வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 29, 2015

மரம் நடுவோம்; நன்மை மழை பெறுவோம்

يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஒரு பக்கம் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னறிவுப்புக்களை பத்ரிகைகள் வெளிடுகின்றன,

மறு பக்கம் கோடையின் சூடு இன்னும் ஆறாமலேயே இருக்கிறது.

மார்ச் முதல் ஜூலை வரை இந்தியாவில் பொதுவாக கோடை காலமாகும். தமிழ் நாட்டில் ஏப்ரல் மே மாதங்கள் வெப்பம் அதிகமாக இருக்கிற காலங்கள்.  

இதுதான் இயல்பான நம்முடைய கோடையின் அளவு

அக்டோபர் மாதம் என்பது வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்க்கிற காலம் .

ஆனால் அனல் காற்று தான் எங்கு பார்த்தாலும் சூடாக காய்கிறது,

கோடை காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் இடையே இலையுதிர் காலம் என்ற் இளங்காற்றுக் காலம் இருக்க வேண்டும்,

தெருக்கள் முழுவதும் மர இலைகள் பரவிப்படர்ந்திருக்கிற காலம்.

அப்படி இரு காட்சியும் அப்படி காலமும் காணமுடியாமல் போய் ஒரு தலைமுறை தாண்டிவிட்து,  


இதற்கு காரணம்  பூமியின் வெப்ப நிலை அதிகமாகி Global warming –ஆகும்
20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து  நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு (நம்முடைய பாமர வழக்கில் அழுக்கப்படிந்த காற்று)  அதிகரிப்பதால், இயல்புக்கு மாறாக பூமி வெப்பமடைந்து வருகிறது, .

கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இதற்கு காரணம் இக்கால கட்டத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருள்களை அளவுக்கு மீறி பயன்படுத்தியது ஆகும். இதனால் வெளியான புகையின் அளவு காற்றை அசுத்தப்படுத்திய தோடு பூமியையை அதிக சூடானதாககும் மாற்றி விட்டது,

பூமியின் சூடு அதிகமானதற்கு இன்னொரு முக்கியக் காரணம் மரங்கள் காடுகள் அழிக்கப்பட்டதாகும்.

ஒரு பக்கம் காற்று மண்டலத்தை சூடேற்றும் நிகழ்வுகள் அதிகரிக்க, மறு பக்கம் அதை சுத்தப்படுத்துகிற-  குளிர்விக்கிற காடுகளை தொடர்ந்து அழிக்கப்பட பூமியின் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருகிறது,

சுற்றுச் சூழல் சமன் நிலை குலையாமல் இருக்க வேண்டுமென்றால், மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகளாக இருக்க வேண்டும். நாட்டின் மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்ததென்றால், அந்த நாட்டிற்குத் தேவையான இயற்கை வளங்களை அந்தக் காடு தரும் 
பூமியில் கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே!
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள்

18 மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் வெளிவிடுகிறது.
ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் கெட்ட காற்றை அது அது உறிஞ்சிக்கொள்கிறது  

ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும்.

தமிழ்நாட்டில் 1,30,058 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சுமார் 22,748 ச.கி.மீட்டர் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. சதவீதக் கணக்கில் இது 17.5 சதவீதம்
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் நமக்கு மழை நாட்கள் என்பது மிகக் குறைவானவை 33_லிருந்து 50 நாட்கள்தான் மழைநாட்கள்.  ஆண்டிற்கு அதிகப்படியான மழை என்பதே 900 மில்லி மீட்டர் மழை தான் இங்கே பெய்கிறது.

பெரும்பாலான மழை வடகிழக்குப் பருவ காலத்திலேயே பெய்து விடுகிறது. தென்மேற்குப் பருவகாலத்தில் கொஞ்ச மழைதான் பெய்கிறது. வடகிழக்கு பருவக் காலத்திலும் இப்போது மழை அதிகமாக கிடைப்பதில்லை,  

அதனால் தமிழகத்தின் ஆறுகள் நீர் ஓடிய தடங்களக மட்டுமே இன்றைக்கு காணக்கிடைக்கின்றன,

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் 
கண்டதோர் வையை பொருனைநதி-என 
மேவி யாறு பலவோடத்-திரு 
மேனி செழித்த தமிழ்நாடு.
என்று பாரதி பாடிய நதிகளில் இன்றைக்கு பாதிக்கு மேல் வரலாற்று நூல்களில் மட்டுமே ஆறுகளாக அடையாளப் படுத்தப்படுகின்றன,
 
பாலாறு பெரும்பாலும் வற்றிப் போய் விட்டது. கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும் நாளில் மட்டுமே காவிரி ஓடுகிறது, மற்ற பல நதிகளுமே பருவ காலத்தில் மட்டுமே நீராடுகின்றன. பல நதிகள் இறந்தே போய்விட்டன

ஆற்றிற்கும் வடிகாலுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பார்கள் . மழை பெய்தால் மட்டும் தண்ணீர் ஓடினால் அது வடிகால். மழை பெய்யாகாலத்திலும் தண்ணீர் ஓட வேண்டும், அப்போதுதான் அது ஆறு 
அப்படிப்பார்த்தால் தமிழ் நாட்டில் தமிரபரணி தவிர தண்ணீர் ஒடூம் ஆறு ஒன்று கூட இல்லை என்று சொல்லி விடலாம் என்ற அளவில் நிலமை மிகவும் மோசமாக இருக்கிறதும் 
இந்தச் சீரழிவுக்கு மூல காரணம் எங்கே இருக்கிறது என்று தேடினோமானால் மரங்களும் காடுகளுக்கும் காணாமல் போனதே காரணமாகும். 


இப்போது நாம் சுத்தமான தண்ணீருக்கு வாட்டர் பாட்டில்களை நாடவேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்முடைய அடுத்த தலைமுறை சுத்த காற்றுக்கு முதுகில் ஆக்ஸீஜன் சிலிண்டர்களை கட்டிக்கொண்டு நடக்கிற சூழ்நிலை உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் காடுகளை காப்பதிலும் மரங்களை வளர்ப்பதிலும் நம்மாலான முய்றசியை செய்ய வேண்டும்.

இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கான யோசனையி பெட்ரோல் போன்ற அத்தியாவசியமாக்விட்ட பெருட்களை நாம் குறைத்துக் கொள்ள் முடியாது என்றாலும் காடுகளை அழிக்கிற விசயத்திலும் மரங்களை வெட்டுகிற விசயத்திலும் நாம் கவனம் செலுத்தியாகவேண்டும்.


இதை எல்லாம் யாராவது பொதுச் சேவை அமைப்புக்கள் பார்த்துக் கொள்ளும் என்ற மனோநிலை நம்முடைய உள்ளத்தில் பதிந்து போய்விட்டதுஇந்த எண்ணம் மாற வேண்டும்.

ஒரு முஸ்லிமாக நாம் இது விசயத்தில் அதிக  அக்கறை செலுத்த வேண்டிய தார்மீக கடமை நமக்கு உள்ளது.

திருக்குர் ஆன் மரம் பற்றி பல இடங்களில் பேசுகிறது.

மரங்களோடு முஸ்லிமை நெருக்கமாக்கி வைக்கும் விதமாகவே அது அமைந்துள்ளது.

جاءت كلمة شجرة في القرآن الكريم مفردة في نحو تسعة عشر موضعا ومجموعة في نحو ستة مواضع ، أما كلمة زرع ومشتقاتها فوردت في نحو ثلاثة عشر موضعا .

மரம் என்ற சொல் தனிய 19 இடத்திலும் இன்னொன்று சேர்ந்த்து ஜைத்தூன் மரம் என்பது போல ஆறு இடத்திலும் சொல்லப்பட்டது. மரம் வளர்த்தல் விவசாயம் செய்தல் என்பது சுமார் 13 இடங்களில் கூறப்பட்டுள்ளது,.

கலிமா தய்யிபாவை அல்லாஹ் ஆகாயமளவு வளர்ந்திர்க்கும் மரத்துடன் ஒப்பிடுகிறான்.
أَلَمْ تَرَى كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ(24

அல்லாஹ் எப்படி ஒரு உவமையை அமைத்திருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையாகலிமா தய்யிபாவாகிறது ஒரு நல்ல மரத்தை போன்றதாகும். அதன் வேர் உறுதியானது, அதன் கிளைகள் வானத்தில் படர்ந்திருக்கின்றன.

லாயிலாக இல் லல்லாஹ் முஹம்மதுர ரஸூலுல்லாஹ்வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற கலிமா தய்யிபா எனும் இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைச் சாரமானது முஸ்லிமின் இதயத்தில் ஆழ வேறூன்றி அவரது வாழ்வெங்கும் பரவிப் படர்ந்திருக்கிறது என்ற அருமையான கருத்தைஅற்புதமான சிந்தனையை மரத்துடன் ஒப்பிட்டு இறைவன் பேசுகிற போது ஒரு முஃமினுக்கு மரத்துடனான நட்பும் நெருக்கமும் இறுக்கமாகிவிடுகிறது,

சொர்க்கம் என்பது மரங்கள் அடர்ந்த சோலை

குர் ஆன் பல இடங்களிலும் நீர் நிலைகளையும் தோட்டங்களையுமோ சொர்க்கமாக உருவப்படுத்துகிறது.

يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ(12)

இத்தகைய ஒரு வாழ்க்கை அமைப்பை ஆசைப்படுகிற சிந்தனையை இது தருகிறது.

வீடு எப்படி இருக்கனும் ?

இந்த இறை வசத்திலுள்ள மரங்கள் சூழ்ந்த இடதிலுள்ள அமைதியான வீடு என்பது  தம் வீட்டை உருவாக்கிக் கொள்ள நினைப்போருக்கான மாதிரிச் செய்தியாகி விடுகிறது.

மரம் வளர்ப்பதை நன்மயை தேடிக் கொள்ளும் ஒரு வழி யாக பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்குச்  சொல்லிக் காட்டினார்கள்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ

எந்தவொரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது ஒரு பயிரை விளைவித்தால் அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது பறவையோ அல்லது விலங்கோ உண்ணும் காலமெல்லாம் அவருக்கு அது தர்மமாக அமையும். (புகாரி 2320)

நீ வளர்த்த மரத்திலிருந்து யாராவது திருடினாலும் கூட உனக்கு நன்மை தான் என இன்னொரு நபி
மொழி அற்புதமாக மரம் வளர்ப்பின் நன்மையை கூறுகிறது


·        عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَتْ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ

ஒரு முஸ்லிம் மரம் நட்டால் அதிலிருந்து உண்ணப்படுவது அவர் செய்த தர்மமாகும். அதிலிருந்து திருடப்படுவதும், அதிலிருந்து விலங்குகள் சாப்பிடுவதும் , பறவைகள் சாப்பிடுவதும் அவர் செய்த தர்மமேயாகும். அம்மரத்திலிருந்து ஒரு குச்சியை யாராவது ஒடித்துச் சென்றாலும் அதுவும் அவர் செய்த தர்மமே!

இந்த நபி மொழிகளை கேட்கிற போது நாம் ஒரு மரத்தையாவது வைத்து விடவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்படும்.
மரம் நடுவதற்கான கூலிஒரு மரம் நட்டதற்கான பணச் செலவு, நேரம் , உழைப்பின் அளவுக்கானது மட்டுமல்ல
وعن أبي أيوب الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال :  ما من رجل يغرس غرسا إلا كتب الله له من الأجر قدر ما يخرج من ثمر ذلك الغرس  . أخرجه أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு மனிதர் ஒரு மரத்தை நட்டால் அம்மரத்தில் விளையும் மொத்தத்தையும் அவருக்கான கூலியாக அல்லாஹ் எழுதாமல் இருப்பதில்லை. ( அஹ்மது

செடிகளை வீணடித்து விடாதீர்கள்

عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال :  إن قامت الساعة وفي يـد أحدكم فسيلة فإن استطاع أن لا تقوم حتى يغرسهـا فليغرسها  அஹ்மது
 ‘உங்களில் ஒருவரின் கையில் மரச்செடியொன்று இருக்கும் நிலையில் மறுமை வந்து விட்டது என்றிருந்தாலும் அவர் அச்செடியை நாட்டிவிடட்டும்’ (ஆதாரம் : அஹ்மத்) 
மரங்களை பராமரிக்க பெருமானார் உத்தரவிட்டார்கள் அற்புதமாக
மரங்களை பராமரிக்க பெருமானார் உத்தரவிட்டார்கள் அற்புதமாக

وعن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال : سمعت رسول الله صلى الله عليه وسلم بأذني هاتـين يقول :  من نصب شجرة فصبر على حفظها والقيام عليها حتى تثمر كان له في كل شيء يصاب من ثمرها صدقة عند الله عز وجل  أخرجه أحمد


மக்கள் மரங்களிடமும் உடனடி பலனை எதிர்பார்க்கிறார்கள். பழ மரங்கள் நட்டாலும் பலன் தரும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும்.

ஒருவர் ஒரு மரத்தை  நட்டு அதை பொறுமையுடன் பாதுகாத்து அது பழம் தரும் வரை பராமரித்தார் எனில் அந்த பழம் ஒவ்வொன்றிலிருந்தும் கிடைக்கிற நன்மைகள் அல்லாவிடம் அம்மனிதர்  செய்த  தர்மமாக கருதப்படும்

நேரடியாக மரம் வளர்க்க ஆர்வமூட்டியது மட்டுமல்லாது மறைமுகமாகவும் மரங்கள் மீது பெருமானார் அற்புதமாக  ஆவலை ஏற்படுத்தினார்கள்

عن جابر بن عبد الله رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده ، غرست له نخلة في الجنة  vأخرجه أحمد ( 3 \ 440 ) ، والترمذي ( الدعوات 5 \ 511 ) ، وقال : حسن صحيح غريب ، 

சுப்ஹானல்லாஹில் அழீம் பிஹம்திஹி என்று ஒருவர் சொன்னால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என்று கூறினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

மரங்களை வெட்டுவதும் தோட்டங்கள் விளைநிலங்களுக்கு தீவைப்பதும் யுத்த நடைமுறைகளில் ஒன்றாக இருந்த கால கட்டத்தில் மரங்களை வெட்டாதீர் என்ற் ஒரே தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்..

عن عبد الله بن حبشي قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع سدرة صوب الله رأسه في النار سئل أبو داود عن معنى هذا الحديث فقال هذا الحديث مختصر يعني من قطع سدرة في فلاة يستظل بها ابن السبيل والبهائم عبثا وظلما بغير حق يكون له فيها صوب الله رأسه في النار

சஹாபாக்கள் காட்டிய ஆர்வம்

وروىالبخاري في كتاب الأدب المفرد

عن داود بن أبي داود الأنصاري قال : قال لي عبد الله بن سلام : إن سمعت بالدجال قد خرج وأنت على ودية - أي فسيلة - تغرسها فلا تعجل أن تصلحه ، فإن للناس بعد ذلك عيشا

முடியாது என்றவருக்கு செடி நடுவதில் உதவி உமர் (ரலி)

وعن عمارة بن خزيمة بن ثابت قال : سمعت عمر بن الخطاب يقول لأبي : أعزم عليك أن تغرس أرضك فقال أبي : أنا شيخ كبير أموت غدا . فقال عمر : أعزم عليك لتغرسنها ، فلقد رأيت عمر بن الخطاب رضي الله عنه يغرسها بيده مع أبي

இவ்வாறு செய்ய உமரை தூண்டியது அவருக்கு பெருமானார் சொன்ன ஒரு அறிவுரையாகும்

أن الرسول صلى الله عليه وسلم أذن له أن يشفع يوم القيامة عدد ما على الأرض من شجرة
  .அல் முஸ்னத் )

தோட்டங்களை கால் நடைகள் கபளீகரம் செய்வது வாடிக்கை.  இதிலிருந்து மரங்களை பாதுகாக்க பெருமானார் யோசனை சொன்னார்கள்

عن البراء بن عازب http://www.alifta.net/_layouts/images/UserControl-Images/MEDIA-H1.GIF أنه كانت له ناقة ضارية فدخلت حائطا فأفسدت فيه فكلم رسول الله صلى الله عليه وسلم فيها فقضى بأن حفظ الحوائط بالنهار على أهلها ، وأن حفظ الماشية بالليل على أهلها-أبوداوود

யுத்த களங்களில் மரங்களை அழிக்க கூடாது.

·        وصية أبي بكر الصديق رضي الله عنه للأمراء حين بعثهم نحو الشام .
·        ولفظه عند مالك : إني موصيك بعشر : '' لا تقتلن امرأة ، ولا صبيا ، ولا كبيرا هرما ، ولا تقطعن شجرا مثمرا ، ولا تخربن عامرا ، ولا تعقرن شاة ولا بعيرا إلا لمأكلة ، ولا تحرقن نخلا ، ولا تعقرنه ، ولا تغلل ولا تجبن '' ،
·         وأخرج عبد الرزاق ( 5 \ 201 ) عن طاوس قال : ( نهى النبي صلى الله عليه وسلم عن عقر الشجر فإنه عصمة للدواب في الجدب '' وهذا حديث مرسل يتأيد بما سبق من قول الصديق وفعل الأصحاب رضي الله عنهم .

மரத்தின் பொருளாதார பலனை சுட்டிக்காட்ட பெருமானார் தவறவில்லை,

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ، قَالَ : " أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّهُ الْعَبَّاسَ يَأْمُرُ بَنِيهِ أَنْ يَحْرُثُوا الْقَضْبَ ، فَإِنَّهُ يَنْفِي الْفَقْرَ " . قَالَ : وَالْقَضْبُ : الرَّطْبَةُ  http://www.alifta.net/_layouts/images/UserControl-Images/MEDIA-H1.GIFأخرجه الطبراني மரக்கிளைகள்


இன்றைய காலகட்டத்தில் மரம் வளர்ப்பு குறிப்பாக தேக்கு போன்ற சில மரங்களின் வளர்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கு  தேக்கு மரங்கள் மட்டுமல்ல பொதுவாகவே மரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

மலேஷிய பர்மா ஆகிய நாடுகள் மரம் ஏற்றுமதியில் நிறைய அன்னியச் செலவானியையை ஈட்டுகின்றன,

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் சர்வர்வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். மரப்பயிரும் பணப்பயிரே!என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

ஒரு காலம் இருந்தது நம்முடைய வீட்டில் வளர்ந்த பூவரசன் மரத்தை வெட்டி கட்டில் செய்தார்கள் நம்முடைய முன்னோர். பூவரசனை வெட்டி விற்று அந்தக் காசில் கல்யாணம் பண்ணியவர்கள் நம் முன்னோர்கள்.
அதே நேரத்தில் வெட்டுகிற மரத்திற்கு மாறறாக அடுத்த மரக் கன்றுகளை அவர்கள் பதியமிட மரக்கவில்லை,

நம்முடைய பொருளாதாரத்திற்காக மரம் வளர்க்கிறோமோ இல்லையோ நாம் வாழும் பூமியை நமது நகரின் இருக்கிற வளத்தையாவது பாதுகாப்பதற்கு மரம் வளர்ப்பதில்மரங்களையும் காடுகளையும் அழியாமல் காப்பதில், அழிக்காமல் இருப்பதில் நம்மால் முடிந்த அக்கறையை நாம் செலுத்த வேண்டும்.


தங்களது நாட்டின் சுற்றூச் சூழலைப் பாதுகாக்க உலக நாடுகள் மரம் நடுவதில் அலாதியான கவனத்தை கையாள்கின்றன. சிங்கப்பூர் நகரம் ஒரு காங்கிரீட் ஜன்கில் ஆக காங்கீரீட் கட்டிடங்களின் காடாக மாறிக் கொண்டிருந்தாலும் அழுத்தமான மரப் பாதுகாப்பும் காடுவளர்ப்பும் கவனமாக கையாளப்படுகிறது, மரங்களை வெட்டுவதில்லை.  வேருடன் பிடுங்கி அதை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்கிறார்கள் .

அமெரிக்கா, ஜப்பான்போன்ற வளர்ந்த நாடுகளில் அவர்களின் வீட்டு உபயோகத்திற்கான மரங்களை அவர்கள் காட்டிலிருந்து அவர்கள் வெட்டுவதில்லை
ஒரு வீட்டின் இரண்டு ஓரத்திலும் மரம் வைத்தால் அந்த வீட்டுக்கு நல்ல காற்று கிடைக்கும் மின்சார செலவில் 30 சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது, அது மட்டுமல்ல பூமியை குளிர்ச்சியை பாதுகாக்கவும் நிலத்தடி நீர் குறையாமல் இருக்கவும் மழை கிடைக்கவும் அது காரணமாகிறது,

இதற்கு அதிக இடமோ அதிக சிரமமோ தேவையில்லை என்கிறார்கள் வல்லுனர்கள்

ஒரு பப்பாளி வளர்க்க.ஒரு கனசதுர அடி அளவு மண் போதுமானது
மூன்று கனஅடி இருந்தால் ஒரு முருங்கை நட்டு விடலாம்.
5 கனஅடி இருந்தால் வேம்பு நட்டு விடலாம்.

அதே போல வீட்டில் கழிவு நீரை செலுத்தினாலே போதும் மரத்திற்கு நீர் பாய்ச்ச செலவு செய்ய வேண்டியதில்லை,


(பணம் மரத்தில்தான் காய்க்கிறது
 “புதிய தலைமுறை” கட்டுரையிலிருந்து சில தகவல்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்க!)

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?  


மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.

எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.

மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

நகரங்களில் மரம் வளர்ப்பு!

நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

மரத்தினால் கிடைக்கிற ஏராளமான நன்மைகளை எண்ணிப்பார்ப்பதோடு எண்ணி முடித்துவிடாத நன்மைகளை முஹ்மமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன நன்மைகளை நாபகத்தில் வைப்போம்.

ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது கப்ரில் செடி வைக்கச் சொன்ன பெருமானார்.

عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وسلم قالسبع يجري للعبد أجرهن وهو في قبره وبعد موته : من علم علما أو كرى نهرا ، أو حفر بئرا ، أو غرس نخلا ، أو بنى مسجدا أو ورث مصحفا ، أو ترك ولدا يستغفر له ; : http://www.alifta.net/_layouts/images/UserControl-Images/MEDIA-H1.GIFأخرجه البزار وأبو نعيم والبيهقي في شعب الإيمان

தமது உறவினரின் மன்னறை அருகே செடி முளைத்த்திருப்பதை பார்த்து அகமகிழும் ஒரு சமுதாயத்தை பெருமானார் விட்டுச் சென்றார்கள்.

குறைந்த பட்சம் ஒரு விதையேனும் நம் எதிர்காலத்துக்காக விதைப்போம்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!

2 comments:

 1. மிக அருமையானதலைப்பு ஆழமான விஷயங்கள் இதை நாங்கள் உள் வாங்கி ஜீரணித்து இதை ஜம்ஆவில் உரையாற்றனும் அல்லாஹ் கல்வி ஞானத்தில் பரகத் செய்வானாக!

  ReplyDelete
 2. arumai but chennaila adamalai trichy la one ala half week kaa thodar malai
  kovaila veyilnaa ellaa idathulayum
  apdiye irukkumaa ?
  Ellorukkum porundhuramaari irundhaa innum sirappaa irundhurukkum

  ReplyDelete