வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 18, 2014

அமைதி மார்க்கத்தின் பெயரால்முஹம்மது நபி () அவர்கள் உலகிற்கு ஒரு அமைதி மார்க்கத்தை தந்தார்கள்.

சத்தியமானசிறிதும் மிகை கலக்காத உண்மை இது.

இஸலாத்தின் கோட்பாடுகளையும் பெருமானார் (ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் சல்லடை போட்டு அலசிப்பார்த்தாலும் இதை தவிர வேறு ஒரு கருத்து சொல்ல முடியாது. 

மார்க்கத்தின் பிரதான கடமைகளை நிறைவேற்றுவது ஒரு அமைதியான சூழ்நிலையில் மட்டுமே சாத்தியமாகும். அது மட்டுமல்ல வணக்க வழிபாடுகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் தனி வாழ்வில் அல்லது சமூக வாழ்வில் அமைதியை தருவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் தனி மனித அமைதி சமூக அமைதி இரண்டுக்கும் இஸ்லாம் வழங்குகிற முக்கியத்துவம் அலாதியானது.

எப்படிப்பட்டவர்களிடம் பேசுகிற போதும் அழகோடு நல்ல முறையில் பேசுங்கள் என்கிறது குர் ஆன்,

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا

யூதர்கள் தொடர்பில் இந்த வசனம் அருளப்பட்டது.

 وقال طلحة بن عمر: قلت لعطاء إنك رجل يجتمع عندك ناس ذوو أهواء مختلفة, وأنا رجل في حدة فأقول لهم بعض القول الغليظ; فقال: لا تفعل! يقول الله تعالى: "وقولوا للناس حسنا". فدخل في هذه الآية اليهود والنصارى فكيف بالحنيفي

யூதர்களிடமே இப்படி என்றால் மற்றவர்களிடம் எவ்வளவு நளினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்தினார் அதா பின் அபீ ரபாஹ் ரஹ் . (குர்துபி)

இந்த செய்தியை மேற்கோள் காட்டி விட்டு இந்த ஆயத்து தரும் செய்தியை முப்ஸ்ஸீர் குர்துபி இவ்வாறு கூறுகிறார்

فينبغي للإنسان أن يكون قول للناس لينا ووجهه منبسطا طلقا مع البر والفاجر, والسني والمبتدع, من غير مداهنة, ومن غير أن يتكلم معه بكلام يظن أنه يرضي مذهبه; لأن الله تعالى قال لموسى وهارون: "فقولا له قولا لينا" [طه: 44]. فالقائل ليس بأفضل من موسى وهارون; والفاجر ليس بأخبث من فرعون, وقد أمرهما الله تعالى باللين معه

எதிராளியை நாம் ஏற்றுக் கொண்டதாகவும் இருக்க கூடாது. அதே நேரம் மென்மையும் தவறக் கூடாது..

மூஸாவை விட நீங்கள் பெரிய சீர் திருத்தவாதியும் அல்ல. உங்களது எதிராளி பிர் அவ்னை விட கொடுமைக் காரனும் அல்ல.   

கலீபா ஹாரூன் ரஷீத் ஒரு தவறு செய்து விட்டார். அதை கண்டித்த ஒரு ஆலிம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். கலீபா சொன்னார் இதை நீங்கள் மென்மையாக சொல்லி யிருக்கலாமே. நீங்கள் மூஸா வை சிறந்தவருமில்லை. நான் பிர் அவ்னை விட மோசமானவனும் இல்லையே!

இறையச்சமுடைவர்கள் யார் என்பதற்கு குர் ஆன் இப்படி விளக்கம் சொல்கிறது,

الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنْ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ 3:134

கோபத்தை மென்று விழுங்குதல்மன்னித்தல் இறையச்ச முடையவர்களின் இயல்பு அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்,

உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கும் நன்மை செய்ய மறுக்க வேண்டாம், மன்னியுங்கள் அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டாமா? என்கிறது இன்னொரு வசனம்

وَلَا يَأْتَلِ أُوْلُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُوْلِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

யார் அநாதைகளை வெருட்டுகிறார்களோ . யார் ஏழைகளுக்கு உணவளிக்க தூண்டுதலாக இல்லையோ அவர்கள் நாத்திகர்கள்மார்க்க மற்றவர்கள்கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்று சொல்கிறது மற்றொரு வசனம்

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ(1)فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ(2)وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ(3)

திருக்குர் ஆன் முஸ்லிம்கள் அற்புதமான் மூன்று வாழ்வியல் தத்துவங்களை கூறுகிறது.
خُذْ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنْ الْجَاهِلِينَ(199)
மன்னிப்பு
நல்ல முறையில் எடுத்துச் சொல்லுதல்
அநாவசிய சீண்டல்களை புறக்கணித்தல்
எந்த விசயத்திலும் வெற்றி பெறுவதற்கு குர் ஆன் கூறும் மூன்று தத்துவங்கள் என அறிஞர்கள் திருக்குர் ஆனின் ஒரு வசனத்தை சுட்டிக் காட்டுகிறார்கள்.

இப்படி இறக்கம் காட்டச் சொல்லி, பொருமை காக்கச் சொல்லி, மன்னிக் சொல்லி, உதவி ஒத்தாசையாக நடந்து கொள்ளச் சொல்லி கோபத்தை மென்று கொல்லச் சொல்லி திருக்குர் ஆன் நம்மை வளர்க்கிறது.

முஹ்ம்மது நபி (ஸ்ல்) அவர்கள் இந்த அறிவ்ரைகளுக்கெல்லாம் அசலான உதாரணமாக திகழ்ந்தார்கள்.

அவர்களுடைய சிறிய தந்தை ஹம்ஸா ரலி யை திட்டமிட்டுக் கொன்று அவருடைய் இதயத்தை பிளந்து ஈரலை எடுத்து கடித்து துப்பி அவருடைய நரம்புகளை கம்மலாகவும் மூக்குத்தியாகவும் மாட்டிக் கொண்ட ஹிந்தா அம்மையாரை பெருமானார் மன்னித்தார்கள்.

அபூஜஹ்லின் மகன் இக்ரிமாவை மன்னித்தார்கள்.

ثم إن عميراً أخذ سيفه وشحذه وسمّه ثم انطلق حتى قدم المدينة
பத்ரின் கைதிகளை மீட்கவந்தவர் போல நடித்து பெருமானாரை கொல்வதற்கு விஷம் தடவிய கத்தியோடு மஸ்ஜிதுன்னநபவிக்கு வந்த உமைரை  பெருமானார் மன்னித்தார்கள். ( பத்ரு யுத்தம்முஹம்மது ரஸூலுல்லாஹ்)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : "الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ، ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ " . أَخْرَجَهُ أَبُو دَاوُدَ 

என்றார்கள்.

عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ : " أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا ، وَبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا ، وَبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسُنَ خُلُقُهُ سنن أبي داود " .

என்றார்கள்.

قال صلى الله عليه وسلم ( إن أولى الناس بالله من بدأهم بالسلام

என்ற வார்த்தையில் தற்பெருமைக்கான வாசலை அடைத்தார்கள்.

ومن هنا جاءت الوصايا التي لم يسبق  لها مثيل في التاريخ  ،  قال الخليفة الأول أبو بكر رضي الله عنه : ( لا تمثلوا ، ولا تقتلوا طفلاً ، ولا شيخاً كيبراً ، ولا إمرأة ، ولا تعقروا نخلاً ولا تحرقوه ، ولا تقطعوا شجرة مثمرة ، ولا تذبحوا شاة ولا بقرة ولا بعيراً إى لمأكلة ، وسوف تمرون بأقوام قد فرغوا أنفسهم في الصوامع فدعوهم وما فرغوا أنفسهم له )
என்ற வார்த்தையில் உலகத்தில் யுத்த நியதியை முதன் முதலாக வகுத்துக் கொடுத்தார்கள்.

அதனால் அவர்கள் வகுத்துக் கொடுத்த அடிப்படையில் வழி நடந்த முஸ்லிம்கள் அவர்கள் வென்றெடுத்த நாடுகளில் மக்களை அடிமைகளாக்கவில்லை. சித்ரவதை செய்யவில்லை. பெண்களை கற்பழிக்கவில்லை. குழந்தைகளை கொடுமைப்படுத்தவில்லை.

வீடுகளை சிதைக்கவோதோட்டங்களை எரிக்கவோ மரங்களை வெட்டிச் சாய்க்கவோ இயறகையை சிதைக்கவோ இல்லை.

முஸ்லிம்கள் வெற்றியாளர்கள் இப்படி நடந்த்தாக உலகில் வரலாறு இல்லை.

ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

16 ம் தேதி பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள கைபர் பகுதியில் உள்ள ஆர்மி பப்ளிக் பள்ளிக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சி உலகையே உறைய வைத்து விட்டது.

அந்தப் பள்ளிக் கூடத்தின் பின்பகுதி கதவை உடைத்துக் கொண்டு, பயங்கர ஆயுதங்களுடன் தற்கொலைத் தாக்குதலுக்கான ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு நுழைந்த தாலிபான் தீவிரவாதிகள் 7 பேர் கண்மூடித்தனமாக சுட்டதில் சற்று நேரத்தில் 132 மாணவர்கள் உட்பட 142 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்,

பள்ளிக் கூடத்தின் படிக்கட்டுகளில் சிறுவர்களின் உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றாக குவிந்து கிடந்த்தாக ஒரு மாணவன் கூறுகிறான்.

கொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரும் 9 திலிருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள்.

சுமார் 250 பேர் காயம் பட்டிருக்கிறார்கள், அதில் 121 பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  

தலைமை ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியை, இரண்டு ஜவான்கள் உட்பட பலர் துடி துடிக்க கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் ஆயிரத்து ஐநூறு மாணவர்கள் படிக்கிற அநதப்பள்ளிக்கூடத்திலிருந்து 960 பேர் மீட்கப்பட்டிருந்தாலும் அவர்கள் உயிர் பிழைத்த அனுபவம் மிகவும் வேதனை தரத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. 

அசைந்த மாணவர்களை தலையிலும் நெஞ்சிலும் தீவிரவாதிகள் சுட்டார்கள் என ஒரு மாணவன் கூறுகிறான்.

தீவிரவாதிகளில் 4 பேர் தங்கள் அணிந்திருந்த ஜாக்கெட்டை வெடிக்கச் செய்தனர், அதனால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என பாகிஸ்தானின் ஜன்க் பத்ரிகை கூறுகிறது.

தீவிரவாதிகள் பெரிய தாடி வைத்திருந்தனர் என்றும் அரபியில் பேசிக் கொண்டதாகவும் மாணவர்கள் கூறினர்.

தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய ராணுவம் தெரிவிக்கிறது.

இந்தக் கொடூரமான தாக்குதலில் உலகமே உரைந்து போயிருக்கிற நிலையில் இந்த தாக்குதலை தாங்கள் அனுப்பிய ஆறு நபர்கள் மேற்கொண்டதாக தாலிபான்களின் பேச்சாளர் உமர் குராஸானி கூறியதாக ஜன்க் இதழ் கூறுகிறது.

அல்காயிதா அமைப்பின் சார்பில் அடையாளம் தெரியாத இடத்திலிருந்து பேசிய அதன் பேச்சாளர், யூசுப் ரஜா முஜாஹித் என்பவர்,  அத்னான் அஷ்ஷக்ரானி தலைமையில் இயங்கும் குழு இந்த வேலை செய்த்தாக ஒப்புக்க் கொண்ட் தோடு வஜீரிஸ்தானின் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் பொழியப்படும் வரை இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்று அச்சுறுத்தியுள்ளதாக ஜன்க் இதழ் கூறுகிறது.

இந்த படுகொலையும் இந்த அறிக்கைகளும் பாகிஸ்தானிய அரசியல் வாதிகள் ஆன்மீக தலைவர்கள் அனைவரையும் தாலிபான்களுக்கும் அல்காயிதாவுக்கும் எதிராக அணி திரள்வதில் ஒன்றுபடுத்தியிருக்கிறது,

மனித இனத்தின் வரலாற்றில் நடைபெற்றுள்ள் படுபயங்கரமான இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளவர்கள் புகைப்படத்தை தாலிபான்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த 7 பேரும் இருக்கிற புகைப்படத்தின் பின்னணியில் லாயிலாக இல்லல்லாஹ் என்ற வாசகம் தாங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இது தான் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்தப் புனித வாசகத்தை சொல்லி நடத்தப்பட்ட தாக்குதல் எவ்வளவு கர்ண கொடூரமானது.

இந்த வாசகம் முஸ்லிம்களை எப்படி பக்குவப்படுத்தியது, இன்று என்ன ஆயிற்று? என்ன நடக்கிறது?

பாகிஸ்தானிய அரசியல் என்பது ஒரு புரியாத புதிர்,  அந்த புதிரைப் பயண்படுத்திக் கொண்டு மிகப்பெரிய இலாபம் அடைந்தது அமெரிக்கா,

தாலிபான்களை அடக்க ஆப்கானிஸ்தானிய அரசாலும் அமெரிக்காவினாலும் கூட முடியவில்லை. 

இப்போதும் கூட வசீரிஸ்தான் பகுதிமீது ஆளில்லா விமானங்களை அனுப்பி தொடர்து குண்டு போட்டு வருகிறது. அமெரிக்கா . அமெரிக்கவை தடுக்க பாகிஸ்தானால் முடியவில்லை.

இதற்கு கொடுரமான ஒரு பதில் நடவடிக்கையாக பள்ளிக் கூட சிறுவர்களின் மீதான ஒரு காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

எந்த வகையிலும் நியயப்படுத்த முடியாத நடவடிக்கை இது, இது இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் எனில் இதைவிட கேவலம் இஸ்லாத்திற்கு வேறெதுவும் இல்லை.

கண்டிப்பாக இதை இஸ்லாம் ஏற்காது என்பது அனைவருக்கும் தெரியும்.

பயந்து ஓடுகிற சிறுவர்களை சுடுகிறவர்களை கிறுக்கர்கள புத்திசுவாதீனம் அற்றவர்கள் என்று தானே சொல்ல வேண்டும்.

இத்தகைய கர்ண கொடூரமான அக்கிரமத்தை செய்து விட்டு லாயிலாக இல்லலலாஹுவை பயன்படுத்துகிறவர்கள் யார் தெரியுமா?

தங்களை மட்டுமே முஸ்லிம் என்று அறீவித்து கொள்கிற தூயமைவாதிகளாகும்.

இத்தகையவர்களால் ஏற்படுகிற ஆபத்துக்களை உஸ்மான் ரலி கொல்லப்பட்டதிலிருந்து சமூகம் பார்த்துவருகிறது.

நாம் வாழும் காலத்திலும் அத்தகைய ஒரு அப்கீர்த்தியை பார்க்கிற துர்ப்பாக்கியம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.


உண்மையில் இதை இஸ்லாம் என்று பார்ப்பதும் தவறானது. இதில்  புவியியல அரசியல் சார்ந்த பல பிரச்சினைகள் அடங்கியிருக்கின்றன. இதில் யார் பக்கம் நியாயமிருக்கிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பால் அப்பட்டமான ஒரு உண்மை இருக்கிறது,

இது ஆக்ரமிக்கிற வெறி கொண்ட ஒரு கும்பலுக்கு எதிராக அதே அளவு வெறி கொண்ட ஒரு கும்பல் நடத்துகிற கொலை வெறியுத்தம்.

மிக நிச்சயமாக இக்கொடூர தாக்குதலுக்கும் இஸ்லாமிற்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதில் மற்றவர்களை விட முதலில் உஷார பெற வேணடியது முஸ்லிம் உம்மத்தாகும். நம்மிலிருந்தே நம்மை விட தூயமையானவர்களாக் காட்டிக் கொள்வோ ஆபத்தானவர்கள்>

அவர்களுக்கு ஒரு நெருக்கடி வருகிற போது அவர்கள் எத்தகைய கொடூரத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

அதற்கு ஒரு உதாரணம் டி என் டி ஜே வினர். இக்குழந்தைகளை படு கொலை செய்தவர்களின் கோட்பாடுகளுக்கும் இவர்களின் கோட்பாடுகளுக்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது.

கடந்த 2012 ல் தஞ்சை திருவிடை மருதூரில் ரமலான் மாததில் தராவீஹ் தொழுதுவிட்டு கூடி அமர்ந்து குர் ஆன் ஓதிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பலரையும் கொன்றவர்கள் இந்த அமைப்பினரே!

நாம் வாழும் காலத்திலிருக்கிற் முதல் தர முனாபிக்குகள் இவர்கள். லாயிலாக இல்லல்லாஹ் சொல்வார்கள்.  முஷ்டியை உயர்த்துவார்கள், அது உம்மததிற்கு எதிரானதாகவே இருக்கும்.

இத்தகைய சக்திகளை சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். முடிந்தவரை தனிமைப்படுத்த வேண்டும். இன்னும் ஒரு படு மேலே சென்று அவர்களே தனியே செல்வார்கள், இவர்களால் ஏற்படுகிற அபாயம் குறீத்து தமுழ் முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வுடனேயே இருக்க வேண்டும்.

அல்லாஹ் ஜல் உணவு உண்டும் உண்ணாமலும் பள்ளி சென்ற குழந்தைகள் திரும்பி வருகிற போது அவர்களுக்கு பசியாறத் தரவேண்டும் என்ற துடிப்போடு காத்திருந்த தாய்மார்களின் இதயங்களை கோடாரி கொண்டு பிளந்த இத்தகை சமபவங்கள் இனி ஒரு போதும் உலகின் ஒரு மூலையிலும் நடக்காதவாறு அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.  

இஸ்லாமின் உன்னதக் கோட்பாடுகளுக்கு எதிராக நடக்கிறவர்களிடமிருந்து அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தையும் இஸ்லாத்தையும் பாதுகாக்க வேண்டும்.

இன்றைய விகாரமான சூழ்நிலையில் இஸ்லாம் முஸ்லிம் உம்மத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கப்படுகிற ஒரு நிலையை அல்லாஹ் வெகு விரைவாக மாற்றித்தர வேண்டும்.

யா அல்லஹ் நாங்கள் மிக பலகீனமானவர்கள் , உனது சோதனையைஉனது திட்டங்களை தாங்கிக் கொள்ள சகதி அற்றவர்கள்.

யா அல்லாஹ் எங்களது தீனில் எங்களுக்கு சோதனையை தந்துவிடாதே!

யா அல்லாஹ் படுகொலை செய்யப்பட்ட  பச்சிளம் குழந்தைகளை எங்களுக்கு நன்மை கிடைக்க காரணமாக்குவாயாக! அவர்களது பெற்றோர்களுக்கு தகுந்த ஆறுதலையும் பிரதி பலனையும் தந்தருள்வாயாக!

யா அல்லாஹ் இனியும் எங்களை சோதித்துவிடாதே! எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயக!

No comments:

Post a Comment