வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 24, 2016

இரண்டாவது சிந்தனை


ஒரு விவகாரத்தில் இறங்குவதற்கு முன் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.
நமக்கும் பிறருக்கும் தேவையற்ற தொல்லைகள் ஏற்படுவதிலிருந்து அது பாதுகாப்பை தரும்.
முஅன் என்ற அரபு அரசர் ஒரு படை எடுப்பில் வெற்றி கண்டு நிறைய ஆட்களை சிறை பிடித்தார். ஏராளமான கொள்ளைப் பொருட்களைப் பெற்றார். தொடர்ந்து அவர் படை நடந்து கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் ஏராளமான புழுதி எழுந்து வானை அடைத்தது. எதிரிகள் பெரும் எண்ணிக்கையில் வருகிறார்கள் என நினைத்து அடிமைகள் அத்தனை பேரையும் கொல்ல உத்தரவிட்டார். சுமார் 4 ஆயிரம் பேர் நிமிட நேரத்தில் கொல்லப்பட்டனர். புழுதிக் காற்றுக்கிடையே காட்டுக் கழுதைகள் கூட்டமாக ஓடி வந்தன. அதுதான்  புழுதிப் புயலுக்காரணம் என்று பின்னர் தெரிய வந்தது, முஈனின் படையிலிருந்தவர்கள் அத்தனை பேரும் நடந்து விட்ட ஒரு பெரும் படுகொலைகளுக்காக  தீராத வருத்தமுற்றனர். அவர்கள் மட்டுமல்ல. வரலாறும் வருத்தமுற்றது.
“ழஹாயல் அஜ்லத்” அவசரத்தின் பலிகடாக்கள் என வரலாறு அந்த அடிமைகளை வர்ணிக்கிறது.
அலி ரலி அவர்கள் கூறினார்கள்
"التدبير قبل العمل يؤمنك مِن الندم" 
இன்றைய நவீன யுகத்தில் ஒரு அமைப்பின் வளர்ச்சி மற்றும் திட்டமிடுதலில் முன்கூட்டிய சிந்தனை என்பது வெற்றி பெறுவதற்கான முக்கியமான உத்தியாக கருதப்படுகிறது.
இராக்கின் மீது அமெரிக்கா யுத்தம் தொடுத்த கால கட்டத்தில் யுத்தம் எப்படி நடை பெற வேண்டும் எத்தனை நாட்களில் முடிய வேண்டும் என்பது குறித்த முன் கூட்டிய திட்ட மிட்ட யுத்த வடிவங்கள் அமெரிக்காவிற்கு அந்நிய பூமியில் பெரும் வெற்றியை தந்தன.
வளை குடா யுத்தத்தின் போது இராக் அதிபர் சதாம் ஹுசைன் ஸ்கெட் ரக ஏவுகணைகளை நிறைய வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொன்டவுடன் அதை எதிர் கொள்ள பேட்ரியாட் என்ற ஏவுகணை அழிப்பு ஏவுகணைகளை முன்னதாகவே தேவையான இடத்தில் அமெரிக்க நிலை நிறுத்தியிருந்தது. இதனால் இராக்கின் தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அமெரிக்காவிடம் வலுவான தொழில் நுட்பம் மிக்க இராணுவம் உள்ளது. எந்த சிறிய நாடும் அதற்கு ஒரு பொருட்டல்ல. இராணுவ பலத்தால் வென்று விட முடியும். ஆயினும் அதிக சேதாராமில்லாத  விரைவான வெற்றி என்ற இலக்கிற்கு அமெரிக்கா அதிகமாக யோசிக்கிறது. 

அமெரிக்க இராணுவத்தை பொருத்த வரை முன் கூட்டிய போதுமான ஆய்வு சிந்தனை என்பது மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
அதன் விரைவான வெற்றிகளில் இந்த இயல்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மாபெரும் வெற்றிகளில் இந்த இயல்புக்கு மிக முக்கியம் இடம் இருந்தது.
ஒரு மாபெரும் பொறுப்புக்கு பெருமானை தயார் படுத்த அல்லாஹ் கொடுத்த அறிவுரைகள்
أَمَرَنِي رَبِّي بِتِسْع : خَشْيَةِ الله في السِّرِّ والعلانية ، وكلمة العدل في الغضب والرضى ، والقصد في الفقر والغنى ، وأن أَصِلَ مَنْ قَطَعَنِي ، وأعطي مَنْ حَرَمَنِي وأعْفُوَ عَمَّنْ ظَلَمَنِي ، وأن يكون صَمْتي فِكْرا ، ونُطْقِي ذِكْرا ، ونظري عبرة عن أبي هريرة ، = الترغيب والترهيب

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஹிஜ்ரத் பயணத்தின் போது பெருமானார் (ஸல்) தனக்கேற்பட்ட ஒரு அவசரத்தில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொருட்களை திருப்பி ஒப்படைப்பது குறித்து சிந்தித்து அதற்காக அலி ரலி அவர்களை நியமித்து விட்டு வந்தார்கள். இல்லை எனில் இந்த ஒரு விவகாரத்தை வைத்தே முஹம்மது (ஸல்)அவர்கள் மீது எதிரிகள் அவதூறுகளை பரப்பி இருப்பார்கள்.
·         விலை கொடுத்து ஒட்டகையை வாங்கினார்கள்
·         தவ்ரு குகையில் பதுங்கியிருக்க முடிவு செய்தார்கள்
·         தவ்ருக்கு அந்த ஒட்டகையை மூன்று நாட்களுக்கு பிறகு கொண்டு வர வழிகாட்டியை கூலிக்கு அமர்த்திக் கொன்டார்கள்
·         தவரில் தங்கியிருக்கும் போது தேவையான உணவு மற்றும் செய்திகளை கொண்டு வர ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டார்கள்

ஹிஜ்ரத் பயணம் வெற்றி பெற்றதற்கு இந்த முன் கூட்டிய சிந்தனையும் ஒரு முக்கியக் காரணமாகும்.
அதே போல ஹிஜ்ரீ 6 ம் வருடம் ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த கால கட்டத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சண்டை நடத்தி மக்காவை கைப்பற்றி இருக்க முடியும் ஆனாலும் அப்போது காலித் பின் வலீத் அம்ரு பின் ஆஸ் போன்ற பெரும் வீரர்கள் மக்காவின் காபிர்களின் அணியில் இருக்கையில் அது ஒரு தீர்க்கமான சண்டைக்கும் இரத்தம் சிந்துதலுக்கும் வலி வகுக்கும் முஹ்ம்மது (ஸல்) அவர்கள்  இரத்த வெள்ளத்தில் மக்காவை கைப்பற்றினார்கள் என்று வரலாறாகிவிடும் என பெருமானார் சிந்தித்தார்கள். எனவே மக்காவை கைப்பற்றும் சிந்தனையை விட்டுவிட்டு மக்காவின் காபிர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் மனோ நிலைக்கு வந்தார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் வந்தவுடன் மதீனத்து தோழர்களோடு சகோதரத்துவ பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன் செய்த காரியம். மதீனாவின் தோழர்களை தொடர்ந்து சகோதர சண்டைக்கு தூண்டி விட்டுக் கொண்டிருந்த யூதர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
ஹிஜ்ரீ 8 ம் வருடம் மக்காவை கைப்பற்றிய போதும் மிகுந்த முன் யோசனையோடு இந்த செய்தியை மிகவும் இரகசியமாக வைத்துக் கொன்டு பெரும் படையை திரட்டினார்கள்.
பெரும் படையுடன் திடீரெனச் சென்று மக்கா வாசிகளின் முன்னே நின்றால் அவர்கள் சண்டையில்லாமல் சரணடைந்து விடுவார்கள் என்பதே காரணம், இந்த முன்யோசனை பெருமானாருக்கு மகத்தான் வெற்றியை அவர்கள் மனம் விரும்பியபடி மக்காவிற்குள் சண்டை எதுவும் நடக்காமலே பெற்றுத் தந்தது.
ஒரு விசயத்திற்காக நீண்ட நேரம் யோசிப்பது முன்னோர்களின் வழி முறை. அதை சொர்க்கத்திற்கான பாதை என்றார் லுக்மான் (அலை)
ان لقمان يطيل الجلوس وحده، فكان يمر به مولاه فيقول: يا لقمان، إنك تديم الجلوس وحدك فلو جلست مع الناس كان آنس لك. فيقول لقمان: «إن طول الوحدة أفهم للفكر، وطول الفكر دليل على طريق الجنة

அதனால் சிந்தனையும் யோசனையுமே வணக்கமாக மாறிவிடுகிறது
عن عبد الله بن عتبة قال: سألت أم الدرداء، ما كان أفضل عبادة أبي الدرداء، قالت: «التفكر والاعتبار

ஒரு வியாபார நடவடிக்கை, ஒரு குடும்பத் தீர்மாணம், ஒரு சமூக திட்டம் ஒரு சொற்பொழிவு அரசுகளின் அவசர நிலை பிரகடணம் எதுவாக இருப்பினும் அது முன் கூட்டிய சரியான சிந்தனையின் அடிப்படையில் அமைய வேண்டும்.

வெறும் ஆசை அல்லது கோபம் அல்லது வரட்டுத்தனமான முடிவுகளின் அடிப்படையில் செய்யப்படும் செயல்கள் நமக்கும் மக்களுக்கும் தொல்லைகளை தந்து விடும்.

சிந்தித்து ஒரு திட்டத்தில் இறங்குகிற போது சில வேலைகளில் நாம் சிந்தித்ததற்கு மாற்றமாக காரியங்கள் நடக்கலாம். அல்லது நாம் சிந்தித்ததை விட நல்ல திட்டங்கள் தோன்றலாம் அத்தகைய சந்தர்பங்களில் மறு யோசனை என்பது ஏற்கப்பட வேண்டியது ஒரு இயல்பாகும்.

முன் யோசனையின்றி செய்து விட்ட ஒரு காரியத்தால் ஏற்படும் தீமைகளிலில் இருந்து விலகிக் கொள்வதற்காக மறு யோசனை க்கு செல்வது மானுடக் கடமையாகும்.

நான் சத்தியமே செய்திருந்தாலும் அதை விடச் சிறப்பானதைக் கண்டால் சத்தியத்தை முறித்து விடுவேன் என்றார்கள் பெருமானார் (ஸல்)

قول النبي صلى الله عليه وسلم: ((إذا حلفت على يمين ورأيت غيرها خيراً منها، فكفر عن يمينك وأت الذي هو خير\

நன்மையின் பாதையில் இரண்டாவது யோசனைக்கான பாதையை திறந்து விடும் அற்புதமான நபி மொழி இது.

ஒரு நெருக்கடியில் தேன் சாப்பிட மாட்டேன் என பெருமானார் (ஸல்) அவர்கள் சத்தியம் செய்த போது அல்லாஹ் அதை மாற்றிக் கொள்ளுமாறு சொன்னான்.

பல விசயங்களில் தோழர்களின் கருத்துக்களை ஏற்று நபி (ஸல்) அவர்கள் மறு யோசனைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்
ஒரு விசயத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடும் எனும் போது.

روى الإمام مسلم عن أبي هريرة رضي الله عنه أنه قالكنا قعودا حول رسول الله صلى الله عليه وسلم معنا أبو بكر وعمر في نفر، فقام رسول الله صلى الله عليه وسلم من بين أظهرنا فأبطأ علينا وخشينا أن يقتطع دوننا وفزعنا فقمنا، فكنت أول من فزع فخرجت أبتغي رسول الله صلى الله عليه وسلم حتى أتيت حائطاً للأنصار لبني النجار فدرت به هل أجد له بابا فلم أجد، فإذا ربيع يدخل في جوف حائط في بئر خارجة، والربيع الجدول، فاحتفزت كما يحتفز الثعلب فدخلت على رسول الله صلى الله عليه وسلم: فقال: أبو هريرة؟ فقلت: نعم يا رسول الله، قال: ما شأنك؟ قلت: كنت بين أظهرنا فقمت فأبطأت علينا فخشينا أن تقتطع دوننا ففزعنا، فكنت أول من فزع فأتيت هذا الحائط فاحتفزت كما يحتفز الثعلب وهؤلاء الناس ورائي، فقال: يا أبا هريرة وأعطاني نعليه، قال: اذهب بنعلي هاتين فمن لقيت من وراء هذا الحائط يشهد أن لا إله إلا الله مستقينا بها قلبة فبشره بالجنة، فكان أول من لقيت عمر، فقال: ما هاتان النعلان يا أبا هريرة؟ فقلت: هاتان نعلا رسول الله صلى الله عليه وسلم بعثني بهما من لقيت يشهد أن لا إله إلا الله مستيقنا بها قلبه بشرته بالجنة، فضرب عمر بيده بين ثديي فخررت لاستي، فقال: ارجع يا أبا هريرة، فرجعت إلى رسول الله صلى الله عليه وسلم فأجهشت بكاء وركبني عمر فإذا هو على أثري، فقال لي رسول الله صلى الله عليه وسلم: ما لك يا أبا هريرة؟ قلت: لقيت عمر، فأخبرته بالذي بعثتني به فضرب بين ثديي ضربة خررت لاستي، قال: ارجع، فقال له رسول الله صلى الله عليه وسلم: يا عمر ما حملك على ما فعلت؟ قال: يا رسول الله بأبي أنت وأمي ابعثت أبا هريرة بنعليك من لقي يشهد أن لا إله إلا الله مستيقنا بها قلبه بشره بالجنة؟ قال: نعم، قال: فلا تفعل فإني أخشى أن يتكل الناس فخلهم يعملون، قال رسول الله صلى الله عليه وسلم فخلهم.

ஒரு திட்டத்தால் அதிக நன்மை எனும் போது
பத்று யுத்தத்தின் போது களத்தின் முன்பகுதியில் ஒரு கிணற்றின் அருகே தங்கலாம் என பெருமானார் (ஸல்) அவர்கள் முடிவு செய்த போது அதை அருமையாக மறுத்து இன்னும் உள்ளே சென்று அனைத்து நீர் நிலைகளையும் நாம் கைப்பற்றிக் கொண்டு அனைத்து நீர்நிலைகளையும் நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என ஹப்பாப் (ரலி) கூறிய ஆலோசனையையை பெருமானார் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள் ,
எனக்கு நீ என்ன ஆலோசனை கூறுவது என்று கேட்க வில்லை.
قال: ابن إسحاق في حديثة عن غزوة بدر: "ومضت قريش حتى نزلوا بالعدوة القصوى من الوادي ..، فخرج رسول الله -صلى الله عليه وسلم- يبادرهم إلى الماء، حتى أدنى ماء من بدر نزل عليه".
قال ابن إسحاق: فَحُدِّثتُ عن رجال من بني سلمة أنهم ذكروا أن الحباب بن المنذر بن الجموح قال: يا رسول الله، أرأيتَ هذا المنزل، أمنزلًا أنزلكه الله ليس لنا أن نتقدمه، ولا نتأخر عنه، أم هو الرأي والحرب والمكيدة؟ قال: بل هو الرأي والحرب والمكيدة. فقال: يا رسول الله فإن هذا ليس بمنزل، فانهض بالناس حتى نأتي أدنى ماء من القوم، فننزله، ثم نعورّ  ما وراءه من القُلُب، ثم نبني عليه حوضًا فنملؤه ماء، ثم نقاتل القوم، فنشرب ولا يشربون، فقال رسول الله -صلى الله عليه وسلم: لقد أشرت بالرأي، فنهض رسول الله -صلى الله عليه وسلم- ومن معه من الناس، فسار حتى إذا أتى أدنى ماء من القوم نزل عليه، ثم أمر بالقُلُب فعوّرت وبنى حوضًا على القليب الذي نزل عليه فمُلئ ماءً، ثم قذفوا فيه الآنية

மக்கா வெற்றிக்கு சற்று முன்னதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மக்காவின் தலைவர் அபூசுப்யான் ரலி அவர்களுக்கு இஸ்லாமிய படையின் வலிமையை காட்டுவதற்காக மக்காவின் வாசலில் அவரை நிற்க வைத்த பெருமானார் (ஸல்) அவர்கள்  படை முழுவதும் அவரை கடந்து செல்லுமாறு உத்தரவிட்டார்கள். இந்த திட்டம் மக்காவின் முந்தைய தலைவருக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது என்றால் அதற்கடுத்த அப்பாஸ் ரலி சொன்ன ஒரு யோசனையை பெருமானார் (ஸல்) அவர்கள் ஏற்றார்கள் . அது அபூசுப்யான் ரலி அவர்களை அதிக மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

وحين دخل الرسول صلى الله عليه وسلم مكة فاتحاً لها، أشار عليه عمه العباس بقوله: يا رسول الله! إن أبا سفيان رجل يحب الفخر، فاجعل له شيئاً، فاستجاب النبي صلى الله عليه وسلم لمشورة عمه، وقال: (نعم، من دخل دار أبي سفيان فهو آمن، ومن أغلق عليه بابه فهو آمن، ومن دخل المسجد الحرام فهو آمن)
 رواه أبو داود. 

ஒரு திட்டத்தால் அதிக  பாதிப்பு எனும் போது

ஆரம்ப காலத்தில் மரணத்திற்காக அழுவதை தடை செய்த பெருமானார் (ஸல்) அவர்கள் அழுவதை அறவே தடுக்க முடியாது என்று கூறி சட்டையை கிழித்துக் கொள்வதையும் ஓலமிடுவதையும் தடுத்தார்கள்

ن عائشة قالت لما أتى نعى زيد بن حارثة و جعفر بن أبى طالب و عبد الله بن رواحة جلس رسول الله صلى الله عليه و سلم يعرف فيه الحزن و أنا أنظر من صئر الباب فجاءه رجل فقال إن نساء جعفر يبكين فقال رسول الله صلى الله عليه و سلم انطلق فانههن فانطلق ثم جاء فقال قد نهيتهن فأبين أن ينتهين فقال انطلق فانههن فانطلق ثم جاء فقال قد نهيتهن فأبين أن ينتهين قال فانطلق فاحث في أفواههن التراب فقالت عائشة فقلت أرغم الله أنف الابعد إنك و الله ما تركت رسول الله صلى الله عليه و سلم و ما أنت بفاعل 

أن سلمة بن الا رزق قال سمعت أبا هريرة قال مات ميت من آل رسول الله صلى الله عليه و سلم فأجتمع النساء يبكين عليه فقام عمر ينهاهن و يطرد هن فقال رسول الله صلى الله عليه و سلم دعهن يا عمر فان العين دامعة و القلب مصاب و العهد قريب دعوى الجاهلية




  • முன் யோசனையோடு தான்  எந்த காரியத்திலும் இறங்க வேண்டும்.
  • அதே போல ஒரு காரியத்தில் இறங்கிய பிறகு அதில் ஒரு மறு சிந்தனை தேவை என்றால் அதற்கு தயங்க கூடாது
  • இது சாமாணிய மனிதர்கள் கடை பிடிக்க வேண்டிய நெறியாகும்
  • தலைவர்களுக்கோ இதுவே தர்மமாகும்.

துரதிஷ்ட வசமாக அதிகமாக பேச மட்டுமே தெரிந்த நம்முடைய பிரதமருக்கும் இந்த தர்ம சிந்தனை அறவே இல்லாமல் போய் விட்டது.

70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் தான் ஒரு அதிரடி நபராக ஆக வேண்டும் என்ற திட்டத்தில் உயர் மதிப்புக் கொண்ட நாணயங்களை செல்லாது என அவர்க் அறிவித்தார்.

சாமாண்ய மக்கள் அதனால் பெரும் இன்னலை அனுபவித்து வருகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது.

பிரதமரோ அவரது செய்கையில் தானே மகிழ்ச்சியடைபவராய் அவரைச் சுற்றி இருப்போர் கூறும் வாழ்த்துரைகளை மட்டுமே கவனிப்பவராய் இருக்கிறார்/

இது வரை சுமார் 65 பேர் இறந்து போயிருக்கிறார்கள்.

நேற்று நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமானா மன்மோகன் சிங் பிரதமரின் இந்த திட்டம் குறித்து மிக சரியான விமர்சனத்தை யும் கருத்தையும் முன் வைத்திருக்கிறார்.

வங்கிளில் தாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை தமது தேவைக்கு எடுக்க முடியாத படி தடுத்த ஒரே அரசியல் நடவடிக்கை உலக அளவில் இது மட்டுமே என்ற அவர்
“எந்த நாட்டிலாவது மக்கள் வங்கியில் டெபாசிட் செய்த தங்கள் பணத்தை, தங்களாலேயே எடுக்க முடியாது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அரசின் நடவடிக்கை, திட்டமிட்ட கொள்ளை, சட்டப்பூர்வமான சூறையாடல் என்று அவர் விமர்சித்துள்ளார்.

இனியேனும் இந்த தேசத்தின் ஏழைகளின் துயரத்துக்கு தீர்வுகாண நல்ல முடிவுகளை பிரதமர் எடுப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று மாநிலங்களவையில் மன்மோகன் சிங் கூறினார்.

அரசு தனது அகமபாவ சிந்தனையை விட்டு விட்டு மறு யோசனைக்கு வருமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

நாட்டு மக்களை வகை தொகையின்றி துன்புறுத்தி விட்டு இதை தேசபக்தி என்று கூறும் மூர்க்கத்தனம் தான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உண்மை முகம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 


பின்வாங்குதல் என்பது பிரதமரின் இரத்ததில் கிடையாது என்கிறார் வெங்கைய்யா நாயுடு.

கேள்வி அவருக்கு இரத்தம் இருக்கிறதா என்பதல்ல. இதயம் இருக்கிறதா என்பதாகும்.


அல்லாஹ் ஆட்சியாளர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்குவானாக! மக்களிடம் இறக்கம் காட்டும் இயல்பை ஏற்படுத்துவானாக! 
மக்களிடம் இறக்கம் காட்டாதோரை அல்லாஹ் அதிகாரப் பொருப்பிலிருந்து அகற்றுவானாக!





2 comments:

  1. அருமை...
    அல்ஹம்துலில்லாஹ்...

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்! நல்ல பல விஷயங்களை பெற்றேன்.

    ReplyDelete