ரஜபிற்கான
துஆ
جاء في مسند الإمام أحمد (1/259(
عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال : اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان
عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال : اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان
قال ابن رجب : فيه دليل ندب الدعاء بالبقاء إلى
الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا
دعاء النبي صلى الله عليه وسلم بالبركة في هذه الأشهر الثلاثة يدل على فضلها . وفي تخصيص رمضان بالدعاء منفردا وعدم عطفه على رجب وشعبان دلالة على زيادة فضله
ஜமாதில்
ஆகிர் மாதத்தின் இறுதியில இஸ்லாமிய உலகு சந்தித்த நிகழ்வுகளில்
ஒன்று அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் மரணம்.
ஹிஜ்ரி
13 ஜமாதில் ஆகிர் பிறை 22 திங்கட்கிழமை
அன்று அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் வபாத்தானார்கள்.
இன்றைய
இந்த ஜும் ஆவில் அபூபக்கர்
சித்தீக் ரலி அவர்களின் வரலாற்று
தகவல்கள் சிலவற்றையும் அன்னாருடைய மகத்தான ஆளுமைப் பண்புகள்
சிலவற்றையும் நாம் பார்க்க இருக்கிறோம்.
ஒரு
முஸ்லிமாக அபூபக்கர் ரலி அவர்களின் வரலாற்றை
அறிய வேண்டிய கடமை நமக்கு
இருக்கிறது.
பெருமானார்
(ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போது முதன் முதலாக ஒரு இஷா தொழுகைக்கு அவர்கள்
வெளியே வரத் தாமதமான போது அப்துல்லாஹ் பின் ஜம் ஆ ரலி அவர்கள் உமர் ரலி அவர்களை தொழ
வைக்குமாறு பிடித்து முன்னே தள்ளி விட்டார்கள். உமர் ரலி அவர்கள் தக்பீர் சொல்ல தயாரான
சப்தத்தை கேட்டதும் அதை மறுத்த பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூபக்கரை தவிர
மற்ற எவரையும் அல்லாஹ்வும் முஃமின்களும் விரும்ப வில்லை.
ويأبى الله والمؤمنون إلا أبا بكر
அல்லாஹ்வாலும்
அவனது தூதராலும் மற்ற உலக முஃமின்களாலும் விரும்ப படுகிற ஒருவரின் வரலாற்றை அறிவதில்
நமது கடமையாகாதா ?
இன்றைய இந்த
உரையில் அவர்களது வரலாற்று தகவல்களோடு அவர்களின் அதிசயக்கதக்கத ஆளுமைப் பண்புகளையும்
பார்க்கிறோம்.
அபூபக்கர் ரலி
அவர்களின் பெருமைகள்
·
خيرَ الناس بعد الأنبياء والرسل
·
أول ول إنسان حمل التوحيد
·
أولُ الخُلفاء الراشدين،
·
وأحد العشرة المُبشرين بالجنَّة،
·
وزيرُ نبيّ الإسلام مُحمد
·
ورفيقهُ عند هجرته إلىالمدينة المنورة.
·
أكثرَ الصَّحابة إيماناً وزهداً
·
وأحبَّ الناس إلى النبي مُحمد
·
أول من سيدخل الجنة من البشر بعد الأنبياء والرسل
பிறப்பும் வளர்ப்பும்
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரண்டரை
வருடத்திற்கு பிறகு கி பி 573 ல் மக்காவில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்கள்.
அபூபக்கர் என்பது அவர்களின் காரணப் பெயராகும். அவரது இயற் பெயர்
அப்துல்லாஹ் பின் அபீகுஹாபா உஸ்மான் என்பதாகும்.
அபூபக்கர் ரலி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதலாமவர் என்றாலும் அவரது
தந்தை அபூகுஹாபா இஸ்லாமை ஏற்றுக் கொள்ள 21 வருடம் பிடிந்தது, மக்கா வெற்றியின் போதுதான்
அபூகுஹாபா இஸ்லாமை தழுவினார். அபூ குஹாபா நீண்ட காலம் வாழ்ந்தார். அபூபக்கர் ரலி அவர்கள்
வபாத்தான பிறகு அவரது சொத்துக்களுக்கும் வாரிசானார். ஆனால் அந்த சொத்துக்களை குடும்பத்தினருக்கு
கொடுத்து விட்டார். 97 வது வயதில் அவர் வபாத்தானார்.
அபூகுஹாபா முஸ்லிமாக ஆனதன் மூலம் தந்தை மகன் பேரர் என மூன்று தலைமுறையிலும்
நபித்தோழமையை பெற்ற ஒரே சஹாபியாக அபூபக்கர் ரலி திகழ்கிறார்கள். அபூபக்கர் ரலி அவர்களின்
பேரர் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்களும் நபித்தோழரே.
·
அபூகுஹாபா (ரலி
·
அபூபக்கர் (ரலி)
·
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்கர்
(ரலி
·
அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி
அனைவரும் சஹாபாக்கள்.
என்னே அருமையான இஸ்லாமிய தலை முறை ?
மக்காவின் சிறப்பான குடும்பத்தில் அபூபக்கர் ரலி வளர்ந்தார்கள்
, தனது பன்பான நடவடிக்கையினால் அனைவரிடமும் மரியாதையும் அன்பும் பெற்றவராக இருந்தார்கள்.
இளமையிலேயே பெரிய வியாபாரியாகவும் மக்களிடம் நெருக்கம் பெற்றவராக
இருந்தார்கள் என இப்னு கஸீ ர் ரஹ் அல் பிதாயாவில்
கூறுகிறார்
قال ابن كثير: «وكان
رجلاً تاجراً ذا خُلُق ومعروف، وكان رجالُ قومه يأتونه ويألفونه لغير واحد من
الأمر: لعلمه وتجارته وحسن مجالسته».
தனது
18 வயதிலேயே பெரும் தொகையுடன் சிரியாவின் புஸ்ரா
நகருக்கு வியாபாரப் பயணம்.
وقد ارتحل أبو بكر للتجارة بين البلدان حتى وصل بصرى من أرض الشام، وكان رأس ماله أربعين ألف درهم، وكان ينفق من ماله بسخاء وكرم عُرف
به في الجاهلية.
அப்போதே
கண்ட கனவு. நபியின் அமைச்சர்.
ويروى أن أبا بكر قد رأى رؤيا عندما كان في الشام، فقصها على بحيرى
الراهب، فقال له: «من أين أنت؟» قال: «من مكة»،
قال: «من أيها؟» قال: «من قريش»، قال: «فأي شيء أنت؟» قال: «تاجر»، قال: «إن صدق الله رؤياك، فإنه يبعث بنبي من قومك، تكون وزيره في حياته،
وخليفته بعد موته»، فأَسرَّ أبو بكر ذلك في نفسه.) خلفاء الراشدون،
محمود شاكر(
ஒழுக்கமான அதே சமயம் தீட்சண்யமான இளமை –
இளமையிலேயே மதுவை அவர் விரும்பியதில்லை. ஒழுக்க கேட்டை நாடியதில்லை,
وقد سأل أحدُ الناس أبا بكر: «هل شربت الخمر في الجاهلية؟»، فقال: «أعوذ بالله»، فقيل: «ولمَ؟» قال: «كنت أصون عرضي، وأحفظ مروءتي، فإن من شرب الخمر كان
مضيعاً لعرضه ومروءته - تاريخ
الخلفاء، جلال الدين السيوطي
رُوي أن أبا بكر لم يسجد لصنم قط، فقد قال أبو بكر
في مجمع من الصحابة: «ما
سجدت لصنم قط، وذلك أني لما ناهزت الحلم أخذني أبو قحافة بيدي، فانطلق بي إلى مخدع فيه الأصنام، فقال لي:
«هذه آلهتُك الشمُّ العوالي»، وخلاني وذهب، فدنوت من الصنم وقلت: «إني جائع
فأطعمني» فلم يجبني، فقلت: «إني عار فاكسني» فلم يجبني، فألقيت عليه صخرة فخر
لوجهه-
الخلفاء الراشدين، محمود شاكر
இளமைக் காலம் முதலே பெருமானார் (ஸ்ல) அவர்களின் நண்பராக அபூபக்கர்
ரலி இருந்தார்கள்/
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது நுபுவ்வத்தை அறிவித்த போது முதலாவதாக
வந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.
فعن السيدة عائشة أنها قالت: «خرج أبو بكر يريد رسول الله ، وكان له صديقاً في الجاهلية،
فلقيه فقال: «يا أبا القاسم فقدت من مجالس قومك واتهموك بالعيب لآبائها وأمهاتها»،
فقال رسول الله : «إني رسول الله أدعوك إلى الله»، فلما فرغ كلامه أسلم أبو بكر، فانطلق
عنه رسول الله وما بين الأخشبين أحد أكثر سروراً منه بإسلام أبي
بكر
அந்த முதல் ஈமான் உலக முஃமின்களுக்கு முன்னுதாரணமாக ஆனது.
قد روي عن النبي محمد أنه قال: ما دعوت أحداً إلى الإسلام إلا كانت عنده كبوة وتردد
ونظر، إلا أبا بكر ما عكم عنه حين ذكرته، ولا تردد فيه» - البداية
والنهاية، ابن كثير،
روي عن النبي أنه قال: «إن الله بعثني إليكم فقلتم كذبت، وقال أبو بكر صدق،
وواساني بنفسه وماله، فهل أنتم تاركوا لي صاحبي - البداية
والنهاية، ابن كثير
தொழுகையில் முதல் கூட்டாளி
فعن زيد بن أرقم أنه قال: «أول من صلى مع النبي أبو بكر الصديق
நம்ப வேண்டியதை உறுதியாக நம்பு
இஸ்லாமை தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக நின்றதில் அபூபக்கர் ரலி
அவர்களின் நம்ப வேண்டியதை உறுதியாக நம்பும் ஆளுமை திறன் வெளிப்படுகிறது.
ஒரு கொள்கை தான் ஏற்றுக் கொண்ட தோடு அவர்கள் நின்று விடவில்லை. தனது
நண்பர்களை தன்னுடைய சொல்லை கேட்கும் இளையவர்களையும் இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்.
அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அன்றைய தினத்தில் 8 பேரை இஸ்லாத்தில்
இணைத்தார்.
فأسلم على يديه: الزبير بن العوام، وعثمان بن عفان، وطلحة بن عبيد الله، وسعد بن أبي وقاص، وعبد الرحمن بن عوف، فانطلقوا إلى النبي محمد ومعهم أبو بكر، فعرض عليهم الإسلام
وقرأ عليهم القرآن وأنبأهم بحق الإسلام فآمنوا،
البداية والنهاية، ابن كثير،
ثم جاءبعثمان بن
مظعون، وأبي
عبيدة بن الجراح، وأبي سلمة
بن عبد الأسد، والأرقم
بن أبي الأرقم فأسلموا،البداية والنهاية، ابن كثير،
أسلمت بناته أسماء وعائشة،
وابنه عبد الله،
وزوجته أم رومان، وخادمه عامر بن فهيرة. السيرة الحلبية،
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் ஆளுமையின் அடுத்த அடையாளம் இஸ்லாத்தின் முதல்
பிரச்சாரகர்.
வேதனையில் தொடங்கியது அந்த சாதனை.
لما اجتمع أصحاب النبي محمد، وكانوا ثمانية وثلاثين
رجلاً، ألحَّ أبو بكر على النبي في الظهور، فقال: «يا أبا بكر إنا قليل»، فلم يزل أبو بكر يلح حتى ظهر
الرسول، وتفرق المسلمون في نواحي المسجد كل رجل في عشيرته، وقام أبو بكر في الناس
خطيباً والرسول جالس، فكان أولَ خطيب دعا إلى الإسلام، وثار المشركون على أبي بكر
وعلى المسلمين، فضربوه في نواحي المسجد ضرباً شديداً، ووُطئ أبو بكر وضُرب ضرباً
شديداً، ودنا منه عتبة بن ربيعة فجعل يضربه بنعلين مخصوفتين ويحرفهما لوجهه،
அந்த வேதனையிலும் பெருமானாரின் நினைவு
وحملت بنو تيم أبا بكر في ثوب حتى أدخلوه منزله، ولا يشُكُّون في موته، ثم رجعت بنو تيم فدخلوا المسجد وقالوا: والله لئن مات أبو بكر لنقتلن عتبة بن ربيعة، فرجعوا إلى أبي بكر، فجعل أبو قحافة (والد أبي بكر) وبنو تيم يكلمون أبا بكر حتى أجاب، فتكلم آخر النهار فقال: «ما فعل رسول الله »، فمسوا منه بألسنتهم وعذلوه، وقالوا لأمه أم الخير: «انظري أن تطعميه شيئاً أو تسقيه إياه»، فلما خلت به ألحت عليه، وجعل يقول: «ما فعل رسول الله ؟»، فقالت: «والله ما لي علم بصاحبك»، فقال: «اذهبي إلى أم جميل بنت الخطاب فاسأليها عنه»، فخرجت حتى جاءت أم جميل (وكانت تخفي إٍسلامها)، فقالت: «إن أبا بكر يسألك عن محمد بن عبد الله»، فقالت: «ما أعرف أبا بكر ولا محمد بن عبد الله، وإن كنت تحبين أن أذهب معك إلى ابنك؟»، قالت: «نعم»، فمضت معها حتى وجدت أبا بكر صريعاً دنفاً، فدنت أم جميل، وأعلنت بالصياح وقالت: «والله إن قوماً نالوا منك لأهلُ فسق وكفر، إنني لأرجو أن ينتقم الله لك منهم»، قال: «فما فعل رسول الله ؟» قالت: «هذه أمك تسمع»، قال: «فلا شيء عليك منها»، قالت: «سالمٌ صالحٌ»، قال: «أين هو؟»، قالت: «في دار الأرقم»، قال: «فإن لله علي أن لا أذوق طعاماً ولا أشرب شراباً أو آتي رسول الله »، فأمهلتا حتى إذا هدأت الرِّجل وسكن الناس خرجتا به يتكئ عليهما، حتى أدخلتاه على الرسول محمد، فأكب عليه الرسولُ فقبله، وأكب عليه المسلمون، ورق له الرسولُ محمدٌ رقةً شديدةً، فقال أبو بكر: «بأبي وأمي يا رسول الله، ليس بي بأس إلا ما نال الفاسق من وجهي، وهذه أمي برة بولدها وأنت مبارك فادعها إلى الله، وادع الله لها عسى الله أن يستنقذها بك من النار»، فدعا لها النبي محمد ودعاها إلى الله فأسلمت-السيرة النبوية لابن كثير،
அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமையின் அடுத்த பண்பு.
இஸ்லாத்தின் பாதையில் துன்புறுத்தப்பட்ட ஏராளமானோரை தனது சொந்தக் காசில் விடுதலை
செய்வித்தார்.
பிலால் ரலி அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.
ومنهم: عامر بن فهيرة،
وأم عبيس وزنيرة، كما أعتق النهدية وبنتها، وابتاع جارية بني مؤمل وكانت مسلمة
فأعتقها.
பெருமானார் (ஸல்) அவர்களோடு இஸ்லாமின் அத்தனை விவகாரங்களிலும் அபூபக்கர் சித்தீக் ரலி உடன் இருந்தார்கள்.
யுத்த களத்தில் ஹஜ்ஜில் மற்ற பயணங்களில் பெருமானாரோடு பலர் சேர்ந்திருந்தார்கள். ஆனால் ஹிஜ்ரத்தில் பெருமானார் (ஸல் அவர்களோடு சேர்ந்திருக்கிற வாய்ப்பு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. பெருமானாரின் தோழர் என்ற அடை மொழியை திருக்குர் ஆன் அவருக்கு வழங்கியது.
إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ
اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ
اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ
لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ
اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
பெருமானார் (ஸல்) அவர்களோடு அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார் அபூபக்கர்
ரலி,
நிகர் சொல்ல முடியாத இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமைகள் எதுவும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை தற்பெருமைக்குள்ளாக்க வில்லை என்பது அன்னாரின் ஆளுமைத் திறனில் மிக முக்கியமாக கவனிக்கத் தக்கதாகும்.
ஒரு சமயத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ அல்லது இயக்கங்களுக்கோ அபூபக்கரை (ரலி) போல யாரும் பங்காற்றி விட முடியாது. ஆனால் இதை எல்லாம் வைத்து எந்த பெருமையையும் தேடிக்கொள்ள நினைக்காத புனித மனம் ஆளுமையின் உச்சத்தை அடையாளப்படுத்துகிறது.
·
ஆளுமையின் இலக்கணம் தனிப்பட்ட உயர்வு மட்டுமே அல்ல.
·
ஆளுமையின் அடையாளம் உடனடிப் பெருமையும் அல்ல.
இன்று ஆளுமையை அளவிடுகிறவர்கள் இதை தான் அடிப்படையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வழங்குவதில் நிகரற்ற ஆளுமை .
وحث الرسولُ محمدٌ الصحابة في غزوة تبوك على
الإنفاق، فأنفق كل حسب مقدرته، وكان عثمان بن عفان أكثر من أنفق في هذه الغزوة وقد قال عمر بن الخطاب في ذلك: أمرَنا رسول الله يوماً أن نتصدق، فوافق ذلك مالاً عندي، فقلت: «اليوم
أسبق أبا بكر إن سبقته يوماً»، فجئت بنصف مالي، فقال رسول الله : «ما أبقيت لأهلك؟»، قلت: «مثله»، وأتى أبو بكر
رضيَ الله عنه بكل ما عنده، فقال له رسول الله : «ما أبقيت لأهلك؟»، قال: «أبقيت لهم الله
ورسوله»، قلت: «لا أسابقك إلى شيء أبداً»سنن أبي داود، كتاب الزكاة،
முதல் ஹஜ்ஜின் தலைவர்
அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமை திறன் அறிந்தே ஹிஜ்ரி 9 ம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப்பட்ட போது அந்த ஹஜ்ஜை அபூபக்க ர் ரலி அவர்களின் தலைமையில் நிறைவேற்ற பெருமானார் (ஸல்) தோழர்களை அனுப்பி வைத்தார்கள்.
பெருமானார் (ஸ்ல) அவர்களின் மரணத்தில் வெளிப்பட்ட அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமை
இன்றளவும் உலகம் வியந்து நிற்கிற ஆளுமை திறன் அது. ஒரு சமூதாயத்தை சிதறுண்டு
போகாமல் காத்த அதிசயம் அது. ஒரு சமயத்தை சலனப்பட விடாமல் பாதுகாத்த அற்புதம் அது.
தனது ஈமானில் ஒரு போதும் சலனப்படாத அந்த மகா ஆளுமை ஒரு கண நேரத்தில் சமுதாயத்தின்
சலனத்தை போக்கிய விதம் மகா ஆச்சரியமானது.
உலகின் மகத்தான மனிதர்களின் من اعظم رجال العالم ) ( வரிசையில் அபூபக்கர் சித்தீக்
ரலி அவர்களை சேர்க்கிற ஆய்வாளர்கள் குறீப்பிடுகிற முதல் காரணம் இது.
பெருமானாரின்
மரணத்தை சமூகத்திற்கு சரியாக புரிய வைத்ததார் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்
அந்த
கால கட்டத்தில் அபூபக்கர் ரலி அவர்கள் பேசிய வார்த்தை ஆய்வாளர்கள் பொன்னெழுத்துக்களாக்
பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என விவரிக்கிறார்கள். எவ்வளவு நிதர்சனமான உண்மை இது.
.
قاعدة تُكتب والله بحروفٍ من ذهب من كان يعبد محمداً فإن محمداً قد مات ومن كان يعبد
الله فإن الله حي لا يموت
புகாரியில் இந்த செய்தி வருகிறது,
عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن رسول
الله صلى الله عليه وسلم مات وأبو بكر بالسنح قال إسماعيل يعني بالعالية فقام عمر يقول
والله ما مات رسول الله صلى الله عليه وسلم قالت وقال عمر والله ما
كان يقع في نفسي إلا ذاك وليبعثنه الله فليقطعن أيدي رجال وأرجلهم فجاء أبو بكر فكشف عن
رسول الله صلى الله عليه وسلم فقبله قال بأبي
أنت وأمي طبت حيا وميتا والذي نفسي بيده لا يذيقك الله الموتتين أبدا ثم خرج فقال
أيها الحالف على رسلك فلما تكلم أبو
بكرجلس عمر فحمد
الله أبو بكر وأثنى
عليه وقال ألا من كان يعبد محمدا صلى الله عليه وسلم فإن محمدا قد مات ومن كان
يعبد الله فإن الله حي لا يموت وقال إنك ميت وإنهم ميتون وقال وما محمد إلا رسول قد خلت
من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر
الله شيئا وسيجزي الله الشاكرين قال فنشج الناس يبكون
பெருமானாருக்கு பின் ஏற்பட்ட அரசியல் குழப்பம் எதுவும் ஏற்பட்டு விடாது ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தது அபூபக்க ரலி அவர்களின்
ஆளுமை திறனுக்கு மற்றோர் சாட்சியாகும்.
நெருக்கடியான சந்தர்ப்பங்களை சிறப்பாக கையாளுவதில் தான் ஆளுமை திறன் முதிர்ச்சியாக
வெளிப்படும். உமர் ரலி யை பேச வேண்டாம் என
தடுத்து பேசிய விதம் கவனிப்பிற்குரியது. உமர் ரலியின் பேச்சில் அதிகாரத் தொனி இருந்து விடலாம். தனது பேச்சிற்கு
மக்கள் கட்டுப் படுவார்கள் என்ற அலாதியான உறுதியான நம்பிக்கை அபூபக்கர் சித்தீக் ரலி
அவர்களை பேச வைதது.
யோசித்துப் பார்த்தால் அபூபக்கர் ரலி அவர்களின் அன்றைய அந்தப் பேச்சின் மகத்துவத்தையும்
அது வரலாற்றில் எத்தகைய ஆழமான தாக்கத்தை செலுத்தியது
என்பதை அறியலாம்.
قال واجتمعت الأنصار إلى سعد بن عبادة في سقيفة بني ساعدة فقالوا منا أمير ومنكم أمير فذهب إليهم أبو بكر وعمر بن الخطاب وأبو عبيدة بن الجراح فذهب عمر يتكلم فأسكته أبو بكر وكان عمر يقول والله ما أردت بذلك إلا أني قد هيأت كلاما قد
أعجبني خشيت أن لا يبلغه أبو بكر ثم تكلم أبو بكر فقال في كلامه نحن الأمراء
وأنتم الوزراء فقال حباب بن المنذر لا والله لا نفعل منا أمير ومنكم أمير فقال أبو بكر لا ولكنا الأمراء وأنتم الوزراء هم أوسط العرب دارا وأعربهم أحسابا فبايعوا عمر أو أبا عبيدة بن الجراح فقال عمر بل نبايعك أنت فأنت سيدنا وخيرنا وأحبنا إلى رسول
الله صلى الله عليه وسلم فأخذ عمر بيده فبايعه وبايعه الناس
இஸ்லாமிய சமயத்தின் முதல் பிரச்சாரகரே இஸ்லாமிய அரசின் முதல் பிரச்சாரக இருக்க
நேர்ந் எதார்த்தமும் எவ்வளவு ஆச்சரியமானது ?
ஆட்சிப் பொறூப் பேற்றி அவர் பேசிய பேச்சும் அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமை திறனுக்கான
சான்றாக அமைந்தது,
பெருமானார் (ஸல்) அவர்கள் எதை செய்தர்களோ அதையே நான் செய்வேன். என்றார்.
ஆட்சிப் பொறுப்பேற்கிற போது பலரும் வீராவேசம் காட்டுவார்கள். அதிகாரத்திற்கு
வந்த பிறகு அந்தப் பேச்சு அலங்காரப் பேச்சாகவே நின்று விடும் அபூபக்கர் ரலி அவர்களின்
பேச்சு வெகு எதார்த்தமான பேச்சாக இருந்தது, தொழுகைகான நேரம் நெருங்கியதும் போங்க தொழுகைக்கு
என மக்களை எச்சரிக்கும் நபித்துவ பிரச்சாரம் அதில் எதிரொலித்தது,
يها الناس، فإني قد وُليت عليكم ولست بخيركم، فإن
أحسنت فأعينوني، وإن أسأت فقوموني، الصدق أمانة والكذب خيانة، والضعيف فيكم قوي
عندي حتى أرجع عليه حقه إن شاء الله، والقوي فيكم ضعيف عندي حتى آخذ الحق منه إن
شاء الله، لا يدع قوم الجهاد في سبيل الله إلا خذلهم الله بالذل، ولا تشيع الفاحشة
في قوم إلا عمهم الله بالبلاء، أطيعوني ما أطعت الله ورسوله، فإذا عصيت الله
ورسوله فلا طاعة لي عليكم، قوموا إلى صلاتكم يرحمكم الله
ஆட்சிக்கு வந்த வுடன் ஜகாத் தர மறுத்தவர்களுக்கும் மதம் மாறியோர்களுக்கு ம் எதிரான் உறுதியான் அபூபக்கர் ரலி அவர்களின் நடவடிக்கைகள் அபூபக்கர் ரலி அவர்களின் உள்ளத்து உறுதியை பறை சாற்ற போதுமானவை.
அல்லாஹ் அபூபக்கர் ரலி அவர்களுக்கு மேலும் மேலும் கிருபை செய்ய வேண்டும் அன்று
அந்தக் கடுமையை அவர்கள கடை பிடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த சமுதாயம் எதை எல்லாம்
இழந்திருக்கும் ?
أن أبا هريرة قال لما توفي - صلى
الله عليه وسلم - ، وكان أبو بكر وكفر من كفر من العرب
، فقال عمر : كيف تقاتل الناس وقد
قال - صلى الله عليه وسلم - : أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله ، فمن قالها فقد عصم مني ماله ونفسه
إلا بحقه ، وحسابه على الله . فقال : والله لأقاتلن من فرق بين الصلاة والزكاة ،
فإن الزكاة حق المال ، والله لو منعوني عناقا كانوا يؤدونها إلى رسول الله - صلى الله عليه وسلم - لقاتلتهم على
منعها . قال عمر : فوالله
ما هو إلا أن شرح الله صدر أبي بكر فعرفت
أنه الحق "
அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமை திறனில் உலகம் கண்டு வியக்கிற மற்றொரு
பண்பு
அபூபக்கர் ரலி அவர்கள் ஒரே நேரத்தி இரண்டு வல்லரசுகளை எதிர்த்து
இரண்டிலும் வெற்றி கண்ட ஒரே தலைவராவார்கள் .
ஆய்வாளர்கள் எழுதுக்றார்கள்
كون
أبو بكر الصديق رضي الله عنه وأرضاه أول رجل في تاريخ الإنسانيه ينتصر في آن واحد
على إمبراطوريتين عظيمتين ملكتا مشارق الارض ومغاربها ، فالمعلوم أن ثمة قاعده
عسكريه ثابته ، منذ قديم الزمان ، مازالت تُدرس في الكليات العسكريه الحديثه ، ألا
وهي تجنُب فتح أكثر من جبهة واحده في القتال العسكري ، فقد إنهزم نابليون بونابرت
عندما فتح جبهة ثانيه مع روسيا القصيريه ، وتمزق جيش أدولف هتلر شر ممزق عندما فكر
في فتح جبهة ستالينغراد وجبهة أوروبا الغربيه في آن واحد ، ولكن ابو بكر الصديق
رضي الله عنه وأرضاه كان هو القائد العسكري الأول في تاريخ الأرض الذي كسر هذه
القاعده العسكريه ،
ஐரோப்பாவையும் ஆப்ரிக்காவையும் கலங்கடித்த நெப்போலியன் ஐரோப்பாவில் யுத்த முனையில்
இருக்கும் போதே ரஷ்யாவை நோக்கி கவனனத்தை செலுத்தினான், தோற்றுப் போனான், அதே போல் எங்கும்
வெற்றி முகத்திலிருந்த ஹிட்லர் மேற்கு ஐரோப்பாவுடன் சண்டையிலிருந்த போதே ஸ்டாலின் கிராட்
மீதும் போர் தொடங்கினான். அவனது இரும்புப் படை நொருங்கிப் போனது.
எனவே இராணுவ பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படுகிற முதல் பாடம் ஒரே நேரத்தில் இரணுட் இலக்குகளில் கவனம் செலுத்தக் கூடாது என்பது.
இந்த விதியை தகர்த்து ஒரே நேரத்தில் இரு இலக்குகளை நோக்கி கவனத்தை செலுத்தி இரண்டிலும் வெற்றி கொண்டவர் அபூபக்கர் சித்தீக் ரலி ஆவாரகள்.
காலித் பின் வலீத் ரலி அவர்களின் தலைமையில் பாரசீகத்தை எதிர்த்து படை நடத்திய அதே நேரத்தில் அபூ உபைதா ரலி அவர்களின் தலைமையில் ரோமை எதிர்த்தும் படைகளை நடத்தினார், இரண்டிலும் வெற்றி கண்டார். இவை அனைத்தும் இரண்டே வருடங்களில் நடந்தது,
நபி (ஸல்) அவர்கள் வபாத்தான பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்கர் ரலி அவர்கள்
இரண்டரை ஆண்டுகளே வாழ்ந்தார்கள்,
அதற்குள் மகத்தான பல காரியங்களை ஆற்றினார்கள்
ஜகாத் தர மறுத்தவர்களை – நபி என வாதிட்டு குழப்பம் செய்தவர்களை அடக்கினார்கள்.
மதீனவை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய அரசை நிலைப் படுத்தினார்கள்.
உலகின் பல பகுதிகளுக்கு இஸ்லாம் அதன் முழு அடையாளத்தோடு செல்ல வழி ஏற்படுத்திக்
கொடுத்தார்கள்.
இராக் முழுமையாக வெற்றி கொள்ளப் பட்டது, இராணின் சில நகரங்கள் அது போல சிரியாவின்
சில நகரங்கள் வெற்றி கொள்ளப் பட்டன,
இராக் வெற்றியின் வரலாற்றை படித்து பார்த்தால் அபூபக்கர் ரலி அவர்களின் ஆளுமைப் பண்பின் ஏராளமான அம்சங்களை அறியலாம்.
இராக்கை அதன் மேல் புறத்திலிருந்து கைப்பற்ற இயாழ் பின் அனம் ரலிக்கு கட்டளையிட்ட
அபூபக்கர் ரலி அதன் கீழ்ப்புறத்தில் முன்னேற காலித் பின் வலீத் ரலிக்கு கட்டளை கொடுத்தார்கள்,
فكان أن أمر أبو بكر خالد بن الوليد بأن يتجه إلى
العراق لفتحها من جهة الجنوب حتى يصل إلى مدينة الحيرة، وفي الوقت نفسه كتب إلى
عياض بن غنم -وكان في الحجاز- بأن يدخل العراق من أعلاها مفتتحًا ما في طريقه
إليها، ثم يكمل المسير حتى يصل إلى الحيرة أيضًا، وقد قال لهما أبو بكر t: "فأيُّكما
سبق إلى الحيرة فهو أمير على صاحبه، وإذا اجتمعتما بالحيرة وقد فضضتما مسالح
(حصون) فارس وأَمِنتُما أن يُؤْتَى المسلمون من خلفهم، فليكن أحدكما ردءًا
للمسلمين ولصاحبه بالحيرة، وليقتحم الآخر على عدو الله وعدوكم من أهل فارس دارهم
ومستقر عزهم المدائن
உங்களில் யார் முதலில் ஹீராவை அடைகிறாரோ, அவரே தலைவர். நீங்கள் இருவரும் அங்குள்ள பாரசீக கோட்டைகளை தகர்த்து முஸ்லிம்களையும அந்த ஊர் மக்களையும் நிம்மதியாக இருக்க செய்து விட்டால், உங்களில் ஒருவ ர் அந்த ஊரை கவன்க்கட்டும் மற்றவர் பாரசீகர்களின் மரியாதைக்குரிய நகரான் மதாயினை நோக்கி நகரட்டும்.
இந்த உத்தரவுகளில் வெளீப்படுகிற தெளிவையும் உறுதியையும் கவனியுங்கள்.
உலகை வெள்ளப் புறப்பட்ட அந்த பெருந்தகையின் அடுத்த உத்தரவிலுள்ள ஆன்மீகத்தை
கவனியுங்கள் . ஆகிரத்தை தேடுங்கள் இரண்டும் கிடைக்கும். உலகத்தை தேடாதீர்கள் இரண்டு
போய்விடும்.
"... واستعينوا بالله واتقوه، وآثروا أمر الآخرة على الدنيا يجتمعا لكم،
ولا تؤثروا الدنيا فتُسلَبوهما، واحذروا ما حذركم الله بترك المعاصي ومعاجلة
التوبة، وإياكم والإصرار وتأخير التوبة".
இவற்றுக்கு அடுத்ததாக ஆளுமையின் தெளிவையும் நீதியையும் வெள்ப்படுத்திகிறது அடுத்த
உத்தரவு
யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம். திரும்ப நினைக்கிறவர்களை திரும்ப அனுமதியுங்கள்,
சமீபத்தில் நமக்கு எதிராக கலகம் செய்து திரும்பியவர்களை (அஹ்லுர் ரித்தத் ) திருப்பி
அனுப்பி விடுங்கள்.
وَأْذَنا لمن شاء بالرجوع ولا تستفتحا بمتكارِه، واستنفرا
من قاتل أهل الردة ومن ثبت على الإسلام بعد رسول الله r، ولا يغزونَّ معكم أحد ارتدَّ
حتى أرى رأيي
ஒரு பெரும் இலட்சியத்தை எடுத்துச் செல்கிற பயணத்தில் உள்ளுக்குள் ஏற்படுகிற பலவீனத்தை முற்றாக துடைத்துவிடுவதற்கு அபூபக்கர் ரலி அவர்கள் சொன்ன உத்தரவு அவர்களின் ஆளுமையின் சிறப்பான ஒரு அம்சமாகும்.
இன்று சமூகத்தில் பல கருத்துக் கொண்டோரையும் முஸ்லிம் என்ற பெயரில் ஒன்றினைத்து
செயல்பட வேண்டும் என்று சிந்திப்போர் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய வழிகாட்டுதல் இது,
ஒரு இலட்சியப் பயணத்திற்கு களைகள் தகுதியுடையவர்களாக மாட்டார்கள்.
அபூபக்கர் ரலி அவர்கள் நான்கு பெண்களை திருமணம் செய்தார்கள், மூன்று ஆண் குழந்தைகள்
மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள்.
அஸ்மா ரலி
ஆயிஷா ரலி
உம்மு குல்சூம் ரலி ஆகிய மூன்று பெண் மக்கள் , ஆயிஷா அம்மஈஅவை பெருமானார் (ஸ்ல்
) அவர்களுக்க் திருமணம் செய்து கொடுத்தார்கள், அந்த வகையில் பெருமானாரின் மாமனாரகவும்
அபூபக்கர் ரலி இருக்கிறார்கள்.
அப்துர் ரஹ்மான்
அப்துல்லாஹ்
முஹம்மது என்ற மூன்று ஆண்மக்கள்.
இதில் உம்மு குல்சூம் பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தான பிற்கு பிறந்தவர் ஆவார்.
ஹிஜ்ரீ ந13 ம் ஆன்டு ஜமாதில் ஆகிரில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது, இதிலிருந்து தான் பிழைப்பது சாத்தியமற்றது என்று
தெரிந்தவுடன் தனக்கு பிறகு உமர் ரலி அவர்களை அடுத்த ஆட்சியாளராக நியமித்தார்கள். அவர்
கடுமையானவரல்லவா என நெருக்கமானவர்கள் உபதேசித்த போது நீங்கள் அவரை என்னோடு ஒப்பிட்டு
பார்க்கிறீர்கள் என்னோடு ஒப்பிட்டு பார்த்தால் அவர் கடுமையானவராக தெரிகிறார். எனக்கு
பின்னால் அவர் மென்மையானவராக மாறிவிடுவார் என்றார்.
என்னே ஆளுமை ? என்னே ஆளுமை ? என்னே ஆளுமை ???
ஒரு மாபெரும் அரசுக்கு பொறுத்தமான ஒருவரை சலனமில்லாமல் நியமிக்கிறார்
? சலனமில்லாமல் ஈமான் கொண்டது போல.
அதற்கெதிராக எழுந்த கருத்துக்களுக்கு வெகு நேர்த்தியாக வெள்ளந்தியாக பதிலளிக்கிறார்,
அவர் ஈமானிய பரிசுத்தத்தை போல்
அதற்கு பிறகு அவருடைய மிக எச்சரிக்கையான பிரகடணம் வெளியிடப்படுகிறது.
بسم الله
الرحمن الرحيم، هذا ما عهد أبو بكر بن أبي قحافة في آخر عهده بالدنيا خارجاً منها،
وعند أول عهده بالآخرة داخلاً فيها، حيث يؤمن الكافر ويوقن الفاجر ويصدق الكاذب،
إني استخلفت عليكم بعدي عمر بن الخطاب فاسمعوا له وأطيعوا، فإن عَدَلَ فذلك ظني به
وعلمي فيه، وإن بَدّلَ فلكل امرئ ما اكتسب، والخير أردت ولا أعلم الغيب: «وسيعلم الذين ظلموا
أي منقلب ينقلبون
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் இறுதி நிலையை ஆயிஷா ரலி விவரிக்கிறார்கள்.
தன்னிடம் இருந்ததை எல்லாம் இந்த தீனுக்கு கொடுத்த பெருந்ததை இறக்கும் தருவாயில்
என்னிடம் மிச்சம் இருப்பதை அரசு கஜானாவிற்கு
திருப்பி கொடுத்து விடுங்கள் என்றார்கள்.
وقد روت السيدة عائشة خبر وفاة أبيها أبي بكر فقالت: «أول ما بُدئ مرض أبي
بكر أنه اغتسل وكان يوماً بارداً، فحم خمسة عشر يوماً لا يخرج إلى صلاة، وكان يأمر عمر بالصلاة وكانوا يعودونه، وكان عثمان ألزمهم
له في مرضه» وقالت السيدة
عائشة: قال أبو بكر: «انظروا ماذا زاد في مالي منذ دخلت في الإمارة فابعثوا به إلى الخليفة
بعدي»، فنظرنا فإذا عبد نوبي كان يحمل صبيانه، وإذا ناضح (البعير الذي
يُستقى عليه) كان يسقي بستاناً له، فبعثنا بهما إلى عمر، فبكى عمر، وقال: «رحمة الله على أبي بكر لقد أتعب من بعده تعباً
شديداً»
ஒரு அடிமை தண்ணீர் இறைக்க பயன்படும் ஒரு கோவேறூ கழுதை இவை இரண்டு மட்டுமே அவரிடம் இருந்தது, இரண்டு ம் அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பப் பட்டது.
தனது மனைவி அஸ்மா பின் து உமைஸ் தன்னை குளிப்பாட்ட வேண்டும். என்றும்
தன்னை தனது மரணத்திற்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருகில் அடக்கம்
செய்யுமாறு அவர்கள் கோரினார்கள்.
توفني مسلماً وألحقني بالصالحين என்று ஓதிக் கொண்டிருந்த நிலையில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் இந்த உலகிலிருந்து விடை பெற்றார்கள்
அவர் கோரிய படியே குளிப்பாட்டப் பட்டது. உமர் ரலி அவர்கள் ஜனாஸா தொழ வைத்தார்கள்.
உமர் உஸ்மான் தல்ஹா அப்துர் ரஹ்மான் பின் அபீபக்கர் ஆகியோர் குழிக்குள் இற்ங்கி பெருமானார்
(ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகே பெருமானாரின் புஜத்திற்கு நேராக தலையை வைத்து பிள்ளை
குழி தோண்டி அடக்கம் செய்தார்கள் .
மதீனா அழுகையால் நிறைந்தது,
அலி ரலி அவர்கள் கதறினார்கள்
رحمك الله يا أبا بكر، كنت إلفَ رسول الله وأنيسه، ومستراحه وثقته، وموضع سره ومشاورته»، إلى
أن قال: «والله لن يصاب المسلمون بعد رسول الله بمثلك أبداً، كنت للدين عزاً
وحرزاً وكهفاً، فألحقك الله عز وجل بنبيك محمد ، ولا حرمنا أجرك ولا أضلنا
بعدك»، فسكت الناس حتى قضى كلامه، ثم بكوا حتى علت أصواتهم، وقالوا: «صدقت»
பெருமானார் (ஸல்) அவர்களைப் போலவே தனது 63 வயதில் அபூபக்கர் சித்தீக் ரலி வபாத்தானார்கள்.
வரலாற்றில் இத்தகைய மனிதர்கள் பிறப்பது அரிது,
அமைதியாக அதே நேரத்தில் உறிதியாகவும்
தெளிவாகவும் தான் வாழ்ந்து சமுதாயத்திற்கும் அதன் பலனை அனுபவிக்க கொடுத்தார்கள்.
அன்னாரின் கப்றருகே நின்று
சலாம் சொல்லி விட்டு
جزاك الله عنا وعن الإسلام والمسلمين خير الجزاء
என்று சொல்லும் வாய்ப்பை காலமெல்லாம் அல்லாஹ் நமக்கு நமது குடும்பத்தாரும் நம்மை சார்ந்தவர்களுக்கும் தந்தருள்வானாக
No comments:
Post a Comment