வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 11, 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024

   يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ

 18 வது நாடாளுமன்ற மக்களைவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி தொடங்குகிறது.

 இந்த தேர்தல் ஜூன் 1 ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது

முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

 இதில் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள், 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் மற்றும் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன

வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்

 தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 97கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 48,000 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்

20 முதல் - 29 வயதில் 19.74 கோடி இளைய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர். மேலும், 85 வயதை கடந்த 82 லட்சம் வாக்காளர்களும், 100 வயதை கடந்த 2.18 லட்சம் வாக்காளர்களும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க போகிறார்கள். 88 லட்சம் மாற்று திறனாளிகள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.

 இந்த  தேர்தலில் 18 முதல் -19 வயது நிரம்பிய 1.8 கோடி இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 85 லட்சம் பெண் வாக்காளர்கள் அடங்குவர். இந்த தேர்தலிலும் இந்த புதிய வாக்காளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 1951 ல் நம்முடைய நாட்டில் முதல் தேர்தல் நடை பெற்றது. அதில் 17 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் 85 சதவீதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர்களுக்காகவே வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் தேர்தல் சின்னம் அச்சிடப்பட்டது

 இன்று வாக்காளர்களின் எண்ணிக்கை 97 கோடியாக உயர்ந்துள்ள. மக்கள் கல்வியறிவு சதவீதமும் கனிசமாக உயர்ந்துள்ளது.

 நம்முடைய நாட்டின் தேர்தல்  உலகின் மிகப்பெரிய தேர்தல்களில் ஒன்று

எனினும் இந்த தேர்தல் நாட்டின் மக்களாட்சி முறை பாதுகாக்குமா அல்லது சர்வாதிகாரத்திற்கு துணை நிற்குமா என்ற கேள்விக்கான சூழலில் நடை பெறுகிறது.

 நாட்டின் அனைத்து உயர் அதிகார அமைப்புக்களும் தற்போது மத்தியை ஆட்சி செய்யும் பாஜக கட்சியின் கைவசம் உள்ளது.

இந்தியாவின் வருமாணவரித்துறை அமைப்புகள், புலனாய்வு அமைப்புக்கள்  சுதந்திரமா செயல்படுவதில்லை என்று வெளிநாடுகள்  பகிரங்கமாக குற்றம் சாட்டிவருகின்றன.

பாஜகஅரசாங்கத்தின் ஆட்சோபைனை களை அந்நாடுகள் சிறிதும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றன.

இந்தியாவின் மகத்தான ஜனாநாயம் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற போதே தகர்ந்து போய்விடக் கூடாது என்று அவை கவலைப்படுவதை நாம் உணர முடிகிறது,

 இத்தகைய சூழ்நிலையில் நமது நாட்டின் ஜனநாயகத்தையும் சமூக நல்லுறவையும் பாதுகாப்பதில் மிக அதிகப்படியான அக்கறையை செலுத்த வேண்டிய கடமை இந்திய குடிமக்களாகிய நமக்கு இருக்கிறது.

ஓட்டுப்போடுவது மார்க்க கடமை

 இஸ்லாமின் பார்வையில் ஒருவருக்கு ஓட்டுப்போடுவது இவர் இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவர் என்று சாட்சி சொல்வதும். பரிந்துரைப்பதும் ஆகும்.

 முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை மட்டுமல்ல சமயக் கடமையுமாகும்.  ஒட்டுப் போடுவதும் நன்மையை பெற்றுத்தருகிற ஒரு இபாதத் ஆகும்.

 இஸ்லாமியப்பார்வையில் ஓட்டுப் போடுவது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதின் அந்தஸ்ததை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முப்தீ முஹம்மது ஷபீ அவருடைய திருக்குர் ஆன் விhவுரையில் குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்பக்கம் 71 வசன எண் 5.8)

 திருக்குர்ஆன் போதிக்கிற شهادة  (சாட்சியமளித்தல்) شفاعة (சான்றளித்தல்) وكالة (ஒப்புவித்தல்) அகிய மூன்று தார்மீகக் கடமைகளின் படியுமும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை என அவர் குறிப்பிடுகிறார்.

  1.  சாட்சியை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அது போல ஓட்டளிப்பதும் கடமையாகும்.

 தேர்தல் நாளை விடுமுறை நாள் என்று கருதி சும்மா இருந்து விடக்கூடாது படித்தவர்களும் பண வசதி படைத்தவர்களும் வரிசையில் நின்று வாக்களிப்பதை சிரம்மாக கருதுகின்றனர்.

 ஆனந்த விகடன் பத்ரிகையில் முன்னாள் தேர்தல் கமிஷனரின் அருமையான பேட்டி:

 அடுத்த ஐந்து வருட்த்திற்கு அரசியல் நட்த்துவது யார் என்பதை தீர்மாணிக்க சக்தியை நமது விரல் நுக்கும் இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ளது.

 சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமாதடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமாஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம்.

.”  முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டிற்கு சரியான ஆட்சியாளரை அடையாளம் காட்ட சாட்சி சொல்கிறோம் என்ற நிய்யத்தோடு வரிசையில் நிற்கிற ஒவ்வொரு நிமிடமும் சவாபிற்குரியதாகும்.

إنما الأعمال بالنيات

சும்மா முகம் கழுவினால் அது சுத்தம் மட்டுமே!. ஒளு என்ற நிய்யத்தோடு முகம் கழிவினால் சுத்த்த்துடன் நன்மையும் சேர்ந்து கிடைக்கிறது அல்லவா? அது போல!

 ·         சிலர் என் ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்கின்றனர்.

·         கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான் வாய்ப்பளிக்கிறது.

·         நூறு பேர் இப்படி நினைத்தால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.

·         ஒரு ஓட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை அரசியல் வாதி புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான அவர் சந்து பொந்துக்களில் புகுந்து கூட ஓட்டுகேட்கிறார்.

2.  சாட்சியை நிறைவேற்ற எப்படி கூலி வாங்க்க்க்கூடாதோ அது போல ஓட்டுக்கு காசு பொருள் ஆகியவற்றை பெறக் கூடாது.

 இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பு 200 க்கும் 500 க்கும் மக்கள் தங்களது ஓட்டுக்களை விற்றுவருவது.

 பணத்துக்கும்பிரி யாணிப் பொட்டலத்துக்கும்மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.

 ஒரு வாக்கை விற்பதுஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால்வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு.

 3.  பொய்சாட்சி சொல்லக்கூடாது என்றால் கள்ள ஓட்டு போடக்கூடாது என்று பொருளாகும்.

பொய்சாட்சி எப்படி நீதியை தடுமாற வைத்து விடுமோ அது போல கள்ள ஓட்டு அரசியலை தடுமாறச் செய்து விடும்.

 4.  ஜாதி இன மத அடிப்படையில் தப்பான வேட்பாளரை தேர்வு செய்து விடக்கூடாது.

தங்களுடையவர் என்பதற்காக சாட்சியில் பிறழ்தல் கூடாது என்பது இஸ்லாமின் கடுமையான் அறிவுறையாகும்.

وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ

 தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை ஆதரிப்பது இனவெறி என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் மார்க்கம் எச்சரிக்கிறது.

  عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ  - ابوداوود -4453   

 அசத்தியமான ஒரு காரியத்திற்காக தன்னுடைய சமுதாயத்திற்கு உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன் வாலைப் பிடித்து இழுப்பவனை போலிருகிறான்.

 مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

 ஓட்டுப்போடாமல் இருப்பது சாட்சியை மறைத்த குற்றமாகும்

 وأقيموا الشهادة لله

وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا

 عن زيد بن خالد الجهني - رضي الله عنه - أنه سمع رسول الله - صلى الله عليه وسلم - يقول: " خير الشهداء من أدى شهادته قبل أن يسألها –  ترمذي

 நம்மை தேடி ஆட்கள் வந்து வாக்கு கேட்க யாரும் வராவிட்டாலும் கூட  நாம் தேடிச் சென்று வாக்களிப்பது கடமை

 இந்த நபி மொழிக்கு இமாம நவவி அவர்கள் தருகிற விளக்கத்தை கவனித்துப் பாருங்கள்

 ஒரு வழக்கில் நாம் சாட்சியாக இருக்கிறோம் என்பது வழக்காளிகளுக்கு தெரியாவிட்டாலும் கூட நாமாக முன் சென்று அவரிடம் விளக்கிச் சொல்லி அவருக்கான சாட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இமாம் நவவி கூறுகிறார்கள்

  قال النوويوفي المراد بهذا الحديث تأويلان أصحهما وأشهرهما أنه محمول على من عنده شهادة لإنسان بحق ولا يعلم ذلك الإنسان أنه شاهد فيأتي إليه فيخبره بأنه شاهد له ،

 த்தகைய கருத்துக்கள் சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது

 அதனாலாயே இந்தியாவை பொறுத்த வரை ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் வாக்கு என்பது கனிசமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது..  

 இதற்கு காரணம் இஸ்லாமிய அடிப்படையும் அறிஞர்களின் வழிகாட்டுதலுமே ஆகும். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்கு வங்க்களாக செயல்பட்டார்கள் என்பது அல்ல.

 இப்போதைய தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக் கடமை என்ற வகையில் மட்டும் அல்லாது பாசிச பாஜக அரசின் அநீதிகளிலிருந்து நாட்டை காக்க வேண்டியது அவசியம் என்ற வகையிலும் இந்த தேர்தலில் வாக்களிக்கக வேண்டியது அதிகப்பட்ச கடமையாகிறது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு போராட்டமாகும்.

 தீய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

 وقال صلى الله عليه وسلم: «ألا إنها ستكون بعدي أمراء يظلمون ويكذبون فمن صدقهم بكذبهم ومالأهم على ظلمهم فليس مني ولا أنا منه، ومن لم يصدقهم بكذبهم ولم يمالئهم على ظلمهم فهو مني وأنا منه» (حسن لغيره صحيح الترغيب والترهيب).

وعن عبد الله بن خباب خرج علينا النبي صلى الله عليه وسلم فقال: «إنه سيكون بعدي أمراء فلا تصدقوهم بكذبهم ولا تعينوهم على ظلمهم، فإن من صدقهم بكذبهم وأعانهم على ظلمهم لم يرد على الحوض» (صحيح لغيره صحيح الترغيب والترهيب).  

قال صلى الله عليه وسلم: «من أعان ظالمًا بباطل ليدحض بباطله حقا فقد برئ من ذمة الله عز وجل وذمة رسوله» 

 நமது மு ன்னோர்கள்  அநீதிக்கு  எதிராக  துணிவு  மிக்க  செயல்பாடு  கொண்டவர்களாக  இருந்தார்கள்.

 அப்பாஸிய சக்ரவர்த்தியை எதிர்த்த சுப்யான் அஸ் ஸவ்ரீ ரஹ்

உங்களுக்கு ஏதேனும் தேவையிருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றித்தருகிறேன் என்றார் அப்பாஸிய மன்னர். சுப்யான் அத்தவ்ரீ ரஹ் அவர்கள் அடுக்கடுக்காக அவரை சாடினார்கள் அவருடைய அரசில் நடக்கிற குறைகளை சுட்டிக் காட்டினார்கள். இறுதிவரை தனக்கு என எதையும் கேட்க வில்லை.   

 وعن سفيان الثوري قال: أُدخلت على أبي جعفر المنصور بمنى، فقال لي: ارفع إلينا حاجتك. فقلت له: اتق الله، فقد ملأت الأرض ظلمًا وجورًا. قال: فطأطأ رأسه ثم رفعه، فقال: ارفع إلينا حاجتك. فقلتُ: إنما أُنزلت هذه المنزلة بسيوف المهاجرين والأنصار، وأبناؤهم يموتون جوعًا، فاتق الله وأوصل إليهم حقوقهم. فطأطأ رأسه ثم رفعه فقال: ارفع إلينا حاجتك. فقلت: حج عمر بن الخطاب رضي الله عنه، فقال لخازنه: كم أنفقت؟ قال: بضعة عشر درهمًا، وأرى ها هنا أموالاً لا تطيق الجمال حملها.. وخرج.

 அரசியலில் சுயநலம் பார்ப்பதை விட பொது நலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதே பிரதானம் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள் .

 எனவே இந்த தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

 நம்முடைய பெண்கள், இளைஞர்களை வாக்களிக்க தூண்ட வேண்டும். யாருக்கு வாக்களிப்பது , எந்த சின்னத்தில் வாக்களிப்பது எப்படி வாக்களிப்பது போன்ற விவரங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

 நாம் தவறாமல் வாக்களிப்போம்.

 யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு தமிழக ஜமாஅத்துல் உலமா ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல் இன்றுள்ள அரசியல் சூழலில் நாம் மிக அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய விசயங்கள் குறித்து சிந்தித்து எடுக்கப் பட்ட ஒரு முடிவாகும்.

 ஆகவே தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை அறிக்கையை இங்கு படிக்கிறோம். அந்த வழிகாட்டுதல் படி வாக்களிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தமிழக முஸ்லிம்களை கேட்டுக் கொண்டுள்ளது    

நாம் கடை வைத்தாலும் ரிஜ்கு தருகிறவன் அல்லாஹ், நாம் உழவு செய்தாலும் விளைச்சலைத் தருகிறவன்  அல்லாஹ். நாம்ஓட்டுப்போட்டாலும் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது. அவனே நல்ல தீய ஆட்சியாளர்களைத்தறுகிறான்.

எனவே நமக்கு நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க பெருமானார் கற்றுத்தந்த அருமையான இந்த பிரார்த்தனை.தொடர்ந்து கேட்போம்.

 ربنا لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا

 நமது நாட்டின் தற்போதைய சூழல் மிக மோசமாக இருக்கிறது. மத்த்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் எல்லா விதமான தகிடு திக்கங்களை நீதி மன்றங்களின் அனுமதியோடு நிறைவேற்றிக் கொள்கிற அதிகாரத்தையும் சாணக்கியத்தனத்தையும் பெற்றிருக்கீறார்கள்.

 

இந்த தேர்தலில் அந்த சகதிகளின் தீய திட்டங்கள் வென்று விடக் கூடாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மூஸா அலை அவர்களின் கைத்தடியில் கடலை பிளக்கச் செய்த்து போல அவனுடைய குத்ரத்தை வெளிப்படுத்தி இந்த குறுமதியாளர்களை வெளியேற்ற வேண்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

1 comment:

  1. Anonymous5:45 PM

    Mashallah...... jazakallah hazrath... சரியான வழிகாட்டுதல்கள்

    ReplyDelete