வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 06, 2017

வெப்ப சலனங்கள் எழட்டும்

·        கோடையின் தாக்கம் கடுமையாக இருக்கிறது.

ஏப்ரல் முதல்  ஜூன் வரை உள்ள கோடைகாலத்துக்கான வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது

இந்த ஆண்டு நாடு முழுவதும் வழக்கமான வெப்ப நிலையைவிட 5 டிகிரி செல்சியஸ் அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

மார்ச் மாத பிற்பகுதியில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக வெப்பநிலை அதிகரித்து வந்தது. கடந்த 2-ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 9 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சேலத்தில் அதிகபட்சமாக 105.26 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தின் பல நகரங்களில் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. வேலூர், திருவண்ணாமலையில் வெயில் 115 டிகிரிவரை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெயில் காரணமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார் .

அல்லாஹ் கோடை வெப்பத்தின் கொடும் தாக்குதலிலிருந்து நம்மை  நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக! எச்சரிக்கைகள் கனமாக இருந்தாலும் ஆபத்துக்கள் அதிகமில்லாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக! பாதுகாப்பான மழையை தந்து நம்மையும் பூமியையும் குளிரச் செய்வானாக!

கோடையின் வெப்பம் அதிகமாக இருப்பதால்ல்

·        தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.
·        லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழு கை ஆடைகள், நூல் துணி பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
·        வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழ ரசங்கள் ஆகியவை பருக வேண்டும்.
·        இளநீர், நொங்கு, தர்பூசணி, மோர் அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்
·        வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படலாம். எனவே அவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
·        தேனீர், காபி போன்றவற்றை அருந்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் அல்லது மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் ஆய்வு மையம் ஒரு தந்தையின் கரிசனத்தோடு அறிவுறுத்தியுள்ளது.

கோடையின் வெப்பத்தை அலட்சியப் படுத்தாமல் நாமும் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடை பிடிப்ப்போம்.

முஸ்லிம்கள் கால மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். இதிலுள்ள நன்மை தீமைகளை அறிய வேண்டும். அல்லாஹ்வின் படைப்பில் எதுவும் வீணானது அல்ல என்பதை அறிந்து அல்லாஹ்வை புகழ வேண்டும் இது வே முஃமின்களின் இயல்பு என அல்லாஹ் கூறுகிறான்.

لَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ [سورة آل عمران:191சூரியக் கதிர்கள் அதிகமாக  நேஅரடியாக உடலில் படுவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறுத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.. ஐரோப்பியர்கள் சன் பாத் எனும் சூரிய வெயில் குறைந்த் ஆடையோடு படுத்துக் கிடப்பதை நாகரீகமாக கருதினார்கள், அது தீங்கு விளைவிக்க கூடியது என்று இப்போது கண்டறியப் பட்டுள்ளது,
ஐரோப்பாவில் குறிப்பாக ஐந்து மருத்துவரில் ஒருவர் தோல் வியாதி சம்பந்தப் பட்டவராக இருக்கிறார். காரணம் சன் பாத் பழக்கம் காரணமாக ஐரோப்பியர்களில் பெரும்பாலோருக்கு தோல் வியாதி ஏற்பட்டுள்ளது.
ஆனால் கோடையின் வெப்பம் என்பது எல்லா நிலையிலும் வெறுக்கத் தக்கது அல்ல
கோடையின் வெப்பத்தை அல்லாஹ் வீணுக்கு உருவாக்க வில்லை. மனிதர்களுக்கு அல்லாஹ் அதிலும் பல நன்மைகளை வைத்திருக்கிறான்.  
கோடை காலத்தில் ஹார்ட் அட்டாக் மரணங்கள் குளிர்காலத்தை விட  குறைவாக ஏற்படுகிறது என இங்கிலாந்து  மருத்துவர்கள் கூறுகிறார்கள்.கோடை வெப்பத்தில் வைட்டமின் டி அதிகரிப்பதே இதற்கு காரணம் என்கின்றனர் அவர்கள்.
வைட்டமின் டி அதிகரிப்பதால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் இது நல்லதே என்கின்றனர் மருத்துவர்கள்.
சூரிய வெப்பம் அதிகமாக இருக்கிற இடங்களில் பல் வலியினால் பாதிக்கப்படுவதும் குறைவு
மார்பகப் புற்று நோய் உள்ளிட்ட சில வகை புற்று நோய்களும் அதிக அளவில் ஏற்படாமல் வெப்பம் பாதுகாக்கிறது .
கோடை காலத்தில் குழந்தை கருத்தரிப்பு அதிகரிக்கிறது, குழந்தை பேறும் இலாசாகிறது,.
வெப்பத்தை அதிகமாக அனுபவிக்கும் பெண்களுக்கு மோனபஸ் என்ற மாதவிடாய் விலக்ககு ஏற்படுவது தாமதமாகிறது,  7 லிருந்து 9 வருடங்கள்.
என்றெல்லாம் வெயிலின் நன்மையை மருத்துவர்கள் கூறுகிறார்கள்/
எனவே அல்லாஹ்வின் திட்டத்தில் எதுவும் வீண் இல்லை.
கோடையில் மறுமையை சிந்திப்பதும் ஈமானிய இயல்பாகும்.  நபி (ஸல்) அவர்கள் இதை பல வகையில் இணைத்துப் பேசி உணர்த்தியுள்ளார்கள்.
கோடையிப் வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன ?
கோடைகாலத்தில் சூரியன் பூமியிலிருந்து 154 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதுவே குளிர் காலத்தில் 23 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
உண்மையில் இந்த தூரம் கோடை கால வெப்பத்திற்கு காரணமில்லை. கோடை காலத்தில் பூமியின் அச்சு சூரியனை நோக்கி 23.5 டிகிரி  சாய்ந்திருப்பதே வெப்பத்திற்கு காரணமாகும். சுருக்கமாக சொன்னால் நாம் இருக்கிற பகுதி அதிக நேரம் சூரியனின் பக்கமாக சாய்ந்திருப்பதே கோடையின் வெப்பத்திற்கான காரணமாகும் என விஞ்ஞானம் கூறுகிறது,
இதற்கு இன்னொரு காரணத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
أخرج البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة رضي الله عنه قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ: رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ

கோடை காலத்தில் லுஹரை பிந்தய நேரத்தில் தொழ பெருமானார் அனுமதித்தார்கள் , நல்ல வெயில் நேரத்தில் மக்கள் வெளியேறாமல் செய்ய ஒரு ஏற்பாடு.

وعَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ " [رواه البخاري ومسلم]


அதே நேரத்தில் கோடையை காரணமாக காட்டி அவசியமான கடமைகளை நிறைவேற்ற தவறக் கூடாத் என்றும் குர் ஆன் எச்சரித்துள்ளது,

நபி (ஸல்) அவர்கள் கடும் கோடையில் தபூக் யுத்ததிற்கு தயாரான போது முனாபிக்கள் வெப்பத்தை காரணமாக கூறி மக்களை தடுத்தார்கள்.

وَقَالُوا لَا تَنفِرُوا فِي الْحَرِّ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَّوْ كَانُوا يَفْقَهُونَ  [سورة التوبة:81]

கோடையில் மக்கள் அனுபவிக்கும் கொடுமையை மஹ்ஸரில் தீயவர்கள் அனுபவிக்கும் நிலையோடு அல்லாஹ் ஒப்பிடுகிறான்.

وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ، فِي سَمُومٍ وَحَمِيمٍ، وَظِلٍّ مِّن يَحْمُومٍ، لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ  [سورة الواقعة:41 - 44].


வடக்கத்தியர்கள் கடும் வெப்பத்தில் இருப்பார்கள், சுடு தண்ணீரே அருந்து வார்கள்.

سَمُومٍ என்பது முகத்தை கரிக்கும் வெப்பத்தை குறிக்கிறது.
وَحَمِيمٍ என்பது குடலை துண்டாக்கி விடும் சூட்டை குறிக்கிறது.

திருக்குர் ஆன் இன்னொரு இடத்தில் கூறுகிறது.

وسٍقٍوا مّاءْ حّمٌيمْا فّقّطَّعّ أّمًعّاءّهٍمً [سورة محمد:15].


எனவே கோடையின் வெப்பத்தை அனுபவிக்கும் மக்கள் கோடையின் வெப்பத்திலிருந்தும் பாதுகாப்பு தேடவேண்டும் நாளை மஹ்ஷரின் வெப்பம் நரகத்தின் வெப்பத்திலிருந்து ம் பாதுகாப்பு தேடனும்

நாமெல்லாம் அதிகமாக ஓதுகிற ரப்பனா ஆதினா துஆவில் இதுவும் அடங்கியிருக்கிறது என விரிவுரையாளர்கள் கூறுகிறார். கோடையின் வெப்பத்திலிருநதும் பாதுகாத்து நன்மை செய்வாயாக! நரக வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்ட நன்மையை தார!  

فعَنْ أَنَسٍ بن مالك رَضي اللَّه عنْهُ، قَالَ: " كانَ أَكْثَرُ دُعَاءِ النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: اللَّهُمَّ آتِنَا في الدُّنْيَا حَسَنَةً، وفي الآخِرةِ حَسنَةً، وَقِنَا عَذابَ النَّار " [رواه البخاري ومسلم].

இவ்வாறூ அதிகமாக கேட்பது நமக்து கோரிக்கையை நிச்சயமாக்கும் என்பத் நபி மொழியாகும்.

மூன்று தடவை நாம் சொர்க்கத்தை கேட்டால் பிறகு சொர்க்கம்  நாம் வேண்டும் என கேட்கிறது.

فعن أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ، وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ " [رواه أحمد والترمذي والنسائي وابن ماجه


கோடை காலத்தில் அல்லாஹ்வை பற்றி அதிகமாக நினைப்பதும் அதிக அமல்களில் ஈடுபடுவது ம் முன்னோர்களின் வழக்கம்.

கோடை காலத்தில் நோன்பு கடுமையாக இருக்கும் என்றால் அதில் அதிகமாக நோன்பு வைக்க முன்னோர்கள் ஆசைப் பட்டார்கள்.

هذا أبو بكر الصديق رضي الله عنه كان يصوم في الصيف،
وأم المؤمنين عائشة رضي الله عنها كانت تصوم في الحر الشديد،
وكذا أبو سعيد الخدري رضي الله عنه وغيرهم.

ஈமானிய குணத்தில் முதலாவதாக கோடையில் நோன்பு வைப்பதை உமர் ரலி குறிப்பிட்டார்கள்.

وهذا عمر بن الخطاب رضي الله عنه عند موته يوصي ابنه عبدالله، فيقول له: [عليك بخصال الإيمان]، وذكر أولها: [الصيام في شدة الحر في الصيف].

மஹ்ஷரைப் போன்ற கடும் வெயிலில் நோன்பு வையுங்கள். கப்ரைப் போன்ற கும்மிருட்டில் நின்று வணங்குங்கள் என்பார் அபுத்தர்தாஃ (ரல்)

وهذا أبو الدرداء رضي الله عنه كان يقول: " صوموا يوماً شديداً حره لحر يوم النشور، وصلوا ركعتين في ظلمة الليل لظلمة القبور ".

கோடை காலத்தில் நோன்பு வைக்கிற வாய்ப்பும் குளிர்கால இரவுகளில் நின்று தொழுகிற வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடுமே என சகராத்தில் அழுதார்க முஆத் பின் ஜபல் ரலி

وقد بكى مُعَاذ بْن جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ عِنْدَ الاحْتِضَارِ، فَقِيلَ لَهُ: أَتَجْزَعُ مِنَ الْمَوْتِ وَتَبْكِي؟! فقَالَ: " مالِي لا أَبْكِي، وَمَنْ أَحَقُّ بِذلكَ مِنِّي؟ واللهِ مَا أَبْكِي جَزَعًا مِنَ الْمَوْتِ، وَلا حِرْصاً عَلَى دُنْيَاكُمْ، وَلَكِنِّي أَبْكِي عَلَى ظَمَإِ الهَوَاجِرِ  - أي الصوم في شدة الحر - وَقِيَامِ لَيْلِ الشِّتَاءِ ".

நான் மனிதனாக பிறந்ததன் பலனே கோடையின் தாகத்தை சகிப்பதும் தஹஜ்ஜுதில் குர் ஆன் ஓதுவதும் இரவு நின்று வணங்குவதும் தான் என்றார் பிரபல தாபி மிஃழத். ரஹ். இவை இல்லை எனில் ஒரு ஆண் தேனியாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் அவர்.

وقال التابعي الجليل مِعْضَدٌ أَبُو زَيْدٍ الْعِجْلِيُّ رحمه الله: " لَوْلا ثَلاثٌ: ظَمَأُ الْهَوَاجِرِ، وَطُولُ لَيْلِ الشِّتَاءِ، وَلَذَاذَةُ التَّهَجُّدِ بِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ مَا بَالَيْتُ أَنْ أَكُونَ يَعْسُوباً ".

முற்காலத்து பெண்களிடம் கோடை காலத்தில் அதிகமாக நோன்பு வைக்கிற பழக்கம் இருந்தது.  காரணம் கேட்டால் விலை கம்மியாக இருக்கிற போது எல்லோரும் வாங்குவார்கள். விலை அதிககமால இருந்தால் சிலர் தானே வாங்குவார்கள். நாங்கள் அந்தச் சிலரில் ஒருவராக இருக்க விரும்புகிறோம் என்று சொல்வார்களாம்.

وقال الحافظ ابن رجب الحنبلي في كتابه لطائف المعارف: " كانت بعض الصالحات تتوخى أشدّ الأيام حرّاً فتصومه، فيقال لها في ذلك، فتقول: إنّ السعر إذا رخص اشتراه كل أحد؛ تشير إلى أنها لا تُؤثِر إلا العمل الذي لا يقدر عليه إلا قليل من الناس؛ لشدته عليهم، وهذا من علوّ الهمة".கோடை கால தர்மங்கள்

கோடை காலத்தில் தர்மத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

 ( நபி மொழிகளில் உள்ள ஒப்பீடுகளை கவனிக்கவும் )

فعن معاذ بن جبل رضي الله عنه، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَأُنَبِّئُكَ بِأَبْوَابٍ مِنَ الْخَيْرِ: الصَّوْمُ جُنَّةٌ, وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ " [رواه أحمد

فعن عُقْبَةَ بْنَ عَامِرٍ رضي الله عنه، قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " كُلُّ امْرِئٍ فِي ظِلِّ صَدَقَتِهِ حَتَّى يُقضى بَيْنَ النَّاسِ " [رواه أحمد

தண்ணீர் தர்மம் . சிறந்தத் தர்மம்.

فعَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ رضي الله عنه، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا، قَالَ: " نَعَمْ "، قُلْتُ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: " سَقْيُ الْمَاءِ " [رواه أحمد


இமாம் குர்துபியின் கருத்து

وقال الإمام القرطبي رحمه الله في تفسيره: " سقي الماء من أعظم القربات عند الله تعالى، 


மக்கள் கூடும் இடங்களில் நீர் பந்தல்கள் மோர் பந்தல்கள் அமையுங்கள்.

பெரும் பாவம் செய்துவிட்டதாக் முறையிடுகிறவர்களிடம் தண்ணீர் தர்மம் செய்யச் சொல்வது முன்னோர்களின் வழக்கம் . காரணம் ?

وقد قال بعض التابعين: من كثرت ذنوبه فعليه بسقي الماء، وقد غفر الله ذنوب الذي سقى الكلب، فكيف بمن سقى رجلاً مؤمناً موحداً ".

தண்ணீருக்காக மக்கள் அலை பாய்கிறார்கல். பணம் கொடுத்து தண்ணிர் வாங்கி தர்மம் செய்யுங்கள்.

கிராமங்களில் ஆழ்துளை கிணருகள் அமைத்துக் கொடுங்கள்.

தொட்டிகள் குட்டைகள் குளங்களில் அனைவரும் நீர் அருந்த வாய்ப்பளியுங்கள்.

மிருகங்களுக்கும் கூட .

நாம் ஏப்ரல் மாதக் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முயற்ச் செய்வோம் மஹ்ஷரின் வெப்பத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

இரண்டுக்கும் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வோம்.

நல்ல வெயில் நேரத்தில் நாம் வெளியே செல்லாமல் இருப்பது முன்னெச்செரிக்கை 
நமது வேலைக்காரர்களை வெளியே அனுப்பாமல் இருப்பது தர்மம். 

நாம் முன்னெச்செரிக்கையாகவும் இருப்போம். நன்மைகளையும் சேமிப்போம். 

பள்ளிவாசல்களை பண்டைய காலத்தில் கோடை கால பள்ளிவாசல் குளிர் கால பள்ளிவாசல் என இருவகையாக பிரித்திருப்பார்கள்.

கோடை காலத்தில் வெளிப்பள்ளியில் பந்தலுக்கு கீழே தொழுவார்கள் , அப்போது அது உள் பள்ளியின் அந்தஸ்தை பெரும்.

இப்போதும் கூட வாய்ப்புள்ள இடங்களில் ஏசி போடு வதை விட வெளிப்பள்ளியில் காற்றோட்டமாக தொழுவதே சிறப்பானது.

இன்னொரு செய்தி , பேச்சு வாக்கில் கோடையின் வெயிலை ஏசி விடாதீர்கள் மார்க்கத்தில் அது தடுக்கப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَرَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ بِيَدِي الْأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ " [رواه البخاري ومسلم].

மார்க்கத்தின் இன்னொரு வழிகாட்டுதல் குளியுங்கள் ! உங்கள் உடலுக்கும் நல்லது. பிறருக்கும் நல்லது.

عَنْ عِكْرِمَةَمولى ابن عباس، أَنَّ أُنَاسًا مِنْ أَهْلِ الْعِرَاقِ جَاءُوا، فَقَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ، أَتَرَى الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبًا؟ قَالَ: لَا، وَلَكِنَّهُ أَطْهَرُ وَخَيْرٌ لمن اغتسل، ومن لم يغتسل فليس عليه بواجب، وَسَأُخْبِرُكُمْ كَيْفَ بَدْءُ الْغُسْلِ، كَانَ النَّاسُ مَجْهُودِينَ يَلْبَسُونَ الصُّوفَ وَيَعْمَلُونَ عَلَى ظُهُورِهِمْ وَكَانَ مَسْجِدُهُمْ ضَيِّقًا مُقَارِبَ السَّقْفِ إِنَّمَا هُوَ عَرِيشٌ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله علية وسلم فِي يَوْمٍ حَارٍّ وَعَرِقَ النَّاسُ فِي ذَلِكَ الصُّوفِ حَتَّى ثَارَتْ مِنْهُمْ رِيَاحٌ آذَى بِذَلِكَ بَعْضُهُمْ بَعْضًا، فَلَمَّا وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ الرِّيحَ، قَالَ: " أَيُّهَا النَّاسُ، إِذَا كَانَ هَذَا الْيَوْمَ فَاغْتَسِلُوا وَلْيَمَسَّ أَحَدُكُمْ أَفْضَلَ مَا يَجِدُ مِنْ دُهْنِهِ وَطِيبِهِ 

عنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "... إِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ " [رواه مسلم


கடல் பகுதியில் வெப்ப சலனங்கள் தோன்றினால் தரைப்பகுதியில் நல்ல மழை பெய்யும். அல்லாஹ் நமது கடற்பரப்புக்களில் நல்ல வெப்ப சலனங்கள் ஏற்படுத்தட்டும். 

அதே போல இந்த வெப்ப காலத்தில் அல்லாஹ் நமது சிந்தனையில் நல்ல சலனங்களை ஏற்படுத்தி நமது  வாழ்வில் நல்ல மாற்றங்கள தரட்டும் 


அல்லாஹ் நம்மை எல்லா நிலையிலும் பாதுகாப்பானாக! தேவையான முன்னெச்சரிக்கைகளுக்கு தவ்பீக் செய்வானாக! எந்த நிலையிலும் அவனை அஞ்சி வாழ தவ்பீக் செய்வானாக! பாதுகாப்பான மழையை தந்தருள்வானாக! வெப்பத்தின் கடும் பாதிப்புக்களிலிருந்து நம்மையும் நாட்டு மக்களையும் காப்பானாக!


No comments:

Post a Comment