சமூக
நல்லுறவுக்கான வழிகள்
மனினை
ஒரு சமூக விலங்கு என்று கூறினார் அரிஸ்டாட்டில்
ஆனால்
அது பொய்யாகிவிடுமோ எனும் அளவு இன்றய நவீன் உலகம் மாறிவருகிறது.
மக்கள்
சமூகத்துடனான தொடர்பை மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருகிறார்கள்.
ஒரு
கல்யாணம் காட்சி என்றால் ஏழெட்டு நாட்கள் மொத்தக் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ந்திருந்த
காட்சிகள் இப்போது கர்ப்பனையாகிவிட்டது . எங்காவது ஒரு ஹோட்டலில் ரிஷப்ஷனில் கல்ந்து
போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு பழைய கிப்ட் ஒன்றை திரும்ப பார்சல் செயது பரிசளித்து
விட்டு திரும்பிவிடுகிறோம்.
கல்யாணம்
என்று மட்டுமில்லை, பொதுவாகவாக நமது சமூக தொடர்புகள் பலவீனம்டைந்து விட்டன.
பக்கத்து
வீட்டில் வசிப்பவர்கள் யார் ? என்ன செய்கிறார்கள் என்பதே அறியத்தேவையில்லாத விசயம் என்றாகிவிட்ட சூழலில்
தெருவாசிகள் மஹல்லா வாசிகள் என்ற பந்தத்திற்கெல்லாம் இடமில்லாது போய்விட்டது.
குறுகிய
நட்புக்கு வழி வகுக்க கூடிய என்று கருதப்படுகிற பயணங்கள் கூட ஹெட்போன்களின் தயவில்
வறட்சியாகிவிட்டன. கையில் வைத்திருக்கிற உணவுப்
பொருளை நீட்டி “எடுத்துக் குங்க!” என்று சொல்வது அநாவசிய தொந்தரவாகிவிட்டது.
இதனால்
மனிதன் தன்னுடைய வாழ்வில் எதார்த்தமான நிம்மதிக்கும் ஆறுதலுக்கும் வழிகாட்டுதலை பெறுவதற்குமான
பொன்னான வாய்ப்புக்களை இழந்து வருகிறான்.
ஆனால்
ஒரு முஸ்லிம் அப்படி இருக்க கூடாது என இஸ்லாம்
வலியுறுத்தி உள்ளது.
பெருமானாருக்கு
அல்லாஹ்வின் அறிவுரை. (சாதாரணமாக சமயத்தலைவர்கள் மக்களோடு மக்களாக வாழ மாட்டார்கள்.
ஆனால் பெருமானாருக்கு அல்லாஹ் இப்படி உத்தரவிட்டான்.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ
وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ
பெருமானார்
(ஸல் அவர்களும் சமகத்தோடு சேர்ந்து வாழ்வதை பல வகையிலும்
நமக்கு வலியுறுத்தியுள்ளார்கள்.
·
عليكم بالجماعةِ، وإِيَّاكُم والفُرْقَةَ, فَإِنَّ الشيطانَ مع
الواحد، وهو من الاثنين أبعدُ- [أخرجه
الترمذي عن عبد الله بن عمر
·
وإنما يأكل الذئب من الغنم القاصية[- ورد في الأثر
·
إن الله لا يجمع أمَّتي - أو قال: أمة محمد - على ضلالة، ويَدُ الله
على الجماعة، ومن شَذَّ شَذَّ إلى النار- [أخرجه الترمذي عن عبد الله بن عمر]
இப்போது
நம்மில் பலரும் வசதி வாய்ப்பு
அல்லது அந்தஸ்து வருகிற போது சமூகத்தை
விட்டு விலகி வாழ ஆசைப்படுகிறோம்.
அபார்ட்மெண்ட்கள் வில்லாக்கள் நமது தேர்வாக அமைகின்றன.
நம்மை
பார்க்கவருகிறவர்கள் எளிதில் நுழைய முடியாத
அபார்ட்மெண்ட்கள் நம்மிடம் அதிக மதிப்பிற்குரியதாக
மாறிவிட்டன.
சமீபத்தில்
கல்யாண அழைப்பிற்காக பல இடங்களுக்கும் சென்ற போது எனக்குள் ஏற்பட்ட அழுத்தமான சிந்தனை
நம்மை தேடி வருகிறவர்கள் சிரமப்படாமல் பார்ப்பதற்கேற்ற வகையில் வாழ வேண்டும் என்பது.
பல வீடுகளிலும்
அகண்ட உறுதியான கேட்டுகளை தாண்டி உள்ளே இருப்பவர்களை எப்படி அழைப்பது என்றே தெரியவில்லை.
சில இடங்களிலு கஷ்டப்பட்டு வருகையை தெரிவித்த பிறகும் உரியவர்களை சந்திக்க அதிக நேரம்
பிடித்தது.
சரியான அடையளத்தையும்
எளிமையாக நம்மை சந்திப்பதற்கான வழிகளை நாம் ஏற்படுத்தாவிட்டால் எனக்கு சமூகம் தேவையில்லை
என்று கருதுவதாகவே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம்
நமது சமூகத்தோடு சேர்ந்து வாழ அதிக முக்கியத்துவம்
தர வேண்டும். அப்போது
·
நாம் கட்டுப்பாடுகளை கடை பிடிப்போம்.
·
நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
·
நமது துக்கத்திற்கு சரியான ஆறுதல் கிடைக்கும் நம்மை துக்கப்பட
விடமாட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட
வசனத்தில் சொல்லப்பட்ட வஸ்பிர்
எனும் சொல் . சமூக உறவுகளை
பேணுவதில் சில சிரமங்கள் இருந்தாலும் சகித்துக்
கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
عَنِ اِبْنِ عُمَرَ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا-
قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم – "اَلْمُؤْمِنُ
اَلَّذِي يُخَالِطُ اَلنَّاسَ, وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنْ اَلَّذِي
لَا يُخَالِطُ اَلنَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ " أَخْرَجَهُ اِبْنُ
مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ
கழுத்தில் கிடந்தை துண்டை இழுத்து காயமேற்படுத்தி காசு கேட்டவரை பெருமானார் (ஸ்ல்) அவர்கள் கோபித்துக் கொள்ள வில்லை.
فعن أنس بن مالك رضي الله عنه قال : "كنت أمشي مع رسول الله صلى
الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية ، فأدركه أعرابي فجبذه بردائه جبذة
شديدة ، حتى نظرت إلى صفحة عاتق رسول الله صلى الله عليه وسلم قد أثرت بها حاشية
البرد من شدة جبذته . ثم قال : يا محمد ، مر لي من مال الله الذي عندك ، فالتفت
إليه رسول الله صلى الله عليه وسلم ، ثم أمر له بعطاء "
குழப்பங்கள்
தலைவிரித்தாடுகிற கால கட்டத்தில் மட்டுமே - மொத்த சமூகமும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிற
கட்டத்தில் மட்டுமே சமூகத்தை விட்டு விலகி
நிற்க அனுமதியுண்டு,
قوله صلى الله عليه وسلم : « يأتي على الناس زمان خير مال الرجل
المسلم الغنم يتبع بها شعف الجبال، ومواقع القطر, يفرّ بدينه من الفتن
»
جَاءَ أَعْرَابِيّ إِلَى النَّبِيِّ صلى الله عليه
وسلم فقَالَ يَا رَسولَ اللهِ، أَيّ النَّاسِ خَيْر ؟ قَالَ : " رَجل جَاهَدَ
بِنَفْسِهِ وَمَالِهِ، وَرَجل فِي شِعْبٍ منَ الشِّعَابِ يَعْبد رَبَّه وَيَدَع
النَّاسَ مِنْ شَرِّهِ »
மற்ற சம்யங்களில்
சமூகம் எனக்கு
தேவை இல்லை என்று கருதுகிறவரிடம் இஸ்லாமிய வாழ்வியலுக்கான அடிப்படையே தகர்ந்து போகும்
ஜமா
அத் தொழுகை ஜகாத் ஹஜ்
போன்ற கடமைகளை சமூகத்தை தவிர்த்து
விட்டு ஒரு முஸ்லிமால் நிறைவேற்ற
முடியாது.
சமூக உறவை மேம்படுத்திக் கொள்ள ஏராளமான வழிகாட்டுதல்களை இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. அதற்கு
அதிக முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது.
மதீனாவில் பெருமானாரின் முதல் அறிவுரை. யூதராக இருந்த
அப்துல்லாஹ் பின் சலாம் ரலி பெருமானாரை அடையாளம் காண உதவிய அறிவுரை.
فعن عبد الله بن سلام رضي الله عنه
قال :(لما قدم النبي صلى الله عليه وسلم المدينة انجفل الناس قبله وقيل قد قدم
رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله قد قدم رسول الله ثلاثا فجئت في
الناس لأنظر فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فكان أول شيء سمعته تكلم
به أن قال:( يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا
بالليل والناس نيام تدخلوا الجنة بسلام
இந்த முதல் அறிவுரையில் ஒவ்வொரு அமசமும் ஈமானிய வாழ்விற்கு அதிக முக்கியத்துவத்துவம் உடையது.
இந்த ஜும் ஆ உரையின் பிரதானக்கருத்தாக இந்த ஒரு
ஹதீஸை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். செயல் படுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம்
நமது வாழ்வை இஸ்லாமிய வாழ்வாக அல்லாஹ் ஆக்குவான்.
சமூக தொடர்பிற்கான முதல் வழி சலாம்
எவ்வளவு அற்புதமான கருத்து ஆழந்து யோசித்துப் பாருங்கள்.
ஒரு பகுதிக்கு ஒருவர் குடிவருகிறார். அவர் அங்கு நாலு பேருக்கு நாலு தடவை சலாம் சொல்வார்
எனில் அவருக்கான உறவுப் பட்டாளத்தை அந்த ஒற்றை சலாம் உருவாக்கி விடாதா ?
عن أبي هريرة رضي الله عنه قال
:قال رسول الله صلى الله عليه وسلم:( لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى
تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم
عن عبد الله بن عمرو رضي الله عنهما
:(أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟قال: تطعم الطعام,
وتقرأ السلام على من عرفت ومن لم تعرف)
عن عمران بن حصين رضي الله عنه قال: جاء
رجل إلى النبي صلى الله عليه وسلم فقال:( السلام عليكم فرد عليه السلام ثم جلس
فقال النبي صلى الله عليه وسلم : عشر ,ثم جاء آخر فقال: السلام عليكم ورحمة الله
فرد عليه فجلس فقال: عشرون ,ثم جاء آخر فقال: السلام عليكم ورحمة الله وبركاته فرد
عليه فجلس فقال :ثلاثون
சலாமின் நன்மைகள்
ذكر الإمام النووي عدة فوائد لهذا
الحديث :
· والسلام أول أسباب التآلف
مفتاح استجلاب المودة
مفتاح استجلاب المودة
· إظهار شعارهم المميز لهم من غيرهم من
أهل الملل
· رياضة النفس ولزوم التواضع وإعظام حرمات
المسلمين
· وفيها لطيفة أخرى وهى أنها تتضمن رفع
التقاطع والتهاجر والشحناء وفساد ذات البين التي هي الحالقة
· وأن سلامه لله لا يتبع فيه هواه ولا يخص
أصحابه وأحبابه به
உணவளித்தல்
பரஸ்பரம் உணவளித்தல் சமூக உறவை மேம்படுத்துவதில்
மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் கல்யாணம் போன்ற விசேசங்களில்
தான் உணவுக்கு மக்களும் உறவுக்காரர்களும் அழைக்கப்படுகிறார்கள்.
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ
مِسْكِيناً وَيَتِيماً وَأَسِيراً(8) إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا
نُرِيدُ مِنكُمْ جَزَاء وَلَا شُكُوراً(9)}سورة الإنسان
عن هانئ أنه لما وفد على رسول الله صلى الله عليه
وسلم قال: يا رسول الله أي شيء يوجب الجنة قال:(عليك بحسن الكلام وبذل الطعام)
وعن أبي موسى رضي الله عنه قال:قال رسول الله صلى
الله عليه وسلم:( فكوا العاني يعني الأسير وأطعموا الجائع وعودوا المريض)
உறவுகளை
பேணுதல்
சொந்தத்தை
பராபரித்தல் என்பது மரியாதையான மனிதரின்
தனி அடையாளமாகும்.
இன்றைய கால
கட்டத்தில் சொந்தங்களிடம் பெருமையாக நடந்து கொள்வதும் விலகி நிற்பதும் பெருமையாக கருதப்படுகிறது, அது
மிகவும் தவறு அல்லாஹ்வின் அருளை விட்டு விலக்க கூடியது. மட்டுமல்ல சமூகத்தில் நம்மை
அன்னியப்படுத்தக் கூடிய முதல் செயலுமாகும்.
·
وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ
بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيباً
·
عن جبير بن مطعم رضي الله عنه أنه سمع
النبي صلى الله عليه وسلم يقول:( لا يدخل الجنة قاطع )
·
وعن أبي بكرة رضي الله عنه قال :قال
رسول الله صلى الله عليه وسلم:( ما من ذنب أجدر أن يعجل الله تعالى لصاحبه العقوبة
في الدنيا مع ما يدخر له في الآخرة مثل البغي وقطيعة الرحم)
·
وعن عائشة رضي الله عنها زوج النبي صلى
الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال:( الرحم شجنة فمن وصلها وصلته ومن
قطعها قطعته)
·
وعن أبي هريرة أن رجلا قال:يا رسول
الله( إن لي قرابة أصلهم ويقطعوني وأحسن إليهم ويسيئون إلي وأحلم عنهم ويجهلون علي
فقال: لئن كنت كما قلت فكأنما تسفهم المل ولا يزال معك من الله ظهير عليهم ما دمت
على ذلك)
·
عن أنس بن مالك رضي الله عنه قال:سمعت
رسول الله صلى الله عليه وسلم يقول:(من سره أن يبسط له في رزقه أو ينسأ له في أثره
فليصل رحمه)
இரவுத்
தொழுகை
சமூக உறவுகளை பராபரிக்கும் சிந்தனை எப்போதும் பலப்படும் என்றால் அல்லாஹ்வுடனான உறவை பலப்படுத்திக் கொள்ளும் போது தான்.
இந்த ஹதீஸீல் இறுதி உபதேசமாக நபி (ஸல்) அல்லாஹ்வுடனா உறவை நெருக்கமாக்கிக் கொள்ளும்
வழியையும் கூறீனார்கள் \
وصلوا بالليل والناس نيام
·
عن عبد الله أن رجلا قال:يا رسول الله (إن فلانا نام
عن الصلاة البارحة حتى أصبح,قال:ذاك شيطان بال في أذنيه)
·
عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال
:قال لي رسول الله صلى الله عليه وسلم (يا عبد الله لا تكن مثل فلان كان يقوم
الليل فترك قيام الليل)
·
عن أبي هريرة قال:قال رسول الله صلى الله عليه وسلم
:(رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته فإن أبت نضح في وجهها الماء ,رحم
الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها فإن أبى نضحت في وجهه الماء)
அல்
ஃபுர்கான் அத்தியாயத்தின் கடைசி 13 வருசனங்கள் அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் எப்படி இருப்பார்கள்
என்பதை பட்டியலிடுகின்றன.
இபாதுர்
ரஹ்மான் என்று தொடங்கும் அந்த வசனங்கள் (63) ஒரு நல்ல முஸ்லிம்காக வாழ விரும்பு, அனைவருக்கும்
அற்புதமான வழிகாட்டுதல்களாகும். நாம் அந்த பண்புகளை கடைபிடிப்போம் எனில் அல்லாஹ்வின்
தனிப்பட்ட கருணை வளையத்திற்குள் இடம் பெற்று விடுவோம். இபாதுர் ரஹ்மான் என்ற சொல்லாடல்
அந்த கருத்தை தருகிறது என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள், (மஆரிபுல் குர் ஆன்)
தப்ஸீர்
மஆரிபுல் குர் ஆன் உள்ளிட்ட பல தப்ஸீர்களிலும் இந்த வசனங்களை சிறப்பகவும் தனியாகவும்
விளக்குகிறார்கள் முபஸ்ஸிர்கள். மார்க்கத்தின் புகழ் மிக்க பல சொற்பொழிவாளர்களும் இந்த
வசனங்களை விவரித்து தனிச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்,
64
வது வசனம் நல்லடியார்களின் இயல்பை இப்படிச் சொல்கிறது.
وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا(64
ஈமானிய
வாழ்வில் ஒரு படி மேலேறிச்
செல்ல நினைக்கிற ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
நமது இரவில்
கொஞ்ச நேரத்தை தனிப்பட்ட இறைவணக்கத்திற்காக ஒதுக்க பழக வேண்டும்.
மக்கள் அனைவரும்
உறங்கிக் கொண்டிருக்கிற அந்த இரவு நேரத்தில் தன்னை நினைப்பதை அல்லாஹ் பெரிது விரும்புகிறான்.
சமூகத்துடனான
தொடர்பை பலப்படுத்திக் கொள்ளுதலில்
சலாம் சொல்லுதல்
என்பது பணிவு கலந்த மரியாதை செய்தலையும்
உணவளித்தல்
என்பது பசியறிந்து பரிமாறும் உணர்வு பெறுதலையும் கொடைத்திறத்தையும்
சொந்தங்களை
சேர்தல் என்பது பேணப்பட வேண்டிய தொடர்புகளை சரியாக பேண வேண்டும் என்பதையும் உணர்த்து
கின்றன,
எந்த வகையிலும்
சமூக உறவை சீர்குலைத்து க் கொள்ள நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் அனுமதிக்க வில்லை .
\
மனிதர்கள் கைவிட்டு
விட வேண்டும் என்று இஸ்லாம் உபதேசிக்கிற பல தீய செயல்களை சிந்தித்துப் பார்த்தால் அதன்
மூலம சமூக உறவுகள் பாதிப்படைய பெரும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ
وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ
يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ
اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ (12) سورة الحجرات .
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ: إِيَّاكُمْ وَالظَّنَّ ، فَإِنَّ الظَّنَّ
أَكْذَبُ الْحَدِيثِ ، وَلاَ تَحَسَّسُوا ، وَلاَ تَجَسَّسُوا ، وَلاَ تَحَاسَدُوا
، وَلاَ تَدَابَرُوا ، وَلاَ تَبَاغَضُوا ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا.أخرجه أحمد
சக்ராத்தில்
முகம் பிரகசித்த அபூதுஜானா (ரலி)
وهذا أبو دجانة رضي الله عنه :دخلوا عليه في مرضه
ووجهه يتهلل! فقالوا له: ما لوجهك يتهلل؟فقال: (ما من عملِ شيءٍ أوثق عندي من
اثنتين: كنت لا أتكلَّم فيما لا يعنيني، وكان قلبي للمسلمين سليمًا)
ஒருசில
சந்தர்ப்பங்களில் ஏதேனும் தவறு நடப்பதை பார்க்கிற போது உலகமே கெட்டுப் போய்விட்டதாக
சிலர் புலம்புவார்கள், என்னமோ தங்களது வாழ்வில் தவறே நடக்காதது போல
عنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى
الله عليه وسلم قَالَ:إِذَا سَمِعْتَ الرَّجُلَ يَقُولُ : هَلَكَ النَّاسُ ،
فَهُوَ أَهْلَكُهُمْ خرجه
\"أحمد\
சமூக
நல்லுறைவை குலைப்பதில் இந்த மனப்போக்கிற்கு முக்கிய
இடமுண்டு
இன்றைய இஸ்லாமிய
அமைப்புக்கள் இயக்கங்களிடம் இந்த மனப்போக்கு பெருகி இருப்பதே இஸ்லாமிய பெயர் அதிகமாக
இருந்தும் இஸ்லாம் இல்லாது போனதற்கு காரணமாகும்.
எனவே
சமூகத்தில் குற்றங்களை பார்க்கிற போது நம்மை நாம் அதிக உன்னதமானவர்களாக கருதிக் கொள்ளக்
கூடாது.
சமூக
நல்லுறைவை பேணுவதற்கு இது மிக முக்கியம்.
عَنْ
عُمَرَ بْنِ الْخَطَّابِ ؛أَنَّ رَجُلاً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه
وسلم كَانَ اسْمُهُ عَبْدَ اللهِ ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا ، وَكَانَ يُضْحِكُ
رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ
جَلَدَهُ فِي الشَّرَابِ ، فَأُتِيَ بِهِ يَوْمًا ، فَأَمَرَ بِهِ فَجُلِدَ ،
فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : اللَّهُمَّ الْعَنْهُ ، مَا أَكْثَرَ مَا يُؤْتَى
بِهِ ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ تَلْعَنُوهُ ، فَوَاللهِ مَا
عَلِمْتُ أَنَّهُ يُحِبُّ اللهَ وَرَسُولَهُ. أخرجه البُخَاري .
சமூக நல்லுறைவை
பேணுவதற்கு என்னென்ன வழி முறைகள் அவசியமோ அவற்றை கை கொள்ள வேண்டும். எவற்றை தவிர்க்க
வேண்டுமோ அவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
பிற சமூகத்தவருடன்
பிற சமூகத்தவருடனும்
நல்லுறவு பேணுவேண்டும்.
وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِّلْعَالَمِينَ
لاَ يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ
يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن
تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ،
إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُم
مِّن دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَن تَوَلَّوْهُمْ وَمَن
يَتَوَلَّهُمْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ
ஒவ்வொரு
ஜும் ஆவின் நிறைவிலும் குத்பாவில்
ஓதப்படுகிறது. இது அனைத்திற்கும் பொதுவானது,
إِنَّ اللّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ
وَإِيتَاء ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَالْبَغْيِ
يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
அவர்களை வெறுக்கவோ
அவர்களுக்கு இடையூறளிக்கவோ கூடாது. அவர்களது மத நம்பிக்கைகளை கேலி செய்யவோ கூடாது.
அவர்களை அச்சுறுத்துவது போல நடந்து கொள்ளக் கூடாது.
அனைத்து வகைகளிலும்
சமூக் உறவுகளை பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் முயற்சி செய்ய வேண்டியது நமது கடமை.
சமூகத்தை விட்டு
விலகி நிற்பது சமூக உறவுகள் விசயத்தில் அலட்சியம் காட்டுவது நல்ல முஸ்லிமுக்கு அழகல்ல,
முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய முழு நிலவரத்தையும் படம் பிடித்து காட்டுவதோடு சமூக உறவை மேம்படுத்துவதன் அவசியம் அதனால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் நன்மைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ள அருமையான ஆக்கம்! அல்ஹம்து லில்லாஹ்.... அல்லாஹ் தங்களது சேவைகளை ஒப்புக்கொண்டு நீடித்த ஆயுளையும் நிறைவான கல்வி ஞானத்தையும் வழங்குவானாக ஆமீன்
ReplyDelete