வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 12, 2020

அமித்ஷாவின் நாசகர அறிக்கை



பிர் அவ்னுடைய சபையில் ஒரு நாள் ஒரு கேள்வி எழுப்பபட்டது. இந்த அரசு தனக்கு சொந்தம் என்று யாரேனும் வாதிட்டால் அவனுக்கு என்ன தண்டனை வழங்குவது ?
பிர் அவ்ன் உடனடியாக சொன்னான். அப்படிச் சொல்பவனை தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும்.
பிர் அவ்னின் வார்த்தைகளே அன ரப்புக்குமுல் அஃலா என்று சொன்ன பிர் அவனுக்கான தண்டனையை தீர்மாணித்த்தன.

என்ன பேசுகிறோம் எப்படிப் பேசுகிறோம் என்பதில் எல்லோருக்கும் கவனம் தேவை. குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிக கவனம் தேவை.

தறிகெட்டு பேசுபவர்கள், அல்லது வஞ்சகமாக பேசுகிறவர்கள். அல்லது இளக்காரமாக பேசுகிறவர்கள் யாரும் அதற்கான விளைவை அனுபவிக்கவே செய்வார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்த்து உன் கரம் நாசமாகட்டும் என்ற அபூலஹ்பு நாசமாய் போனான். அவன் இறந்த போது நோய்க்கிருமி தொற்றியிருந்த அவனது உடலை தொடக்கூட மக்கள் அஞ்சினார்கள். ஒரு குழி வெட்டி, நீண்ட தடிகளால் அவனது உடலை குழிக்குள் தள்ளினார்கள். பிறகு தூரத்திலிருந்தே கற்களை எறிந்து அந்த குழியை மூடினார்கள். இதை விட நாசாமகுதல் வேறெதுவும் உண்டோ ?  சூரியனைப் போல பிரகசிக்கும் முகம் கொண்டவன் என்ற அர்தத்த்தில் அவனை அபூலஹ்பு என்று அழைத்து அவனை புகழ்ந்து வாழ்ந்த சமுதாயம் அவன் அருகே கூட வரவில்லை. இறுதிச் சடங்குகள் செய்யவில்லை.

توفي أبو لهب بعد وقعة بدر بسبع ليالٍ بمرضٍ معدٍ كالطاعون يسمى "العدسة" وبقي ثلاثة أيام لم يدفن حتى أنتن، فلما خافوا العار حفروا له حفرة ودفعوه إِليها بعود حتى وقع فيها ثم قذفوه بالحجارة من بعيد حتى دفنوه.

அகம்பாவம் பிடித்த நாவு மிகக் கெட்டது.

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ - رضي الله عنه - قَالَ: قُلْت يَا رَسُولَ اللَّهِ! أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ وَيُبَاعِدْنِي مِنْ النَّارِ، قَالَ: "لَقَدْ سَأَلْت عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ: تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكْ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ الْبَيْتَ، ثُمَّ قَالَ: أَلَا أَدُلُّك عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟ الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ، وَصَلَاةُ الرَّجُلِ فِي جَوْفِ اللَّيْلِ، ثُمَّ تَلَا: ﴿ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ [السجدة: 16] حَتَّى بَلَغَ ﴿ يَعْمَلُونَ [السجدة: 17]، ثُمَّ قَالَ: أَلَا أُخْبِرُك بِرَأْسِ الْأَمْرِ وَعَمُودِهِ وَذُرْوَةِ سَنَامِهِ؟ قُلْت: بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ: رَأْسُ الْأَمْرِ الْإِسْلَامُ، وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذُرْوَةُ سَنَامِهِ الْجِهَادُ، ثُمَّ قَالَ: أَلَا أُخْبِرُك بِمَلَاكِ ذَلِكَ كُلِّهِ؟ فقُلْت: بَلَى يَا رَسُولَ اللهِ، فَأَخَذَ بِلِسَانِهِ وَقَالَ: كُفَّ عَلَيْك هَذَا. قُلْت: يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: ثَكِلَتْك أُمُّك وَهَلْ يَكُبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ -أَوْ قَالَ عَلَى مَنَاخِرِهِمْ- إلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟!".

ஒரு ஜென் துறவி சீடர்களோடு பேசிக்கொண்டிருந்தார் அப்போது வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு அவர் உபதேசித்தார் இல்லையெனில் வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்று எச்சரித்தார். அப்போது ஒரு சீடர் எழுந்து குருவே நான் கடவுள் ஆக வேண்டும் கடவுள் ஆக வேண்டும் என்று கத்தினால் கடவுளாகி விடுவேனா அல்லது சாத்தான் ஆகவேண்டும் சாத்தான் ஆகவேண்டும் என்று கத்தினான் சாத்தான் ஆகிவிடுவேனா என்று கேட்டார். குரு முட்டாள் சும்மா இரு! என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சீடர் குருவை தகாத வார்த்தைகளால் திட்டினார் உடனே குரு மன்னியுங்கள் சீடரே நான் தகாத வார்த்தை பேசி விட்டேன் என்று கூறினார் அங்கே அமைதி நிலவியது.
சற்று நேரம் கழித்து சற்று நேரம் சற்றுநேரம் கழித்து அமைதியாக இருந்த சீடர்களும் குரு கூறினார் பார்த்தீர்களா நான் கடுமையாக பேசியபோது சூழ்நிலை இறுக்கமாக மாறியது நான் பணிவாக பேசியபோது சூழ்நிலை அமைதியாகிவிட்டது அதனால் தான் கூறினேன் வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என்றார்

அகம்பாவம் பிடித்த சொற்கள் சமூகத்தில் பெரும் மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடியவை 

தில்லி கலவரங்களைப் பற்றி மார்ச் 11 ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அமித்ஷா அளித்த பதில் இத்தகைய நாசகமரமான செயல்களில் ஒன்றாகும்.

தலைநகர் தில்லியில் மத்திய் அரசின் அதிகார கேந்திரப் பகுதியிலிருந்து 15 கீமீ தொலைவுக்குள்ளே இருக்கிற ஜாபராபாத், முஜ்பூர், முஸ்தபா பாத் ஷிவ் நகர் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிபரவரி மாதம் 23 ம் தேதிதியிலிருந்து 26 ம் தேதி வரை  ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறை திட்டமிட்டு சிறுபான்மையின முஸ்லிம்களின் மீது அரசு கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாத தாக்குதலாகும்.
நீண்ட நேர துப்பாக்கி சூடு, இரசாயணப் பொடி, மற்றும் சிலிண்டர்களைப் பயன்படுத்தி தீவைத்தல், நீண்ட குண்டாந்தடியால் தாக்குதல் என அராஜகத்தின் மொத்த வடிவத்திற்கும் சாட்சியாக இருர்ந்த இந்த கலவரத்திற்கு பாஜக ஆர் எஸ் எஸ் பஜ்ரங்க் தள் அமைப்பினர் தான் காரணம் என்பது வீடியோ காட்சிகளில் உலகிற்கு வெளிப்பட்ட உண்மையாகும். தில்லி பாஜக பிரமுகர் கபில் மிஸ்ராவின் தூண்டுதலே கலவரத்திற்கு காரணம் என்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின. காவல்துறையினரே கலவரக்காரகளுக்கு வழி காட்டியதையும் தூண்டி விட்ட்தையும், அவர்களே நேரடியாக வன்முறையில் இறங்கியதையும் , போலீஸ் நமக்கு சப்போர்ட்டாக இருக்கிறது வாருங்கள் என்று கலவரக்காரன் ஒருவன் மற்றவர்களை பகிரங்கரமாக அழைப்பதையும் சமூக உடகங்கள் அனைத்தும் வெளியிட்டன. இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.

ஆர் எஸ் எஸ் பஜ்ரங்க தள் அமைப்பினர் நடத்திய இந்த திட்டமிட்ட தாக்குதலை இரு போராட்டக்காரகளுக்கு இடையே நடை பெற்ற கலவரம் என்று மீடியாக்கள் தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட பாதிக்கப் பட்ட பகுதிகளில் காணப்பட்ட காட்சிகள் நாட்டு மக்களுக்க் நடந்த்து என்ன என்பதை தெளிவாக உணர்த்தி விட்டன்.

தலைநகர் தில்லியில் இவ்வளவு பெரிய கலவரம் நடை பெற்று சர்வதே அளவில் இந்தியாவின் மரியாதை கேள்விக்குள்ளாகியிருந்த நிலையில் கூட தில்லி காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதிக்கப் பட்ட மக்களை சென்று பார்க்கவோ, அவர்களது வாழ்விற்கும் உடைமைகளுக்கும் இழப்புக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை. தில்லி பற்றி எரிகிறது உள்துறை அமைச்சர் எங்கே என்று ஊடகங்கள் கேலியாக கேள்வி எழுப்பின.

மார்ச் 2 ம் தேதி நாடாளுமன்றம் கூடிய போது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியை கிளப்பின.. அப்போதும் கூட உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வில்லை. இந்த விவகாரத்தில் அரசு சொல்வதற்கு எதுவுமில்லை என்பது போலவே மத்திய அரசு நடந்து கொண்டது.

சம்பவங்கள் நடந்து சுமார் 20 நாட்கள் கழித்து நேற்றைய முன் தினம் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தில்லி கலவரம் குறித்து அறிக்கை அளித்தார்.

ஏன் இத்தனை நாள் தாமதம் என்ற கேள்விக்கு ஹோலி பண்டிகை முடியட்டும் என்று காத்திருந்த்தாக கூறினார்.

என்னவொரு அகம்பாவம் ? ஒரு உள்துறை அமைச்சரின் இலட்சனமா இது ? மனிதாபி மானத்திற்கும் இவர்களுக்கும் 20 நாட்கள் அல்ல 2000 வருடங்களுக்கான இடைவெளி அல்லவா இருக்கிறது.

தில்லியின் உயிர்ப்பலிகள் , மக்களுக்கு ஏற்பட்டுள் வலி வேதனைகள், பாதிப்புக்குள்ளான மக்களையும், பகுதிகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டிய தேவை எதுவும் பற்றியும் சிறிதும் அக்கறையற்றவராக அவரது அறிக்கை இருந்த்து, வழக்கம் போல எறிகிற வீட்டில் கொள்ளி பிடுங்குபவனை போல இந்த வேதனைகளைப் பற்றிய அறிக்கையில் கூட தனது அகம்பாவத்தை வெளிப்ப்டுத்தும் சவடால் பேச்சுக்களை பேசுவதை அவர் கைவிடவில்லை.

தில்லி கலவரத்தில் காவல்துறை முதன்மையான குற்றச் சாட்டுக்கு ஆளாகி நிற்கிறது. காவல்துறை முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து , காட்டு மிராண்டித் தனமாக தாக்கி பலரது உயிரழப்பு காரணமாகியிருபதையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவனிடம் தேசிய கீதம் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவதையும் சமூக ஊடங்கள் வெளியிட்டன். காவல்துறையினரே கலவரக்காரகளோடு சேர்து கொண்டு கல்வீசுவதை கடைகளை வாகன்ங்களை உடைப்பதை கடைகளுக்கு தீவைப்பதையும் கலவரக்கார்ர்களுக்கு முன்னோக்கிச் செல்லுமாறு சைகை செய்வதையும் பல இடங்களில் கலவரக்காரகள் தீ வைப்பதை கொள்ளயடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதையும் அனைத்து மீடியாக்களும் ஒளிபரப்பின.  

ஆனால் அமித்ஷா தில்லி போலீசை நான் பாராட்டுகிறேன் என்றார். எத்தகைய வன்மம் நிறைந்த வார்த்தைகள். பிறகு ஏன் தில்லியின் போலீஸ் கமிஷனரை அவர் மாற்றினார் என்பதற்கு அவர் விளக்க சொல்லவில்லை.

தில்லியின் மற்ற பகுதிகளில் கலவரம் பரவாமல் தடுத்த்த்து அந்த தந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் என்பது, தில்லி கலவரம் உத்திரப்பிரதேசத்திலிருந்து திட்ட மிட்டு கொண்டுவரப்பட்ட கலவரக்காரகளால் நடந்தது  அவர்களால் உத்தரப் பிரதேச எல்லையிலிருந்து தூரத்திற்கு செல்ல முடியவில்லை என்பதுமே கலவரம் வேறு பகுதிகளுக்கு கலவரம் பரவாமக் இருந்த்தற்கு காரணம். ஆனால் தில்லி காவல்துறை கலவரத்தை பற்ற பகுதிகளுக்கு பரவாமல் காத்த்து என்கிறார். ஒரு பகுதியில் கலவரத்தில் நேரடியாக ஈடுபட்ட காவல்துறை மாற்ற பகுதியில் கலவரம் பரவாமல் காத்த்து என்பதை எத்தகைய அறிவாளிகள் ஏற்றுக் கொள்வார்கள். என்று அவர் யோசிக்கவில்லை. ஆனால் அவர் கூறிய கூற்றுக்கு பாஜக கூட்டம் கை தட்டியது.

கலவரத்திற்கு காரணம்

இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் தில்லியின் கலவரக்களத்தில் நின்று கொண்டு இந்த கலவரத்திற்கு காரணம் தில்லி பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா வின் தூண்டுதலே காரணம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டின.

குறைந்த பட்சம் அவர் கைது செய்யப்படுவார் என்று நாடு மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய அரசு அவர் மீது ஏன் வழக்கு தொடுக்க வில்லை என்று கூறிய தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளீதரனை இடம் மாற்றம் செய்த்து. 
கபில் மிஸ்ராவுக்கு அதிக பட்ச பாதுகாப்பை வழங்கியது.

குற்றவாளியை பாதுகாப்பதற்காக எத்தனைய ஜனநாய படுகொலையையும் செய்ய்த தயங்காத அமித்ஷா குற்றத்திற்கான காரணத்தை முஸ்லிம்கள் மீதே திருப்பி விட்டார்.

பிப்ரவரி மாத்தில் 10 – 15 தேதிகளில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராக போராட வருமாறு ஜனநாயக அடிப்படையில் மக்களை அழைத்த முஸ்லிம்களின் பெயர்களை கூறி அவர்கள் தான் வன்முறைக்கு காரணம் என்று அமித்ஷா கூறினார். இது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது என்றும் குற்றவாளிகளை ஒருபோதும் தப்ப விட மாட்டோம் , அவர்களுக்க் கடும் பாடம் புகட்டுவோம். என்றும் அவர் தம்பட்டம் அடித்தார்.  ஓரிடத்திலும் தப்பித்தவறிக் கூட கபில்மிஸ்ரா போன்ற பாஜக வினரின் பெயரை அவர் கூறவில்லை.

நாடாளுமன்றத்தில் இறந்துபோனவர்களில் - பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்கள் எத்தனை பேர் மற்றவர்கள் எத்தனை பேர் என்று சொல்லுமாறு உறுப்பினர்கள் கேட்ட கேளிவிக்கு பதிலளிக்கையில் நான் அவர்களை மத ரீதியாக பார்க்க வில்லை. இறந்து போனவர்கள்ள பாரதீயர்களாகவே பார்ப்பதாக கூறி பாசாங்கு காட்டிய அமித்ஷா போரட்டத்திற்கு அழைப்பு விடுத்த முஸ்லிம்களின் பெயர்களை கூறத் தயங்கவில்லை . அதே சமயம் கலவரத்திற்கு காரணமான பிஜேபியினரின் பெயர்களை மறைக்கவும அவர் தயங்கவில்லை.

வழக்கம் போல் இந்தக் கலவரத்திற்கு வெளியிலிருந்து பண உதவி செய்யப் பட்ட்தாகவும் அந்த வகையில் 3 பேரை கைது செய்திருப்பதாகவும் அமித்ஷா கூறினார். அந்த மூவரும் முஸ்லிம்கள் தான் என்பதை பத்ரிகைகள் கூறிவிட்டன். ஏனெனில் அவர்களிடம் அமலாக்கத்துறை விசாரனை நட்த்த விருப்பதாக அவை செய்தி வெளியிட்டுள்ளன.

வரலாறு காணாத வன்முறையை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீதே திருப்பிவி விடுகீற அயோக்கியத்தனத்தை நாடாளுமன்றத்தில் வஞ்சக வார்த்தைகளால் நடித்துக் காட்ட அமித்ஷா தயங்கவில்லை

அவரது அறிக்கை கேட்ட நாடாளுமன்ற ஜனநாயக சக்திகள் மனம் பதறிப்போய் விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐதராபாத் தொகுதி எம் பி அஸதுத்தீன் உவைசி “ கலவரத்தில் உயிரழந்தவர்களுடைய குடும்பத்தினரின் தலையில் அமித்ஷா மீண்டும் நெருப்பை அள்ளி கொட்டியிருக்கிறார் என்று பதிலளித்த்து மிகப் பொருத்தமானது.

தங்களுக்க்கு ஏதாவது நியாயம் கிடைக்கும் என்ற பாதிக்கப் பட்ட மக்களின் எதிர்பார்ப்பில் எதிர்பார்த்த்து போலவே  அவர் மண்ணள்ளிப் போட்டார்.  
கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் “பாரதீயர்கள்” என்று அமித்ஷா சொன்னாரே அம்,மக்களுக்கு மத்திய அரசு சாபாக  ஏதாவது நிவாரணம் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட நிலையில் கலவரக்கார்ர்களை விஞ்ஞான ரீதியில் அடையாளம் கண்டு வருகிறோம். அவர்களை பிடித்து அவர்களது சொத்துக்களை பிடுங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று அவர் கூறினார்.
கலவரம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரும் தில்லி பகுதியில்ரிந்து கொண்டு வரப்பட்ட கூலித்தொழிலாளிகள் அவர்களிடம் எதைப் பிடிங்கி யாரிடம் அமித்ஷா கொடுப்பார் ? கலவரத்தின் காரணகர்தாக்களான  பாஜகவினரின் ஒருவர் பெயரைக் கூட அவர் உச்சரிக்காத நிலையில் இதற்கும் முஸ்லிம்கள் தான் குறிவைக்கப்படுவார்கள் என்பது தெளிவு

இதுவரை கலவரத்திற்கு பறிகொடுத்த்து போக இனி அரசாங்கத்தின் அபகரிப்பிற்கும் முஸ்லிம்கள் தங்களது உடமைகளை பெரிய அளவில் பறிகொடுக்க வேண்டியது வரும் என்பதே அமித்ஷா விடுக்கும் செய்தி.

ஆட்சியதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசி மக்களை திசை திருப்பி விடலாம். அச்சமூட்டி நீதியை வளைத்து விடலாம் என்று அமித்ஷா நினைக்கலாம்.

ஆனால் ஒன்று நிச்சயம் வஞசக வார்த்தகைளைப் பேசுவோர் அந்த வார்த்தைகளின் வழியிலேயே தண்டனை பெறுகிற ஒரு காலம் வரும்.

நான் அமெரிக்க அதிபரின் எந்த நிகழ்ச்சியிலும் பன்கேற்கவில்லை. காவல்துறையினருடன் தான் இருந்தேன் என்று அமித்ஷா கூறினார். காவல்துறையினருடன் உட்கார்ந்து அவர் தீட்டிய திட்டம் என்ன என்பது தான் இப்போதைய பெரும் கேள்வி.

இந்த கேள்வி கேள்வியாகவே இருந்து விடாது. நிச்சயம் இதற்கு பதிலளிக்க் வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு ஏற்படும்.

அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவரணமாக வழங்க அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்த்து வைத்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

அகழ்யுத்த்த்தின் போது முஸ்லிம்களின் நிலை கண்டு எள்ளிநகையாடி வார்த்தையாடிய எதிரிகளுக்கு எதிராக பிரார்த்திக்குமாறு அல்லாஹ் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனை இது.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26)
அல்லாஹ் போதுமானவன்..




No comments:

Post a Comment