ஒவ்வொரு டிஸம்பர் 6 லும் முஸ்லிம்களுடைய மனது உலுக்கப்படுகிறது.
நாம் வாழ்கிற காலத்தில் பட்டப் பகலில் ஒரு பெரும் பள்ளிவாசல் உலகின் கண் முன்னே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வு எந்த முஸ்லிமின் நினைவிலுமிருந்து மறக்க முடியாதது.
இதற்கு பதிலில் நீ என்ன செய்தாய் என்ற கேள்வியை எழுப்புகிறது.
இஸ்லாத்தின் மீது பற்று கொண்டவனாக அதே நேரத்தில் நம் நாட்டின் சட்டத்திலும் அமைதியிலும் அக்கறை கொண்டவராக இந்தக் கேள்விக்கு பதில் காண வேண்டும்.
பாபர் மஸ்ஜிதின் வரலாற்றை
நாம் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக் கொள்வோம்.
இந்தியாவில் முகலாய ஆட்சியை நிறுவியவர் பாபர்.
தற்போதைய உஸ்பெகிஸ்தானில் உள்ள, பர்கானா பகுதிய ஆட்சி செய்து கொண்டிருந்த ஜஹீருத்தீன் முஹ்மது பாபர் தில்லியை ஆட்சிய் செய்து கொண்டிருந்த இபுறாகீம் லோடியிடம் 1526 ல் பானிபட் என்ற இடத்தில் நடந்த யுத்ததில் வென்று இந்தியாவில் முகலாய சாம்ராஜயத்தை நிறுவினார்;
தற்போதைய உஸ்பெகிஸ்தானில் உள்ள, பர்கானா பகுதிய ஆட்சி செய்து கொண்டிருந்த ஜஹீருத்தீன் முஹ்மது பாபர் தில்லியை ஆட்சிய் செய்து கொண்டிருந்த இபுறாகீம் லோடியிடம் 1526 ல் பானிபட் என்ற இடத்தில் நடந்த யுத்ததில் வென்று இந்தியாவில் முகலாய சாம்ராஜயத்தை நிறுவினார்;
அவருடை
படைத் தளபதி மீர் பாகி 1527 ல் அன்றைய பிரதான நகரா அயோத்தியில் பாபர் பள்ளிவாசலை கட்டினார்.
சுமார்
2.7 ஏக்கரில் கம்பீரமாக எழுந்து நின்ற பாபர் மஸ்ஜிதின் பிரம்மாண்டத்தின் மீது பொறாமை
கொண்ட சில உள்ளூர்க்காரர்கள் பிரச்சினை ஏற்படுத்தினர்.. அதை ஆங்கில அரசு இந்து முஸ்லிம் மோதலை
ஏற்படுத்த ஊதிவிட்டது.
1859: பிரிட்டிஷ் ஆட்சியின் போது,
ஏற்பட்ட
பிரச்சினையை தொடர்ந்து உட்பகுதியில்¬ முஸ்லிம்கள் வழிபடவும்,
வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபடவும் வகை ஆங்கில் அரசு வழி
செய்தது.. இருபுறம் சுவர் எழுப்பி மோதல் தவிர்க்கப்பட்டது.
1934: ல் நடை பெற்ற ஒரு கலவரத்தின் போது பள்ளிவாசலின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
1949: பள்ளிவ்சாலுக்குள் இரவோடிரவாக சிலையை கொன்டு வந்து வைத்தனர். இதை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இரு தரப்பினரும் நுழையாதவாறு அரசு பள்ளிவாசலுக்கு பூட்டுப் போட்டது.
1986: ல் பள்ளிவாசலுக்கு உள்ளே சென்று இந்துக்கள் வழிபடலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்..
1992: டிசம்பர் 6ல் இராணுவம் காவல்
துறை அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிறக்
350 ஆண்டு கால
பழைமையான் பாபர்
பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. .
உள்ளூர் பிரச்சினையாக
இருந்த இப்பிரச்சினையை 1980 க்கு ப்பிற்கு அரசியல் பிரச்சினையாக இந்துத்துவ அமைப்புக்கள் மாற்றின.
"இந்துத்துவா அலையை உச்சத்திற்குக் கொண்டு சென்று அரசியல் ஆதாயம் அடைவதற்கு” மசூதி இடிப்பு ஒரு அருமையான வாய்ப்பு என இந்துத்துவ அமைப்புக்கள் நினைததன எனவும் ,பாபர் மசூதி இடிப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிட்சத் ஆகியோரால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட சதி எனவும் புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் 2005ஆம் ஆண்டு ஒரு நூலில் தெரிவித்துள்ளாளார்,
"இந்துத்துவா அலையை உச்சத்திற்குக் கொண்டு சென்று அரசியல் ஆதாயம் அடைவதற்கு” மசூதி இடிப்பு ஒரு அருமையான வாய்ப்பு என இந்துத்துவ அமைப்புக்கள் நினைததன எனவும் ,பாபர் மசூதி இடிப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிட்சத் ஆகியோரால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட சதி எனவும் புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் 2005ஆம் ஆண்டு ஒரு நூலில் தெரிவித்துள்ளாளார்,
கிருஷ்ண தர்
எழுதுகிறார்.
அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பாஜக/சங்க்
பரிவார் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய தான் பணிக்கப்பட்டதாகவும்,
அந்த சந்திப்பின் போது
அவர்கள் [சங்
பரிவார் அமைப்புகள்] அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதி மீதான தாக்குதலை நடத்த
திட்டமிட்டதை ஐயத்திற்கிடமின்றி உறுதிசெய்வதாகக் கூறுகிறார்.
இந்தச்
சந்திப்பில் பதிவு செய்யப்பட்ட ஒலிக் கோப்புகள் கிருஷ்ண தர்ரின் உயரதிகாரியிடம்
அளிக்கப்பட்டு பிரதமருடனும் (நரசிம்ம ராவ்) உள்துறை அமைச்சருடனும் (எஸ். பி.
சவான்) அவை பகிரப்பட்டன என்றும் அவர் கூறுகிறார்.
மத்தியில்
ஆட்சி செயத் அரசுக்கு தெரிந்த நிலையில் மாநிலத்தை ஆட்சி செய்த பாஜக் அரசுன்
ஒத்துழைப்போடு பாபர் மஸ்ஜித இடிக்கப்பட்டது.
அத்தோடு பிரச்சினை முடிந்து விடவில்லை பல மாதங்களாக
இந்து முஸ்லிம் கலவரஙக்ள் நடை பெற்றன.முஸ்லிம்கள் மீதான் தாக்குதல்களும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் பள்ளிவாசல்களையும்
சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது
கலவரம்மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி போன்ற போன்ற பல நகரங்களுக்கும் பரவி
கிட்டத்தட்ட 1,500 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது
டிசம்பர் 1992 லும் ஜனவரி 1993 லும் ஏற்பட்டமும்பைக் கலவரங்களில் மட்டும் 900 மக்கள் உயிரிழந்தனர். மேலும் 9,000 கோடி மதிப்பிலான பொருட்சேதமும் ஏற்பட்டது
அதை
தொடர்ந்து நாட்டின் பலா பகுதியிலும் நடை பெற்ற கலவரங்களுக்கு பள்ளி வாசல் இடிப்பு
காரணமாக அமைந்தது.
1992 க்குப்பிற்கு சில முஸ்லிம்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்படுகின்றதென்றால் அதற்கு காரணம் பாபர் பள்ளிவாசல் இடிப்பேயாகும்.
ஆனால் சமீபகாலமாக பாபர் பள்ளியை இடித்தவர்கள் பள்ளிவாசல் இடிப்பினால். நாட்டில் எந்த மாற்றமும்
ஏற்பட வில்லை. நாட்டில் நடைபெறுகிற தீவிரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தானே காரணம் என்று கதைய மாற்றி திட்டம் போட்டு பேசி வருகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் சிறப்பான
தோற்றத்தை சிதைத்த தாங்கள் செய்த கொடுஞ் செயலின் தீவிரத்தை மறைக்க முயற்சி
செய்கிறார்கள். தம்மீது படிந்திருக்க குற்றத் கரையை துடைத்து விடலாம் என்று
நினைக்கிறார்கள், அது ஒருக்காலும் நட்க்காது.
எமன் நாட்டின் ஆப்ரஹா மன்னன் பள்ளிவாசலை இடிக்க
முயற்சி செய்தான். அவன்
பெரும் படையுடன் வந்த போதும் சிறு பற8வைகளால்
அழிக்கப்பட்டான்.
பள்ளிவாசலை இடிக்க முயற்சி செய்தவர்களே
காலாகாலத்திற்கும் பேசப்படுகிற வரலாறாக நிலைத்து நிற்கிற போது வரலாற்றின் தூக்கு
மேடையிலிருந்து பள்ளிவாசலை இடித்தவர்கள் தப்ப முடியாது.
ஆனால் நம்
நாட்டில் இப்போது அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய பள்ளிவாசலை
உடைததது மட்டுமல்லாது முஸ்லிம்களை அடக்கி வைக்கவும், ஒடுக்கி வைக்கவும் பல வகையிலும்
முயற்சி செய்கிறார்கள்.
தில்லி
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு பெண் எம்
பி பாஜாவுக்கு வாகககளிப்பவர்கள் ராம் ஜாதாக்கள் ராமரின் பிள்ளைகள் என்றும் வாக்களிக்காதவர்கள்
ஹராம் ஜாதாக்கள் என்றும் பகிரங்கமாக பேசுகிற அளவுக்கு அவர்களது அதிகாரம் வலுவாகியிருக்கிறது.
இந்த
நிலையில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கு எதிராக – நடந்து வருகிற ஒடுககுமுறைகளுக்கு எதிராக
- எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் தெளிவாக சிந்திதாக வேண்டும்.
அவர்கள்
பள்ளிவாசலை இடித்தார்கள் என்பதற்காக முஸ்லிம்கள் கோயில்களை இடிக்கவோ சிலைகளை சேதப்படுத்தவோ
முடியாது.
ஏனெனில்
பிற மத்தவரின் கடவுள்களை ஏசவும் கூடாது என திருக்குர் ஆன் கூறுகிறது.
وَلَا تَسُبُّوا الَّذِينَ
يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذَلِكَ
زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَى رَبِّهِمْ مَرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ
بِمَا كَانُوا يَعْمَلُونَ(108
இந்த திருக்குர் ஆனிய வசனம்
முஸ்லிம்களுக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது. உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட
நீங்கள் செய்யும் ஒரு காரியம் வேறு வகையில் உங்களுக்கு துன்பமாக அமையாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும் .
ما جاء في الصحيح أن رسول الله صلى الله
عليه وسلم قال ملعون من سب والديه قالوا يا رسول الله وكيف يسب الرجل والديه؟ قال يسب
أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه
இந்த அறிவுரையின் படி நடக்கிற கடமை முஸ்லிம்களுடையது.
பாபர்
மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து சில பகுதிகளில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதும் கூட ஆத்திரப்பட்ட
முஸ்லிம்கள் கோயில்களையோ சிலை களை யோ தாக்கவில்லை.
இதற்கு
முஹமமது நபியின் உத்தரவுகளே காரணமாகும்.
எங்கோ
ஒரு சில இடங்களில் அவ்வாறு தாக்கப்பட்டதாக சொல்லப்படுவது மிகைப் படுத்தப்பட்ட செய்தியாகும்.
அப்படியே செய்திருந்தாலும் அது விபரமற்றவர்கள் செய்த செயலாகும் இதற்கு இஸ்லாம் ஆதரவளிக்கவில்லை,
அதே நேரத்தில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காவும் / இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் போராடுவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
وَلاَ تَرْكَنُواْ إِلَى الَّذِينَ ظَلَمُواْ فَتَمَسَّكُمُ
النَّارُ وَمَا لَكُم مِّن دُونِ اللّهِ مِنْ أَوْلِيَاء ثُمَّ لاَ
تُنصَرُونَ}[هود:113
எந்தச் சூழலிலும் அநீதி இழைத்தவர்கள்
பக்கம் மனம் சாய்ந்து விடலாகாது. நிர்பந்த நிலையில் அந்தப் பக்கம் சாய்ந்து விட்டால்
அவர்களுக்கு வந்து சேருகிற வேதனை நம்மையும் தீண்டிவிடும்.
ஒருக்காலும் அக்கிரமக்காரகள்
இறுதி வெற்றியை பெற்று விட முடியாது,
அநீதி
நிலைக்காது என்பதற்கான ஏராளமான சான்றுகள் குர்
ஆனில் கிடைக்கின்றன
{فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةً بِمَا ظَلَمُوا..}[النمل:52]
{وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا..}[الكهف:59]،
{وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ
ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ}[هود:102]،
{فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُواْ وَالْحَمْدُ
لِلّهِ رَبِّ الْعَالَمِينَ}[الأنعام:45]
அதனால் நியாயத்திற்காக அநீதிக்கு
எதிராக போராயே தீர வேண்டும். முடிந்த வகையில் எல்லாம்.
عن النبي صلى الله عليه وسلم "أفضل الجهاد
كلمة حق عند سلطان جائر"،
அல்லாஹ்வின்
தூதரிடத்திலே போராடிய பெண்மணியை திருக்குர் ஆன் எடுத்துக் கூறுகிறது.
கவலா
அம்மையாரின் கணவர் அவ்ஸ் பின் சாமித் அந்தக் கால வழக்கப்படி மனைவியின் மீது கோபம் வந்த
போது நீ அம்மா மாதிரி என்று லிஹார் செய்து விட்டார். இவ்வாறு செய்து மனைவியை ஹ்ராமாக்கி
விடுவார்கள், அவள் வேறு திருமணமும் செய்ய முடியாது, கணவருடன் வாழவும் முடியாது.
அந்த
அம்மையார் பெருமானாரிடம் முறையிட்டார், நபி (ஸல்) அவ்வாறு அவர் சொன்ன பிறகு என்ன செய்வது
என்று கேட்டார்கள். அப்போது அந்த அம்மையார் பெருமானாரிடம் மிக அழகாக நியாத்தை எடுத்துரைத்தார்.
அவரது வாதிடுதலை ஏழுவானங்களை கடந்து கேட்ட இறைவன் அவருக்கு ஒரு தீர்ப்பை வழங்கினான்,
இப்படிச் சொன்ன காரணத்தினால் அவள் அம்மாவாகிட மாட்டாள். இப்படிச் சொன்னவர்கள் இப்படிச்
சொன்னதற்கான பரிகாரரத்தை செய்ய வேண்டும். இல்லை எனில் மனைவி விவாகரத்தாகி விடுவாள்
என அல்லாஹ் உத்தரவிட்டான்.
قَدْ
سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ
وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ(1)الَّذِينَ يُظَاهِرُونَ
مِنْكُمْ مِنْ نِسَائِهِمْ مَا هُنَّ أُمَّهَاتِهِمْ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي
وَلَدْنَهُمْ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنْ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ
اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ(2)وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ
لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا ذَلِكُمْ تُوعَظُونَ بِهِ
وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ(3)فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ
مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا
ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ
عَذَابٌ أَلِيمٌ(4)إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ كُبِتُوا كَمَا
كُبِتَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ أَنْزَلْنَا آيَاتٍ بَيِّنَاتٍ وَلِلْكَافِرِينَ
عَذَابٌ مُهِينٌ
عن عائشة أنها قالت: تبارك الذى أوعى سمعه
كل شيء إنى لأسمع كلام خولة بنت ثعلبة ويخفى علي بعضه وهي تشتكي زوجها إلى رسول الله
وهي تقول يا رسول الله أكل مالي وأفنى شبابي ونثرت له بطني حتى إذا كبرت سني وانقطع
ولدي ظاهر مني اللهم إني أشكو إليك قالت فما برحت حتى نزل جبريل بهذه الآية "قد
سمع الله قول التي تجادلك في زوجها" قالت وزوجها أوس بن الصامت
கவலா
அம்மையாருக்கு அரசுத்தலைவர்களை நிற்க வைத்த உமர் ரலி
لقيت امرأة عمر يقال لها خولة بنت ثعلبة
وهو يسير مع الناس فاستوقفته فوقف لها ودنا منها وأصغى إليها رأسه ووضع يديه على منكبيها
حتى قضت حاجتها وانصرفت فقال له رجل يا أمير المؤمنين حبست رجالات قريش على هذه العجوز
قال ويحك وتدري من هذه ؟ قال لا قال هذه امرأة سمع الله شكواها من فوق سبع سموات هذه
خولة بنت ثعلبة والله لو لم تنصرف عني إلى الليل ما انصرفت عنها حتى تقضي حاجتها إلى
أن تحضر صلاة فأصليها ثم أرجع إليها حتى تقضي حاجتها.
முஸ்லிம்
சமூகத்திற்கு கிடைக்கிற பாடம் என்ன வெனில் தமக்கான நீதி வேண்டும் எனில் அதை அவர்கள்
உரத்து கேட்க வேண்டும். அது வரவேற்கப்படும்.
இன்றைய
சூழலில் நீதியை உரத்துக் கேட்பதற்காக போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்ற வழிகளில் முஸ்லிம்கள்
ஈடுபடுகிறார்கள்.
அது
தேவையானது தான். இன்னும் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு பணி இருக்கிறது,
பாபர்
பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கு எந்த் வாதததை முன் வைத்தார்களோ அந்த வாததை தொடந்து மறுப்பது.
இராமர் பிறந்த இடம் இது என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கலாம். அதில் மற்றவர்கள் தலையிட முடியாது என்று சொல்வது நியாயமாக தெரியலாம். பாபர் கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசல் கட்டினார் என்பது குற்றச்சாட்டாகும் அதுவும் அவதூறான குற்றச்சாட்டாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை,
இராமர் கோயிலை இடித்து விட்டு பள்ளி வாசல் கட்டப்படவில்லை
இந்திய
வரலாற்றின் பொற்காலம் என்பது முகலாயர்களின் காலம் தான். ஏனெனில் அரசர்கள் தம் கைப்பட
நாட்குறிப்பு எழுதினார்கள், ஆட்களை வைத்து எழுத வைத்தார்கள்.
பாபர்
தானே தனது வரலாற்றை எழுதினார் பாபர் நாமா என்று பெயர். ஒரு கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசல்
கட்டியது அவரது சாதனையாக இருக்கும் என்றால் கண்டிப்பாக அது குறிப்பிடப பட்டிருக்கும்.
பாபரின்
காலத்தில் தான் துளசி தாஸர் ராமாயணத்தை எழுதினார். இராமர் பிறந்த் இடத்தில் கோயிலை
இடித்து பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் என்றால் கண்டிப்பாக அவரும் குறிப்பிட்டிருப்பார்.
ஆனால்
பண்டைய வரலாற்றாளர்கள் யாருமே அப்படி ஒரு நிகவு நடந்த்தாக குறிப்பிட வில்லை.
கோயிலை
இடித்து பள்ளிவாசலை கட்டப்பட்டது என்ற எண்ணம் தவறானது. முகலாயர்கள் பாபருக்குப் பின்னரும்
200 வருடம் நாடாண்டு உள்ளனர், மிக நீண்ட தொலைவுக்கு சர்வ சக்தியோடு நாட்டை ஆண்டுள்ளனர்.
இந்தப் பழக்கம் அவர்களிடம் இருந்திருக்கும் எனில் அவர்கள் சென்ற இடமெங்கும் இது பரவியிருக்கும்.
உணமையில்
அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை என்பது தான் வரலாறு கூறும் சான்று.
அவ்ரங்க
சீப் ஜிஸியா வசூலித்தார் என்று விமர்ச்சிக்கும் வரலாற்றாளர்கள் கூட அவர் கோயிலை இடித்து
பள்ளிவாசல் கட்டினார் என்று எதையும் குறீப்பிட வில்லை.
அவுரங்க சீப்பின் பிரதான எதிரி என்ரு கருதப்படுகிற சிவாஜியின் பேரன் ஸாகு அவுரங்கசீப் இறந்த
பிறகு அவரது கப்ரை அடிக்கடி தரிசிக்க வருவார் என்று தான் வரலாறு சொல்கிறது.
இது அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட பிரச்சினையாகும் இந்துக்களுக்கு நேர்ந்த அவமானம் என்ற பெயரில் இதை இந்துதுவ சக்திகள் ஊதி விட்டு இலாபம் பார்த்துவிட்டன். இப்போதும் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான அலையை உருவாக்கி இலாபம் தேட முனைந்து கொண்டே இருக்கின்றனர்.
இது அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட பிரச்சினையாகும் இந்துக்களுக்கு நேர்ந்த அவமானம் என்ற பெயரில் இதை இந்துதுவ சக்திகள் ஊதி விட்டு இலாபம் பார்த்துவிட்டன். இப்போதும் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான அலையை உருவாக்கி இலாபம் தேட முனைந்து கொண்டே இருக்கின்றனர்.
திண்டுக்கல்லுல்
திப்பு சுல்தானுக்கும் ஹைத்ர் அலிக்கும் மணிமண்டம் கட்டுவதாக அறிவித்த அரசு. இதுவரை
கட்டவில்லை. இது பற்றி சமீபத்தில் திண்டுக்கல்லுக்கு வந்த மாநில அமைச்சரை முற்றுகையிட்ட
மக்கள் அதை ஏன் கட்ட வில்லை என்று கேட்ட போது அதற்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்திருப்பதாக
அவர் கூறியிருக்கிறார்,
என்ன
விசித்திரம் பாருங்கள் தமிழகத்திலும் கர்நாடகதத்திலும் கோயில்களுக்கு தாரளமாக மானியம்
வழங்கியதோடு நாட்டின் விடுதலைக்காக போராடிய உணர்ச்சி மிக்க வீரர்களுக்கு என்ன மரியாதை
கிடைக்கிறது பாருங்கள்.
இத்தகைய
புறக்கணிப்புக்கள் ஒரு பக்கம் நடந்தாலும் இவை எப்படி தீர்க்காலோசனையோடு திட்டமிட்டுப்
பரப்பப் படுகிறதோ அதே போல திட்ட மிட்டு உண்மைய பரப்ப தொடர்ந்து நாம் முயற்சி செய்ய
வேண்டும்.
நமது முயற்சிகள் பெரும் பாலும் நமது வட்டத்திற்குள்ளேயே நடக்கின்றன. முஸ்லிம் வீரர்கள் என்று மார் தட்டிக் கொள்பவர்கள் நமது தெருக்களுக்குள்ளேயே வட்டமிடுகின்றனர்.
இந்தியாவின் பொதுச் சமூகத்திற்குள் குறிப்பாக இந்து சமூகத்திற்குள் நாம் ஊடுறவ வேண்டும். நமது கருத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
நமது முயற்சிகள் பெரும் பாலும் நமது வட்டத்திற்குள்ளேயே நடக்கின்றன. முஸ்லிம் வீரர்கள் என்று மார் தட்டிக் கொள்பவர்கள் நமது தெருக்களுக்குள்ளேயே வட்டமிடுகின்றனர்.
இந்தியாவின் பொதுச் சமூகத்திற்குள் குறிப்பாக இந்து சமூகத்திற்குள் நாம் ஊடுறவ வேண்டும். நமது கருத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
பேஸ்
புக் ஈமெயில் போன்ற வழிகளில் பாபரின் படைத்தளபதி மீர் பாகி கோயிலை இடித்து பள்ளிவாசல
கட்ட வில்லை. முஸ்லிம்களுக்கு அந்தப் பழக்கமில்லை. அனைவரையும் ஆதரித்த் அனுசரித்து
செல்வதே முஸ்லிம்களின் இயல்பு என்பதையும் , தாங்கள் சீண்டப்படுகிற போது சீறி எழுவது
மட்டுமே முஸ்லிம்கள் செய்கிற குற்றமாக பார்க்கிறது என்ற நியாயத்தை பரப்ப வேண்டும்.
இத்தகைய்
கருத்த்ரங்குகள் விவாத அரங்குகள் அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்த் நடத்தப்பட வேண்டும்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்டது - ஆனால் அதை ஒரு அக்கிரமமாக இந்துச் சமுதாயம் பார்க்கிறதா என்ற கேள்வி மிக முக்கியமானது. அவர்களது மனசாட்சியை தட்டி எழுப்பும் வண்ணம் நாம் செயல் பட வேண்டும்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்டது - ஆனால் அதை ஒரு அக்கிரமமாக இந்துச் சமுதாயம் பார்க்கிறதா என்ற கேள்வி மிக முக்கியமானது. அவர்களது மனசாட்சியை தட்டி எழுப்பும் வண்ணம் நாம் செயல் பட வேண்டும்.
இராமர் ஆலயத்தை இடித்து விட்டு பாபர் பள்ளி வாசல் கட்டப்பட வில்லை என்பது போன்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் விநொயோகிக்கப்பட வேண்டும்.
அதே
நேரத்தில் இராமர் கோயில் என்பது அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு ஆயுதமாக த்தான் பயன்படுத்துகிறார்கள்
என்பதையும் மிக எச்சரிக்கையாக புரிய வைக்கனும்.
கிரிக்கெட் விலையாட்டில் இரண்டு வகை ஆட்டம் உண்டு. தடுப்பாட்டம் எடுத்தாட்டம்
இதுவிசயத்தில் இதுவரை நாம் நடத்தியது தடுப்பாட்டம் எனில் இனிமேல் அடுத்த கட்ட நடவடிக்கையாக எடுத்தாடும் முயற்சிக்கு செல்ல வேண்டும்
கிரிக்கெட் விலையாட்டில் இரண்டு வகை ஆட்டம் உண்டு. தடுப்பாட்டம் எடுத்தாட்டம்
இதுவிசயத்தில் இதுவரை நாம் நடத்தியது தடுப்பாட்டம் எனில் இனிமேல் அடுத்த கட்ட நடவடிக்கையாக எடுத்தாடும் முயற்சிக்கு செல்ல வேண்டும்
ஆர்ப்பாட்டங்கள்
நமது வலிமையை காட்டுமெனில் அறிவார்த்தமான தொடர்
பிரச்சாரமும் அதை முன்னெடுக்கிற தெளிவான உறுதியும் முய்ற்சியும் தான் மக்கள் மனதில்
தெளிவை ஏற்படுத்த உதவும்.
இந்திய இந்துச் சமூகத்திடம் நேரடியாக பேசும் உறவுகளை நாம் வளர்த்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். தீயவர்கள் ஊடுறுவாமல் இருக்க இது உதவும்.
இந்திய இந்துச் சமூகத்திடம் நேரடியாக பேசும் உறவுகளை நாம் வளர்த்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். தீயவர்கள் ஊடுறுவாமல் இருக்க இது உதவும்.
அதே போல் பிரச்சனைகளை
சட்டத்தின் அடிப்படையில் சந்திக்கிற உறுதியும் மனோ தைரியமும் நமக்கு வேண்டும்.
சில
காலம் சட்டத்தை சிலர் வளைக்கலாம் முறித்துப் போட முடியாது.
ஒரு
நாள் வரும் சட்ட்ம் தன் கடமையை செய்யும்.
வட
நாட்டில் ஒரு சாமியார் தனியாட்சி செய்து கொண்டிருந்தவர் இறுதியில் சட்டத்துக்கு பணிய
வேண்டியது வந்ததல்லவா அது போல.
இன்னும்
பல சாமியார்களும் சாமியாரிணிகளும் சட்டத்துக்கு பணிய வேண்டிய காலம் வரும்.
பாஜகவுக்கு
ஓட்டுப்போடுகிறவர்கள்
ராம்
ஜாதாக்கள்
மற்றவர்கள்
ஹராம் ஜாதாக்கள் என்று
சாமியாரிணி
எம் பி சொன்னார்.
இதையே
வேறு யாராவது
ராம்
ஜாதா என்று தங்களை சொல்லிக் கொள்கிறவர்கள் எல்லாம் ஹராம் ஜாதாக்கள் என்று பேசியிருந்தால்
எவ்வளவு பெரிய பிரச்சனையாகியிருக்கும். ?
ஆனால்
கோபப்பட்ட நிலையில் கூட இத்தகைய பேச்சுக்களை நாம் பேசி விடக் கூடாது; அது அவர்களுக்கே
சாதகமாக அமைந்து விடும். அவர்களது குற்றத்தை மறைக்க அது ஏதுவாகிவிடும்.
சட்டம்
தனது கடமையை செய்ய முஸ்லிம்கள் நெருக்குதல் தரவேண்டும்.
அதுவரை
முஸ்லிம்கள் பொறுமையாக தங்களது கடமையை ஆற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
அதில்
இஸ்லாமியின்
என்ற பக்தியும் இருக்க வேண்டும்
இந்தியம்
என்ற உணர்வும் மிளிர வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ் நல்ல உவமைகளுடன் நல்ல வார்த்தைகள் யாருடைய மனமும் புண்படாதவாறு வார்த்தைகள்
ReplyDeleteஅனைத்து இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்களையும், தொண்டர்களையும் அழைத்து மாநாடு போட்டு சொல்லவேண்டிய விஷயத்தை உங்கள் பாணியில் மிக சாதாரணமாக சொல்லியுள்ளீர்கள். சிந்தித்து செயல்படவேண்டிய விஷயம்.
ReplyDelete