வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 04, 2016

வஹாபிஸம் தீனை வேரறுக்கும் விஷம்


தமிழகத்தின் கவனத்தை தன் பால் ஈர்த்துவருகிற எழுத்தாளர் சமஸ் நேற்றைய தி ஹிந்து பத்ரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
காலத்தின் தேவை அறிந்து ஒரு சமூகக் கடமை நிறைவேற்றும் வண்ணம் அந்த கட்டுரை அமைந்துள்ளது.
கோஷம் போடத் திரளும் கூட்டமும் விளம்பர வெளிச்சமும் கிடைத்தால் மட்டுமே இன்றைய ஊடக உலகி எந்தச் செய்தியும் வெளிப்படும் என்ற நிலையில் இந்த ஒரு கட்டுரை தமிழகம் முழுவதிலுமுள்ள பல இலட்சக்கணக்கான பெரும்பான்மையான முஸ்லிம்களின் இதயக் குரலை அப்படியே பிரதிபலித்து விட்டது,
வெளிப்படத் தெரியாமல் விக்கித்து நின்ற ஒரு தலைமுறைக்கு செய்த உதவி இது
கட்டுரையின் தொடக்கத்தில் அவர் முன் வைத்திருக்கிற கேள்வி வெகு எதார்த்தமானது.
இப்போது எந்த வித அதிகாரமும் இல்லாத நிலையில் தர்காக்களை உடைக்கிறேன் என்கிறீர்களே உங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் கோயில்களையும் சர்ச்சுகளை இதே பெயரைச் சொல்லி நீங்கள் இடிக்க மாட்டீர்களா?
இன்று தவ்ஹீத் ஜமாத்திற்கு அவர்களது கூட்டம் சேர்க்கும் திரணை வைத்து ஆதரவு தெரிவிக்கிற ஆதரவு தெரிவிக்கிற அரசியல் கட்சிகளும்  - குறிப்பாக அஇஅதிமுகவும் காவல் துறையினரும். தமது சின்ன சின்ன தேவைகளுக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அத்தையோர் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கேள்வி இது.
கூட்டம் சேர்த்து விடுவார்கள், ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள் என்று சொல்லி காவல் துறை அவர்களது ஒவ்வொரு செய்கையையும் வேடிக்கை பார்க்கிறது, இந்த விஷமிகளை வைத்து முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்தி விடலாம் உடைத்து விடலாம் என்றும் கூட நம் நாட்டின் சில உயர் அதிகார வர்க்கம் கருதுகிறது,  
உண்மையில் எத்தகைய பாம்புக்கு பால் ஊற்றீ வளர்க்கிறோம் என்பதை தெரியாமல் அவர்கள் தவ்ஹீத் அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள்,
இந்தச் சூழலில் தி ஹிந்து வில் வெளியாகியுள்ள கட்டுரை அனைவரின் கண்களையும் திறக்க துணை செய்கிறது,
முஸ்லிம்களும் மற்ற சகோதரகளும் வஹாபிஸம் பேசும் இந்த தவ்ஹீதிய அமைப்புக்களை புரிந்து கொள்ள வேண்டும்.
எழுத்தாளர் சமஸ் அந்தக் கட்டுரையில் கூறியுள்ளவற்றில் நாம் முழுக்க உடன்பட்டு நிற்கிற இரண்டு செய்திகள் உண்டு, அது இந்த ஜும் ஆவில் உம்மத்திற்கு நினைவூட்ட வேண்டிய செய்திகள் என்பதால் இன்று இதைப் பற்றி பேசுகிறோம்.
“சர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சுறுத்தல் வஹாபியிஸம்”.
“இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!
(தி ஹிந்து 04.02.2016 இந்துத்துவா அடிப்படை வாதம் என்றால் வஹாபிஸத்திற்கு என்ன பெயர்?)
வஹாபிஸம் பொதுவான மனித சமூகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகும், காரணம். ஜிஹாது என்ற வார்த்தையை தவறாக அர்த்தப்படுத்தி அசிங்கப் படுத்தியதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு,
ஜிஹாது இஸ்லாமின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று
அது ஒரு போதும் மனிதகர்களை அநியாயமாக அழித்தொழிக்கிற சித்தாந்தம் அல்ல,
ஜிஹாதுக்கு அனுமதியளித்த பிறகு அதன் நியாயத்தை திருக்குர் ஆனின் அல் ஹஜ்ஜு அத்தியாயம் பேசுகிறது,
وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ(40)
ஜிஹாதின் மூலம் தீய சக்திகள் அடக்கி வைக்கப்படுகிறார்கள், அவ்வாறு செய்யாவிட்டால் சர்ச்சுகள் மடாலயங்கள் யூத சினகாஃகள், பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டிருக்கும் என்கிறது இந்த வசனம்
ஜிஹாதை புனிதமானது என்று சொல்வதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும். பள்ளிவாசல் இதில் நான்காவதாகவே சொல்லப்பட்டிருக்கிறது,
முஸ்லிம்களின் பாரம்பரியம் இது தான், அவர்கள் கோயில்களை இடிப்பவர்களாக, சர்ச்சுக்களை அவமதிப்பவர்களாக ஒரு போதும் இருந்தது இல்லை, அவ்வாறு செய்யும் படியான எந்த உத்தரவும் முஸ்லிம்களுக்கு இல்லை,
வரலாற்றில் சில இடங்களில் முழு உண்மையை அறியாமலேயே முஸ்லிம்கள் கோயில்களை இடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது, அது தனி ஒரு அத்தியாயமாக பேசப்பட வேண்டிய செய்தியாகும்.
எனவே ஜிஹாது எனபது தர்மயுத்தம் என்று அடையாளப்படுத்த வேண்டிய புனித யுத்தமாகும்.
அந்த ஜிஹாதை கொச்சைப் படுத்தி கொடூரங்களை அரங்கேற்றியவர்கள், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம்களை கொன்றொழித்தவர்கள் வஹாபிகள்,
அவர்களின் வரலாற்றை சற்றே கவனித்தால் இதை அறியலாம்.
இது ஹிஜ்ரி 15 ம் நூற்றாண்டு,
இன்றிலிருந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அதாவது ஹிஜ்ரீ 12 ம் நூற்றாண்டில் அரபு நாட்டின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரபு தீபகற்பத்தின் மத்தியில் இருந்த நஜ்து பகுதியில் உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடு தான் வஹாபிஸம,
இதன் நிறுவனர்கள் இருவர் முஹம்மது பின் அப்துல் வஹாப், மற்றொருவர் சவூதி அரச குடும்பத்தின் மூத்தவரான முஹம்மது பின் சவூத்.
முஹம்மது சவூதின் நாடு பிடிக்கும் ஆசைக்காக அப்துல் வஹ்ஹாப் உருவாக்கிய கொடுத்த முதல் தத்துவம் “ஜிஹாது” இத் தத்துவத்தின் மூலம் பாலைவனக் கொள்கைக் காரகளான சவூது குடும்பத்தினர் மக்களின் சொத்துக்களை அபகரிப்பதை நியாயப்படுத்திக் கொண்டனர், இதற்கான தாக்குதல்களை கஜவாத என்றும்  கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை கனீமத் என்றும் கூறிக் கொண்டனர், அரபுப் பிராந்தியத்தின் ஏராளமான முஸ்லிம்கள் இதனால் வேதனையும் துன்பமும் அடைந்தனர், இந்த நடவடிக்கையின் மூலம் முழு இஸ்லாமிய உலகமும் கட்டுப் பட்டுக் கிடந்த உதுமானிய கிலாபத்தை விட்டும் அவர்கள் வெளியேறினர்.
ஒன்று பட்ட தலைமையிலிருந்து வெளியேறியது, அநீதியாக முஸ்லிம்களின் சொத்துக் களை கொள்ளையடித்து கொலைகள் செய்தது ஆகிய இந்த இரண்டு அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்தியதிலிருந்தே வஹாபிஸம் தொடங்கியது,
இது எதார்த்த வரலாறாகும், திருத்தியோ மிகைப்படுத்தியோ கூறப்பட்டதல்ல,. வஹாபியத்திற்கு முன்னுரையாக விக்கீபீடியா இந்த விளக்கத்தை தருகிறது,

سلفية الوهابية أو الوهابية أو السلفية التوحيدية مصطلح أطلق على حركة إسلامية سياسية [1] قامت في منطقة نجد وسط شبه الجزيرة العربية في أواخر القرن الثاني عشر الهجري، الموافق للثامن عشر الميلادي على يد محمد بن عبد الوهاب (1703 - 1792) ومحمد بن سعود حيث تحالفا لنشر الدعوة السلفية. وقد كانت بدايتهما في الدرعية إذ أعلن محمد بن عبد الوهاب "الجهاد"[2] فشن سلسلة من الحروب (وكانوا يسمونها بالغزوات[3]) صادروا فيها أموال خصومهم من سكان شبه الجزيرة (وكانوا يسمونها بالغنائم[4]) وخسر فيها العديد من عوام المسلمين أرواحهم نتيجة لهذه الحروب، ما اعتبرتهم مصادر عديدة أنهم بذلك خرجوا علىالخلافة الإسلامية التي كانت تحت حكم العثمانيين.

இஸ்லாத்தில் ஏற்பட்ட முதல் குழப்பம் காரிஜிய்யாக்களுடையது, அவர்கள் தம்மைத் தவிர மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் காபிர்களாக்கினர். குர் ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள காபிர்கள் முஷ்ரிக்குகளைப் பற்றிய வசனங்களை அப்படியே முஸ்லிம்கள் மீது பொருத்தினர்,
பல கட்டங்களாக அரபு பிராந்தியங்களுக்குள் திடீர் தாக்குதல்களை நடத்தி மக்களை கொள்ளையடித்து நிலப்பரப்புக்களை வெற்றி கொண்ட வஹாபிகளை அவ்வப்போது உஸ்மானிய மன்னரின் படைப் பிரிவுகள் அடக்கி வைத்தன என்றாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனின் ஆதரவுடன் அப்துல் அஸீஸ் பின் ஸவூதின் தலைமையில் சவூதி அரேபியா அரசை அமைத்தனர், பன்னெடுங் காலமாக அரபு தேசம் எனறு அறியப்பட்ட நாட்டை சற்றும் தகுதியில்லாமல் சவூதி அரேபியா என்று மாற்றியதிலிருந்தே வஹாபிஸத்தின் அக்கிரம்க் கோட்பாட்டின் தீமையை நாம் உணரலாம்.  அன்றைய கால கட்டத்தில் அரபு பிரதேசத்தை ஹாஷிம் குடும்பத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னரை ஜோர்டானுக்கு செல்லும் படி பிரிட்டன் கேட்டுக் கொண்டது. அவர் வேறு வழியில்லாமல் அதற்கு இணங்கினார்,
வஹாபிஸம் கட்டவிழ்த்து விட்ட ஜிஹாதிய கோட்பாட்டு இஸ்லாமினுடையது அல்ல, தன்னுடைய சுய நலம் சார்ந்தது, அது தான் உலகின் பல பகுதிகளிலும் இன்று தான் தோன்றித் தனமாக ஜிஹாதுக்கு காரணமாகி இருக்கிறது,
இன்று ஜிஹாது என்ற வார்த்தை மிகத் தவறான ஒரு உருவத்தை பெற்றுக் கொண்டு முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு பிரதான காரணம் முஹம்ம்து பின் அப்துல் வஹாபின் வஹாபிஸமே காரணமாகும்.
வஹாபிஸம் தனது கொள்ளைக் கோட்பாட்டுக்கு துணைக்கு அழைத்துக் கொண்ட தத்துவம் தான்.

தூய இஸ்லாமிய வாதம்.


இது பல வகையிலும் தனக்கு முன் பிருந்த ஆயிரமாண்டு கால இஸ்லாமி சமூகத்தை இழிவு படுத்தும் செயலாகும்.
التوسل، والتبرك بالقبور وبالأولياء،
என்ற நடை முறை பெருமானார் காலத்திலிருந்து முஸ்லிம்களிடமிருந்த நடைமுறையாகும்.
அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தை பெற்ற ஒன்றை முன் வைத்து பிரார்த்தனை செய்வதே தவஸ்ஸுலாகும்.
இதில் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கோ தவ்ஹீதின் சித்தாந்திற்கோ எதிரான எந்தக் கோட்பாடும் கிடையாது,
இது அல்லாஹ்வும் இறைத்தூதரும் அனுமதித்த செயலாகும், முதல் முஸ்லிம் உம்மத் நடை முறைப்படுத்திய அமலுமாகும்.
التوسل في القرآن

1.       يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا اليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون.
2.     ولو انهم إذ ظلموا انفسهم جاؤوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله تواباً رحيماً
3.     اولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه ان عذاب ربك كان محذوراً
4.     قول يعقوب لأبنائه:(قَالَ سَوْفَ أَسْتَغْفر لَكمْ رَبّي إنَّه هوَ الْغَفور الرَّحيم 

التوسل في الأحاديث وفي حياة الأمة المسلة الآولي

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ البخاري 1010

நற்செயல்களை கொண்டு வஸீலா

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَرَجَ ثَلَاثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمْ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ فَقَالَ أَحَدُهُمْ اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ فَأَجِيءُ بِالْحِلَابِ فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي فَاحْتَبَسْتُ لَيْلَةً فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ قَالَ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ قَالَ فَفُرِجَ عَنْهُمْ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ فَقَالَتْ لَا تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ اتَّقِ اللَّهَ وَلَا تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ وَتَرَكْتُهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً قَالَ فَفَرَجَ عَنْهُمْ الثُّلُثَيْنِ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا فَإِنَّهَا لَكَ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فَكُشِفَ عَنْهُمْ- البخاري                    


وروي عن عثمان بن حنيف أنه قال: إن رجلاً ضريراً أتى النبي فقال: أدع الله أن يعافيني, فقال : (إن شئتَ دعوت, وإن شئتَ صبرتَ وهو خير), قال: فادعه, فأمره أن يتوضّأ فيحسن وضوءه ويصلّي ركعتين ويدعو بهذا الدعاء: (اللهمّ إنّي أسألك وأتوجّه إليك بنبيّك نبيّ الرحمة, يا محمد إنّي أتوجّه بك إلى ربّي في حاجتي لتقضى, اللهم شفّعه فيّ). قال ابن حنيف: فوالله ما تفرّقنا وطال بنا الحديث حتّى دخل علينا كأن لم يكن به ضرّ.  -  مسند أحمد
விசயம் இப்படி இருக்க தனது சுய விருப்பத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு முழு உம்மத்தையு ம் கேவலப்படுத்தும் விதத்தில் முழு உம்மத்தை காபிராக்கும் விதத்திலும் இதை ஷிர்க் என்று சொன்னது வஹாபிஸத்தின் மற்றொரு பெரும் கேடாகும்.
இந்தக் கருத்தின் மூலம் தமக்கு முந்தைய அத்தனை முஸ்லிம்களையும் – வஹாபிகள் ஷிர்க் வாதிகளாக மாற்றினர்,
இஸ்லாத்தின் அடையாளங்களை கணக்கின்றி சிதைத்தனர்,
வஹாபிஸத்தின் மூன்றவது பெரும் தீமை இமாம்களை பின்பற்றும் வழியிலிருந்து குர் ஆன் ஹதீஸ் என்ற பெயரைச் சொல்லி மக்களை திசை திருப்பியதாகும்.
உண்மையில் குர் ஆனும் ஹதீஸும் ஆய்வு செய்து விளங்கப்பட வேண்டும் என்பதே எதார்த்தம்,
மத்ஹபுகளின் இமாம்கள் குர் ஆனையும் ஹதீஸையும் ஆய்வு செய்தே சட்டங்களை கூறினர்.
முஹம்மது பின் அப்துல் வஹாப் தான் இப்னு தய்மிய்யாவின் வழி முறையை பின்பற்றுவதாக கூறினார்,
இப்னு தைமிய்யா பல விச்யங்களிலும் ஹன்பலி மத்ஹபை பின்பற்றினாலும் சில விசயங்களில் தனது சொந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதுவே சரி என்றார்
இது ஒரு ஆபத்தான போக்காகும்
மத்ஹபுகளின் இமாம்களது ஆய்வுகள் இறைய்சத்தின் பாற்பட்டதாகவும் ஆழ்ந்த ஆய்வை கொண்டதாகவும் இருந்த போது – இமாகள் அமைத்துக் கொடுத்த வழி முறைகளில் முழு முஸ்லிம் உலகமும் ஒன்று பட்டு நின்ற போது அதில் சிலதில் வேறுபடுவதாக கூறியதும் அதற்கு குர் ஆன் ஹதீஸ் என்று பெயரைச் சூடிக்கொண்டதும் சமூகத்தில் மிகப் பெரும் குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது,
அதே போல் பித் அத் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் சமுதாயம் கொண்டிருந்த அர்த்தம்
ما لا أصل له في الشريعة  ) إبن حجر العسقلاني )
என்பதாகும்,
இந்த அர்தத்தை மாற்றி பெருமானாரின் காலத்தில் இல்லாதது என்று சுய விளக்கம் கொடுத்தார் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்.
இது தனக்கு முந்தைய முஸ்லிம் உம்மத் முழுவதையும் ஷிர்க்கிலும் பித் அத்திலும் தள்ளுவதற்கு அவர் கையாண உத்தியாகும்.
இவரின் இந்தக் குழப்பம் குறித்து இவர் பிறப்பதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன்னரே பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்,
ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொன்டிருந்த போது அங்கு வந்த حرقوص بن زهير التميمي நீங்கள் நீதமாக நடந்து கொள்ள வில்லை என்றார், அவரே துல் ஹுவைஸிர்,
அவருடைய 16 தலைமுறையில் பிறந்தவர் தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்
أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ، قَالَ : بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْسِمُ قَسْمًا أَتَاهُ ذُو الْخُوَيْصِرَةِ , وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ , فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ اعْدِلْ . فَقَالَ : " وَيْحَكَ ! وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ ، فَقَدْ خِبْتُ وَخَسِرْتُ إِذَا لَمْ أَعْدِلْ " . فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ : يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " دَعْهُ , فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلاتَهُ مَعَ صَلاتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ ، يَقْرَءُونَ الْقُرْآنَ لا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ ، يَمْرُقُونَ مِنَ الإِسْلامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمَيَّةِ يَنْظُرُ إِلَى نَصْلِهِ فَلا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ يَنْظُرُ إِلَى نَضِيِّهِ , وَهُوَ قِدْحُهُ , فَلا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، ثُمَّ يَنْظُرُ إِلَى قُذَذِهِ فَلا يُوجَدُ فِيهِ شَيْءٌ ، قَدْ سَبَقَ الْفَرْثَ وَالدَّمَ ، آيَتُهُمْ رَجُلٌ أَسْوَدُ إِحْدَى عَضُدَيْهِ مِثْلُ ثَدْيِ الْمَرْأَةِ أَوْ مِثْلُ الْبَضْعَةِ تَدَرْدَرُ ، يَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ " . قَالَ أَبُو سَعِيدٍ : فَأَشْهَدُ أَنِّي سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَشْهَدُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَاتَلَهُمْ وَأَنَا مَعَهُ ، فَأَمَرَ بِذَلِكَ الرَّجُلِ فَالْتُمِسَ فَأُتِيَ بِهِ حَتَّى نَظَرْتُ إِلَيْهِ عَلَى نَعْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي نَعَتَهُ .

வஹாபிஸம் இந்த தீனை வேரறுக்கும் விஷம் முஸ்லிம் உம்மத்திற்கு பேராபத்தை உண்டு பண்ணக் கூடியவர்கள் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்,
இத்தகைய கொள்கையுடையோரை தத்தமது மஹல்லாக்களில் எச்சரிக்கையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
இல்லை எனில் இத்தகையோர் சகோதர சமூகங்களுக்கிடையே நிலவி வருகிற நல்லுறைவை குலைத்து விடுவார்கள்,
நம்முடைய தீனையும் சகஜ வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ள வஹாபிஸ சக்திகளிடமிருந்து அனைத்து வகையிலும் விலகி நிற்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.
இதில் சகஜமாக நடந்து கொள்ள முய்றசிப்பதோ , வஹாபிஸத்தை சரி காண்பதோ சமுதாயத்திற்கு மட்டுமல்ல மார்க்கத்திற்கும் செய்கிற தீமையாகும்.

அல்லாஹ் பாதுகாப்பானக!

2 comments:

  1. Anonymous7:26 PM

    وقال ابن حجر العسقلاني في «فتح الباري»: (أصلها ما أُحدِثَ على غير مثال سابق، وتطلق في الشرع في مقابل السُنّة فتكون مذمومة...) (4).

    ReplyDelete