வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 11, 2024

பிறருக்கு பயன்படும் வாழ்க்கை

 இறைத்துதர் மூஸா அலை அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டமும் திருப்பு முனைகள் நிறைந்தவை.

வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களுக்கு பிறகு இறைவன் ஒரு சிறப்பான் நன்மையை வைத்திருப்பான் என்று நம்பிக்கையூட்டுபவை.

அதனால் அவர்களுடைய வரலாறு திருக்குர் ஆனில் அதிக இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான திருப்பு முனை தான் அவரையும் அவருடைய மக்களையும் செங்கடலை பிளக்க வைத்து அல்லாஹ் பாதுகாத்தான். அதே நேரத்தில் தன்னை இறைவன் என்று வாதிட்டுக் கொண்டும் யூதர்களை துன்புறுத்திக் கொண்டும் இருந்த பிர் அவ்னை அல்லாஹ் அழித்தான்.

பிர் அவ்னை அழித்து அல்லாஹ் யூதர்களை பாதுகாக்கவில்லை. யூதர்களை பாதுகாத்த பிறகு பிர் அவ்னை அல்லாழ் அழித்தான்.

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ [سورة البقرة:50

இது வாழ்க்கைக்கு ஒரு பெரிய பாடத்தை தருகிறது.

அடுத்தவரின் அழிவு அல்லது வீழ்ச்சி தான் நமக்கு வெற்றியை தரும் என்பதல்ல;

நமது வெற்றி நமக்கு கிடைக்கும் பரிசு

எதிரிகள் அழிவது அவர்களது செயல்களுக்கு பெரும் கிடைக்கும் விளைவு.

நாம் நமது வெற்றியை பற்றி சிந்திக்க் வேண்டும். எதிரிகளின் அழிவை பற்றி அல்ல;

மூஸா அலை அவர்கள் கடலை தனது தடியால் அடித்த போது, தாங்கள் காப்பற்றப் பட வேண்டும்  என்பதை மட்டுமே எண்னியிருப்பார்கள்.

அல்லாஹ் தனது தரப்பாக பிர் அவ்னை அழித்தான்.

அது அவனது அகம்பாவத்தால் அவன் தேடிக் கொண்ட முடிவு,

மனித வாழ்க்கையில் நாம் எப்போதும் மற்றவர்களுக்கு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

பிரதி பலனை எதிர்பார்க்காமல் அன்பாலும் கருணையாலும் மற்றவர்களது இதயங்களை ஈர்க்கவேண்டும்.

வேண்டு மென்றே மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களாக்கோ துன்பம் தருகிறவர்களாகோ இருந்து விடக் கூடாது.

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் சொன்னர்கள்

மக்களுக்கு பயன் அளிப்பவே சிறந்த மனிதர்.  

قال رسول الله -صلى الله عليه وسلم-: (خيرُ الناسِ أنفعُهم للناسِ)،[١]

இன்னொரு முறை அப்படிப்பட்டவரே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர் என்றார்கள்

 

 أَحَبُّ الناسِ إلى اللهِ أنفعُهم للناسِ ، وأَحَبُّ الأعمالِ إلى اللهِ عزَّ وجلَّ سرورٌ تُدخِلُه على مسلمٍ ، تَكشِفُ عنه كُربةً ، أو تقضِي عنه دَيْنًا ، أو تَطرُدُ عنه جوعًا ، ولأَنْ أمشيَ مع أخٍ في حاجةٍ ؛ أَحَبُّ إليَّ من أن اعتكِفَ في هذا المسجدِ يعني مسجدَ المدينةِ شهرًا ، ومن كظم غيظَه ولو شاء أن يُمضِيَه أمضاه ؛ ملأ اللهُ قلبَه يومَ القيامةِ رِضًا ، ومن مشى مع أخيه في حاجةٍ حتى يَقضِيَها له ؛ ثبَّتَ اللهُ قدمَيه يومَ تزولُ الأقدامُ

الراويعبدالله بن عمر : أخرجه الطبراني

என்ன அற்புதமான செய்தி ?

 மனித வாழ்வில் இரண்டு வாய்ப்புக்கள் இருக்கிறது ஒன்று அன்பையும் கருணையும் வெளிப்படுத்துவது

 மற்றது அகம்பாவத்தோடும் அநீதியாகவும் நடந்து கொள்வது.

 அகம்பாவிகளின் இதயம் இருட்டாகி விடும். அதாவது அவர்கள்  எப்போதும்  கவலையுடன் இருப்பார்கள். முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய உறுதியும் பலமும் பறிபோய்விடும்,.

 அன்பை வெளிப்படுத்தி வாழ்பவர்களின் இதயத்தை ஒளியால் நிரப்புகிறான். முக்கியமன கட்டங்களில் அவர்களது பாதத்தை உறுதிப்படுத்துகிறான்.

 மூஸா அலை அவர்கள் அவர்களது சமூகத்தின்பால பேரன்பு கொண்டு அதற்ககு நன்மை செய்பவராக இருந்தார்.

 அவருடைய இயல்பை குர் ஆன் கூறுகிறது.

 وَلَمَّا وَرَدَ مَاء مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ امْرَأتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاء وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

அந்தப் பெண்களுக்கு பிரதிபலனை எதிர்பாராமல் மூஸா அலை உதவினார். அவருக்கு உணவு தேவையாக இருந்தது. எனக்கு சாப்பாடு தாருங்கள் என்றோ  தருவீர்களா என்றோ அவர் கேட்கவில்லை.  .

 இது போலவே வாழ்நாள் முழுக்க அவரது இயல்பு பிறருக்கு பயன்பட வாழ வேண்டும் என்பதாக இருந்த்து.

 சில நூறுவருடங்களாக அவரது சமூகம் பெரும் எண்ணிக்கையில் பிர் அவ்னிடமிருந்து சிக்கி விழி பிதுங்கி நின்றது. இது தான் நமது விதி என்று தப்பிப்பதை பற்றி யோசிக்க கூட முடியாமல் இருந்தது.

 மூஸா அலை அவர்கள் ஒற்றை மனிதராக அவருடைய சகோதர்ருடைய உதவியை மட்டும் வைத்துக் கொண்டு தனது சமூகத்தை பாதுகாத்தார்கள்

 நாமும் அப்படி மூஸா அலை அவர்களை போல சமுதாயத்திற்கு பாக்கியமானவராக ஆசைப்பட வேண்டும்.

 பனீ முஸ்தலக் யுத்தத்தில் ஏராளமான முஸ்லிம்களிடம் கைதிகள் ஆனார்கள். அவர்களை பெருமானார் (ஸல்) தோழர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்கள்.  அந்த கைதிகளில் ஒருவராக இருந்த ஜுவைரிய்யா அம்மாவை பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இதை அறிந்த தோழர்கள் பெருமானாரின் துணைவியாரின் உறவினர்களை நாம் அடிமைகளாக வைத்திருப்பதா என சிந்தித்து ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த அடிம்மகளை விடுதலை செய்தனர்.

 ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள். தனது சமூகத்திற்கு ஜுவைரிய்யாவை போல பாக்கியமான ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை..

  فما من امرأة أعظم بركة على قومها منها: أعتق بزواجها من رسول الله أهل مائة بيت من بني المصطلق.

 மக்களுக்கு இவ்வாறு நன்மை செய்து பாக்கியமாக வாழும் ஒரு வாழ்க்கையை தான் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்தது.

 இது தான் உண்மையான் இஸ்லாமிய ஈமானிய வாழ்வாகும்.

 இஸ்லாம் கட்டமைத்த வாழ்வியலை வரலாறு மிக அற்புதமாக படம் பிடித்து வைத்திருக்கிறது.

 ஒரு நபித்தோழர்  3000 ஆயிரம் திர்ஹம் கொடுத்து ஒரு  ஒட்டகையை வாங்கினார்.

அதைப்பார்த்த மக்கள் ஒட்டகையை புகழ்ந்தார்கள். எங்களது கணக்கில் இந்த ஒட்டகைக்கு 5000 ஆயிரம் கொடுக்கலாம் என்றார்கள். அந்த நபித்தோழர் தனக்கு ஒட்டகையை விற்றவரை தேடிச் சென்று இரண்டாயிரம் திர்ஹம்களை அதிகமாக  கொடுத்தார். சில நாட்களுக்குப் பின் அவரது வீட்டுக்கு வந்த ஒரு குதிரை வீரன் அந்த ஒட்டகையில் சவாரி செய்து பார்த்து விட்டு “ நானாக இருந்தால் ஏழாயிரம் திர்ஹமுக்கு இதை வாங்கியிருப்பேன் என்றார். உடனே திரும்பவும் குதிரைய வியாபாரியை தேடிச் சென்ற நபித்தோழர் அவருக்கு மீண்டு இரண்டாயிரம் திர்ஹ்மகளை கொடுத்தார். .

பிறருக்கு நன்மையை நாடும் ஒரு உலகை  அற்புதமாக படைத்திருந்தார்கள் பெருமானார் (ஸல்)

மதீனாவில் பிஃரு ரூமா என்று ஒரு கிணறு யூதனுக்கு சொந்தமாக இருந்த்து. அந்த  நல்ல தண்ணீரை அவன் அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். மக்கள் சிரமப்பட்டனர்.

உஸ்மான் ரலி உதவ நினைத்தார். யூதனிடம் கிணற்றை விலைக்கு கேட்டார்.

இதில் எனக்கு நல்ல வருமானம் வருகிறது இதை  நான் ஏன் விற்க வேண்டும். என்று கூறி யூதன் மறுத்துவிட்டான்.

உஸ்மான் ரலி ஒரு அருமையான வியாபாரி. எதையும் சாதித்து விடக் கூடியவர்.  

யூதனிடம் பேசினார். கிணற்றுக்கான முழு பணத்தை தந்து விடுகிறேன். இதில் நீ எனக்கு பாதி உரிமையை தந்தால் போதுமானது என்றார்.  யூதன் சம்மதித்தான்.

இதை எப்படி பிரிப்பது.

ஒரு நாள் யூதருக்கு உரியது . மறு நாள் உஸ்மான் ரலி அவர்களுக்குரியது என்று ஏற்பாடானது..

என்னுடைய நாளில் உங்களுக்கு தேவையான தண்ணீரை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம் என உஸ்மான் ரலி அறிவித்தார்.

அவருக்குரிய நாளில் மக்கள் தேவைகளை தீர்த்துக் கொண்டனர். யூதனுக்கு வியாபாரம் ஆகவில்லை.  இன்று காசு கொடுத்து ஏன் வாங்கவேண்டும். என்று மக்கள் யோசித்தனர்.

அவன் வியாபாரம் ஆகவில்லையே என்று வாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனை சந்தித்த உஸ்மான் ரலி அவர்கள் “மீதி பாதியும் கொடுத்துவிடு அதற்குரியதை தந்து விடுகிறேன் என்றார்கள். யூதன் கொடுத்து விட்டான். அதை முஸ்லிம்களுக்கு உஸ்மான் ரலி வக்பு செய்தார்கள்.  

شراء بئر رومية

عندما هاجر رسول الله -صلَّى الله عليه وسلَّم- إلى المدينة كان الماء العذب قليلاً ولا يُشرب من بئر رومة إلا بثمن، فدعا أصحابه وحثّهم على شرائها بقوله -صلّى الله عليه وسلّم-: (مَن يشتَري بئرَ رومةَ فيجعَلُ فيها دلوَهُ معَ دلاءِ المسلمينَ بخيرٍ لَهُ منها في الجنَّةِ)، ليُبادر عثمان -رضي الله عنه- بشراء نصفها بمائة بكرة وجعلها للمسلمين، وعندما رأى صاحب البئر وقد كان من اليهود أنّه لم يعد يُرزق منها كما في السابق باع نصيبه منها لعثمان -رضي الله عنه- وتصدّق بها كلها


இதே போல மற்றொரு முறை மதீனாவில் உணவு பற்றாக்குறை –ஏற்பட்ட போது உஸ்மான் ரலி பெரும் சரக்குடன் மதீனா வந்த் சேர்ந்தார்கள். அவரை இரவோடு இர்வாக சந்தித்த வியாபாரிகள் அவருட்டய பொருளுக்கு 5 மடங்கு அதிக விலை தருவதாக கூறினார்கள். அதற்கு உஸ்மான் ரலி அவர்கள் 700 மடங்கு அதிக நன்மைக்கு விற்றுவிடப் போகிறேன் என்று சொல்லி அனைத்து உணவுப் பொருட்களையும் மக்களுக்கு தானமாக வழங்கினார்கள்.

بذله في قافلة لإطعام الناس زمن القحط

أصاب المسلمين في عهد عمر بن الخطاب -رضي الله عنه- القحط، وفي تلك الفترة جاءت قافلة من الشام لعثمان -رضي الله عنه- مُحمّلة بالطعام واللباس فتسابق إليه التجار ليشتروها منه وعرضوا عليه خمسة في المئة لكنه رفض بيعها لهم وأخبرهم أنَّ الله تعالى يُعطي سبعمائة فأكثر على الصدقة بدرهم واحد، وتصدق بها -رضي الله عنه- على فقراء المسلمين

இதே உஸ்மான் ரலி அவர்களிடம் இன்னொரு இயல்பும் இருந்தது. தான் முஸ்லிமானதிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஒரு அடிமையை உஸ்மான் ரலி விடுதலை செய்வார்கள். அவ்வாறு அவர்கள் உரிமை விட்ட அடிமைகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்து நானூறு.

 عتقه للرقاب

عمد عثمان بن عفان -رضي الله عنه- منذ إسلامه إلى عتق رقبة في سبيل الله -تعالى- في كل يوم جمعة، حتى بلغ عدد الرقاب التي أعتقها قُرابة الألفين وأربعمائة رقبة

ஆஷூரா நாள் மூஸா அலை அவர்களையும்  சமூகத்திற்கு பயன்பட வாழ்ந்த அவரது சிறப்பு இயல்புகளையும் நமக்கு நினைவூட்டுகிறது.

நாமும் சிறப்புப் பெற அத்தகைய இயல்புகளை கடைபிடிப்போம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

2 comments:

  1. Anonymous6:09 PM

    Mashallah...barkallahu fee ilmika..va thaqabbalallahu aamalaka ya shaik

    ReplyDelete
  2. Anonymous6:10 PM

    மாஷா அல்லாஹ்

    ReplyDelete