வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 20, 2015

ஹதீஸ்! கவனம்!!


முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதருக்கு முன்னாள் முற்றிலுமாக பணிந்து நிற்க வேண்டும். நாவடக்கிப் பேச வேண்டும், ஹதீசின் உத்தரவுகளுக்கு - அது தங்களது சொந்த விசயத்தினாலும் கட்டுப்பட வேண்டும். என அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்
.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ(2)
அவ்வாறு செய்யத் தவறினால் அமல்கள் வீணாகிவிடும் என்று எச்சரிக்கவும் செய்துள்ளான்.

எங்கே திரும்பச் சொல்லுங்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்குமளவு உமர் ரலி பெருமானாருக்கு முன் மெதுவாக பேசுவார் என இப்னு ஜுபைர் ரலி கூறுகிறார்.

قال ابن الزبير رضي الله عنهما فما كان عمر رضي الله عنه يسمع رسول الله صلى الله عليه وسلم بعد هذه الآية حتى يستفهمه

இவ்வசனம் இறங்கிய பின் உயர்ந்த குரலுடைய சாபித் ரலி பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிட்டார்.

وكان ثابت بن قيس بن الشماس رفيع الصوت فقال أنا الذي كنت أرفع صوتي على رسول الله صلى الله عليه وسلم أنا من أهل النار حبط عملي وجلس في أهله حزينا ففقده رسول الله صلى الله عليه وسلم فانطلق بعض القوم إليه فقالوا له تفقدك رسول الله صلى الله عليه وسلم مالك؟ قال أنا الذي أرفع صوتي فوق صوت النبي صلى الله عليه وسلم وأجهر له بالقول حبط عملي أنا من أهل النار فأتوا النبي صلى الله عليه وسلم فأخبروه بما قال فقال النبي صلى الله عليه وسلم "لا بل هو من أهل الجنة"

இப்போதும் இந்தச் சட்டம் தொடர்கிறது. பெருமானார் (ஸல்) அவர்களின் புனித ரவ்லாவில் சப்தமிடக்கூடாது. ஹாபிழ் இப்னு கஸீர் சொல்கிறார்.
وقال العلماء يكره رفع الصوت عند قبره صلى الله عليه وسلم كما كان يكره في حياته عليه الصلاة والسلام لأنه محترم حيا وفي قبره صلى الله عليه وسلم دائما
மஸ்ஜிதுன்னப்வில் குரல் உயர்த்திய்ப் பேசிய இருவரை எச்சரித்த உமர் ரலி

عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه أنه سمع صوت رجلين في مسجد النبي صلى الله عليه وسلم قد ارتفعت أصواتهما فجاء فقال أتدريان أين أنتما؟ ثم قال من أين أنتما؟ قالا من أهل الطائف فقال لو كنتما من أهل المدينة لأوجعتكما ضربا
பெருமானாருக்கு முன்னிலையில் நாவடக்கம் வேண்டும் என்பது போலவே பெருமானாரின் ஹதீஸுகளுக்கு முன்னிலையிலும் நாவடக்கம் வேண்டும்.

ஒரு ஹதீஸ் ஒரு செய்தி சொல்லுமெனில் அதை நம்புவது  தாழ்பணிவது  ஒவ்வொரு முஃமினுடைய கடமை. ஏனெனில் பெருமானாருக்கு கட்டுப்படுவதென்பது அவர்களுடை ஹதீஸ்களுக்கு  செவி சாய்பபதன்  மூலமே சாத்தியமாகும்.  

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَدْرَكَ مِنْ الصَّلَاةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ

ஜமாத் தொழுகையில் ஒரு ரக அத் கிடைத்து விட்டாலும் ஜமாத் கிடைத்தாகிவிடும் என்று பெருமானார் (ஸல்) சொன்னார்கள். அதை ஏற்றுக் கொள்வது முஸ்லிம்களின் கடமை.


சொந்த வாழ்க்கை குறித்து ஹதீஸ் ஒரு செய்தி சொல்லும் என்றால் அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا(36) (الأحزاب:

ஒரு செந்த விவகாரம் தான் இந்த வசனத்தின் பின்னணிக் காரணமாக அமைந்தது.

عن آبن عباس رضي الله عنهما قوله تعالى "وما كان لمؤمن ولا مؤمنة "الآية وذلك أن رسول الله صلى الله عليه وسلم انطلق ليخطب على فتاه زيد بن حارثه رضي الله عنه فدخل على زينب بنت جحش الأسدية رضي الله عنها فخطبها فقالت لست بناكحته فقال رسول الله صلى الله عليه وسلم بلى فانكحيه قالت يا رسول الله أؤمر في نفسي؟ فبينما هما يتحدثان أنزل الله هذه الآية على رسول الله صلى الله عليه وسلم "وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله "الآية قالت قد رضيته لي يا رسول الله منكحا قال رسول الله صلى الله عليه وسلم نعم قالت إذا لا أعصي رسول الله صلى الله عليه وسلم قد أنكحته نفسي


ஹதீஸ்களுக்கு கட்டுப்படாவிட்டால் அமல்கள் பாத்திலாகிவிடும்.

يـا أيـها الذين آمـنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم} (محمد: 33)

எது பெருமானாரோடு உண்மையான முறையில் இணைத்துச் சொல்லப்பட்டதோ அதுவெல்லாம் ஹதீஸ்கள்,

 الحديث : ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول، أو فعل أو تقرير، أو وصف خِلقي أوخُلُقي.

ஹதீஸ்கள் விசயத்தில் சமூகத்தில் சிலர் ஆபத்தான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்,

சமுதாயம் எச்சரிக்கை அடைய வேண்டும்
ஹதீஸில் கை வைப்பது பெருமானாரில் கை வைப்பதாகும்

ஹதீஸில் பொய் புகுந்து விடக் கூடாது என்பதில் முஹம்மது ரஸூல் (ஸல்) அவரகள் மிகக் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார்கள், தன் விசயத்தில் உண்மைய அல்லாத எதையும் பேசுபவனுக்கு நரகம் தான் என்றார்கள்.

عن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلممن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. 


தன்னைக் குறித்து மிகையாக புகழ்வதையும் எழுதுவதையும் வரவேற்கவும் வாழ்த்தவும் செய்த தலைவர்களைத் தான் உலகம் சந்தித்திருக்கிறது. அவ்வாறு பொய்யாகப் புகழ்வோருக்கு பொன்னும் மணியும் வாரிக் கொடுத்திருக்கிறார்கள் மன்னர்களும் தலைவர்களும். இப்போதும் கூட உண்மைய எல்லாத புகழுரைகள் தன்னைப் பற்றி பரப்புவதற்காகவே தலைவர்கள் தம்மோடு ஒரு கூட்டத்தை வைத்திருக்கிறார்கள்.

அனால் தான் சம்பந்தப்பட்ட செய்திகளில் தனக்கு சார்பாகவே இருந்தாலும் கூட பொய்யுக்கு அதில் துளியும் இடமில்லை என இந்த அளவு எச்சரிக்கை செய்த தலைவர் உலக வரலாற்றில் வேறெவரும் இல்லை.

அதனால் பெருமானார் (ஸல்) அவர்கள் விசயத்தில் முஸ்லிம் உம்மத் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட்டது.

பிற்காலத்தில் அவ்வாறு சில செய்திகள் பெருமானார் (ஸல்) அவர்கள் விசயத்தில் புகுத்தப்பட்டது,

அவை பெருமானாரைப் புகழ்பவைகளாக , அற்புதமான தத்துவங்களாக , பிரமிப்பூட்டும் சிந்தனைகளாக இருந்த போதும் “ இது பெருமானார் சொன்னது அல்ல என ஆய்வு செய்து திட்டவட்டமாக அறிவித்தார்கள் முஸ்லி ம் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள், அவ்வாற பொய்யாக புனையப்படவைகளுக்கு மவ்ளூகள் என்று பெயர்,

எது மவ்ளூஃ என்று துல்லியமாக ஆராய்ந்து அவை பிரித்தறியப்பட்டு விட்டன,
இன்றல்ல, நேற்றல்ல. மவ்ளூ ஆன் செய்திகள் பரப்பட்ட காலத்திலேயே இது பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு தரப்பட்டது.
ஹிஜ்ரி 500 களில் பல நூல்கள் வெளியிடப்பட்டன

تذكرة الموضوعات :
ألَّف الحافظ محمد بن طاهر المقدسي المتوفى سنة (507 هـ) كتاباً سمَّاه: " تذكرة الموضوعات "، ورتَّب أحاديثه بحسب أوائلها على حروف المعجم ، وهو كتاب مختصر بالنسبة إلى ما سواه .

كتاب الأباطيل " الموضوعات من الأحاديث المرفوعات " :
ألَّف الإمام أبو عبد الله الحسين بن إبراهيم الجوزقاني المتوفى سنة (543 هـ) كتاب: " الموضوعات من الأحاديث المرفوعات "، ويقال له أيضاً: كتاب الأباطيل .

الموضوعات :
ألف الإمام أبو الفرج عبد الرحمن بن الجوزي المتوفى سنة (597 هـ) كتاب " الموضوعات "، وهو أوسع الكتب المؤلفة في بابه ، وأيسرها منالاً لسهولة تبويبه وطريقة الاستخراج منه .

المغُنْيِ عن الحفظ والكتاب ، بقولهم : لم يَصحَّ شيء في هذا الباب :
ألف الحافظ ضياء الدين أبو حفص عمر بن بدر الموصلي المتوفى سنة (622 هـ) جزأه المسمى: " المغُنْيِ عن الحفظ والكتاب بقولهم : لم يَصحَّ شيء في هذا الباب "، لخَّص به كتاب الإمام ابن الجوزي ، فما أحسن .
المنار المنيف في الصحيح والضعيف :
قام الحافظ العلامة الإمام أبو عبد الله محمد بن أبي بكر المعروف بابن قيم الجوزية، المتوفى سنة (751 هـ) بتأليف كتابه: " المنار المنيف في الصحيح والضعيف "، لخص به الموضوعات لابن الجوزي تلخيصاً حسناً ، وقعَّد لها قواعد وضوابط ، فجاء الكتاب على صغره ولطافة حجمه جامعاً مفيداً متميِّزاً ، كسائر كتب ابن القيم رحمه الله تعالى .

وهذا الكتاب من خير ما أُلِّف في الموضوعات ومن أجمعها علماً ، وأصغرها حجماً وأحكمها ضوابط لمعرفة الحديث دون أن يُنْظَر في سنده ، وهو يتضمن خمسين فصلاً ، يبدأ الفصل الأول فيه بإيراد أربعة أسئلة وجهت للمؤلف فجاء الرد عليها في الفصول الثلاثة التالية ، وفي الفصل الخامس سئل المؤلف عن إمكانية معرفة الحديث الموضوع بضابط دون أن ينظر في سنده ، فكان الرد مفتتح الفصل السادس ، حيث نبه المؤلف إلى أمور كلية وأمارات يعرف بها الحديث الموضوع . ثم عرض تلك الأمارات عرضاً استغرق جل الكتاب مع التمثيل لكل أمارة بعدد من الأحاديث الموضوعة حتى استوفى نهاية الفصل التاسع والأربعين ، والفصل الأخير : حول المهدي المنتظر وما ورد فيه من الأحاديث ، ومن هو المهدي المعني بها .

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அந்த மவ்ளூஃ ஆன வை மட்டுமே
தள்ளப்பட  வேண்டியவை, உண்மையில் அவை ஹதீஸ்களே அல்ல.

இதைத் தவிர உள்ள ஹதீஸ்கள் அனைத்திற்கு முன்னாலும் நாவடக்கம் காட்ட வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் கடமையாகும்.
ஸஹீஹானது லயீபானது என ஹதீஸ்களை அறீஞர்கள் – சட்ட அறிஞர்கள் பயன்படுத்தும் கலைச் சொற்களை சாமாணிய மக்கள் தங்களது பாஷையில் பலமானது பலவீனமானது என நினைத்துக் கொள்வதும், ஸஹீஹானது மட்டுமே ஏற்கப்பட வேண்டியது லயீபானவை தள்ளப்பட வேண்டியது என்று நினைப்பதும் மிகப்பெரிய தவறாகும்.
ஸஹீஹ் லயீபின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ளாத பாமரத்தனமே இதற்கு காரணமாகும்.

மோட்டார் வாகண வழக்கத்தில் ஹெவி வெகிகிள் கணரக வாகணம். லைட்வைட் வெகிகிள் இலகு ரக வாகணம் என்ற இரு சொற்கள் உண்டு, அதற்கு அந்த துறை சாந்த பொருள் தனியாக உண்டு, அதை சாமாணிய மக்கள் வழக்கில் அர்த்தப்படுத்தினால் மோட்டார் சைக்கிள் கூட கணரக வாகணங்களின் வரிசையில் வந்து விடுமல்லவா அது போலத் தான் ஹதீஸ்களை அறிஞர்கள் சரியானது, பலவீனமானது என்ற வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட அர்தத்தை தருகிற துறை சார்ந்த சொற்களாகும் அதை சாமாணிய சொற்களாக அர்த்தப்படுத்திக் கொள்ள லாகாது.

ஒரு கருத்ததை நிறுவதற்கு ஸஹீஹான ஹதீஸ் முன் வைக்கப்படுகிற இடத்தில் அதற்கு எதிரான கருத்தை நிரூபிக்க லயீபான ஹதீஸைக் காட்ட முடியாது என்பதே ஸஹீஹ் லயீபுக்கான தர வித்தியாசமாகும்.

இதை தவிர லயீபான ஹதீஸ்களும் ஏற்கத்தகுந்தவைகளேயாகும்.

லயீபான ஹதீஸ்கள் தள்ளப்பட வேண்டியவை என்றால் அத்ற்கும் மவ்ளூவிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமே! – வித்தியாசம் இல்லை என்றால் லயீபயும் மவ்ளூவின் பட்டியலிலேயே சேர்த்து விடலாமே என்ற மிக எதார்த்தமான கேள்வியை மக்கள் கவனமாக எண்ணிப்பார்க்க வேண்டும்.

லயீபான ஹதீஸ்கள் சில நிபந்தனைகளின் படி ஸஹீஹின் தரத்தை அடையும் என்பதை அனைத்த் அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்,

அதே நேரத்தில் லயீபான ஹதீஸ்களை அதே நிலையிலே ஏற்றுக் கொள்ளத் தக்கது தான் ( القبول مطلقا ) என்பது இமாம் மாலிக் ,இமாம் அபூஹனீபா ரஹ் ஆகியோருடைய கருத்தாகும். இமாம் அஹ்மது ரஹ் அவர்களின் ஒரு கருத்தும் இதற்குச் சார்பாகவே இருக்கிறது,
இமாம் நவவி அவர்கள் ஷரஹுல் முஹத்தபில் பெரும்பாலான சட்ட அறிஞர்களின் கருத்து இது தான் என எழுதுகிறார்.
وهذا القول هو مذهب الإمام أبي حنيفة، وهو رواية عن الإمام أحمد، وقد حكاه النووي في شرح المهذب عن كثير من الفقهاء أو أكثرهم

சட்ட வல்லுனர்கள், ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் லயீபான ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையே என கூறிவிட்ட பிறகு, இது விசயத்தில் போதிய தெளிவும் விபரமும் இல்லாமல், ஹதீஸ் லயீபா வேண்டாம் ! அதை வெளியே தள்ளு என்று சொல்லுகிறவர்கள் பெருமானாருக்கு எதிராக நாவடக்கம் பேணாமல் நடந்து கொள்கிறார்கள் என்றே பொருளாகும்.

ல்யீபான ஹதீஸ்கள் அங்கீகரிக்கப்பட்டு பய்னபாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு,

திர்மிதியில் ஒரு ஹதீஸ் வருகிறது.

عَنْ حَنَشٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ جَمَعَ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ فَقَدْ أَتَى بَابًا مِنْ أَبْوَابِ الْكَبَائِرِ قَالَ أَبُو عِيسَى وَحَنَشٌ هَذَا هُوَ أَبُو عَلِيٍّ الرَّحَبِيُّ وَهُوَ حُسَيْنُ بْنُ قَيْسٍ وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ أَحْمَدُ وَغَيْرُهُ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ

கன்ஸு லயீபானவராக இருந்தும் அறிஞர்கள் இதன் படியே செயல்படுகிறார்கள் என்கிறார் இமாம் துர்மிதி .

இன்னொரு முக்கியமான செய்தி இருக்கிறது,

திருக்குர் ஆனின் ஒரு வசனத்தின் விளக்கத்தை லயீபான ஒரு ஹதீஸ் தீர்மாணிக்கிறது,

சொத்து பிரிவினை பற்றிய திருக்குர் ஆனின் நீண்ட வசனத்தின் இறுதியில்

என்று அல்லாஹ் சொல்கிறான்.
இதில் வஸிய்யத் முதலாவதாகவும் கடன் இரண்டாவதாகவும் இடம் பெற்றுள்ளது. ஆனால் சட்ட ரீதியாக கடனுக்கு வஸிய்யத்தை விட முன்னுரிமை தரப்படுகிறது. இதுவும் ஒரு லயீபான ஹதீஸின் அடிப்படையிலேயே!

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي إِسْحَقَ الْهَمْدَانِيِّ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ وَأَنْتُمْ تُقِرُّونَ الْوَصِيَّةَ قَبْلَ الدَّيْنِ قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يُبْدَأُ بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ

இதே நபி மொழி புகாரியில் கிதாபுல் வஸாயாவில் இடம் பெறுகிறது. புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜருல் அஸ்கலானி (ரஹ்) எழுதுகிறார். இதன் படியே செயல்பாடு நடக்கிறது என திரிமிதி கூறுகிறார், இத ன் அறிவிப்பாளர் தொடர் லயீபானதாகும்.  ஆதாரங்களை முன்னெடுத்துச் செல்லுகிற இடங்களில் இத்தகைய லயீபுகளை குறிப்பிடுவது இமாம் புகாரியின் வழக்கமல்ல. எனினும் மக்கள் பெருவாரியாக இந்தக் கருத்தில் ஒன்று பட்டிருருப்பதை பற்றி இந்நபி மொழி மீது இமாம் புகாரி உறுதி கொண்டிருக்கிறார்,
قال ابن حجر في الفتح: إسناده ضعيف لكن قال الترمذي إن العمل عليه عند أهل العلم، وكأن البخاري اعتمد عليه لاعتضاده بالاتفاق على مقتضاه وإلا فلم تجر عادته أن يورد الضعيف في مقام الإحتجاج به

முகத்திமத்து இப்னுஸ் ஸலாஹ் என்பது ஹதீஸ் கலையில் புகழ்பெற்ற ஒரு நூல் அதற்குரிய விரிவுரையா நிகத் என்ற் நூலில் இமாம் சர்கஸி கூறுகிறார்.
லயீபான ஹதீஸை மக்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் எனில் அது ஸஹீஹின் தரமுடையதாகிவிடும். அதை வைத்து உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றை மாற்ற முடியும். வாரிசுக்கு வசிய்யத் கிடையாது எனும் ஹதீஸ் லயீபாக இருந்தாலும் மக்களை அதையே ஏற்றுக் கொண்டுள்ளனர், அதை வைத்து வாரிசுக்கு உயில் எழுதும் கருத்துடைய திருக்குர் ஆன் வசனத்தின் சட்டத்தை மாற்றியுள்ளனர்.

وقال الزركشي في النكت على مقدمة ابن الصلاح(: الحديث الضعيف إذا تلقته الأمة بالقبول عمل به على الصحيح حتى إنه ينزل منزلة المتواتر في أنه ينسخ المقطوع ولهذا قال الشافعي في حديث( لا وصية لوارث) إنه لا يثبته أهل الحديث ولكن العامة تلقته بالقبول وعملوا به حتى جعلوه ناسخاً لآية الوصية للوارث.اهـ
நவீன குழப்பவாதிகளின் குருவாக கருதப்படுகிற அல்பானி கூட அவரது லயீப் ஹதீஸ் தொகுப்பில் ஒரு செய்தி சொல்கிறார்

وقال الألباني في الضعيفة حديث (لا تعجلوا بالبلية قبل نزولها) الحديث وإن كان ضعيف الإسناد فالعمل عليه عند السلف.اهـ


எனவே லயீபான ஹதீஸ் என்பதை விளையாட்டுத் தனமாக பயன்படுத்தி விடக் கூடாது.
அதே போல அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற வார்த்தையை கேட்ட வுடன் ஏதே இன்றையை  அமைப்புக்களின் பெறுப்பாளர்களைப் போல அயோக்கியர்களாக இருப்பார்களோ நவூதுபில்லாஹ்) நினைத்து விடக்கூடாது.

ஹதீஸ் துறையில் ஈடுபட்டவர்கள் தமது மனன சக்தியை பாதுகாத்து வைத்திருப்பதில் எந்த அளவு ஈடுபாடு காட்டினார்கள் என்பதற்கு ஷைகுத் தப்ஸீர் சித்தையன் கோட்டை கமாலுத்தீன் ஹஜ்ரத் (ரஹ்) அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார்கள்.
இமாம் திர்மிதியின் இறுதி காலத்தில் அவர்களது பார்வை போய்விட்டது, ஒரு உதவியாளரின் துணையோடு ஒரு ஊருக்குப் போய் கொண்டிருந்தார். பாதையில் நடந்து சென்றவர் ஓரிடத்தில் கொஞ்சம் ஒதுங்கி நடந்தார், ஏன் ஒதுங்கி நடக்கிறீர் என உதவியாளர் கேட்ட போது இங்கே ஒரு மரம் இருந்ததே என இமாம் பதிலளித்தார். இல்லையே என்றார் உதவியாளர். அப்படியானால் இனிமேல் நான் ஹதீஸை அறிவிக்க மாட்டேன் என அறிவித்தார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது நெடுங்காலமாக அங்கு ஒரு மரம் இருந்தது எனவும் சமீபத்தில் அடித்த புயலில் அது விழுந்து விட்டது.  என்றும் தெரிவித்தனர். அதன் பின்னரே இமாம் திர்மிதி ஹதீஸ்களை அறிவித்தார்.

ஹதீஸை சுமந்த மகத்தான் பணியில் ஈடுபட்டோரை எந்த வகையிலும் இழிவாக நினைப்பது ஈமானுடையவர்களுக்கு அழகல்ல. மார்க்கத்திற்காக மகத்தான பங்களிப்பைச் செய்தவர்கள் அவர்கள்.

ஹதீஸை அறிவிக்கும் போது முன்னர் இருந்த நாபக சக்தி பின்னர் தவறும் எனில் ஹதீஸை அறிவிக்கையில் தடுமாற்றம் ஏற்படும் எனில் அறிவிப்பாளர்  அவர் பலவீனமானவராக கருதப்படுவார்.

இமாம் புகாரியை பரிசோதிக்க அவர் பக்தாதுக்கு வந்த போது அவரிடம் நூறு ஹதீஸ்களை அறிவிப்பாளர்களின் தொடர்களை குழப்பி குழப்பி  - மாற்றி வைத்து அவரிடம் முன்வைத்தனர். அவற்றை ஒவ்வொன்றாக விளக்கிய இமாம புகாரி அவர்கள் இந்த் ஹதீஸ் இப்படி இல்லை, இப்படித்தான் இருக்கிறது என அதன் சரியான அறிவிப்பாளர் தொடரைச் சொன்னார்கள்.

இவை ஹதீஸ் துறை அறீஞர்களின் மகத்தான மனன சக்திக்கான சாட்சிகள்.
இத்தகைய நாபக சக்தியில் ஒரு குறை ஏற்படும் எனில் அவரை லயீபானவர் என்று அத்துறை சார்ந்தவர்கள் குறிப்பிடுகிற போது அதை அகராதிப் பொருளில் அர்த்தப்படுத்திக் கொள்வது அறிவுடமையாகாது என்பதை நாம் அழுத்தமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே ஹதீஸ் என நமக்கு சொல்லப்படுகிற அனைத்திற்கு முன்னாளும்  நாவடக்கத்தையும் பணிவையும் கடைபிடிக்க வேண்டியது நமது கடமையாகும்.

இந்த எச்சரிக்கை இப்போது ஏன் நான் பேசுகிறோம் என்றால்

இன்று தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயம் போலி தவ்ஹீதிய அமைப்புக்கள் செய்கிற பித்தலாட்டப் பிரச்சாரத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

கவர்ச்சிகரமான வார்த்தைகளில் பெரிய விசயங்களை சாமாணிய உணர்வோடு எடுத்து அவர்கள் பேசுகிற போது தகுதியில்லாவிட்டாலும் இஸ்லாமிய பெயர் சூடியிருக்கிற காரணத்தால் அதைப் பற்றி பேசுவதற்கான நியாயம் தம்மிடம் இருப்பதாக பலரும் நினைத்துக் கொள்கிறார்கள்.

அதனால் சலூனில் டீ கடையில் தெரு முனையில் போதிய பக்குவமற்ற வாதங்களில் மக்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

இந்தச் சூழலில் இப்போது போலி தவ்ஹீதிய அமைப்புக்கள், அதிலும் குறிப்பாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிய அமைப்பான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஸஹீஹான ஹதிஸ்களையே நிராகரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்குப் பிறகும் அதன் அபிமானிகளாக சிலர் இருக்கிறார்கள் என்பதுதான் தஜ்ஜாலின் வருகைக்கு ஒத்த அச்சத்திற்குரிய செய்தியாகும். இது எங்கு போய் நிற்கும்.

தமது சுய கருத்துக்கும் சிந்தனைக்கும் ஒத்து வராததை ஹதிஸ் என்று ஏற்க முடியாது என்கிறார்கள்>  தம்மால் விளங்கிக் கொள்ள முடியாததை குர் ஆனுக்கு இது முரண்படுகிறது என்று சொல்லி நிராகரிக்கிறார்கள்.

இதுவரை பல நூறு ஹதிஸ்களை அவர்கள் நிராகரித்து விட்டார்கள்/  

இந்தப் போக்கு எதில் போய் நிற்கும் என்றால்? விரைவில் குர் ஆனில் சிலவற்றை நாங்கள் ஏற்க முடியாது என்று சொல்கிற விபத்தில் தான் போய் நிற்கும்.

மலைப்பாதையில் சரிகிற வாகனம் மலையடிவாரத்திற்குத்தான் வந்து சேரும் என்பது போல

ஹதீஸை மறுப்பதும் குர் ஆனை மறுப்பதும் ஒன்றாகவே அமையும். இந்த எதார்த்தத்தை மாற்றி ஹதீஸ் குர் ஆனுக்கு முரண்பட்டால் அது ஹதீஸே அல்ல என்று புரட்டு வாதம் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒன்றை சுட்டிக் காட்டுகிறேன்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام إِلَّا ثَلَاثَ كَذَبَاتٍ ثِنْتَيْنِ مِنْهُنَّ فِي ذَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ قَوْلُهُ إِنِّي سَقِيمٌ وَقَوْلُهُ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا وَقَالَ بَيْنَا هُوَ ذَاتَ يَوْمٍ وَسَارَةُ إِذْ أَتَى عَلَى جَبَّارٍ مِنْ الْجَبَابِرَةِ فَقِيلَ لَهُ إِنَّ هَا هُنَا رَجُلًا مَعَهُ امْرَأَةٌ مِنْ أَحْسَنِ النَّاسِ فَأَرْسَلَ إِلَيْهِ فَسَأَلَهُ عَنْهَا فَقَالَ مَنْ هَذِهِ قَالَ أُخْتِي فَأَتَى سَارَةَ قَالَ يَا سَارَةُ لَيْسَ عَلَى وَجْهِ الْأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرَكِ وَإِنَّ هَذَا سَأَلَنِي فَأَخْبَرْتُهُ أَنَّكِ أُخْتِي فَلَا تُكَذِّبِينِي فَأَرْسَلَ إِلَيْهَا فَلَمَّا دَخَلَتْ عَلَيْهِ ذَهَبَ يَتَنَاوَلُهَا بِيَدِهِ فَأُخِذَ فَقَالَ ادْعِي اللَّهَ لِي وَلَا أَضُرُّكِ فَدَعَتْ اللَّهَ فَأُطْلِقَ ثُمَّ تَنَاوَلَهَا الثَّانِيَةَ فَأُخِذَ مِثْلَهَا أَوْ أَشَدَّ فَقَالَ ادْعِي اللَّهَ لِي وَلَا أَضُرُّكِ فَدَعَتْ فَأُطْلِقَ فَدَعَا بَعْضَ حَجَبَتِهِ فَقَالَ إِنَّكُمْ لَمْ تَأْتُونِي بِإِنْسَانٍ إِنَّمَا أَتَيْتُمُونِي بِشَيْطَانٍ فَأَخْدَمَهَا هَاجَرَ فَأَتَتْهُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فَأَوْمَأَ بِيَدِهِ مَهْيَا قَالَتْ رَدَّ اللَّهُ كَيْدَ الْكَافِرِ أَوْ الْفَاجِرِ فِي نَحْرِهِ وَأَخْدَمَ هَاجَرَ قَالَ أَبُو هُرَيْرَةَ تِلْكَ أُمُّكُمْ يَا بَنِي مَاءِ السَّمَاءِ

இபுறாகீம் அலை அவர்கள் மூன்று கட்டங்களில் தவிர பொய சொல்ல வில்லை என்று புகாரி, முஸ்லிமில் வருகிற சஹீஹான ஹதீஸை இவர்கள்  இது ஹதிஸ் அல்ல என்று மறுக்கிறார்கள்.

ஒரு நபி பொய் சொல்லியிருக்க முடியாது என்று ஏதோ நபிமார்கள் மீது அலாதியான மரியாதை கொண்டவர்களைப் போல அதற்கு காரணம் கூறுகிறார்கள்.

உண்மையில் பொய் என்ற வார்த்தைக்கு இந்த இடத்தில் பொய்மாதிரி தெரிகிற பதில் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் ,அது தான் உண்மை. இபுறாகீம் நபி ஒரு அர்த்ததில் சொன்னார்கள் அதை மற்றவர்கள் வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டார்கள். இது பொய் அல்ல. பொய் மாதிரி தோற்றம் தருகிற பதில் என்பது தான் ஒட்டு மொத்த ஈமானியச் சமுதாயமும் விளங்கி வைத்திருக்கிற கருத்து ,

இதை மறுத்து விட்டு தமது சுய விருப்பத்திற்கேற்ப இந்த ஹதிஸை அர்த்தப்படுத்தி இது ஹதீஸ் அல்ல என்று போலி தவ்ஹீத் வாதிகள் கூறுகின்றனர்.

உண்மையில் இந்த ஹதீஸை மறுப்பது குர் ஆனையே மறுப்பதாகும் ஏனெனில் இந்த ஹதிஸில் சொல்லப்பட்ட இரு செய்திகள் குர் ஆனிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இபுறாகீம் நபியின் பதில்களாகும்.
.

قَوْلُهُ إِنِّي سَقِيمٌ وَقَوْلُهُ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا

சமுதாயம்! ஒரு விசயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்கச் சட்ட நூல்கள் ஹதீஸுக்கும் ஆய்த்திற்கும் உண்மையில் முரண்படா!
அதே போல ஹதீஸுகள் உண்மையில் குர் ஆனுக்கு முரண்படா!
குர் ஆன் குர் ஆனுக்கு முரண்படா!
இது விசயத்தில் சமுதாயத்தை திசை திருப்புகிற எவரும் தஜ்ஜாலின் மறு பிரதிகள் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸ் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்/  எப்படி பெருமானாருக்கு முன் நாவடக்கத்துடனும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டுமோ அதே போல் பெருமானாரின் ஹதீஸ்களுக்கு முன்னிலையிலும் நாவடக்கத்துடனும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸ் என்று சொல்ல்படுகிற உண்மையான எந்த செய்திக்கு முன்னாலும் பணிய வேண்டும். ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் லயீபாக இருந்தாலும்.

துறை ரீதியான சர்ச்சைகளுக்கே தவிர ஹதீஸை பிரித்துப் பார்க்கீற பழக்கம் சமூகத்தில் ஏற்படும் என்றால் சஹீஹான ஹதீஸையும் மறுக்கிற இடத்திற்குகுத்தான்  வந்து நிற்கும். அது குர் ஆணை மறுக்கிற இடத்திற்கு வந்து சேரும்.

மலைப்பாதையில் ஏற்படும் சரிவு மலையடிவாரத்திற்கு வந்து சேருவதைப் போல










No comments:

Post a Comment