வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 27, 2017

தொடங்கியது ஹஜ்! உலகின் தொன்மையான பயணம்.

 وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ

புனித ஹஜ் பயணம் தொடங்கிவிட்டது.                             ஆதம் நபியிலிருந்து ஹஜ் பயணம் ஆரம்பமாகியது. 90 முறை ஹஜ் செய்த ஆதம் நபி அதில் நாற்பது தடவை இந்தியாவிலிருந்து சென்றதாக இஸ்லாமிய மரபு வழிச் செய்திகள் கூறுகின்றன. முதல் ஹஜ் பயணம் இந்தியாவிலிருந்துதான் நடை பெற்றுள்ளது என்பது இந்திய ஹாஜிகளுக்கு பெருமிதம் தரும் அம்சங்களில் ஒன்றாகும். ஹஜ் பயணங்களின் வரலாறு பல்லாயிரமாண்டு பழமையானது என்றாலும்

 முஹம்மது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தொடங்கி வைத்த பரிசுத்தமான கலப்படமற்ற  ஹஜ் எனும் வரலாற்றில் இது 1429 ம் ஆண்டாகும்.

ஹிஜ்ரீ 8ம் ஆண்டு வரை மக்கா காபிர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 8 ம் ஆண்டு ரமலானில் மக்காவை முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அந்த ஆண்டு இஸ்லாமிய ஹஜ் அமுல் படுத்தப் படவில்லை.

ஹிஜ்ரீ 9 ம் வருடத்தில் தான் முஹம்மது (ஸல்) அவர்களது ஷரீஅத்தின் படி ஹஜ் நடை முறைக்கு வந்தது.  அந்த வருடமே மக்காவின் புனித எல்லைகள் அறிவிக்கப்பட்டன , முஸ்லிம் அல்லாதோர் ஹரமிற்கு வர அனுமதியில்லை என்று உத்தரவிடப்பட்டது.

மக்காவின் காபிர்கள் ஹஜ்ஜில் பல தீய நடைமுறைகளை உருவாக்கி விட்டிருந்தனர், அனைத்தும் கலையப்பட்டது.

குஜாஈ குலத்து தலைவன் அம்ரு பின் லுஐய்யு கஃபாவிற்குள் முதன் முதலாக சிலைகளை கொண்டு வந்து வைத்தான். பிறகு ஒவ்வொரு குலத்தாரும் அவரவரது சிலைகளை கொண்டு வந்தனர். கஃபாவை சுற்றி 360 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

فإن أول من أدخل عبادة الأصنام إلى مكة عمرو ابن لحي الخزاعي أمير مكة.
أصبح لكل قبيلة أوثانها تزار في المواسم و تقدم إليها القرابين


சபாவில் ஒரு சிலை, மர்வாவில் ஒரு சிலை என இரண்டு சிலைகளை வைத்து அதற்கிடையே நடப்பபதை வணக்கம் என நினைத்தனர், அது மாற்றப்பட்டது.

و تروي عائشة رضي الله عنها أن المسلمين كرهوا أن يطوفوا بين الصفا و المرو لأن المشركين كانوا يقومون بهذا الفعل، فأنزل الله تعالى  إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللّهَ شَاكِرٌ عَلِيمٌ .

கஃபா ஆலயத்தின் அருகே ஒரு எல்லையை தீர்மாணித்துக் கொண்டு அதன் அருகே வசிப்பவர்களை கும்ஸு என்று அழைத்தனர். ( மக்காவின் மகன்கள் என்ற அர்த்தத்தில் . அவர்கள் கஃபாவை தவிர வேறு எதையும் புனிதப் படுத்த மாட்டார்கள். அதன் காரணமாக ஹஜ்ஜின் ஒரு கடமையான அரபாவில் தங்குதலில் இருந்து அவர்கள் தம்மை ஒதுக்கி கொண்டனர். எல்லோரும் அரபாவிற்கு செல்லும் போது அவர்கள் மினாவிலேயே தங்கிக் கொள்வார்கள். அரபா ஹரம் எல்லைக்கு வெளியே இருக்கிறது. நாங்கள் அங்கு வரமாட்டோம் என்று கூறிக் கொள்வார்கள். உண்மையில் ஒது குறைஷிகள் மற்றவர்களை விட தம்மை உயர்வாக காட்டிக் கொள்ளும் ஒரு ஏற்பாடே ஆகும்.

و قد اتخذت قريش من المنطقة المجاورة للكعبة المشرفة حرما مقدسا يمنع فيه القتال. و أقرت للمقيمين داخل المنطقة الحرام حق المواطنة و سمت المتمتعين بهذا الحق باسم الحمس ( جمع أحمس)، أي أبناء البلد." وقد جعلوا للحمس علامة وهي ألا يعظم الأحمس شيئاً من الحل – أي الأرض التي وراء الحرم – كما يعظم الحرم ، فإذا فعل ذلك استخفت العرب بحرمته ، ولذلك ترك الحمس الوقوف بعرفة – لأنه خارج عن الحرم – والإقامة منها مع إقرارهم بأنها من مناسك الحج ، فأظهروا بذلك شدة تعصبهم لبقعة من الأرض ، وترفعوا أن يخرجوا عنها ولو كان في خروجهم إتمام لمشاعر الحج". و قد فرض الحمس على الحجاج العرب ألا يطوفوا بالبيت إلا بثياب الحمس، فإن لم يجدوا طافوا عراة، و أصبح الطواف مع العرى من مشاعر الحج".

அத்தோடு அவர்கள் மற்ற அரபியரை நிர்வாணமாக ஆண்கள் பகலிலும் பெண்கள் இரவிலும் தவாப் செய்கட்டாயப்படுத்தினர்.

குர்பானி கொடுத்து அதன் இரத்தத்தை கஃபாவின் சுவற்றில் தேய்த்து வந்தனர்.

இஹ்ராம் கட்டி விட்ட பிறகு வீட்டுக்கு ஒரு தேவை நிமித்தமாக வருவதென்றால் கொல்லைப் புற வாசல் வழியாகவே வந்தனர்.

ஹஜ்ஜையும் உமராவையும் சேர்த்து செய்வதை பெரும் குற்றமாக கருதினர்.

சிலர் ஹஜ்ஜுப் பயணத்திற்கான உணவைக் கொண்டு செல்வதை பாவமாக கருதினர்.

ஹஜ் என்பது வணக்கமாக மட்டுமின்றி வியாபாரத்திற்கான சந்தையாகவும் சந்திப்புகளுக்கான ஏற்பாடாகவும் இருந்தது.

ஹஜ்ஜை முடித்து விட்டு மினா மைத்தானத்தில் உட்கார்ந்து குடும்ப பெருமை பேசினர். உலகத்திற்காக மட்டுமே பிரார்த்தித்தனர்.

முஹம்மது ரஸூலுல்லாஹி (ஸல்) ஹஜ்ஜை தூய வணக்கமாக மாற்றினார்கள்.

பகரா அத்தியாயத்தின் 196 முதல் 202 வரையான வசனங்கள் காபிர்கள் ஏற்படுத்தியிருந்த தீய செயல்களை தகர்த்து தூய ஹஜ்ஜுக்கான வழிகளை காட்டின.  

·        وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ
·        وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنْ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(189)
·        فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنْ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ
·        وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِي يَاأُوْلِي الْأَلْبَابِ(197)
·        فَإِذَا أَفَضْتُمْ مِنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِنْ كُنتُمْ مِنْ قَبْلِهِ لَمِنْ الضَّالِّينَ(198)ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ(199)فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا
·        فَمِنْ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلَاقٍ(200)وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ(201)أُوْلَئِكَ لَهُمْ نَصِيبٌ مِمَّا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ(202)

ஹாஜி ஒவ்வொருவரும் ஹஜ்ஜின் புனிதத்தை காப்பேன் என உறுதி ஏற்க வேண்டும்.

தேவையில்லாத முறையற்ற செயல்களை செய்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தல்பியாவும் தக்பீரும் மூன்றாம் நான்காம கலிமாக்களும் துஆக்களும் நம்மை நெறிப்படுத்தும் அற்புதமான செயல்களாகும். அவற்றின் அர்த்தத்தையும்  அதன் ஆழத்தையும் தெரிந்து கொள்ள ஹாஜிகள் முயற்சிக்க வேண்டும்.

ஹிஜிரீ 9ல் தொடங்கிய தூய ஹஜ் பயணத்தின் தொடர் இப்போது 1429 ஆண்டாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஹஜ்ஜுக்கு பயணமாகி ஒவ்வொரு ஹாஜியின் இந்த தொடர் சங்கிலியில் தன்னையும் இணைத்துக் கொள்கிற பாக்கியத்தை பெருகிறார்.

(அல்லாஹ் நம் அனைவருக்கும் குடும்பத்தோடும் சுற்றத்தோடும் ஹஜ் செய்கிற நஸீபை வழங்குவானாக!

ஹஜ் நடைபெறுவதில் மொத்த உம்மத்தும் கவனம் செலுத்த வேண்டும்

இப்னு அப்பாஸ் ரலி கூறினார்கள் .

قال ابن عباس : لو لم يحج الناسُ هذا البيت لأطبق الله السماءَ على الأرض " . "تفسير ابن كثير"

ஷாபி மத்ஹபின் படி தந்தை ஹஜ்ஜு செய்யவில்லை என்றால் அவர் விட்டுச் சென்ற சொத்தில் அவருக்கு பதிலாக ஒருவரை ஹஜ்ஜு செய்ய வைப்பதே முதன்மை கடமையாகும். அல்லாஹ்வின் ஹக்கு முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

وقد سمى النبي-صلى الله عليه وسلم- حق الله ديناً فقال للمرأة : (( أرأيت لو كان على أمك دين أكنت قاضيته )) قالت نعم قال : (( فدين الله أحق أن يقضى ))


ஹஜ் கடமையான பிறகும் ஹஜ் செய்யாமலிருப்பது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் கடும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 عن علي رضي الله عنه قالقال رسول الله صلى الله عليه وسلممن ملك زاداً وراحلة تبلغه إلى بيت الله الحرام فلم يحج فلا عليه أن يموت يهودياً أو نصرانياً، وذلك أن الله يقول: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.. رواهالترمذي

உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.  ஹஜ் செய்யாதவர்கள் மீது ஜிஸிய்யா

عن عمر بن الخطاب قال : لقد هممت أن أبعث رجالا إلى أهل الأمصار فينظروا كل من كان له جدة ولم يحج فيضربوا عليه الجزية ، ما هم بمسلمين ، ما هم بمسلمين - تحفة الأحوذي

 

ஆரோக்கியத்துடனேயே ஹஜ் செய்து விட வேண்டும்.

ஹஜ் வயோதிகர்கள் மீதான கடமை அல்ல.
அப்படி ஒரு காலம் இருந்தது.
கபனுடன் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்றனர்.
பலர் காணாமல் போயினர். திரும்பி வரவில்லை.

வசதி வந்தவுடன் ஹஜ்ஜு செய்து விட வேண்டும்.
இமாம் ஷாபி ரஹ் அவர்களைத் தவிர மற்ற மூன்று இமாம்களும் ஹஜ் (பவ்ரன் ) உடனடியான கடமை என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவாபு, ஸஃயு, ஹஜ் உமராவின் பிரதான வணக்கங்கள் அவற்றை நமது கால்களால் நடந்து நிறைவேற்ற வேண்டும்.

ஒரு சஃயு, 2.8 அதாவது 3 கிலோமீட்டர் நடை கொண்டது.  தவாபின் தூரம் நாம் சுற்று கிற இடத்திற்கேற்ப மாறுபடும்.

அது கூட ஒண்ணரை அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரம் பிடிக்கலாம்.

பல மணி நேரம் ஒளுவை காப்பாற்றி வைக்கிற சக்தி தேவை.

காலை 10 மணிக்கு உள்ளே சென்றால் தான் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலுக்குள் ஜும் தொழ முடியும்.

அரபாவிலிருந்து முஸ்தலிபாவிற்கு சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து வருவது சுன்னத்தானது.

இதற்கான நடக்கும் திறன் வேண்டும் அல்லவா ?

(இப்போதெல்லாம் சில சந்தர்ப்பத்தில் பேருந்தில் வருகிறவர்கள் முஸ்தலிபா வந்து சேருவதற்குள் பொழுது விடிந்து விடுகிறது.

ஹஜ்ஜுக்கான கடைசி தவாபே ஜியாரா செல்கிற நாட்களில் பல கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருக்கலாம்.

இது மட்டுமல்லாமல் ஹஜ்ஜின் நாட்களில் அஜீஜிய்யாவில் தங்கியிருக்கிற நாட்களில் ஹரமிற்கு வர நினைத்தால் நடக்கும் தைரியம் இருந்தால் மட்டுமே அது இலகுவானது. வாகனத்திற்கு அதிக காசு கொடுக்க வேண்டும். காசு கொடுத்தாலும் எங்கு இறக்கிவிடுவார்கள் என்பது தெரியாது.

நடை மட்டுமல்லாமல். இன்றைய கால கட்டத்தில் சீதோஷ்ன நிலை வேறுபாடு, உணவு வித்தியாசம், மருந்து மாத்திரைகளுக்கான நோய்கள் ஆகிய சிரமங்கள் மக்களை அதிகம் துன்பப் படுத்தி விடுகின்றன.

ஒரு முதிய தம்பதி ஹஜ்ஜின் முக்கியக் கடமையான தவாபே ஜியாராவை செய்ய இயலாமல் அறையிலேயே உட்கார்ந்து கொண்டனர். உடன் இருந்தவர்கள் வலியுறுத்திக் கூறிய போதுபோய் வேலையைப் பாருங்க! என்றனர்.
மிகவும் பொறுமையாக புரிவை வைக்கப்பட்ட பிறகே வண்டியில் தவாப் செய்ய சம்மதித்தனர்.

ஸஃயு செய்யும் போது தகுதியில்லாமல் வண்டியில் சென்றால் தமு கொடுக்க வேண்டும்.

ஆகவே ஹஜ்ஜை நிறைவாக செய்வதற்கு போதிய ஆரோக்கியம் தேவை.

வெளிநாட்டு சீதோஷ்ண நிலையையும் உணவு முறைகளையும் பழகிக் கொள்வதற்கும் கூட ஆரோக்கியம் அவசியம்.

கேரளக் கரையிலிருந்து ஹஜ் என்ற தொகுப்பிலிருந்து சில செய்திகள் கேள்விப் படும் போதே பிரமிப்பாக இருக்கிறது.

கேரளாவின் முன்னாள் துணை முதலமைச்சர் சி எச் முஹம்மது கோயாவின் தந்தை இரண்டு முறை கேரளாவிலிருந்து  நடந்தே ஹஜ் செய்திருக்கிறார்.

அதே போல பாபகீ தங்கள் 26 ஹஜ் செய்திருக்கிறார். அதுவும் ஹஜ்ஜுப் பயணம் 6 மாத கால பயணமாக இருந்த காலத்தில்.

26 வது ஹஜ்ஜின் போது இஹ்ராமை கலைவதற்கு முன்னதாகவே வபாத்தாகி விட்டார்கள். அங்கேயே அடக்கம் செய்யப் பட்டார்கள்.

போதிய ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்கிற போது உடன் வருகிறவர்களுக்கும் உதவ முடியும்.

அதன் மூலம் ஒரு ஹஜ்ஜை பல ஹஜ்ஜின் நன்மைக்குரியதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

எனவே ஆரோக்கியம் இருக்கிற போதே ஹஜ்ஜு செய்ய முயற்சி செய்வோம்.

அதே போல எத்தனை முறை ஹஜ்ஜு செய்தாலும் அது அல்லாஹ்வின் மீதான் பயமும் கஃபாவின் கண்ணியமும் நெஞ்சத்தில் நிறைந்திருக்க வேண்டும்.

ஹஜ் செய்ய வேண்டும் என ஆசைப் படுகிறதை விட அதிகமாக அது அங்கீகரிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம்.

ஹஜ் அங்கீகரிக்கபட என்ன தேவை என்பதையும் கவனத்தில் கொள்வோம்

·         அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்யனும்
·         மார்க்க சட்ட விதிமுறைகளை அனைத்திலும் பின்பற்றனும்
·         ஹலாலான பணத்தில் ஹஜ் செய்யனும்
·         ஹஜ்ஜில் தடுக்கப்பப்பட்ட வற்றை தவிர்த்துக் கொள்ளனும்
·         பெருந்தன்மையாக நடக்கனும்
·         புனித தளங்களில் பிறருக்கு தொல்லை தந்து விடக்கூடாது
·         அமல்களுக்கு தூண்டுதலாக இருக்கிற துணைகளை உடன் வைத்துக் கொள்ளனும்.

நமது முன்னோர்கள் ஹஜ் பயணத்திற்கே மிக வும் சிரமப் பட்டார்கள்

يقول ابن الخطيب، لسان الدين ابن الخطيب في حقه: أنه من علماء الأندلس بالفقه والحديث والمشاركة بالآداب وله الرحلة المشهورة، وقال في نفح الطيب: كان انفصاله من غرناطة بقصد الرحلة المشرقية أول ساعة من يوم الخميس الثامن لشوال سنة ثمان وسبعين وخمسمائة، ووصل الإسكندريّة يوم السبت التاسع والعشرين من ذي القعدة من السنة، فكانت إقامته على متن البحر من الأندلس إلى الإسكندرية ثلاثين يوماً، ثلاثين يوماً وهو في البحر، إقامته في البحر، وفي مجيئه من الأندلس إلى الإسكندرية ثلاثين يوماً، لكن رجوعه إلى الأندلس على متن البحر الأبيض المتوسط ذكروا ستة أشهر؛ لأنه كلما قارب الوصول جاءت ريح ردته إلى مبتدئه، وعلينا أن نشكر هذه النعم التي نتقلب فيها.
நாம் ஹஜ்ஜில் நிறைய அமல்களை செய்ய அக்கறை காட்ட வேணும். அமல்கள் நிறைந்த ஹஜ்ஜுக்கு ஆசைப்படனும்.

ஒரு பகுதியில் ஹஜ் கடமையானவர்கள் இருந்தும் ஒருவர் கூட ஹஜ்ஜுக்கு செல்லவில்லையானால் அது ஒரு துர்க்குறியாகும் என இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அதனால் ஹஜ்ஜுக்கு புறப்படுகிறவர்கள் மார்க்கத்தின் தொன்மையான ஒரு வணக்கத்தை நிறைவேற்றச் செல்கிறார்கள் என்பத் மட்டுமல்ல.

மஹல்லாவின் வளத்திற்கும் அவர்கள் காரணமாகிறார்கள்.


وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الحجاج والعمار وفد الله، إن دعوه أجابهم، وإن استغفروه غفر لهم» رواه النسائي.


ஹஜ் வணக்கங்களில் சிறந்தது.

فعن أبي هريرة رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم: أي العمل أفضل؟ قال: «إيمان بالله ورسوله». قيل: ثم ماذا؟ قال: «الجهاد في سبيل الله». قيل: ثم ماذا؟ قال: «حج مبرور» رواه البخاري ومسلم.

ஹஜ் ரிஜ்கின் விசாலத்திற்கு காரணமாகிறது.

عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «تابعوا بين الحج والعمرة؛ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة» رواه الترمذي.

ஹஜ்ஜினால் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

فعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «من حج فلم يرفُث، ولم يفسُق، رجع من ذنوبه كيوم ولدته أمه» رواه البخاري ومسلم.

ஹஜ்ஜின் கூலி அளவிடற்கரியது;

فعن ابن عمر رضي الله عنهما قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «ما ترفع إبل الحاج رجلا، ولا تضع يدا، إلا كتب الله له بها حسنة، أو محا عنه سيئة، أو رفع بها درجة» رواه البيهقي.

وعن ابن عمر رضي الله عنه أنه قال: جَاءَ إِلَى النَّبِيِّ أنصاري، فأَقْبَلَ عليه رسول الله صلى الله عليه وسلم، فَقَالَ: «سَلْ عَنْ حَاجَتِكَ وَإِنْ شِئْتَ أَخْبَرْتُكَ»؟ قَالَ: فَذَلِكَ أَعْجَبُ إِلَيَّ. قَالَ: «فَإِنَّكَ جِئْتَ تَسْأَلُنِي عَنْ خُرُوجِكَ مِنْ بَيْتِكَ تَؤُمُّ الْبَيْتَ الْحَرَامَ , وَتَقُولُ: مَاذَا لِي فِيهِ؟ وَجِئْتَ تَسْأَلُ عَنْ وُقُوفِكَ بِعَرَفَةَ, وَتَقُولُ: مَاذَا لِي فِيهِ؟ وَعَنْ رَمْيِكَ الْجِمَارَ, وَتَقُولُ: مَاذَا لِي فِيهِ؟ وَعَنْ طَوَافِكَ بِالْبَيْتِ, وَتَقُولُ: مَاذَا لِي فِيهِ؟ وَعَنْ حَلْقِكَ رَأْسَكَ , وَتَقُولُ: مَاذَا لِي فِيهِ»؟ قَالَ: إِي وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ. قَالَ: «أَمَّا خُرُوجُكَ مِنْ بَيْتِكَ تَؤُمُّ الْبَيْتَ فَإِنَّ لَكَ بِكُلِّ وَطْأَةٍ تَطَأُهَا رَاحِلَتُكَ يَكْتُبُ اللَّهُ لَكَ بِهَا حَسَنَةً, وَيَمْحُو عَنْكَ بِهَا سَيِّئَةً. وَأَمَّا وُقُوفُكَ بِعَرَفَةَ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيُبَاهِي بِهِمُ الْمَلائِكَةَ، فَيَقُولُ: هَؤُلاءِ عِبَادِي جَاءُونِي شُعْثًا غُبْرًا مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ يَرْجُونَ رَحْمَتِي, وَيَخَافُونَ عَذَابِي, وَلَمْ يَرَوْنِي, فَكَيْفَ لَوْ رَأَوْنِي؟ فَلَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ رَمْلِ عَالِجٍ, أَوْ مِثْلُ أَيَّامِ الدُّنْيَا, أَوْ مِثْلُ قَطْرِ السَّمَاءِ ذُنُوبًا غَسَلَ اللَّهُ عَنْكَ. وَأَمَّا رَمْيُكَ الْجِمَارَ فَإِنَّهُ مَذْخُورٌ لَكَ. وَأَمَّا حَلْقُكَ رَأْسَكَ فَإِنَّ لَكَ بِكُلِّ شَعْرَةٍ تَسْقُطُ حَسَنَةٌ. فَإِذَا طُفْتَ بِالْبَيْتِ خَرَجْتَ مِنْ ذُنُوبِكَ كَيَوْمِ وَلَدَتْكَ أُمُّكَ» رواه الطبراني في الجامع الكبير.

ஹஜ்ஜில் மவ்தானால் தல்பியா சொல்லி எழும் பாக்கியம் கிடைக்கும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فوقصته، فَقال رسول الله صلى الله عليه وسلم: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثوبيه الذين أحرم فيهما، وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ؛ فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا» رواه البخاري ومسلم.

சொர்க்கமே சரியான கூலி

عَنْ جَابِرٍ  رضي الله عنه  قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةَ»

இத்தகைய புனிதப் பயணத்திற்கு ஹாஜிகள் புறப்படுகிறார்கள்.

இந்த ஆண்டின் முதல் ஹஜ் குழு பாக்கிஸ்தானிலிருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை சவூதி அரேபியாவை அடைந்தது விட்டது.

இந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமாணம் கோவா மாநிலத்திலிருந்து கடந்து 24 ம் தேதி மதீனாவிற்கு புறப்பட்டுச் சென்றது.

முதல் நாள் 10 விமானங்களும் அடுத்தடுத்த நாட்களில் 15 விமானங்களிலுமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் புனித மக்கா மதீனா நகருக்கு சென்று சேர்ந்து விட்டார்கள்.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து கூடுதலாக 25 ஆயிரம் பேருக்கு ஹஜ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வரை 1 இலசத்து 36 ஆயிரம் பேருக்கு அனுமதி கிடைந்தது , இந்த ஆண்டு 1 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் செய்ய உள்ளனர்.

1 இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேர் ஹஜ் கமிட்டியின் மூலமாகவும் 50 ஆயிரம் பேர் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாகவும் ஹஜ் செய்ய உள்ளனர்.

இந்த ஆண்டு ஜித்தா மன்னர் அப்துல் அஜீஜ் சர்வதேசச விமான நிலையத்தின் மூலம் 9 இலட்சட்து ஐம்பதாயிரம் பயணீகளும், மதீனாவின் இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜீஜ் விமான நிலையத்தின் மூலம் 7 இலட்சத்து 50 ஆயிரம் பயணிகளும். 10 இலட்சம் பயணிகள் கடல் மற்றும் தரை மார்க்கமாகவும் 178 நாடுகளிலிருந்து வந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

Pilgrims are expected to continue arriving in the Kingdom until the fifth day of Dhul Hijjah, with an expected 950,000 pilgrims arriving via King Abdul Aziz International Airport in Jeddah and 750,000 arriving at Prince Mohammed bin Abdul Aziz Airport in Madinah. Around 100,000 pilgrims will arrive by land and sea. Pilgrims from 178 countries are registered for this year’s Hajj season. (அரப் நியூஸ்)
நாம் நமது மஹல்லாக்களிலிருது புறப்படுகிற ஹாஜிகளை துஆ செய்து வழியனுப்பி வைப்போம். அவர்களிடம் துஆ செய்ய கோருவோம். நாமும் உரிய நேரத்தில் ஹஜ்ஜு செய்து விட வேண்டும் என சபதம் ஏற்போம்

அல்லாஹ் இந்த ஆண்டு ஹஜ் செய்யும் ஹாஜிகள் அனைவரின் ஹஜ்ஜையும் மக்பூலாக்குவானாக!
அவர்களது பயணத்தையும் மற்ற கடமைகளையும் இலகுவாக்குவானாக!
இந்த ஹஜ்ஜை அதன் எல்லா அம்சங்களிலும் பாதுகாப்பானதாக ஆக்கி வைப்பானாக!


1 comment: