வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 19, 2020

தவிர்க்கக் கூடாத காரணங்கள்



கொரோனா எனப்படும் கோவிட் 19 வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகப் போர்களின் போது கூட இல்லாத பதட்டம் உலகெங்கும் காணப்படுகிறது. பாரிஸீல் ஆஸ்திரேலியாவில் மலேஷியாவில் அரபு நாடுகளில் மக்கள் நெடுநாட்கள் வீடுகளில் காத்திருப்பதற்கு தயராக தேவைப்படும் பொருட்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள், இதனால் பல இடங்களில் பெரும் அங்காடிகள் காலியாகிவிட்டன.
177 நாடுகளை பாதித்துள்ள இந்த தீய நுன்கிருமி இதுவரை சுமார் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 684 பேரை பாதித்துள்ளது. 9818 பேர் இறந்துள்ளனர். 86 676 பேர் குணமடைந்துள்ளனர். 7189 பேர் தீவிர கிகிட்சை பிரிவில் உள்ளனர். இத்தாலி பிரான்ஸ் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகள் கடந்த வாரத்தில் பெரும் எண்ணிக்கையிலான உயிரழப்புக்களை சந்தித்தன. சீனாவை விட இத்தாலியில் இறந்தோர் எண்னிக்கை அதிகரித்து விட்டது. சீனாவில் நோய்க்கிருமிதி தாக்குதலுக்குள்ளான 8 ஆயிரம் பேரில் இறந்தவர்கள் 3245 பேர் தான். அதே நேரம் இத்தாலியில் நோய்த்தாக்குதலுக்குள்ளான 45 ஆயிரம் பேரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3405 பேர் ஆவர். நேற்று ஒரு நாளில் மட்டும் 427 பேர் இறந்துள்ளனர்.  இத்தாலி மக்களில் பலரும் தங்களுக்கும் கிருமித் தொற்று பற்றிவிடுமோ என்ற கடும் அச்சத்தில் உறைந்து போயில்லுள்ளனர். ஈரான் ஸ்பெயின் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இப்போது இறப்போர் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.
ஒரு பெரும் கொடுமையாக இந்நோய்த் தொற்றுள்ளவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட டைமண்ட பிரின்ஸ்ஸ் என்ற சொகுசுக்கப்பல் ஜப்பானின் யோகோஹோமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள மக்கள் கரையில் இறங்க அனுமதிக்கப் படாமல் கப்பலிலேயே தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
கோவிட் 19  வைரஸ் தொற்று ஏற்பட்டதாக  அறியப்படும் நாளிலிருந்து 2 வது 3 வது  4 வது வாரங்களில் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் அலட்சியப்படுத்தியதே அந்நாடுகளில் நோய்தொற்று அதிகரிக்க காரணம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் மிகுந்த விழுப்புணர்வோடு எச்சரிக்கைகளை கடைபிடித்ததால் அங்கு நோய் பரவுதலும் உயிரிழப்பும் கட்டுக்குள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இம்மாதம் தீவிரமடைந்த வைரஸ் தொற்றுக்கு கடந்த புதன்கிழமை 151 பேர் ஆளாகியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது. எதிர்வரும் 15 நாட்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.  
நோய்த்தொற்றுகள் விச்யத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் அறிவுப்பூர்மனாவை
ஊரில் எங்கேனும் தொற்று பற்றி கேள்விப்பட்டாலே அச்சப்பட்டு அவசரப்பட்டு ஓடக் கூடாது அல்லாஹ் நாடினால் அன்றி எந்த தீங்கும் நமக்கு வந்து விடாது. அல்லாஹ் நாடிவிட்டால் எங்கிருந்தாலும் அது வந்து சேராமல் இருக்காது.
இது முஃமின்களின் அழுத்தமான நம்பிக்கை. இந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில் பண்டைய அரபியர் தொற்று நோயைக் கண்டு பயந்தனர். அப்போது தான் பெருமானார் (ஸ்ல_) அவர்கள்
البخاري (5316) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لا عَدْوَى وَلا طِيَرَةَ وَلا هَامَةَ وَلا صَفَرَ ".
தொற்று கிடையாது என்ற பெருமானாரின் வார்த்தை இதையே நம்பி பயந்து போகக் கூடாது என்ற கருத்தையே கொண்டதாகும்

அதே நேரத்தில் நோய்த் தொற்று குறித்து மிக அற்புதமாக பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நோயுக்கு காரணமான கிருமிகள் விசயத்தில் எச்சரிக்கையாக் இருக்க பெருமானார் (ஸல்வலியுறுத்தினார்கள்அதற்காக சுகாதாரமாக இருக்க உத்தரவிட்டார்கள்பல வகையிலும்

உனது நகங்களை வெட்டிக் கொள்

قلم أظافرك فإن الشيطان يقعد على ما طال تحتها ".

பாத்திரங்களில் கவனம்

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكِئُوا السِّقَاءَ فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ لَا يَمُرُّ بِإِنَاءٍ لَمْ يُغَطَّ وَلَا سِقَاءٍ لَمْ يُوكَ إِلَّا وَقَعَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ


நோய் பரவாமல் தடுக்க பெருமானார் (ஸல்) சொன்ன வழிகாட்டுதல்களில் மிக முக்கியமானது.

ஆரோக்கியமானவர்களிடையே நோயாளிகளை கொண்டு வராதீர்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُورَدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ

يقول رسول الله أيضاً " أن من القرف التلف " رواه أبو داود...

 والقرف أي الاختلاط بالمريض والتلف هو الهلاك

தொற்று நோய் உள்ளவர்களை விலகி இருக்குமாறு பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்.

பெரு நோய பாதிப்புக்குள்ளானவர் பைஅத் செய்ய வந்த போது நாம் அவரிடம் பைஅத் செய்து விட்டதாக கூறுங்கள்  அவர் திரும்பச் செல்லட்டும் என்றார்கள்.

فقد جاءه رجل مجذوم لكي يبايعه فلما استأذن بالدخول قال له الرسول" أبلغوه أنا قد بايعناه فليرجع

இப்போது கொரோனோ வைரஸ் தொற்று விசய்த்தில் ஒவ்வொருவரும் 1 மீட்டர் தள்ளி நிற்க கூறுகிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள்

" وقال أيضا " أجعل بينك وبين المجذوم قدر رمح أو رمحين ".


இப்போது நோய் பரவாமல் தடுக்க நகரங்கள் சீலிடப்படுகின்றன.  நோய் பாதித்த பகுதிகளுக்கு போக வேண்டாம் என்றார்கள் பெருமானார் (ஸல்).

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ الطَّاعُونَ فَقَالَ بَقِيَّةُ رِجْزٍ أَوْ عَذَابٍ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا مِنْهَا وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَلَسْتُمْ بِهَا فَلَا تَهْبِطُوا عَلَيْهَا


கீபி 7 ம் நூற்றாண்டில் பெருமானார் (ஸல்அவர்கள் சொன்ன அறிவுரை செயல் படுத்தாத ஐரோப்பியர்கள் கி.பீ  14 ம்  நூற்றாண்டில்  பெரும்  பேரழிவுக்கு  ஆளானார்கள்,

இப்போது பெருமளவில் கொரோனோ தாக்குதலுக்கு உயிர்ப்பலிகளை கொடுத்து வரும் இதே இத்தாலி நாடு அப்போதும் ஒரு தவறு செய்த்து.

Joseph Garland  தன்னுடைய  the story of medicine ல் ஒரு  நிகழ்ச்சியை சொல்லிக் காட்டுகிறார்.

இத்தாலியின் ஒரு பெருநகரான புளோரன்ஸில் ( Florence ) 1348 ம் ஆண்டு ஒரு பெரிய காலரா பரவியது. அப்போது அந்த ஊர்க்காரர்கள்  முடிந்த வரை வேகமாகவும் முடிந்த வரை தூரமாகவும் ஓடுங்கள் என உத்தரவிடப்பட்டார்கள். அதனால் காலரா இன்னும் வேகமாக அவர்கள் சென்ற தொலைவெல்லாம் பரவியது. 1352 ல் அது ரஷயாவுக்குள் நுழைந்தது. அந்த காலரா ஐரோப்பியர்களில் கால் பகுதியினரை பழி கொண்டது,

இப்போதும் இத்தாலியில் நோய் பரவியவதற்கு காரணம் கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்ட 2 வது 3 வது 4 வது வாரங்களில் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கையை அது கடை பிடிக்க தவறியதே என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு சுமார் இரு நூறு பேர் ஆளாகியிருந்தாலும் கூட இதுவரை இருவர் மட்டுமே இறந்துள்ளனர். எனினும் வரக்கூடிய மூன்று வாரங்கள் மிக முக்கியமானவை என்பதால் இதுவரை இந்திய மக்கள் அறிந்திராத கடும் எச்சரிக்கைகள் கையாளப்படுகின்றன.
அரசுகள் நடவடிக்கை எடுப்பது போல மக்களும் தங்களை காத்துக்கொள்ள போதுமான முன்னெச்செரிக்கையை கையாள வேண்டும்.
ஆபத்து நேரங்களில் பள்ளிவாசல்களில் அல்லாமல் வீடுகளில் தொழுது கொள்ள பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.
எத்தகைய தூர நோக்கு சிந்தனை ?
பாங்குக்கு இடையே சல்லு பீ ரிஹாலிகும் என்று
عن ‏نَافِعٌ ‏قَالَ : ‏أَذَّنَ ‏ابْنُ عُمَرَ ‏‏فِي لَيْلَةٍ بَارِدَةٍ ‏ ‏بِضَجْنَانَ ،‏ ‏ثُمَّ قَالَ : صَلُّوا فِي ‏رِحَالِكُمْ ‏، ‏فَأَخْبَرَنَا أَنَّ رَسُولَ اللَّهِ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ ، ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِهِ ‏‏: " أَلَا صَلُّوا فِي ‏‏الرِّحَالِ ‏" فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوْ الْمَطِيرَةِ فِي السَّفَرِ . رواه البخاري (616) ، ومسلم (699)
இப்போதே பல நாடுகளில் பள்ளிவாசல்களில் ஜும் தொழுகை  நிறுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் பாதுகாக்கட்டும் ஒருவேளை அடுத்த வாரங்களில் இங்கும் அப்படி சொல்லப்பட்டால் நாம் அதை கடை பிடிக்க வேண்டும். வீடுகளில் லுஹர் தொழுதால் போதுமானது.

மக்கள் பதட்ட மடையத் தேவையில்லை; பக்குவமாக நடந்து கொண்டால் போதுமானது.

சி ஏ ஏ வுக்கு எதிரான போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என தலைவர்கள் அறிவித்த போது ஆங்காங்கே மக்களில் சிலர் கோபமடைந்தனர். பின்னர் சூழ்நிலையின் தீவிரம் அறிந்து தங்களது கருத்தை மாற்றிக் கொண்டனர்.

அதுபோலவே கொரோனோ வைரஸ் காரணமாக மேற்கொள்ளப் படுகிற நடவடிக்கைகள் குறித்தும் சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஆட்சேபனைகளை ஒரு புறம் ஒதுக்கி வைப்போம். தற்போதைய ஐரோப்பிய நாடுகளின் நிலையை எண்ணிப்பார்த்த்து நாம் எல்லா வகையிலும் எச்சரிக்கையை கையாளுவோம்.

அரசு, சுகாதாரத்த்துறை ஜமாஅத்துல் உலமா போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புக்கள் கூறும் வழிகாட்டுதல்களை கடை பிடிப்போம்.

அல்லாஹ் நம்மையும் நமது மக்களையும் நமது நாட்டையும் இந்த உலகையும் தீய நுன்கிருமியின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பானாக!

அவனளவிலே கையேந்துவோம்.  கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியை வைத்து உலகையே உலுக்கி விட்ட அவனே நிம்மதியையும் நிவாரணத்தையும் தரப் போதுமானவன்  






No comments:

Post a Comment