வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 20, 2014

மருத்துவம் ஒரு புனிதப் பணி

وإذا مرضت فهو يشفين
தர்மபுரியில் குழந்தைகள் வரிசையாக இறந்துள்ள செய்தி பலத்த அதிர்வை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும். ஏனெனில் இது நமது வளர்ச்சி நாகரீகத்தோடு தொடர்புடைய ஒரு அம்சமாகும்.

பொதுவாக ஒரு குழந்தை பிறந்து, ஒரு வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை குழந்தை இறப்பு (Infant mortality) என்றும், ஐந்து வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு (Under-five mortality) என்றும், உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது (WHO).

உலகளவில் பிறக்கும் குழந்தைகளில்  ஐந்து வயதுக்குட்பட்ட 88 இலட்சம் குழந்தைகள் , இலகுவில் தடுக்கப்படக் கூடிய, அல்லது குணப்படுத்தக் கூடிய நோய்களால் வளர்ந்து வரும் நாடுகளில் இறந்து போவதாக ஐநா அறிக்கை கூறுகிறது,

ஒரு நாட்டின் மொத்த வளர்ச்சியை காட்டும் ஒரு அளவுகோலாக ககுழந்தை இறப்பு வீதத்தை உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது.

ஒரு பக்கம் நாம் செவ்வாய் கிரகத்துக்கு வின்கலம் அனுப்பிக் கொண்டிருக்க – நமது பிரதமர் நாடு நாடாகப் போய் இந்தியாதான் அடுத்த உலகிற்கு அறிவியல் ஆசான் - விஷ்வ குரு - என்று சொல்லிக் கொண்டிருக்க நமது பொது மருத்துவ மனைகளில் குழந்தை இறப்பு அதிகரிக்கும் எனில் அது நமது வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் கேலி செய்வதாக் அமைந்து விடும்.  

இந்த  சூழலில் மருத்துவம் அதில் காட்டப்பட வேண்டிய அக்கறை குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை இன்றைய ஜும் ஆவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
--------------------------------
மனிதனுக்கு நோய் ஏற்படுவது இயற்கை –

அதை கடவுளின் தண்டனை என்று கருதியது ஐரோப்பிய உலகம்.

பெர்னாட்ஷா சொல்கிறார். :
மக்கள வைத்தியர்கள் தேவையில்லை என்று நினைத்தனர். நோயை கடவுளின் நாட்டம் என நினைத்தனர். 19 ம் நூற்றாண்டு வரை இக்கருத்து பிரிட்டனில் காலூன்றி இருந்தது, 19 ம் நூற்றாண்டில் முதல் முறையாக தனது தந்தையை மறுத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்த மகனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பிறகே நோயுக்கு மருத்துவம் பார்த்தல் வழக்கத்திற்கு வந்தது.

7 ம் நூற்றாண்டிலேயே இந்த சிந்தனையிலிருந்து மக்களை விடுவித்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

அடிப்படை நம்பிக்கையை திருக்குர் ஆன் கூறுகிறது.
وإذا مرضت فهو يشفين
நோயை தருவதும் அதை குண்ப்படுத்துவதும் அல்லாஹ் தான்.

இந்த நம்பிக்கையை எப்படி நடை முறைப்படுத்துவது என்பதை பெருமானர் விளக்கினார்கள்.

حَدَّثَنَا يُونُسُ حَدَّثَنَا حَرْبٌ قَالَ سَمِعْتُ عِمْرَانَ الْعَمِّيَّ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيْثُ خَلَقَ الدَّاءَ خَلَقَ الدَّوَاءَ فَتَدَاوَوْا   - احمد -

ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த பெருமானாரிடம் நோயாளிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்காக துஆ செய்த பெருமானார் (ஸ்ல்) வைத்தியர்களிடம் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

ஆச்சரியப்பட்ட மக்கள் கேட்டனர். நீங்களா இப்படிச் சொல்வது?  பெருமானர்ர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

تداووا عباد الله.. فإن الله تعالى لم ينزل داء إلا أنزل له الدواء " الترمذي وأبو داود ".

عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ قَالَ قَالَتْ الْأَعْرَابُ يَا رَسُولَ اللَّهِ أَلَا نَتَدَاوَى قَالَ نَعَمْ يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً إِلَّا دَاءً وَاحِدًا قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُوَ قَالَ الْهَرَمُ الترمذي


நோயிக்கு வைத்தியம் செய்வது அல்லாஹ்வின் விதியின் மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்கு எதிரானதாகுமா என சஹாபாக்கள் கேட்டனர். நோய் ஒரு விதி எனில் அதற்கான மருத்துவமும் ஒரு விதி தான் என பெருமானார் (ஸல்) கூறினார்கள்

فقد جاء جماعة من الصحابة يسألون الرسول - صلى الله عليه وسلم -: يا رسول الله، هل في دواء نتعاطاه ووقاية نتخذها، هل تمنع هذه من قدر الله؟ فقال - صلى الله عليه وسلم -: ((بل هي من قدر الله))؛ رواه الترمذي، وأحمد، والحاكم.

நோயிக்கு  வைத்தியம் பார்க்காமல் மூட நம்பிக்கை வைப்பதை பெருமானார் (ஸ்ல்) அவர்கள் தடுத்தார்கள்.

கிருத்துவர்களும் யூதர்களும் மனிதர்கள் பாவம் செய்யும் போது அவனது உடலுக்குள் சைத்தான் புகுந்து கொள்வதுதான் நோய் என்ற தத்துவத்தை நம்பிக்கொண்டிருந்தனர். அதனால் நோய் வந்தவனை ஜோசியக்காரனிடமும் மந்திரவாதிகளிடமும் அழைத்துச் சென்றனர், பேயை விரட்டுவதற்காக,

இஸ்லாம் அதை மறுத்ததும் அந்த வகையில் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் சில செய்திகளை சொன்னார்க்ள்

"من علق تميمة فلا أتم الله له "

இந்த நபிமொழிகளின் எதார்த்தமான பொருள் நோயுக்கு மருத்துவம் பார்க்காமல். நோய் விசயத்தில் மூடப்பழக்கங்களை கொண்டிருந்ததை தடுப்பதே நோக்கமாகும்.. பொதுவாக தாயத்துக்களை மறுப்பதல்ல.

நோய் மனிதர்கள் எல்லோருக்கும் வரும். நபிமார்களுக்கும் கூட. அவர்களும் வைத்தியம் செய்து கொள்வார்கள்.

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ وَعْكًا شَدِيدًا فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلَانِ مِنْكُمْ فَقُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجَلْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مَرَضٌ فَمَا سِوَاهُ إِلَّا حَطَّ اللَّهُ لَهُ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا - البخاري 5660

قال عروة بين الزبير لعائشة رضي الله عنها:  (يا أماه لا أعجب من فقهك  في الدين أقول زوجة النبي وابنة أبي بكر ، ولا أعجب من علمك بالشعر وأيام الناس أقول ابنة أبي بكر،  ولكني أعجب من علمك بالطب أقول كيف هو؟فضربت على منكبه وقالت أي بني إن رسول الله صلى الله علي وسلم كان يسقم  وكانت تقدم عليه وفود العرب من كل وجه فكانت تنعت له الانعات - (يعني تصف له الأدوية)- وكنت أعالجها فمن ثم علمت.)

நோயுக்கு சரியான வைத்தியர் தான் வைத்தியம் பார்க்க வேண்டும். தகுதியற்ற போலி மறுத்துவர்கள் வைததியம் பார்க்க கூடாது என அன்றே சொன்னார்கள். போதுமான அறிவின்றி வைத்தியம் பார்த்தால் அவன குற்றவாளி என்றார்கள்.

من تطبب ولم يعلم منه طب قبل ذلك فهو ضامن " رواه ابو داود وابن ماجه والنسائي

தற்காலத்தில் மருத்துவர்களுக்கு அரசு சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த நடைமுறைக்கு மூத்த வழிகாட்டி பெருமானாரின் இந்த தெளிவான போதனை அமைந்திருக்கிறது.

பெஸ்ட் டாக்டரிடம் செல்ல வேண்டும். பெஸ்ட டாக்டராக ஆக வேண்டும் என பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

நோயுற்ற ஒருவருக்கு வைத்தியம் பார்க்க இரண்டு மருத்துவர்கள் வந்த
போது உங்களில் சிறந்தவர் என யார் என பெருமானார் கேட்டார்கள்

 مالك ، عن زيد بن أسلم ; أن رجلا في زمان رسول الله - صلى الله عليه وسلم - أصابه ، جرح فاحتقن الجرح الدم ، وأن الرجل دعا رجلين من بني أنمار ، فنظرا إليه ، فزعما أن رسول الله - صلى الله عليه وسلم - قال لهما : " أيكم أطب ؟ " فقالا : أوفي الطب خير يا رسول الله ؟ فزعم زيد أن رسول الله - صلى الله عليه وسلم - قال : " أنزل الدواء الذي أنزل الأدواء " .

நோயுக்கு காரணமான கிருமிகள் விச்யத்தில் எச்சரிக்கையாக் இருக்க பெருமானார் (ஸல்) வலியுறுத்தினார்கள். அதற்காக சுகாதாரமாக இருக்க உத்தரவிட்டார்கள். பல வகையிலும். அதில் ஒன்று

قلم أظافرك فإن الشيطان يقعد على ما طال تحتها ".

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكِئُوا السِّقَاءَ فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ لَا يَمُرُّ بِإِنَاءٍ لَمْ يُغَطَّ وَلَا سِقَاءٍ لَمْ يُوكَ إِلَّا وَقَعَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ

நோய் பரவாமல் தடுக்க பெருமானார் (ஸல்) சொன்ன வழிகாட்டுதல்களில் மிக முக்கியமானது.

ஆரோக்கியமானவர்களிடையே நோயாளிகளை கொண்டு வராதீர்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُورَدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ

يقول رسول الله أيضاً " أن من القرف التلف " رواه أبو داود...

 والقرف أي الاختلاط بالمريض والتلف هو الهلاك

தொற்று நோய் உள்ளவர்களை விலகி இருக்குமாறு பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்.

பெரு நோய பாதிப்புக்குள்ளானவர் வந்த போது நாம் அவரிடம் பைஅத் செய்து விட்டதாக கூறுங்கள் . அவர் திரும்பச் செல்லட்டும் என்றார்கள்.

فقد جاءه رجل مجذوم لكي يبايعه فلما استأذن بالدخول قال له الرسول" أبلغوه أنا قد بايعناه فليرجع " وقال أيضا " أجعل بينك وبين المجذوم قدر رمح أو رمحين ".

நோய் பாதித்த பகுதிகளுக்கு போக வேண்டாம் என்றார்கள் பெருமானார் (ஸல்).

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ الطَّاعُونَ فَقَالَ بَقِيَّةُ رِجْزٍ أَوْ عَذَابٍ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا مِنْهَا وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَلَسْتُمْ بِهَا فَلَا تَهْبِطُوا عَلَيْهَا

இந்த அறிவுரையை ஏற்றூக் கொண்ட உமர் ரலி அவர்கள் தன்னுடன் வந்த இஸ்லாமிய படையை பாதுகாத்தார்கள்.


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ-رضي الله عنهما: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ إِلَى الشَّامِ حَتَّى إِذَا كَانَ بِسَرْغَ لَقِيَهُ أُمَرَاءُ الْأَجْنَادِ ، أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ، وَأَصْحَابُهُ ؛ فَأَخْبَرُوهُ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِأَرْضِ الشَّأْمِ ،
 
قَالَ ابْنُ عَبَّاسٍ : فَقَالَ عُمَرُ ادْعُ لِي مَنْ كَانَ هَا هُنَا مِنْ مَشْيَخَةِ قُرَيْشٍ مِنْ مُهَاجِرَةِ   الْفَتْحِ ؛ فَدَعَوْتُهُمْ ؛ فَلَمْ يَخْتَلِفْ مِنْهُمْ عَلَيْهِ رَجُلَانِ ، فَقَالُوا : نَرَى أَنْ تَرْجِعَ بِالنَّاسِ وَلَا تُقْدِمَهُمْ عَلَى هَذَا الْوَبَاءِ ، فَنَادَى عُمَرُ فِي النَّاسِ : إِنِّي مُصَبِّحٌ عَلَى ظَهْرٍ فَأَصْبِحُوا عَلَيْهِ ، قَالَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِأَفِرَارًا مِنْ قَدَرِ اللَّهِفَقَالَ عُمَرُلَوْ غَيْرُكَ قَالَهَا يَا أَبَا عُبَيْدَةَ ؛ نَعَمْ ، نَفِرُّ مِنْ قَدَرِ اللَّهِ إِلَى قَدَرِ اللَّهِ ؛ أَرَأَيْتَ لَوْ كَانَ لَكَ إِبِلٌ هَبَطَتْ وَادِيًا لَهُ عُدْوَتَانِ إِحْدَاهُمَا خَصِبَةٌ وَالْأُخْرَى جَدْبَةٌ ، أَلَيْسَ إِنْ رَعَيْتَ الْخَصْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ ، وَإِنْ رَعَيْتَ الْجَدْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ ، قَالَ : فَجَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَكَانَ مُتَغَيِّبًا فِي بَعْضِ حَاجَتِهِ ، فَقَالَ :إِنَّ عِنْدِي فِي هَذَا عِلْمًا ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : "إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدَمُوا عَلَيْهِ ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ "، قَالَ : فَحَمِدَ اللَّهَ عُمَرُ ، ثُمَّ انْصَرَفَ .
البخاري -كتاب الطب في- باب ما يذكر في الطاعون


إِنِّي مُصَبِّحٌ عَلَى ظَهْرٍ فَأَصْبِحُوا عَلَيْهِ أي سأعود ولن أذهب إلى الشام المصابة بالطاعون).
فقال أبو عبيدة ) وهو إذ ذاك أمير الشام 
 فقال عمرلو غيرك قالها يا أبا عبيدة )  أتعجب منك مع علمك وفضلك كيف تقول هذا ؟
 نعم ، نفر من قدر الله إلى قدر الله ) في رواية هشام بن سعد " إن تقدمنا فبقدر الله ، وإن تأخرنا فبقدر الله "

கீபி 7 ம் நூற்றாண்டில் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன அறிவுரை செயல் படுத்தாத ஐரோப்பியர்கள் கிபீ 14 ம் நூற்றாண்டில் பெரும் பேரழிவுக்கு ஆளானார்கள்

Joseph Garland  தன்னுடைய  the story of medicine ல் ஒரு  நிகழ்ச்சியை சொல்லிக் காட்டுகிறார்.

இத்தாலியின் ஒரு பெருநகரான புளோரன்ஸில் ( Florence ) 1348 ம் ஆண்டு ஒரு பெரிய காலரா பரவியது. அப்போது அந்த ஊர்க்காரர்கள் முடிந்த வரை வேகமாகவும் முடிந்த வரை தூரமாகவும் ஓடுங்கள் என உத்தரவிடப்பட்டார்கள். அதனால் காலரா இன்னும் வேகமாக அவர்கள் சென்ற தொலைவெல்லாம் பரவியது. 1352 ல் அது ரஷயாவுக்குள் நுழைந்தது. அந்த காலரா ஐரோப்பியர்களில் கால் பகுதியினரை பழி கொண்டது,

நோய் தொற்று என்பது கவனிக்கப்பட வேண்டியது இன்றைய மருத்துவ உலகம் மிக் முக்கியமான அறிவுரையாக சொல்லிவருகிறது.
கிருமிகளின் பாதிப்பு பற்றியும் – சுகாதாரக் குறைவின் விளைவுகளைப் பற்றியும் மருத்துவர்கள் மக்களை மிக அதிகமாக எச்சரித்து வருகிறார்கள். முஹம்மது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே இஸ்லாமிய வாழ்வியலாக நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

தர்மபுரியில் அரசு மருத்துவமனைவில் 11 குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த இறப்பு தடுத்திருக்கப்பட வேண்டியதாகிறது, இதில் மனித அலட்சியம் காரணமா என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.

பொதுவாகவெ அரசு மருத்துவ மனைகள் அல்ட்சியத்தின் குறியீடாகவே இருக்கிறது.

நோய்த் தொற்றுள்ள குழந்தைகளை ஓரே இடத்தில் குவித்து வைத்திருந்ததே இந்த இறப்புக்களுக்கு காரணம் என கூறப்படுகிறது, (தி ஹிந்து தமிழ் 20 நவ)

இது விசயத்தில் மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. செவிலியர்கள் – போதிய வசதி செய்து தராத அரசு நிர்வாகத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது.

ஆனால் மருத்துவர்கள இது விச்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் மருத்துவர்களை நமப்த்தான் மக்கள் வருகிறார்கள். எனவே அவர்களது பொறுப்புணர்வு தான் அதிக கவனத்திற்குரியதாகும்.

மருத்துவ பணி செய்பவர்களுக்கு இஸ்லாம் சிறப்பான அந்தஸ்தை கொடுத்திருக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

في الصحيحين البخاري و مسلم، قال رسول الله صلى الله عليه و سلم:
(( عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ..

நோயாளியை நலம் விசாரித்தாலே அங்கே இறைவனை காண முடியும் என்றால் நோயாளிக்கு நலன் ஏற்படுத்துவது எவ்வளவி மரியாதைக்குரிய செயலாக அமையும்?


روى ابن عمرَ رضي الله عنهما أنّ رجلاً جاء إلى النبيّ فقال: يا رسولَ الله، أيُّ الناسِ أحبّ إلى الله؟ وأيّ الأعمالِ أحبُّ إلى الله؟ فقال رسولُ الله : ((أحبُّ الناسِ إلى الله تعالى أنفعُهم للنّاس، وأحبّ الأعمال إلى الله سرورٌ يدخِله إلى مسلمٍ أو يكشِف عنه كربةً أو تقضِي عنه دينًا أو تطرُد عنه جوعًا، ولأن أمشيَ مع أخٍ في حاجةٍ أحبّ إليّ مِن أن أعتكِفَ في هذا المسجد ـ يعني مسجدَ المدينة ـ شهرًا، ومن كفَّ غضبَه سترَ الله عورته، ومن كظمَ غيظَه ولو شاء أن يمضيَه أمضاه ملأَ الله قلبَه رجاءً يومَ القيامة، ومن مشى مع أخيه في حاجةٍ حتى تتهيّأ له أثبتَ الله قدمَه يوم تزول الأقدام، وإنَّ سوءَ الخلُق ليفسِد الدّين كما يفسِد الخلُّ العسل)) حديث رواه الطبرانيّ في الكبير

இந்நபி மொழியில் இடம் பெற்றுள்ள பயனுள்ள மனிதர், மகிழ்ச்சியை தருபவர், சிரமத்தை அகற்றுபவர் என்ற மூன்று இயல்புகள் ஒரு நல்ல மருத்துவருக்கு பொருந்தக் கூடியதாகும்.

மருத்துவரின் சமுதாயச் சேவை காரணமாக அவர்களது சுமையை குறைக்க பெருமானார் பரிதுரைத்தார்க்ள்

பெருமானாருக்கு இரத்தம் குத்தி எடுப்பவர் அபூ தய்பா ஒரு அடிமை.   அவர் தனது எஜமானர்களுக்கு தினசரி மூன்று திர்ஹம்கள் கொடுக்க வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டிருந்தது. பெருமானார் (ஸல்) அவர்களிடம் பேசி அவர் தர வேண்டிய தொகையை இரண்டு திர்ஹம்களாக குறைக்க ச் சொன்னார்கள். அவ்வாறு செய்யப்பட்டது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ حَجَمَ أَبُو طَيْبَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ لَهُ بِصَاعٍ مِنْ تَمْرٍ وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا مِنْ خَرَاجِهِ

عَنْ حُمَيْدٍ قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ كَسْبِ الْحَجَّامِ فَقَالَ احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَمَهُ أَبُو طَيْبَةَ فَأَمَرَ لَهُ بِصَاعَيْنِ مِنْ طَعَامٍ وَكَلَّمَ أَهْلَهُ فَوَضَعُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ

( وأمر أهله ) : أي ساداته وكان مملوكا لجماعة وهم بنو بياضة كما في رواية مسلم ( عنه ) : أي عن أبي طيبة ( من خراجه ) : بفتح الخاء المعجمة ما يقرر السيد على عبده أن يؤدي إليه كل يوم , وكان خراجه ثلاثة آصع فوضع عنه صاعا .

மக்கள் உயிரைப் பாதுகாக்கிற் பணியில் இருக்கிற மருத்துவர்களுக்கு சில சலுகைகள் தரலாம் என இந்நபி மொழி உணர்த்துகிறது.

அதே நேரத்தில் அவர்களது பொறுப்புணர்வும் இஸ்லாத்தில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

{ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ}

இந்த ஆய்த்தின் தப்ஸீரில் அமானத் என்பதற்கு விளக்கம் சொல்கிற திருக்குர்ஆண் விரிவுரையாளர் முப்தீ ஷபீ சாஹிப் அவர்கள். மற்றவர்கள் நம் மீது வைக்கிற நம்பிக்கை அனைத்துமே அமானத் என்று சொல்லி விட்டு ஒரு டாக்டரிடன் மேல் நோயாளி வைக்கிற் நம்பிக்கையும் அமானிதம் தான். நோயாளியின் உடல் மருத்துவரிடம் அமானிதப் பொருளாக இருக்கிறது . அந்த அமானிததை உரிய முறையில் அவர் பேணிப்பாதுகாக வேண்டும் என்கிறார்.

இவ்வாறு பேணிப் பாதுகாப்பது என்பதில்
·         நோயின் காரணத்தை சரியாக கண்டறிவது.
·         மருத்துவத்தின் நவீன் கண்டுபிடிப்புக்களை அறிந்திருப்பது.
·         சும்மா ஆளைப் பார்த்து உடனடியாக சீட்டில் எழுதத் தொடங்கி விடாமல் நோயாளியிடமும் அவரை கவனித்துக் கொள்வோரிடமும் நோயின் தன்மையை சரியாக விசாரித்து அறிந்து கொள்வது. சில நேரங்களில் நோயாளிக்கு தெரியாத செய்தி அவரை கவனித்துக் கொள்வோருக்கு தெரியும்.
·         சரியான மருந்தை தேவையான அளவில் மட்டும் கொடுப்பது
·         பொறுமையுடன் நடந்து கொள்வது
·         நோயாளியின் உரிமைகளை பேணி நடப்பது.
·         தமது துறையில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்களாக இருப்பது.
·         தூய உள்ளத்துடனும் கருணை உணர்வுடனும் நடந்து கொள்வது.
·         நீதியை பராமரிப்பது
·         தகுந்த காரணமின்றி ஒருவருக்கு வைத்தியம் செய்ய மறுப்க்காமலிருப்பது

ஆகியவை மருத்துவரின் அமானித இயல்புகள்  என இஸ்லாமிய அறிஞர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மருத்துவர் அல்லாஹ்வுக்கு பிரியமானவர்
அவர் ஆற்றக் கூடிய பணி அல்லாஹ்வுக்கு பிர்யமான பணி

மனிதனுடை வலியை போக்கி அவனுக்கு நிம்மதியளிக்கிற காரியத்தை விட மிக உன்னதமான வேலை வேறு என்ன வேலை?

அதனால் தான் சமூகத்தில் அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைக்கிறது.
இஸ்லாமிய் மார்க்கத்திலும் சிறந்த மதிப்பிற்குரியவர்களாகிறார்கள்.



No comments:

Post a Comment