வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 20, 2017

வெட்கம்





وَلَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

இன்றைய நம்முடைய வாழ்வில் பார்வை பேச்சு நடை உடை பாவனைகள் அனைத்தும் வெட்க குணத்தை மீறிச் செல்கின்றன்.

தொலைக்காட்சி ,செல்போன், சமூக ஊடகங்கள் அனைத்திற்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது/

இன்றைய காலகட்டத்தில் வெட்கம் என்பது தேவையற்றதாகிவிட்டது.
அது பத்தாம் பசலிகளின் குணம் என்றாகிட்ட்து.  

நாளுபேருக்கு முன்னாள் ஆபாசமாக ஆடை அணிவதும். ஆபாசமாக நடந்து கொள்வதும் சுதந்திரமாக கருதப்படுகிறது.

பெண்களின் ஒரு மாநாடு நடை பெற்ற போது ஒரு பெண் மணி இப்படி ஒரு பேனர் வைத்திருந்தார்.
Keep your laws and moralities out of my body

உங்களது சட்டங்களையும் ஒழுக்கங்களையும் எனது உடலுக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். 

வெளிநாடுகளில் தாய தகப்பன் முன்னிலையில் காதலியுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிற மகன்களைப் பார்க்க முடியும்.

தொடக்கப்பள்ளிகளில் இருந்து உயர் நிலைப் பள்ளிகள் வரை யூனிபார்மிலே கூட வெட்கத்திற்கான அம்சங்கள் இல்லை.

இன்றைய வெளிப்புறச் சூழலில் வெட்கங்கெட்ட காட்சிகளே மலிந்து கிடக்கின்றன. எல்லா இடங்களிலும். கல்விக் கூடம், அலுவலகம். தெருக்கல். கடைவீதிகள். விளையாட்டுக்கள் அனைத்திலும் ஆபாசம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிக ஆபாசமாக மாறிவருகின்றன. அந்த ஆபாசமே அதற்கான் விளம்ப்ரமாக இருக்கிறது. மக்கள் அதை ரசிக்கிறார்கள்.
ஆனால் தங்களை அப்படி இருக்கச் சொன்னால் இருக்க முடியுமா என்று யோசிப்பதில்லை.

இத்தகைய காட்சிகளை தொடர்ந்து பார்ப்பது இதயத்தில் வெட்கத்திற்கான இடத்தை வெறுமைப்படுத்தி விடும்.

முஸ்லிம் உம்மத் தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிகம் போராட வேண்டிய துறை இது

சில் பள்ளிக் கூடங்களில் சேர்ந்தால், சில பகுதிகளில் குடி யிருந்தால், சில இடங்களுக்குச் சென்றால், வெட்கத்தை விட்டுத் தர நாமும் தயாரக வேண்டி வரும் எனில், ஒரு முஸ்லிம் தன்னை அதிகம் பாதுகாத்துக்கொள்ள எந்த அர்ப்பணிப்பிற்கும் தயாராக வேனும்.

இஸ்லாம் வெட்கத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் அப்படி ?

وهو رأس مكارم الأخلاق، وزينة الإيمان، وشعار الإسلام؛

كما في الحديث:

·      "إن لكل دين خُلقًا، وخُلُقُ الإسلام الحياء
·      . ففي الصحيحين: أن رسول الله صلى الله عليه وسلم قال: "الإيمان بضعٌ وسبعون شعبة، فأفضلها قول: لا إله إلا الله، وأدناها: إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان".
·       
வெட்கத்தை விட்டு விட்டால் ?

·      "الحياء والإيمان قرنا جميعًا، فإذا رفع أحدهما رفع الآخر".
·      عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: " الحياء من الأيمان والأيمان في الجنة, والبذاء من الجفاء والجفاء في النار " في معجم الطبراني, سنن البيهقي,
·      قال صلى الله عليه وسلم: "إن مما أدرك الناس من كلام النبوة الأولى: إذا لم تستحِ فاصنع ما شئت".

வெட்க குணம் நன்மையே தரும்.

الحياء لا يأتي إلا بخير

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنْ الْإِيمَانِ
முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் வெட்கப்பட வேணும்! எப்படி?

الحياء من الله:
فإنه يستحي من الله أن يراه مقصرًا في فريضة، أو مرتكبًا لمعصية.. قال الله عز وجل: (أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى)[العلق:14].
 وقال: (وَلَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ) [ق:16].
، وقد قال النبي صلى الله عليه وسلم لأصحابه: "استحيوا من الله حق الحياء. فقالوا: يا رسول الله! إنا نستحي. قال: ليس ذاكم، ولكن من استحيا من الله حق الحياء فليحفظ الرأس وما وعى، والبطن وما حوى، وليذكر الموت والبلى، ومن أراد الآخرة ترك زينة الدنيا، فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء".
خلا رجل بامرأة فأرادها على الفاحشة، فقال لها: ما يرانا إلا الكواكب. قالت: فأين مكوكبها؟(تعني أين خالقها)
முஸ்லிம்கள் மலக்குகளிடம்  வெட்கப்பட வேணும்! எப்படி?

  الحياء من الملائكة.
மலக்குகள் எப்போதும் நம்முடன் இருக்கிறார்கள்
: (وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ * كِرَاماً كَاتِبِينَ * يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ) [الانفطار:10- 12].

قال بعض الصحابة: إن معكم مَن لا يفارقكم، فاستحيوا منهم، وأكرموهم.

قال ابن القيم رحمه الله:[ أي استحيوا من هؤلاء الحافظين الكرام، وأكرموهم، وأجلُّوهم أن يروا منكم ما تستحيون أن يراكم عليه مَنْ هو مثلكم، والملائكة تتأذى مما يتأذى منه بنو آدم، فإذا كان ابن آدم يتأذى ممن يفجر ويعصي بين يديه، وإن كان قد يعمل مثل عمله، فما الظن بإيذاء الملائكة الكرام الكاتبين؟! ]

முஸ்லிம்கள் சக மனிதர்களிடம்  வெட்கப்பட வேணும்! எப்படி?
-   الحياء من الناس.
عن حذيفة بن اليمان رضي الله عنه قال: لا خير فيمن لا يستحي من الناس.
மனிதர்களிடம் வெட்கப்படுவது என்றால் என்ன ? பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்த அடிப்படை
فقال: "ما كرهت أن يراه الناس فلا تفعله إذا خلوت".
மக்கள் தம்மை எப்படி பார்த்து விடக் கூடாது என நினைப்போமோ அதை தனிமையிலும் தவிர்த்துக் கொள்வது வெட்கம்.
அரைகுறை ஆடை
தப்பான நடவடிக்கைகள். பார்வைபயணம்பேச்சு என அனைத்திலும் இந்த பார்முலாவை கடை பிடிக்கனும்/ 

உமர் ரலி காலத்தில் எமனிலிருந்து மதீனாவுக்கு தனியாக வந்த பெண்மணியிடம் அவரது பயணத்தைப் பற்றிக் கேட்கப்பட்டது. அந்தப் பெண்மணி சொன்னார்.
மக்கள் ஒரு தாய் மக்களைப் போல இருக்கிறார்கள். அவர்களது பார்வை பரிசுத்தமானது யமனிலிருந்து தனியே வரலாம்.

ஒட்டுமொத்த உம்மத்தின் பண்பாட்டின் அடையாளமாக வெட்கம் இருந்த்து.

இப்போதும் முஸ்லிம்களிடம் அந்த குணம் உண்டு.
யுவான் ரிட்லி இஙகிலாந்தின் பத்ரிக்கையாளர். ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கச் சென்ற போது தாலிபான்களால் கைது செய்யப் பட்டார்; தன்னுடையா அனுபவத்தை அவர் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

அதில் அவர் கூறுகிறார்/
என்னை மூன்று இளைஞர்கள் பாதுகாத்தார்கள். அவர்களது பார்வை என் மீது விழும் என நான் பய்ப்படவே இல்லை. என்னைப் பார்க்கவே அவர்கள் கூசினார்கள். அவர்களது பாதுகாப்பில் நான் பயமின்றி இருந்தேன்

யுவான் ரிட்லீ பின்னர் இஸ்லாமை தழுவினார்.

இன்றைய உலகிலும் இப்படி மக்களை வார்த்தெடுக்கிற திறன் இஸ்லாமிற்கு இருக்கிறது.

மைக்கேல் ஜாக்ஸனின் சகோதர்ர் எமி ஜாக்ஸன் ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்மணி குட்டைபாவாடையுடன் வந்து உட்கார்ந்த போது அவர் அவருடன் உட்கார மறுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை அவர் பொருட்படுத்த வில்லை.

எமி ஜாக்ஸன் இஸ்லாமை முன்னதாகவே தழுவி இருந்தார்.

இன்றைய நமது பார்வை பேச்சு நடவடிக்கைகள் வெட்கத்தின் அடிப்படையில் இல்லை.

குறிப்பாக பார்வை வேட்டை நாய்களைப் போன்ற பார்வையாகி விட்ட்து. கிழவர்கள் இளைஞர்கள் என இரு தரப்பாரிடமும்.


·       ஒரு மனிதனின் தொடை தெரிந்த்து இமாம் அபூஹனீபா கண்ணை மூடிக்கொண்டார்கள்.

·       கண்கள் சுத்தமாக இருந்தால் அமல்கள் ருசிக்கும்

·       மனிதன் வெட்கத்தினால் பாவத்திலிருந்து விலகிக் கொள்கிற நேரத்த்தில் துஆ ஏற்கப்படும்

·       ஸஃது பின் அபீ வக்காஸ்அவர்கள் தலைமையேற்ற ஒரு யுத்தத்தில் முஸ்லிம்களின் மனோ உறுதியை பலவீனப் படுத்த எதிரிகள் யுத்த களத்தில் பெண்களை நடமாடவிட்டார்கள். அதைப் புரிந்து கொண்ட சஃது ரலி அவர்கள் பார்வையை தாழ்திக் கொள்ள உத்தரவிட்டார்கள்.

பார்வையை கட்டுப் படுத்திக் கொள்ள வே இறைவன் கண்ணுக்கு வேகமான மூடியாக இமையை வழங்கியுள்ளான். என்பார்கள் அறிஞர்கள்


இந்த் வெட்கத்தை கடைபிடிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்வார்கள். சாமானிய மனித வாழ்விலிருந்து சிறந்த மனித வாழ்வை பெறுவார்கள்

·       யூசுப் அலை
·       மர்யம் அலை


வெட்கத்தின் பயன்கள்
·       பரக்கத்
·       சிக்கல்களிலிருந்து விடுதலை
·       அல்லாஹ்வின் பாதுகாப்பு.


·       மூஸா அலை அவர்களுக்கு  வேலை வாங்கித் தந்த வெட்கம்
·       عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مُوسَى كَانَ رَجُلًا حَيِيًّا وَذَلِكَ قَوْلُهُ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا
நபி (ஸல்) அவர்கள் ஜைனப் அம்மையாரை திருமணம் செய்த்தற்காக வலீமா விருந்து வைத்தார்கள். அதற்காக தோழர்கள் பெருமானாரின் வீட்டில் குழுமினர். அவர்கள் அதி நேரம் அங்கிருந்த போதும் அவர்களை கலைந்து செல்லுமாறு கூற பெருமானார் வெட்கப்பட்டார்கள்.
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ {الأحزاب:53 

வெட்கத்தின் மற்றொரு பலன்.

 قال الأصمعي سمعت أعرابياً يقول: (من كساه الحياء ثوبه لم ير الناس عيبه)

இளைஞர்கள் இன்றைய கால கட்ட்த்தில் வெட்கத்தை உதறித்தள்ளிவிடுகிறார்கள்.

பெரியோர்களை எதிர்ப்பதில் , ஆலிம்களை மதிப்பதில் , தீனின் மரியாதைக்குரிய விசயங்களை போற்றுவதில் வெட்கத்தின் எல்லையை உதறிவிட்டு நடந்து கொள்கிறார்கள். இது நன்மையானதாக ஒரு போதும் ஆகாது.

முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டிய இன்னொரு வெட்கம் மனதுடன் ! அது எப்படி ?

  الحياء من النفس.
قال بعض السلف: من عمل في السر عملاً يستحيي منه في العلانية فليس لنفسه عنده قدر.
மனிதன் வெளியே தெரியுமாறு ஒரு காரியத்தை செய்யத் தயங்கும் காரியத்தை இரகசியமாக செய்யக் கூடாது.
இலஞ்சம், திருட்டு, மோசடீ, இரகசியா பாவங்கள் என பலதும் இந்தப் பட்டியலுக்குள் வரும்.
 வெட்கம் ஒரு மனிதனை எந்த அளவுசுத்தப்படுத்துகிறது என்று யோசித்தால் பிரமிக்கவே செய்வோம்.
சாமாணிய மக்களிடம் காணப்படுகிற வெட்க உணர்வை இனி சாமாணியமாக நாம் கருதக் கூடாது.
வெடகம் தவறிய போக்குகளை சீர்த்திருத்திக் கொள்ளனும். அது ஆபத்தின் அஸ்திவாரம் என்பதை புரிந்து கொள்ளனும்.

قال الفضيل بن عياض : خمس من علامات الشقوة}..
  1. القسوة في القلب
  2. وجمود في العين
  3. وقلة الحياء
  4. والرغبة في الدنيا
  5. وطول الأمل. 
ஹயா வுடனான வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் ஆசைப்ப்படுவோம்.
முயற்சி செய்வோம். நம் பிள்ளைகளுக்கூம் இளைஞர் இளைஞிகளுக்கும் அறிவுறுத்துவோம் அல்லாஹ் கிரூபை செய்வானாக!

4 comments:

  1. அழகான கட்டுரை

    ReplyDelete
  2. Moulavi,Hafiz,S.UDHUMAN Althafi,Dca
    Assalamu alaikkum varah...Hazrath.
    That is your Jim'aa notes for everything great super.. Jazakallahu khairan lakum fidh dharain..ameen.

    ReplyDelete
  3. அருமை ஹஜ்ரத் ஆனால் அரபிக்கு தமிழ் தர்ஜூமா கொடுத்தால் லேசாக இருக்கும் ஏனென்றால் தர்ஜூமா தேடவே நேரம் ஆகி விடுகிறது

    ReplyDelete
  4. மவ்லானா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    தங்களது பிளாக்கின் முந்தைய தலைப்புகளையும் எடுத்துப் பார்க்கும் வகையில்
    வலது பக்கத்தில் வருடங்கள் மாதங்கள் வருமாறு
    (உதாரணமாக http://vellimedaiplus.blogspot.in மஸாபீஹுல் மிஹ்ராப் பிளாக்கில் அப்படி செட்டப் உள்ளதுபோல்)
    அமைத்தால் அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும்
    நன்றிகள் - வஸ்ஸலாம்
    அன்புடன்
    ஜுனைதுல் பக்தாதி ஹஸனி

    ReplyDelete