வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 23, 2017

மொழி எனும் அருள்


பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய் மொழிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
1999 ம் ஆண்டு இந்த நாளை உலக தாய் மொழிகள் தினம் என நா வின் சார்பு நிறுவனமான யுனஸ்கோ  அறிவித்தது.
பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது

மக்களின் பேச்சு வழக்கில் இருக்கிற மொழிகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நினைத்த ஐக்கிய நாடுகள் சபை இதற்காக பிப்ரவரி 21 ம் தேதியை தேர்வு செய்ய என்ன காரணம் எனில் ?
பங்களா தேஷ் பாக்கிஸ்தானோடு இணைந்திருந்த  போது 1952 ம் ஆண்டு அந்நாட்டு மாணவர்கள் தங்களது தாய் மொழியான வங்காள மொழியையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று போராடினார்கள் . ஆனால் அப்போதைய பாகிஸ்தானிய அரசு டாக்கா பல்கலை கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அடக்குமுறையை ஏவியதில் பலர் கொல்லப்பட்டனர்.  தம் தாய் மொழிக்காக உயிர் துறந்த வங்காள தேசத்து மக்களின் தாய்மொழிப் பற்றை நினைவு கூறும் வகையிலேயே அவர்கள் கொல்லப்பட்ட பிப்ரவரி 21 ம்  தேதியை உலக தாய்மொழிகள் தினமாக நா ஏற்றது. அதை ஏற்று உலக நாடுகள் அன்றை தினத்தை தாம் மொழிகள் தினமாக அனுசரிக்கின்றன. பல் வேறு சமூகங்களின் தாய் மொழிகளைப் பாதுகாப்பதற்காக பல் வேறு நடவடிக்கைகள் அன்றைய தினத்தை முன்னிடு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பேச்சு மொழி என்பது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய மாபெரும் அருளாகும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் பேச்சு இல்லாவிட்டால் மனித வாழ்விற்கு அழகேது.
அத்தியாவசிய தேவைகளை சைகைகளை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளலாம் ஆனால் மனித அறிவின் விசாலத்தையும் அழகையும் வெளிப்படுத்த மொழியை விட்டால் வேறு வழி ஏது ?
மொழி – பேச்சு என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
மற்ற விலங்குகளுக்கும் பேசும் திறன் இருக்கிறது என்பது இஸ்லாமின் கருத்தாகும்.
وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ ۖ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ ۖ

ஹுத் ஹுத் பறவை சுலைமான அலை அவர்களோடு பேசியதையும், எறும்பு தன் கூட்டத்தோடு பேசியதையும் நம்ல் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் விலங்குகளோடு பேசிய செய்திகள் ஹதீஸ்களில் உண்டு,.
நவீன் விஞ்ஞானமும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது.
விலங்குகளின் பரிபாஷைகளை பற்றிய் ஆய்வுகள் இப்போது பன் மடங்கு அதிகரித்திருக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த விலங்கியல் அறிஞர் டாக்டர் ஜெரால்தீக் பறவைகளுக்கு திட்டவட்டமான ஒரு மொழி வடிவம் இருக்கிறது என்று கூறுகிறார்.
தேனீ அதன் நடனத்திலேயே பாஷையை வெளிப்படுத்துவதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே பேசும் திறன் பலருக்கும் இருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் பேசும் திறன் என்பது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பேசும் திறன் ஆகும்.
( இன்சான் என்பத்ற்கு ஹயவான் நாதிக் என்று மன் திக்கில் விளக்கம் சொல்வார்களே அதற்கு கருத்துக்களை விளங்கி பேசும் திறன் உடைய விளங்கு என்பதே பொருளாகும். )
மனிதன் தன் பேச்சுத் திறனால் மகத்தான் விளைவுகளை ஏற்படுத்த் முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மரணித்த வேலையில் அபூபக்கர்
أما بعدمن كان منكم يعبد محمداً صلى الله عليه وسلم فإن محمداً قد مات،  ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت، وفي براعة ولباقة وتوفيق قرأ الآية الكريم: ((وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِينْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ ))

இது சம்பந்தமாக பேசுகிற போது இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுவார்கள்.

يقول ابن عباس رضي الله عنهما: والله! لكأن الناس لم يعلموا أن الله أنزل هذه الآية حتى تلاها أبو بكر فتلقاها الناس كلهم، فما أسمع بشراً من الناس إلا يتلوها.

இந்த வசனம் சஹாபாக்களுக்கு நினைவில் இல்லாமல் இல்லை, ஆனால் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அதை எடுத்துச் சொன்ன விதத்தில்  அவர் முன் வைத்த வாதத்தி.லிருந்த  சத்தியத்தை தோழர்கள் புரிந்து கொண்டார்கள்,
அந்தப் பேச்சுக்கு இஸ்லாமிய வரலலாற்றின் முக்கியத்துவம் எத்தையது என்பதை சிந்தித்துப் பார்க்கிற எவருக்கும் புரிய வரும்.
இஸ்லாம் எனும் மாபெரும் இயக்கம் கட்டுக் குலைந்து விடாமல் காப்பாற்றிய மந்திர்ச் சொற்கள அவை                                                                     
கிரேக்க சக்ரவர்த்தி அலக்சாணடருக்கும் அவரது படை வீரர்களுக்கும் இந்தியப் படையெடுப்பின் போது பிரச்சனை ஏற்பட்டது, அந்த சமயத்தில் வீரர்கள் மத்தியில் அலக்ஸாண்டர் ஆற்றிய உரை அவரது வீரர்களின் போராட்டத்தை தடுத்து அவரது ஆதரவாளர்களாக மாற்றியது என வரலாறு கூறுகிறது.
பேச்சு என்பது ஒரு பெரும் சக்தி, சந்தேகமே இல்லை,
சவூதி அரேபியாவின் பிரபல எண்ணை நிறுவனமான ஆரெம்கோ நிறுவனத்தின் முதல் தலைமை அதிகாரி ஷைகு யாசீனைப் பற்றி கலைக் களஞ்சியம் இப்படிச் சொல்கிறது,
அவர் யாரிடமாவது சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு உன்னுடைய இடது கையை தா என்று கேட்டால், வெட்டிக் கொடுத்து விடுவார்கள்  
சிறந்த வியாபாரிகள் வலிமை மிக்க அரசியல் தலைவர்கள் பலரும் பேச்சுத்திறன் மிக்கவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் கொடைகளில் பிரதானமான ஒன்று கருத்துக்களை பேசுவதற்கேற்ற மொழிகளை வழங்கியதாகும்.
அந்த மொழிகளை பல்லாயிரக்கணகான ஒலி வடிவத்தில் அமைத்திருப்பது அல்லாஹ்வின் பேராற்றலுக்கு சாட்சியாகும்.
"وَمِنْ آيَاتِهِ خَلْقُ السّمَاوَاتِ وَالأرْضِ وَاخْتِلاَفُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنّ فِي ذَلِكَ لاَيَاتٍ لّلْعَالَمِينَ"( الروم:22)

உலகில் திட்டவட்டமாக எவ்வளவு மொழிகள் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை, ஏறத்தாழ 6000 திலிருந்து 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதிகமான மக்களால் பேசப்படுகிற மொழி என 13 மொழிகளை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன,
சீன மொழியான மாண்டிரினை தாய் மொழியாக பேசுகிறவர்கள் தான் உலகில் அதிகம். 881/2 கோடி மக்கள் மாண்டிரினை தாய மொழியாக பேசுகின்றனர்,
அடுத்ததாக
அரபு 40 கோடி
ஸ்பானிஷ் 33.2 கோடி
ஆங்கிலம் 32.2 கோடி’
வங்காளம் 18.9 கோடி
இந்தி 18.2 கோடி
போர்ச்சுக்கல் 17.75 கோடி
ரஷ்யா 17 கோடி
ஜப்பான் 121/2 கோடி
ஜெமனி 10.2 கோடி
பிரஞ்சு 10 கோடி
(இவை 1999 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகும்)
இதில் மக்கள் இரண்டாவது மொழியாக அதிகம் பயன்படுத்துவது ஆங்கிலமும் பிரஞ்சுமாகும். அதனால் உலகில் ஆங்கிலம் பிரஞ்சு பேசுவோரின் எண்ணிக்கையே அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன,
சிறுபான்மையின மொழிகள் கிளை மொழிகளின் எண்ணி கணக்கிடுவது சாத்தியமற்றது, இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின் படி இந்தியாவில் 29 மொழிகள் பத்து லட்சத்துக்‌கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் 10 000 மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன.
மக்களின் மொழிகளில் உள்ள வேறு பாடு என்பது மிக நளினமாகவும் நுட்பமாகவும் இருப்பதை  கண்டு இறைவனின் படைப்பு இரகசியத்தை இரசிக்கிற மனிதர்கள் பிரமிக்கவே செய்வார்கள்.
அல்லாஹ்வின் படைப்பாற்றலின் பிரம்மாண்ட வெளிப்பாடாகவும் நமக்கு கிடைத்திருக்கிற மாபெரும் கொடையான மொழியை – பாதுகாத்துக் கொள்வதும் வளப்படுத்திக் கொள்வதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அரபுகள் தங்களது பிள்ளைகளை மொழியை பாதுகாக்கிற நோக்கத்திலேயே கிராமங்களுக்கு பால் கொடுக்க அனுப்புவார்கள் என்று வரலாறு சொல்கிறது..
தாய் மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளமாகும் , தாய் மொழியை தொலைப்பது அடையாளத்தை அழிப்பதாகும்.
மொழி என்பது ஒரு சமூகமாகவும் கலாச்சாரமாகவும் மனிதனை பிணைக்கிறது.  தாய் மொழியை விட்டு விடுகீற போது மனிதன் தனது சமூக தொடர்பையும் கலாச்சாரத்தையும் தவறவிட்டு விடுகிறான்.
 சான் கிரகாம் 
மொழி ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கான  கருவி எனக்கூறுவது முழுமையற்ற  ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிருக்கிறது.

இந்தக் கருத்தை மிக ஆழமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கடமை இன்றைய சமூகங்களுக்கு இருக்கிறது, வியாபாரத்தொடர்பிற்கான அல்லது குடியேறிய பகுதி சார்ந்த மொழிகளையே தமது மொழியாக வாரி எடுத்துக் கொள்ளும் இயல்பு தறகாலத்தில் அதிகரித்திருக்கிறது,

இன்று ஆங்கில மோகம் சமூக கவுரமாக கருதப்பட்டு தாய் மொழி தவிர்க்கப்படுகிறது.
கவனிக்கவும், அப்படி பேசுவது உண்மையற்ற தன்மையாகும் ஒரு வகை போலித்தனமாகும்.
அதனால் வீட்டிலும் சொந்த மொழிக்காரர்களிடத்திலும் தாய் மொழியிலேயே பேச வேண்டும்
தமிழ் நாட்டில் தமிழில் பேசுவதை தாழ்மையாக கருதுகிற மனப்போக்கு மாற வேண்டும்.
தமிழக உயர் நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு எழுத முடியவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வருத்தப் பட்ட செய்தி இரண்டு நாட்களுக்கு முந்தைய தினசரிப் பத்ரிகையில் வெளியாகி இருந்தது.
நான் அரபி மொழி பேசுகிறேன் என பெருமானார் (ஸல்) கூறினார்கள், இன்னீ அரபிய்யுன்)
கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தி
மொழியின் மீதான பற்று என்பது அதை பேசுவதில் அதை அழகு படுத்துவதில் அதை பாதுகாப்பதில் அதில் புதிய புதிய சொற்களை கண்டு பிடிப்பதில் அமைய வேண்டும்
முற்கால அரபுகள் தமது மொழியின் மீது பெருமை கொண்டிருந்தார்கள் என்பதை எப்படி வெளிப்படுத்தினார்கள் தெரியுமா ?
உலகின் மற்ற மொழிகளில் இருக்கிற அறிவியல் இலக்கிய கலாச்சார நூல்களை தமது மொழிக்கு மொழிமாற்றம் செய்வதை ஒரு பெரும் இயக்கமாகவே கொண்டு செயல்பட்டார்கள்.
இந்தியாவிலிருந்து பஞ்ச தந்திரக் கதைகளை கலீலா வதிம்னா என்று மொழி பெயர்த்தார்கள், அது இன்று அரபுலகின் கவனிக்கப்படுகிற இலக்கியமாக இருக்கிறது.
அதே போல கலீபா ஹாரூன் ரஷீது அரபு மொழியில் தயாரிக்கப்படுகிற ஒவ்வொரு நூலுக்கும் எடைக்கு எடை தங்கம் வழங்கினார்.
வெளிநாடுகளிலிருந்து கிருத்துவர்களும் யூதர்களும் இதற்காக நூல்களை தயாரித்துக் கொண்டு வந்தனர் என வரலாறு கூறுகிறது,
மொழியின் மீதிருக்கிற அக்கறை இப்படித்தான இருக்க வேண்டும் அதை வைத்து பெருமை அடிப்பதிலோ பிறரை ஆதிக்கம் செய்வதிலோ அமையக் கூடாது. அது இனவாதமாகும்
இஸ்லாம் அதை வன்மையாக கண்டித்துள்ளது,
( ياأيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ( 13 ) ) 

(يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى ..))
தவறான , சர்ச்சைய ஏற்படுத்துகிற நோக்கில் மதம் இனம் மொழி குடும்பம் ஆகிய வற்றை பயனபடுத்த பெருமானார் தடை விதித்துள்ளார்கள்,

عن جابر بن عبد الله رضي الله عنهما قال: كنا مع النبي في غزاة، فكسع رجل من المهاجرين - أي ضرب - رجلاً من الأنصار، فقال الأنصاري: يا للأنصار، وقال المهاجري:  يا للمهاجرين، فقال رسول الله: « ما بال دعوى الجاهلية؟ » قالوا: يا رسول الله، كسع رجل من المهاجرين رجلاً من الأنصار، فقال: « دعوها فإنها منتنة ».

பெறுமைக்காக ஒன்பது தலைமுறையின் பெயரை சொன்னவன பத்தாவது ஆளாக நரகிலிருக்கிறான்.

عن أبي بن كعب رضي الله عنه قال: انتسب رجلان على عهد رسول الله فقال أحدهما: أنا فلان بن فلان، فمن أنت لا أم لك. فقال رسول الله: « انتسب رجلان على عهد موسى عليه السلام، فقال أحدهما: أنا فلان ابن فلان حتى تسعة، فمن أنت لا أم لك؟ قال: أنا فلان ابن فلان ابن الإسلام، قال: فأوحى الله إلى موسى عليه السلام أن هذين المنتسبين، أما أنت أيها المنتمي إلى تسعة من النار، فأنت عاشرهم، وأما أنت يا هذا المنتسب إلى اثنين في الجنة فأنت ثالثهما في الجنة».
எனவே மொழியை தவறான நோக்கத்தில் பயன்படுத்தக் கூடாது, மொழி வாரியாக பள்ளிவாசல் அமைத்துக் கொள்வது கூட தவறில்லை, ஆனால் மொழியின் ஆணவத்தை காட்டும் இடமாக அது மாறி விடக்கூடாது,
முஸ்லிம்கள் தமது தாய்மொழியோடு அரபு மொழியையும் நேசிக்க வேண்டும்.
காரணம் அது மார்க்கத்தின் மொழி, தொழுகையின் மொழி குர் ஆனின் மொழி, பெருமானாரின் மொழி,
நபி (ஸல்) அவர்கள் கூறியதாத தப்ரியில் இந்த ஹதீஸ் வருகிறது.
 أحبوا العرب لثلاث: لأني عربي، والقرءان عربي، وكلام أهل الجنة عربي 

தாய் மொழியை பேசுவோம், அதன் வளர்ச்சிக்கு உழைப்போம். அதில் ஆணவம் காட்டாது வாழ்வோம்.
அரபு மொழி கற்போம். சொர்கம் சென்றடைவோம்.
தேவையான பிற மொழிகளையும் கற்போம்.
وفي سنن أبي داود: قال زيد بن ثابت ـ رضي الله عنه: أمرني رسول الله صلى الله عليه وآله وسلم فتعلمت له كتاب يهود، وقال: إني والله ما آمن يهود على كتابي، فتعلمته، فلم يمر بي إلا نصف شهر حتى حذقته، فكنت أكتب له إذا كتب، وأقرأ له إذا كتب إليه.
முஸ்லிம்களின் பாரம்பரிய பெருமைகளில் ஒன்று அவர்கள் பல மொழி அறிந்து வைத்திர்ப்பார்கள் என்பது,
அந்த இழந்த பெருமையை மீட்போம் . அல்லாஹ் கிருபை செய்வானாக!No comments:

Post a Comment