வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 25, 2024

இறுதி மரியாதையை கற்றுக் கொடுத்தவருக்கா இந்த அவமரியாதை ?

 சமீபத்தில் இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேவலமாக எழுதி இவரை எல்லாம் பின்பற்ற முடியுமா என்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறு எழுதியவர் ஒரு போதை ஆசாமி என்பதும் அவருடைய ஊருக்குள் மரியாதை ஏதுமற்றவர் என்பதும் தெரியவ்ந்துள்ளது. அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நமக்கேறபடுகிற வியப்பு என்ன வெனில் ?

இவரும் இவரைப் போன்ற  இந்துத்துவ போதர்கள் பலரும் இந்த அளவுக்கா பைத்தியங்களாகவும் முட்டாள்காளாக இருப்பார்கள்?  

இந்த உலகில் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல பல கோடி மக்களால் அதுவும் ஆயிரமாண்டுகளாக பின்பற்றுகிடுகிற தலைவர் யாரும் உண்டா?

அமெரிக்காவைச் சார்ந்த அறிஞர் மைக்கேல் ஹார்ட் இந்த உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இது வரை வாழ்ந்த மனிதர்களில் முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் தான் அதிக செல்வாக்குச் செலுத்திய மனிதர் என்று ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்.

பின்பற்றுதலுக்கு தகுதியான மனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அளவுக்கு இந்த உலகில் வேறு யார் இருக்கிறார் என்று மனித சமுகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொரோனோ காலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்த மனிதர்களை அடக்கம் செய்ய அவருடைய உறவினர்களே கூட முன் வரவில்லை.

பிணங்களை ஆற்றோரங்களிலும் நடுத்தெருக்களிலும் வீசி விட்டுச் சென்றார்கள்.

நமது நாட்டுக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட சோதனைகளில் மிகப் பெரும் சோதனை அது.

அத்தகை சூழ்நிலையில் இறந்து போனவர்களை அடக்கம் செய்வதில் நாடுமுழுக்க முன்னின்று காரியமாற்றியவர்கள் முஸ்லிம்கள்.

எந்த முஹம்மதை பின்பற்ற முடியுமா என்று இந்ததுத்துவா சக்திகள் கேள்வி கேட்கின்றார்களோ அந்த முஹம்மதை (ஸல்) பின்பற்றித்தான் இன்றைய முஸ்லிம்கள் இந்த மகத்தான பணியில் சளைக்காமல் இறங்கினார்கள்.

மதீனாவின் தொடக்க காலத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டாலே அவரது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.  தல்கீக் சொல்லிக் கொடுப்பார்கள்

ن أبي سعيد الخدري رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم قال :[ لقنوا موتاكم : لا إله إلا الله

 அவ்வாறு ஒரு மனிதரின் இறுதி நிமிட்த்தை இறைச்சிந்தனையுடையதாக ஆக்கும் முயற்சியில் கூட அவரை துன்புறுத்தக் கூடாது லாயிலாக இல்ல்ல்லாஹ் சொல்லுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் சட்டம் வகுத்தது.

 قال العلماء : وينبغي ألا يلح عليه في ذلك . ولا يقول له : قل لا إله إلا الله خشية أن يضجر ، فيتكلم بكلام غير لائق ؛ ولكن يقولها بحيث يُسمعه مُعرضاً له ، ليفطن له فيقولها 

 மரண வேளையின் சிரம்த்தை குறைக்க யாசீன் ஓத வழிகாட்டினார்கள்.

 أبي ذر رضي الله عنهما قالا : قال رسول الله صلى الله عليه وسلم : [ ما من ميت يموت فتقرأ عنده يس إلا هوّن الله عليه

 சகராத் நிலையில் இருப்பவருக்கு அருகிலேயே இருக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர் இறந்து விட்டால் அவரது கண்களை மூடிவிடுவார்கள்.

ما رواه مسلم : أن النبي صلى الله عليه وسلم دخل على أبي سلمة رضي الله عنهما ، وقد شق بصره فأغمضه ثم قال : [ إن الروح إذا قبض تبعه القصر 

 இறப்பின் போது வெளிப்படுகிற அடையாளங்களை பாராட்டுவார்கள்

நெற்றி வியர்க்க மரணிப்பவர் முஃமின் என்றார்கள்.

 عن بريدة بن الحصيب رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : [ موت المؤمن بعرق الجبين ] [ أخرجه أحمد والنسائي والترمذي

 இறந்தவரை கூடியவரை சீக்கிரமாக சடலம் சீர்கெடுவதற்குள் அடக்கம் செய்ய அறிவுறுத்துவார்கள்.  

 ن علي رضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم قال له ، [ يا علي : ثلاث لا تؤخرها : الصلاة إذا أتت ، والجنازة إذا حضرت ، والأيم إذا وجدت كفئاً ] .

 இறந்தவரின் வீட்டுக்காரர்களுக்கு உணவுகள் கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்வார்கள்

.இறந்தவரை அடக்கம் செய்த பிறகு அவருக்காக துஆ செய்த பிறகே பெருமானார் தனது வீட்டிற்கு செல்வார்கள்.

  عُثْمَانَ بن عَفَّانَ t قَالَ: كانَ النَّبيُّ ﷺ إِذَا فرَغَ مِن دَفْنِ المَيِّتِ وقَفَ علَيهِ وقالاستَغْفِرُوا لأَخِيكُم، وسَلُوا لَهُ التَّثبيتَ، فإنَّهُ الآنَ يُسأَلُ رواه أَبُو داو

 நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சிரத்தை எடுத்துக் கொள்வதை கண்டு தான் பிறகு யாருடைய கடைசி நிலையை பற்றி பெருமானாருக்கு தெரிவிகாமல் சஹாபாக்கள் தவிர்த்தார்கள்.

 மஸ்ஜிதுன் னபவீ பள்ளியை கூட்டிப் பெருக்கும் ஒரு பெண்மணியின் மரணத்தை பற்றிய செய்தியை அந்த வகையில் தான் சஹாபாக்கள் பெருமானாருக்க்  தெரிவிக்க வில்லை.

 பெருமானாருக்கு சொல்லாமல்  சஹாபாக்களே சிலரை அடக்கம் செய்தார்கள். அவ்வாறு செய்கிற போது ஏன் என்னிடம் சொல்லாமல் செய்தீர்கள் என்று பெருமானார் கேட்டார்கள். அதன் பிறகு யாராவது இறப்பின் நிலையில் இருந்தால்

 قال ابن الأثير: " مِحْجَنَةُ امرأة سوداء، كانت تَقُمُّ المسجد، فتوفِّيَت على عهد رسول الله صلى الله عليه وسلم".

 عن أبي هريرة رضي الله عنه: (أن امرأة سوداء كانت تقم (تنظف) المسجد ـ أو شاباً ـ ففقدها رسول الله صلى الله عليه وسلم، فسأل عنها ـ أو عنه ـ فقالوا: مات (ماتت) قالأفلا كنتم آذنتموني (أعلمتموني)، قال: فكأنهم صَغَّروا أمرَها (أو أمرَه)، فقالدُلُّوني على قبرها، فدَلُّوه، فصلى عليها، ثم قالإن هذه القبور مملوءة ظلمة على أهلها، وإن الله تعالى يُنوِّرُها لهم بصلاتي عليهم) راه مسلم.

 ஒரு நபித்தோழர் நான் இறந்தால் எனது மரணச் செய்தியை பெருமானாருக்கு சொல்லி சிரமப்படுத்த வேண்டாம் என்று வஸிய்யத் செய்து விட்டார் என்றும் ஒரு செய்தி வரலாற்றில் உண்டு.

 இஸ்லாமின் தொடக்க காலத்தில் இறந்தவருக்கான இறுதித் தொழுகைகள் அவருடைய வீட்டிலேயே நடை பெற்றன,

 பெருமானாரின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் பிற்காலத்த்தில் சஹாபாக்கள். ஒருவர் இறந்து போய்விட்டால், அவரை கபனிட்டு கொண்டு வந்து பெருமானாரின் வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணச் செய்தி அறிந்து வெளியே வந்து அவருக்காக தொழுகை நடத்துவார்கள்.  

 இந்த ஏற்பாடு தான் ஜனாஸாக்களை பள்ளி வாசலுக்கு கொண்டு வரும் நடை முறையை தொடக்கி வைத்தது.

 இறப்பை சந்தித்த வீட்டுக்கார்ருக்கு அற்புதமாக ஆறுதல் சொல்வார்கள் .

وَعَنْ أَبي هَرَيرَةَ t أَنَّ رَسُولَ اللَّه ﷺ قالَيَقولُ اللَّهُ تَعَالَى: مَا لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبهُ إِلاَّ الجَنَّة رواه البخاري

 தனது மகளுக்கு பெருமானார் (ஸல்) சொன்ன ஆறுதல்

 ما جاء في الصحيحين وغيرهما أن رسول الله صلى الله عليه وسلم قاله لبنته عند وفاة ابنهاإن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى، فلتصبر ولتحتسب

ஒரு ஜனாஸாவிற்கு செய்யும் இறுதிக் கடமைகளுக்கு இப்படி உற்சாகப்படுத்திய தலைவர் இந்த உலகில் வேறெவரும் இல்லை.

 وعن أبي رافع قال: قال رسول الله صلى الله عليه وسلممن غسل ميتا فكتم عليه غفر له أربعون مرة، ومن كفن ميتا كساه الله من سندس وإستبرق الجنة، ومن حفر لميت قبرا وأجنه فيه أجري له من الأجر كأجر مسكن إلى يوم القيامة

ஒரு மய்யித்தை குளிப்பாட்டி, அப்படி குளிப்பாட்டும் தோறு தெரியவரும் செய்திகளை பிறரிடம் சொல்லாமல் தவிர்த்தால் நாற்பது பாவங்கள் அல்ல; பாவங்கள் அனைத்தும் நாற்பது தடவை மன்னிக்கப்படும்.

ஒருவருக்காக குழி வெட்டி அதில் அவரை மறைப்புச் செய்தால் இறந்தவருக்காக நிரந்தர வீடு கட்டிக் கொடுத்த நன்மை கிடைக்கும்.

யார் குளிப்பாட்டலாம் என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

எனக்கு முன்னால் நீ மரணித்தால் உன்னை நான் குளிப்பாட்டுவேன் என்று பெருமானார் ஆயிஷா ரலி அவர்களுக்கு வாக்கு கொடுத்தார்கள்

وعن عائشةَ رضي الله عنها: أنَّ النبيَّ ﷺ قال لهالو متِّ قبلي لغَسَّلْتُكِ .. رواه أحمد, وابن ماجه, وصحَّحه ابن حبَّان.

இதனடிப்படையில் தன்னை குளிப்பாட்ட அலி ரலி க்கு வஸிய்யத் செய்தார் அன்னை பாத்திமார் ரலி

 وعن أسماء بنت عميسٍ رضي الله عنها: أنَّ فاطمة رضي الله عنها أوصت أن يُغَسِّلها عليٌّ رضي الله تعالى عنه. رواه الدارقطني

 அபூபக்க ரலி அவர்களை அஸ்மா பின் உமைஸ் ரலி என்கிற அம்மையார் குளிப்பாட்டினார்கள். அவரின் வஸிய்யத்தின் படி.

 மரணத்தில் ஆடம்பரம் கூடாது என  உத்தரவிட்ட தலைவர் பெருமானார் (ஸல்)

அதிக விலைக்கு கஃபனாடை வாங்க வேண்டாம். அது வீண்

 وعن عليٍّ t قال: سمعتُ النبيَّ ﷺ يقوللا تُغالوا في الكَفَنِ, فإنَّه يُسْلَبُ سريعًا. رواه أبو داود.

 அது இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் நடைமுறையில் இருக்கிறது . எவ்வளவு பெரிய பண்க்காரனின் நல்லடக்கத்திற்கும் அதிக செலவு செய்யப்படுவதில்லை. முஸ்லிம் சமூகத்தில்

இஸ்லாமிய வரலாற்றில் நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்வு.

ஹம்ஸா ரலி அவர்கள் உஹது களத்தில் கொல்லப்பட்ட போது அவர்களை கபனிட போதிய துணி இருக்க வில்லை. சுபைர் ரலி அவர்களின் தாயார் இரண்டு துணிகளை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை கொண்டு சென்ற சஹாபாக்கள் ஹம்ஸா ரலி க்கு அருகிலேயே மற்றொரு அன்சாரி சஹாபி கபனுக்கு துணியின்றி ஷஹீதாகி இருப்பதை கண்டார்கள். இருக்கிற இரண்டில் இருவரை கபனிட்டார்கள்.

وروى الإمام أحمد في مسنده من حديث الزبير بن العوام قال: «لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ أَقْبَلَتِ امْرَأَةٌ تَسْعَى، حَتَّى إِذَا كَادَتْ أَنْتُشْرِفَ عَلَى الْقَتْلَى، قَالَ: فَكَرِهَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَرَاهُمْ، فَقَالَ: «الْمَرْأَةَ الْمَرْأَةَ»، قَالَ الزُّبَيْرُ: فَتَوَسَّمْتُ أَنَّهَا أُمِّي صَفِيَّةُ، قَالَ: فَخَرَجْتُ أَسْعَى إِلَيْهَا، فَأَدْرَكْتُهَا قَبْلَ أَنْ تَنْتَهِيَ إِلَى الْقَتْلَى، قَالَ: فَلَدَمَتْ فِي صَدْرِي، وَكَانَتِ امْرَأَةً جَلْدَةً، قَالَتْ: إِلَيْكَ لَا أَرْضَ لَكَ، قَالَ: فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَزَمَ عَلَيْكِ، قَالَ: فَوَقَفَتْ وَأَخْرَجَتْ ثَوْبَيْنِ مَعَهَا، فَقَالَتْ: هَذَانِ ثَوْبَانِ جِئْتُ بِهِمَا لِأَخِي حَمْزَةَ، فَقَدْ بَلَغَنِي مَقْتَلُهُ فَكَفِّنُوهُ فِيهِمَا، قَالَ: فَجِئْنَا بِالثَّوْبَيْنِ لِنُكَفِّنَ فِيهِمَا حَمْزَةَ، فَإِذَا إِلَى جَنْبِهِ رَجُلٌ مِنَ الأَنْصَارِ قَتِيلٌ، قَدْ فُعِلَ بِهِ كَمَا فُعِلَ بِحَمْزَةَ، قَالَ: فَوَجَدْنَا غَضَاضَةً وَحَيَاءً أَنْ نُكَفِّنَ حَمْزَةَ فِي ثَوْبَيْنِ، وَالأَنْصَارِيُّ لَا كَفَنَ لَهُ، فَقُلْنَا: لِحَمْزَةَ ثَوْبٌ، وَللِْأَنْصَارِيِّ ثَوْبٌ

 இறுதி தொழுகைக்கு உஹது மலையளவு நன்மை. ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றால் இரண்டு மலையளவு நன்மை.  

 فعن أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وآله وسلم قال: «مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيُفْرَغَ مِنْ دَفْنِهَا، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ؛ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ؛ فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ» أخرجه الشيخان.

முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் இப்படி பண்படுத்திய சமூகம் தான் இன்று உலகிலேயே மரணங்களை நல்லடக்கம் செய்வதில்

அச்சப்படாது,

அறுவெறுக்காது,

அலட்சியம் காட்டாது. பாடுபடுகிறது.

இவரையா பின்பற்றுவது என்று கேட்பவர்கள் யோசிக்க வேண்டும். இவரை விட வேறு யாரை பின்பற்றுவது.

நபி (ஸல்) அவர்கள் ஐந்து பேருடைய கப்ரில் இறங்கி அவர்களை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

1.   1) மக்காவில் கதீஜா ரலி அவர்களுடைய கப்ரில் இறங்கி பெருமானார் அவரை அடக்கம் செய்தார்கள்.

2

2.   عبد الله المزني ذو البجادين இரண்டு போர்வைக்கார் என்று பெருமானார் அழைக்கப்பட்ட சஹாபி. அவர் ஒரு எதீம் .அவருடைய உறவுக்கார பெண்மணியான ஒரு செல்வச் சீமாட்டியிடம் வளர்ந்து வந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட போது அவரிடமிருந்த அனைத்தையும் பிடுங்கிக் கொண்ட அவருடைய குடும்பத்தினர். ஒரு முரட்டு ஆடையை மட்டும் அவருக்கு கொடுத்து துரத்தி விட்டனார். அதுவே பிஜாத். அந்த முரட்டு ஆடையை இரண்டாக கிழித்து வேட்டியாகவும் மேல் துண்டாகவும் அணிந்து கொண்டு பெருமானாரிடம் வந்து சேர்ந்தார். தன்னுடைய பெயரை அப்து உஸ்ஸா என்று கூறினார். நீ அப்துல் உஸ்ஸா அல்ல. அப்துல்லா துல் பிஜாதைன் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தபூக் யுத்தத்தின் போது அவர் வபாத்தானார். அவருடைய கபருக்குள் பெருமானார் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள் . அபூபக்கர் உமர் ரலி ஆகியோர் துணையாக இருந்தனர். பெருமானார் (ஸல்) அவர்கள் மேலே ஏறிய பிறகு அவ்விருவரும் அடக்கம் செய்யும் பணியை முடித்தனர்.

இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி கூறினார். நான் அந்த பிரேதமாக இருந்திருக்க கூடாதா என நான் ஆசைப்பட்டேன்.

 3.   இபுறாகீம் ரலி

தன்னுடைய 60 வயதில் பிறந்த தனது மகனார் இபுறாகீம் ரலி அவர்களை அடக்கம் செய்யவும் பெருமானார் (ஸல்) அவர்கள் அவருடைய கப்ரில் இறங்கினார்கள்.

 4.   உம்மு ரூமான் (ரலி) அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் மனைவி, ஆயிஷா அம்மாவின் தாயார். பெருமானார் (ஸல்) அவர்களை ஆரம்பத்தில் ஈமான் கொண்ட தோடு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களும் ஆயிஷா ரலி அவர்களும் பெருமானாருக்கு உதவியாளரக இருக்க எல்லா வகையிலும் தயார் படுத்தினார். ஹிஜ்ரீ 6 ம் வருடம் அவர் இறந்த போது ஜன்னத்துல் பகீஃ கபருஸ்தானில் அவருடைய கப்ரில் இறங்கி பெருமானார் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்தார்கள். பிறகு அவருக்காக இப்படி துஆ செய்தார்கள் .

وقالاللهم إنه لم يخفَ عليك ما لَقيت أم رومان فيك وفي رسولك

இறைவா உம்மு ரூமான் உனக்காகவும் உனது தூதருக்காகவும் சந்தித்தவை உனக்கு தெரியாத்து அல்ல.

 5.   பாத்திமா பின்து அஸத் ரலி

இவர் பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிபின் மனைவி. பெருமானாரின் 8 வயதிலிருந்து பெருமானாரை வளர்த்தவர். தன்னுடைய பிள்ளைகளை விட பெருமானார் மீது அதிக கரிசனம் காட்டியவர். .

நபி (ஸல்) அவர்கள்ள கதீஜா அம்மாவிற்கு அடுத்த படியாக இரண்டாவதாக ஏற்றுக் கொண்ட பெண்மணி

11 ஆளாக இஸ்லாமில் இணைந்தவர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு உத்தரவிட்ட போது காலநடையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த முதல் பெண்மணி.

ஹிஜ்ரீ 4 ம் ஆண்டில் அவர் இறந்த போது பெருமானர் (ஸல்) அவர்கள் மிகவும் கவலையுற்றார்க: ஹதீஸ்களில் வருகிறது. பெருமானாரின் சோகத்தை கண்டு சஹாபக்கள் ஏதோ அவர்களது தலைகளின் மீது பறவை உட்கார்ந்திருப்பது போல மவுனமாக இருந்தார்கள். பெருமானார் (ஸல்) தனது சட்டையை கழற்றிக் கொடுத்து இதை கபனுடன் வைத்து விடுங்கள் என்றார்கள்.

அவருக்காக கப்ரை தோண்டும் பணியில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஈடுபட்டார்கள். கப்ரில் இறங்கினார்கள். அங்கு கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டார்கள். தனது இந்தச் செயல்களால் அந்த அம்மையாருக்கு கப்ரின் வாழ்க்கை சிரம்மற்றதாக ஆகும் என்றார்கள்.

وروى ابن شبة عن جابر بن عبد الله قال: بينا نحن جلوس مع رسول الله صلى الله عليه وسلم إذ أتاه آت فقال: يا رسول الله، إن أم علي وجعفر وعقيل قد ماتت، فقال رسول الله صلى الله عليه وسلم: قوموا إلى أمي، فقمنا وكأن على رؤوس من معه الطير، فلما انتهينا إلى الباب نزع قميصه فقال:

إذا غسلتموها فأشعروها إياه تحت أكفانها، فلما خرجوا بها جعل رسول الله صلى الله عليه وسلم مرة يحمل، ومرة يتقدم، ومرة يتأخر، حتى انتهينا إلى القبر فتمعك في اللحد ثم خرج فقال: ادخلوها باسم الله وعلى اسم الله، فلما أن دفنوها قام قائما فقال: جزاك الله من أم وربيبة خيرا، فنعم الأم ونعم الربيبة كنت لي، قال: فقلنا له أو قيل له: يا رسول الله لقد صنعت شيئين ما رأيناك صنعت مثلهما قط، قال: ما هو؟ قلنا: نزعك قميصك وتمعكك في اللحد، قال: أما قميصي فأريد أن لا تمسها النار أبدا إن شاء الله تعالى، وأما تمعكي في اللحد فأردت أن يوسع الله عليها في قبرها.

 وروى ابن عبد البر عن ابن عباس قال: لما ماتت فاطمة أم علي بن أبي طالب ألبسها رسول الله صلى الله عليه وسلم قميصه، واضطجع معها في قبرها، فقالوا: ما رأيناك صنعت ما صنعت بهذه فقال: إنه لم يكن أحد بعد أبي طالب أبر لي منها، إنما ألبستها قميصي لتكسى من حلل الجنة، واضطجعت معها ليهون عليها.

 عن أنس بن مالك قال: لما ماتت فاطمة بنت أسد دخل عليها رسول الله صلى الله عليه وسلم، فجلس عند رأسها، فقال: رحمك الله يا أمي بعد أمي، وذكر ثناءه عليها وتكفينها ببرده، قال: ثم دعا رسول الله صلى الله عليه وسلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاما أسود يحفرون، فحفروا قبرها، فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه وسلم بيده،

 நபி (ஸல்) அவர்கள் தனது வளர்ப்புத் தாய் மீது கொண்ட பாசத்தால் நூற்றுக்கணக்கான சஹாபாக்கள் பார்த்துக் கொண்டிருக்க அவருடைய கப்ரில் இறங்கிப் படுத்தார்கள் .

 வளர்ப்பு அம்மாவுக்கு இப்படி இறுதி மரியாதை செய்த்தை உலகில் யாராவது கேள்விப்பட்ட்துண்டா ?

 இதை  தான் கேவலமான இந்துத்துவாதி,  அத்தை பிணத்துடன் படுத்தார் என்று விகாரமாக சித்திரித்திருக்கிறான்.

 இறந்த பிரதேத்திற்கு அருகில் சென்றாலே தீட்டு என்று நினைப்பவர்கள். சவக்குழிக்குள் இறங்கி புனிதப் பணி செய்பவர்களை தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள். வளர்ப்புத்தாயின் மண்ணறைக்குள் இறங்கி தன் கவலையை வெளிப்படுத்தி ஆறுதல் தந்த பெருமானாரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள்.

 இத்தகைய படுபாவிகளுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தந்தருள்வானாகா!

 இவர்கள் எவ்வளவு வக்கிரமானவர்கள் பாருங்கள் மிக அவதூறாக ஒரு செய்தியை சொல்லி விட்டு, இவரையா பின்பற்றுவது என்று கேள்வியும் கேட்கிறார்கள்? 

கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் சொன்னான் ராமன் என்கிறது ராமாயணம்.

கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டுவிட்டு கண்டும் காணாமல் இருக்கிறார் இன்றைய மோடி

 இத்தனை அவலங்களையும் பார்த்துக் கொண்டு நாம் அவர்கள் பழித்துப் பேசுவதில்லை. அவர்களுடைய நம்பிக்கை அவர்களுடையது. அவர்களுடைய மரியாதை அவர்களுடையது என்று நாம் இருந்து விடுகிறோம்.

 ஆனாலும் வலுவில் வந்து அவதூறு சொல்லி பெருமானாரை அலட்சியப்படுத்தி விட முடியும் என்று இந்துத்துவ வாதிகள் நினைக்கிறார்கள்.

 கொஞ்சம் யோசித்தால் போதும் அவர்கள் சூரியனைப் பார்த்து குலைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்து விடும்.

 நாம் இது போன்ற சந்தர்ப்பத்தில் நமது பெருமானாரின் பெருமையை பறைசாற்ற பயன்படுத்திக் கொள்வோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

4 comments:

  1. Anonymous5:56 PM

    மாஷா அல்லாஹ் மிக அருமை அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  2. Allah உங்கள் ஆயுல், ஆரோக்கியதில் barakath seivanaga முஸ்லிம் சமூகத்திர்கும் ,ஆலிம்களுக்கும் நிங்கள் செய்யும் இந்த சேவைகளை அல்லாஹ் அங்கிகரிபானாக 🤲

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்..

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete