வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 27, 2024

பழைய வரலாறுகளை பாதுகாப்போம்.

  அல்லாஹ் திருக்குர் ஆனில் கனிசமான வசனங்களில் வராலாற்றைப் பேசுகிறான்.  (சுமார் 500 வசனங்கள்)

அல் கஸஸ் ( பண்டைய வரலாறுகள்) என்ற தலைப்பில் குர் ஆனில் ஒரு அத்தியாயமே உண்டு. (28 )    

அலி ரலி அறிவிக்கும் ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் திருக்குர் ஆனின் பெருமைகளை வரிசையாக பட்டியிலிடும் போது முதலாவதாக கூறீயது இதில் உங்களது முன்னோர்களின் வரலாறு இருக்கிறது என்ற வார்த்தையாகும்.

سَمِعْتُ رَسُولَ الله صلى الله عليه وسلم يَقُولُ: "أَلاَ إِنّهَا سَتَكُونُ فِتْنَةٌ، فَقلت: مَا المَخْرَجُ مِنْهَا -يَا رَسُولَ الله-؟ قالَ: كِتَابُ الله، فِيهِ نَبَأُ مَا كان قَبْلَكُمْ، وَخَبَرُ مَا بَعْدَكُمْ، وَحُكْمُ مَا بَيْنَكُمْ، وَهُوَ الفَصْلُ لَيْسَ بِالْهَزْلِ، مَنْ تَرَكَهُ مِنْ جَبّارٍ قَصَمَهُ الله، وَمَنْ ابَتَغَى الهُدَى فِي غَيْرِهِ أَضَلّهُ الله، وَهُوَ حَبْلُ الله المَتِينُ، وَهُوَ الذّكْرُ الْحَكِيمُ،

வரலாற்றுச்  செய்திகள் மனதிற்கு சத்தியம் பற்றிய உறுதியை தரக்கூடியவை என்று அதற்கான காரணத்தை சொல்கிறான்.

 وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ             

 அதனால் இத்தகைய செய்திகளை நீங்கள் கவனிக்க வேண்டாமா என்று  வலியுறுத்துகிற வகையில் கேள்வி கேட்கிறான்.

 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ

 அத்தைகைய வரலாற்று அடையாளங்களை நிலை நிறுத்த வேண்டியது அவசியம் என்பதையும்  அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

 நூஹ் நபியின் கப்பல் காப்பாற்றப்பட்ட நிகழ்வை பேசுகிற போது  

அந்த கப்பலை நீங்கள் நினைவுச்சின்னமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த செய்தியை மனன சக்திமிக்க காதுகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்.

 لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ

தப்ஸீர் குர்துபியில் இந்த விளக்கம் கிடைக்கிறது.

 அல்லாஹ் ஜூதி மலையில் நூஹ் அலை அவர்களின் கப்பலின் உடைந்த பாகங்கங்களை பல வருடங்கள் காத்து வைத்தான் என்று இப்னு ஜுரைஜ் ரஹி கூறுகிறார்கள்.

 قال ابن جريج : كانت ألواحها على الجودي . والمعنى : أبقيت لكم تلك الخشبات حتى تذكروا ما حل بقوم نوح ، وإنجاء الله آباءكم 

 பழைய வரலாற்றுச் செய்திகளை வாழையடி வாழையாக பாதுகாக்க வைக்க வேண்டியது மனித வாழ்வின் ஒரு அம்சம் என்றும் அது நபி மார்களின் சுன்னத் என்றும் அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

 கிழ்ரு அலை அவர்களை தேடிச் சென்ற வரலாற்றில் தமது மீன் கூடையை தவற விட்ட மூஸா அலை அவர்களும் அவர்களது பணியாளராக இருந்த யூசஃ பின் நூன் அலை அவர்களும் பண்டைய வரலாறுகளை பேசியபடி திரும்பினர் என்று திருக்குர் ஆன் கூறுகிறது.

 فَٱرۡتَدَّا عَلَىٰۤ ءَاثَارِهِمَا قَصَصا

 இந்த வரலாறுகளில் கற்பனை கலந்து விடாதபடி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அல்லாஹ் வலியுறுத்தினான்.

 لَا يَأْتِيهِ ‌الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ) {سورة فصلت- 42}

 ஒரு காலகட்டத்தில் யூதர்கள் தலைமையின்றி தவித்தனர். அவர்களுக்கு தாலூத் என்பவரை அல்லாஹ் தலைவராக கொடுத்தான். அவரது தலைமையை நிரூபிக்கும் அடையாளமாக யூத சமுதயாத்தின் வரலாற்றுப் பெருமையை நிலை நாட்டும் வகையில் அவர்களிடமிருந்து காணாமல் போன பாதுகாக்கப் பட்ட அவர்களது முன்னோர்களின் பெட்டி அவர்களிடம் திரும்பி தரப்படும் என்றும்  அல்லாஹ் கூறினான். அந்தப் பெட்டியில் வரலாற்றுப் பெருமை மிகு பழமையான பொருட்கள் இருந்தன என்றும் அல்லாஹ் கூறினான்.

  وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين.

 அந்தப் பெட்டியில் மூஸா அலை அவர்களது கைத்தடியும் செருப்பும், தவ்ராத் வேதப்பட்ட எழுதப்பட்ட பலகையின் துண்டுகளும் இருந்தனர் என்கின்றனர் திருக்குர் ஆனிய விரிவுரையாளர்கள்

 இந்த வசன்ங்களும் இது போல இன்னும் பல வசன்ஙகளும் உலக மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுதுகிற செய்தி என்ன வெனில்?

 பண்டைய வரலாறுகள் அதன் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தகைய வரலாற்றுச் செய்திகள் வழிவழியாக பேசப்பட வேண்டும். அதில் மனித சமூகத்திற்கு படிப்பினைகளும் நிம்மதியும் கவுரமும் இருக்கிறது என்பதாகும்.

 அரபு நாட்டில் 20 ம் நூற்றாண்டின் சவூத் குடும்பத்தின் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு மக்கா மதீனா உள்ளிட்ட இஸ்லாமிய வரலாறு நிலை நின்று கொண்டிருந்த பல வரலாற்று நினைவிடங்களையும் தகர்த்தெரிந்தார்கள். அவற்றை மறைத்து வைத்தார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்றார்கள். 

மக்காவும் மதீனாவும் வரலாற்றில் மிக கவனமாக பாதுகாக்கப்பட பகுதிகள் = கால காலமாக.

அங்கு ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் இஸ்லாமிய எழுத்தாளர்களும் வரலாற்றாளர்களும் குறித்து வைக்க தவறியதில்லை.

 அப்படிப்பட்ட அந்த நிலத்தில் தற்போதைய அரசர்களின் புகைப்படங்களை தவிர மற்ற அனைத்தையும் மறைத்து வைத்தார்கள்.

 மதீனாவில் மஸ்ஜிதுன்னபவிக்கு சற்று வடக்காக சகீப் பனீசாயிதா என்ற ஒரு தோட்டம் இருந்தது. அங்கு வைத்துத்தான் பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் அன்சாரிகள் ஒன்று கூடி தங்களுக்குள் ஒருவரை அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க இருந்தார்கள். அதை அறிந்த உமர் ரலி அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களையும் அபூ உபைதா ரலி அவர்களையும் விரைவாக அழைத்துக் கொண்டு வந்தார்கள். அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அன்சாரிகளிடம் பேசினார்கள். முஹம்மது நபி ஸல்) அவர்கள் குறைஷிகள் தான் தலவர்களாக இருக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 قريشٌ ولاةُ الناسِ في الخيرِ والشرِّ إلى يومِ القيامةِ- الراويعمرو بن العاص

   பொதுவான அரபுகள் குறைஷிகளுக்குத்தான் கட்டுப்படுவார்கள். ஆகவே இதோ உமர் இருக்கிறார். அல்லது அபூ உபைதா இருக்கிறார் இவர்களில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக் கொண்ட போது, உடனே உமர் ரலி அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களின் கையை பிடித்து நீங்கள் தான் அடுத்த தலைவர் என்று பை அத் செய்தார்கள். அன்சாரின் ஒரு வரான் பஷீர் ரலி அவர்கள்அன்சாரிகளே இதுவரை நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவியாளர்களாக இருந்தீர்கள். இனி அல்லாஹ்வின் தூதருடைய கலீபாக்களுக்கு அன்சாரிகளாக இருங்கள் என்று கூறினார். சற்று நேரத்தில் அனைவரும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு பைஅத் செய்து கொடுத்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சி மாற்றம் என்பது சிக்கல் ஏதும் இன்றி சிறப்பாக நடை பெற்றது என்பதற்கு சாட்சியாக இருந்த அந்த சகீப் பனீ சாயிதா தோட்டத்தை பன்னெடுங்க காலமாக முஸ்லிம்கள் பாதுகாத்து வந்தனர். சவூதுகள் அதை மறைத்து வைத்திருந்தனர்.

 நீண்ட காலமாக அதை பார்ப்பதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. மறைத்து வைக்கப்பட்டிருந்த விவரம் தெரிந்தோர் அந்த இடத்தை இடுக்குகள் வழியாக பார்த்து வந்தனர்.

 இதே போல ஏராளமான இடங்கள் பெருமானார் (ஸல்) அவர்களுடையவும் இஸ்லாமினுடையவும் வரலாற்றின் பெரும் புதையல்களாக அங்கே இருந்தன.

 அவற்றை ஷிர்க் செய்து விடுவார்க என்று தாங்களாக உருவாக்கிக் கொண்ட பிடிவாத கோட்பாட்டினால் சவூதுகள் மறைத்து வைத்தனர். ஏரளமானவற்றை அழித்து விட்டனர். மக்காவில் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த வீட்டை “ இதெற்கெல்லாம் ஆதரம் இல்லை என்று  

கூறி அங்கு வருவோரை விரட்டி வந்தனர்.

 மாஷா அல்லாஹ்

 சமீபத்திய சில ஆண்டுகளாக டூரிஸம் மூலம் வருமானம் பார்க்க ஆசைப்படுகிற சவூதி அரேபியா அரசு பழைய வரலாற்று சின்ன்ங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதுப்பித்து அந்த இடங்களைப் பற்றிய செய்திகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

 சில வருடங்களுக்கு முன்பு வரை ஹிரா குகை இருக்கிற ஜபலுன்னூர் மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டு இங்கு ஏன் வருகிறீர்கள்? இது பித்அத் என்று கூறி வரிசையாக ஆட்களை நிறுத்தி வைத்து பிரச்சாரம் செய்து வந்தவர்கள் இப்போது ஹிரா பிராந்தியத்தை பெரும் சுற்றுலாத்தலமாக மாற்றி வைத்துள்ளனர். மேலே குகைகுச் செல்வதற்கு விஞ்ச் மற்றும் கார்கள் செல்ல சாலை வசதி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.

 அதே போல் இந்த ஆண்டு குபா பள்ளிவாசலுக்கு வெளியே ஒரு போர்டு வைத்திருந்தனர். அந்த போர்டை பார்த்தும் மனம் புளகாங்கிதம் அடைந்தது.     

. இந்த வீடு நபித்தோழர் குல்சூம் பின் ஹதம் அவர்களுக்கு சொந்தமானது. இது நபித்தோழர் சஃது பின் ஹைதமா ரலி அவர்களின் வீட்டிற்கு அருகே இருக்கிறது. இங்குதான் ஹிஜ்ரீ பயணத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். பெருமானாருடன் அபூபக்கர் சித்தீக் ரலி , அலீ பின் அபீதாலிப் ரலி மிக்தாத் பின் அம்ரு, கப்பாப் பின் அரித் ,அபூ ஸஈத் பின் ஜர்ராஹ், சஃது பின் கவ்லா போன்ற பல நபித்தோழர்கள் தங்கியிருந்தனர்என்றும் தகவல்கள் அந்த போர்டில் இருந்தன .

 

ஆஹா ! சவூதி அரசுக்கு என்னவாயிற்கு என்று மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளியது. 

வரலாறு தெரிந்த எவரும் இந்த மகத்தான பெயர்களை வாசிக்கையிலேயே சிலிர்ப்படைந்து நிற்பார்கள்.

 சஃது பின் ஹைதமா இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு வடிவம் கொடுத்த முதல் சிற்பி ஆவார்,. மதீனாவில் தலைமுறை தலைமுறையாக பகை பாராட்டிக் கொண்டிருந்த அவரிடம் அவருடைய பங்காளி பகையாளியான அஸ் அது பின் ஜராரா ரலி அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்குமாறு நபி (ஸல்) அர்கள் கூறிய போது அவர் அடைக்கலம் கொடுத்தார். கடும் பகையாளிகள் நெருக்கமான உறவுகளாக மாறினார்கள்.  

 , கப்பாப் பின் அரித் (ரலி) மக்காவில் மிகப் பெரும் அநீதிகளுக்கு ஆளானவர், எதிரிகள் அடித்ததில் ஒரு முறை அவரது முகுகு பிளந்து விட்டது. கஃபாவில் ஹதீமில் படுத்திருந்த பெருமானாரிடம் அவர் வேதனையோடு வந்து கேட்டார் . எது வரை பொறுத்திருப்பது ? அந்த தோழருக்கு பெருமானார ஆறுதல் சொன்ன விதம் அலாதியானது. பெருமானார் (ஸல்) கூறினார்கள், இது கொஞ்சம் தான். நீங்கள் ஒரு குழிக்குள் தள்ளப்பட்டு உங்களது தலையை அரம் கொண்டு இரண்டாக பிளக்கிற சூழ்நிலை கூட வரும், நாடு நகரங்கும் அமைதி தவழும் ஒரு காலம் வரும் அதுவ்ரை பொறுத்திருங்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்களால் ஆறுதல் சொல்லப்பட்டவர். கப்பாப் (ரலி) அவர்கள் அந்த ஆறுதலை குல்சூம் (ரலி) யின் இல்லத்தில் முதலவதக சுவாசிக்க தொடங்கியிருப்பார்.

  இப்படி அங்கு பதியப்பட்டிருந்த ஒவ்வொரு பெயரும் வரலாற்றை கிளறிக் கிளறி மணம் பரப்புகின்றவை .

 இதே போல கர்ஸ் கிணற்றையும் இப்போது சிறப்பாக பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அது பற்றிய தகவல்களோடு.

 கர்ஸ் கிணறு மதீனாவில் குபாவில் இருந்து அரை மைல் தொலைவில் இருக்கிறது. அந்த கிண்று சஃது பின் ஹைசமா ரலி அவர்களுக்குச் சொந்தமானது. மிக இனிப்பான தண்ணீர் கொண்டது. (நபி) ஸல் அவர்கள் அந்தக் கிணற்றின் தண்ணீரை விரும்பி அருந்துவார்கள். அந்த கிணற்றின் தண்ணீரில் ஒளு செய்தார்கள். அதில் மிச்சமான தண்ணீரை அந்த கிணற்றிலேயே ஊற்றினார்கள். அந்த கிணற்றின் வளத்திற்காக துஆ செய்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் மரணிக்கும் தறுவாயில் அலி ரலி அவர்களிடம் அலீயே ! நா கர்ஸ் கிணற்றில் இருந்து ஏழு சட்டி தண்ணீர் கொண்டு வந்து என்னை குளிப்பாட்டவும் என்று கூறினார்கள். அதன்படி இந்தக் கிணற்றின் தண்ணீரை கொண்டு தான் பெருமானார் (ஸல்) அவர்கள் குளிப்பாட்டப் பட்டார்கள்.

  وتعد بئر غرس من الآبار التي توضأ منها الرسول وأهرق بقية وضوئه فيها، كما كان الرسول يشرب من هذه البئر ويستعذب له منها، وأوصى أن يغسل من مائها، فقد روى ابن ماجه عن علي بن أبي طالب قال: قال رسول الله: يا علي إذا أنا مت فاغسلوني بسبع قرب، من بئري بئر غرس

 இந்த வரலாற்றை வாசித்து அந்த கிணற்றை பார்வையிடுகிற ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் எந்த அளவு புளகாங்கிதம் அடையும் என்பதை சொல்ல வேண்டுமா ?

 இதே போல மக்காவில் ஜிஃரானா பள்ளிவளாகத்தில் இது பெருமானார் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய இஹ்ராம் கட்டிய இடம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்

 ஜின் பள்ளிவாசலுக்கு முன்புறம் இது ஜின் அத்தியாம் இறங்கிய இடம் என்று போர்டு வைத்திருக்கிறார்கள்.

 வஹாபிஸத்தின் கொடுங்கரத்தில் சிக்கி சீரழிந்த அந்தச் செய்திகள் இப்போது டூரீஸத்தின் பேராசையில் புத்துயிர் பெருகின்றன.

 வஹாபிஸம் எப்படி ஒரு போலித்தனமான வாழ்வு முறை என்பதை இத்தகை புதிய போர்டுகள் எடுத்துக் காட்டுகின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த வரலாற்றுப் பெருமைகள் இப்போதாதாவது மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததே என்பதில் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறது.

 இன்னும் மீதமுள்ள வரலாற்றுச் சின்னங்களையும் சவூதி அரசு சீர்படுத்தி மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று மக்கள் உளமாற துஆ செய்கிறார்கள்.  

 இதில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது

 நமது பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தர்காக்கள், அனைத்தின் வரலாறுகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

 அது பிற்கால சமுதாயத்திற்கு ஒரு பெரும் செல்வமாக அமையும். தற்காலத்தில் அதுவே ஒரு பாதுகாப்பாகவும் ஆகிவிடும்.

 நம்முடையை பள்ளிவாசல்களிலும்  தர்காக்களின் வாசலில் ஏராளமான போர்டுகள் இருக்கின்றன. அவை என்னென்னவோ சொல்கின்றன. ஆனால் அந்தப் பள்ளிவாசல் அல்லது தர்காவின் வரலாற்றை சுருக்கமாக ஆதரப்பூர்வமாக சொல்கிற எந்த தகவல் பலகையும் இருப்பதில்லை.

 சமீபத்தில் ராமேஸ்வரத்திற்கு அருகே வேதனையில் ஒரு அடக்கவிடத்திற்கு சென்றேன். அங்கு எந்த் தகவலும் இல்லை. விசாரித்த போது அவர் வள்ளல் சீதக்காதியின் சகோதரர் என்றும் கிழவன் சேதுபதி டச்சுக்காரர்களை எதிர்க்க அவரை அனுப்பிவைத்தார் என்றும் அந்த சண்டையில் அவர் ஷஹீதாக்கப்பட்டார் என்றும் சொன்னார்கள்.

 நாகூருக்கு பக்கத்தில்  ஒரு பள்ளிவாசலுக்கு சென்ற போது அந்த ஊரில் ஊரில் பொதுமக்களே ஒன்று சேர்ந்து கல் மண் சுமந்து அந்த பள்ளிவாசலை கட்டியதாக வரலாறு சொன்னார்கள்.

 இத்தகைய வரலாறுகள் எதிர்கால தலைமுறை அறியாமல் போவது எவ்வளவு பெரிய நஷ்டம் ?

 எனவே நாம் நமது வரலாற்றை பாதுகாக்கவும் அவற்றை பொதுவில் தெரிவிக்கவும் தேவையான அக்கறை செலுத்தவேண்டும்.

 இது குர் ஆனிய வழிகாட்டுதலாகும்.

 எல்லாம் வல்ல இறைவன் தவ்பீக் செய்வானாக!

   

5 comments:

  1. Anonymous6:14 PM

    Masha allah baarakallah

    ReplyDelete
  2. و قل جاء الحق وزهق الباطل.....

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  5. Anonymous10:09 PM

    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete