வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 17, 2024

ரத்தன் டாடா மறைவு ஏன் கவலை அளிக்கிறது.

இந்தியாவின் புகழ்மிக்க வியாபார நிறுவனமான டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9 ம் தேதி தன்னுடைய 86 வது வயதில் காலமானார். பார்ஸி மதத்தை சார்ந்தவரான அவர்  அக் 10 ம் தேதி மும்பை வோர்லி பகுதியில் உள்ள பார்ஸிகளுக்கான அடக்க விடத்தில் அரசு மரியாதைப் படி மூவண்ண கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செய்யப் பட்டது.

அவருக்கு செய்யப் பட்ட அந்த இறுதி மரியாதையை நியாயமானது ஏன் இன்னும் கூட அதிக முக்கியத்துவம் அவருக்கு தரப்பட வேண்டும் என்று மக்கள் கருதினர் . நாட்டின் பல பகுதிகளிலும் ஏன் பட்டி தொட்டிகளிலும் கூட ரத்தன் டாடாவின் மறைவுக்கு கவலை தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருக்கின்றன. அனுதாப கூட்டங்கள் நடை பெற்றன.

ரத்தன் டாடா இந்தியாவின் ஒரு பெரும் செல்வந்தர். பிரபலமான பல நிறுவன்ங்களின் தலைவர், இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றவர் உலகின் பல நாடுகளிலும் செல்வாக்குப் படைத்தவர். அதனால் அவருக்கு இந்த மரியாதை கிடைத்து விடவில்லை.

ரத்தன் டாட்டாவின் குண இயல்புகளும் அவர் வெளிப்படுத்திய அறம் சார்த வாழ்வுமே அவருக்கு இந்த மரியாதையை பெற்றுத் தந்துள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும், குறிப்பாக ஒவ்வொரு வியாபாரியும் கவனிக்க வேண்டிய கருத்து இது.

பணம் மட்டுமல்ல குறிக்கோள்… அதையும் தாண்டி..   

நீண்ட காலம் வரை இந்தியாவில் பணக்காரர் என்று சொல்வதானால் டாடா பிர்லா என்று தான் சொல்வார்கள். இப்போதும் கூட மரியாதைக்குரிய பணக்காரர்கள் என்றால் டாடா பிர்லாக்களை தான் இந்திய மக்களில் விவரமறிந்தவர்கள் குறிப்பிடுவார்கள்

அம்பானி அதானிகள் எல்லாம் தற்போதைக்கு வந்தவகளே ! அவர்களது தொழில் சாம்ராஜ்யம் எவ்வளவு தான் பெரிதாக தெரிந்தாலும் அவர்களை மரியாதையான பணக்காரர்களாக பார்ப்போர் மிக குறைவு தான்.

இலஞ்சம் ஊழல் ஆகியவற்றின் மூலம் வளர்த்துக் கொண்ட அரசியல் செல்வாக்குதான் பிந்திய இருவரின் வளர்ச்சிக்கு காரணமாகும்.

முகேஷ் அம்பானியின் தந்தை தீருபாய் அம்பானி கூறுவார் நான் ஒரு காலில் தங்க ஷூ வும் மற்றொரு காலில் வெள்ளி ஷூவும் அணிந்திருக்கிறேன். இந்திய அதிகாரிகளை நான் என்னவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக இதுவரை தங்க ஷூ வை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்ட தில்லை என்று கூறுவார்.

அவரது தொழில் சாம்ராஜ்யம் எந்த அடிப்படையிலானது என்பதை அது காட்டுகிறது.

அதே நேரத்தில் பிர்லா குழுமங்களின் தற்போதைய தலைவர் குமாரமங்கலம் பிர்லா ஒரு பேட்டியில் சொல்கிறார். எங்களது தந்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது, வியாபாரத்தில் ஜெயிப்பது என்பதை விட நாணயமாக இருப்பதே இலட்சியமாக இருக்க வேண்டும். அதனால் எங்களது வியாபாரத்தில் நாணயம் தான் முதன்மையானது

டாடாக்களும் இதே அடிப்படையில் தான்

1.   நம்பிக்கை நாணயம்

2.   தரம்

என்பதை பிரதானமாக கொண்டிருந்தனர்.

3.   தங்களது வளர்ச்சி என்பதை விட நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அதிக முக்கியத்துவம்  கொடுத்தனர்.

இஸ்லாமும் வியாபாரமும்.

இஸ்லாம் வியாபாரத்தை போற்றுகிறது . திருக்குர் நற்செயல்களை போற்றுகிற இடங்களில் அதை வியாபாரத்தோடு ஒப்பிடுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ (10تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ 

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை  நரகிலிருந்து காக்கிற வியாபாரம் என்கிறது.

இன்னுமொரு இட்த்தில்

إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم 

 

அல்லாஹ்வுக்கு முழுமையாக முஃமின்கள் கட்டுப்பட வேண்டும் என்பதை அல்லாஹ் வாங்கிக் கொண்டான் என்று வியாபார வழக்கில் குர் ஆன் பேசுகிறது.

تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ என்ற சொல் வியாபாரத்திற்கு ஒரு உன்னதமான நோக்கம் இருக்க வேண்டும் என்று கற்பிப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். இதையே திருக்குர் ஆனின் மற்றொரு வசனம்

يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ 

என்ற வசனமும் வலியுறுத்துவதாக கூறுகிறார்கள்.

வியாபாரத்தின் நோக்கம் என்ன ?

 

பணம் சம்பாதிப்பது என்பது தான் வியாபாரத்தின் முதல் நோக்கம். அதில் சந்தேகமில்லை.

 

அதை கடந்து ஒரு சரியான வியாபாரி என்பவர் மக்களுக்கு பலனளிக்க கூடியவற்றை கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்.

 

ஒரு மளிகைக் கடைக்கார்ரை கவனித்துப் பாருங்கள். அவரிடம் விளக்கில் வைக்கிற திரி வைத்திருப்பார். எப்போதாவது தேவைப்ப்படுகிற பொருட்களை வைத்திருப்பார். அவர் தனது சம்பாத்தியத்திற்காக வைத்திருக்கிறார் என்றாலும் மக்கள் கேட்டு வருகிற போது அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் பொருட்களை வைத்திருப்பார்.

 

இது அல்லாஹ் கொடுப்பவற்றை மக்களிடம் கொண்டு போய்ச்  சேர்க்கிற வேலையாகும்.

 

உருதுவில் இதை “குதா னே தாஜிர் கூ அப்னா முபல்லிஃ பனாயா கே! இறைவன் வியாபாரியை தனது ஏஜெண்டாக வைத்திருக்கிறான் என்று சொல்வார்கள்.

 

அதனால் ஒரு வியாபாரி தான் சம்பாதிப்பது என்று மட்டும் நினைக்காமல் மக்களுக்கு தேவையானதை திரட்டிக் கொடுப்பது என்றும் தனது வியாபாரத்திற்கான நோக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

 

இன்று வியாபாரத்தை தொடங்குகிற பலருக்கும் தனது சம்பாத்தியம் மட்டுமே நோக்கமாக இருக்கிறது.

 

மக்களுக்கு உபயோகமற்ற அல்லது மக்களது காசை பொறுப்பற்ற வகையில் கொள்ளையடிக்கிற பல பொருட்களையும் வியாபாரம் செய்கிறார்கள்.

 

செல்போன் கம்பனிகள் புதிது புதிதாக நாளுக்கு ஒரு புது மாடலை அறிமுகப்படுத்துவதை கவனியுங்கள், இதில் முன்னேற்றம் மேம்பாடு என்பது மிக சின்ன சில விசயங்கள் தான் . இதில் பிரதானமாக இருப்பது மக்கள் பையில் இருக்கிற காசை தம் கைகளுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது தான்.

 

எனவே ஒரு வியாபாரி தனது வியாபாரத்தின் முதல் குறிக்கோளாக மக்களுக்கு பயனுள்ளவற்றை வியாபாரம் செய்வது என்று முடிவு செய்ய வேண்டும்.

டாடாக்கள் அத்தைகைய வியாபாரங்களில் தான் இறங்கினார்கள்.

 

டாடாக்களின் முதல் பெரிய தொழில் இரும்பு  உற்பத்தியாகும்.

 

டாடா நிறுவனத்தின் தலைவர் ஜெம்ஷெட் ஜீ  ஆங்கிலேயர்களின் இரும்பு உறபத்திக்கான அனுமதி கேட்ட போது அவர்கள் இளக்காரமாகவே அனுமதி கொடுத்தார்கள். நீங்கள் தயாரிக்கும் இரும்பை நாங்கள் சாப்பிட்டு விடுவோம் என்று நக்கலாக கூறினார்கள்.

 

ஆனால் பிற்காலத்தில் உலக யுத்தங்களின் போது பிரிட்டனுக்கு இரும்பு தேவைப்பட்ட போது அவர்கள் டாடாக்களை அனுகினார்கள். அப்போது டாடா சொன்னார். நீங்கள் ஜீரணிக்க முடியாத அளவு எங்களால் இரும்பை தர முடியும்

 

மக்களுக்கு பயனளிக்கும் நன்மையான ஒரு திட்ட்த்தோடு தொடங்கு  கிற வியாபாரம் உரிய கவனம் செலுத்தப் பட்டால் வியாபாரிகளை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்

 

வியாபாரி கடை பிடிக்க வேண்டிய இரண்டாவது முக்கிய தத்துவம் அவரது துறை சார்ந்த முழு ஈடுபாடு.

 

அதாவது தேவையான உழைப்பும் தெளிவும் அவரிடம் இருக்க வேண்டும்.

 

பொதுவாக வியாபாரிகள் மூலதனத்துடன் தொழிலில் ஈடுபடுகிற போது அவருக்கு வியாபாரத்தின் அடிபட்ட பணிகள் தெரிந்திருக்க தேவையில்லை என்று நினைக்கலாம்.

 

ஆனால் ஒரு வெற்றிகரமான முதலாளிக்கு அவரது வியாபாரத்தின் அடி நிலை வேலையும் தெரிந்திருக்க வேண்டும். அல்லது அதை பற்றிய புரிதல் இருக்க வேணும்.

 

சாதாரணமாக நம்முடைய வழக்கில் சொல்வார்கள் . டீக்கடை நடத்துகிறவருக்கு டீ போட தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் தொழிலாளி ஒரு நாள் வராவிட்டால் கூட அவரால் சமாளிக்க முடியும்.

\

தற்போது இறந்து போன ரத்தன் டாடா ஆரம்ப கல்வியை மும்பையில் படித்தார் அதன் பிறகு அமெரிக்காவில் கார்னல் பல்கலை கழகத்தில் பி ஆர்க்ஸ்டக்ரஜல் இன்ஞினியரிங்கில் பட்டம் பெற்று அங்கு வாழ்ந்து வந்தார். 1961 ல் அவரது பாட்டியின் அழைப்பில் பேரில் இந்தியாவிற்கு வந்த அவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஒரு சாதாரணா தொழிலாளியாக பணியில் சேர்தார். இது அவருக்கு தொழில் அனுபவத்தையும் தொழிலாளர்களுடன் பழகும் அனுபவத்தையும் கொடுத்தது.

 

இன்று வரை இது ராத்தன் டாடாவின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.

 

ஒரு வியாபாரி அவரது வியாபாரத்தில் தனது உழைப்பிற்கும் இடமளிப்பதை இஸ்லாம் பாராட்டுகறது

 

عن رافع بن خديج قال: ((قيل: يا رسول الله، أي الكسب أطيب؟ قال: كسب الرجل بيده، وكل بيع مبرور

 

வெற்றிகரமான எந்த ஒரு வியாபாரியும் வளர்ந்த் நிலையில் கூட தனது வியாபாரத்திற்கான பணிகளை அவரே முன்னின்று செய்வார்.

 

வளர்ந்து விட்ட சில பிரியாணி கடைக்கார்ர்கள் அவர்களே முன்னின்று இப்போதும் பிரியாணி செய்வதவையும் அதை மேற்பார்வையிடுவதையும் இப்போதும் நாம் கவனிக்கலாம்.

 

அதே போல செய்யும் வியாபாரம் பற்றிய முழு அறிவும் வியாபாரிக்கு இருக்க வேண்டும். முஸ்லிம்களை பொறுத்தவரை அவரது வியாபாரம் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற விபரங்களும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

 

لهذا كان عمر رضي الله عنه يقول: ((لا يبع في سوقنا إلا من قد تفقه في الدين)

 

فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه، أمن الحلال أم من الحرام))[10].

 

ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள குர் ஆன் வழிகாட்டுகிறது

 فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

 

இது தொடர்ந்து அவர் தனது துறை சார்ந்து  அதன் முன்னேற்றங்கள் குறித்து விசாரானையிலேயே இருக அறிவுறுத்துகிறது.

 

ரத்தன் டாடா முதன் முதலில் டாடா குழுமத்தின் நெல்கோ என்ற நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றார். அது அப்போது ரேடியோக்களை தயார் செய்து கொண்டிருந்தது. டாடா சூழ்நிலைகளை கவனித்த்தார்  .ரேடியோ தொழிலுக்கு பெரிய எதிர் காலம் இல்லை என்பது தெரிந்த்து. அந்த கம்பெனியை எலக்டாராணிக் துறையில் வேறு பணிகளில் ஈடுபடுத்தினார். அந்த கம்பெனியை வெற்றிகரமானதாக ஆக்கினார் .

 

ரத்தன் டாடாவின் மீது மக்களின் கவனத்தை திருப்பிய முதல் நிகழ்வு அது.   

 

வெற்றிகரமான வியாபாரிக்கான மூன்றாவது அம்சம் நாணயம்.

 

فعن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال: ((التاجر الصدوق الأمين مع النبيين، والصديقين، والشهداء)

 

டாடா குழுமத்தின் மதிப்பிற்கும் ரத்தன் டாடா வின் மரியாதைக்கும் அவரது நாணயமே மிக முக்கிய காரணமாக இருந்தது.

 

வளர்ந்து வருகிற ஒவ்வொரு வியாபாரியும் இந்த அம்சத்தை கவனிக்க வேண்டும்.

1910 ல் ரத்தன் டாடா அவரது கம்பெனிக்கு பொறுப்பேற்றார். அதன் பிறகு விறு விறு வென்று அவரது கம்பணி 40 சதவீத வளர்ச்சியை கண்டது. வெளிநாடுகளில் இருக்கிற பிரபல கம்பனிகளான ஜாக்குவார், கோரஸ் போன்ற கம்பனிகளை கூட அவர் விளைக்கு வாங்கினார். ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் இந்திய பகுதிக்கு அவர் பொறுப்பேற்றார்.

 

இத்தனை வெற்றிக்கு  டாடா சொல்கிற காரணத்தை கவனியுங்கள்

 

டாடா இவ்வளவு வளர்ந்த்து என்பதில் எங்களுக்கு பெருமிதம் அல்ல

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அறம் மீறவில்லை என்பதே எங்களுடைய பெருமை, இதனால் நாங்கள் சில துறைகளில் பின்னடைவுக்கு ஆளானோம் என்றாலும் அதிலும் எங்களுக்கு மரியாதையே கிடைத்த்து.

 என்ன அற்புதமான வாசங்கள் - ?

நிம்மதி

ரத்தன் டாடா மேலும் சொல்கிறார்

காலையில் எழுந்த்திருக்கும் போது நேற்று நாங்கள் எந்த தவறும் அறம் மீறி செய்ய வில்லை என்பது தான் நிம்மதி

வியாபாரிகள் பலரும் மிக நுனுக்கமாக கவனிக்க வெண்டிய செய்தி அதில்.

நேர்மை தவறாத போது நிம்மதி கிடைக்கிறது.

மரியாதை

டாடா அடுத்து சொல்கிறார்.

இதனால் எங்கள் மீது மக்கள் மதிப்பு கொண்டனர்.  எங்களது மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

குறுக்கு வழிகளில் சீக்கிரம் பணக்காரனாகி விடலாம் என்ற சிந்த்திக்கும் வியாபாரத்தை விட மதிப்புமிகு வியாபாரம் என்ற இலக்கு ஒவ்வொரு வியாபாரியிடமும் இருக்க வேண்டும்

 

டாடாக்கள் கொண்டாடப் படுவதற்கு இதுவே பிரதான காரணம்

 

வெற்றிகரமான வியாபாரிக்கான நான்காவது அம்சம் அறச் சிந்தனை

.

எல்லோரும் வியாபரிகளாகி இலாபம் சம்பாதித்து விடலாம். ஆனால் வியாபாரி மரியாதையான வியாபாரியாவதற்கு அவரிடம் அறச் சிந்தனை இருக்க வேண்டும்.

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

 

قول النبي صلى الله عليه وسلمرحم الله رجلاً سمحاً إذا باع وإذا اشترى وإذا اقتضى. رواه البخاري 

 

ரத்தன் டாடா பெரிதும் பேசப்படுவதற்கு அவரது அறச் சிந்தனையும் காரணமாகும்

அறம் என்பது மக்களுக்கு நன்மை யோசிப்பது.

ரத்தன் டாடா என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது அவர் உருவாக்கிய குறைந்த  விலை கார் ஆன நானோ கார் திட்டம்.

ஒரு ஆச்சரியம் பாருங்கள் கார் உற்பத்தியில் நானோ கார் வெற்றி பெற வில்லை. ஆனால் இது பற்றி சிந்தித்த ரத்தன் டாடாவுக்கு அது இன்றும் பெரும் மதிப்பை தந்து கொண்டிருக்கிறது.

ஏனெனில் அவரது அறச் சிந்தனை தான்.

ஒருமுறை ஒரு நான்கு பேர் கொண்ட ஒரு பெரிய குடும்பம் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதை அவர் பார்த்தார். ஏன் நடுத்தர வர்க்கமும் பாதுகாப்பாக பயணிப்பதற்கேற்ற ஒரு காரை நாம் தயாரித்து கொடுக்க கூடாது என்று சிந்தித்தார். ஒரு இலட்ச ரூபாயில் ஒரு கார் தரப்போவதாக அறிவித்தார் .அந்த அறிவிப்பு ஏராளமான மக்களுக்கு மகிழ்ச்சியளித்த்து.

அவரது திட்டம் நடை முறைக்கு வந்தது. அது ஒரு இலட்சத்திற்கு தர முடியவில்லை என்றாலும் இன்றுவ்ரை அது குறைந்த விலை கார்தான்.

டாடாவின் அறச்சிந்தனை இதில் இன்றளவும் பாராட்டைப் பெறுகிறது என்பதை ஒவ்வொரு வியாபாரியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனக்காக மட்டுமே சம்பாதிப்பது என்றில்லாமல் மக்களுக்காக என்று உழைப்பவர்கள் வரலாற்றில் வாழ்வார்கள்.

தர்ம்ம்

டாடாக்களின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று , டாடாக்களின் வருமானத்தில் 65 சதவீதம் மக்கள் நலப்பணிகளுக்காக தர்ம்மாக செல்கிறது. ஏராளமான கல்விப் பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் டாடா நிறுவனம் உதவுகிறது.

சீப்பாக கொடுக்க வேண்டாம். வாங்க முடிகிற கொடுங்கள்

நானோ கார் திட்டம் உரிய வெற்றியை பெறாத்து குறித்து ரத்தன் டாடா கூறுகிறார்.

இத்திட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு காரணம் இதை பற்றி நாங்கள் ஆரம்பத்தில் விளம்பரம் செய்யும் போது இதை மிக மலிவான (சீப்பான) கார் என்று விளம்பரம் செய்து விட்டோம். அதனால் மக்கள் இதன் தரத்தை சந்தேகித்து விட்டன. பிறகு நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆபரபுள் பிரைஸ் அதாவது  வாங்க முடிகிற விலையில் என்று நாங்கள் விளம்பரம் செய்திருக்க் வேண்டும்.

 வியாபரிகளுக்கு இதுவும் ஒரு பாடம் தான். அதையும் சொல்லித்தர டாடா தயங்கவில்லை.

ரத்தன் டாடா தனது சொந்த நிதியிலிருந்து கொரோனா நிவாரணத்திற்கு  500 கோடி வழங்கினார். அவரது  நிறுவனம் 1500 கோடியை வழங்கியது. தமிழ் நாட்டு 8 கோடி ரூபாய் மதிப்பிலான ராபிட் டெஸ்ட் கிட் டை டாடா வழங்கியது.

எளிமை

ரத்தன் டாடாவின் மிக முக்கிய மான பெருமைகளில் ஒன்று அவருடைய எளிமை

ஆச்சரியம் தான் , இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார்ர் இன்று ஆட்டம் போடுகிற பலரை போல ஒரு நிகழ்ச்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை அவர் அணியவில்லை. கார்களில் பவனி வரவில்லை, கைக்கடிகாரங்களை அணியவில்லை.

முகேஸ் அம்பானி வீட்டு திருமணத்தை மீடியாக்கள் அதன் பகட்டுக்க்காக ஒன்று விடாமல் படம் எடுத்தன. அதற்காகவே அவர்கள் இத்தனை வேடிக்கைகளையும் செய்தார்கள். ஆனால் நிச்சய்ம அவர்கள் டாடாவின் மரியாதையை ஒரு போதும் பெற முடியாது.

ரத்தன் டாடா தன்னை பணக்காரர் ,தொழில் அதிபர் என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர். அவருக்கு திரண்ட எந்த பணமும் அவருடைய குணத்தை பாதிக்கவில்லை. என்கிறார்கள் அவருடைய ஊழியர்கள்/

திருமணம்

ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ள வில்லை. அதுவே அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பாகும்.

1990 ம் ஆண்டு  சிமி கார்வல் என்பவருக்கு அவர் பிரபலாம பேட்டியில் அவர் சொன்னார். கல்யாணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான்கு முறை திருமணம் வரை சென்றும் திருமணம் நடக்க வில்லை. அதனால் பிற்காலத்தில் தான் அதிகம் தனிமையை உணர்ந்த்தாக கூறுவார்.

ஒரு பெரிய பணக்கார்ரின் வாழ்க்கையின் இருண்ட பகுதி அது.

அவர் திருமணம் செய்து கொள்ளாத்தற்கு அவருடைய பெற்றோர்கள் ஒரு காரணமாக் இருக்கலாம். காரணம் ரத்தன் டாட்டா 10 வயதாக இருக்கும் போதே அவருடைய பெற்றோர்கள் இறந்து விட்டனர். அதனால் அவருடைய இளமை காலம் சிரம்மானதாக இருந்திருக்கிறாது. அம்மா அப்பா பிரச்சனை பெரிய துயரை கொடுத்திருக்கிறது. இதனால் அவர் திருமணத்தை  ஆரம்பத்தில் தவிர்க்க நினைத்திருக்கலாம்.

 

முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அவர் பின்பற்றியிருந்தால்

இந்த துயரத்திற்கு அவரது வாழ்வில் இடம் இருந்திருக்காது,

வியாபரத்திற்காக அல்லது ஆன்மீகத்திற்காக அல்லது வாழ்க்கையில் விரக்தியுள்ள திருமணம் செய்யாவிடில் அது என்னை வெறுப்பவரின் குணம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் குறினார்கள்.

أما والله إني لأخشاكم لله، وأتقاكم له لكني أصوم وأفطر، وأصلي وأرقد، وأتزوَّج النساء، فمَن رغِب عن سنتي فليس مني

பெருமானாரின் வழிகாட்டுதல் எல்லோருக்குமான . எந்த காரணத்தை சொல்லியும் திருமணத்தை தவிர்ப்பவர்கள் பின்னால் வருத்தப்படுவார்கள்.

ரத்தன் டாடாவுக்கும் அந்த வருத்தம் ஏறபட்டிருக்கிறது.

இதை தவிர்த்து நற்சிந்தனையும் அது கொடுக்கும் அது கொடுக்கும் திருப்தியும் என்று வாழ்ந்த ரத்தன் டாட்டா ஒரு மரியாதைக்குரிய வியாபாரி

இன்றைய கால கட்ட்த்தில் இத்தகைய வியாபரிகள் குறைந்து வருகிறார்கள் . வியபாரம் மக்களை சுரண்டுவதாக மாறிவருகிறது.

எனவே தான் ரத்தன் டாடா வின் இறப்பு கவலக்குரியதாக இருக்கிறது.

டாட்டாவின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாட்த்தை சொல்லி நிறவு செய்கிறேன்.

1984 ல் இந்திரா காந்தி சீக்கியர் ஒருவரால் கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள் .அவர்களுடைய சொத்துக்கள் பெரிதும் நச்டமைந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு ரத்தன் டாடா , அவரது டாட்டா மோட்டார்ஸ் முலம் இலவசமாக ஒரு டிராக்டர் வழங்கினார். அது சீக்கியர்களிடையே பெரிய மதிப்பை அவருக்கு கொடுத்த்து. அதன் பிறகு சீக்கியர்கள் டாடா நிறுவனத்தின் மிக முக்கியமான வாடிக்கையாளர் ஆனார்கள்

ஒரு அறச் செயல் எப்படி ஒரு மனிதருக்கு மரியாதையைய்ம் இலாபத்தையும் கொடுக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இது.

டாடாக்கள் வாழட்டும்.

No comments:

Post a Comment