வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 22, 2015

இறைநேசம்

وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ2:168

ரபீஉல் அவ்வல் மாத்தில் இறுதி இறைத்தூதர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை நினைவு கூறுவது போல ரபீஉல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களை முன்னிறுத்தி பொதுவாக இறைநேசர்களை நினைவு கூர்வது முஸ்லிம் சமுதாயத்தின் வழக்கம்

எதையும் எக்குத் தப்பாக விளங்கி எக்குத்தப் பாகவே பிரச்சாரம் செய்துவருகிற கூட்டம் தமிழகத்தில் பரவியுள்ள போலி தவ்ஹீதிகளின் கூட்டம்.

மீலாது மவ்லூது என்ற இரண்டு வார்த்தைகளே முஹம்மது ரஸுல் (ஸல்) அவர்கள் அல்லாஹ் அல்ல என்பதை பறைசாற்ற போதுமானவை. ஆனால் அதையே முஸ்லிம் சமுதாயம் செய்யும் ஷிர்க் என்று அவர்கள் ஏசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

அதே போல இறைநேசர்கள் என்று அடையாளம் காணப்பபட்ட வலிமார்கள் இந்த உலகில் செய்த வேலை, அதே போல அவர்களை போற்றி நடைபெறுகிற மொலூதுகளில் வழியுறுத்தப்படுகிற செய்திகள் அனைத்தும் மக்களை முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கிற செய்திகளாகும். ஆனால் இந்த போலி தவ்ஹீதிகளோ வலிமார்கள் என்றாலே ஷிர்க் புராணம் பாட ஆரம்பித்து விடுகிறார்கள்,

சமுதாயம் வலிமார்களையும் அவர்களது வழிகாட்டுதல்களையும் சரியாக புரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறது,  

இறைநேசர்கள் என்போர் அல்லாஹ்வை அல்லாஹ்வுக்காக அளவு கடந்து நேசித்து அந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்தவர்கள் ஆவார்கள்

நபிமார்களின் பட்டியல் முடிந்து விட்டது. இறுதி இறைத்தூதர் முஹம்மது ரஸூல் (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் அல்லாஹ்வை நெருங்கவும் நேசிக்கவுமான வழிகாட்டுதலை கியாமத் நாள் வரை இறைநேசர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்

இறை நேசம் என்பது நம் எல்லோரிடமும் இருக்கிறது,

·         அல்லாஹ் நம்மை படைத்த ரப்பு.
·         நமக்கு சகலத்தையும் தருபவன்
·         நமது பாவங்களை மன்னித்த்து மகத்தான பேரருளை நமக்கு தர இருப்பவன்

லாயிலாக இல்லல்லாஹ் என்ற கலிமாவை நாம் மனதால் உறுதி கொண்டுவிடுகிற போது நமது  உள்ளம் ஏற்றுக் கொள்கிற அடிப்படை தத்துவங்கள் இவை.

இந்த கலிமாவின் தத்துவங்கள் நமக்குள் ஊடுறுவி விடும் என்றால் அல்லாஹ்வின் மீதான அன்பும் நேசமும் நமக்குள் தானாக பிறக்கும்.

நம்மை படைத்து அருள் பாலிக்கும் இறைவனை நாம் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?

அந்த நேசம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது,

நமது சூழ்நிலை அல்லது மனோநிலையை பெறுத்து அல்லாஹ்வின் மீதான நேசமும் பிரியமும் மாறுபடும்.

நாம் குடிப்பதற்கு பயன்படுத்துகிற தண்ணீர் ஒரு அளவு சூட்டில் இருக்கும்
நாம் ஒளு செய்வதற்கு பயன்படுத்தும் தண்ணீர் அதை விட சற்று சூடாக இருக்கும்
நாம் தேநீர் தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் இன்னும் அதிக சூடாக இருக்கும்.

குடிக்கிற வெண்ணீர், தேநீர் தயாரிக்க பயன்படுத்துகிற தண்ணீரை விட சூடு குறைவாக இருப்பதால் அதை சூடற்றது என்று சொல்லி விட முடியாது,

சூடு ஒன்றுதான் என்றாலும் சூழ்நிலைக்கு ஏற்ப அதற்கு தரம் மாறுபடுகிறதல்லவா அது பேல இறைவனின் மீதான நேசம் ஒன்று தான். அது அனைவரிடமும் இருக்கிறதும். மக்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் தரம் மாறுபடுகிறது,


கலிமா சொன்ன் ஒவ்வொருவரிடமும் இறை நேசம் இருக்கிறது, என் இறைவனே என்ற அவனுடைய விளிப்பில் அந்த நேசம் வெளிப்படவே செய்கிறது,  

குடித்து திரிகிற பாவியாக இருந்தாலும் தெருக்களில் எங்காவது அரபி எழுத்து தெரிகிற காகிதத்தை கண்டால், அதை காலில் மிதித்து விடாமல் பாய்ந்து எடுத்து ஜோப்பில் பத்திரப்படுத்துகிறவரை பார்க்கிறோம், அல்லாஹ்வின் வார்த்தை சார்ந்த மொழியின் மீதிருக்கிற பாசம் என்பது அல்லாஹ்வின் மீதான பிரியமே!

நற்செயல்கள் அதிகம் செய்கிறவர்களிடம் அந்த நேசத்தின் சூடு அதிகமாக இருக்கும். இறைநேசர்களாக – வலியுல்லாக்களாக் – ஆகிவிட்டவர்களிடம் அந்தச் சூடு இன்னும் அதிகமாக இருக்கும்.

நாம் நற்செயல்களை அதிகம் செய்வது அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருவதற்காகவே!

தொழுகை, – அதற்காக நேரத்தே தயாராவது – விழிப்போடு இருப்பது-
நோன்பு, அதில் காட்டப்படும் எச்சரிக்கை – முடியாத நிலையிலும் தாங்கிக் கொள்வது.
தர்மம் – கஷ்டப்பட்ட காசு, அது தனக்கு தேவை எனினும் அடுத்தவர்களுக்கு வழங்குவது, 10 ரூபாய் கையில் இருக்க 2 ரூபாய் கொடுப்பது

அனைத்தும் அல்லாஹ்விடம் கிடைக்கிற நெருக்கத்தையும் நன்மையையும் எதிர்பார்த்தே நாம் செய்கிறோம்.

இதுவெல்லாம் இறை நேசத்தின் வெளிப்பாடே!


இரவு தூங்குவதற்கு அதிக நேரமாகிவிடுகிற போது சுபுஹ் தவறிவிடுமோ என்று பயந்து எத்தனையோ பேர் தூங்காமல் விழித்திருக்கிறார்கள்?

ஜமாத் தொழுகைக்காக காசு கொடுத்து பயணம் செய்கிற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

கடும் குளிரில் முதியவர்கள் குளிர்ந்து கிடக்கும் ஹவ்லு தண்ணீரில் ஒளு செய்கிறார்கள்.

கலீல் அஹ்மது கீரனூரி ஹஜ்ரத் சொன்னர், ஒரு தடவை ரமலானில் லண்டனில் இருந்தோம, இரவு குறைந்த நேரம் அது, தராவீஹ் தொழுத பிறகு சஹருக்கு தயாராகிவிட வேண்டும், சாப்பிட்டு முடித்தால் சற்று நேரத்தில் பஜ்ரு வந்து விடும். ஒரு பெண்மணி மிகுந்த வருத்தத்தோடு சந்தேகம கேட்டார், ஹஜ்ரத்! சஹருக்கு சமைத்து சாப்பட்டு பாத்திரங்களை எடுத்து வைப்பதற்குள்ளாக இரவு முடிந்து விடுகிறதே நான் எப்படி தஹஜ்ஜத் தொழுவது?

இலண்டன் மாநகரத்தின் நேர மாற்றங்களும் குளிச் சீதோஷ்ணமும் சொல்லுந்தரமானது அல்ல,

என்னுடைய நண்பர் மர்ஹூம் முஸ்தாக் அவர்களின் மகன் சில நாட்களுக்கு முன் இலண்டனிலிருந்து போன் செய்தார், இப்போது அங்கே இரவு அதிகம் காலை 8 ½ மணிக்கு சூரியன் உதிக்கிறது, நான்கு மணிக்கு மறைந்து விடுகிறது, ரிப்ளக்ட் செய்கிற வண்ண குளிராடை அணியாமல் தெருவில் செல்லக் கூடாது என அரசு உத்தரவிட்டிருக்கிறது, ஏனெனில் பனியில் வாகன ஒட்டிகளுக்கு அந்த ரிப்ளக்ஸன் தான் அடையாளம் .

இத்தனை சிரமங்களுக்கு இடையேயும் அல்லாஹ்வை ஐந்து வேளை தவறாமல் தொழுகிற சமுதாயம் அஙகே இருக்கிறது,

அமெரிக்காவின் பல இடங்களிலும் குளிர்காலத்தில் பள்ளிவாசலுக்கு செல்லும் பாதைகளில் பனி மூடியிருக்கும். அந்தப் பனியை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி வண்டிகள் வருவதற்கு நேரமாகும், ஆனாலும் பலர் காலை பஜ்ரு தொழுகைக்கு அந்தப் பாதையை கடந்து வந்து பள்ளிவாசலில் இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்காக பாதையை சீர் செய்துவைப்பார்கள், இப்படிச் செய்வது சில நேரங்களில் உயிரையே பறித்துவிடக் கூடியது என்கிறார்கள்.

எங்கே எத்தகைய சூழலில் இருந்தாலும் அடியார்கள் தொழுகிறார்கள் நன்மையான காரியங்களை நிறையச்செய்கிறார்க்ள் இன்னும் இன்னும்

இப்போது சொல்லுங்கள் உலகில் எந்தக் காதலிக்காக மக்கள் அதிகம் காத்திருக்கிறார்கள்?

நற்செயல்களின் மீதான மோகம் எந்த அளவு முஃமின்களிடம் வெளிப்படுகிறதோ அந்த அளவுக்கு அவர்களிடம் அல்லாஹ்வின் மீதான நேசம் இருக்கிறது,

அல்லாஹ்வை நேசிப்பவர்கள் அவனை பார்க்க வேண்டும் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு, இந்த உலகில் அல்லாஹவை பார்க்க முடியாது, அதற்குரிய இடம் சொர்க்கமே!

சொர்க்கம் மகோன்னதமானது,
நாம் நினைத்தெலாம் கைகூடும் இடம் அது, எட்டுத்திக்கிலும் இன்பம் மட்டுமே சூழ்ந்த தளம். பிரம்மாண்டமானது,
அதில் கிடைக்கும் சுக போகங்கள் எந்த கண்ணும் பார்த்திராதவை. எந்த உள்ளமும் சிந்தித்திராதவை

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله- صلى الله عليه وسلم-:قال الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وفي بعض رواياته: ولا يعلمه ملك مقرب ولا نبي مرسل. واه البخاري ومسلم


சொர்க்கத்தின் சுகந்தங்களின் பிரம்மாண்டத்திற்கு ஒரு சின்ன உதாரணம்

وعن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( لو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض لأضاءت ما بينهما , ولملأت ما بينهما ريحا , ولنصيفها على رأسها خير من الدنيا وما فيها ) رواه البخاري ( 2643

ஹூருல் ஈன் பெண்கள் பேரழகு எந்த அளவு ஈர்க்கும் தன்மை வாய்ந்தது
·         அவர்கள் பேசினால் இறந்த மனிதன் கூட எழுந்துவிடுவான்
·         அவர்கள் கசப்பு பானத்தில் விரல் வைத்தால் அது இனிப்பாக மாறிவிடும்
·         அவர்கள் முக்காட்டை சற்று விலக்கினால் சூரிய வெளிச்சம் மங்கிவிடும். (துல்பிகார் சாஹிப் – குத்பாத்)

இது போன்ற எண்ணற்ற இனிமைகள் நிறைந்த சொர்க்கத்தில் பேரினிமை என்ன தெரியுமா ?

அல்லாஹ்வின் தரிசனமாகும்.
அந்த தரிசனத்தை பெறுவதற்கான வழி
அல்லாஹ் வழிகாட்டுகிறான்.

فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا(110)

இந்த தரிசனத்தை நாடித்தான் மக்கள் அழுது புரண்டு அமல் செய்கிறார்கள் எனும் போது மக்களுக்கு அல்லாஹ்விடம் உள்ள அன்பின் ஆழம் எத்தகையது?

இது மனிதர்களின் நல்லவர்களின் நிலை என்றால்
இறைநேசர்கள் எப்படி இருப்பார்கள்

இறைநேசர்கள் என்கிறோமே அவர்கள் அல்லாஹ்வின் மீதான நேசத்தில் அல்லாஹ் அன்பளிப்பாக தருகிற சொர்க்கத்தை விட அல்லாஹ்வின் ரிழா எனும் திருப்தி தங்களுக்கு வேண்டும் என அதிகம் விரும்புவார்கள்

சிரியவைச் சார்ந்த சுல்தானுல் ஆஷிகீன் என்று புகழபபெற்ற இறைக்காதலில் திழைத்த இப்னு பாரிழ் (ஹிஜ்ரி 6 ம் நூற்றாண்டு) (ரஹ்)
بن الفارض، هو أبو حفص شرف الدين عمر بن علي بن مرشد الحموي، أحد أشهر الشعراء المتصوفين، وكانت أشعاره غالبها في العشق الإلهي حتى أنه لقب بـ "سلطان العاشقين". والده من حماة في سوريا، وهاجر لاحقاً إلى مصر.


இப்னு பாரிழ் அவர்களுக்கு மரண தருவாயில் சொர்க்கம் காட்டப்பட்டது, அதை பார்த்து அவர் முகம் திருப்பி மக்களிடம் சொன்னார்

அல்லாஹ்வின் மீதான என அன்பிற்குரிய அந்தஸ்து இது தான் என நீங்கள் நினைத்தால் என் வாழ்நாள் முழுக்க வீண் தான்,

إن كان منزلي في الحب عندكم ما قد رأيت فقد ضيعت أيامي

حلية الأولياء وطبقات الأصفياء   வில் இடம் பெற்றுள்ள மம்ஷாத் தின்னூரி ممشاد الدينوري 
அவர்களுக்காக ஒருவர் துஆ செய்தார். யா அல்லாஹ் இவருக்கு சொர்க்கத்தை கொடு!
ممشاد الدينوري  அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்
என கண்களுக்கு முன்னால் 20 வருடங்களாக சொர்க்கம் தெரிந்து கொண்டிருக்கிறது, ஆனால் நான் என் இறைவனிடமிருந்து இதுவரை கண்களை அகற்றவில்லை.

இறைநேசர்கள் என்பவர்கள் இறைவன் தருகிற சொர்க்கத்திற்காக மட்டுமே  அல்லாஹ்வை நேசிக்கிறவர்கள் அல்ல அதைத்த தாண்டி அல்லாவிற்காகவே அல்லாஹ்வை நேசிக்கிறவர்கள்,












No comments:

Post a Comment