ் நிலைக்க வேண்டுமா?
அதிலும் குறிப்பாக பலகீனமானவனர்களை
– பெற்றோர்களை ஆதரிப்பது முக்கியம்.
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلا بِضُعَفَائِكُمْ» (رواه البخاري)
هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلا بِضُعَفَائِكُمْ» (رواه البخاري)
உறவுகளை ஆதர்ரிப்பதை செலவு என்று கருதவேண்டாம். முடியாதவர்களை
பலகீனமானவர்களை ஊனமுற்றவர்களை சுமை என்று கருத வேண்டாம்.
No comments:
Post a Comment