வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 18, 2024

சோம்பல் தவிர்போம்.

இன்றைய நம்முடைய வாழ்வியல் போங்கில் சோம்பல் அதிக இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.

கடமைகளை காலம் தாழ்த்துவதும்., கைவிடுவதும் சகஜ்மாக இருக்கிறது.

 நவீன வசதிகள் அந்த சோம்பேறித்தனத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

 ஒரு காலத்தில் நடையும் வேர்வை சிந்த உழைப்பதும்  தவிர்க்க முடியாததாக இருந்த்து. இப்போது எல்லாம் சுகமாகி விட்ட சூழலில் சோம்பல் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

 சோம்பலின் தீமைகள்

 இந்த சோமபல் மிக ஆபத்தானதாகும்.

 சோம்பல் ஒரு நோய்

 சோம்பல் என்பது ஒரு நோய்.. என்கிறது பிரிட்டனில் நடந்த ஆய்வு ஒன்று. பிற நோய்களைப் போலவே உடலையும், மனதையும் சோம்பல் அழிக்கிறது. சோம்பல் கொண்ட உடலில் நோயாளியின் உடலைப் போன்ற தன்மை இருப்பதாய் அந்த ஆய்வு கூறுகிறது !

  சோம்பல் வெற்றியை பாதிக்கும்.

பொன்னான வாய்ப்புக்களை இழக்க வைப்பதில் சோம்பலுக்கு முதலிடம் உண்டு. 

 குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும் முதல் கதைகளில் ஒன்று

 முயல் ஆமை கதை.

 இது சோம்பல் எந்த திறமைசாலியையும் தோல்வியடைய வைத்து விடும் என்ற பாடத்தை சிறுவயதிலிருந்தே கற்பிப்பதாகும்.

 உலகில் உள்ள அனைத்து சமயங்களும் அறிஞர்களும் சோம்பலை கைவிட மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.

 ஜெரீகோ மக்களிடம் போரிடுங்கள் உங்களுக்கு வெற்றியை தருகிறேன். நீங்கள் வாழ்வதற்கு ஒரு நிலத்தை தருகிறேன் என்ற் அல்லாஹ் யூதர்களுக்கு சொன்னான்.

 قَالُوا يَا مُوسَىٰ إِنَّا لَن نَّدْخُلَهَا أَبَدًا مَّا دَامُوا فِيهَا ۖ فَاذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ (24)

இந்த வசனத்திற்கு முந்தைய வசனம் ஒரு செய்தியை சொல்லுகிறது. யூதர்களில் சில சாமாணிய மக்களே அவர்களது சமூகத்தாரிடம் கூறினார்கள். அல்லாஹ் உங்களை செங்கடலை பிளந்து எவ்வளவு எளிதாக பாதுகாத்திருக்கிறான். ஆகவே நீங்கள் சண்டை எல்லாம் போட வேண்டியிருக்காது. அல்லாஹ் சொன்னதற்காக சாதாரணமாக அணிவகுத்து நில்லுங்கள் போதும் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தந்து விடுவான் என்று சொன்ன பிறகும் அந்த மக்கள் கூறினார்கள் .

فَاذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ

 நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம் என்ற வார்த்தை அவர்களது சோம்பலின் உச்சமாகும்.

 ஒரு இறைக் கட்டளைக்கு எதிராக மனித சமூகம் பேசிய மிக அவலட்சமான வார்த்தை இது.

 இதற்கு சோம்பலே காரணமாகும்.

 இந்த சோம்பலால் அல்லாஹ் சொன்னான். இனி சாமாணியத்தில் எந்த ஊருகும் உங்களுக்கு கிடைக்காது.

 قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةً ۛ يَتِيهُونَ فِي الْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ (26)

 நாற்பது ஆண்டுகள் அவர்களுடைய வெற்றி தாமதமானது. அந்த 40 ஆண்டுகளிலும் அவர்கள் இஸ்ரவேலர்களின் பாலைவனம் என்று சொல்லப்படுகிற தீஹ் மைதானதில் சுற்றிச்சுற்றி அலைந்து திரிய வேண்டியதாயிற்று.

  சோம்பலால் குற்றங்கள் பெருகும்

 திருக்குறள் சின்ன வரிகளில் மாபெரிய செய்தியை சொல்லுகிறது.

 குடிமடிந்து குற்றம் பெருகும். மடிமடிந்து

மாண்ட உஞற்றிலவர்க்கு

 கலைஞர் மூ கருணாநிதி இதற்கு இலகுவாக பொருள் சொல்வார்.

 சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்கள் பெருகி  விடும். குடும்ப பெருமையும் சீரழிந்து விடும்.

 சோம்பல் தனி மனித வாழ்வை குற்றம் நிறைந்த்தாக மாற்றிவிடும் என்ற கருத்து ஆழமாக சிந்திக்க வேண்டியதாகும்.

 புகழ் பெற்ற உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு இதை இன்னொரு வார்த்தையில் கூறுகிறார்.

 மனிதர்கள் பாவ காரியங்களை கண்டறிவதற்கான சரியான வழி சோம்பல் என்று அவர் கூறுகிறார்.

 சோம்பல் எப்படி பாவங்களுக்கு தூண்டுகிறது என்றால்

 சோம்பேறி கடமைகளை தவறவிடுகிறான். உழைக்கத் தயங்குகிறான். எளிதில் வாழ்நாளை கட்த்த ஆசைப்படுவான். அவன் குறுக்கு வழிகளை சிந்திப்பான். இதில் குற்றங்கள் பெருகும்.

 குடும்பத்திற்கு உழைத்துப் போட சோம்பல் பட்ட ஒரு தந்தை தனது சிறு வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தான் என்ற பாதகமாகமான செய்தி சில நாட்களுக்கு முன் பத்ரிகைகளில் வந்தது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!

 சோம்பல் எத்தகை பெரிய தீமை என்று உணர்வதற்கு அது போதுமானது.

 சோம்பலின் தீமையை பைபிள் இழித்துப் பேசுகிறது.

 சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது” (20: 4); 

 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்" (21:25); அவர் தூக்கத்தை நேசிக்கிறார்: "கதவு ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்"

  அதனால் தான் இஸ்லாம் சோம்பலை சைத்தானின் முதல் தூண்டுதல் என எச்சரிக்கிறது.

 அதனால் தான் நபி (ஸ்ல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு தேடியவ்ற்றி பிரதானமாக சோம்பலை குறிப்பிட்டார்கள்

 اللهم إني أعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال"متفق عليه.

 العجز

 இயலாமை என்பது செய்ய வேண்டிய ஒரு காரியத்தை செய்ய முடியாமல் போவது.

 மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது ஒரு தந்தையின் கடமை. அதை செய்ய முடியாமல் போகும் எனில் அது ஒரு பெரிய துயரம். அவலம்.

 வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியது கடமை. அதை திருப்பித்தராமல் போய்விடக் கூடாது.

 ஒருவருக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்திருக்கும் போது அதை நிறைவேற்றாமல் போய்விடுவிடக் கூடாது.

 இது போன்ற ஒரு நிலை நமது வாழ்வில் எதிலும் வந்து விடக் கூடாது. என்பது இயலாமை ஏற்படுதிலிருந்து பாதுகாப்பு கோருதல் ஆகும்.

 இத்தகைய எல்லா வகையான இயலாமையிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

 இந்தப் பிரார்த்தனை நமக்கு ஒரு தனித்த உற்சாகத்தை தரக் கூடியதாகும்.

 நாம் வெறும் பொம்மைகளாக  இல்லாமல்  காரியமாற்றும் சக்தி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற உற்சாகத்தின் தூண்டுதலை இந்த வாசகம் தருகிறது.

 அடுத்ததாக பெருமானார் (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடியது الكسل என்ற  சோம்பலில் இருந்தாகும்.

 அல்லாஹ் மக்கள் உற்சாகமாகவும் உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறான். அதையே உத்தரவிடுகிறான்.

 அத்தகையோருக்கு வாழ்வை சிறப்பாக கொண்டு செல்லும் அறிவாற்றலை வழகுவதாக வாக்களிக்கிறான்.

 அல்லாஹ் யஹ்யா அலை அவர்களுக்கு சொன்னான்.

 يَا يَحْيَىٰ خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ ۖ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا (12)

 வேதத்தை பலமாக பிடி என்பதன் பொருள்! உற்சாகமாகவும் பாடுபடுகிற சிந்தனையோடும் பிடியுங்கள் என்பதாகும்.

 அவ்வாறு வாழ்க்கையில் நடக்கத் தொடங்கினால் வாழ்க்கையை சரியாக கொண்டு செல்லும் ஞானம் கிடைத்து விடும் என்ற நற்செய்தி இந்த வசனத்தில் இருக்கிறது.

 இந்த உற்சாகம் மூஃமின்களின் இயல்பு என்கிறது திருக்குர் ஆன்.

 تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا

அல்லாஹ்வை ஆசித்தும். அஞ்சியும் அவர்களது விலாப்புறங்கள் (இரவு தஹஜ்ஜுதின் நேரத்தில் ) படுக்கையிலிருந்து எழுந்து விடுகின்றன.  என்று மூஃமின்களை அல்லாஹ் பாராட்டுவது

 அவர்கள் எழுந்திருக்கிறார்கள் என்பதை விட அவர்களுடைய உடல்கள் எழுந்து விடுகின்றன. என்பது இந்த உற்சாகம் அவர்களுடைய உடல்களுக்கே வந்து விடுகிறது என்று பாராட்டுவதாக அமைகிறது.

 சோம்பல் வஞ்சகம் வளர்க்கும்  

 உற்சாகமின்றி சோம்பலாக இருப்பதை நயவஞ்சகர்களின் குணம் என்று குர் ஆன் தூற்றுகிறது. \

 وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كُسَالَىٰ

அவர்கள் சோம்பேறிகளாகவே தொழுவார்கள்.

 தொழுகைகளை உரிய நேரத்தில் தொழாமல்

 தாமப்படுத்துவார்கள். கண்காணிக்க யாரும் இல்லாவிட்டால் தொழுகையை விட்டுவிடுவார்கள் என்பது இதன் பொருள் என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்.

 இத்தகை கடுமையான சோம்பலை நமது வாழ்விலிருந்து ஒதுக்கி வைக்க நாம் உறுதியுடன் தீர்மாணித்தால் மட்டுமே நாம் சிறப்பான வெற்றிகரமான வாழ்வை உறுதிப் படுத்திக் கொள்ள முடியும்.

சோம்பேறி ஏமாற்றப்படுவார்

இன்று செல்போனில் பல வகையான விளம்பரங்கள் வருகின்றன. ரம்மி விளையாடுங்கள். சீக்கிரம் பணம் சம்பாதித்து விடலாம் என்பது போன்ற ஆசை காட்டுதல்கள். ஜூப்பி லூடு போன்ற ஏராளமானற விளையாட்டுக்கள் இப்போது பிரபலமாக இருக்கின்றன

இவை மக்களின் சோம்பேறித்தனத்தை குறி வைத்தே இயங்குகின்றன.

இதில் ஏராளமானோ ஏமாற்றத்திறுக் உள்ளாகி தற்கொலை வரை சென்றிருக்கிறார்கள். அந்த பட்டியல் பெரியது,.

 அதே போல இந்த மெஸேஜை பார்வோடு  செய்தால் இந்த ஆப்பில் மற்றவர்களை இணைத்தால் அல்லது போலியான கம்பெனிகளுக்கு நல்ல ரிவ்யூ கொடுத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று வருகிற விளம்பரங்களும் மக்களின் சோம்பேறித்தனத்தை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் ஆகும். இதில் நாம் மற்றவர்களை ஏமாளிகளாக்குகிர பாவம் வந்து சேரும். 

சோமபலிடம் சிக்கினால் எழுந்திருக்க முடியாது.

 சோம்பல் ஒரு முறை மனதிற்குள் நுழைந்து விட்டால் அதனுடைய ஆதிக்கத்தை தவிர்க்க முடியாது என்றும் உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 சோம்பேறி செத்த மிருகமாகிவிடுவான் என்கிறார் ராகிப் இஸ்பஹானி.  

 قال الإمام الراغب رحمه الله: (من تعطّل وتبطّل انسلخ من الإنسانية، بل من الحيوانية وصار من جنس الموتى.

 இந்த சோம்பலில் இருந்து தப்பித்துக் கொள்ள பல வழி முறைகள் உண்டு

 1.      உரிய நேரத்தில் கடமையாற்றுதல்

 நல்ல செயல்களை அதற்குரிய நேரத்திலேயே செய்துவிட வேண்டும் என்று உறுதி ஏற்பது. எக்காரணத்தை கொண்டும் அதை தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்துவது.

 இஸ்லாமிய அறீஞர்கள் இதை தான் பிர்தானமாக நமக்கு சொல்வார்கள்

 சைத்தானின் முதல் ஆயுதம் التسويف தஸ்வீப் ஆகும் )  سوَّف விலிருந்து வந்த சொல்)

 அதாவது தாமதப்படுத்துதல்

 ஒரு நற்செயலை செய்யாதே என்றால் மக்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது சைத்தானின் வேலை என்று அறிந்து உஷாரகி விடுவார்கள்.

 அவன் செய்கிற தந்திரம் இதில் சோம்பலை தருவது, நாளைக்கு செய்து கொள்ளாலம் . இன்னும் கொஞ்சம் நேரம் கழித்தால் நல்லது என்ற யோசனைகளை தருவதாகும் .

 இதுவே சைத்தானின் முதல் வலை என  இப்னுல் கைய்யுமுல் ஜவ்ஸீ போன்ற அறிஞர்கள் கூறுகிறார்கள். (தல்பீஸ் இபுலீஸ்

எனவே தொழுகை தர்ம்ம் ஹஜ் என்ற உழைப்பு உதவி போன்ற எந்த நற்செயல்களையும் தாமதப்படுத்துவதில்லை என்று உறுதி ஏற்றுச் அதற்கேற்ப செயல்பட வேண்டும்

இதே போல வாழ்வியல் அம்சங்களிலும் உரிய நேரத்தில் செயல்பட்டு விடனும்.

பயணம் போவது என்று முடிவான உடன் டிக்கட் புக்கிங்க் செய்து விட வேண்டும்

 பரீட்சைக்கும் பாடங்களுக்கும் உரிய நேரத்தில்  கட்டணம் செலுத்த்தி விட வேண்டும்

 மின் கட்டணம் முன்னதகாவே செலுத்தி விட வேண்டும். .

 இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜுப்பா ஒன்று தாருங்கள் என்று கேட்டார். அப்போதே ஜுப்பாவை கழற்றிக் கொடுத்தார்கள். நீங்கள் திரும்பி வந்து கொடுத்திருக்கலாமே என்று உடனிருந்தவர்கள் கேட்டார்கள். திரும்பி வருவதற்குள் மனம் மாறிவிட வாய்ப்பிருக்கிறதே என்று இமாம் அவர்கள் பதிலளித்தார்கள்.

 2.  அளவான தூக்கம்

 தூக்கம் ஒரு  அருமருந்து தான் ஆனால் அது  அளவினை தாண்டக் கூடாது

 அதிகம் தூங்குபவர் பற்றி பெருமானாரின் விமர்சனம் “ அவரது காதில் சாத்தான் சிறு நீர் கழித்து விட்டான். “

 فقد روى البخاري ومسلم عن بن مسعود قال : ذكر عند النبي صلى الله عليه وسلم رجل ، فقيل له : ما زال نائما حتى أصبح ، ما قام إلى الصلاة قال : " ذلك رجل بال الشيطان في أذنه"

 நபி (ஸல் அவர்கள் உரிய நேரத்தில் விழிக்கும் போது அது சைத்தானின் கட்டிலிருந்து தப்பிக்கும் முதல் வழி கூறினார்கள்

 عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: " يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عقد ، يضرب على كل عقدة : عليك ليل طويل فارقد. فإن استيقظ فذكر الله انحلت عقدة. فإن توضأ انحلت عقدة. فإن صلى انحلت عقدة ، فأصبح نشيطا طيب النفس ، وإلا أصبح خبيث النفس كسلان"

 சுய முன்னேற்ற பற்றி பேசும் அறிஞர்கள் சொல்வார்கள்

 நாம் தூங்கிக் கொண்டிருக்கிற போது யாரோ ஒருவர் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

 3.    சாக்குப் போக்குகள் சொல்லுவதை தவிர்க்க் வேண்டும்

 பைபிள் சோம்பேறியை பற்றி பேசுகிறது.

 அவர் சாக்குப்போக்குகளைத் தருகிறார்: வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்” (26:13); 

 4.  உடற்பயிற்சி

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ என்கிற வார்த்தை உடல் ஒரு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறது.

 உடல் சோர்வை தவிர்ப்பதற்கு சிறிற அளவிலான உடல் பயிற்சிகளும் விளையாட்டுக்களும் பெரிய அளவில் உதவும் என்கிறார்கள் அறிஞர்கள்

 5.  நட்பு வட்ட்ட்தில் சுறுசுறுப்பான மனிதர்கள்

 சோம்பேறிகளை நண்பர்களாக வைத்திருந்தால் நாமும் சோம்பேறிகளாகவே ஆவோம்.

 அதனால் தான் ஹஜ்ஜுக்கு செல்கிற போது கடைபிடிக்க வேண்டிய நடை முறைகளில் நல்ல நண்பர்களை தேடிக் கொள்வது என்றும் ஒரு அம்சம் இருக்கிறது.

காரணம் இப்ப வேண்டாம். வெயில் தாழ்நத பிறகு போவோம். அல்லது கொஞ்சம் தூங்கி எழுந்து விட்டு செல்வோம் என்று கூறுகிற நண்பர்கள் தானும் கெட்டு நம்மையும் கெடுத்து விடுவார்கள்.

 6.  இன்று இறுதி நாள் என்று கருதி நம் பணிகளை செய்ய வேண்டும்.

 சோம்பலுக்கு முக்கிய காரணம் நாளை இருக்கிறது என்ற எதிர்பார்ப்பாகும். இது எந்த வகையிலும் நிச்சயமற்றதாகும்

அதனால் சோம்பலை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய தீர்மாணம் இன்று இறுதி நாளாக இருந்தால் நாம் என்ன செய்வோம் என்று சிந்திப்பதாகும்.

 இதை நபி (ஸல்) அவர்கள் அற்புதமாக உணர்த்தினார்கள்

 وعن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " صل صلاة مودع  رواه البيهقي

 இன்றே விடைபெறுபவனை போல எல்லா நிலையிலும் ஒரு சிந்தனையை வைத்துக் கொண்டால் நாளைக்கு அப்புறம் என்று ஒத்திப் போடுகிற ஒரு நிலை எதிலும் வராது.

 அல்லாஹ் நம்மனைவரையும் பெருமானாரை பாதுகாத்த்து போல சோமபலில் இருந்து பாதுகாப்பானாக! வெற்றி பெற உழைக்கும் தவ்பீக்கை தருவானாக!

 

 

6 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் வழமைபோல அற்புதம்

    ReplyDelete
  2. Anonymous11:00 PM

    ماشاء الله بارك الله فيكم

    ReplyDelete
  3. Anonymous11:07 PM

    மாஷா அல்லாஹ்.நல்ல தகவல்கள்.அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.ஆமீன்

    ReplyDelete
  4. Anonymous11:13 PM

    மிக சிறந்த தலைப்பு ஹஜரத்...

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ். சிறந்த பதிவு.

    ReplyDelete