வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 11, 2014

தற்கொலை ஒரு குற்றமே


நாட்டில் தீர்க்கப் பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க புதன்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை இன்று பத்ரிகையில் வெளியாக மக்களுக்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

தற்கொலை முயற்சி குற்றம் என்கிற சட்டப் பிரிவு விரைவில் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 309-ன் படி தற்கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்வது குற்றமாகும்.  
தற்கொலைக்கு முயற்சித்தவர் மரணத்திலிருந்து தப்பிவிட்டால் அவரை ஓர் ஆண்டு வரை சிறையில் அடைக்கவும் அபராதம் விதிக்கவும் மேற்கண்ட சட்டப் பிரிவு வகை செய்கிறது.
இதுதொடர்பாக மத்திய உள் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரத்திபாய் சவுத்ரி மாநிலங்களவையில் புதனன்று அளித்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்டில் இந்திய சட்டக் கமிஷன், மத்திய அரசுக்கு அளித்த 210-வது அறிக்கையில், ‘தற்கொலை முயற்சி என்பதை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். அது குற்றமற்ற தன்மை கொண்டது. எனவே காலத்துக்கு ஒவ்வாத 309-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும்என்று பரிந்துரைத்திருந்தது.
இந்த முடிவுக்கு 18 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் 309-வது பிரிவை விரைவில் நீக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தச் சட்டம் என்ன சொல்ல வருகிறது என்பது என்பது இந்திய சாமாணிய பொதுஜனத்திற்கு புதிராக இருக்கிறது.
உனது வாழ்வில் பிரச்சினையா ? தாங்க முடியலையா ? தற்கொலை செய்து கொள்! தப்பில்லை என்பது போலல்லவா இது இருக்கிறது?
ஹிந்து பத்ரிகையில் ஒரு வாசகர் எழுதியது போல ‘
இவர்களையெல்லாம் தேர்ந்து எடுத்த பாவத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும், அப்பவும் நமக்கு புத்தி வரவே வராது.

தமிழகத்தின் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் தற்கொலை முயற்சி குற்றம் என்ற சட்டம் முட்டாளதனமானது அதை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

படித்தவர்களின் புத்தி இப்படியா போக வேண்டும் ?

கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பி.ரத்தினம் என்பவர் இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘ஒருவருக்கு வாழ உரிமை இருப்பதைப் போல வாழாமல் இருக்கவும் உரிமை இருக்கிறதுஎன்று வாதிட்டார். அதற்கு நீதிமன்றம், “ஒருவரின் வாழ்வுரிமையை அரசியல் சாசனப் பிரிவு 21 வலியுறுத்துகிறது. அதன்படி அதிலேயே வாழாமல் இருக்கவும் உரிமை இருக்கிறதுஎன்று தீர்ப்பு அளித்தது. பேச்சுரிமைக்காக அரசியல் சாசன பிரிவிலேயே பேசாமல் இருப்பதற்கான உரிமையும் இருப்பதை போலத்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
என்றும் அவர் கூறியுள்ளார்.
அடிப்படையில் இவர்கள் புரிந்து கொள்ள மறந்த முக்கியமான ஒரு தத்துவத்தை நாம் ஞாபகப்படுத்துகிறோம்.

வாழுதல் என்பது உரிமை என்றால் நீதிபதி சந்துரு அவர்களே பதில் சொல்லுங்கள்

ஆயுள் தண்டனை கைதி ஒருவன் ஐயா நான் வாழ் விருமப வில்லை எனக்கு கொஞ்சம் சயனைடு வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டால் நீதிபதி சந்துரு வாங்கிக் கொடுத்து விடுவாரா?

அதே போல கழுத்தில் சயனைடு கட்டிக் கொண்டு நடக்க அனுமதித்து விடலாமா?

விவசாயிகள கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது போல, நான் திருநங்கையாக வாழ் விரும்ப வில்லை; நான் ஊனத்தோடு வாழ் விரும்ப வில்லை. நான் இந்த நாட்டில் வாழ விரும்பவில்லை. என்று காரணங்களைச் சொல்லி தற்கொலை செய்து கொள்ள மக்கள் முயல்வார்கள் எனில் – அதை தடுப்பதா வேண்டாமா?

தடுப்பதெனில் எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தடுப்பது?

தற்கொலை உரிமை என்றாகிவிடும் என்றால் தற்கொலைக் காரணமாகின்ற விசயங்கள் – மாமியார் கொடுமை வ்ரதட்சனை கொடுமை – மேலதிகாரியின் அழுத்தம் – கடன் காரன் தொல்லை – ஆகிய காரணிகள் நியாயமாகிவிடாதா?

தற்கொலையே குற்றமில்லை எனில் தற்கொலைக்கான காரணிகள் எப்படி குற்றமாகும்.

தற்கொலையை மனிதாபி மான அடிப்படையில் அணுகுவதென்பது தற்கொலைக்கு அனுமதி கொடுப்பதா  இது என்ன வேதனை ?
  
தற்கொலை குற்றம் அதற்காக முய்றசி செய்வது குற்றம் எனற சட்டம் நடைமுறையில் இருக்கிற போதே நமது நாட்டுல் ஆண்டுக்கு சுமார் ஒண்ணரை இலட்சம் பேர் தற்கொலை செயது கொள்கிறார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள்.

2010 ம் ஆண்டின் ஒரு கணக்கெடுப்பின் படி 40 நிமிடத்திற்கு ஒரு தற்கொலை உலகில் நடைபெறுகிறது,
கடந்த 50 ஆண்டுகளில் தற்கொலையின் சதவீதம் 60 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.
உலகில் தென் கொரியாவில் அதிகம் தற்கொலை நடைபெறுகிறது.
ஜப்பான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது
இவை இரண்டும் வளர்ச்சியடைந்த நாடுகளாகும்.

வளர்ச்சியடைந்து வரும் நாடான நமது நாட்டிலும் தற்கொலைக்கு பஞ்சமில்லை.

இந்திய நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர்  வியாழன் அன்று தாக்கல் செய்த அறிக்கை என்ன சொல்கிறது என்று பாருங்கள்

2013-ம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரமும் (16,112), 3-வது இடத்தில் மேற்கு வங்கமும் (14,957), 4-வது இடத்தில் ஆந்திரமும் (14,238), 5-வது இடத்தில் கர்நாடகமும் (12,753) உள்ளன.
கடந்த வருடம் தற்கொலை செய்தவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தேசிய அள வில் ஆண்களின் தற்கொலை- பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் முறையே 76.1 மற்றும் 75.3 சதவிகிதம் என உள்ளது. இவர்களில்
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 19.6 சதவீதம்.
குடும்பத் தகராறு காரணமாக 24 சதவிகிதம்
காதல் பிரச்சினைகளால் 3.3 சதவீதம் பேர் ஆவர்.
தேசிய அளவில் தற்கொலை களால் மிகவும் பாதிக்கப்பட்ட வர்கள் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் என்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.
மூன்று பேரில் ஒருவர் குறைந்த வயதுடைய வராக இருக்கின்றார்.
நிலமை இவ்வாறிருக்க தற்கொலை முய்றசியை குற்றமல்ல. அதுவும் ஒரு உரிமை என்று சொல்லி விட்டால் நிலமை என்னவாகும்.
ஒரு வேளை மக்கள் தொகையை குறைப்பதற்கு இப்படி ஒரு புதிய உத்தியை கையாள அரசு ஆசைப்படுகிறதா?
சட்ட வாரியத்தின் பரிந்துரை என்று சொல்லி அரசு இதை நியயப்படுத்த முயற்சி செய்யக் கூடாது.
சட்டம் படித்தவர்கள் வாழ்வதை உரிமை என்று பார்க்கிறார்கள். வாழ்வோடு தொடர்புரைய பல செய்திகளை அவர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள். அந்த வகையில் தான் ஆனோடு ஆண் வாழ்வதையும் அவர்கள் உரிமை என்று சொல்கிறார்கள். இது தவறு. அரசுக்கு இது புரிய வேண்டும்.
உண்மையில் இந்த படித்தவர்களுக்கு புரியாத வாழ்க்கையின் முக்கிய தத்துவம் என்ன தெரியுமா ?

வாழுதல் என்பது உரிமை அல்ல, வாழுதல் என்பது கடமை.
வாழ்வு விதிக்கப்பட்டிருக்கும் எனில் வாழ்ந்தே தீர வேண்டும். விதிக்கப்பட்ட அளவு வாழ்தாக வேண்டும்.

கண்ணின்றி பிறந்தாலும் காலின்றி பிறந்தாலும் தந்தையின்றி பிறந்தாலும் தக்க வசதி இன்றி பிறந்தாலும் வாழ்ந்தேயாக வேண்டும்.

புரியும் படி ஒரு உதாரணம் சொல்லலாம்
வரி செலுத்துவது கடமை வரி செலுத்தாமலிருப்பது குற்றம். அது போல வாழுதல் என்பதும் கடமை, வாழ மறுப்பது அல்லது வாழ்வை அழிப்பது குற்றமேயாகும்.

அந்த வகையில் தான் இஸ்லாம் தற்கொலையை குற்றமாக கருதுகிறது,

தற்கொலை இஸ்லாத்தில் மிக வனமையாக தடை செய்யப்பட்டுள்ளது, அது பெரும் பாவம் என்று மார்க்கம் கூறுகிறது.

وقد ثبت تحريمه بالكتاب والسنة.
 قال الله تعالى لا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيماً * وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَاناً وَظُلْماً فَسَوْفَ نُصْلِيهِ نَاراً وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيراً[النساء:29، 30].

وقال تعالى:{ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين} سورة البقرة 195.
தற்கொலைக்கு தண்டனை அது போன்றதே!

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ ثُمَّ انْقَطَعَ عَلَيَّ شَيْءٌ خَالِدٌ يَقُولُ كَانَتْ حَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

 النسائي 1939
وفي حديث سهل بن سعد رضي الله عنه في قصة الرجل الذي جرح جرحا شديدا في احدى الغزوات ، فوضع سيفه بين ثدييه ، وتحامل عليه فقتل نفسه ، فقال رسول الله صلى الله عليه وسلم :((اما انه من اهل النار)) رواه البخاري.

وعن ثابت بن الضحاك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ( مَن قتل نفسه بشيء في الدنيا عذب به يوم القيامة ) رواه البخاري ( 5700 )
وعن جندب بن عبد الله رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم ( كان فيمن كان قبلكم رجل به جرح فجزع فأخذ سكيناً فحز بها يده فما رقأ الدم حتى مات . قال الله تعالى : بادرني عبدي بنفسه حرمت عليه الجنة رواه البخاري ( 3276 )

தற்கொலை செய்து கொண்டவர் ஒரு சிறந்த காரணத்தினால் மன்னிக்கப்பட்டாலும் அவரிடம் அதற்கான அடையாளம் இல்லாமல் போகாது.

பெருமானாரை முதன் முதலில் ஹிஜ்ரத்துக்கு அழைத்தவர், துபைல், ஆனால் பெருமானார் போகவில்லை. அந்தச் சிறப்பு மதீனாவாசிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பத் அல்லாஹ்வின் நாட்டம். துபைல் பின்னர் மதீனாவுக்கு வந்தர்ர், அவருடன் வந்தவர் மதீனாவின் குளிர் பொறுக்க முடியாமல் மணிக்கட்டுகளை வெட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது நிலை. முஸ்லிமில் உள்ள ஹதீஸ் இது,


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ لِدَوْسٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي ذَخَرَ اللَّهُ لِلْأَنْصَارِ فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ

அதனால் எக்காரணம் கொண்டும் இஸ்லாத்தில் தற்கொலைக்கு அனுமதி யில்லை

காதல் தோல்வி, கடன் பிரச்னை, மனசு மற்றும் உடல் சம்பந்தப்பட்ட நோய்க் கொடுமைகள். ஏன் சமயங்களில் பரீட்சையில் தோல்வி போன்ற விசித்திரங்களும் தற்கொலைக்குக் காரணமாவதை நாம் பார்க்கிறோம். கேட்கிறோம்.

இது மட்டுமல்ல சமீபகாலத்தில் தேசிய – இன அரசியல் விடுதலைப் போராட்டங்களில் தீ வைத்துக் கொள்ளுதலும் தற்கொலையும் ஓரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது,

என்ன காரணம் சொன்னாலும் இஸ்லாத்தில் தற்கொலைக்கு அனுமதி இல்லை.

துனிசியால் கடும் சர்வாதிகாரி ஜைனுல் ஆப்தீனின் ஆட்சியில் மக்கள் கொடுமையாக ஒடுக்கி வைக்ககப்பட்டிருந்த நிலையில் வேலை வாய்ப்பின்றி மக்கள் சிரமப்படுவதை அரசுக்கு உணர்த்த நினைத்த முஹம்மது அல் போ அஜீஜி என்ற இளைஞன் தன் உடலில் நெருப்பு வைத்து தற்கொலை செய்து கொண்டான். துனிசியாவில் பெரும் மக்கள் புரட்சி எழுந்தது, 23 ஆண்டுகள் துனிசீயாவை ஆண்டு கொண்டிருந்த அதிபர் ஜைனுல் ஆபிதீன் ஆட்சியை விட்டு விட்டு சவூதிக்கு ஓடிப்போனார்,
மக்கள்  முஹம்மது அல் போ அஜீஜியை கொண்டாடினார்கள், தியாகி என்று வாழ்த்தினார்கள்.  
அப்போதும் உலகின் புகழ் மிக்க இஸ்லாமியப் பல்கலை கழகமான் எகிப்தின் அல் அஸ்கர் பல்கலை கழகம் தற்கொலைக்கு எதிராக வே கருத்து வெளியிட்டது,  


الشاب التونسي محمد البوعزيزي الذي أضرم النار في نفسه في ديسمبر الماضي مفجرًا احتجاجات شعبية عارمة في أنحاء تونس أدت إلى الإطاحة بحكم الرئيس زين العابدين بن علي.
وقال المتحدث الرسمي باسم الأزهر، السفير محمد رفاعة الطهطاوي، إن "القاعدة الشرعية العامة تؤكد أن الإسلام يحرم الانتحار تحريما قطعيا لأي سبب كان ولا يبيح للإنسان أن يزهق روحه كتعبير عن ضيق أو أحتجاج أو غضب"
يقول فضيلة الشيخ عبد الحميد الأطرش، رئيس لجنة الفتوى بالأزهر الاسبق: أنه لا يجوز لإنسان تحت أي ظرف من الظروف أن يقدم على الانتحار عن طريق أي وسيلة مهما كانت سواء الحرق أو الغرق أو الخنق، لان الانتحار هو قنوت من رحمة الله ، ولا ييأس من رحمة الله الا القوم الكافرين.وأضاف الأطرش: أنه لا يجوز تسمية من يقدم على الانتحار، سواء كان هذا الانتحار نتيجة ضيق مالي او تذمر من الاحوال الاقتصادية والسياسة بالبلد، بالشهيد فهو في النهاية كافر، وأمره مفوض لله واحد أن اراد عذبه، وأن شاء عفا عنه،

இதே போல அமெரிக்காவின் ஆக்ரமிப்பில் இராக் படு சிக்கலான நிலையில் இருந்த போது அமெரிக்க இராணுவ வீரர்களின் கற்பழிப்பிலிருந்து தன்னை காத்துக் கொள்ள நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என பெண்மணி கேட்ட போது அல் அஸ்ஹர் பல்கலை கழகம் தற்கொலையை ஆதரரிக்க முடியாது என்று கூறியது,

وجاء في فتاوى شيخ الأزهر الشيخ حسن مأمون: أنه لا يحل للمرأة المكرهة على الزنا بملجئ أو بغيره قتل نفسها لتنجو من عار الزنا

தற்கொலை இஸ்லாம் தடுத்த காரணங்கள்

·        வாழ்க்கை என்பது அல்லாஹ் விதித்த க்டமை அதை மீறும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை.
வாழ்க்கை எனக்கு சொந்தமானது என எந்த மனிதனாலும் சொல்ல முடியாது.
அப்படியானால் நீ விரும்பிய படி பிறந்திருப்பது தானே! அழ்கானவனாக பணக்காரனாக ஆரோக்கியமானவனாக பிறந்திருக்கலாமே. அது முடியாது, இது நிர்பந்தம் எனவே இந்த நிர்பந்த்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

தற்கொலையை இஸ்லாம் தடுத்த மற்ற காரணங்கள்:  
·        தற்கொலை என்பது விதியை நம்பாதவனின் வேலை.
·        அல்லாஹ்வின் திட்டங்களில் திருப்தி அடையாதவனின் செயல்.
·        அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவனின் முயற்சி
     இத்தகைய செயல்பாடு  அடிப்படை ஈமானுக்கு எதிரானது.

எனவே தான் இஸ்லாம் இதை குப்ருகககு நிகரான பாவமாக குறிப்பிட்டது.

ஆனால் தற்கொலை செய்தவன் பெரும்பாவி தான். காபிரல்ல

والانتحار ليس كفراً مخرجاً من الملة كما يظن بعض الناس ، بل هو من كبائر الذنوب التي تكون في مشيئة الله يوم القيامة إن شاء غفرها وإن شاء عذَّب بها 
நிரந்தர வேதனை- நரக வேதனை- என்று வந்துள்ள ஹதீஸ்கள் இந்தச் செயலின் கடுமைய குறிக்க சொல்லப்பட்டவையே என்பது ஹதீஸ்களை அறிஞர்கள் அனைவரின் கருத்துமாகும்.

அதனால் தற்கொலை செய்தவனுக்கு முஸ்லிமுக்குரிய சகல் மரியாதைகளும் செய்யப்படும். துஆ ஓதப்படும்.

حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ أَخْبَرَنَا زُهَيْرٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رواه مسلم
என்ற ஹதீஸூக்கு  முஸ்லிமுடைய ஷ்ரகில் இமாம் நவவி எடுத்தெழுதும் கருத்து

وقال الحسن والنخعي وقتادة ومالك وأبو حنيفة والشافعي وجماهير العلماء : يصلى عليه , وأجابوا عن هذا الحديث بأن النبي صلى الله عليه وسلم لم يصل عليه بنفسه زجرا للناس عن مثل فعله , وصلت عليه الصحابة " انتهى . " شرح مسلم

இதே ஹதீஸ் நஸயில் பெருமானார் என்ன சொன்னார்கள் என்ற வார்த்தையோடு வருகிறது.

عَنْ ابْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا أَنَا فَلَا أُصَلِّي عَلَيْهِ

அம்மா அன பலா உஸல்லி என்று பெருமானார் சொன்னார்க்ள் இதற்கு நானோ தொழ வைக்க மாட்டேன் எனறு தான் பொருளே தவிர தொழுகையே இல்லை என்று அர்த்தமல்ல.

எனவே தற்கொலை மிகப்பெரும் பாவம் தான், ஆனால் குப்ரு அல்ல.

தற்கொலை செய்து கொண்டவரை மன்னிப்பதும் மன்னிக்காதிருப்பதும் அல்லாஹ்வின் கை வசமே இருக்கிறது.

ஆகவே தற்கொலைக்கான காரணத்தை வைத்து ஒருவரை பாராட்டுவதோ அல்லது குறை கூறுவதோ தகாது,  
அவர்களுக்காக ஈஸால் தவாபு செய்ய தடையில்லை,

தற்கொலை என்பது ஒரு நிமிடத்தில் மேற்கொள்ளும் முடிவாகும். அது ஈமானுக்கும் சுய கவுரவத்திற்கும் இழுக்காகும்.

எந்த நிர்பந்தத்திலும் அல்லாஹ்வின் மீதான் நம்பிக்கையை முஸ்லிம்கள் இழக்க கூடாது.

தற்கொலை சிந்தனையிலிருந்துஅ தப்பிக்கும் வழி

أن علاج الفشل
·        صدق الاعتماد على الله تعالى، وكمال التوكل عليه،
 قال تعالى: ( أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ) [النمل:62
عن ابن عباس ، قال : (( لا ينفع الحذر من القدر ، ولكن الله عز وجل يمحو بالدعاء ما شاء من القدر )) " 
சோதனைகளை தாங்கிக் கொள்ள பெருமானார் கற்றுத்தந்த வழிகள்

فقد قال صلى الله عليه وسلم : ( مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ ) رواه البخاري
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ

·        والأخذ بأسباب النجاح، وقوة العزيمة،
·        ومصاحبة الصالحين من ذوي الهمم العالية،
·        والابتعاد عن رفقاء السوء وعن الخاملين البطالين الكسالى. 

தற்கொலையின் அந்த ஒரு நொடியிலிருந்து தப்பி விட்டால் வாழ்க்கை வசந்தமாகிவிடும்.

இராபர்ட் கிளைவ் இந்தியாவில் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை நிறுவியவன்,

ஆரமபத்தில் கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்தான். கடன் தொல்லை தாங்க முடியாமல் துப்பாக்கியை நெற்றியில் வைத்து இருமுறை சுட்டான். துப்பாக்கி சுட வில்லை. முன்றாம் முறை கோபத்தில் வானத்தை நோக்கி சுட்டான், துப்பாக்கி வெடித்தது. திடுக்கிட்ட கிளைவ் கடவுள் தன்னை ஒரு காரியத்திற்காக விட்டு வைத்திருப்பதாக நினைத்தான்,
கமபெனியின் இராணுவத்தில் சேர்ந்தான்/இந்தியாவில் ஆங்கிலே அரசை நிறுவி முதல் மேஜர் ஜெனரலானார்.

தற்கொலையின் அந்த் நொடியில் மாட்டிக் கொண்டால் எல்லாம் பாழாகிவிடும். நன்மை - வாழ்கை - குடும்பம். – மரியாதை –சொர்க்கம்.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ لَا يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلَا فَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ فَقِيلَ مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلَانٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أَنَا صَاحِبُهُ قَالَ فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ قَالَ فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ سَيْفَهُ بِالْأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ فَقَتَلَ نَفْسَهُ فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ قَالَ وَمَا ذَاكَ قَالَ الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ فَقُلْتُ أَنَا لَكُمْ بِهِ فَخَرَجْتُ فِي طَلَبِهِ ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الْأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ
-       Buhari 4202


அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையும் அவனது தண்டனைகளை பற்றிய் பயமும் கொண்டவனை தவிர இந்த நொடியிலிருந்து தப்ப முடியாது,

பெரும்பாலான முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மீது முழு தவக்குலும் தற்கொலை எத்தகைய பெரும் குற்றம்- இந்த உலகில் மட்டுமல்ல மறுமையிலும் அது மாறாத பாவதத்தை தந்துவிடும்
 என்பதும் புரிந்து இருப்பதால் பெரும்பாலும் முஸ்லிம்கள் இந்த தீய கொடுமையிலிருந்து பெரும்பாலும் விலகி நிற்கிறார்கள்.

உலகின் அனைத்து மதங்களும் தற்கொலையை  - அதற்கான முயற்சியை குற்றமாக பார்க்கிற போது வேதங்களின் பூமி என்று இந்தியாவை சிறப்பித்து பேசுகிறவர்கள் தற்கொலை முய்றசிக்கு அனுமதி தர முய்றசிக்கிறார்கள்.
ஆட்சியிலிருப்பவர்கள் இரட்டை வேடத்த்தை அது காட்டுகிறது.
யாரோ மேலிருந்து சொல்லும் உத்தரவுகளுக்கேற்ப பொம்மைகளாகவே இவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது,

எனவே அரசு இந்த சட்ட முன்வரைக்கு முந்தையை அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்,

தற்கொலை முயற்சி குற்றமே என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் அவ்வாறு முயற்சி செய்கிறவர்களை சராசரி குற்றவாளிகளை போல நடத்தாமல் சீர்திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் – அல்லது பக்குவப்படுத்தப் பட வேண்டிய குற்றவாளிகள் என்ற ஒரு பிரிவில் வைத்து அவர்களை சரிப்படுத்த முயல் வேண்டும். அது வே தற்கொலை குற்றவாளிகள் குறித்த மனிதாபிமான முடிவாக இருக்கும்.

அதை விடுத்து தற்கொலை முயற்சியை குற்றமல்ல என்று அறிவிப்ப்டது கள்ள்ச் சாரயத்திற்கு ஒழிப்பதாக சொல்லிக் கொண்டு சாரயக்கடையை திறந்து விட்டதாகவே அமையும்.


No comments:

Post a Comment