வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 27, 2014

பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் தடுத்து நிறுத்தப் பட வேண்டும்

أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنتُمْ مِنْ وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ وَإِنْ كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى(6)
நவம்பர் 25 ம் தேதியை பெண்களுக்கு எதிரான் வன்கொடுமை தடுப்பு தினமக ஐநா அறிவித்துள்ளது.
இது எந்த அளவில் வெற்றியடைந்துள்ளது என்பது விவாத்திற்குரியது என்றாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து அவர்களை முழுமையாக பாதுகாக்க இஸ்லாம் உறுதி கொண்டிருக்கிறதுஅதை வெற்றி கரமாக நடை முறைப்படுத்திக் காட்டியும் இருக்கிறது.

முஸ்லிம் சமுதாயம் அந்த பண்புகளை கொண்டிருந்தால் தான் பெருமை படத்தக்க சமுதாயமாக திகழ முடியும்.  

பெண்குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கத்தை பன்னூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் அடியோடு தடுத்து நிறுத்தியது. என்பது மட்டுமல்ல தொடர்ந்து வேறு எந்த வகையிலும் அவள் தொல்லைக்கு ஆளாகாதவாறு அவளை இஸ்லாம் காத்தது.

முஸ்லிம்  சமூகத்தில் யாரும், பெண்களை கேலியோ, அலட்சியமோ செய்ய முடியாது. இது வன் கொடுமை தடுப்பில் முதல் அம்ச்மாகும்.

கதீஜா ரலி, ஆயிஷா ரலி, சுமய்யா ரலி, உம்மு அமாரா ரலி போன்றவர்களின் வரலாறுகள் அவர்களை மதித்து போற்ற வேண்டிய நிர்பந்த்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துகின்றன.
நபித்தோழர்களில் ஆண்களை ரலியல்லஹு அன்ஹு என்று சொல்வது போலவே பெண்களை ரலியல்லாஹு அன்ஹா என்று சொல்லவேண்டும் என்ற முஸ்லிம்களுக்கான உத்தரவு பெண்களை இலேசாக கருத முடியாது என்ற மனஉணர்வை ஏற்படுத்துகிறது.

முஸ்லிம்கள் பெண்களின் உண்ர்வுகளை அலட்சியப்படுத்த முடியாது. இது வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
·         பெண்குழந்தைகளை ஆண்குழந்தைகளை விட மலிவு படுத்தக் கூடாது.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَتْ لَهُ أُنْثَى فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ عَلَيْهَا قَالَ يَعْنِي الذُّكُورَ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ ابوداوود 4480

·         திருமணத்தில் அவர்களது சம்மதம் பெற வேண்டும்,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ وَإِذْنُهَا الصُّمُوتُ
وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الثَّيِّبَ لَا تُزَوَّجُ حَتَّى تُسْتَأْمَرَ وَإِنْ زَوَّجَهَا الْأَبُ مِنْ غَيْرِ أَنْ يَسْتَأْمِرَهَا فَكَرِهَتْ ذَلِكَ فَالنِّكَاحُ مَفْسُوخٌ عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي تَزْوِيجِ الْأَبْكَارِ إِذَا زَوَّجَهُنَّ الْآبَاءُ فَرَأَى أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَغَيْرِهِمْ أَنَّ الْأَبَ إِذَا زَوَّجَ الْبِكْرَ وَهِيَ بَالِغَةٌ بِغَيْرِ أَمْرِهَا فَلَمْ تَرْضَ بِتَزْوِيجِ الْأَبِ فَالنِّكَاحُ مَفْسُوخٌ و قَالَ بَعْضُ أَهْلِ الْمَدِينَةِ تَزْوِيجُ الْأَبِ عَلَى الْبِكْرِ جَائِزٌ وَإِنْ كَرِهَتْ ذَلِكَ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَقَ- الترمذي
عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الْأَنْصَارِيَّةِ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهُ  - البخاري 2211
·         குடும்பத்தை நட்த்துகிற போதும் அவளது தேவை நிறைவேற்றப்படனும்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ سِرًّا قَالَ خُذِي أَنْتِ وَبَنُوكِ مَا يَكْفِيكِ بِالْمَعْرُوفِ- البخاري 2211
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ فَكَانَ يُعْطِي أَزْوَاجَهُ مِائَةَ وَسْقٍ ثَمَانُونَ وَسْقَ تَمْرٍ وَعِشْرُونَ وَسْقَ شَعِيرٍ فَقَسَمَ عُمَرُ خَيْبَرَ فَخَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقْطِعَ لَهُنَّ مِنْ الْمَاءِ وَالْأَرْضِ أَوْ يُمْضِيَ لَهُنَّ فَمِنْهُنَّ مَنْ اخْتَارَ الْأَرْضَ وَمِنْهُنَّ مَنْ اخْتَارَ الْوَسْقَ وَكَانَتْ عَائِشَةُ اخْتَارَتْ الْأَرْضَ
·         உணர்வுகள் மதிக்கப்படனும்மனைவியின் உறக்கத்திற்கு மரியாதை
மெல்ல எழுந்து மெல்லக் காலணி அணிந்து..
قَالَتْ عَائِشَةُ أَلَا أُحَدِّثُكُمْ عَنِّي وَعَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا بَلَى قَالَ قَالَتْ لَمَّا كَانَتْ لَيْلَتِي الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا عِنْدِي انْقَلَبَ فَوَضَعَ رِدَاءَهُ وَخَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عِنْدَ رِجْلَيْهِ وَبَسَطَ طَرَفَ إِزَارِهِ عَلَى فِرَاشِهِ فَاضْطَجَعَ فَلَمْ يَلْبَثْ إِلَّا رَيْثَمَا ظَنَّ أَنْ قَدْ رَقَدْتُ فَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا وَانْتَعَلَ رُوَيْدًا وَفَتَحَ الْبَابَ فَخَرَجَ …. مسلم 1619
·         தாம்பத்ய உறவில் அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பு
فعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "إذا غشي الرجل أهله، فليصدقها، فإن قضى حاجته، ولم تقض حاجتها، فلا يعجلها" رواه عبد الرزاق.
அவளை சகித்துக் கொள்ளனும். இது வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
ஒரு நுணுக்மான செய்தி
அல்லாஹ் وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُو என்று சொல்கிறான். அதன் பொருள் நீ துன்புறுத்தக் கூடாது என்பது மட்டுமல்ல, அவளால் ஏற்படுகிற சில துன்பங்களை நீ சகித்துக் கொள்ள வேண்டும் என்பது மாகும்.

ومن أدق ما قرأت في قوله تعالى: ﴿ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ (19سورة النساء)
قال بعض المفسرين: " ليست المعاشرة بالمعروف أن تمتنع عن إيقاع الأذى بها، بل أن تحتمل الأذى منها ".

சட்டென்று விவாகரத்திற்கு சென்று விடக்கூடாது, இதுவும் வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
மனைவியை ஒரு விச்யத்தில் பிடிக்காவிட்டால் கூட இன்னொரு விசயத்தை கொண்டு திருப்தி அடைந்து கொள்ள வேண்டுமே தவிர – பிரியக் கூடாது. அது ஈமானிய குணமல்ல என்றார்கள் பெருமானார் (ஸல்)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ – مسلم 2672

அப்படியே விவாகரத்து செய்ய நேர்ந்தாலும் அப்போதும் கூட பெண்ணின் வசதியை கவனிக்க வேண்டும்.
இதுவும் வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும். ஹைளுடைய காலத்த்தில் கர்ப்ப காலத்தில் தலாக் சொல்லக் கூடாது, சொன்னால் அவளை திருப்பி மீட்டுக் கொள்ள வேண்டும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ ثُمَّ تَطْهُرَ ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ وَإِنْ شَاءَ طَلَّقَ قَبْلَ أَنْ يَمَسَّ فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ
ஒரு திருமணத்தில் இணைந்திருப்பது சாத்திய படாவிட்டால் தலாக் சொல்லிவிட வேண்டும். அவள் வேறு திருமணம் செய்து கொள்ள தடையாக இருக்க கூடாது.

இது விச்யத்தில் அறியாமைக் கால கொடுமைகளான ظهار- إيلاء-    கொடுமைகளிலிருந்து விடுதலை அளித்தது இஸ்லாம்.  இதுவும் வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
ழிகார் ஈலாவின் சட்டங்களை மார்க்க நூல்களில் படிக்கிற போது ஆச்சரியமாக இருக்கும். இதென்ன் விசித்திரமான சட்டங்கள். மனிதர்கள் இப்படியும்  பேசுவார்களா என்று நினைக்க தோன்றும். உண்மையில் இவை மனைவியை பிடிக்காத கணவன் அவளை விட்டுவிடாது வைத்துக் கொண்டு துன்புறுத்த செய்யும் செயல்களாகும். இஸ்லாம் இத்தகைய கொடுமையிலிருந்து பெண்ணினத்தை காத்தது.

ஜாஹிலிய்யாவில் பெண்ணை தலாக் விடாமல் அவளை ஒதுக்கி வைக்க நினைக்கிற கணவன் கையாள்கிற ஒரு விசித்திரமான உத்தி , மனைவியை பார்த்து நீ  அம்மாவின் முதுகை போல என்று சொல்லிவிடுவான், அதன் பிறகு அவளுக்கு அவன் ஹராமாகி விடுவாள். அதே நேரம் தலாக ஆகவும் மாட்டாள்.

இந்தக் கொடுமையிலிருந்து பெண்களை இஸ்லாம் விடுவித்தது ,
இவ்வாறு சொல்பவர்கள் ஒன்று அதை தலாக்காக ஆக்கிவிடவேண்டும், அல்லது மனைவியை சேர்ந்து வாழ வேண்டும் இவ்வாறு செய்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தியது,

وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا ذَلِكُمْ تُوعَظُونَ بِهِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ  '

இதே பெண்ணுக்கு இழைக்கப்பட்ட மற்றொரு அநியாயம். மனைவி கொடுமைப்படுத்த நினைக்கிற கணவன். உன்னை காலமெல்லாம் நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்துவிடுவான்..
இதையே சாக்காகவைத்து அவளை நெருங்க மாட்டான். அவள் விடுதலையாகவும் முடியாது, அவளுடைய நிலையில் அந்தரத்தில் தொங்கும் நிலையாக இருக்கும்.

حلف ألا يجامع زوجته أكثر من أربعة أشهر ، أو قال: حتى تقوم الساعة

இஸ்லாம் ஈலாவை ஹராமாக்கியது. யாரவது அப்படி சொல்லி விட்டால் நான்கு மாததிற்குள் மனனவியை நெருங்கி உறவு கொண்டு சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தை செய்து விட வேண்டும். இல்லை எனில் நான்கு மாதம் முடிகிற போது அவள் தலாக்காகி விடுவாள்.

{لذين يؤلون من نسآءهم تربص أربعة أشهر فإن فآءو فإن الله غفور رحيم(226)وإن عزموا الطلاق فإن الله سميع عليم}
سورة البقرة آيتا (226 - 227)

இன்றைய நவீன் கால கட்டத்தில் இது போன்ற புதிய உத்திகள் பெண்களை கொடுமைப்படுத்த ஆணினம் கண்டு பிடித்திருக்குமானால் அவற்றிலிருந்து பெண்களை காக்கிற கடமை மார்க்க அறிஞர்களுக்கு உண்டு.

பெண்ணின் மீது அவதூறு சொன்னால் தண்டனை, இதுவும் வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்
தனியாக அல்லது ஏழையாக வாழ்கிற பெண்களின் மீது அவதூறு பேசிவிடுவது காலகாலமாக உலகில் நடந்து வருகிற செயல்.
இஸ்லாம் அவ்வாறு அவதூறு பேசுவதை கண்டித்தது, தகுந்த நான்கு சாட்சிகள் இல்லாமல் ஒரு பெண்ணின் மீது விபச்சார பழி சுமத்துவோருக்கு 80 கசையடி தண்டனை வழங்கப்பட வேண்டும் என திருக்குர் ஆன் கூறியது,

{وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاء فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً}‏‏ ‏[‏النور‏:‏ 4‏]பெண்களை அடிக்க கூடாது.  இதுவும் வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَجْلِدُ أَحَدُكُمْ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ- البخاري 5204
தர்க்கம் முற்றுகிற சில சந்தர்ப்பங்களில் அவளை சீர்திருத்தும் நோக்கி இலேசான பலப்பிரயோகத்திற்கு திருக்குர் ஆன் அனுமதிக்கிறது என்றாலும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உங்களில் நல்லவர்கள் மனைவியை அடிக்க மாட்டார்கள்.

 عَنِ الْقَاسِمِ ، أَنَّ رِجَالاً نُهُوا عَنْ ضَرْبِ النِّسَاءِ ، وَقِيلَ : لَنْ يَضْرِبَ خِيَارُكُمْ ، قَالَ الْقَاسِمُ : وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَيْرَهُمْ كَانَ لاَ يَضْرِبُ.مصنف ابن أبي شيبة - (8 / 368)

பெண்களை பொது இடத்தில் கோபப் படக்கூடாது.  திட்டக் கூடாது.  இதுவும் வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்

عَنْ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ قَالَ أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ أَوْ اكْتَسَبْتَ وَلَا تَضْرِبْ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ قَالَ أَبُو دَاوُد وَلَا تُقَبِّحْ أَنْ تَقُولَ قَبَّحَكِ اللَّهُ  - ابوداوود
மிரட்டுவது. உன்னை விட்டா எனக்கு பல பேருண்டு என்று பேசுவது, போன்ற அநாகரீகமான சொற்பிரயோகங்களும். அவர்களது அங்க அடையாளங்களை குறை கூறுவதும், கேலி செய்வதும் கூட பெண்களுக்கு எதிரான வன் கொடுமையே.

இவையும் கூடாது. இதே வார்த்தைகளை நம்மை நோக்கி பெண்கள் சொன்னால் என்னவாகும் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

தனது மனைவியை பற்றிய குறைகளை வெளியே சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. இதுவும் வன் கொடுமை தடுப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும்

إن من أعظم الأمانة عند الله يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها
بوب الإمام النووي شارحاً الحديث :[ باب تحريم إفشاء سر المرأة ...  )

பெண்களின் சொத்துரிமைய மறுப்பதும் வன் கொடுமையாகும்.


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ جَاءَتْ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبِيعِ بِابْنَتَيْهَا مِنْ سَعْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ قُتِلَ أَبُوهُمَا مَعَكَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا فَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا تُنْكَحَانِ إِلَّا وَلَهُمَا مَالٌ قَالَ يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ فَنَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمِّهِمَا فَقَالَ أَعْطِ ابْنَتَيْ سَعْدٍ الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَهُوَ لَكَ  - الترمذي

பெண்களிடம் திருமணத்திற்கு வரதட்சனை கோருவது வன் கொடுமையாகும்

பெண்களுக்கு ஆண்கள் மஹர் கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும். அது தான் திருமணத்திற்கான தகுதியாகும்.

فَقَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
الْبَاءَةَ என்றால் மஹர் கொடுக்கும் சக்தி என்று பொருள். அந்த சக்தியில்லாதவன், அல்ல நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும். என பெருமானார் (ஸல்) அறிவுறுத்துகிறார்கள்.

கொடுக்க வேண்டிய இடத்தில் கேட்டுப் பெருவது கூடாது. அது சட்ட விதியை தலைகீழாக மாற்றுவதாகும் . இது ஹராமாகும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாசகர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, பலகீனமானவர்களுக்கு, நாம் தான் கொடுக்க வேண்டும், இல்லையா ?
அவர்களிடம் கேட்போம் என்றால் நாம் யார்?

மறைமுகமான தூண்டுதல் இன்றி ஒரு திருமணத்தில் பெண் வீட்டார் எதார்த்தமாக கொடுக்கும் அன்பளிப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை

பெண் வீட்டாரிடத்தில் திருமணத்திற்கான நிபந்தனையாக பெறப்படுகிற காசு பொருள் உணவு வசதி அனைத்துமே வரதட்சனையாகும். இது எதுவுமே கூடாது.

வரத்டசனை எவ்வளவு பெரிய வன் கொடுமை என்றால்

இதன் காரணமாக பெண் குழந்தை பிறப்பதையே சுமையாக கசப்பாக மக்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 10 இலட்சம் பெண்கள் பாதிப்படைகிறார்கள்.
வரதட்சனை கொலைகள் இந்தியாவில் தான் உலகில் அதிக பட்சமாக ஏற்படுகிறது அடுத்த இடத்தில் பாகிஸ்தானும் பங்களாதேஷும் இடம் பெறுகின்றன.

 Indian National Crime Record Bureau.  2010 ல், 8391 படு கொலைகள் வரதட்சனை கொடுமை காரணமாக நடந்துள்ளது.
This means a bride was burned every 90 minutes
அதாவது  வரதட்சனை  கொடுமை காரணமாக ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு இளம் பெண் கொல்லப்படுகிறாள்

இந்த காரணத்தால் ஒரு வருடத்தில் சராசரியாக 2.500 பெண்கள் உயிருடன் எரிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திருமணத்தின் போது கேட்கப்படுவது மட்டுமல்ல. திருமணத்திற்கு பிறகு பிரசவச்சீராக , குழந்தை பேறாக . நகையாக பணமாக பொருளாக கடனாக கேட்டு நிர்பந்திக்கப்படும் அனைத்தும் வரதட்சனையாகவே அமையும்.

திருமணத்திற்கு பிறகு நடை பெறுகிற குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை என குற்ற அறிக்கை கூறுகிறது.

2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அதாவது ஒரு நாளைக்கு 292 – அதவது  ஒரு மணி நேரத் துக்கு 12 அதாவது - 5 நிமிடத்துக்கு ஒரு பெண் வரதட்சனை காரணமாக திருமணத்திற்கு பின்  கொடுமைப்படுத்தப்படுகிறாள்.

நம் நாட்டில் வரதட்சனை கேட்பது கிரிமினல் குற்றமாகும்
·         வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
·         வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
·         ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

மரியாதையான பல குடும்பங்கள் வரதட்சனை பேச்சினால் மட்டுமே மதிப்பிழந்து சிறைக் கூடங்களுக்கு குடும்பமாக செல்லும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

வரதட்சனை என்ற பேச்சு கடைசியில் சில நேரத்தில் எங்கே கொண்டு போய்ச் சேர்க்கிறது என்பதை சமூகம் உணர வேண்டும்.

நெஞ்சில் கொஞ்சமாவது ஈரம் மிச்சமிருக்குமெனில் வரதட்சனை காரணமாக் ஏற்படுகிற இழப்புக்களை எண்ணிப் பார்த்து நாம் கலங்க வேண்டாமா?

ஒரு பெண்ணின் திருமணத்திற்காக ஒரு குடுமபத்தை கசக்கிப் பிழிவது இறைவனுக்குப் பொருக்குமா என்பதை சமுதாயம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பூனைக்கு உணவு தராமல் சாகடித்த காரணத்தால் ஒரு பெண் நரகம் சென்றால் என நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் எல்லாவற்றுக்கும் மேலாக  வரதட்சனை ஹராம் என்பதை உணரவேண்டும். ஒரு நிர்பந்ததை கொடுத்த் மற்றவர்களிடமிருந்து பறிக்கிற பொருள் எப்படி ஹலாலாகும்?

அவர்கள் சிரித்துக் கொண்டே கொடுத்தாலும் கேட்பது ஹராம் அல்லவா?

பெற்றோர்கள் தம் பிள்ளைக்கு மது அருந்துவதைப் போல சூதாடுவதைப் போல வரதட்சனை கேட்பதை கேவலமாக கருத வேண்டும்.

இளைஞர்கள் மஹர் கொடுப்பதை தமது ஆண்மைக்கான அடையாளமாகவும் வரதட்சனை கேட்பதை ஆண்மைக்கான சோதனையாகவும் கருத வேண்டும்.

ஒரு குழப்பமான கட்டத்தில் எனது வழி முறையை பின் பற்றுகிறவர் நூறு ஷஹீதுகளின் அந்தஸ்தை பெறுகிறார் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

திருமண விவகாரத்தில் சமுதாயம் பெரும் சிக்கலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கிற நேரம் இது,
இந்த சந்தர்பத்தில் எந்த இளைஞர் முஹம்மது (ஸல்) அவர்கள் மஹர் கொடுத்துத்தான் திருமணம் செய்தார்கள். பெண்ணிடமிருந்து வரதட்சனை வாங்கி அல்ல. அந்த சுன்னத்தை நான் பின்பற்றுவேன் என ஒரு இளைஞர் சப்தம் ஏற்பார் எனில் அவர் ஷஹீதுகளின் அந்தஸ்தை பெறுவார்.

சமுதாயப் பெரியோர்கள் வரதட்சனையை ஒரு பெரும் சமூக குற்றமாக பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள ஐந்து கிராமத்தில் ஆய்வு செய்த ஒரு இஸ்லாமிய அமைப்பு சுமார் 72 பெண்கள் 50 வயதை க்டந்து திருமணமாகாமல் இருப்பதாக கூறுகிறது.

இதே நாற்பது வயது என்று எடுத்துக் கொண்டால் சுமார் 400 பெண்கள் திருமணமாகாத முதிர் கன்னிகளாக இருப்பர் என அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறினர்.

பல இடங்களிலும் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்வர்களை திருமணம் செய்து கொண்டு செல்கிற இழி நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களது வீட்டுக்கு ஒரு பெண் வேலை செய்ய வந்தாள். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என நினைத்தோம், பின்னர் தெரியவந்தது அவரது பெயர் பாத்திமா . தந்தையால் வரதட்சனை தர முடியாத நிலையில் ஒரு அருந்ததிய இனத்து இளைஞனை திருமணம் செய்து குழந்தை பெற்று இப்போது ராணியாக வாழ்ந்து வருகிறாள். ஐயா வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கிளம்பர போதெல்லாம் என மனசு கிடந்து தவிக்கும். அத பொருக்க முடியாம் தான் உங்க கிட்ட உண்மையை சொல்லிட்டேன் என அப்பெண் அழுத்தாதாக் என மனைவி சொன்னார்,

நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது.

இது போல் ஒன்றல்ல. பல நூறு செய்திகளை சமுதாயம் இன்று நாள் தோறும் சந்திக்கிறது,

சில வருடங்களுக்கு முன் மதுரை ரஹ்மத் நகரில் ஏராளமானோர் இஸ்லாமை தழுவினர். அவர்களில் பல இளம் பெண்கள் முஸ்லிம் இளைஞர்கள் வரதட்சனை கேட்கிற படியால் தங்களது பழைய ஜாதி உறவுக்காரர்களை செய்ய நேர்ந்த்தாக ஒரு செய்தி ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் வெளியாகியது.

சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கு எடுக்க வேண்டிய செய்தியல்லவா இது. எனவே முஸ்லிம் சமுதாய பெரியோர்கள் இது விசய்த்தில் தகுந்த நட்வ்டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

·         வரதட்சனை ஒரு இழிவு
·         வரதட்சனை கேட்பது மனிதாபிமற்ற செயல்
·         வரதட்சனையாக கிடைப்பவை ஹராம

என்ற சுலோகன் நமது மஹல்லாக்கள் தோறும் பரப்ப பட வேண்டும்.

வரதட்சனை காரணமாக பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை மஹல்லா ஜமாத்துக்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

திருமணம் செயது வைக்கிற போது, எந்த வகையிலும் வரதட்சனை கேட்டு மணப்பெண்ணை கொடுமைப்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை மணமகன் வீட்டாரிடமிருந்து பெற்றால் கூட நல்லது தான்.

யாரவது ஒரு கேவலமான மனிதன் வரதட்சனை கேட்டு தனது மனைவியை கொடுமை செய்து அது வழக்காக பொது அரங்கிற்கு வருமெனில் அங்கே அவமானப்பட்டு நிற்பது அவனது குடும்பம் மட்டுமல்ல.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு மிக உன்னதமான சீர்திருத்ததங்கங்களை செய்த இஸ்லாமுமாகும்.  

வரதட்சனை என்று மட்டுமல்ல; பெண்களுக்கு எதிரான் என்னென்ன வன்கொடுமைகளிலிருந்தெல்லாம் இஸ்லாம் பெண்களை காத்ததோ அந்த கொடுமைகள் அனைத்திலிருந்தும் நம்மோடு வாழும் பெண்மணிகளை காப்பதும் அதற்காக விழிப்போடு இருப்பதும் – பெண்மணிகளை சக மனுஷியாக மதிப்பதும்  முஸ்லிம் சமூகத்தின் கட்டாய கடமையாகும். மட்டுமல்ல நன்மையை தேடித்தருகிற காரியங்களுமாகும்.

நிறைவாக  ஒரு ஹதீஸை  ஞாபகப்படுத்துகிறேன்,

قال رسول الله - صلى الله عليه وسلم   “إنما النساء شقائق الرجال ما أكرمهن إلا كريم وما أهانهن إلا لئيم .

أخرجه الإمام أحمد في باقي مسند الأنصار من جديث أم سليم بنت ملحان


No comments:

Post a Comment