வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 03, 2024

பேரரசு வாழ்ந்த பாரசீகம்

 நேற்றைய  முன் தினத்திலிருந்து உலக அரங்கில் பெரும் யுத்த பீதி ஏற்பட்டுள்ளது.

புதன் கிழமை இரவு இஸ்ரேல் மீது இரான் ஏவுகனைத்தாக்குதலை தொடங்கியது. அதை எடுத்து மத்திய கிழக்கில் பெரிய அளவில் யுத்தம் மூண்டுவிடுமோ என்ற பயம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அல்லாஹ் மத்திய கிழக்கில் வாழும் மக்களுக்கு குறிப்பாக  தொடர்ந்து அல்லலுக்கு உள்ளாகி வரும் முஸ்லிம்களுக்கு நிம்மதியளிப்பானாக! யுத்தங்களிலிருந்தும் அதை தொடர்ந்து வருகிற கொடூரங்களிலிருந்தும் மக்கள் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக!

இரான் நாடு இஸ்ரேலை தாக்கியதற்கு காரணம, இதற்கு முன்னதாக இஸ்ரேல் இரானுக்கு எதிரான பல்வேறு சதித்திட்டங்களில் வம்படியாக இறங்கியது.

இரானில் ஒரு இரங்கல் நிகழ்ச்சிக்காக வந்திருந்த பாலஸ்தீன் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனீயா வை உள்வாளிகளை வைத்து இஸ்ரேல் கொன்றது. இதை ஒரு நாட்டின் இறையான்மையின் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாக பார்க்காமல் உலகில் நடுநிலை பேசும் பலர் இதை இஸ்ரேலின் திறமை என்று பாராட்டினார்கள்.

அடுத்த்தாக சிரியாவில் உள்ள இரானின் தூதரக அதிகாரியை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது.

அனைத்துக்கு மேலேகா லபானில் செயல்படுகிற ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரும் ஈரான் ஆதரவாளருமான ஹஸன் நஸ்ருல்லாஹ்வை இஸ்ரேல் ராக்கெட் வீசி கொன்றது.  

இஸ்ரேலின் பல கைதிகள் இன்னும் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உள்ளார்கள். அவர்களை மீட்க எந்த துப்பும் கிடைக்காமல் இஸ்ரேல் தடுமாறி வருகிறது. இந்த பலவீனத்தை மறைப்பதற்காக உலகின் தலைவர்கள் பலரையும் கீழ்த்தரமான உளவு பார்த்தலின் மூலமாக இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது.

இஸ்ரேலின் இந்த அடாவடித்தனமாக செய்கைகளை உலகில் தலைமை பீடத்திலிருக்கிற எவரும் தட்டிக் கேட்கவில்லை. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பலவும் இஸ்ரேலை தட்டிக் கொடுக்கும் தொனியிலேயே செயல்பட்டு வந்தனர்.  

இந்த நிலையில் தான் பொறுமைக்கு ஒரு அளவு உண்டு என்பதை வெளிக்காட்டும் வகையில் இரான் நேற்றைய முன் தினம் இஸ்ரேல் மீது சுமார் 170 தொலை தூர ஏவுகணைகளை வீசியுள்ளது. இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி அந்த ஏவுகணைகள் இஸ்ரேலுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இரானின் இந்த தாக்குதலை இஸ்ரேலினால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருக்கிற மக்களும், உலகின் நடுநிலையாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். வழக்கம் போல இஸ்ரேலிய பயங்கரவாத்த்திற்கு ஆதரவாக இருக்கிற நாடுகள் இந்த தாக்குதலுக்கு எதிரான கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக் ஆதரவு தெரிவித்த நாடுகளீன் எண்ணிக்கை முந்தைய சந்தர்ப்பங்களை விட குறைவானதாகும்.

காரணம் இஸ்ரேல் தொடர்ந்து மத்திய கிழக்கின் நிலவரத்தை சிக்கலாக்கி வருகிறது. ஏனெனில் இதன் மூலமே அதனுடைய அராஜக நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறது.

சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் இரண்டு நாடுகள் திட்டத்தை வலியுறுத்த ஆரம்பித்து விட்டன. இந்த சூழலில் அதிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக இஸ்ரேல் உலகின் மிகப் பெரிய ரவுடி யாக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் உலகின் பல நாடுகள் இஸ்ரேலின் கனவுக்கு தடையாக இருந்தாலும் தற்போது இரான் அதன் முன்னிலையில் இருக்கிறது.

இரானின் கை வலிமைப்பட்ட்டும் என்ற பிரார்த்தனை இப்போது உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

இரானில் இஸ்லாம் பரவிய விதம் ஆச்சரிய கரமானதாகும்.

இரான் என்ற சொல்லுக்கு ஆரியர்களின் நிலம் என்று பொருள். உலகின் தொன்மையான மனித இனங்களின் ஒன்றான ஆரிய இனம் இந்தப் பகுதியில் தோன்றியதே! சுமார் 3000 ஆண்டு கால தொன்மையான வரலாறு ஈரானுக்கு இருக்கிறது.

அந்த வரலாற்றில் மிக முக்கிய காலம் சாஸானியர்களின் ஆட்சிக் காலமாகும்.  

அங்கு சுமார் 416 ஆண்டு காலமாக சாஸானிய பாரசீக பேர்ரசு மிகுந்த செல்வாக்கோடு நிலை கொண்டிருந்தது. உலகின் அன்றைய இரண்டு வல்லரகளில் அது முதலிடத்தில் இருந்தது.

சாஸானியர்களிடம் அன்றைய மற்றொரு வல்லரசான ரோம் நாடு தோற்றுப் போன வரலாற்றை தான் அல்லாஹ் அர்ரூம் அத்தியாயத்தில் பேசுகிறான்.

الم (1غُلِبَتِ الرُّومُ (2فِي أَدْنَى الْأَرْضِ وَهُم مِّن بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ (3فِي بِضْعِ سِنِينَ ۗ لِلَّهِ الْأَمْرُ مِن قَبْلُ وَمِن بَعْدُ ۚ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (4بِنَصْرِ اللَّهِ ۚ يَنصُرُ مَن يَشَاءُ ۖ وَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ (5)

ரோமர்களிடமிருந்து இராக்கை பாரசீகம் கைப்பற்றியதை தான் அல்லாஹ் இதில் கூறுகிறான். இந்த பகுதியை 10 வருடங்களுக்குள்ளாக ரோமர்கள் திரும்ப கைப்பற்றிக் கொண்டனர்.

பாரசீகர்கள் சிலை வணங்கிகளாகவும் ரோமர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாகவும் இருந்ததால் ரோமர்களின் வெற்றி ஒரு வகையில் முஸ்லிம்களுக்கு சந்தோசம் தருகிற வெற்றியாக இருந்தது.

அல்லாஹ் செய்த பெரிய ஏற்பாடு,

அன்றைய வல்லரசாக இருந்த ரோமர்களால் பாரசீகத்தின் இராக் என்ற ஒரு சின்ன பகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஆனால் 20 வருடங்களுக்குள் முஸ்லிம்கள் ஒட்டு மொத்த பாரசீகத்தையும் அதாவது இன்றைய ஈரான் முழுவதையும் வெற்றி கொண்டு விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு அருகிலுள்ள அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அப்படி ஒரு கடிதம் அன்றைய பாரசீக பேரரசரான இரண்டாம் கிஸ்ரா என்றழைக்கப்பட்ட குஸ்ரூ பின் ஹுர்முஸிடம் கொடுக்கப்பட்டது. அப்துல்லாஹ் பின் ஹுதாபார் அஸ்ஸஹ்மீ என்ற நபித்தோழர் அந்த கடிதத்தை கொண்டு சென்றார்.

அவன் கடித்ததை வாங்காமலே கர்ஜித்தான். أيكتب إلي عبدي   எனது அடிமைகளில் ஒருவர் எனக்கு கடிதம் எழுதுவதா எனக் குமுறினான். அரபுகளை அவன் அடிமைகளாக கருதினான் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அந்தக கடிதத்தை படிக்காமலே அவன் கிழித்துப் போட்டான்.

அது பெருமானார் (ஸல் அவர்களுக்கு தெரிய வந்தது. இவனை போன்ற மூடர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று பெருமானார் அறிந்து கொண்டார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அல்லாஹ் அவனது அரசை கிழித்தெறிவானாக! اللهم مزق ملكه

وكسرى لما أتاه كتاب النبي ـ صلى الله عليه وسلم ـ مزقه، فدعا النبي ـ صلى الله عليه وسلم ـ أن يمزق ملكه كل مُمَزَّق، فكان كذلك

 இறைவன் அளித்த தெய்வீக திருஷ்டியால் எதிர் காலத்தை துல்லியமாக கணித்து விடும் சக்தி படைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இனி கிஸ்ரா கிடையாது. (அதாவது சாஸானிய அரசு முடிந்து விட்டது என்றார்கள்0

 عن أبي هريرة ـ رضي الله عنه ـ قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ( إذا هلك كسرى فلا كِسرى بعده، وإذا هلك قيصر فلا قيصرَ بعده، والذي نفس محمد بيده، لتُنفَقَنَّ كنوزُهما في سبيل الله ) رواه البخاري .

மாஷா அல்லாஹ்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முஃஜிஸாக்களில் ஒன்றாக 20 ஆண்டுகளில் கிஸ்ராக்களில் சாம்ராஜ்யம் அழிக்கப்பட்ட்து என்பது மட்டுமல்ல – இரண்டாம் குஸ்ரு தான் கடைசி சாஸானிய அரசனாகவும் இருந்தான். அவனை அவனது மகனே கொன்றான்.

சாசானியர்களின் அரசு அழிக்கப்படும் என்று மட்டும் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை அவர்களது செல்வங்கள் முஸ்லிம்களுக்கு கிட்டும் என்றும் கூறினார்கள்.

 عن ثوبان - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم-: ( إن الله زَوَى لي الأرض، فرأيتُ مشارقها ومغاربها، وإن أُمتي سيبلغ مُلكها ما زُوِي لي منها، وأُعطيتُ الكنزين: الأحمر والأبيض (الذهب والفضة) .. ) رواه مسلم .

 இதில் சிவப்பு வெள்ளை என்பது பாரசீகத்தையும் ரோமையும் குறிக்கும் என நவவி ரஹ் கூறுகிறார்.

 அது மாத்திரம் அல்ல, எப்போதுமே சண்டை சச்சரவுகளின் நிலமாக இருக்கிற அவர்களின் பூமியில் அமைதி நிலவும் என்றும் கூறீனார்கள்.

 عن عدي بن حاتم ـ رضي الله عنه ـ قال: (بينما أنا عند رسول الله ـ صلى الله عليه وسلم ـ إذ أتاه رجل، فشكا إليه الفاقة، ثم أتاه آخر فشكا إليه قطع السبيل، فقال: يا عدي! هل رأيت الحيرة؟، قلتُ: لم أرها، وقد أنبئت عنها، فقال: إن طالت بك حياة لترين الظعينة (المرأةترتحل من الحيرة حتى تطوف بالكعبة لا تخاف أحدا إلا الله، قلتُ في نفسي: فأين دعّار طيئ (قطاع الطريقالذين سعروا في البلاد؟!، ولئن طالت بك حياة لتفتحن كنوز كسرى، قلتُ: كسرى بن هرمز؟!، قال: كسرى بن هرمز!!، ولئن طالت بك حياة، لترين الرجل يخرج ملء كفه من ذهب أو فضة، يطلب من يقبله فلا يجد أحدًا يقبله منه ) رواه البخاري .

قال عدي: " فرأيتُ الظعينة ترتحل من الحيرة حتى تطوف بالكعبة لا تخاف إلا الله، وكنت فيمن افتتح كنوز كسرى بن هرمز، ولئن طالت بكم حياة لترون ما قال النبي أبو القاسم ـ صلى الله عليه وسلم ـ يخرج ملء كفه " .

·        ஹீரா என்பது இரானின் பிரதான ஊர்களில் ஒன்று.

·        الظعينة என்றால் ஒட்டக தொட்டிலில் உட்கர்ந்திருக்கும் பெண். அதாவது ஒரு பெண்)

 பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதல்லாம் நடந்ததை என் கண்களால் நான்  கண்டேன். நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் பெருமானாரின் கை நிறைந்து வழி வதை அதாவது அவரிடமிருது பெற்றுக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள் என அதீ ரலி கூறினார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் கூறியது போல மிக குறைந்த காலத்தில் அதாவது பெருமானார் (ஸல்) இவ்வாறு கூறிய 15 வருடங்களுக்குள் பாரசீகம் முழுவதையும் ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கைப்பற்றினார்கள்.

 ஹிஜ்ரீ 21 ல் நடைபெற்ற நிஹாவந்த் களத்தில் ஸாஸானியர்கள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டார்கள். பாரசீக நிலத்தில் இஸ்லாம் முழுமையாக படர்ந்தது.

 சஃது பின் அபூவக்க்காஸ் – அபூஉபைதா – காலித் பின் வலீத் முஸன்னா ரலி போன்ற பல பெரும் சஹாபாக்களின் பங்கு இதில் பிரதானமானது. அல்லாஹ் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்தி வைப்பானாக!

 இந்த காலகட்டத்தில் இப்போதைய வழக்கில் சொல்லப்படும் வார் ரூம் என்ற அளவில் ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் இருப்பிடமான மஸ்ஜிதுன்னபவி இருந்தது.

  வரலாறு அன்றைய காலகட்டத்தை மிக விறுவிறுப்பாக பேசுகிறது .

 பாரசீக வெற்றியின் முக்கிய போர்களில் ஒன்றான காதிஸிய்யாவிற்குப் பிறகு பாரசீகள் ஒண்ணறை இலடம் பேருடன் திரண்டிருப்பதாக படைத்தளபது சஃது ரலி உமர் ரலிக்கு கடிதம் எழுதுகிறார்.

 அந்த கடிதம் வந்ததும் “ உங்களுக்கான உதவி வந்து சேரும் என்ற செய்தியை கொடுத்து உமர் ரலி முஹ்ம்மது பின் மஸ்லமா ரலியை அனுப்பிவைக்கிறார்.

காதிஸிய்யாவில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிற ஸாஸானியப் படை வீறு கொண்டு வருகிற போது அதை எதிர் கொள்ள தனது நெஞ்சுக்கு நேரே அம்புகளை எதிர் கொள்ளும் திறன் படைத்த ஒருவர் வேண்டும் அது யாராக இருக்கும் என்று ஆலோசனை சொல்லுங்கள் என்று உமர் ரலி சபை யை கேடார்கள். இது உங்களுக்கே தெரிந்த விசயம் என சபையோர் சொல்ல, நான் நுஃமான் பின் முக்ரின் அல் முஜ்னியை அனுப்ப போகிறேன் என்றார்கள். அவர் அதற்கு பொருத்தமானவர் தான் என சபையோர் ஆமோதித்தனர்.

 இதன் பிறகு பள்ளிவாசலுக்கு சென்று நுஃமானை உமர் தேடினார். அவர் தொழு கொண்டிருந்தார்.

உன்னை ஒரு காரியத்திற்கு தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்றார் உமர் ரலி.

 அந்த வீரப் பெருமகனுடைய வார்த்தையை வரலாறு சொல்கிறது .

 قال: إن يكن جباية للضرائب فلا، وإن يكن جهادًا في سبيل الله فنعم

:”வரி வசூலிப்பதற்கு என்றால் நான் தயாரில்லை. ஜிஹாதிற்கு என்றால் நான் ரெடி”

 இவர் தான் நிஹாவன்த் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்றார். பல உணர்ச்சி மிகு நிக்ழவுகள் இரண்டு தரப்பிற்கு இடையே நடை பெற்றன.

 இந்தக் களத்தில் நுஃமானின் தீரம் வெற்றியை கொடுத்த்து. ஆனால் அவரே இதில் முஸ்லிம்களின்  தரப்பில் முதல் அம்பு வாங்கி வீழ்ந்தார்.

களத்தில் அவரது உயிர் பிரிந்த்து.

வரலாறு அந்தக் காட்சியை காட்டுகிறது.

துல் ஹாஜிபைன் என்று அழைக்கப்படும் நுஃமான தனது வாகனத்திலிருந்து விழுந்தார்.  அவரது வயிறு அம்பினால் குதறப்பட்டிருந்தது. அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு எழுந்த வுடன் அவர் கேட்ட கேள்வி, மக்களுக்க் என்ன ஆச்சு!  முஸ்லிம்கள் வென்று விட்டனர் என்று பதிலளிக்கப்பட்டது. இதை உமருக்கு சொல்லி விடுங்கள் என்று கூறி அவர் உயிரை விட்டார். இந்த செய்தி கிடைத்த போது உமர் ரலி முகத்தில் கை வைத்து தனது பொறுப்பை நிறைவேற்றிய தேழருக்காக அழுதார்கள்.

   .  ووقع ذو الحاجبين من بغلته الشهباء، فانشق بطنه، وفتح الله، ثم أتيت النعمان وبه رمق، فأتيته بماء، فصببت على وجهه أغسل التراب، فقال: من ذا؟ قلت: معقل. قال: ما فعل الناس؟ قلت: فتح الله. فقال: الحمد لله. اكتبوا إلى عمر بذلك، وفاضت نفسه -.

وعن علي بن زيد، عن أبي عثمان قال: أتيت عمر بنعي النعمان بن مقرن، فوضع يده على وجهه يبكي.

 இவ்வாறு உமர் ரலி அவர்களால வெற்றி கொள்ளப் பட்ட இரான் பிற்காலத்தில் இஸ்லாமிய அரசியல், அறிவியல், கலை கலாச்சார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

 இரானிலிருந்து தான் இமாம் கஸ்ஸாலி, இமாம் ராஜி, அலீ பின் சீனா, உமர் கய்யாம், குவாரிஜ்மீ , ஜலாலுத்தீன் ரூமி, குலிஸ்தான் போஸ்தான எழுதிய சஃதீ போன்ற என்னற்றோர் தோன்றினர்.

 நபி (ஸல்) அவர்கள் பாரசீகம் குறித்து இப்படி பாராட்டினார்கள்.

சத்தியம் எங்கிருந்தாலும் அதை தேடிக் கண்டுபிடித்து விடும் ஆற்றல் பெற்றோர் பாரசீகத்தில் இருக்கிறார்கள்.

 عن النبي صلى الله عليه وسلم أنه قاللو كان الإيمان عند الثريا لتناوله رجال من فارس أخرج البخاري

 இது சல்மான் அல் பார்ஸி ரலி அவர்கள் குறித்து சொல்லப்பட்ட புகழ் மாலையாகும்.

عن أبي هريرة قال:
كنا جلوسا عند النبي ﷺ . إذ نزلت عليه سورة الجمعة. فلما قرأ: {وآخرين منهم لما يلحقوا بهم} [62 /الجمعة /3] قال رجل: من هؤلاء؟ يا رسول الله! فلم يراجعه النبي ﷺ . حتى سأله مرة أو مرتين أو ثلاثا. قال وفينا سلمان الفارسي. قال فوضع النبي ﷺ يده على سلمان، ثم قال “لو كان الإيمان عند الثريا، لناله رجال من هؤلاء”.

இதன் காரணமாகவே இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள்

 باب فضل فارس  என்ற தலைப்பில் ஒரு பாடம் அமைத்திருக்கிறார்கள்


கீபீ 1500 காலத்தில் பாரசீகத்தில் ஷியாக்களின் தலைமை ஏற்பட்ட பிறகு இரான் முஸ்லிம் உலகத்திலிருந்து சற்றே வேறுபாட்டு நின்றது.

ஷியா என்பது இஸ்லாமில் ஏற்பட்ட மிக மோசமான ஒரு பிளவாகும். முஸ்லிம் சமூகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற யூதர்களின் சதித்திட்டத்தின் பின்னணியில் உருவானதே ஷியா கோட்பாடாகும். மிக சின்ன சில காரணங்களை கொண்டு மட்டுமே அவர்கள் முஸ்லிம்களோடு இணைந்திருக்கிறார்கள். தொழுகை பெருமானாரை ஏற்றுக் கொள்ளும் முறை, நபித்தோழர்களை விமர்சித்தல் போன்ற அடிப்படையான விவகாரங்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்து அவர்கள் முற்றிலும் விலகியவர்கள் ஆவார்கள்.

அந்த வகையில் இரான்இப்போதும் அப்படித்தான் வேறுபட்டு நிற்கிறது என்றாலும்.இப்போதைக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இரான் மீது காட்டுகி வன்மம் மிக அநீதியானதாகும்

இந்த வன்மத்திற்கு காரணம் இரான் தன்னுடைய மிகப் பெரும் வளங்களை இந்த வல்லரசுகளிடம் தர வில்லை என்பதாகும்.

உலகின் இரண்டாவது பெரிய இயற்கைவாயு (கேஸ்இருப்பும்நான்காவது பெரிய பெட்ரோலிய இருப்பும் ஈரானிலேயே உள்ளன.

மற்ற அரபு நாடுகளில் இயற்கையை ஆக்ரமித்த போல் இரானை ஆக்ரமிக்க முடியவில்லை என்பதே இரான் மீது மேற்குலகிற்கான முக்கிய கோபமாகும். அது இஸ்லாமின் அடையாளத்தை சுமந்திருக்கிறது என்பது அவர்களுக்கு இந்த வெறுப்பை காட்டுவதற்கான வாய்ப்பாக அமைந்து விட்டது. 

இரான் தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கட்டவிழ்த்துவிடுகிற கொடூர தாக்குதல்களும் சதி நடவடிக்கைகளும் ஒரு செழிப்பு மிக்க நாட்டையும் அதன் மக்களையும் சீரழிக்கும் திட்டமாகும். உலகம் முழுவதிலுமுள்ள நீதியின் பக்கம் நாட்டமுள்ள இதை கண்டித்தாக வேண்டும்.

அல்லாஹ் நியாயத்திற்கு துணை நிற்பானாக! ஆக்ரமிப்புச் சக்திகளை அவனது கருணையை கொண்டு முறியடிப்பானாக!

 



 

2 comments:

  1. Anonymous10:24 PM

    மாஷா அல்லாஹ் நிறைவான கட்டுரை

    ReplyDelete
  2. Anonymous10:15 AM

    சிறந்த பதிவுகள் ஜி djpunjab is

    ReplyDelete