إِنَّا
نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ(9)
முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் 63 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்தார்கள். சராசரியான நாட்கள் தான். ஆனால் மகத்தான
சாதனைகளின் தளமாக அந்த புனித வாழ்வு இருந்தது.
கடைசி
இருபது ஆண்டுகளில் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்தை தொடங்கி மகத்தான சாதனைகளை செய்தார்கள்.
இவரைப்
போல தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் தாக்கத்தை செலுத்தியவர்- செல்வாக்குப் பெற்றவர் மனித வரலாற்றில் வேறு யாரும் இல்லை என
மைக்கேல் ஹார்ட் கூறுகிறார்.
அந்த
புனித வரலாறு பலதரப்பட்ட அற்புதங்களை சுமந்திருக்கிறது.
அதில்
குறிப்பிடத்தகுந்த
ஒன்று :
ஒரு
தனிமனிதரைப் பற்றிய தகவல்கள் இந்த அளவுக்கு வரலாற்றில் இதுவரை தொகுக்கப்படவில்லை. பாதுக்கக்கப்படவும் இல்லை.
பேராசிரியர் ஹிட்டி ; he was born within full light of history
எழுதும்
கலை வளர்ச்சியடையாத – பாதுகாத்து வைக்கும் சாதனங்கள் கேமரா கம்ப்யூட்டர் – ஏன் காகிதம் கூட முழு அளவில் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் பிறந்த முஹம்மது நபியின் ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
பதிவுச்
சாதனங்கள் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு கூட இந்த அளவு பதிவுகள் இல்லை. காந்தி ஹிட்லர் நேதாஜி
إِنَّا نَحْنُ نَزَّلْنَا
الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ(9)
அல்லாஹ
திருக்குர் ஆனைப் பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். பெருமானாருடைய வாழ்க்கை வரலாறும் அதனுடன் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் அதில் இருக்கிறது என முப்தீ ஷபீ சாஹிப் சொல்கிறார். பெருமானாரின் வாழ்க்கை பாதுகாக்கப்ட்டால் தானே திருக்குர் ஆனை புரிய முடியும்.
பாதுகாப்பது
அல்லாஹ் என்றாகிவிட்ட பிறகு அந்தப்பாதுகாப்பு எவ்வளவு உயர்தரமானதாக இருக்கும்?
இபுறாகீம்
நபியின் பாதச்
சுவடுகளை கல்லில் பதியவைதத அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் வரலாற்றுக் குள் பத்திரப்படுத்தினான்.
அல்லாஹ்வின்
பத்திரப்படுத்துதல்
இருந்தால் ஓழிய இது சாத்தியமானதல்ல.
பெருமானாரின்
பிறந்த தேதி
பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
நமது தகப்பனார் காலத்தில் கூட பிறந்த தேதி நினைவு படுத்தப்படுவதில்லை.
ولـد سيـد المرسلـين صلى الله عليه وسلم
بشـعب بني هاشـم بمكـة في صبيحـة يــوم الاثنين التاسع مـن شـهر ربيـع الأول، لأول
عـام مـن حادثـة الفيـل، ويوافق ذلك عشرين من شهر أبريل سنة 571 م حسبما حققه
العالم الكبير محمد سليمان ـ المنصورفورى ـ رحمه الله
பிறந்த
இடம் இப்போதும் அடையாளம் காட்டப்படுகிறது. மக்கா நூலகமாக அந்தக் கட்டிடடம் இப்போதும் இருக்கிறது. அதன் சொத்து வரலாறும் இருக்கிறது.
பெருமானாரின்
வீட்டை ஹிஜ்ரத்தின் போது அலி ரலீ யின் சகோதரர் அகீல் எடுத்துக் கொண்டார். பிறகு அந்த வீட்டுக்கு பெருமானார் சொந்தம் கொண்டாடவில்லை. மக்கா வெற்றியின் போது
வீட்டை பற்றி பேச்சு வந்த போது அந்த வீட்டை அகீல் எடுத்துக் கொண்டாரே என பெருமானார் கூறினார்கள்.
அந்த
வீட்டை ஹஜ்ஜாஜ் பின் யூசுபின் சகோதரர் முஹம்மது பின் யூசுப் வாங்கி அதன் தனது வீட்டோடு இணைத்துக் கொண்டார்.
அப்பாஸிகளின்
காலத்தில் ஹாரூன் ரஷீதின் தாயார் அதை தனியாக பிரித்து பள்ளிவாசலாக கட்டினார்.
சவூதிகள்
அதை இடித்து அதன் இடிபாடுகளுக்கு மேல் மக்கா லைப்ரரியை கட்டினார்கள்.
நர்ஸு
நம்மில்
யாருக்காவது நமக்கு பிரசவம் பார்த்த நர்ஸின் பெயர் – நமது குழந்தைகளுக்கு பிரசவம் பார்த்த நர்ஸின் பெயர் ஞாபகத்தில் இருக்கிறதா /
பெருமானாரை
இந்த பூமியில் முதன் முதலில் கையில் தாங்கியவர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்களின தாயார் அன்னை சிபா அம்மையார் .
ونزل على يد الشفاء أم عبد الرحمن بن عوف فهي قابلته، رافعاً بصره إلى
السماء واضعاً يده بالأرض
சிறப்புமிகு பாரம்பரியத்தில் பெருமானார் பிறந்தார்.
عن العباس رضي الله عنه أن النبي صلى الله
عليه وسلم قال: «إن الله خلق الخلق فجعلني من خيرهم، ثم تخيّر القبائل فجعلني من
خير قبيلة، ثم تخيّر البيوت فجعلني من خير بيوتهم، فأنا خيرهم نفساً وخيرهم
بيتاً».
وعن واثلة بن الأسقع رضي الله عنه قال: قال
رسول الله صلى الله عليه وسلم «إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل، واصطفى من
ولد إسماعيل بني كنانة، واصطفى من بني كنانة قريشاً، واصطفى من قريش بني هاشم،
واصطفاني من بني هاشم
இஸ்லாத்தை
பொருத்தவரை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு தீர்மாணிக்கப்படுவதில்லை என்றாலும் உயர்ந்த் குடும்பத்தில் பிறப்பதும் அதற்கேற்ப வாழ்வதும் சிறப்புதான்.
நமது
குடும்பத்தை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மூத்தோர்களின்
சிறப்பான நடை முறை ஒரு குடும்பத்தின் மரியாதையை தீர்மாணிக்கிறது.
பாதுகாக்கப்பட்ட வமிசத் தொடர்;
நமக்கு
தந்தை பெயர் தெரியும் அவரது தந்தை பெயர் தெரியும். பெரும் பாலும் அதற்கு மேல் தெரியாது.
ஒரு
சில பாரம்பரிய சிறப்புடையவர்களுக்கு அவர்களது வமிசத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். உதாரணத்திற்கு இங்கிலாந்தின் அரச வம்சத்திற்கு பல தலைமுறை பாட்டன்களின் பெயர்கள் தெரிந்திருக்கலாம்.
இங்கு
பேச்சு அதுவல்ல.
அந்த
தலைமுறையின் பட்டியல் மக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் ?
ஆனால், முஹம்மது நபி
(ஸல்) அவர்களின் வமிசத்தொடர் அத்னான் வரைக்கும் தெரியும்.
(இமாம்களே! பெருமானாரின் நஸபை குறைந்தது அரபில் ஒரு
முறை சொல்லிக் காட்டுங்கள்.)
نسبه الشريف صلى الله عليه وسلم
هو محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم
بن عبد مناف بن قُصيّ بن كلاب بن مُرَّة بن كعب بن لؤي بن غالب بنِ فِهْر بن مالك
بن النضر بن كِنانة بن خُزيمة بن مُدركة بن إلياس بن مُضَر بن نِزار بن مَعدّ بن
عدنان.
) إن نسب سيدنا محمد صلى الله عليه وسلم لا
يختلف النسابون فيه إلى معد بن عدنان كما هو مذكور ها هنا، وإنما اختلف النسابون
من عدنان إلى إسماعيل، لكنهم أجمعوا على أنه ينتهي إلى إسماعيل،(
முஸ்லிம்கள்
சொந்த பாட்டனின் பெயர் தெரியாமல் இருக்கலாம், ஆனால் பெருமானாரின் 4 வது பாட்டானார் வரை தெரிந்திருப்பது சுன்னத்தாகும்.
இந்த
ரபீஉல் அவ்வலில் இதை நாபகத்தில் வைப்போம்.
முஹம்மது (ஸல்)
·
அப்துல்லாஹ்
·
அப்துல் முத்தலிப்
·
ஹாஷிம்
·
அப்து மனாப்
·
குஸை
(இதை விளங்கி
ஞாபகத்தில் நிறுத்திக் கொள்ளும் அளவு சற்று நிதானமாக சொல்லலாம்.)
பெருமானாருக்கு பெயர் வைத்தவர்
நமக்கு மட்டுமல்ல வரலாற்றில் பலருக்கும் பெயர் சூட்டியது
யார் எனத் தெரியாது. பெயர் பொருத்தமும் இருக்காது,
ولما ولدته أمه أرسلت
إلى جده عبد المطلب تبشره بحفيده،فجاء مستبشرًا ودخل به الكعبة، ودعا الله وشكر له. واختار له اسم محمد ـ وهذا الاسم لم يكن
معروفًا في العرب
இதில் நமக்கொரு
பாடம் இருக்கிறது. குழந்தைகளுக்கு பெயர்க் சூட்டுகிற போது அந்தக் குழந்தை எப்படி வரவேண்டும்
என்ற கற்பனை – பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்.
பால் கொடுத்தவர்கள்
பெருமானாருக்கு எட்டு
தாய்மார்கள் பால் கொடுத்திருக்கிறார்கள்.
அதில்
இருவர் முக்கியமானவர்
1 சுவைபா -
முதன் முதலில் பால் கொடுத்தவர்
2 ஹலீமா – இரண்டாண்டுகளுக்கு மேல் வளர்த்தவர்.
·
وأول من أرضعته من المراضع ـ وذلك بعد أمه
صلى الله عليه وسلم بأسبوع ـ ثُوَيْبَة مولاة أبي
لهب
·
واسترضع عبد المطلب لرسول الله صلى الله عليه وسلم
حليمة بنت أبي ذؤيب عبد الله بن الحارث، وزوجها
الحارث ابن عبد العزى المكنى بأبي كبشة
இப்போதும்
கூட நமது பகுதிகளில் அம்மாவுக்கு பால் வராத போது அல்லது அம்மா பால் கொடுக்கிற் நிலையில் இல்லாத போது பச்சிளம் சிசுவுக்கு பக்கத்திலிருக்கிற யாராவது பாலூட்டுகிறார்கள்.
இஸ்லாம்
அந்த உறவை பத்திரப்படுத்தி வைக்க சொல்கிறது. காரணம் அதில் ஹுர்மத் சம்பந்தப் பட்டிருக்கிறது.
நபி
(ஸல்) அவர்களுக்கு பால கொடுத்த அன்னையரின் பெயர்கள் மட்டுமல்ல அவர்களிடம் பால அருந்திய மற்ற குழந்தைகளின் பெயர்களும் பதிவாகி இருக்கிறது.
وإخوته صلى الله عليه وسلم هناك من الرضاعة :
عبد الله بن الحارث، وأنيسة بنت الحارث، وحذافة بنت
الحارث وأبو سفيان بن الحارث بن عبد
المطلب ابن عم رسول الله صلى الله عليه وسلم
وكان عمه حمزة بن عبد
المطلب مسترضعًا في بني سعد بن بكر، فأرضعت أمه رسول الله
صلى الله عليه وسلم يومًا وهو عند أمه
حليمة،فكان حمزة رضيع رسول الله صلى الله عليه وسلم من جهتين، من جهة ثويبة ومن جهة
السعدية.
இதுவெல்லாம்
கூட வேறு சிலருக்கும் வாய்க்கலாம். பெருமானாரின் வர்லாற்றில் சிறு தொடர்பு பெற்ற மனிதர்களும் பெருடகளும் கூட வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.
பெருமானாருக்கு ஒரு
முறை உதவி செய்த அன்னை வரலாற்றில் இடம் பெற்றார்,
ஹிஜ்ரத்தின்
போது பெருமானாருக்கும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களும் உணவை தேடிய படி நடந்த போது ஒரு கூடாரம் தெரிந்தது, அதில் ஒரு பெண்மணி இருந்தார். உங்களுக்கு தரும் அளவு என்னிடம் எதுவுமில்லையே என்றால், மூலையில் மடு வற்றிப் போன் ஒரு ஆடு இருந்தது, இதில் பால கறந்து கொள்ளட்டுமா என பெருமானர்ர் (ஸல்) கேட்டார்கள். அந்த பெண்மணி ஆச்சரியத்தோடு அனுமதித்தார்.
பெருமானார் மடுவை தொட பால சுரந்தது, அனைவரும் அருந்தினர்.
அந்த்
அம்மையார் கூறுகிறார். உமர் ரலி காலம் வரை அந்த மடு எங்களுக்கு பால சுரந்து கொண்டிருந்தது.
அந்த
அம்மையாரின் பெயர் உம்மு மஃபத்
وفي اليوم الثاني أو
الثالث مر بخيمتى أم مَعْبَد الخزاعية، وكان موقعهما بالمُشَلَّل من ناحية قُدَيْد
على بعد نحو 130 كيلو مترًا من مكة، وكانت أم معبد امرأة برزة جلدة تحتبى بفناء
الخيمة، ثم تطعم وتسقى من مر بها، فسألاها: هل عندها شيء؟ فقالت: والله لو كان عندنا شيء ما أعوزكم، القِرَى والشاء عازب،
وكانت سَنَةٌ شَهْباء.
فنظر رسول الله صلى الله عليه وسلم إلى شاة في كسر الخيمة، فقال: [ما هذه الشاة يا أم معبد؟] قالت: شاة خلفها الجهد عن الغنم، فقال: [هل بها من لبن؟] قالت: هي أجهد من ذلك. فقال: [أتأذنين لى أن أحلبها؟] قالت: نعم بأبي وأمي إن رأيت بها حلبًا فاحلبها. فمسح رسول الله صلى الله عليه وسلم بيده ضرعها، وسمى الله ودعا، فتَفَاجَّتْ عليه ودَرَّتْ، فدعا بإناء لها يَرْبِض الرهط، فحلب فيه حتى علته الرغوة، فسقاها، فشربت حتى رويت، وسقى أصحابه حتى رووا، ثم شرب، وحلب فيه ثانيًا، حتى ملأ الإناء، ثم غادره عندها فارتحلوا.
فنظر رسول الله صلى الله عليه وسلم إلى شاة في كسر الخيمة، فقال: [ما هذه الشاة يا أم معبد؟] قالت: شاة خلفها الجهد عن الغنم، فقال: [هل بها من لبن؟] قالت: هي أجهد من ذلك. فقال: [أتأذنين لى أن أحلبها؟] قالت: نعم بأبي وأمي إن رأيت بها حلبًا فاحلبها. فمسح رسول الله صلى الله عليه وسلم بيده ضرعها، وسمى الله ودعا، فتَفَاجَّتْ عليه ودَرَّتْ، فدعا بإناء لها يَرْبِض الرهط، فحلب فيه حتى علته الرغوة، فسقاها، فشربت حتى رويت، وسقى أصحابه حتى رووا، ثم شرب، وحلب فيه ثانيًا، حتى ملأ الإناء، ثم غادره عندها فارتحلوا.
(الرحيق)
ஹிஜ்ரத்தின் போது பெருமானாருக்கு வழியை அடையாளம் காட்டிய கைடின் பெயர் பதிவாகி இருக்கிறது, அவர் இஸ்லாமை தழுவிய செய்தி உறுதிப்படுத்தப் படவில்லை.
ﻭاﺳﺘﺄﺟﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ- ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ-
ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ، ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻷﺭﻳﻘﻂ ﺩﻟﻴﻼ- ﻭﻫﻮ ﻋﻠﻰ ﺩﻳﻦ ﻛﻔﺎﺭ ﻗﺮﻳﺶ، ﻭﻟﻢ ﻳﻌﺮﻑ ﻟﻪ ﺇﺳﻼﻡ
நரை
பெருமானாரின் தலையிலும் தாடியிலும் 17 வெள்ளை முடிகளுக்கு மேல் இருக்கவில்லை என புகாரியின் ஒரு ஹதீஸ் சொலகிறது.
பிராணிகள் பொருட்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள் தான் வைத்த பிராணிகளுக்கும் ஆயுதங்களுக்கும் பெயர் வைத்திருந்தார்கள் . அந்த பெயர்கள் வர்லாற்றை வென்று வாழ்கின்றன.
பெருமானார் 7 குதிரைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்
فمن الخيل : السكب . قيل : وهو أول فرس ملكه ،
ஒரு முறை ஒரு குதிரையை விலை பேசினார்கள், வீட்டுக்கு வந்து பணம் தருவதாக வியாபாரியை அழைத்து வந்தார்கள், வரும் வழியில் இன்னொருவர் அதை விலைக்கு கேட்டார்; வியாபாரி பேச்சு
வார்த்தையில் ஈடுபட்டார். எனக்கு விற்றதை அடுத்தவருக்கு எப்படி பேசலாம் என பெருமானார் சொன்னார்கள், வியாபாரம் முடியவில்லை என்றார் அவர், முடிந்து விட்டது
என்றார்கள் பெருமானார். ஆதாரம் என்ன என்றார் வியாபாரி.
அப்போது
அங்கு வந்த குஸைமா ரலி நான் சாட்சி என்றார்கள். அந்த குதிரையை பெருமானார் வாங்கினார்கள். பிறகு குஸைமாவிடம் கேட்டார்கள். நீங்கள் அங்கு இல்லையே எப்படி சாட்சி சொன்னீர்கள். குஸைமா சொன்னார். நீங்கள் சொல்லி
நாங்கள் அல்லாஹ்வவ மறுமை நாளை நம்பியிருக்கிற போது ஒரு குதிரை விச்யத்தில் உங்களது சொல்லை எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்றார் , அந்த சத்தியத்தில் மகிழ்சியடைந்த பெருமானார் குஸைமா வின் சாட்சி இனி இரு நாட்சிக்கு சமம் என்றார்கள்.
அந்தக்
குதிரைக்குப்
பெயர்
முர்தஜிஸ்
என
வரலாறு
ஞாபகத்தில்
வைத்திருக்கிறது,
والمرتجز ، وكان أشهب وهو الذي شهد فيه خزيمة بن ثابت .
واللحيف ، واللزاز ، والظرب ، وسبحة ، والورد . فهذه سبعة متفق عليها ، [
والمرتجز ، وكان أشهب وهو الذي شهد فيه خزيمة بن ثابت .
واللحيف ، واللزاز ، والظرب ، وسبحة ، والورد . فهذه سبعة متفق عليها ، [
கோவேறு கழுதையின் பெயர்
وكان له من البغال دلدل ، وكانت شهباء أهداها له المقوقس
கழுதையின் பெயர்
ومن الحمير عفير وكان أشهب ، أهداه له المقوقس ملك
القبط
பெருமானாரின் ஒட்டகைகள்.
ஒட்டகை அரபுகளின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அம்சம் .
பெருமானார் தனது ஒட்டகைகளுக்கு பெயர் வைத்திருந்தார்கள். 3 ஒட்டகைகள் பிரதானமானவை.
القصواء والعضباء ، والجدعاء
ஹிஜ்ரத்
பயணம் செய்த ஒட்டகை கஸ்வா
பெருமானாரின் ஆயுதங்கள்
كان له تسعة أسياف :
مأثور ، وهو أول سيف ملكه ، ورثه من أبيه .
مأثور ، وهو أول سيف ملكه ، ورثه من أبيه .
தந்தையின்
சொத்தாக் கிடைத்த வாள் மஃசூர்
பெரும்பாலும்
கையில் வைத்திருந்தது, துல்பிகார். மக்கா வெற்றியின் போது அவர்களது கையில் இருந்த வாளின் பெயரை வரலாறு பாதுகாக்கிறது. அந்த வாள் விளைவித்த அமைதிப் புரட்சியை பாதுகாத்தது போல.
وذو الفقار وكان لا يكاد يفارق
وكان سيفه ذو الفقار تنفله يوم بدر ،
وهو الذي أري فيها الرؤيا ، ودخل يوم الفتح مكة وعلى
سيفه ذهب وفضة .
பெருமானாரின்
கவச்
ஆடைகள் - வில்லுகள்
وكان له سبعة أدرع :
وكانت له ست قسي
وكانت له خمسة أرماح
பெருமானாரின் கேடயங்கள்
وكان له ترس يقال له : الزلوق ، وترس يقال له : الفتق .
وترس أهدي إليه ، فيه صورة تمثال فوضع يده عليه فأذهب الله ذلك التمثال .
கேடயத்தின் அதிசயம்.
பெருமானாருக்கு
அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு கேடயத்தில் ஒரு உருவப்படம் இருந்தது, அப்படத்தை
பெருமானாரின் கை தடவிய போது அது அழிந்து போனது.
பெருமானாருக்கு இரண்டு
தலைக் கவசங்கள் இருந்தன,
وكان له مغفران من حديد
அதில்
ஒன்றை தான் உஹது யுத்தத்தின்
போது முஸ் அப் ரலிக்கு அணிவித்தார்கள். அதை அணிந்த நிலையில் அவர் கொல்லப்பட்டதை பார்த்துத்தான் முஹ்ம்மது ஸல் கொல்லப்பட்டு விட்டார் என காபிர்கள் சத்தமிட்டார்கள்.
பெருமானாரின்
தூக்கம் நிலை பேச்சு விதம் என ஒவ்வொன்று பதிவாகியிருக்கிறது,
தூக்கம்
பெருமானாரின்
தனி அடையாளங்களையும் இயல்புகளையும் கூறுவதெற்கென்றே ஒரு கலை இஸ்லாமில் இருக்கிறது. அதன் பெயர் ஷமாயில்.
இமாம்
துர்மிதி ரஹ் ஷமாயிலில் அற்புதமான ஒரு ஹதீஸ் தொகுப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இவ்வளவு தூரம்
துல்லியமாக தொகுக்கப்பட்ட வரலாற்றூக்கு சொந்தக் காரர் இந்த 21 ம் நூற்றாண்டு வரை கூட
முஹம்மது (ஸல்) அவர்களை தவிர வேறுயாருமாக இருக்க முடியாது.
திருக்குர் ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்ட தை தவிர மற்ற நபிமார்களைப் பற்றிய செய்தி ஆதரப்பூர்வமாக இல்லை.
பெருமானாரின் வரலோறோ தகவல்களின் புதையலாக ஆதாரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.
அந்த வரலாற்றின் வழித்தடங்கள் இப்போதும் மனித சமூகத்தின் பார்வைக்கு கிடைக்கின்றன. ஹிரா - தவ்ரு - உஹது - மக்கா மதீனா - என -
அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையில்லாத படி அந்த வரலாறு பாதுகாக்கப்பட்டுள்ளது.
நாம் அந்த வரலாற்றை
வாசிக்க வேண்டும். தார்மீக கடமை.
பெருமானார்
நம்முடை உயிரையும் விட மேலானவர் அல்லவா?
எல்லா மொழிகளிலும்
குறைந்த விலையில் கிடைக்கிறது. தமிழ்லில் 15 ரூபாயுக்கு கிடைக்கிறது,
இந்த மாதத்திற்குள்
அந்தப் புனித வரலாற்றை வாசித்து விடுவோம் என உறுதி ஏற்போம்.
அது பெருமானாரின்
உம்மத் என்று சொல்லிக் கொள்ளும் பெருமைக்கான அடிப்படை தகுதியாக அமையும்.
அல்லாஹ் முஹம்மது
ரஸூல் (ஸல்) அவர்களின் ஷபாஅத்திற்குரியவர்களாக நம்மையும் நமது சந்ததிகளையும் ஆக்கிவைப்பானாக!
جزاك الله خيرا كثيرا كثيرا
ReplyDeleteசிக்கந்தர் பாதுஷா மஸ்லஹி
ReplyDeleteபுதிய கோணத்தில் ஆய்வு அறுமை
Yasin Musammil
ReplyDeletemasha allah
அற்புதமான சிந்தனை அல்லாஹ் உங்கள் வாழ்விள் பரகத் செய்வானாக
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ReplyDeleteபயான் அருமையாக
இருந்தது.
ஒரு வேண்டுகோள்
தாங்கள் அனுப்பும்
ஆயத் &ஹதீஸ்களுக்கு
அர்த்தங்களை
பதிவு செய்தால்
இன்னும் இலகுவாக
இருக்கும்.