நாம் அறிவாளிகளாக இருக்க வேண்டும்.
அந்த ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது.
அறிவாளியாக இருப்பதன் சரியான பொருள் என்ன ? அறிவாளியின்
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த உரையில் சிந்திக்கிறோம்.
அல்லாஹ் நல்ல விசயங்களை புரிந்து கொள்ளவும்
அதனடிப்படையில் செயல் படவும் தவ்பீக் செய்வானாக!
அறிவாளியாக இருப்பது அவசியம்
அறிவாளிக்குத்தான் இந்த உலகில் எல்லாமே! மறுமையிலும்!!
குர் ஆன் யாருக்காக ? எதற்காக ?
அருளப்பட்டது என்பதைப் பற்றி நமக்கு மிகவும் பரீட்சையமான
யாசீன் அத்தியாயத்தில் திருக்குர்ஆனே இப்படிக் கூறுகிறது.
لينذر من كان حيا
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ *لتنْذِرَ مَنْ كَانَ
حَيّاً وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ"
ஹைய்யன் என்பதன் பொருள் عاقلاا என்பதாகும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை நாம் பெற்றுக் கொள்ள வேணும் எனில் நாம் عاقلاا இருக்க வேண்டும்.
அறிவாளி யார்?
அறிவாளி என்பதற்கு நிறைய செய்திகளை தெரிந்து வைத்திருப்பவன் அல்லது புதிய புதிய கண்டுபிடிப்புக்களையும் சிந்தனைகளையும் வெளியிடுபவன் என்று நாம் கருத்து விளங்கி வைத்திருக்கிறோம்.
அதனால் அறிவாளி என்றவுடன் ஐசக் நியூட்டனோ சக்ரடீஸோ அல்லது உமர் கையாம், ஷேக்ஸ்பியரைப் போன்ற இலக்கிய கர்த்தாக்களோ நம்முடைய ஞாபகத்திற்கு வருவார்கள்
உண்மையில் அறிவாளி என்பதற்கான பொருள்
“ மறக்க கூடாத செய்திகளை மனதில் எப்போது நினைவில் வைத்திருப்பவனே அறிவாளி
ஆவான்.
கடைக்கு சாமான் வாங்கச் செல்கிறவன்.
வாங்க வேண்டிய பிரதான பொருளை வாங்க மறந்து விட்டால்.தன்னையே அவன் ஏசிக் கொள்வான். “நான்
எப்படிப்பட்ட முட்டாள் ?”
மனிதன் முதலில் மற்றக் கூடாத விசயம் .
அல்லாஹ்வுக்கு செய்து கொடுத்த ஒப்பந்தம்
இஸ்லாத்தின் பார்வையில் அறிவாளியின் பொருள்
அல்லாஹ்வுடன் செய்து கொடுத்த முதல் உடன்படிக்கையை மறக்காதவன் என்பதாகும்.
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن
ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ
بِرَبِّكُمْ ۖ قَالُوا بَلَىٰ ۛ شَهِدْنَا ۛ أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ
إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَافِلِينَ
عن ابن عباس , في قوله : { وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذرياتهم وأشهدهم
على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا } قال : مسح ربك ظهر آدم , فخرجت كل نسمة هو خالقها
إلى يوم القيامة بنعمان هذا الذي وراء عرفة , وأخذ ميثاقهم { ألست بربكم قالوا بلى شهدنا
(نعمان என்பது மக்காவிலுள்ள அரபாவின் ஒரு பகுதியை குறிக்கும்).
சைத்தானிய சிந்தனையிலிருந்து தன்னை முற்றிலுமாக
விடுவித்துக் கொண்டு அல்லாஹ்விற்கு செய்து கொடுத்த இந்த ஒப்பந்த்தத்தை மறவாது வாழ்கிற
மனிதன் மகத்தான பேரறிவாளனாக திகழ்வான்.
முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் இதை இன்னொரு வடிவத்தில் உணர்த்தினார்கள்
قال - صلّى الله عليه وسلم -
لولا أن الشياطين يحومون على قلوب بني آدم لنظروا إلى ملكوت السماء).قال العراقي: رواه أحمد من حديث أبي هريرة
உமர் ரலி அவர்களுக்கு இந்த ஒப்பந்த வாசகம்
எப்போதும் நினைவிலிருந்தது.
அதிபராக இருக்கிற போது அவர் அரசாங்க ஒட்டகைகளை
கழுவுவார். ஒரு முறை அதைக் கண்ட வெளிநாட்டுப் பிரதிநிதி இதற்கு ஒரு அடியாளை
ஏவக்கூடாதா என்று கேட்க உமர் ரலி திரும்பக் கேட்டார்கள்
أي أعبد مني
؟ என்னை விட பெரிய அடியாள் யார் ?
தொன்மையான அந்த உடன்படிக்கையை மறவாமல் இருப்பது , அதுவும் பழயனை அனைத்தையும் மறந்து விடக் கூடிய கால கட்டத்தில்! எத்தைகய பேரறிவு ?
இத்தகையோரின் பேரறிவு படைத்தோர் அடையும் உச்சம் ஆச்சரியகரமானது.
வெள்ளிக்கிழமை மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் தாம் இருக்கிற இடத்திலிருந்து 400 மைல் தொலைவில் பாரசீகத்தில் எதிரிகளோடு கடும் போர் புரிந்து கொண்டிருந்த சாரியா ரலி அவர்களுக்கு வழிகாட்டினார்கள்,
وروي ان عمر بن الخطاب كان يخطب على المنبر في المدينة خطبة الجمعة،
فالتفت من الخطبة ونادى باعلى صوته: ياسارية بن الحصن "الجبل الجبل"، فلما سئل عن تفسير ذلك، قال: وقع في
خلدي أن المشركين هزموا أخواننا وركبوا أكتافهم وأنهم يمرون بجبل فإن
عدلوا إليه قاتلوا من وجدوه وظفروا وإن جاوزوه هلكوا فخرج مني هذا الكلام "ثم قال الراوي للحديث: جاء البشير بعد
شهر فذكر أنهم سمعوا في ذلك اليوم وفي تلك الساعة صوتاً يشبه صوت عمر بن الخطاب
يقول: ياسارية بين الحصن الجبل الجبل فعدلنا إليه ففتح الله علينا.
வரலாற்றின் மிகப் பிரபலமான இந்த நிகழ்வு மனித அறிவின் உன்னத நிலையான டெலிபதி எனும் சிகரத்தை சுட்டுவதாக அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
سارية
الجبل என்ற பெயரிலேயே விக்கீபீடியாவில் ஒரு கட்டுரை இருக்கிறது.
அரபியில் التخاطر எனப்படும் Telepathy தொலை நுண்ணுணர்வு முறையில் ஒரு
அறிவாளியின் மூளையிலிருந்து இன்னொரு அறீவாளியின் மூளைக்கு செய்தி பரிமாற்றம் நடை
பெற்றுள்ளது.
டெலிபதி" (Telepathy) எனும் ஆங்கிலப்பதம் 1882 இல் பிரட்ரிக்
வில்லியம் கென்றி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் 1400 வருடங்களுக்கு முன்னதாக
இந்த அறிவின் ஆற்றலை உமர் ரலி பயன்படுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கு செய்து
கொடுத்த ஒப்பந்த்ததத்தை மறக்காத பேரறிவு அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது
என்பதற்கான மிக உன்னதமான சான்று இது,
எதார்த்தத்தில் மனிதக் கண்டுபிடிப்புகள் அற்புதமானவை என்றாலும் அவை பேரறிவு அல்ல.
மின்சாரம், தொலை பேசி , ஓளி அலைகள் , விமானம் , புதிய கோள்கள் இன்னும் இன்னும் என
ஏராளமாக மனிதன் கண்டுபிடித்தவை அனைத்தும் மனித சக்திக்கு உட்பட்ட
கண்டுபிடிப்புக்களே !
இவை போற்றுதலுக்குரிய மனித முயற்சிகளே.
சந்தேகமே இல்லை.
ஆனால் இவையே உலகம் அல்ல.
இதை தாண்டியும் உலகம் இருக்கிறது.
இன்றைய நவீன் விஞ்ஞானிகளே இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
நாம்
அறிந்து கொள்ள முடியாத ஏராளமான அதிசயங்கள் இந்த உலகில் இன்னும் ஏராளம் உண்டு.
இந்த
பூமியும் சூரியன் சந்திரன் உள்ளிட்ட மற்ற கோள்களும் மிக நுணுக்கமாக திட்டமிட்டவாறு எவ்வாறு ஏன்
ஒரே அளவில் சுற்றிவருகின்றன என்பதற்கான காரணத்த இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஹாலி
என்கிற வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் என்கிறார்கள். அது போலவே தோன்றுகிறது. இது ஏன் நடக்கிறது ? இதற்கான் விடை இதுவரை இல்லை.
எனவே
மனிதனின் அறிவுக்கு மேலேயும் அறிவு உண்டு.
அல்லாஹ்
மனிதனுக்கு கற்றுக் கொடுத்த அந்த அறிவைப் பற்றித்தான் திருக்குர் ஆன் கூறுகிறது.
عَلَّمَ الإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ ﴾ [العلق: 5].
இதன் பொருள் மனிதனால் அறிந்து கொள்ள முடியாதத்தை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என்பதாகும்
மின்சாரம் விமானம் வானியல் புதிர்கள் அனைத்தும் மனிதனால் அறிந்து கொள்ள முடிந்தவை –
அவை பேரறிவல்ல.
மனிதனால் அறிந்து கொள்ள முடியாத , அல்லாஹ் கற்றுக் கொடுத்த செய்திகளை எப்போது நினைவில் நிறுத்தி வாழ்கிறவர்களே அறிவாளிகள்.
.
·
அல்லாஹ் ரப்பு.
·
மறுமை நாள் நிச்சயம்
·
கேள்வி கணக்கு உண்டு,
·
மீஸான் உண்டு.
·
சிராத் உண்டு.
·
சொர்க்க நரகம் உண்டு
வாழ்க்கையின் எந்த உச்சத்திலும் இவற்றை மறவாமல் வாழ வேண்டும், அதுவே அறிவாளியின் முதன்மையான அழகு,
ஒருவேளை இடையில் எப்போதேனும் இதை மறக்க நேர்ந்தாலும் கூட நினைவூட்டப்படுகிற போது உணர்வு பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி உணர் பெறுகிறவனே உண்மையில் சரியான
மனிதன்.
உண்மையான அறிவு பெறுகிற மனிதன் மலக்கின் அந்தஸ்த அடைய முடியும்.
அறிவு பெறாத போது அவன் ஐஸக் நியூட்டனாகவே இருந்தாலும் புத்திசாலி அல்ல என்பது தான் இஸ்லாத்தின் தீர்மாணமாகும்.
அத்தகையோரின்
நிலை பரிதாபகரமானதாக அமையும்.
உண்மையான
அறிவு பிர் அவ்னுக்கு நினைவூட்டப்பட்ட போது அதை அவன் ஏற்றுக் கொள்ள வில்லை.
சைத்தானை
விட பெரிய சைத்தானாக ஆனான். சைத்தான் கூட தன்னை ரப்பு என்று சொல்லவில்லை.
பிர்அவ்னாகவே
மரணித்துப் போனான். அவனுக்கு மட்டுமல்ல . உலகில் பலருக்கும் உண்மையான அறிவு கிடைக்காமல் போகிறது.
அல்லாஹ்
நம்மை பாதுகாப்பானக!
அறிவாளியின்
அடுத்த அடையாளம் அவனுடைய வாழ்க்கை தீர்மாணங்களை கொண்டதாகவும் திட்டமிட்டதாகவு இருக்க
வேண்டும்
ஏதோ பிறந்தோம்
இறந்தோம் என்பது சாமானிய சராசரி வாழ்வாகும்.
இன்றைய காலகட்டத்தில்
பெரும் பொருப்புக்களை வகிக்கிறவர்களுக்கு கூட நான் என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மாணமும்
எப்படி செய்ய வெண்டும் என்ற திட்டமும் இருப்பதில்லை.
இது அறிவாளிகளுக்கு
அழகல்ல/
அறிவாளிகளுக்கான
சில வழிகாட்டுதல்களை சுஹ்பு இபுறாகீமிலிருந்து மேற்கோள் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (இப்னு ஹிப்பான்)
عَلَى الْعَاقِلِ مَا لَمْ يَكُنْ مَغْلُوبًا عَلَى
عَقْلِهِ أَنْ تَكُونَ لَهُ سَاعَاتٌ :
سَاعَةٌ يُنَاجِي فِيهَا رَبَّهُ عَزَّ وَجَلَّ ،
وَسَاعَةً يُحَاسِبُ فِيهَا نَفْسَهُ ،
وَسَاعَةً يُفَكِّرُ فِيهَا فِي صُنْعِ اللَّهِ
عَزَّ وَجَلَّ ،
وَسَاعَةً يَخْلُو فِيهَا بِحَاجَتِهِ مِنَ
الْمَطْعَمِ وَالْمَشْرَبِ ،
وَعَلَى الْعَاقِلِ أَنْ لا يَكُونَ ظَاعِنًا إِلا
لِثَلاثٍ : تَزَوُّدٍ لِمَعَادٍ ، أَوْ مَرَمَّةٍ لِمَعَاشٍ ، أَوْ لَذَّةٍ فِي
غَيْرِ مُحَرَّمٍ ،
وَعَلَى الْعَاقِلِ أَنْ يَكُونَ بَصِيرًا
بِزَمَانِهِ مُقْبِلا عَلَى شَأْنِهِ ، حَافِظًا لِلِسَانِهِ ، وَمَنْ حَسَبَ
كَلامَهُ مِنْ عَمَلِهِ قَلَّ كَلامُهُ إِلا فِيمَا يَعْنِيهِ "
(ظاعنا اي مسافرا)
مَرَمَّةٍ اي إصلاح )
இந்த அளவு கோல்களிலும்
நம்மை அறிவாளிகளாக ஆக்கிக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.,
அல்லாஹ் கிருபை
செய்வானாக!
from மவ்லவி ஜுனைதுல் பக்தாதி ஹஸனி இப்னு நூரி
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Thursday, February 23, 2017
மொழி எனும் அருள்
Thursday, March 02, 2017
அறிவாளி யார் ?
- இரண்டு பயானுக்கான கட்டுரைகளும் புதிய ஆலிம்களுக்கு இஸ்லாமிய மரபுக்குள் நவீனத்தை எப்பட்டிப் பார்க்க வேண்ட்டும் என்ற அழகான வழிகாட்டுதலைத் தரும்வித்தில் உள்ளது
விஞ்ஞானம் வளர்வது அறிவு மெய்ப்படுவது இஸ்லாத்தின் செய்திகளை உண்மைப்படுத்தவே செய்யும்
தங்களின் ஆழமான யோசனைகளும் அதையொட்டிய ஆதாரத் தேடல்களும் அதை அனைவருக்கும் பகிர்தலும் உள்ள படியே மனதுக்குள் மகிழ்வையும் ஒருவகையில் (ஆகுமான) பொறாமையையும்ம் தருகிறது
பாரகல்லாஹு லக
முடிந்தால் துஆவில் எனக்கும் இடம் கேட்கிறேன்
வஸ்ஸலாம்