வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 10, 2024

ஈமான் உறுதி பட

 إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ

ரபீஉல் ஆகிர் மாதத்தில் முஸ்லிம்களான நாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் நினைவு விழாக்களை நடத்துகிறோம். அன்னார் 561 ம் ஆண்டு இதே போன்ற தொரு ரபீஉல் ஆகிர் மாதம் 11 ம் தேதி இறப்பெய்தினார்கள்.

இஸ்லாமிய உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற ஆளுமைகளில் ஒருவர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்.

அன்னார் ஹிஜ்ரீ 470 ரமலான் பிறை ஒன்றில் பிறந்தார்கள். நாம் வாழும் இந்த ஆண்டு, 1446 எனும் போது சற்றேறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்துள்ளார்.

900 ஆண்டுகளாக முஸ்லிம்களின் இதயத்தில் ஆட்சி செய்யும் ஒரு பெயராக அவரது பெயர் திகழ்கிறது.

அவரது சிறப்பு என்ன ? முஸ்லிம் சமுதாயம் அவரால் என்ன பயன் பெற்றது என்பது கவனிக்கத் தக்க ஒன்றாகும்.

அவர் பரிசுத்தமான ஈமானிய வாழ்க்கை வாழ்ந்தார். அதை உறுதிபட மக்களுக்கு உபதேசித்தார். அதில் பெரிய வெற்றியும் கண்டார் என்பதே அப்துல் காதிர் ஜீலானி ரஹி அவர்களின் முக்கியச் சிறப்பாகும்.

ஈமானிய வாழ்க்கை என்பது ஆகப் பரிசுத்தமான ஒரு வாழ்வாகும்.

பொருளாதாரம், அரசியல், சமூக ஏற்ற தாழ்வு என எதற்கும் மயங்காமல், அவற்றை பெரிது படுத்தாமல்  அல்லாஹ்வே பிரதானம் என்ற எண்ணத்தில் உறுதியோடு நின்று வாழ்கிற வாழ்வாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில தீய குணங்களைப் பற்றி சொல்கிற போது இத்தகையவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்று கூறுவார்கள்.

·        مَن حمل علينا السلاحَ فليس مِنَّا ، ومَن غَشَّنا فليس مِنَّا

·        وعن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: “من خبب خادما على أهلها فليس منا، ومن أفسد امرأة على زوجها فليس منا.أخرجه البخاري في التاريخ الكبير

·        وعن عبد الله بن عمرو، يبلغ به النبي صلى الله عليه وسلم، قال: “‌من ‌لم ‌يرحم صغيرنا ويعرف حق كبيرنا فليس منا”.أخرجه البخاري 

·        عن حذيفة، عن النبي صلى الله عليه وسلم قال: “إنها ستكون أمراء يكذبون ويظلمون، فمن صدقهم بكذبهم، وأعانهم على ظلمهم، فليس مني ولست منه، ولا يرد علي الحوض، ومن لم يصدقهم بكذبهم ولم يعنهم على ظلمهم، فهو مني وأنا منه، وسيرد علي الحوض”.: أخرجه أحمد

 

இந்த நபி மொழிகளில் இடம் பெற்றுள்ள நம்மைச் சார்ந்தவர் அல்ல என்ற  வார்த்தைக்கு அவரது ஈமான பரிபூரணமடையவில்லை என்று அறிஞர்கள் விளக்கம் கூறுவார்கள்.

ஈமானிய வாழ்வென்பது இந்த அளவிலான பரிசுத்தம் மிக்கது.

இதை முஸ்லிம்களுக்கு காலம் தோறும் உணர்த்துபவர்களாக இறைநேசர்கள் திகழ்கிறார்கள். அந்த வகையில் இன்று வரை மக்களை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு ஆளுமை தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹி.

இறைக்காதலால் அல்லாஹ்வை நெருங்கிவிடுகிற மக்கள் ஏராளம் பேர் உண்டு.

சாதாரணமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்களது நம்பிக்கையை பாதியாகவும் இறை நம்பிக்கையை மீதியாகவும் கொண்டு வாழ்பவர்களே!

ஒரு அதிகாரி வெளிநாடு செல்ல  7 மணிக்கு விமானத்தை பிடிக்க வேண்டும். 4 மணிக்கு டிரைவரை வரச் சொல்லியிருந்தார். டிரைவர் வர ½ மணி நேரம் தாமதானது. விமானத்தை பிடிக்க  அதிகாரி கிளம்பினார். பாதி தூரம் சென்ற போது டயர் பஞ்சராகிவிட்டது. அதிகாரி மிகவும் பதறினார். விமானத்தை தவற விட்டு விடுவோம் என்று புலம்பினார். சற்று நேரத்தில் ஒரு இளைஞன் அந்த வழியாக வந்தான். அவருக்கு லிப்ட் கொடுத்து விமான நிலையத்தில் இறக்கி விட்டான். அவரசர அவசரமாக விமானத்திற்குள் ஏறி அமர்ந்த அவருக்கு அந்த இளைஞன் இறைவன் அனுப்பிய உதவியாக தெரிந்தான். அந்த இளைஞருக்கு மனதார நன்றி சொன்னார்.

விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் விமானம் கோளாருக்கு உள்ளாகியது. அவசரகால ஜாக்கெட்டை அணிந்து குதிக்க தயாராகுமாறு விமானி அறிவித்தார். விமானம் முழுக்க பயங்கர பதற்றம் பற்றிக் கொண்டிருந்தது. அதிகாரிக்கு அப்போது டிரைவர் தாமதமாக  வந்ததும். வண்டி பஞ்சார் ஆனதும் கடவுள் தன்னை இந்த விபத்திலிருந்து காப்பற்றுவதற்கு செய்த ஏற்பாடாகவும், அந்த இளைஞன் மரணத்தின் தூதுவனாகவும் தோன்றினான்.

மக்கள் பெரும்பாலோர் இப்படித்தான் நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையே தள்ளாடுபவர்களாக  இருக்கிறார்கள். ஆனால் உறுதிமிக்க ஈமான் கொண்டவர்கள் எது நடந்த போதும் அது அல்லாஹ்வின் நாட்டம் என்று திடமாக இருப்பார்கள்.

டிரைவர் தாமதமானது, டயர் பஞ்சரானது, உதவி கிடைத்த்து. இப்போது விமானம் பழுதாகியிருப்பது அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டம் என்று உணர்வார்கள். அந்த இளைஞன் மூலம் உதவி கிடைத்த்து போல அல்லாஹ் இங்கும் உதவுவான் என்று நல்லெண்ணம் கொள்வார்கள். நம்பிக்கையின் அடிப்பட்டயில் பிர்ச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள்.

இத்தகைய அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்களை நாம் இறைநேசர்கள் என்கிறோம்.  

அவர்கள் எல்லோரும் சமூகத்திற்கு தெரிவதில்லை.

இஹாயாவின் விரிவுரை இத்திஹாபில் ஒரு ஹதீஸ் வருகிறது.

في الحديث القدسي (أوليائي تحت خبائي ولا يعرفهم غيري

 

அல்லாஹ் சொல்கிறான். என் நேசர்கள் எனது போர்வைக்குள் இருக்கிறார்கள். என்னை தவிர அவர்களை யாரும் அறிய முடியாது.

 

பொதுவாக வலிமார்கள் வெளி உலகிற்கு வெளிப்படுகிறவர்கள் அல்ல. அது அல்லாஹ்விற்கும் அவனுக்கு நெருக்கமான அடியார்களுக்கும் மட்டுமே உள்ள ரகசியமாகும்.

 

இஹ்யாவில் இது சார்ந்த பல தகவல்களையும் பார்க்க் முடியும்.

 

கிழ்ரு நபியை சந்திப்பது இறைநேசர்களின் ஒரு பெரிய அந்தஸ்தாகும். அந்த வகையில் பிஷ்ருல் ஹாஃபி என்ற இறைநேசர் கிழ்ரு அலை அவர்களை சந்தித்தார்.

 

எனக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

 

மாஷா அல்லா! கிழ்ரு அலை, “வணக்கங்களை அல்லாஹ் உனக்கு இலேசாக்குவானாக என்று துஆ செய்தார்கள். இன்னும் அதிகமாக துஆ செய்யுங்கள் என்றார் அவர். அதற்கு கிழ்ரு (அலை) அல்லாஹ் அந்த வணக்கங்களை மறைப்பானாக என்று துஆ செய்தார்கள்.

 

    وروي أنه رأى الخضر عليه السلام : فقال له : ادع الله تعالى لي . فقال : يسر الله عليك طاعته . قلت : زدني . قال : وسترها عليك .

 

அதன் பிறகு பிஷ்ருல் ஹாபி அவர்கள் அல்லாஹ்விடம் அதிகம் கேட்ட துஆ இறைவா என்னை மறைப்பாயாக!

 

அதுவே தனது அந்தஸ்திற்கான காரணம் என அவர் கூறுவார்

 

 

قيل لبشر بأي شيء بلغت هذه المنزلة قال : كنت أكاتم الله تعالى حالي   -معناه - أسأله أن يكتم علي ويخفي أمري .

 

இது வே இறைநேசர்கள் விவகாரத்தில் பொதுவான நியதி.

 

இதற்கு அப்பால் சமுதாயத்தின் தேவைக்காகவே அல்லாஹ் சிலரை வெளிப்படுத்துகிறான்.

 

அவர்களை சமுதாயம் அடையாளம் கண்டு கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்கிறான்.

 

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரமலான் பிறை 1 ல் பிறந்தார்கள்.

அன்று காலை முதல் மஃரிபு வரை அவர்கள் தனது தாயிடம் பால் அருந்தவில்லை.

அந்த மாதம் முழுவதும் அவர் பகல் நேரத்தில் பால் அருந்தவில்லை என்பதை அந்த ஊரே வியந்து கவனிதத்து.

 

அதற்கு அடுத்த  வருடம் ஷஃபானின் 30 நாளை தீர்மாணிப்பது காஜிகளுக்கு குழப்பமானது.

 

அடுத்த நாள் உறவுக்கார பெண்மணிகள் ஜீலானி அவர்களின் தாயாரிட்த்தில் வந்து, உங்களது மகன் இன்று பால் குடித்தாரா என்று விசாரித்தார்கள் . அவர் பால் குடிக்க வில்லை என்ற போது அன்றைய தினம் நோன்பு தொடங்கியிருக்கிறது என்பதை அறிந்து உண்பதை நிறுத்துக் கொண்டார்கள்

 

வரலாற்று ஆசிரியர்கள் இப்படி கூறுவதுண்டு.

மக்கள் பிறந்து வளர்ந்து படித்து காழி ஆவார்கள். ஜீலானியோ காழியாகவே பிறந்தார்

 

இதுவும் இதுபோன்ற பல அற்புதங்களும் இறைநேசர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காக அல்லாஹ் செய்கிற ஏற்பாடுகளாகும்.

 

அந்த வகையில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது ஈமானிய வாழ்வை எல்லா அம்சத்திலும் வெளிப்படுனார்கள்

 

காசு பணமோ அதிகாரமோ செல்வாக்கோ அவர்களை எந்த இடத்திலும் மயக்கத்திற்குள்ளாக்க வில்லை.

 

நமக்கெல்லாம் தெரிந்த செய்தி,

அவர் 18 வயதில் கல்வியை தேடி பக்தாதுக்கு புறப்பட்ட போது அவருடைய குழுவினரை கொள்ளையர்கள் சூழ்ந்தார்கள். அப்போது தனது சட்டைக்கையின் கீழ் பகுதியில் 40 தங்க காசுகளை வைத்து தனது தாயார் தைத்துள்ளார் என்று கூறினார்.

உண்மை பேசுவது, அம்மாவின் சொல்லை மதிப்பது ஆகியவை மட்டுமல்ல பணத்தை பெரிதாக கருதாமல் இருப்பது அவரது இளமையின் இயல்பாக இருந்தது என்பதை பார்க்கிறோம்.

இன்றைய நாம் வாழ்கிற உலகு இளைஞர்களுக்கு பணத்தாசையை ஊட்டுகிறது. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று தூண்டுகிறது. ஆனால் ஈமானிய வாழ்வு பணத்தை விட உண்மைக்கும் மதிக்க வேண்டியவற்றை மதிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க தூண்டுகிறது. பணம் நமது ஈமானுக்கு போட்டியாகிவிடக் கூடாது என்பதை கற்பிக்கிறது.  

ஜீலானி ரஹ் அவர்களின் வாழ்வு இன்றைய இளைஞர்களுக்கு தருகிற அருமையான பாடம் இது.

ஏன் ஜீலானியை கொண்டாட வேண்டும் என்கிறோம் என்பதற்கான காரணம் இது.

இன்றைக்கு இருப்பது போலவே அன்றைய முஸ்லிம் சமுதாயமும் பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த காலம் அது.

சிலுவையுத்தக்காரகள் முஸ்லிம்களின் நிலப்பரப்புகளில் பிரதானமான பலவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். பைத்துல் முகத்தஸ் அவர்களிடம் சிக்கியிருந்த்து. சிரியா வரை அவர்களது ஆதிக்கம் பரவியிருந்தது.

அதே நேரத்தில் முஸ்லிம்களை உள்ளுக்குள் பலவீனப்படுத்தும் பணியை பாத்தினிய்யா என்ற பிரிவினர் வேகமாக செய்து வந்தனர். முஸ்லிம்களை இறை கட்டுப்பாடுகளை கடந்து செல்லும் சுதந்திர சிந்தனை கொண்டவர்களாக மாற்றிக் கொண்டிருந்தனர்.

அதே போல தரீக்காகாக்களை சார்ந்தவர்களுக்கும் இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் சமூகத்தை சலனப்படுத்திக் கொண்டிருந்தன.

அதே போல இயற்கை பேரழிவுகளும் அதிகமாக இருந்த்து. நில நடுக்கங்களும் பஞ்சமும் மக்களை வாட்டி வதைத்தது.

இதுமாதிரியான சூழலில் ஆர்வமும் துடிப்பும் உள்ள இளைஞர்கள் பல்வேறு திசைகளில் தடுமாறிப் போவதற்கான வாய்ப்பு இருந்த்து.

ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் தனது வாழ்வில் கல்வியை திரட்டிக் கொள்ளும் தீர்மாணத்தில் அது வும் உச்சபட்சமாக அனைத்தையும் அறிந்து கொள்ளும் தீர்மாணத்தில் உறுதியாக இருந்தார்கள்.

எந்த இளைஞனும் சூழ்நிலைகளின் நெருக்கடிகளை தாண்டி தனது இலக்கில் கவனமாக இருக்க வேண்டும். அவர் சர்ச்சைகளுக்கு அவசரமாக சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதை ஜீலானி ரஹ் அவர்களின் வரலாறு கற்றுத்தருகிறது.

ஜீலானி ரஹி அவர்களின் அந்த இளமைப் பருவத்தை வரலாறு காட்டுகிறது.

وفي غمرة هذه الفوضى كان الشيخ عبد القادر يطلب العلم في بغداد، وتفقه على مجموعة من شيوخ الحنابلة ومن بينهم الشيخ أبوسعيد المُخَرِمي، فبرع في المذهب والخلاف والأصول وقرأ الأدب وسمع الحديث على كبار المحدثين. وقد أمضى ثلاثين عاما يدرس فيها علوم الشريعة أصولها وفروعها

 அபூஸஈதி அல் முஹ்ரமீ என்ற ஆசிரியரிடம் 30 ஆண்டுகள் கல்வி கற்றார். இது அசாதாரணமானது என்பதை நாம் அறியலாம்.

அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்தார். அபுல் ஹஸன் அலி நத்வி எழுதுவார், “அன்றைய காலத்தில் வழக்கில் இருந்த அனைத்து துறைகளையும் கற்றறிந்தார்.

இளம் தலைமுறைக்கான தெளிவான செய்தி இது.

இன்றைய இளம் தலைமுறையிடம் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஏதேதோ வழிகளில் அந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் பிரதானமாக கவனம் செலுத்த வேண்டியது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள் . அதன் பிறகு உங்களது ஈடுபாட்டை தீர்மாணியுங்கள்

கூர்மைப் படுத்திய பாகூபா பயணம்

 

இந்த  கலவித்தொடரில் தேவையான காசை திரட்டிக் கொள்வதற்காக அருவடை நடக்கிற நாட்களில் கிராமங்களுக்கு போவது மாணவர்களின் பழக்கம். அந்த வகையில் பாகூபா என்ற ஊருக்கு பயணம் செய்தார். அங்கு ஷரீபு அல் பஃகூபி என்ற ஷைகை சந்தித்தார். அவர் கூறினார். எனது சீடர்கள் யாரிடமும் கையேந்தக் கூடாது அல்லாஹ் ஒருவனை தவிர.

அந்த வார்த்தைகள் ஜீலானி ரஹ் அவர்களது வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தை உண்டு பண்ணின.

 

சொற்ப்போர்

வரலாற்றில் மற்றுமொரு அதிசயமாக ஜீலானி ரஹ் அவர்களது திறமையை கண்டு பிடித்த அவரது ஆசிரியர் அபூஸஈத் அல் முக்ரமீ தனது மாணவரை மக்களுக்கு சொற்பொழிவு ஆற்றுமாறு கேட்டுக் கொண்டார்.  ஹிஜ்ரீ 501 ஆண்டின் தொடக்கத்தில் பாபுல் அஸஜ் எனும் இட்த்தில் ஒரு மேடை அமைத்துக் கொடுத்து இங்கிருந்து பேசுங்கள் என்று கூறினார் .

 

பெருமானார் (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி பேசுங்கள் என்று சொன்ன  பிறகு பேச ஆரம்பித்தார்.

 

وحكى ابن الملقن في طبقات الأولياء أن الشيخ عبد القادر الجيلي قال رأيت النبي صلى الله عليه وسلم قبل الظهر فقال لي يا بني لم لا تتكلم قلت يا أبتاه أنا رجل أعجمي كيف أتكلم على فصحاء بغداد فقال لي افتح فاك ففتحته فتفل فيه سبعا وقال تكلم على الناس وادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة فصليت الظهر وجلست وحضرني خلق كثير - الفتاوى الحديثية لابن حجر الهيتمي – 213.

 

அது வரலாற்றின் புதிய மாற்றங்களுக்கான தொடக்கமாயிற்று. உரையாற்றினார். உரையாற்றினார். வாரத்திற்கு மூன்று நாட்கள் என சுமார் 40 ஆண்டுகள் அங்கிருந்து உரையாற்றினார். வெள்ளி ஞாயிறு ஆகிய நாட்களில் காலையிலும், செவ்வாய்க்கிழமை மாலையிலும் அவர் ஆற்றிய உரைகளை கேட்க உலகின் அனைத்து பாகத்திலிருந்தும் மக்கள் வந்து குழுமினர்.

பெருமானாரின் பரக்கத்தில் தொடங்கிய நிகழ்வல்லவா அது ?

 

ஒரு தடவை அந்த சொற்பொழிவை கேட்க 70 ஆயிரம் பேர் கூடினர். உரை நிகழ்த்தப்படும் நாட்களில் சொற்பொழிவை குறிப்பெடுப்பவர்களால் 400 மைக்கூடுகள் காலியாகும் , சொற்பொழிவின் தாக்கத்தில் சிலர் இறந்திருக்கிறார்கள்,

இப்னுல் ஜவ்ஸீ மலைத்து கூறுகிறார். ஒரு வசனத்திற்கு 40 விளக்கங்கள்.

حضر يوما مجلسه الشيخ أبو الفرج ابن الجوزي ففسر الشيخ عبد القادر آية وذكر فيها وجوها والى جانبه الشيخ أبو الفرج من يسأله . أتعرف هذا القول؟ فيقول نعم الى أن بلغ أحد عشر يعرفها أبو الفرج. ثم زاد الشيخ حتى انتهى إلى أربعين وجها، وعزا كل وجه اله قائله فاشتد تعجب الشيخ أبي الفرج من كثرة علم الشيخ ثم قال نترك المقال ونرجع للأحوال لا اله الا الله محمد رسول الله ( نور الأبصار 360 )

தவக்குலுக்கு ஷைக் ஜீலானி ரஹ் ஒரு விளக்கம் கூறினார்

'ஒரு இறந்த உடல் எப்படி தன்னை குளிப்பாட்டுபவனின் கையில் ஒப்படைத்து விடுமோ அப்படி ஒரு அடியான் இறைவனிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். அதுதான் சரியான தவக்குல்'

ஒப்படைப்பு என்பதற்கு இதைவிட சிறந்த விளக்கம் இந்த உலகில் இருக்க முடியுமா என்ன?

உணவளித்தலின் இன்று முஸ்லிம் சமுதாயம் முன்னோடியாக இருக்கிறது. ஜீலானி ரஹ் கூறுகிறார்கள்.

وقال : فتشت الأعمال كلها ، فما وجدت فيها أفضل من إطعام الطعام ، أود لو أن الدنيا بيدي فأطعمها الجياع .

 

மனிதர்கள் எல்லோரையும்  திருப்தி படுத்த முடியாது.

 

மூன்று விச்யங்கள் உனது நேரத்தை வீணடித்து விடும்

1.   தவறிப்போனதைப் பற்றி கவலைப் படுவது அது திரும்பவராது,

2.   பிறரோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது அது பயனளிக்காது

3.   எல்லா மனிதர்களை திருப்திப் படுத்த நினைப்பது அது நடக்காது

 

·         وقال : ثلاث امور تضيّع بها وقتك: التحسّر على ما فاتك لأنه لن يعود، ومقارنة نفسك بغيرك لأنه لن يفيد، ومحاولة إرضاء كل الناس لأنه لن يكون

 

சொற்பொழிவாளர்கள் ஊர் ஊராய் சென்று பேசுவார்கள் . ஜீலானி ரஹ் உட்கார்ந்த் இட்த்திலிருந்து பேசினார்கள். அவரக்ளை தேடி உலகம் வந்த்து.

 

சுமார் 50 ஆயிரம் பேர் அவரது உரைக் கேட்டு இஸ்லாமை தழுவினார். பல பாதிரியார்கள் அவரிடம் சென்று இஸ்லாமை ஏற்குமாறு எங்களுக்கு கனவில் சொல்லப்பட்ட்து என்று கூறி வந்து இஸ்லாமை ஏற்றனர்.

 

இலட்சக்கணக்கானோ திருந்தினர்.

அந்த திருத்தம் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கு கூட கிடைத்தது.

அரசர் தப்பான ஒரு வரை நீதிபதியாக நியமித்த போது சபையில் வைத்து அரசரின் முன்னிலையில் ஜீலானி ரஹ் கூறினார்.

 

அப்பாஸிய கலீபா முக்தபா லி அம்ரில்லாஹ்  المقتفي لأمرالله    இப்னுல் முஜஹ்ஹிம் என்ற அக்கிரமக்கார்ரை நீதிபதியாக நியமித்த போது ஜீலானி ரஹ் அவர்கள் மின்பரின் மீதேறி அறைகூவினார்கள்.

 

وليت غلي المسلمين أظلم الظالمين ، ما جوابك غدا عند رب العالمين ، ارحم الراحمين .

فارتعد الخليفة وبكي   ، وعزل القاضي المذكور ( قلائد الجواهر )

 

இத்தகைய மகத்தான மாற்றங்கள் காலத்தை கடந்தும் நின்று வாழ்கின்றன. அதனால் தான் முஹ்யித்தீன் தீனுக்கு உயிர் கொடுதவர் என்ற புகழ் பெயரில் இன்றும் அவர் பாராட்ட்டப்படுகிறார்.

இறைநேசர்கள் நமது ஈமானை சுத்தப்படுத்தியவர்கள் உறுதிப்படுத்தியவர்கள்.

அவர்களை நேசிப்பது நாம் நமது ஈமானில் அக்கறை செலுத்துவதாகும். அவர்களது வழியை கடைபிடிப்பது நாம் ஈமானில் உறுதி கொள்வதாகும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

3 comments:

  1. மவுலானா கல்வித்தொடர்னு போடுங்க

    ReplyDelete
  2. Anonymous7:11 PM

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
    அருமை அருமை அருமை
    بارك الله بارك الله في علمك وحياتك ومالك

    ReplyDelete