வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 27, 2015

துஆ வேண்டுதல்

ஹாஜிகள் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’
இந்த மாதம் 16 ம் தேதி தில்லி லக்னோ கல்கத்தா மங்களூர் ஆகிய நகரங்களிலிருந்து ஹாஜிகளின் முதல் விமானம் மதீனாவுக்கு புறப்பட்டது,
மாஷா அல்லாஹ் இதுவரை 112 விமானங்களில் 34488 பேர் ஹஜ்ஜுக் ஹஜ் கமிட்டி மூலம் பயணமாகியுள்ளனர். அவர்களில் 28890 பேர் மக்காவிற்கும்  5598 பேர் மக்காவிற்கும் சென்று சேர்ந்துள்ளனர். இது தவிர ஆயிரக்கணக்கானோர் தனியார் டிராவல்ஸ் ஏஜென்ஸிகள் மூலம் மக்கா சென்றடைந்துள்ளனர்,
இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு பயணம் மேற்கொள்கிற அனைத்து ஹாஜிகளுடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! அவர்களது பயணத்தை இலேசாக்குவானாக! ஹாஜிகள் அனைவருக்கும் முழு உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தந்தருள்வானாக!
இதுவரை சென்றுள்ள ஹஜ் பயணிகளில்  ஹஜ் கமிட்டி மூலம் சென்றவர்களில் 6 பேரும் தனியார் சேவை மூலம் சென்ற ஒருவரும் வபாத்தாகியுள்ளதாக ஹஜ் கமிட்டி தகவல் கூறுகிறது. அல்லாஹ் வபாத்தானவர்களுக்கு உயர்ந்த சொர்க்கத்தையும் அவரை பிரிந்டு வாடுவோருக்கு தகுந்த ஆறுதலையும் தந்தருள்வானாக! இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் அல்லாஹ் ஹாஜிகள் அத்தனை பேரையும் பாதுகாத்து அவர்களது இல்லங்களுக்கு சலாமத்தாக திரும்பச் செய்வானாக!
ஹஜ் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள ஜித்தாவிலிக்கிற இந்திய தூதரகத்தின் ஹஜ் மிஷன் அமைப்பு வாட்ஸ் அப் பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களின் வழியே செய்திகளை அறிந்து கொள்ளவும் பரிமாரிக் கொள்ளவும் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.
பேஸ்புக்கில் hajmission# என்ற முகவரியில் பல செய்திகளும் தினசரி அப்டேட் செய்யப்படுகின்றன.
 ஹஜ்ஜுக்கு பயணமாகிற புனிதப் பயணிகளை நாம் துஆ செய்து வழியனுப்பி வைப்போம்
பொதுவாக பயணம் புறப்படுகிறவர்களை இபுனு உமர் ரலி இப்படி வழியனுப்புவார்கள்

 قال سالم: كان ابن عمر رضي الله عنهما يقول للرجل - إذا أراد سفرا - أدن مني اودعك، كما كان رسول الله صلى الله عليه وسلم يودعنا، فيقول: «استودع الله دينك، وأمانتك وخواتيم عملك».


உனது மார்க்கத்தையும். நம்பகத்தன்மையையும் உனது செயல்களின் முடிவையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்,

 இன்னொரு ஹதீஸ் இப்படியும் சொல்கிறது

 وعن أبي هريرة، أن رجلا قال: يا رسول الله صلى إني أريد أن أسافر فأوصني، قال: «عليك بتقوى الله عز وجل، والتكبير على كل شرف» فلما ولى الرجل قال: «اللهم اطو له البعد وهون عليه السفر». قال الترمذي: حديث حسن.

அவர்களிடம் துஆ செய்யுமாறு கோருவோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் – துஆ அங்கீகரிக்கப்படுபவராக தான் இருந்த போதும் உம்ராவுக்குப் புறப்பட்ட உமர் ரலியிடம்  துஆ செய்யுங்கள் என்று கூறினார்கள்.

قال عمر رضي الله عنه: استأذنت النبي صلى الله عليه وسلم في العمرة، فأذن لي، وقال: «لا تنسنا يا أخي من دعائك» فقال: كلمة ما يسرني أن لي بها الدنيا رواه أبو داود، والترمذي وقال: حديث حسن صحيح.

இது இரண்டு செய்திகளை தருகிறது.

1.   ஹஜ்ஜு உம்ராவின் மகத்துவம்
2.   துஆ வை வேண்டும் இயல்பு

ஹஜ் உம்ராவுக்குப் புறப்படுகிறவர்களிடம் நம்பிக்கையோடும் தவக்குலோடும் நமது தேவைளில் முக்கியமானதைக் குறிப்பிட்டு துஆ கேட்க கோருவோம்.

ஹஜ்ஜுக்கு புறப்படுகிறவர் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதோடு,  அவர் போகுமிடம் பாக்கியம் மிக்கது என்பதை நினைவில் வைத்து துஆ விற்கான கோரிக்கையை முன் வைப்போம்.

அதே போல் ஹஜ்ஜுக்கு செல்பவர்களும் தங்களிடம் முக்கியமாக துஆ கேட்க கோருபவர்களின் தேவையை ஒரு நோட்டில் எழுதி வைத்து துஆ கேட்க வேண்டும். இது ஒரு ஈமானிய உதவியாகும்.

சில வேளைகளில் மற்றவர்களுக்காக நாம் கேட்கிற துஆவின் பரக்கதால் நம்முடைய துஆ க்கள் அங்கீகரிக்கப்படலாம்.


இந்த ஹதீஸின் இரண்டாவது சிந்தனை

துஆ செய்யுங்கள் என்று அடுத்தவர்களிடம் கேட்பது இஸ்லாமிய இயல்பாகும்.  

யூசுப் அலை அவர்களின் சகோதரர்கள் ஒரு மாபெரிய தவறைச் செய்திருந்த போதும், மன்னிக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் பெருவாழ்வு வாழ்ந்தார்கள். காரணம் ஒரு கட்டத்தில் மனம் திருந்திய அவர்கள் தமது தந்தையிடம் சென்று எங்களுக்காக பாவ மன்னிப்புக் கேளுங்கள் என்று துஆ விற்கான கோரிக்கை வைத்தார்கள்.
قَالُوا يَاأَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ(97)قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ(98)
பெருந்தவறு செய்த பிள்ளைகள் துஆ விற்கான கோரிக்கை வைத்த போது அதை ஏற்றுக் கொண்டார்கள் நபி யாகூப் அலை .
தஹ்ஜ்ஜுதுடைய நேரத்தில் கேட்பேன் என்பதைத்தான் பிறகு கேட்பேன் என்று கூறினார்கள்.
தப்ஸீர் இப்னு கஸீரில் இது பற்றி பல தகவல்கள் கிடைக்கின்றன.

قال ابن مسعود وإبراهيم التيمي وعمرو بن قيس وابن جريج وغيرهم أرجأهم إلى وقت السحر
وقال ابن جرير:  كان عمر رضي الله عنه يأتي المسجد فيسمع إنسانا يقول: اللهم دعوتني فأجبت وأمرتني فأطعت وهذا السحر فاغفر لى قال فاستمع الصوت فإذا هو من دار عبد الله بن مسعود فسأل عبد الله عن ذلك فقال إن يعقوب أخر بنيه إلى السحر بقوله " سوف أستغفر لكم ربي "
وقد ورد في الحديث إن ذلك كان ليلة الجمعة
كما قال ابن جرير ;عن ابن عباس عن رسول الله صلي الله عليه وسلم " سوف أستغفر لكم ربي " يقول حتى تأتي ليلة الجمعة


யாகூப் அலை அவர்கள் தன் பிள்ளைகளை மன்னிதது மட்டுமல்ல . துஆ க்கள் அங்கீகரிக்கப்படுகிற நேரத்தில் உங்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பேன் என்று சொன்னது பெருந்தன்மையின் சிறந்த அடையாளமாகும்.
பெருமக்களிடம் துஆச் செய்யுமாறு கோர வேண்டும் என்பதற்கும் , அவ்வாறு கோரிக்கை வருகிற போது அதற்கான பிரார்த்தனையை தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் முன் வைக்க வேண்டும் என்பதற்கும் இந்த வசனம் சிறந்த முன்னுதாரனமாக அமைகிறது.
இன்றைய கால கட்டத்தில் துஆ செய்யுங்கள் என்று சொல்வது அரிதாகி வருகிறது.
அடுத்தவர்கள் நமக்காக என்ன செய்ய முடியும் என்ற வரட்டுச் சித்தாந்தமே இதற்கு காரணம் இந்தச் சிந்தனைக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இஸ்லாமின் பண்பிற்கு இது எதிரானது.

அல்லாஹ் பாதுகாப்பானாக! பிறரின் துஆ க்களில் பங்கேற்காமல் தவிர்ப்பதை நயவஞ்சகர்களின் அடையாளமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
إذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لوو رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون
ஒரு வேளை அவர்கள் அத்தகைய கோரிக்கையை முன் வைத்திருப்பார்கள் எனில் என்ன நடக்கும் என்பதையும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما

நபித்தோழர்கள் பெருமானாரிடம் துஆ செய்யுங்கள் என பெருமானாரிடம் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்
மழைக்காககவும் அதை நிறுத்துவதற்காகவும்

عن أنس ابن مالك رضي الله عنه قال: أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم فبينا رسول الله صلى الله عليه وسلم يخطب على المنبر يوم الجمعة قام أعرابي فقال يا رسول الله هلك المال وجاع العيال فادع الله لنا أن يسقينا! قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه وما في السماء قزعة قال فثار سحاب أمثال الجبال ثم لم ينزل عن منبره حتى رأيت المطر يتحادر على لحيته، قال فمطرنا يومنا ذلك وفي الغد ومن بعد الغد والذي يليه إلى الجمعة الأخرى فقام ذلك الأعرابي أو رجل غيره فقال يا رسول الله تهدم البناء وغرق المال فادع الله لنا فرفع رسول الله صلى الله عليه وسلم يديه وقال اللهم حوالينا ولا علينا قال فما جعل رسول الله صلى الله عليه وسلم يشير بيده إلى ناحية من السماء إلا تفرجت حتى صارت المدينة في مثل الجوبة حتى سال الوادي وادي قناة شهرا قال فلم يجئ أحد من ناحية إلا حدث بالجود
தன் தாயின் ஹிதாயத்திற்காக பெருமானாரிம் பிரார்த்திக்க கோரிய அபூஹுரைரா – முஸ்லிம் 4546
قَالَ أَبُو هُرَيْرَةَ كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الْإِسْلَامِ وَهِيَ مُشْرِكَةٌ فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَهُ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الْإِسْلَامِ فَتَأْبَى عَلَيَّ فَدَعَوْتُهَا الْيَوْمَ فَأَسْمَعَتْنِي فِيكَ مَا أَكْرَهُ فَادْعُ اللَّهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جِئْتُ فَصِرْتُ إِلَى الْبَابِ فَإِذَا هُوَ مُجَافٌ فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمَيَّ فَقَالَتْ مَكَانَكَ يَا أَبَا هُرَيْرَةَ وَسَمِعْتُ خَضْخَضَةَ الْمَاءِ قَالَ فَاغْتَسَلَتْ وَلَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِهَا فَفَتَحَتْ الْبَابَ ثُمَّ قَالَتْ يَا أَبَا هُرَيْرَةَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ قَالَ فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ وَأَنَا أَبْكِي مِنْ الْفَرَحِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَبْشِرْ قَدْ اسْتَجَابَ اللَّهُ دَعْوَتَكَ وَهَدَى أُمَّ أَبِي هُرَيْرَةَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ خَيْرًا قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يُحَبِّبَنِي أَنَا وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَيُحَبِّبَهُمْ إِلَيْنَا قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ حَبِّبْ عُبَيْدَكَ هَذَا يَعْنِي أَبَا هُرَيْرَةَ وَأُمَّهُ إِلَى عِبَادِكَ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِلَيْهِمْ الْمُؤْمِنِينَ فَمَا خُلِقَ مُؤْمِنٌ يَسْمَعُ بِي وَلَا يَرَانِي إِلَّا أَحَبَّنِي
தன் மருமகனிடம் துஆ செய்யக் கோரிய மாமியாரும் . பிறருக்காக துஆ கேட்பதில் கிடைக்கிற நன்மையும்
عَنْ صَفْوَانَ - وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ - وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ قَالَ : قَدِمْتُ الشَّامَ ، فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ ، فَلَمْ أَجِدْهُ ، وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ ، فَقَالَتْ : أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ ؟ فَقُلْتُ : نَعَمْ . قَالَتْ : فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ : ( دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ ، كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ : آمِينَ ، وَلَكَ بِمِثْلٍ ) قَالَ : فَخَرَجْتُ إِلَى السُّوقِ ، فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ ، فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ يَرْوِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) رواه مسلم (2733)

சஹாபாக்கள் தாபிஃகளிடம் துஆ செய்யக் கோரியுள்ளர்கள்
யஜீது பின் அஸ்வத்  ரஹ் அவர்கள் பெரும் தாபிஃகளில் ஒருவர், பெருமானார் (ஸ்ல்) அவர்களது காலத்திலேயே பிறந்து விட்டார். ஆனால் சந்திப்பு கிட்டவில்லை. இவர் சிரியாவில் வாழ்ந்தார்.  மிகச் சிறந்த வணக்கசாலியாக திகழ்ந்தார். இப்னு அஸாகிர் அவரது வரலாற்றைக் கூறும் போது இரவு இஷா தொழுது விட்டு தன்னுடை வீட்டுக்கு நடந்து செல்லும் போது விரலை நீட்டினார் என்றால் அதில் ஒளி தோன்றும் அந்த வெளிச்சத்தில் நடந்து போய்விடுவார் என்கிறார்.

يزيد بن الأسود الجرشي من سادة التابعين بالشام
أسلم في حياة النبي -صلى الله عليه وسلم
قال ابن عساكر بلغني أنه كان يصلي العشاء الآخرة بمسجد دمشق ، ويخرج إلى " زبدين " فتضيء إبهامه اليمنى ، فلا يزال يمشي في ضوئها إلى القرية 

இவரை துஆச் செய்யச் சொல்லி சஹாபியான முஆ வியா ரலி கூறுவார்.
روي  الحافظ ابن عساكر رحمه الله تعالى في “تاريخه” بسند صحيح عن التابعي الجليل سليم ابن عامر الخبَائري: (أن السماء قحطت، فخرج معاوية بن أبي سفيان وأهل دمشق يستسقون، فلما قعد معاوية على المنبر، قال: أين يزيد بن الأسود الجُرَشي؟ فناداه الناس، فأقبل يتخطى الناس، فأمره معاوية فصعد على المنبر، فقعد عند رجليه، فقال معاوية: اللهم إنا نستشفع إليك اليوم بخيرنا وأفضلنا، اللهم إنا نستشفع إليك اليوم بيزيد بن الأسود الجرشي، يا يزيد ارفع يديك إلى الله، فرفع يديه، ورفع الناس أيديهم، فما كان أوشك أن ثارت سحابة في الغرب كأنها ترس، وهبت لها ريح، فسقتنا حتى كاد الناس أن لا يبلغوا منازلهم).
எந்த ஒரு காரியத்திற்காகவும் நாம் நேரடியாகவே அல்லாஹ்விடம் கேட்டுக் கொள்ள வேண்டும். மற்ற யார் வழியாகவும் கேட்கத் தேவையில்லை. அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்டால்  நமக்கே அல்லாஹ் தருவான் என்பது மட்டுமே மார்க்க மாக இருந்திருக்குமானால் மழை வேண்டி மற்றவர்கள் கேட்டு வந்த போதோ – தாயின் ஹிதாயத்திற்காக மகன் பிரார்த்திக்க கோரிய போதோ பெருமானார் (ஸல்) அவர்கள் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

உன்னுடை பாவத்திற்கு நீ தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என யாகூப் அலை கூறியிருக்க வேண்டும் .

அவ்வாறு நடக்க வில்லை. மேலே குறிப்பிட்ட  செய்திகள் அனைத்தும் மற்றவர்களிடம் துஆ ச்செய்யுங்கள் என்று  கூறுவதை ஈமானிய இயல்பாகவே சுட்டிக் காட்டுகின்றன.

பெரியர்வகளை சந்தித்தால் துஆ செய்யுங்கள் என்று கேட்கிற பழக்கத்தை நாமும் பழக்கப்படுத்திக் கொள்ளனும்  நம்முடைய பிள்ளைகளுக்கும் அந்தப பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும்.

அனஸ் ரலி யின் தாய் தன் மகனை பெருமானாரிடம் அழைத்து வந்து உங்களின் பணியாளரான இவருக்கு துஆ செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
நீ தானே தாய்! நீ யே துஆ செய்! என்று பெருமானார் (ஸல்)அவர்கள் சொல்லவில்லை. பெருமானார் (ஸல்) அனஸ் ரலி) க்காக துஆச் செய்தார்கள்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

அந்த துஆ வின் பலனாய் பெரும செல்வந்தராகவும் குடும்பஸ்தராகவும் ஆனார்கள். பிள்ளைகளாகவும் பேரப்பிள்ளைகளாகவும் நூற்றுக்கணக்கானோரை அனஸ் ரலி கண்டார்கள் என வரலாறு சொல்கிறது,
பெருமக்களின் துஆ அதிக மதிப்பிற்குரியதாக இருக்கும் என்பதே திருக்குர் ஆனிய வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் கருத்து . பிறருக்க்காக துஆ செய்கிற இடத்தில் மலக்கின் துஆ வும் சேருகிறது என ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் கெட்டதற்காக துஆச் செய்யுமாறு கேட்கக் கூடாது. அப்படி யாரும் சொன்னாலும் அவ்வாறு கேட்கக் கூடாது. புகாரி 2720
தன் சமூக மக்கள் தன் பேச்சைக் கேட்டு முஸ்லிமாக வில்லை என்பதால் கோப முற்ற துபைல் ரலி அவர்களுக்கு பத்வா செய்யுமாறு பெருமானாரிடம் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தவ்ஸ் சமூகத்தாரின் நன்மைக்காக துஆச் செய்தார்கள்.
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهَا فَقِيلَ هَلَكَتْ دَوْسٌ قَالَ اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ   

நாம் அல்லாஹ்விடம் நேரடியாக துஆ கேட்பது ஒரு சிறந்த வணக்கம். அது ஈமானிய இயல்பு.

அதே நேரத்தில் நன்மக்கள், நல்ல காரியத்தில் ஈடுபடுகிறவர்கள், பெரியவர்களிடம் துஆச் செய்யுமாறு வேண்டுதல்களையும் முன் வைப்போம். அதுவும் ஈமானிய இயல்பாகும்.

உம்ராவுக்குச் சென்ற உமர் ரலியிடம் துஆ செய்யக் கேட்டுக் கொண்ட பெருமானாரின் இயல்பு அது.  





7 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை ஜஸாகல்லாஹு கைரன் கஸீரன்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைகும் ' அநேகமாக எல்லா பள்ளிவாசல்களிலும் இன்று ஹஜ்ஜைப் பற்றி தான் பேசுவார்கள் என எண்ணுகிறேன் ஆனால் உங்களது ஆக்கம் எப்போதுமே தனித்துவம் கொண்டதுதான் ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் துஆ செய்ய கோருவோம் என்று வரலாற்று சான்றுகளோடு அழகாக எழுதியுள்ளீர்கள் அல்லாஹ் உமது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் மேன்மேலும் நிறைவு செய்தருள்புரிவானாக ஆமீன்,,, என் பாவங்கள் மன்னிக்கப் பட துஆ செய்யுங்கள். இவன்> மு . அமானுல்லாஹ் பாகவி பழவேற்காடு

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைகும் ' அநேகமாக எல்லா பள்ளிவாசல்களிலும் இன்று ஹஜ்ஜைப் பற்றி தான் பேசுவார்கள் என எண்ணுகிறேன் ஆனால் உங்களது ஆக்கம் எப்போதுமே தனித்துவம் கொண்டதுதான் ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் துஆ செய்ய கோருவோம் என்று வரலாற்று சான்றுகளோடு அழகாக எழுதியுள்ளீர்கள் அல்லாஹ் உமது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் மேன்மேலும் நிறைவு செய்தருள்புரிவானாக ஆமீன்,,, என் பாவங்கள் மன்னிக்கப் பட துஆ செய்யுங்கள். இவன்> மு . அமானுல்லாஹ் பாகவி பழவேற்காடு

    ReplyDelete
  4. அ௫மையான தகவல்களை தந்துள்ளீகள். அல்லாஹ் தங்களின் கல்வி ஞானத்தை அதிகமாக்குவானாக ! அமீன்

    ReplyDelete
  5. அ௫மையான தகவல்களை தந்துள்ளீகள். அல்லாஹ் தங்களின் கல்வி ஞானத்தை அதிகமாக்குவானாக ! அமீன்

    ReplyDelete
  6. அ௫மையான தகவல்களை தந்துள்ளீகள். அல்லாஹ் தங்களின் கல்வி ஞானத்தை அதிகமாக்குவானாக ! அமீன்

    ReplyDelete
  7. அல் ஹம்து லில்லாஹ் அருமையான பதிவு அல்லாஹ் உங்கலுக்கு நீடித்த ஹயாத்தையும் நிறைவான பரக்கத்தையும் வழங்குவானாக!!

    ReplyDelete