வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 02, 2024

மழைத் தொழுகை

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ * أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ [الواقعة 68 - 69 ].



கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத கோடை வெப்பம் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.

நேற்று கரூரில் 112 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 7 டிகிரி அதிகமாகும்.

சாதாரணமாக 103 டிகிரிக்கே சூடு பொறுக்காத தமிழக மக்கள் 110 டிகிரி வெயிலில் தவித்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் ராயல சீமா பகுதியில் 115 டிகிரி வெயில் பதிவாகியுளது.

அல்லாஹ் இந்த வெப்பத்தை தணித்தருள்வானாக! நல்ல மழையை தந்தருள்வானாக! வெப்பத்தின் தீங்கிலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாத்து அருள்வானாக!

மக்களின் சிரமங்களை புரிந்து கொள்கிறவர்களாக ஆட்சித்தலைவர்களையும் நிர்வாக இயந்திரத்தையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

மனிதர்களின் இயலாமை

மனிதர்கள் என்னதான் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் மேம்பாடு கண்டிருந்தாலும் அடிப்படை தேவைகளுக்காக அல்லாஹ் விடமே முறையீட வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த கடும் கோடை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ * أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ﴾ [الواقعة 68 - 69 ].

 சுதந்திரம் என்ற பெயரில் மக்கள் செய்கிற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போகின்ற போது அல்லாஹ் தனது சக்தியின் மிகச்சிறிய பகுதியை  வெளிப்படுத்துகிறான்.

 இதை உணர்ந்து மக்கள் பாவமன்னிப்புக் கோருவார்கள் எனில் அல்லாஹ் வானிலிருந்து அடுக்கடுக்கான மழையை பொழிந்தருள்வான்.

 ஆதி மனிதர் நூஹ் அலை அவர்கள் மனித சமூகத்திற்கு சொல்லிச் சென்ற அறிவுரை இது.

 فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا * يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا* وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا﴾ [نوح: 10- 12]،

இதனால் இஸ்லாம் வெயில் அதிகரிக்கும் காலத்தில் மழை தொழுகையை சுன்னத்தாக ஆக்கியிருக்கிறது.

 فصلاة الاستسقاء سنة مؤكدة عند حصول موجبها وهو حاجة الناس إلى المطر لجدب الأرض والخوف على المزارع ونحو ذلك

 தொழுகை விபரம்

 ·         பெருநாள் தொழுகையை போல இரண்டு ரகாஅத் தொழு வேண்டும்

·         முதலில் தொழுகை அடுத்து குத்பா

·         ஷாபி மத்ஹபில் பெருநாள் தொழுகை போல முதல் ரகாத்தில் 7 இரண்டாவது ரகாத்தில் 5 என அதிகப்படியான தக்பீர்கள் சொல்ல வோண்டும்.

·         முதல் ரகாத்தில் சூரத்து காப் அல்லது சூரத்துல் அஃலாவை இமாம் ஓதுவார். இரண்டாவது ரகாத்தில் சூரத்துல் இக்தரபத்திஸ் ஸா ஆத் வை அல்லது சூரத்துல் காஷியாவை ஓதுவார்.

·         முதல் குத்பாவில் 9 முறையும் இரண்டாவது குத்பாவில் 9 முறையும் இமாம் இஸ்திக்பார் வாசகத்தை சொல்லுவார்

·         குத்பாவின் போது இமாம் தனது மேலாடையை திருப்பிப் போடுவார். வலது கையால் மேல் துண்டின் இடது அடிப்பாகத்தை பிடித்து மேல் நோக்கி திருப்புவார். இதில் வலது இடது என்ற  திசையும் மாறும் மேல் கீழ் என்ற நிலையும் மாறும்.

·         இரண்டாவது குத்பாவை முக்கால் பங்கு ஓதிய பிறகு இமாம் கிப்லாவை நோக்கி திரும்புவார். பிறகு மேல் துண்டை மாற்றிப் போடுவார்.

·         இமாம் இவ்வாறு செய்யும் போத் உட்கார்ந்த படி மக்களும் அவ்வாறு துண்டை மாற்றிப் போடுவது சுன்னத் ஆகும்.

·         குத்பாவிற்க்கு பிறகு இமாம்  உருக்கமாக துஆ கேட்பார்.

·        لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا لله رب العرش العظيم، لا إله إلا الله رب السموات ورب الأرض ورب العرش الكريم

என்பதை ஓதிக் கொள்வது சிறப்பானது.

 اللهم اجعلها رحمة لا سقيا عذاب، ولا محق، ولا بلاء، ولا علم، ولا غرق ، اللهم على الزراب - ومنابت الشجر، وبطون الأودية، اللهم والينا ولا علينا، اللهم اسقنا غيثاً مغيثاً هنيئاً مريئاً مريعاً - . رحاً - ؛ غدقاً ، طبقاً ، مجللاً، دائماً، اللهم اسقنا الغيث ولا تجعلنا القانطين، اللهم إن بالعباد والبلاد من الجهد والجوع والضنك ما لا نشكو إلا إليك، اللهم أثبت الزرع، وأدر لنا الضرع، وأنزل علينا من بركات السماء، وأنبت لنا من بركات الأرض، واكشف من البلاء ما لا يكشفه غيرك، اللهم إنا نستغفرك إنك كنت غفاراً، فأرسل السماء علينا مدراراً

 என்ற துஆவையோ அல்லது இது போன்ற துஆவையோ கேட்பது சிறப்பு.

இது ஷாபி மத்ஹபின் வழிமுறையாகும்.

 ஹனபீ மத்ஹபில்

மழை தொழுகை நபிலானது.

பெருநாள் தொழுகையை போல இரண்டு ரகாஅத்கள். அதிகப்படியான தக்பீர் கிடையாது.

முதல் குத்பாவில் கொஞ்சம் நேரம் கழிந்த பிறகு இமாம் மேல் துண்டை திருப்பி போடுவார்.

இமாம் துண்டை புரட்டுகிற போது மக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்

 மழைத் தொழுகைக்கான நேரம்.

 இமாம் நவவீ அவர்கள் அவர்கள் மழைத் தொழுகையின் நேரம் பற்றி கூறுகையில் இதில் மூன்று கருத்துக்கள் இருப்பதாக கூறுகிறா

1.       பெருநாள் தொழுகையின் நேரம்.

2.       இஷ்ராக்கிலிருந்து அஸர் வரை

3.       தொழுகை தடுக்கப்படாத நேரம் தவிர்த்து மற்ற எந்த நேரத்திலும் தொழலாம்.

இதில் மூன்றாவது கருத்தே பொருத்தமானது என்பது இமாம் நவவியின் கருத்தாகும்.

 மழைக்கான பிரார்த்தனை என்பது மனித சமூகத்தின் ஆதி தேடல்களின் ஒன்றாகும்.

 சலாத்துன்னாரிய்யாவில் ஒரு வாசகம் உண்டு , يستسقى الغمام بوجهه

பெருமானாரை முன் வைத்து மழை வேண்டப்படும்

 இதற்கு சான்றாக வரலாற்றாசிரியர் இப்னு அஸாகிர் ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறார்.

 خرج ابن عساكر عن جَلْهُمَة بن عُرْفُطَة قال‏:‏ قدمت مكة وهم في قحط،

فقالت قريش‏:‏ يا أبا طالب! أقحط الوادي، وأجدب العيال، فهَلُمَّ فاستسق، فخرج أبو طالب ومعه غلام، كأنه شمس دُجُنَّة، تجلت عنه سحابة قَتْمَاء، حوله أُغَيْلمة، فأخذه أبو طالب، فألصق ظهره بالكعبة، ولاذ بأضبعه الغلام، وما في السماء قَزَعَة، فأقبل السحاب من هاهنا وهاهنا، وأغدق واغْدَوْدَق، وانفجر الوادي، وأخصب النادي والبادي وإلى هذا أشار أبو طالب حين قال‏:

وأبيضَ يُستسقى الغَمَام بوجهه ***

  ஊர் வறண்டு விட்டது என மக்கள் அபூதாலிபிடம் முறையிட்டனர். அவர் தனது வளர்ப்பு மகனான முஹம்மது நபி (ஸல்) அவர்களை தன்னுடன் அழைத்து வந்தார். அவருடன் மற்ற குழந்தைகளும் இருந்தனர். பெருமானாரின் கையை பிடித்துக் கொண்டு தனது முதுகை கஃபாவின் சுவற்றோடு சேர்த்து வைத்து அபூதாலிப் பிரார்த்தித்தார். அப்போது வானத்தில் ஒரு சிறு மேகமும் இருக்கவில்லை. அவர் பிரார்த்தித்த கொஞ்ச நேரத்தில் அங்கிருந்தும் இங்கிருந்துமாக மேகங்கள் திரண்டன. மழை பொழிந்தது. ஓடைகள் வழிந்தோடின. நகரங்களும் கிராமங்களும் பயன் பெற்றன. அப்போது அபூதாலிப் பாடினார் இந்த வெள்ளை முகத்தை கொண்டு மழை வேண்டப்படும்

 

யூதர்கள்

 யூதர்கள் கோடை காலத்தில் தமது  நபிமார்களின் குடும்பத்தை முன் வைத்து அல்லாஹ்விடம் மழை வேண்டினர்

 وقد حكي عن كعب الأحبار: أن بني إسرائيل كانوا إذا قحطوا استسقوا بأهل بيت نبيهم.

பெருமானாரும் மழை வேண்லும்

பெருமானார் (ஸல்) அவர்கள் மழைக்காக துஆவும் செய்துள்ளார்கள். தொழுது துஆவும் செய்துள்ளார்கள்.

 فعنْ أَنَسٍ قَالَ: بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! هَلَكَ الْكُرَاعُ، وَهَلَكَ الشَّاءُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَمَدَّ يَدَيْهِ وَدَعَا [رواه البخاري (880


ஒரு யுத்ததிற்கு சென்ற இட்த்திலும் பெருமானார் ஸல்) அவர்கள் மழைக்காக பிரார்தித்தார்கள்

 أنه صلى الله عليه وسلم استسقى في بعض غزواته لما سبقه المشركون إلى الماء، فأصاب المسلمين العطش فشكوا إلى رسول الله صلى الله عليه وسلم، وقال بعض المنافقين: لو كان نبيًا لاستسقى لقومه كما استسقى موسى لقومه، فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال: «أَوْ قَدْ قَالُوهَا؟ عَسَىَ رَبَّكُمْ أَنْ يُسْقِيكُمْ» ثم بسط يديه ودعا فما رد يديه من دعائه حتى أظلهم السحاب، وأُمطروا، فأفعم السيل الوادي فشرب الناس فارتووا، وحفظ من دعائه في الاستسقاء: «اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ


.பெருமானார் தொழுகையும் நடத்தினார்கள்

பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் மழை வேண்டி பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். துஆ செய்தார்கள் அப்போது மக்களுக்கு முதுகை காட்டி கிப்லாவை நோக்கி திரும்பி துஆ செய்யும் போது தனது மேலாடையை திருப்பிப் போட்டார்கள் என அப்துல்லாஹ் பின் ஜைது ரலி அறிவிக்கிறார்.

 رَأَيْتُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ خَرَجَ يَسْتَسْقِي، قالَ: فَحَوَّلَ إلى النَّاسِ ظَهْرَهُ، واسْتَقْبَلَ القِبْلَةَ يَدْعُو، ثُمَّ حَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى لَنَا رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِما بالقِرَاءَةِ.

الراويعبدالله بن زيد | المحدث البخاري

 இன்னொரு ஹதீஸ் உண்டுو இந்த செய்தியை சற்று விரிவாக கூறுகிறது

 أنه وعد الناس يومًا يخرجون فيه إلى المصلى، فخرج لما طلعت الشمس متواضعًا، متبذلًا، متخشعًا، مترسلًا، متضرعًا[3]، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَكَبَّرَ صلى الله عليه وسلم، وَحَمِدَ اللَّهَ عز وجل، ثُمَّ قَالَ: «إِنَّكُم شَكَوْتُمْ جَدْبَ دِيَارِكُم وَاسْتِئخَارَ المَطَرِ عن إِبَّانِ زَمَانِهِ عَنْكُم، وَقَدْ أَمَرَكُمُ اللَّهُ عز وجل أَنْ تَدْعُوهُ، وَوَعَدَكُم أَنْ يَسْتَجِيبَ لَكُم». ثُمَّ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، الرَّحْمَنِ الرَّحِيمِ، مَلِكِ يَوْمِ الدِّيْنِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَفْعَلُ مَا يُرِيدُ، اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ، أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ، وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلَاغًَا إِلَى حِينٍ»، ثُمَّ رَفَعَ يَدَيْهِ، فَلَمْ يَزَلْ فِي الرَّفْعِ حَتَّى بَدَا بَيَاضُ إِبِطَيْهِ، ثُمَّ حَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ، وَقَلَبَ (أَوْ: حَوَّلَ) رِدَاءَهُ، وَهُوَ رَافِعٌ يَدَيْهِ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ وَنَزَلَ، فَصَلَّى رَكْعَتَيْنِ، فَأَنْشَأَ اللَّهُ سَحَابَةً، فَرَعَدَتْ وَبَرَقَتْ، ثُمَّ أَمْطَرَتْ بِإِذْنِ اللَّهِ، فَلَمْ يَأْتِ مَسْجِدَهُ حَتَّى سَالَتِ السُّيُولُ، فَلَمَّا رَأَى سُرْعَتَهُمْ إِلَى الْكِنِّ، ضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، فَقَالَ«أَشْهَدُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

உமர் ரலி அவர்கள் காலத்தில்

 உமர் ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 18 ம் ஆண்டு கடும் வற்ட்சிக் காலமாக இருந்தது. சுமார் 9 மாதங்கள் வறட்சி நீடித்தது.    

 அப்போது மழைத் தொழுகை தொழுத உமர் ரலி அவர்கள் பெருமானாரின் பெரிய தந்தை அப்பாஸ் ரலி அவர்களை முன் வைத்து பிரார்த்தனை செய்தார்கள்.

 عَنْ أَنَسٍ "أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ -رضي الله عنه- كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ: اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا. قَالَ: فَيُسْقَوْنَ"

 இது உமர் ரலியின் வழக்கமாக இருந்த்து.

 முஆவியா ரலி அவர்களின் காலத்தில்

 முஆவியா ரலி காலத்தில் யஜீத் பின் அஸ்வத் ரஹ் என்ற வயது மூத்த பெரியவர் ஒருவர் இருந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தார். ஆனால் பெருமானாரைச் சந்திக்க வில்லை.

முஆவியா ரலி அவர்கள் யஜீத் பின் அஸ்வத் ரஹ் அவர்களை முன் வைத்து மழைக்காக பிரார்த்தித்தார். கூட்டம் முடிவதற்குள்ளாக மழை கொட்டியது. மக்கள் அவர்களது வீடுகளுக்கு திரும்ப சிரம்ம் ஏற்பட்ட்து என் பிரப்ல தாபிஈ சலீம் பின் ஆமிர் அல் கபாயிரி தெரிவிக்கிறார் (இப்னு அஸாகிர்)

 التابعي الجليل سليم بن عامر الخبائري: (أن السماء قحطت، فخرج معاوية بن أبي سفيان وأهل دمشق يستسقون، فلما قعد معاوية على المنبر قال: أين يزيد بن الأسود الجرشي؟ فناداه الناس، فأقبل يتخطى الناس، فأمره معاوية فصعد على المنبر فقعد عند رجليه، فقال معاوية: اللهم إنا نستشفع إليك اليوم بخيرنا وأفضلنا، اللهم إنا نستشفعُ إليك اليوم بيزيد بن الأسود الجرشي، يا يزيد ارفع يديك إلى الله، فرفع يديه ورفع الناسُ أيديهم، فما كان أوشك أن ثارت سحابةٌ في الغرب كأنها تُرْس، وهبت لها ريح فسقتنا حتى كاد الناس أن لا يبلغوا منازلهم).

கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் தந்தையின் சகோதரி ஆயிஷா வை முன் வைத்து மழை வேண்டாப்பட்டால் மழை பொழியும் ரஹி அவர்களின் வரலாறு சொல்கிறது

 மக்கள் அழுது தொழுது கேட்பதே மழைத் தொழுகை

 அப்பாஸிய மன்னர் நாஸிரின் காலத்தில் சில நாட்கள் நோன்பிருந்து விட்டு அவர் மக்களை தொழுமிடத்திற்கு அழைத்தார். வழக்கத்திற்கு மாறாக சலாமுன் அலைக்கும் என்று சொல்லி தொடங்கினார். மக்கள் குழப்பம் அடைந்தனர். பிறகு அதன் தொடர்ச்சியாக வருகிற அல்லாஹ்வின் அருள் குணத்தைப் பற்றிய  குர் ஆன் வசனத்தை ஓதினார். மக்கள் கதறி அழுதனர். துஆ கேட்டனர்.

 அப்போதே பெரு மழை பொழிந்த்து.

 அடுத்தும் மழை வேண்டிப் பிரார்த்தி விட்டு அவர் ஒரு திருமறை வசனத்தை கூறினார். மக்களே நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் தேவையானவர்களே!.

 الذهبي في السير -  قال الحسن بن محمد: (قحط الناس في بعض السنين آخر مدة الناصر، فأمر القاضي منذر بن سعيد بالبروز إلى الاستسقاء بالناس، فصام أيامًا وتأهب، واجتمع الخلق في مصلى الربض، وصعد الناصر في أعلى قصره ليشاهد الجمع، فأبطأ منذر، ثم خرج راجلا متخشعًا، وقام ليخطب، فلما رأى الحال بكى ونشج وافتتح خطبته بأن قال: سلام عليكم، ثم سكت شبه الحسير، ولم يكن عادته، فنظر الناس بعضهم إلى بعض لا يدرون ما عراه، ثم اندفع، فقال: ﴿ سَلاَمٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ ﴾ الآية [الأنعام: 54] استغفروا ربكم وتوبوا إليه، وتقربوا بالأعمال الصالحة لديه، فضج الناس بالبكاء، وجأروا بالدعاء والتضرع، وخطب فأبلغ، فلم ينفض القوم حتى نزل غيث عظيم. واستسقى مرة، فقال يهتف بالخلق: ﴿ يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ ﴾ الآيتين [فاطر: 15 - 16] فهيج الخلق على البكاء).

இறைவா நாங்கள் எங்கள் தவறை ஒப்புக் கொண்டோம் என்று கதறி மக்கள் மழையை கேட்டனர் அன்றே மழை பெய்த்து என் அவ்ஸாயி கூறுகிறார்

 قال الأوزاعي: خرجوا يستسقون بدمشق، وفيهم بلال بن سعد، فقام فقال: يا معشر من حضر! ألستم مقرين بالإساءة؟ قلنا: نعم، قال: اللهم إنك قلت: ﴿ مَا عَلَى الْمُحْسِنِينَ مِن سَبِيلٍ [التوبة: 91] وقد أقررنا بالإساءة، فاعف عنا واسقنا، قال: فسقينا يومئذ

மழை வேண்டிப் பிரார்த்திப்பது என்பது வெறும் அடையாளப் பூர்வமான ஒரு விசயமல்ல்; உணர்ச்சிப்பூர்வமான ஒரு முறையீடு . அதனால் கிடைக்கும் பயனுக்கு இந்த உலகில் எதுவும் ஈடாகாது. அந்த பயனை மனிதர்களது எந்த வளர்ச்சியும் தந்த்து விடாது.

அல்லாஹ் தவ்பிக் செய்வானாக!

No comments:

Post a Comment