வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 30, 2021

புதுவருடச் சிந்தனை

 ஒரு புதிய வருடம் பிறக்கிறது.

மகிழ்ச்சியடையவதற்கு ஏதேனும் ஒரு சிறிய  காரணம் இருந்தாலும் மகிழ வேண்டும். அதைப் பற்றி சொல்ல வேண்டும் என்கிறது இஸ்லாம்.

பக்கத்து வீட்டுக்காரர் திடீரென மீன் குழம்பு கொண்டு வந்து கொடுத்தார். இது ஒன்றும் பெரிதல்ல என்றாலும் அதிலும் ஒரு மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்.

பேருந்தில் அருகிலிருந்தவர் ஜன்னல் சீட்டை கொடுத்தார்.

டிரையினில் லோயர் பெர்த் கிடைத்துவிட்டது.

ஆட்டோகாரர் மீட்டருக்கு மேல் கட்டணம் கேட்கவில்லை

எல்லாவற்றிற்கும் மகிழனும்.

இப்படி ஒரு நன்மை கிடைத்த்து என்று பிறருக்கு சொல்லவும் வேண்டும்.

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ (11)

இறைவன் நமக்களித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு முறை அதை வெளிப்படுத்துவது.

 عن أبي نضرة قال : كان المسلمون يرون أن من شكر النعم أن يحدث بها .

 சோதனைகளை வெற்றி கரமாக கடந்தவர்கள் அதைப் பற்றி பேச வேண்டும்.

 عن جابر عن النبي صلى الله عليه وسلم قال" من أبلي بلاء فذكره فقد شكره ، وإن كتمه فقد كفره " . تفرد به أبو داود .

நிறைய வணக்கம் செய்திருந்தால் அதைப் பற்றியும் பேசுங்கள். கவனம் தற்பெரும அதில் கூடாது . இறைவன் இப்படி எனக்கு ஒரு பாக்கியத்தை அருளினான் என்ற வகையில் இருக்க வேண்டும்.

عن جابر عن النبي صلى الله عليه وسلم قال" من أبلي بلاء فذكره فقد شكره ، وإن كتمه فقد كفره " . تفرد به أبو داود .

இந்த வருடம் நிறைவடைகிற போது நாம் இதில் கிடைத்த நன்மைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். குடும்பத்தினருக்கு உணர்த்த வேண்டும் . சந்தர்ப்பம் கிடைக்கும் எனில் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்த நன்மைகளின் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளலாம்.

குறிப்பாக இந்த வருடம் நாமும் நமது குடும்பமுக் கொரோனோவிலிருந்து தப்பித்தது என்பதே பெரிய நிம்மதிக்குரிய விசயம்.

எதிர்பாராமல் எப்படி பலர் திடீரென இறந்து போய்விட்டார்கள் என்பதை சிந்தித்தால் நமக்கு கிடைத்த நன்மை புரியும். அதில் மகிழ முடியும்.

ஒரு காலத்தில் கறி வாங்கி சமைத்தால் கூட பக்கத்து வீட்டிற்கு சொல்லி விடுவார்கள்.

இக்காலத்தில் நமக்கு கிடைத்த நன்மைகளை நாம் நமக்குள்ளே மறைத்துக் கொள்கிறோம்.

அதில் ஒரு பெரிய தீமை என்ன வெனில்

நமக்கு கிடைத்த நன்மைகளை எண்ணிப்பார்க்கிற சுபாவம் இல்லாமல் போய்விட்டது. 

இது நன்றியுணர்வு குறைவதற்கு காரணமாகிவிடும்.

நமக்கு கிடைத்த நன்மைகள் பற்றிய தகவலை யாறிடம் பரிமாறுகிறோமோ அவர் நமது நம்பிக்கைக்குரியவராக நம் விசயத்தில் நன்மையை நாடுகிறவராக இருக்க வேண்டும்.

. وعن عمرو بن ميمون قال : إذا لقي الرجل من إخوانه من يثق به ، يقول له : رزق الله من الصلاة البارحة وكذا وكذا .

 அவர் நம்பிக்கைக்குரியவராக இல்லை எனில் பொறாமைக்கு ஆளாக நேரிடும்.  அதை குறித்து தான் பெருமானார் (ஸ்ல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

استعينوا على إنجاح الحوائج بالكتمان فإن كل ذي نعمة محسود

இந்த ஹதீஸுக்கு இன்னொரு பொருளும் உண்டு.

ஒரு காரியம் நிறைவேறுவதற்கு முன் அதைப் பற்றி தேவையற்றவர்களிடம் பேசாதீர்கள் என்பதாகும்.

 தங்களுக்கு கிடைத்த நன்மைகளை நபிம்மார்கள் மக்களிடம் பகிர்ந்துள்ளார்கள்

 وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ ۖ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ ۖ إِنَّ هَٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ

 பெருமானார் (ஸல்)  தங்களுக்கு கிடைத்த நன்மைகளை மக்களிடம் பகிர்ந்துள்ளார்கள்

 عن جابر بن عبد الله -رضي الله عنهما- أنّ النبيَّ -صلى الله عليه وسلم- قال: «أُعْطِيتُ خمسا, لم يُعْطَهُنَّ أحد من الأنبياء قبلي: نُصِرْتُ بالرعب مسيرة شهر, وجُعِلَت لي الأرض مسجدا وطَهُورا, فأَيَّمَا رجل من أمتي أدركته الصلاة فَلْيُصَلِّ, وأُحِلَّت لي المغانم, ولم تحلَّ لأحد قبلي, وأُعْطِيتُ الشفاعة، وكان النبي يُبْعَثُ إلى قومه خاصة, وبُعِثتُ إلى الناس عامَة»

 உதவியவர்களை பாராட்டுவோம். அதுவும் ஒரு வகை நன்றியே. மட்டுமல்ல அதுவும் ஒரு நன்மையே!

  عن أنس أن المهاجرين قالوا : يا رسول الله ، ذهب الأنصار بالأجر كله . قال" لا ما دعوتم الله لهم ، وأثنيتم عليهم " .

 நபி (ஸல்) அவர்கள் தனக்கு கிடைத்த உதவிகளை பற்றி பேசினார்கள்

 وروى الإمام أحمد بإسناده إلى عائشة رضي الله عنها قالت((كان النبي صلى الله عليه وسلم إذا ذكر خديجة أثنى عليها فأحسن الثناء قالت: فغرت يوماً فقلت ما أكثر ما تذكرها حمراء الشدق قد أبدلك الله عز وجل بها خيراً منها قال: ما أبدلني الله عز وجل خيراً منها قد آمنت بي إذ كفر بي الناس وصدقتني إذ كذبني الناس وواستني بمالها إذ حرمني الناس ورزقني الله عز وجل ولدها إذ حرمني أولاد النساء)

 பெரும் பாக்கியங்கள் கிடைக்கும் போது அதை உணர்ந்து இவ்வாறு நன்றி செலுத்தும் வாய்ப்பு வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்

 நிஃமத்தை உணர்தலின் சரியான வழி அது

  حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ (18

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

(நாற்பது வயதை கடந்தவர்கள் இந்த துஆ வை அதிகம் ஓத வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுண்டு) 

 மேலும் சிறப்பாக செயல்பட சிந்திக்க வேண்டும்.

وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ

 அடுத்த வருடங்களில் சாலிஹ் ஆகிவிட வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்

  فِي عِبَادِكَ الصَّالِحِينَ  என்ற வார்த்தை ஆழ்ந்த பொருள் கொண்ட வார்த்தை

பக்தி மார்க்கத்தில் மட்டுமல்ல வாழ்வில் தகுதி திறன் பெற்று வாழ்கிற ஒவ்வொரு சிறப்பான நிலையையும் அது குறிக்கும். அதே நேரத்தில் நல்லவர்களாக வாழ்வதற்கு அதிக முக்கியத்துவம் தரும்.

கடந்த வருட்த்தில் சோதனைகள் நிகழ்ந்திருக்கும் மானால் அதில் நமது தவறு என்ன என்று சிந்திக்க வேண்டும்.

ஹுத்ஹுத் தை காணவில்லை என்ற போது சுலைமான் நபி கூறியது அது எங்கே என்று அல்ல. என்னால் ஏன் பார்க்க முடியவில்லை என்று காரணத்தை தன்னோடு இனைத்துக் கொண்டார்கள்.

 وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ (20لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ (21فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِن سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ (22)

 இவ்வாறு சிந்தித்த போது அல்லாஹ் அவர்களுக்கு பல்கீஸ் அம்மையாரையும் அவரது அரசாங்கத்தையும் சேர்த்து வழங்கினான்.

இந்த உலகிலும் அப்படித்தான் தமது தவறுகளை சிந்திக்கிறவர்கள் அதை திருத்திக் கொள்பவர்கள் வெற்றியடைவார்கள்

ஒரு புத்தாண்டின் தொடங்கத்தில் கடந்த ஆண்டில் நமக்கு கிடைத்த நன்மைகளை நினைவுகூறுவோம். அதைப் பற்றி வேண்டியவர்களிடம் பேசுவோம்/ உபாகாரம் செய்தவர்களுக்கு நன்றி செலுத்துவோம். நமது தவறுகளை திருத்திக் கொள்வோ.  நம்மை மேலும் சிறப்பானவர்களாக ஆக்கிக் கொள்வது குறித்து சிந்திப்போம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

 

No comments:

Post a Comment