வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 13, 2016

முத்தலாக் ! தீய திட்டங்களும் தேவையான சீர்திருத்தங்களும்



இஸ்லாமினுடைய ஒரு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
தொடர்ந்து நமது நாட்டில் நீதி மன்றங்கள் முஸ்லிம் தனி நபர் சட்டத்தில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றை அப்பட்பட்டமாக மீறி வருகின்றன.
இந்தியாவில் நடை பெருகிற விவாகரத்துக்களில் அனைத்து சமூகங்களோடும் ஒப்பிடுகிற போது முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை குறைவு, அதிலும் பெண்கள் பாதிப்புக்குள்ளாக்கப்படுவது மிகவும் குறைவு,
கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் விவாகரத்து செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இது விச்யத்தில் முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையாள்கிற ஜமாத்துக்கள் மிகவும் எச்சரிக்கையாகவே கையாள்கின்றன.  
இருப்பினும் ஏதாவது ஒரு வழக்கு கிடைத்து விடுகிற போது அதை வைத்து முஸ்லிம்களின் கலாச்சாரத்தையும் இஸ்லாமின் சட்டங்களையும் வம்புக்கிழுக்கிற நடைமுறையை நீதிமன்றங்கள் தொடர்ந்து கடைபிடிக்கின்றன,
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தலாக் முறையில் விவாகரத்து செய்யப்பட்ட சாய்ரா பானு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அவர் கூறியிருந்தார்
இவ்வழக்கின் விசாரனையில் தலாக் முறை தொடர்பான வழக்கில் மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
இதற்கான பதிலை சட்ட அமைச்சகம் இந்த மாத இறுதியில் அளித்தது, அதில் முஸ்லிம்களின் தலாக் முறையை எதிர்த்து மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு அவர்களது மதச் சட்டங்களின் படி வாழ்வதற்கான முழு உரிமையும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற நிலையில் மத்திய அரசு நீதிமன்றத்தை நிதானபப்டுத்த வேண்டிய தன்னுடைய கடமையை செய்யாமல் இந்துதுதுவ மனப்பான்மையோடு செயல்பட்டுள்ளது.
இது நீதிமன்றத்தின் தற்போதைய தலையீட்டுக்கு பின்னணியில் மத்திய அரசின் தூண்டுதல் இருப்பதற்கான வலுவான சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது நாட்டில் ஒரு பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்கான முய்றசியின் ஒரு படியாக மக்களிடம் கருத்துக் கேட்பு என்ற நாடகத்தில் இறங்கியிருக்கிறது,
அதற்காக ஒரு கேள்வித்தாள் ஒன்றை தயாரித்துள்ளது,
இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் வாலி ரஹ்மானி, ஜாமியத்-உலமா-ஏ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தில்லியில் செய்தியாளர்களிடம் நேற்று  வியாழக்கிழமை நடத்திய பத்ரிகையாளர் சந்திப்பில் “ சட்ட ஆணையத்தின் இந்த முயற்சிக்கு உடன்படாமல் நாங்கள் புறக்கணிப்போம். இந்த விஷயத்தில் எங்கள் சமூகம் மீது மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது அனைத்து மக்களையும் ஒருவகைப்பட்டவர்கள் என்று சித்திரிக்கும். இந்த நிலையானது நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பல்வகைமைக்கு அச்சுறுத்தலாக அமையும்.” என்று கூறியுள்ளனர்.
எனவே இது தொடர்பாக நேற்று முதல் கொண்டு ஒரு பிரச்சார இயக்கத்தை தொடங்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் தனி நபர் சட்ட உரிமையில் அற்பமான காரணங்களை சொல்லிக் கொண்டு அடிக்கடி தலையிடுகிற நீதிமன்றங்களின் போக்கு கண்டனத்திற்குரியது. அவற்றை பின்னாளிலிருந்து தூண்டிவிடுகிற இந்துத்துவ சக்திகள் நாட்டின் பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தவே முயற்சி செய்கின்றன என்பதை இந்த ஜும் ஆவின் மூலம் நாம் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போல சட்ட வாரியத்தின் போக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது போர் தொடுக்கும் போக்கு என்ற இஸ்லாமிய சட்ட வாரியத்தின் கருத்தையும் பொறுப்புள்ள இந்தியக் குடிமக்கள் என்றவகையில் ஆதரிக்கிறோம்.
இந்திய அரசியல் சாசனம வழங்கியுள்ள முஸ்லிம்களின் தனிநபர் உரிமையை பாதிக்கும் வகையில் இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நடைமுறைகளை முடக்கும் திட்டத்தோடு அரசும் அரசு சார்பு அமைப்புக்களும் தொடர்ந்து செயல்படுமானால் இந்தியாவில் இன்னொரு சுதந்திரப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டியது வரும் என்று அரசை எச்சரிக்கிறோம்.
நமது மார்க்கத்தின் நடைமுறையை குறை சொல்ல இந்த உலகில் எந்த சட்டத்திற்கும் தகுதியும் நியாயமும் இல்லை,
தலாக் சமப்ந்தமான விவாதங்கள் நடந்து கொண்டிருருக்கிற போது தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லிம் பெண்மணி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.
விவாகரத்து விசயத்தில் இந்துப் பெண்கள் தொடந்து பல தொல்லைகளுக்கும் அலைக் கழிப்புக்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி தீர்ப்பு வழங்கப்பட்டால் சரியான நீதி உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்கும் என்றார்
அது தான் உண்மை.
நமது மார்க்கம் அற்புதமான எளிமையான சரியான் வாழ்வியல் திட்டங்களை நமக்கு வழங்கியுள்ளது . இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதே நேரத்தில் தலாக் விசயத்தில் சரியான முறையில் அனுக வேண்டிய அதிகப்படியான பொறுப்புணர்வை இந்தச் சம்பவங்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுத்தியுள்ளன.
முஸ்லிம்கள் அனைவரும் தெளிவாகவும் அழுத்தமாகவும் ஒரு உண்மையை புரிந்து கொள்ள  வேண்டும்.
இஸ்லாம் ஒரு திருமண உறவை முறித்துக் கொள்ளும் நடை முறையை மிகுந்த எச்சரிக்கைப் பின்னரே அனுமதிக்கிறது,
முதலில் கணவன் மனைவி படுக்கையில் பிரிந்திருக்க வேண்டும்.
பிறகு இரு குடும்பத்தார் இணைந்து ஏற்படுத்தும் பஞ்சாயத்துக் குழுவினர் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்,
அவர்களும் விவகரத்து தான் தீர்வு என்று முடிவு செய்தால் தான் விவாகரத்தின் பக்கம் வரவேண்டும்.

وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقْ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا(35)

விவாகரத்து என்பது ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் சாதாரண விசயமல்ல.

ஆனுக்கும் சரி! பெண்ணுக்கும் சரி!\

அல்லாஹ் அனுமதித்த்தில் அவனுக்கு மிகவும் கோபமூட்டக்கூடியது தலாக்
عن ابن عمر عن النبي قال: أبغض الحلال إلي الله الطلاق – ابوداوود

மார்க்கத்தை கடைபிடிக்கும் ஒரு நல்ல முஸ்லிமுக்கு இதை விட வேறு எச்சரிக்கை தேவையில்லை.

முறையற்ற தலாக்கின் போது அல்லாஹ்வின் அர்ஸ் நடுங்குகிறது என்றும் ஒரு ஹதீஸ் உண்டு. (மஆரிபு

ஒரு பெண் முறையற்று தலாக் கேட்டால்
عن ‏ ‏ثوبان ‏ ‏قال  ‏قال رسول الله : ‏ ‏أيما امرأة سألت زوجها طلاقا في غير ما ‏ ‏بأس ‏ ‏فحرام عليها رائحة الجنة     ترمذي – 1108

இஸ்லாமில் தலாக் ஒரு ஆபத்தான சொல்! அதில் விளையாட்டுக்கு இடமில்லை

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرَّ

முத்தலாக் தேவையற்றது பாவகரமானது,

முஸ்லிம் தனி நபர்களும் பஞ்சாயத்து செய்கிற ஜமாத்தார்கள் பலரும் தவறாக புரிந்து வைத்திருக்கிற ஒரு விசயம்.

ஒரு திருமண உறைவை பிரிப்பதற்கு மூன்று தலாக் தேவை என்று நினைப்பதாகும்.

இது மிக மிக தவறானது. இது மிகப் பெரிய அறியாமையாகும். எவ்வளவு குடும்பத்தினரையும்  சமுதாயத்தையும் மார்க்கத்தையும் பெரும் சங்கடத்திற்கும் துயரத்திற்கும் ஆட்படுத்தக் கூடியது,

எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் பலர் இதை விளங்கிக் கொள்வதில்லை.
ஒரு தம்பதி பிரிந்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமானால் அதற்கு ஒரு தலாக்கே போதுமானது அந்தப் பெண் இத்தா இருக்கும் காலத்திற்குள் தம்பதிகள் விரும்பினால் சேர்ந்து கொள்ளலா.. இல்லை எனில் இத்தா காலம் முடிவடை வதோடு  தேவையான பிரிவு ஏற்பட்டு விடும்.

மூன்று தலாக் என்பது மூன்று தடவைகளில் தேவைக்கு பயன்படுத்துவதாகும் .
ஒரே தடவையில் மூன்றையும் சொல்லி விட்டால் அது செல்லுபடியாகவிடும் என்பது மட்டுமே மார்க்கத்தின் சட்டமாகும்.

மூன்றையும் சொல்ல வேண்டும் என்பது மார்க்க சட்டமல்ல, அதை தவறானது பாவகரமானது என்று மார்க்கம் சொல்கிறது.

இதை மீறி யாராவது மூன்று தலாகை ஒரே தடவையில் சொல்வார்கள் எனில் அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று இஸ்லாம் கூறுகிறது,

முப்தீ முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் இவ்வாறு மூன்று தலாக் சொன்னவர்களுக்கு உமர் ரலி அவர்கள் சவுக்கடி தண்டனை கொடுத்துள்ளார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்,

அதனடிப்படையில் ஒரு ஜமாத்தின் உத்தரவுக்கு காத்திராமல் ஒரு தனிநபர் தனது மனைவியை முத்தலாக் என்று நியாயமற்று சொல்லி விடுவாரானால் அவருக்கு தகுந்த தண்டைனை வழங்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்.
நம்முடைய நாட்டில் தண்டனை வழங்கும் அதிகாரம் ஜமாத்துக்களுக்கு இல்லை என்பதாக் அவ்வாறு செய்பவர்களை ஜமாத்திலிருந்து வெளியேற்றவோ அல்லது கடுமையான பைன் யோ அளிக்கலாம்

முத்தலாக்கை பயன்படுத்துவதால் சமுதாயம் ஆற்ற முடியாத பல ஆற்ற முடியாத வலிகளை சந்தித்திருக்கிறது.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு பெருநாள் அன்று ஒரு பெரிய குடும்பத்தினர் ஒன்றாக கூடியுள்ளனர், மதியம் விருந்துண்ட பிறகு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஒரு கணவன் தன் மனைவியை ப் பற்றி எதையோ கூற அவளும் தன் கணவனைப் பற்றி எதையோ கூற அது விளையாட்டகவே சற்று நேரம் கழிந்த போது மனைவி கணவரைப் பற்றி கூறிய ஒரு செய்தி சற்று அதிகப்படியானதாக் ஆகிவிட்டது. கணவன் உடனே மனைவியைப் பார்த்து முத்தலாக் என்று சொல்லி விட்டேன்,
அந்த மஹல்லாவையே உலுக்கிய சம்பவம் அது.

அந்த மஹல்லாவை மட்டுமல்ல. ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தின் மனசாட்சியை உலுக்கும் சம்பவம் இது.

தலாக் விச்யத்தில் சமுதாயம் எல்லா நிலையிலும் நிதானம் காட்ட வேண்டும்.
அல்லாஹ் வழங்கிய ஒரு உரிமையை கோபத்தில் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது,

மனிதனுடைய எதிரிகளில் மிகப்பெரிய எதிர் கோபம்

(جاء رجل إلى رسول الله - صلّى الله عليه وسلم - من بين يديه فقال يا رسول الله ما الدين فقال حسن الخلق ثم أتاه من قبل يمينه فقال ما الدين قال حسن الخلق ثم أتاه من قبل شماله فقال ما الدين قال حسن الخلق ثم أتاه من ورائه فقال ما الدين فالتفت إليه وقال أما تفقه هو أن لا تغضب).
கோபமான நிலையில் எடுக்கப்ப்படும் எந்த முடிவும் சோகத்தையே தரும், அது அநீதியாகவும் அமையும்.
அநீதி இழைக்கப்பட்டவருடை பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விற்கும் இடையே எந்த தடையும் இல்லை.
அநீதி இழைத்தவர்கள் யாரும் நிம்மதியாக சிறப்பாக வாழ்ந்து விட முடியாது,
நம்முடைய சமூகத்தில் ஆணவத்தின் காரணமாக முத்தலாக்கை பயன்படுத்துகிறவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களே சமுதாயத்திற்கு மார்க்க்கத்திற்கும் பெரும் துயரையும் துன்பத்தையும் ஏற்படுத்துகிறார்கள். அத்தகையோர் தான் காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் மார்க்கத்தை துணைக்கழைப்பதன் மூலம் மார்க்கத்தை கேவலப்படுத்து கின்றனர்.
முறையற்று முத்தலாக் விடுகிறவர்களுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் , அதற்கு ஒரு சட்டம் கொண்டுவந்தால் கூட அதை முஸ்லிம் சமுதாயம் ஏற்க தயாராக இருக்க வேண்டும்
ஏனெனில் அந்த அளவு கடும் குற்றமாகும் முத்தலாக் என்பது.
அரசாங்கமும் நீதித்துறையும் இஸ்லாமின் சட்டத்தை அமுல் படுத்தும் ஒரு சரியான வழிமுறையாக இது போன்ற ஒரு சட்ட திருத்ததிற்கு முயற்சி செய்யும் என்றால் முஸ்லிம் சமுதாயம் அதை ஆதரிக்கவே செய்யும்.
உண்மையான அக்கறை இருக்கும் என்றால் இது போன்ற ஒரு சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும்,
அதை விட்டு விட்டு தீய நோக்கோடு சிந்திக்கிற காரணத்தால் தான் இஸ்லாமின் மிக சிறப்பான சட்ட அமைப்பை கேலி செய்யும் முயற்சியிலும் முஸ்லிம்களின் அடிப்டை உரிமைகளில் கை வைக்கும் முயற்சியுலும் நீதிமன்றங்களும் அரசு அமைப்புக்களும் ஈடுபடுகின்றன.
முஸ்லிம் சமுதாயம் ஷரீ அத்த்தை விட்டுத் தர ஒரு போதும் சம்மதிக்காது.
நாட்டின் அடிப்படையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இஸ்லாமிய ஷரீஅத் நடை முறைகள் குறித்து தேவையற்ற விவாதத்தை கிளப்பி விட மத்திய அரசு முயற்சி செய்கிறது.
வீண் குழப்பத்தை ஏற்படுத்தி விசமப்பரீட்சையில் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசை இந்திய முஸ்லிம்கள் மெத்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறார்கள்.
அல்லாஹ் ஆட்சியாளர்களுக்க் நாட்டின் வளர்ச்சியில் உண்மையான அக்கறையோடு சிந்திக்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக! தீயவர்கள் தம் வாயால் ஊதியணைக்க முயற்சிக்கும் தீனுல் இஸ்லாமின் ஷரீஅத்தை அல்லாஹ் தனது வலிமையால் காப்பானாக! முஸ்லிம்கள் தமது உறுதியாலும் தெளிவான நடவடிக்கைகளாலும் அதை பின் பற்ற அல்லாஹ் கிருபை செய்வானாக!





7 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ்!மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் காலதாமதமானாலும் காரியம் ஆற்றத்தவறாத தங்களின் பணி போற்றுதலுக்குறியது.
    நெருக்கடியான நேரத்தில் நிதானமாகவும் அதேசமயம் தங்களுக்கே உரியபாணியில் ஆழமாகவும் அழுத்தமாவும் பதிவு செய்திரிக்கிற தங்களின் ஜும்ஆ உரை மகிழ்ச்சியை தருகிறது.

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை

    ReplyDelete
  3. al hamdulillah barakallah

    ReplyDelete
  4. mashaa allah arumaiyana pathivu

    ReplyDelete