வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 13, 2015

நல்ல தலைமைக்காக ஏங்கும் தேசம்.


69 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது.

ஒரு லீவு நாளுக்கான மகிழ்ச்சியோடுதான்  சுதந்திர தினம் நமது நாட்டில் கொண்டாடப்படுகிறது. 

தொலைக்காட்சியில் தங்களது பிடித்த நிகழ்ச்சிகளை டிக் செய்து கொண்டு மக்கள் பிக்ஸாகிவிடுகிறார்கள்.

ஒரு சுதந்திரம் தேசத்தின் குடிமக்களிடம் இருக்க வேண்டிய இயல்பான குதூகலமும் பூரிப்பும் போதிய அளவில் இல்லை என்பதே எதார்த்தம்.

காரணம் நாடு மக்களுக்குரியதாக இல்லாமல். குறிப்பிட்ட ஒரு சிலருக்குரியதாக மாறிவருகிறது.
மக்கள் வாக்களிப்பதற்கு மட்டுமே வந்து போகிற விருந்தாளிகளாக மாற்றப்பட்டு விட்டார்கள்.

சுதந்திரம் இன்று யாருக்கு பயன்படுகிறது? 

பெரும் பண்க்காரர்களுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பயன்படுகிறது.

மக்கள் மேலும் மேலும் சுரண்டப்படுகிறார்கள், ஆங்கிலேய ஆட்சியை விட தற்போதைய மக்களரசுகள் அதிகமாக மக்களை சுரண்டுகிறார்கள்.  செல்வந்தர்களுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் சுதந்திரம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் சேவை வரி உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து செல்போன், ஓட்டல், ஏசி ரயில், விமான கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளன.
ஜுன் 1 ம் தேதியிலிருந்து சேவை வரியை உயர்த்தியதன் மூலம் மக்களின் இரத்ததை சத்தமில்லாமல் உறிஞ்சும் அரக்கணம் மேலும் அரங்கேறியுள்ளது.
சேவை வரி தற்போது 12.36 சதவீதமாக உள்ளது. இது மத்திய பட்ஜெட்டில் 14 சதவீதமாக அதி கரிக்கப்பட்டது.
இதனால் செல்போன், ஏசி ரயில், விமானம், வங்கிச் சேவை, இன்சூரன்ஸ், விளம்பரம், கட்டு மானம், நிகழ்ச்சி மேலாண்மை ஆகிய சேவை களுக்கான கட்டணம் உயர்ந் துள்ளது.
ரயில்களில் குளிர்சாதன வசதி யுள்ள ஏசி சேர் கார், ஏசி முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்புக்கான கட்டணம் அதிகரிக் கிறது. டிக்கெட் கட்டணத்துக்கு ஏற்ப ரூ.1000-க்கு ரூ.16 என்ற வகையில் கட்டண உயர்வு இருக்கும், சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது, சரக்கு கட்டணம் 0.5% சதவீதம் அதிகரிக் கப்படுகிறது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் சேவை வரி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஏசி வசதி கொண்ட உயர்ரக ஓட்டல்களில் இனிமேல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பொழுதுபோக்கு பூங்காக்கள், இன்சூரன்ஸ் பிரிமியம், டி.டி.எச். சேவை, அழகு நிலையங்கள், கூரியர் சேவை, சுற்றுலா பயண டிக்கெட் ஆகியவற்றுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
.
கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்! நமது அத்தியாவசிய தேவை ஒவ்வொன்றுக்கும் நாம் எவ்வளவு அதிகமாக பணம் செலுத்த வேண்டியுள்ளது என்பது தெரிய வரும். நாடு முன்னேறி வருகிறது முன்னேறி வருகிறது என்று சொல்லிக் கொண்டே நமது அரசியல் வாதிகள் சாமாணிய் மக்களை எப்படிச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்?

சாமாணிய மக்களை சுரண்டுகிற அரசு பெருந்தொழில் அதிபர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாய்ப்புக்களையும் வாரிய வழங்கி வருகிறது.

தற்போது மத்தியில் ஆளும் அரசு பெரும் நிறுவனங்களுக்கான அரசாகவே செய்லபடுகிறது என்பதை அப்பட்டமாக மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன.  
மத்திய அரசின் செல்லக் குழந்தையாக இருக்கிற அதானி குழுமமத்தின் அசுர வளர்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் மோடி அரசு உறுதுணையாக இருந்தது. 2002 இல் மோடி, குஜராத் மாநில முதல்வர் பொறுப்பை ஏற்றபோது, அதானி குழுமத்தின் வணிக மதிப்பு 3741 கோடி ரூபாய். 2014 இல் 75,659 கோடி ரூபாய் அளவுக்கு 20 மடங்கு வளர்ச்சி அடைந்தது.

மோடி பிரதமராக பொறுப்புக்கு வந்த பிறகும் அதானி குழுமத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறார் என்பதற்கு மோடியின் ஆஸ்திரேலியா பயணம் உணர்த்தியது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியையும் உடன் அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானி குழுமத்திற்கு வாங்கி தருவதற்கு பிரதமர் மோடி, தாமே முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதுமட்டுமின்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் 6200 கோடி ரூபாய், அதானி குழுமத்திற்கு கடன் வழங்கவும் மோடி அரசு நிர்பந்தம் கொடுத்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன, .
மத்திய அரசு மட்டுமல்ல நம்முடைய மாநில அரசும் கூட அதானி குழுமத்திற்கு பேருதவி புரிகிறது.
"ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 4530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக, குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத்துடன் ஜூலை 4 ஆம் தேதி தமிழக மின்சாரவாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சரம் ஒரு யூனிட், 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்திட, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும்

தமிழ்நாட்டைப் போல, மத்தியப் பிரதேச மாநில அரசும், சூரிய மின்சக்தி திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியதையடுத்து, பல நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளன. ஜூலை 17 ஆம் தேதி இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டபோது, மொரீசியஸ் நாட்டின் ஸ்கை பவர் சௌத் ஈஸ்ட் ஆசியா கோல்டிங் லிமிடெட் நிறுவனம் ஒரு யூனிட் 5 ரூபாய் 5 காசுகள் என்று 25 ஆண்டுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க ஒப்புக்கொண்டது. அதானி குழுமம், 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஒப்பந்தப்புள்ளி அளித்திருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில், சூரிய மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு, ஒரு யூனிட் 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்திட ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ள அதானி குழுமத்திடமிருந்து, தமிழக அரசு 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த திட்டம் அதிர்ச்சியளிக்கிறது என்றாலும் மக்களுக்கு இதைப்பற்றி எல்லாம் சிந்திக்க எந்த வழியும் இருப்பதாக தெரிய வில்லை. மக்களும் சிந்திப்பதாக இல்லை. ஆனால் இந்த மர்ம கூட்டின் சுமை மக்களின் தலையில் தான் ஏறப்போகிறது,

தமிழக அரசு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்திற்கு ஒரு நாளைக்கு 7.76 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு ஆண்டுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் தமிழக மின்சார வாரியம் நட்டத்தை சந்திக்கும் நிலைமை உருவாகும்.

தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே ஏற்பட்டுள்ள 58,000 கோடி ரூபாய் நட்டத்தை ஈடு கட்ட முடியாமல், மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்கள் மீது சுமையை ஏற்றி இருக்கிறது. இந்நிலையில், அதானி குழுமத்திடம் அதிக விலை கொடுத்து சூரிய மின்சாரம் கொள்முதல் செய்வதால் அந்த சுமை மக்கள் மீதே திணீக்கப்படும். அதற்காக ஏற்கெனவே தாயாராக் அரசு விலை உயர்த்து கிறது என்பதைப் போல இல்லாமல் மின்சார ஒழுங்கு வாரியம் தான் உயர்த்து கிறது என்று சொல்வதற்கஆன் திட்ட ம் இயல்பாக போடப்பட்டிருக்கிறது,

அதே போல அரசியல் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, 

நில கையகப்படுத்தும் மசோதா அரசு நினைத்தால் யாருடைய நிலத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பறித்துக் கொள்ள வகை செய்கிறது, இது வும் ஏழைகளுக்கு பாதகமாக அரசு நிலத்தை கையகப்படுத்துவது அரசின் பொதுக்காரியங்களுக்கு மட்டுமல்ல. விமான நிலையம் இரயில்வே திட்டப்பணிகள், சாலைப்பணிகள் மேம்பாலப்பணிகளுக்கு மட்டுமல்ல மக்களிடமிருந்து நிலத்தை குறைந்த விலைக்கு நிலத்தைப் பிடிக்கு தனியார் கம்பெனிகளுக்கு விற்பதற்காக ஓரு ஏஜென்டைப் போல அரசு செயல்படுகிறது,

தில்லியில்  சமீபத்தில் இந்திய நாடு சந்தித்திராத ஒரு மாபெரிய கொடுமையை சந்திதத்தது,  
பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முன்னிலையில் ஒரு விவசாயி இந்தச் சட்டத்தை எதிர்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

முஸ்லிம்கள் விசயத்தில் அரசு மட்டத்திலும் நீதி மன்றங்களிலும் உரிமைகள் பெருமளவில் மறுக்கப்படுகிற துயரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

யாகூப் மேமனை என்ன அவசர கதியில் மத்திய அரசும் மஹராஷ்டிர மாநில அரசும் தூக்கிலிட்டதை அவரசத்தைப் பார்த்து உலகமே விக்கித்து நின்றது. மத்திய அரசும் ஜனாதிபதி மாளிகையும் உயர்நீதி மன்ற நீதிபதிகளின் வீடுகளும் இருட்டிலும் விழித்திருந்து சரண்டரான ஒரு வரை தூக்கிலிட்டன.

இரண்டு வருடங்களில் தூக்கில்டப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக மட்டுமே இருந்தனர். முஸ்லிம்களாக இருப்பதனாலேயே தூக்கிலிடப்படுகிறார்கள் என்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விட்டது.

இன்னொரு பக்கம் 850 ஆபாச இணைய தளங்களை முடக்கியதாக அறிவித்த அரசு அந்த தீர்மாணத்தை அச்சடித்த காகிதங்களின் ஈரம் காய்வதற்குள்ளாக அந்த தடையை வாபஸ் வாங்கியது,

சுதந்திரத்தின் பொருள் விகாரப்பட்டு நிற்கிற இத்தகைய சூழ்நிலையில் நாம் 69 சுதந்திரததை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ் நமது நாட்டின் சுதந்திரத்தை கியாமத் நாள் வரை பாதுகாப்பானக!  நாட்டு மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியருள்வானாக! நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர்களை தந்தருள்வானாக!

இன்றைய நாட்டு மக்களின் கவலை நாட்டுக்கு நல்ல தலைவர்கள் வேண்டும் என்பது தான். மக்களை நேசிக்கிற அனைத்து தரப்பு மக்களையும் நாடு என்ற வகையில் சிந்தித்து முன்னேற்று கிற ஒரு தலைவன் கிடைக்க மாட்டானா என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிது புதிதாக் தலைவர்கள் தோன்றுகிற போது அந்த தலைவர்களில் ஒவ்வொருவரிடமும் நாம் எதிர்பார்க்கிற தலைமைத்துவம் இருக்கிற தா ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறார்கள். அப்படி யாராவது வெளிப்படுகிற போது அமோக ஆதரவு தெரிவிக்கிறார்கள், சீக்கிரமே ஏமாந்து போகிறார்கள்.
சமீபத்தில் அப்துல் கலாம் வபாத்தானார். அவருக்கு மக்கள் செலுத்திய அபாரமான இறுதி மரியாதை நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நோற்றைக்கு முதல் நாள் தமிழகத்தில் சுமார் 500 கிலோ மீட்டருக்கு மேல் கிராமங்களின் வழியாக பயணம் செய்தேன். குக்கிராமங்களில் கூட – இங்கெல்லாம் அப்துல் கலாமின் பெயரை தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கான இடங்களில் கூட அவரது புகைப்படத்தை போட்டு மக்களின் உள்ளத்தில் உதயமான மிகைப்பூச்சில்லாத எதார்த்தமான வார்த்தைகளில் அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள், இதில் ஆச்சரியம் என்ன வென்றால் எந்த அரசியல் – இயக்க பின்புலமும் இல்லாத அவர் மரணித்து 10 நாட்கள் கழித்தும் கூட மக்கள் அவரது பேனரை கழற்ற தயாரக இல்லை என்பதை பார்க்க முடிந்தது,

அப்துல் கலாமின் அறிவியல் சாதனைகளை எல்லாம் விளங்கிக் கொளவதற்கேற்ற எந்த வித வாய்ப்பும் இல்லாத மக்கள் கொடுக்கிற என்ன உணர்த்துகிறது,

மக்களை குறித்துச் சிந்திக்கிற – நாட்டுக்கு நலது செய்ய வேண்டும் என்று நினைக்கிற ஒரு சரியான தலைவனை தேடுகிற  மக்களின் ஏக்கமாகத் தான் இந்த அபிமானத்தை பார்க்க வேண்டும்.
நம் நாடு எத்தகைய் உயர்தரமான தலைவர்களை சந்தித்திருக்கிறது

யாருக்கு சொந்த மாக ஒரு நாடு இல்லையோ அவர்கள் எல்லோருக்கும் இந்தியா தாய் நாடு என்றார் தேசப்பிதா காந்தியடிகள்.

மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு என்று சொல்லி 94 வயதிலும் தாள முடியாத வயிற்று வலியுடன் சிறு நீர்ப் பையை கையில் ஏந்திக் கொண்டு இனத்தின் விடுதலைக்காக பாடுபட்டார் பெரியார்,

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்  நேரு ஆங்கிலேயர்கள் காலத்தில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்,   

ஒரு தடவை முன்று வருட சிறை வாசத்திற்கு ப் பிறகு அலகாபாத்திலுள்ள அனந்தபவனம் என்ற தன்னுடை வீட்டிற்கு வந்த நேருவை வரவேற்றார் துனைவி கமலா நேரு, அப்பொது உள்ளே நுழைந்த ஆங்கில அதிகாரி  anther warrant for u sir  இன்னொரு வாரண்டை காட்டி கைது செய்யப்போவதாக சொன்னார் சரியாக உட்காரக் கூட நேரம் இருக்க வில்லை, நேரு கைதாவதற்கு சம்மதித்து எழுந்தார்,  டீ குடித்து விட்டு போகலாமே என்றனர் குடும்பதனர் அதை மறுத்து விட்டு எழுந்து சிறைக்கூடத்திற்கு சென்றார். நேரு, அடுத்த தண்டனை இரண்டரை வருடங்கள் நீண்டது.
டேராடூன் சிறையிலிருக்கிற போது அவரது மகள் இந்திரா காந்திக்கு முதல் குழந்தையாக ராஜீவ் காந்தி பிறந்த செய்தியை சொன்னார்கள். குழந்தை எப்படி என நேரு விசாரிக்கிறார். நேருவை அலகாபாத் சிறைக்கு கொண்டு செல்லப் போவதாக ஒரு செய்தி இந்திராவுக்கு  கிடைத்தது, சிறைக்குள் செல்கிற வழியில் ஒரு தெருவிளக்கின் வெளிச்சத்தில் நின்று கொண்டு இந்திரா தனது மகனை நேருவுக்கு காட்டினார். நேரு மகளுக்கு கடிதம் எழுதினார். தெரு விலக்கின் வெளிச்சத்தில் கூட ராஜீவ் அழகுதான்.

வெளிநாட்டுத் துணிகளை தவிர்க்க வேண்டும் என்று காந்தி அறிவித்த போது வெளிநாடு துணி இறக்குமதியாகும் பம்பாய் துறை முகத்தில் துணிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிக்கு முன் படுத்துக் கொண்டான் பாபுகான் என்ற இளைஞன், அந்த இளைஞன் மீது லாரியை ஏற்றுமாறு சொன்னான் வெள்ளை அதிகாரி. இந்திய டிரைவர் தயங்கவே தானே வண்டியை கிளப்பி பாபுகான் மீது லாரியை ஏற்றிக் கொன்றான் வெள்ளை அதிகாரி.

பிற்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர  பிரசாத் ஒரு முறை காந்தியை தமது ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார். மேடையில் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்ததை பார்த்த காந்தி மேடை மீது ஏற மறுத்துவிட்டார்.  இதற்காக வசூலிக்கப்பட்ட தொகையை மக்களிடம் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே மேடை ஏற முடியும் என்று சொல்லிவிட்டார்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது பட்டம் பெறுவதற்கு இரண்டு மாதங்களே இருந்த நிலையில் கல்லூரிப்படிப்பை கைவிட்டார்.. பின்னர் தன்னுடைய் அயராத சமூகப்பணிகளால் மாபெரும் செல்வாக்குப் படைத்த அவர் 1962 ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் காயிதே மில்லத இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு நடக்கிற நிகழ்வுவோடு அன்றைய மாபெரும் தலைவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்தால் இரத்தக் கண்ணீர் வந்து விடும்.

முன் மாதிரியாக கொள்ளத் தகுந்த ஒரு வழிகாட்டியின் தலைமை இல்லாமல் இந்திய சுதந்திரம் இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அறிஞர்கள் சொல்வார்கள்
ஒரு முன்னுதாரனம் மிக்க மனிதர் 10 பாகங்களில் எழுதப்படும் புத்தகங்களை விட அதிய பயனுள்ளவர் ஆவார். ஏனெனில் உயிருள்ளவர்கள் உயிருள்ள முன்மாதிரிகளையே ஏற்றூக் கொள்வார்கள்.
 ويقول بعض المفكرين : إن مثلاً واحداً أنفع للناس من عشرات المجلدات ، لأن الأحياء لا يصدقون إلا المثل الحي ،
அதனால் தான் திருக்குர் ஆன் நபிமார்களை பற்றி சொல்கிற போது அவர்களை முன்மாதிரிகள் என்று சொல்கிறது.
لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ... ) [ الممتحنة : 4-6 )

ஏமன் நாட்டு அரசர் பெருமானாரைச் சந்தித்த கனம் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
ملك عمان التقى النبي صلى الله عليه وسلم ، وقال كلمة دقيقة بالغة الدقة قال : والله ما دلني على هذا النبي الأمي ، إلا أنه لا يأمر بخير إلا كان أول آخذ به ، ولا ينهى عن شيء إلا كان أول تارك له

இந்த நபியை நான் அறிந்து கொண்டது. அவர் எதை கட்டளையிடுகிறாறோ அதை முதலில் அவர் கடை பிடிக்கிறார். எதை தடுக்கிறாறோ அதை விட்டு அவர் விலகிக் கொள்கிறார்.
உமர் ரலி அவர்கள் மக்களுக்கு ஒரு உத்தரவிடுவார் எனில் முதலில் தமது குடும்பத்தாரையும் நெருக்கமானவர்களையும் அழைத்து எச்சரிப்பார்.
“நான் மக்களுக்கு இன்ன கட்டளையை சொல்லி இருக்கிறேன். இன்ன விசயத்தை தடுத்திருக்ககிறேன். மக்கள் பறவைகளைப் போன்றவர்கள், நீங்கள் இறங்கினீர்கள் என்றால் அவர்களும் இறங்கி விடுவார்கள். இறைவன் மீதானையாக நான் தடுத்த ஒன்றை நீங்கள் செய்து விட்டால் என்னுடைய நெருக்கம் காரணமாக உங்களுக்கு இரு மடங்கு தண்டனை தரப்படும். என்பார் உமர்.

سيدنا عمر بن الخطاب عملاق الإسلام ، كان قدوة صالحة لأتباعه في عصره ، فكان إذا أراد إنفاذ أمر ، جمع أهله وخاصته وقال: إني قد أمرت الناس بكذا ، ونهيتهم عن كذا ، والناس كالطير إن رأوكم وقعتم وقعوا ، وايم الله لا أوتين بواحد ، وقع فيما نهيت الناس عنه، إلا ضاعفت له العقوبة لمكانته مني ! .

ஒரு முறை ஒரு கொழுத்த ஒட்டகை உமர் ரலி கடந்து சென்றது. அது அவரது மகனுக்கு உரியது. அதை விற்று தன்னுடைய முதலை மட்டும் எடுத்துக் கொண்டு அதிகப்படியானதை கஜானாவில் சேர்க்க உமர் உத்தரவிட்டார்.
 مرةً رأى هذا الخليفة الراشد إبلاً سمينة ، قال لمن هذه الإبل قالوا هي لعبد الله بن عمر ، ابنك ، قال ائتوني به ، فلما جيء بعبد الله بن عمر ، رأى أباه غاضباً ‍‍‍‍‍، قال لمن هذه الإبل يا بني ، قال هي لي ، اشتريتها بمالي ، وبعثت بها إلى المرعى لتسمن ، فماذا صنعت فقال رضي الله عنه قولته الشهيرة ، ويقول الناس ارعوا هذه الإبل فهي لأبن أمير المؤمنين ، اسقوا هذه الإبل فهي لأبن أمير المؤمنين وهكذا تسمن إبلك يا ابن أمير المؤمنين ، هل عرفت لماذا هي سمينة بع هذه الإبل ، وخذ رأس مالك ، ورد الباقي لبيت مال المسلمين 

ஒரு முறை உமர் ரலி அவர்களுக்கு ஆஜர் பைஜானின் ஆளுநர் மதிப்புமிக்க ஒரு திண்பண்டத்தை அனுப்பி வைத்தார். ஏழைகள் சாப்பிடாத உணவைச் சுவைப்பது உமரின் வயிற்றுக்கு தகாது என்றார்கள் உமர்.
جاءته هدية من أذربيجان ، من واليه على أذربيجان ، فلما فتحها وجدها طعاماً نفيساً ، قال يا هذا ، أيأكل عندكم عامة المسلمين من هذا الطعام ؟ قال لا : إنه طعام الخاصة ، فكتب إلى واليه على أذربيجان ، كيف يعنيك شئن المسلمين إن لم تأكل مما يأكلون ، وقال حرام على بطن عمر أن يذوق طعاماً لا يطعمه فقراء المسلمين ، ثم أمر بالهدية فوزعت على فقراء المسلمين في المسجد النبوي الشريف

என்ன ஆச்சரியம் ? எத்தகைய அற்புதமான வாழ்க்கை ? இத்தகையோர் தான் வரலாற்றில் வாழ்வாங்கு வாழ்கிறார்கள்.
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாருங்கள்!
குற்றவாளி என அறிவிக்கப்பட்டு வெளிநாட்டில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவருக்காக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் இங்கிலாந்தில் சிபாரிசு வேலை செய்கிறார். அவருடை மகள் குற்றவாளிக்காக வாதிடுகிற வக்கீல்களின் குழுவில் இருக்கிறார்.
ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் இப்படி இப்படிச் செய்யவில்லையா எதிர்க்கட்சியினரை  திருப்பிக் கேட்கிறார்   முன்னாள் ஆட்சியாளர்கள் வாய் பொத்திக் கொள்கிறார்கள்
நாடு இத்தகைய மனிதர்களிடம் சிக்கியிருக்கிறது,  மக்கள் ஒரு நல்ல தலைமைக்காக தவமிருக்கிறார்கள்.
சிறந்த அறிவும் ஆற்றலும் வாய்ந்த தலைமை என்பது அல்லாஹ் தேர்ந்தெடுத்துத் தருகிற பாக்கியம்.
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنْ الْمَالِ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ(247)

யா அல்லாஹ்! எங்களது இந்த தேசத்தின் சுதந்திரத்தை சரியாகப் பராமரிப்பதற்கேற்ற அறிவும் ஆற்றலும் மிக்க தலைவர்களை எங்களுக்குத் தந்தருள் வாயாக!

என அல்லாஹ்வை பிரார்த்திப்போம்/

நம்மில் ஒவ்வொருவரும் நாம் சார்ந்த இடங்களில் – வீட்டில் – மஹல்லாவில்- பொதுச் சமூகத்தில் முன்னுதாரணமானவர்களாக வாழ 
முயற்சி செய்வோம்/

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

من سن في الإسلام سنة حسنة ، فله أجرها ، وأجر من عمل بها من بعده ، من غير أن ينقص من أجورهم شيء ، ومن سن في الإسلام سنة سيئة ، كان عليه وزرها ووزر من عمل بها من بعده ، من غير أن ينقص من أوزارهم شيء

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.




No comments:

Post a Comment