إِنَّ الْمُسْلِمِينَ
وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ
وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ
وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ
وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ
وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ
مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا(35)
இஸ்லாமிய வாழ்வு எத்தகையது என்பதில் நாம் கவனமில்லாமல் இருக்கிறோம்.
ஒருவர் முஸ்லிமின் இயல்புகளோடு நடந்து கொண்டாலே
போதும், உலகம் அவருக்குப் பினால் வந்து விடும்.
சஹாபாக்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய இயல்புகளின் அடையாளங்களாக
இருந்தார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்து அழைக்காமலே
மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களுக்கு பின்னால் திரண்டார்கள் அதே போல இறை நேசர்கள் மக்களை
தம் இஸ்லாமிய இயல்புகளாலேயே இஸ்லாத்திற்கு கொண்டு வந்தார்கள்.
ஹழ்ரத் அபூ உபைதா ரலி ஆரம்பத்தில் சிரியாவை நோக்கி அனுப்பட்டார்கள், அங்குள்ள நகரை அவர்கள் வெற்றி கொண்டு மக்களை தம் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்து கொண்டிருந்த சூழலில் உமர் ரலி அவர்கள் பாரசீகத்தை நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். மக்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக
பெற்றிருந்த ஜிஸிய்யா பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு அபூ உபைதா ரலி அவர்கள் பாரசீகத்தை
நோக்கி புறப்பட்ட போது ஹிம்மஸ் நகர மக்கள் அவரை நகரின் வாசலில் அழுத படி அனுப்பி வைத்தார்கள், மீண்டும் தங்களது ஊரை ஆள வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
فقالوا لهم: "رَدَّكُمُ اللهُ إلينا، ولَعَنَ اللهُ الذين كانوا
يملكوننا من الروم،
و أمر أبو عبيدة صاحب الجزية حبيب بن مسلمة أن رُدَّ على أهل حمص كل
ما أخذته من أموال الجزية؛ لأنهم لن يدافعوا عنهم بذلك الانسحاب، وقل لهم:
"نحن على ما كنا عليه فيما بيننا وبينكم من الصلح، لا نرجع فيه إلا أن
ترجعوا عنه".
وهكذا رد المسلمون الجزية لأهل حمص، وقد تعجب أهل حمص من هذا الموقف
تعجبًا شديدًا،
فقالوا لهم: "رَدَّكُمُ اللهُ إلينا، ولَعَنَ اللهُ الذين كانوا
يملكوننا من الروم، …، لَوِلايتُكُم وعدلُكم أحبُّ إلينا مما كنا فيه
من الظلم والغُشْم".
صلَّى المسلمون الفجر في حمص، وانطلقوا عائدين في اتجاه دمشق،
1917 ம் ஆண்டு நவம்பர் 27 ம் நாள் இலண்டன் நகரத்தின்
மேற்குப் பகுதியில் உள்ள நாட்டிங்க் ஹில் பகுதியில் இஸ்லாமும் முன்னேற்றமும்
Islam and Progress' என்ற தலைப்பில் செறபொழிவாற்ற வந்த மர்மடியூக் வில்லியம் பிக்தால் Marmaduke William Pickthall (அப்போது 42 வயது) தனது உரையின் இறுதியில் எதிர்பாரத வகையில் தான் இஸ்லாமை தழுவுதாக அறிவித்து முஸ்லிமானார். தனது பெயரை Muhammad Marmaduke Pickthall என மாற்றிக் கொண்டார், இஸ்லாமிய
உலகிற்கு அருமையான் ஒரு ஆங்கில திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு நூலை இஸ்லமிய உலகிற்கு வழங்கினார்,
அதை அல்ஹஸ்ஹர் பல்கலை அங்கீகரித்தது. அமெரிக்காவின் ஆங்கில இதழான
டைம் இதழ் ஆங்கில இலக்கியத்தில் ஒரு சாதனை என்று அதை பாராட்டியது,
Pickthall published his English translation of
the Qur'an with the title The
Meaning of the Glorious Koran. The translation was authorized by the Al-Azhar
University and the Times Literary Supplement praised his efforts by writing "noted translator of the
glorious Quran into English language, a great literary achievement."[7]
பிக்தால் தனது அலுவலக முற்றத்தில் நடை பெற்ற ஒரு
காட்சியில் இஸ்லாமின் பால் ஈர்க்கப்பட்டார்.
ஒரு இளைஞனை முதியவர் ஆத்திரப் பட்டு அடித்தார்.
அங்கு ஒரு சண்டை மூளும் என்று நினைத்த பிக்தாலுக்கு ஏமாற்றம். இளைஞன் பொறுமையாக இருந்தான்.
அவனை அணுகி உன்ன இந்தப் பெரியவர் நியாயமின்றி அடித்ததை நான் பார்த்தேன், நீ ஏன் பதிலுக்கு
ஒன்றும் செய்ய வில்லை என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன்
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنَّا مَنْ لَمْ
يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنْ
الْمُنْكَرِ - - ترمذي
என்ற ஹதீஸை சுட்டிக் காட்டி அதனாலேயே தான் பொறுமையாக இருப்பதாக சுட்டிக் காட்டினார்.
பிக்தாலை இஸ்லாத்திற்கு ஈர்த்த நிகழ்வு இது.
இது போல் ஒன்றல்ல,,, பல நூறு நிகழவுகள் உண்டு.
அவை சுட்டி நிற்கிற் கருத்து இது தான் முஸ்லிம்கள் தமக்கு குர் ஆனும் ஹதீஸும் கற்று
தந்த இயல்படி வாழ்ந்தார்கள். உலகம் அவர்களுக்கு பின்னால் வந்தது.
முஸ்லிமுக்கு திருக்குர் ஆன் சொன்ன ஐந்து அடையாளங்களை
சென்ற வாரம் பார்த்தோம், மீதமுள்ளவற்றில் 2 அடையாளங்களை இந்த வாரம் பார்க்கிறோம்.
இந்த உரை மொத்தத்திலும் நீங்களும் நானும் நாபகத்தில்
வைத்துக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா ?
முஸ்லிம் என்பவன் அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்டவனாக
மட்டும் இருக்க கூடாது. இந்த இயல்புகளும் அவனிடம் அடிப்படையாக இருக்க வேண்டும். அப்படி
இருந்தால் மட்டுமே அல்லாஹ்வின் வாக்குறுதிகளுக்கு நாம் சொந்தக்காரராக முடியும்.
நான் ஒரு முஸ்லிமாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிற
இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இதே மற்ற இயல்புகளின் பட்டியல்.
5 ம் இயல்பு பணிவு – அச்சடக்கம்.
وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ
.இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள
خشوع வார்த்தைக்கு கோழைத்தனமான பணிவு என்று அர்த்தமல்ல நிறைவான மரியாதைக்குரிய பணிவு என்று அர்த்தம்.
தப்ஸீர் இப்னு கஸீர் இந்த வசனத்திற்கு சொல்கிற
அர்தத்தை கவனியுங்கள்.
அமைதி, நிதானம், கம்பீரம் பொறுமை பணிவு ஆகும்.
குறிப்பாக கவனிக்க வேண்டியது இந்த் குணங்கள் அத்தனையும் இறையச்சத்தால் ஏற்பட்டிருக்க
வேண்டும்.
الخشوع السكون والطمأنينة والتؤدة والوقار
والتواضع والحامل عليه الخوف من الله تعالى ومراقبته\\
அச்சடக்கம என்ற வார்த்தை ஓரளவு இதன் பொருளை நிறைவேற்றும். அச்சடக்கத்தில் ஒரு கம்பீரமும் நிதானமும் கல்ந்து விடும் என்றால் அதை خشوع என்று சொல்லாலாம்.
முஸ்லிம் ஆணும் பெண்ணும் அச்சடக்கம் உள்ளவர்களாக
இருக்கனும். இளைஞர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டிய
செய்தி இது.
இது தான் முஸ்லிமின் இயல்பு, நீ முஜாஹிதாவோ தாஇ
ஆகவோ ஆலிமாகவோ பணக்காரனாகவோ ஏழையாகவோ, அதிகாரியாகவோ தொழிலாளியாக வோ எப்படி இருந்தாலும்
அல்லாஹ்வின் பயம் நமக்குள் ஒரு அச்சடக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
எந்தக் கட்டத்திலும் அகம்பாவமோ தலைக்கண்மோ அச்சடக்கத்தை
உதறி விடாத நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றால்
முஸ்லிம்கள் உடனடியாக தங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.
இளமை பதவி பணம் இயக்க வெறி ஆகிய குணங்கள் முஸ்லிம்களை அச்சடக்கமற்ற காரியங்களுக்கு
தூண்டி விடுகிறது,
இதில் அதிக எச்சரிக்கை அவசியம் என்பதை மட்டும்
இந்த இடத்தில் நினைவு கூறிகிறேன்.
நான் நிறைய அமல் செயகிறேன். தர்மம் செயகிறேன்.
தர்மம் செய்கிறேன், தொண்டாற்று கிறேன் என எதுவும் அச்சடக்க மீறலுக்கு காரணமாகி விடக்கூடாது.
எல்லாம் இதற்கு கீழே தான் இருக்க வேண்டும்.
இந்தப் பணிவு அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமனது
என்பதை நினைவில் வையுங்கள்.
அல்லாஹ்வின் அச்சத்தை தவிர இந்த மார்க்கத்தில்
பெறுமைக்கும் தகுதிக்கும் வேறு காரணம் எதுவும் இல்லை. என்பதை நாபகத்தில் வைக்க வேண்டும்
.
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
மனிதன் தன்னுடைய பார்வையில் தன்னை சாமாணியனாக கருதிக் கொள்கிற போது அல்லாஹ்விடத்தில்
அவன் உயர்ந்தவனாகிறான்,
இறைவா எனது பார்வையில் என்னை சிறியவனாக் ஆக்க் என பெருமானார் (ஸல்) அவர்கள்
பிரார்த்தனை செய்வார்கள்
அரபியில் இரண்டு வார்த்தைகள் உண்டு تكبر – عجب
இரண்டுக்கும் அர்த்தம் சொல்கிற போது பெறுமை என்று
தான் சொல்வார்கள். இரண்டிற்கும் இடையே சின்ன வித்தியாசம் இருக்கிறது,
தன்னை உயர்வாக நினைப்பதோடு அடுத்தவனை அமுக்குவது
تكبر
தன்னை
மட்டும் உயர்வாக நினைத்துக் கொள்வது, ஆனால் மற்றவர்களை தாழ்வாக நினைப்பதில்லை. அதற்கு
பெயர் عجب
இரண்டுமே
கூடாது. ஒரி முஸ்லிம் தன்னை சாமாணியனாகவே கருதிக் கொள்ள வேண்டும்.
தற்பெருமை
கொண்டவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்ற பெருமானாரின் நபி மொழியை என்றும் மறந்து
விடக்கூடாது.
தற்பெருமையிலிருந்து
தப்பிக்க நமது முன்னோர்கள் அருமையான் ஒரு வழியை கற்றுக் கொடுத்தார்கள்.
تكبر க்கு மருந்து
: சொந்த தவறுகளை பாவங்களை நினைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் வின் முன் நிற்பதை எண்ணிப்பாருங்கள்
அடுத்தவர்களை இழிவாக நினைக்கத் தோன்றாது.
عجب க்கு மருந்து
: நமது எத்தனை குறைகளை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கிறான், அது வெளிப்பட்டால் என்ன ஆகும்
என எண்ணிப்பாருங்கள். عجب காணாமல்
போகும்.
அல்லாஹ் இந்த இரு வகையான குறைகளிலிருநதும் நம்மை
பாதுகாப்பான, அச்சடக்கம் கொண்ட முஸ்லிமாக்குவானாக!
முஸ்லிமின் அடுத்த 6 வது இயல்பி தர்மம் செய்வது.
கட்டாய தர்மத்தை செல்வந்தர்கள் நிறைவேற்றுவார்கள்
உபரியான தர்மத்தை அனைவரும் செய்யனும்,
தர்மத்தை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாக அர்த்தப்படுத்திய
மார்க்கம் நம்முடையது.
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ
أَضْعَافًا كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ(245)
யூதர்களின் புரட்டை அம்பப்படுத்திய வசனம்
உங்கள் இறைவன் ஏழை என்று சொன்ன பாதிரியை அடித்த
அபூப்பக்கர் சித்தீக் ரலி. பெருமானாரின் முன்னிலையில் வழக்கு வந்த போது நான் அவ்வாறு
சொல்லவில்லை என்றான் யூதன். அபூபக்கர் ரலி யை திருப்பி அடிக்க பெருமானார் யூதனுக்கு
அனுமதி கொடுத்த நிலை யில் யூதனின் கூறியது உண்மை என்பதை நிருபிக்கும் வசன் இறங்கியது.
عن ابن عباس قال: دخل أبو بكر الصديق بيت
المدارس فوجد من يهود ناسا كثيرة قد اجتمعوا على رجل منهم يقال له فنحاص وكان من علمائهم
وأحبارهم ومعه حبر يقال له أشيع فقال له أبو بكر: ويحك يا فنحاص اتق الله وأسلم فوالله
إنك لتعلم أن محمدا رسول من عند الله قد جاءكم بالحق من عنده تجدونه مكتوبا عندكم في
التوراة والإنجيل. فقال فنحاص: والله يا أبا بكر ما بنا إلى الله من حاجة من فقر وإنه
إلينا لفقير ما نتضرع إليه كما يتضرع إلينا وإنا عنه لأغنياء ولو كان عنا غنيا ما استقرض
منا كما يزعم صاحبكم ينهاكم عن الربا ويعطينا ولو كان غنيا ما أعطاك الربا فغضب أبو
بكر رضي الله عنه فضرب وجه فنحاص ضربا شديدا وقال: والذي نفسي بيده لولا الذي بيننا
وبينك من العهد لضربت عنقك يا عدو الله فأكذبوك ما استطعتم إن كنتم صادقين. فذهب فنحاص
إلى رسول الله صلى الله عليه وعلى آله وسلم فقال: يا محمد أبصر ما صنع بي صاحبك فقال
رسول الله صلى الله عليه وسلم "ما حملك على ما صنعت يا أبا بكر" فقال: يا
رسول الله إن عدو الله قال قولا عظيما يزعم أن الله فقير وأنهم عنه أغنياء فلما قال
ذلك غضبت لله مما قال فضربت وجهه فجحد فنحاص ذلك وقال: ما قلت ذلك فأنزل الله فيما
قال فنحاص "لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء" الآية.
رواه ابن أبي حاتم
ஒரு சல்லிக்காசாக இருந்தாலும் கடன் கடனே! அது போலவே
ஒரு சல்லிக் காசாக இருந்தாலும் தர்மத்திற்குரிய கூலியை அல்லாஹ் கொடுக்கிறான், அதற்குரிய
கூலியை உறுதிப்படுத்துவதற்காக கடன என அல்லாஹ் கூறீனான் .
மக்கள் கொடுக்கும் தர்மத்தில் அல்லாஹ்வின் மகிழ்ச்சி
அளவிடற்கரியது.
ஒரு தந்தை அவர் வாங்கி வந்த பிஸ்கட் பாக்கெட்டை
குழந்தைக்கு கொடுத்து விட்டு எனக்கு ஒன்னு என்று கேட்க , குழந்தை ஒரு பிஸ்கட்டை எடுத்துக்
கொடுத்தால் அடையும் மகிழ்ச்சி மனிதர்கள் சக மனிதர்களுக்க் கொடுக்கிற போது அல்லாஹ்வுக்கு
ஏற்படுகிறது.
தர்மம் என்றால் காசு பணத்தை கொடுப்பது மட்டும்
தர்மம் அல்ல். தன்னிடமிருப்பதில் பிறருக்கு தேவைப்படுகிற எதை கொடுத்தாலும் அது தர்மமே!.
ஒரு ஊசியை இரவலாக கொடுத்தாலும் . ஒரு ஆறுதல் வார்த்தை
பேசினாலும் ,ஏன் இதயத்தை நெருக்கமாக்கும் ஒரு புன்னைகை கூட தர்மமே!
ஒரு பெண்மணியின் கேள்வி இது –
கரிக்கப்பட்ட ஆட்டுக்கால் ஆனாலும் சரி .. கொடுங்கள்.
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ
عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ وَكَانَتْ مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ
عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ فَقَالَ لَهَا رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ لَمْ تَجِدِي شَيْئًا تُعْطِينَهُ
إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ قَالَ وَفِي الْبَاب
عَنْ عَلِيٍّ وَحُسَيْنِ بْنِ عَلِيٍّ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ قَالَ
أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ بُجَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
பெண்களிடமும் கொடுப்பதற்கு நிறைய இருக்கிறது, நாம்
அவர்களை தூண்ட வேண்டும். வீட்டில் வீணாகிற பொருட்களின் எண்ணிக்கை ஏராளம். பிரிட்ஜை
அசுத்தப்படுத்துவதை தவிர அவை வேறு இலாபம் எதையும் தருவதில்லை.
அவ்வாறு கொடுப்பவர்
سخي வள்ளல் ஆகிறார்.
" السَّخِيُّ قَرِيبٌ مِنَ اللَّهِ ، قَرِيبٌ مِنَ النَّاسِ ،
قَرِيبٌ مِنَ الْجَنَّةِ ، بَعِيدٌ مِنَ النَّارِ
" – ترمذي
சாதாரணமானவற்றை சாதாரணமாக நினைக்காதீர்கள் – கொடுக்கையில்
அது அசாதாரணமாகிறது,
ஹஸன் பஸரீ (ரஹ் அவர்களிடம் ஒரு யாசகர் வந்து யாசகம் கேட்டார். தன்னிடமிருந்த ஒரு திராட்சை பழத்தை கொடுத்தார்கள். இவ்வளவு சாதாரணமானதா? என அவர் கேட்டார். எனது இறைவன் இதைவிடச் சாதாரணமானதை கூட ஏற்று திருப்தி கொள்கிறார்ன் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) சொன்னார்கள்
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَه(7)
நினைவில் வையுங்கள்!
தர்மத்தில் இக்லாஸ் தான் பார்க்கப்படுகிறது அளவோ
கனமோ அல்ல,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَقْبَلُ الصَّدَقَةَ وَيَأْخُذُهَا بِيَمِينِهِ فَيُرَبِّيهَا
لِأَحَدِكُمْ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ مُهْرَهُ حَتَّى إِنَّ اللُّقْمَةَ لَتَصِيرُ
مِثْلَ أُحُدٍ وَتَصْدِيقُ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ أَلَمْ يَعْلَمُوا
أَنَّ اللَّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَ
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ - ترمذي
தர்மம் செய்கிற் ஒரு இடத்தை தவர விடுவோமானால் அல்லாஹ்வின்
லிகாவை தவர விடுகிறோம் என்று பொருள் என்கிறது ஒரு நபி மொழி,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ
يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي قَالَ يَا
رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي
فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي
عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي قَالَ يَا رَبِّ وَكَيْفَ
أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ
عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ
ذَلِكَ عِنْدِي يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي قَالَ يَا رَبِّ
كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ
فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي - مسلم -
தர்மத்தின் பலன்கள ஏராளம் உண்டு, எலலோரும் அறிந்ததே.
நபி மொழிகளில் குறிப்பிடப்படும் சில நன்மைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
தர்மம்
·
இறைவனின் கோபத்தை
தணிக்கிறது.
·
தீய மரணத்திலிருந்து
காக்கிறது.
·
சோதனைகளை தடுக்கிறது
·
கப்ரின் கடுமை சூட்டிலிருந்து
பாதுகாக்கிறது,
·
கியாமத் நாளில் நிழல்
தருகிறது,
·
வாழ்நாளில் பரக்கத்தை
ஏற்படுத்துகிறது,
·
ஏழைகளின் அன்பை பெற்றுத்தருகிறது.
·
அவர்களை அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்த வைக்கிறது
பணிவும் பகிர்வும் இஸ்லாமின்
குணங்கள் என்று சொல்லும் இந்த வசனத்தை நினைவில் நிறுத்துவோம் மற்ற பண்புகளை அறியவும்
செயல்படுத்தவும் அல்லாஹ் கிருபை செய்வானாக
நன்றி.
ReplyDeleteஇறைவன் தந்த வாழ்வை நுகர்ந்து கடக்காமல் அதை மூலதனமாக்கும் தங்களின் முயற்சியை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.
ReplyDelete