வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 01, 2017

ரமலானை கவனிப்போம்.



இஸ்லாமின் எதிரிகள் ஓரு திட்டம் வைத்திருக்கிறார்கள்  -  உலகளாவிய அளவில் .
முஸ்லிம் களின் புனித நாட்களிள் உள்வியல் ரீதியக அவர்களை துன்புறுத்துவது.  அவர்களை பலவீனமடையச் செய்வது.
இது யூதர்களின் திட்டம்.  பாலஸ்தீன முஸ்லிம்களிண் முக்கியமான பொழுதுகளில் அவர்களது கவனத்தை தற்காலிகமாக உருவாக்கப்படுகிற பிரச்சனைகளை நோக்கி திருப்பி விட்டால்.  யூத எதிர்ப்பையும்   அடிப்படையான அவர்களது உரிமைகளைப் பற்றிய் சிந்தனையுயும் திசை திருப்பி விடலாம். ஒரு அடிமைச் சமூகமாக முஸ்லிம்களை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்கலாம் என்ற யூதர்களீன் திட்டம் தான்  ரன்று சர்வதேச நடைமுறையாக  மாறீவருகிறது.
இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தே தவறு என்றாகிவிட்டது.  பேரழி வு  ஆயுதங்கள் எதுவும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை. ஆனால் அவசர அவசரமாக விசாரனை நடத்தி - . ஏதோ அந்த விசாரனை நியாயமாக நடப்பது போல தொலைக்காட்சிகளில் எல்லாம் அதைக் ஓளிபரப்பு சேய்து,  திடீரென ஒரு  நாள் அ அவரை தூக்கிலிட்டார்கள்/  அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த  நா         ளை  முஸ்லிம் உம்மத் மறக்க முடியாது. ஹஜ்ஜுப் பெருநாள் .
அல்லாஹ் மகிமைப் படுத்திய நாட்களீல் மகத்தானை நாள்.
கடைந்தெடுத்த. சமய வெறி/ அரசியல் வக்கிரம்.
முஸலிம்களுக்கு மனச்சிதைவை எற்படுத்தும் முயற்சி.
நம்முடைய நாட்டிலும் கடந்த சில வருடங்களாக ரமலானை குறி வைத்து பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது .
இந்த ஆண்டு சரியாக ரமலான் முதல் நாளில் மாடு விற்பனைக்கு தடை  என்ற சட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள நடுநிலையாளர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை எழுப்ப தவறுவதில்லை.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க , இதை ஏன் கிளறுகிறார்கள்.
மாடு விற்பனை , மாட்டுக்கறி உணவு என்பது இந்தியாவின் சாமணிய மக்கள்  வாழ்வாதாரம் என்பது அரசுக்கு தெரியாது அல்ல. எல்லா விலங்கிங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது அரசின் திட்டமும் அல்ல.
முஸ்லிம்களின்  புனித நாட்களீண்  அமைதியை சீர் குலைக்க வேண்டும் என்பதே 1 இது முழுக்க முஸ்லிம்களை குறிவைத்து போடப்பட்ட சட்டமே.
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்.  தங்களது ரமலானை அமைதியாக பத்திரமாக அடைந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
சட்ட ரீதியான நடவடிக்கை தேவை எனில் அதை அமைதியாக மேற்கொள்ளலாம். அதிக உணர்ச்சி வசப்படுகிற எந்த நடவடிக்கையையும் இப்போது தவிர்த்து விடலாம்.
மனதில் உறுதி இருக்குமானால் . ரமலானுக்குப் பிறகு அரசாங்கத்தின் அடக்கு முறை சட்டத்திற்  எதிராக. நாட்டு மக்களை அடிமைகளாக நினைக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக இன்னொரு விடுதலை ப் போராட்த்திற்கு கூட தயாராகலாம்.  
அது வே எதிரிகளின்  திட்டத்தை  சரியான வழியில் எதிர் கொள்வதாகும்.
மாட்டுக்றி என்பது அல்லாஹ் அனுமதித்த உணவு
பெரும்பாலும் நேற்றிரவு தராவீஹில் சூரா மாயிதா ஒதப்பட்து.
மாயிதா உணவு பற்றிய சட்டங்களைப் அதிகமாக பேசும் அத்தியாயமாகும்.
தொடக்கமே மாட்டுக்கறி அனுமதிக்கப்பட்து என்றே தொடங்குகிறது .

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ (1)
கால்நடைகளை உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது. என்பது தீர்மாணமான நன்மையான து அது என்ற கருத்தை கொண்டுள்ளது.
أوفوا بالعقود "، أمرٌ منه بالوفاء بكل عقد أذن فيه
அல்லாஹ் அனுமதித்த வைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து என சில விரிவுரைகள் கூறுகின்றன
மாட்டுக்கறியை முஸ்லிம்கள்  வெறுக்கவும் முடியாது. மாட்டை முஸ்லிம்கள் வழிபடவும் முடியாது,
இந்த அத்தியாயம் முழுக்க நிறைய சட்டங்களை ச சொன்ன பிறகு அல்லாஹ் கூறுகிறான்.
وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ (50

அல்லாஹ்வின் சட்டமே சிறந்து.
மாட்டிறைச்சி சாமாணிய மக்களின். மாட்டு வியாபாரம் சாமாணீய மக்களீண் வியாபாரம்.
விக்கீபீடியா என்ன கூறுகிறது என்ரு பாருங்கள்
உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், சவூதி அரேபியா ,சீனா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது[1]. இந்து சமயத்தில் பசு கடவுளாக வணங்கப்படுவதால், உயர்சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதில்லை. இருப்பினும், இச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதுண்டு.
இருப்பினும் உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

அல்லாஹ் அனுமதித்து நல்லதே1
அரசாங்கத்தின் திட்டம் வஞ்சகம் நிறைந்த்து என்பது ருசு வாகிவிட்து,
மாடுகளீண் மீது அக்கறை இருக்குமானால் மாடுகள்  அதிகம் அறுக்கப்படு ஏற்றுமதிக்காக அரசு அதை தடை செய்திருக்க வேண்டும். இந்துத்துவ அமைப்பைச சேர்ந்தவரால் நடத்தப்படுகிற பெரிய  நிறவனம் அல்கபீர். அரசு அதை தடை செய்யவில்லை.
முஸ்லிம்கள்  நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தத்துவம் .
எதிர்ப்புக்களில் இஸ்லாம் வளரும். வெளியில், இஸ்லாம் பலம் பெரும் . உள்ளில்,
தப்பத்து யதா அபீ லஹபின் – அபூலஹபை சபிக்கிற அத்தியாயம் மட்டும் அல்ல. முஸ்லிம்களூக்கு தன்னம்பிக்கை  அளிக்கிற அத்தியாயமாகும்.
இஸ்லாம் வெளிப்பட்ட முதல் கணத்திலேயே அபூலஹ்பு எதிர்த்தான்.  ஒரு வேளை அபூலஹ்பு எதிர்த்திருக்காவிட்டால். அப்போது பலர் இஸ்லாமை ஏற்க வாய்ப்புக் கிடைத்திருக்கும் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அபூலஹ்பின் அந்த எதிர்ப்பும், திசை திருப்புதலும் இல்லாதிருந்திருக்குமானால் 

فالناس عندهم فطرة طيبة، ولو استمعوا إلى القرآن والسُّنَّة لاهتدى معظمهم،  
மிஃராஜிற்குப் பிறகு புதிய உற்சாகம் பெற்ற பெருமானார் (ஸல்) அவர்கள். குடும்பங்களை நேரடியாக சந்தித்து இஸ்லாமை எடுத்து வைத்தார்கள். அப்போதெல்லாம் அபூலஹ்பு பின்னாள்  சென்று எதிர்ப்பான். அதனால் அரபு கபீலாக்களீள்  எவரும் இஸ்லாமை ஏற்கவில்லை.
روي رَبِيعَةُ بْنُ عَبَّادٍ الدِّيلِيِّ -وَكَانَ جَاهِلِيًّا أَسْلَمَ- فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَصَرَ عَيْنِي بِسُوقِ ذِي الْمَجَازِ يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ، قُولُوا لا إِلَهَ إِلاَّ اللَّهُ تُفْلِحُوا»، وَيَدْخُلُ فِي فِجَاجِهَا، وَالنَّاسُ مُتَقَصِّفُونَ عَلَيْهِ، فَمَا رَأَيْتُ أَحَدًا يَقُولُ شَيْئًا وَهُوَ لاَ يَسْكُتُ، يَقُولُ: «أَيُّهَا النَّاسُ قُولُوا لا إِلَهَ إِلاَّ اللَّهُ تُفْلِحُوا»، إِلاَّ أَنَّ وَرَاءَهُ رَجُلاً أَحْوَلَ وَضِيءَ الْوَجْهِ ذَا غَدِيرَتَيْنِ، يَقُولُ: إِنَّهُ صَابِئٌ كَاذِبٌ. فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَهُوَ يَذْكُرُ النُّبُوَّةَ. قُلْتُ: مَنْ هَذَا الَّذِي يُكَذِّبُهُ؟ قَالُوا: عَمُّهُ أَبُو لَهَب
·       يقولون إذا كان هذا رأي عمه فيه، فما يضرنا أن نجافيه، ويتأذى الرسول لذلك.

ஆணால் இத்தனை எதிர்ப்பிற்கும் இஸ்லாம் வளர்ந்து.  மதீனாவிலிருந்து வந்த  அன்சாரிகள் இஸ்லாமை தழுவினர்.  தேடி வந்து.
பெருமானார் (ஸல் அவர்கள் அபூலஹ்பின் திட்டங்கள் வேதனை அடைந்தாலும் மனம் தளர வில்லை.
தாதாரியரிகளின் தாக்க்குதலை தாக்கி நின்ற சமுதாயம் இது .
உறுதியுடன் திட்டமிட்டு செயல்பட்டால்/ . உரியம் சந்த்ர்ப்பத்தில் நமது உரிமையை விட்டுத தர முடியாது என்பதை வெளிப்படுத்தினால் அல்லாஹ் நிச்சயம் இது விசயத்தில் வெற்றியை தருவான்,
முஸ்லிம்களை குறிவைத்து போடப்பட்ட ஒரு சட்டம்.  இன்று அனைத்து தரப்பு மக்களீண்  பிரச்சனையாக மாறீ இருக்கிறது,
உண்மையும் அது தான்,
ஆர் எஸ் எஸ் என்ற அமைப்போ அதன் திட்டங்களோ இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை விட பெரும்பான்மை மக்களையே அதிகம் பாதிக்கும் என்பதே எதார்த்தமாகும்.
பண் மதிப்பு நீக்க்கும் அதிரடி உத்தரவு, மாட்டிறைச்சி  தடை போன்ற உத்தரவுகள் ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து செல்லும் ஆர் எஸ் எஸஇன் கனவை மக்களூக்கு புலப்படுத்தி விட்டன.
மக்கள் போராட்த்தில் இறங்கியிருக்கிறார்கள்
எனவே முஸ்லிம்கள இதை தங்களூடைய பிரச்சனையாக இப்போதைக்கு எடுத்துக் கொள்ளாமல ரமலானில் கவனம் செலுத்துவது நல்லது,
அல்லாஹ் இஸ்லாமிற்கும் நாட்டிற்கும் எதிரான சக்திகளை முறியடிப்பானாக1


 மேலதிக தகவல்களுக்கு இந்த முந்தைய பதிவை பார்த்துக் கொள்ளவும்  இது 2015 ன் பதிவு



No comments:

Post a Comment