கடந்த ஒரு வார காலமாக நாம் நோன்பு நோற்று வருகிறோம்.
அது
வழக்கம் என்ற அளவி கடந்து போய்விட வேண்டாம்.
அது
ஒரு மகத்தான வணக்கம் .
ஹைளு
நிபாஸ் உள்ள பெண்கள் நோன்பு வைக்க கூடாது என்று தடுக்கப் பட்டிருக்கிறார்கள். பயணம்
பால் கொடுத்தல் நோய போன்ற காரணங்கள் உள்ள சிலருக்கு நோன்பை தற்காலிமாக விட்டுகொள்ள
அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. எனினும் அல்லாஹ். நோன்பு வையுங்கள் அது நல்லது என்கிறான்..
وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن
كُنتُمْ تَعْلَمُونَ
நோன்பின் மகத்துவத்தை எடுத்துக் காட்ட அது
போதுமாக இருக்கிறது.
நோன்பு வையுங்கள் அது நல்லது என்று
வலியுறுத்துகிற பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு புதிதாக சிலர்
நோயாளிகள் நோன்பை கடைபிடிக்க வேண்டாம் என்று வலியுறுத்திப் பேசிக்
கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் ஒரு முஸ்லிம் மருத்துவர் பொதுவாகவே நோன்பு
ஆரோக்கியமானது அல்ல என்று பேசியிருக்கிறார். (நவூது பில்லாஹ்)
இந்த பழத்தை சாப்பிட்டால் நீங்கள்
சொர்க்கத்தில் நிரந்தரமாக இருக்கலாம் என்று ஆசை காட்டிய சைத்தானைப் போல இப்படி
சிலர் முஸ்லிம் சமூகத்தை குழப்பிப் பார்க்க நினைக்கிறார்கள். இத்தகையோருக்கெல்லாம்
நோன்பு நல்லது. என்ற ஒற்றை வரி பதில்
தந்து விடுகிறது.
நோன்பு வைத்தால்
கிடைக்கும் நன்மை
عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ
اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا- بخاري2628 خَرِيفًا : عاما
மற்ற வணக்கங்களில் ஜன்னத் கிடைக்கிறது,
நோன்பில்
ஜன்னத்திற்கு சொந்தக்காரனான ரப்பு கிடைக்கிறான்,
நோன்பு பற்றிய ஒரு
ஹதீஸில் அல்லாஹ் கூறுகிறான்.
வ அன உஜ்ஸா பிஹி (நானே அதற்கு கூலி)
كلُ عملِ بنِ آدمَ له إلا الصيامُ فإنه لي وأنا أجزي به" رواه
البخاري
அடியார்களுக்கு இதை
விட மரியாதை வேறென்ன இருக்கிறது ? இதைவிட நற்கூலி வேறென்ன இருக்க முடியும் ?
அதனால் தான் முஸ்லிம்
சமூகத்தின் முன்னோடிகள் பலர் தடுக்கப்பட்ட நாட்களைத் தவிர்த்து வாழ்நாள் முழுவதும்
நோன்பாளிகளாக இருந்துள்ளனர்.
ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாவூத் பின்
அபீல் ஹிந்த (ரஹ்) தன் வீட்டாருக்கே
தெரியாமல் 40 வருடங்களாக நோன்பு வைத்திருக்கிறார்.
الإمام الحافظ الثقة
داود بن أبي هند دينار بن عُذافر, البصري. حافظ للحديث، مفسر، من أهل البصرة ,
عن ابن أبي عدي قال : " صام داودبن أبي هند أربعين سنة لا يعلم به أهله ، وكان خرازا يحمل معه غداءه من عندهم ، فيتصدق
به في الطريق ، ويرجع عشيا فيفطر معهم " . يقول الحافظ ابن الجوزي معلقا : " يظن أهل السوق أنه قد أكل في البيت ، ويظن أهله أنه قد أكل
في السوق ") سير أعلام النبلاء (
முஸ்லிம் பெண்மணிகள் இது விசயத்தில் ஆண்களுக்கு சளைத்தவர்களாக இருக்கவில்லை
அஹ்லுபைத்தைச் சேர்ந்த – அலீ ரலி அவர்களின் நான்காம் தலைமுறை வாரிசு நபீஸத்துல் மிஸ்ரிய்யா என்று அழைக்கப்படும் நபீஸா பின்து அல் ஹஸன் (ரஹி) இதே போன்ற ஒரு ரமலானில் மவ்த் ஆனார். சகராத் வேதனையின் போது நோன்பை விட்டுவிடலாமே என்று உடனிருந்தவர்கள் கேட்டுக் கொண்டனர். நான் நோன்பாளியாக அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என முப்பது வருடமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர்.
نفسية بنت الحسن أنها تكثر من الصيام ، حتى قيل لها : " ترفّقي بنفسك – لكثرة ما رأوا
منها - ، فقالت : كيف أرفق بنفسي ؟ وأمامي عقبة لا يقطعها إلا الفائزون . وقد
توفيت وهي صائمة ، ويوم وفاتها ألزموها الفطر ، فقالت : واعجباه ! ، أنا منذ
ثلاثين سنة أسأل الله تعالى أن ألقاه صائمة ، أأفطر الآن ؟ ، هذا لا يكون . حتى
فاضت روحها
அல்லாஹ்வை அடை சிறந்த வழி என்பதே இத்தகைய நெகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு காரணமாகும்.
நோன்பு அல்லாஹ்வை நெருக்கமாக்கி வைக்கிற் ஒரு பெரு
வணக்கம் என்பதை உணர்ந்திருக்கிற காரணத்தினாலே முஸ்லிம் சமுதாயம் காலம் தோறும்
எத்தகைய சூழலலிலும் நோன்பை கைவிடவில்லை என்பது அல்ல அதற்கு மாறாக மிகுந்த
ஆர்வத்தோடு கடைபிடித்து வருகிறது.
அதே நேரத்தில் நம்மை சிரமப்படுத்த
வேண்டும் என்ற அவசியம் எதுவும் அல்லாஹ்வுக்கு இல்லை. மற்ற வணக்கங்களில்
வைத்திருப்பதை போலவே நோன்பிலும் நமக்கு பல வகையான உடல் ரீதியான மன ரீதியான
நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கிறான்.
நோன்பினால் உடல் ரீதியான மருத்துவ பலன்கள் ஏராளம்
உண்டு என உறுதியாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
அல் ஜஸீரா இணையப் பக்கத்தில் The
health benefits of fasting என்ற
ஒரு கட்டுரை உண்டு. . அந்த கட்டுரை கூறுகிறது.
Muslims were commanded to fast during Ramadan more than 1,400 years ago,
the ancient Greeks recommended fasting to heal the body, and today some
scientists are advocating a modified fast for its mental and physical
benefits.
முஸ்லிம்கள் ரமலான்
மாத்த்தில் நோன்பை வைக்குமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறார்கள். இதை 1400 ஆண்டுகளாக
முஸ்லிம்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
பண்டைய கிரோக்க மருத்துவம் பகல் நேரத்தில் நோன்பு வைப்பதை உடலுக்கு
ஆரோக்கியத்தை தரும் ஒரு வழிமுறையாக கூறியிருக்கிறது. இப்போதைய சில அறிவியல்
ஆராய்ச்சியாளர்கள் கூட ஒரு சில வழிமுறைகளை கடைபிடித்தால் நோன்பு மக்களின் உடல் நலனுக்கும்
மன் நலனுக்கும் ஏற்றது என்று கூறுகிறார்கள்.
உடலுக்கு ஏற்படுகிற
நன்மைகளில் சிலவற்றை அல் ஜஸீரா பட்டியலிடுகிறது.
Experts have also found that restricting food intake during the day can
help prevent health problems such as high cholesterol, heart disease and
obesity, as well as improve mental health and wellbeing.
பகலில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது அதிக
கொழுப்பு, இதய நோய், உடல்
பருமன் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது. மன ஆரோக்கியம்
மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
நோன்பு – குடல் தன்னைத் தானே சுத்தப்
படுத்திக் கொள்ள உதவுகிறது.
ஆரோக்கியமான
உணவு பற்றி ஆலோசனைகளை கூறும் அறிஞரான கிளைர் மாஹே கூறுகிறார். நோன்பு குடல் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள
வாய்ப்பளிக்கிறது. குடலின் மெலிதான குழாய்கள் பலமடைகின்றன.
Nutritionist Claire Mahy told Al Jazeera: “Fasting
allows the gut to cleanse and strengthens its lining
மூளைக்கு அழுத்தம் குறைகிறது.
“This has been shown to protect brain cells and could reduce depression
and anxiety, as well as the risk of developing dementia,” Mosley added.
ஆராய்ச்சியாளர்கள் நோன்பு
மூளையை பாதுகாப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். நோன்பு மன அழுத்த்த்தை குறைக்கிறது. பதட்ட்த்திற்குள்ளாவதை
குறைக்கிறது. அது மட்டுமல்ல பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்தும் டிமன்சியா என்ற
கிருமி வளர்வதையும் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வாளர் மோஸ்லீ கூறினார். .
நோன்பினால் ஏற்படக் கூடிய
ஆரோக்கியமான பலன்கள் பல இருந்தாலும் இன்றைய உணவு மோக கலாச்சாரத்தில் நோன்பு
திறக்கிற காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டுதல்களையும் நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
ஒரு 12 மணிநேரம்
சாப்பிடாமல் இருக்கிறோம் என்பதை சாக்காக வைத்துக் கொண்டு நோன்பு திறந்ததில்
இருந்து சஹர் வரை வெளுத்துக் கட்டுகிற வேலையை பார்க்க கூடாது.
நம்முடைய மார்க்க
அறிஞர்கள் மிக குறைவான உணவுப் பழக்கத்தையே நோன்பு காலத்தில் கடைபிடித்தார்கள்.
ரமலான் காலத்தில் சாப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவது ரமலானின்
நன்மைகளை அடையவதிலிருந்து நம்மை தடுத்து விடலாம்.
நமது முன்னோர்கள் இது குறித்து அதிகம் கவலைப்பட்டு
கூறியுள்ளார்கள் .
சிந்தனை மழுங்கி, அமல் செய்யும் ஆர்வம் குறைந்து விடும் என்றார்
லுக்மான் அல் ஹகீம்.
قال لقمان لابنه: يا بني، إذا امتلأت المعدة نامت الفكرة، وخرست
الحكمة، وقعدت الأعضاء عن العبادة.
இமாம் ஷாபி உட்பட
ஏராளமான அறிஞர்கள் இந்த கருத்தை கூறியுள்ளார்கள்.
லுக்மான் அலை மேலும்
கூறீனார்
قال لقمان: يا بني،
لا تأكل شيئًا على شبع، فإنك تتركه للكلب، خيرٌ لك من أن تأكله
போதும் என்ற அளவோடு நிறுத்தி விடு! மீதியிருப்பவற்றை நாயுக்கு கொடுத்து விடு. நீ உண்ணுவதை அது சிறந்தது.
இந்த வாசகம் கேட்பதற்கு கொஞ்சம் சிரம்மாக இருந்தாலும் உடலுக்கும்
உள்ளத்திற்கும் இதுவே சிறந்தது.
உணவு விவகாரத்தில் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான ஒரு எச்சரிக்கை
இருக்கிறது. அதை ரமலானில் குறிப்பாக நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
وقد جاء في الصحيحين أن النبي صلى الله عليه وسلم
قال: ((المؤمِنُ
يأكُلُ في معًى واحدٍ، والكافرُ يأكُلُ في سبعة أمعاءٍ))
முஃமின் ஒரு வயிற்றால் சாப்பிட வேண்டும் ஏழு வயிற்றால் அல்ல.
எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு பொதுவாக பெருமானார் (ஸல்) அவரக்ள்
வழிகாட்டியுள்ளார்கள். ரமலானில் அதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ن الرسول صلى الله عليه وسلم قال: ((حسب الآدمي لُقيمات يُقِمْنَ صُلبَه، فإن غلبت
الآدمي نفسه فثُلُث للطعام، وثُلُث للشراب، وثُلُث للنفس
அளவாக சாப்பிடுவது ஜெண்டில்மேனின் குணம் என்றார்கள் இமாம் நவ்வி
قال الإمام النووي رحمه الله: قِلَّةُ الأكل من
محاسن أخلاق الرجل، وكثرة الأكل بضده.
ரமலானுடைய
காலங்களில் முஸ்லிம்களின் வாழ்விடங்களில் பெருகி வருகிற புட்
ஏரியாக்கள் முஸ்லிம்கள் நோன்பின் எதார்த்தமான இயல்பை புரிந்து கொள்ள
வில்லையோ என்ற கவலையை ஏற்படுத்துகின்றன.
நோன்பு திறக்கிற
காலங்களில் நம்முடைய உடல் நலனை மோசமாக்கிவிடாத அளவான உணவை உட்கொள்வோம்.
அத்தோடு உணவு
நிபுணர்கள் கூறுகிற வழிகாட்டுதல்களை கடைபிடிப்போம்.
·
அதிகம் தண்ணீர்
குடியுங்கள்
·
வைட்டமின் சி உள்ள
ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகள்,
மிளகு உள்ளிட்ட காரவகைகளை உடல் ஏற்றுக் கொள்ளுமளவு சேர்த்துக் கொள்ளுதல்
·
வைட்டமின் பி உள்ள
வாழைப்பழங்கள் – காய்கறிகள் -பாதாம்
பிஸ்தா போன்ற சத்தான கொட்டைகள்.,தேவையான அளவு
இறைச்சி ஆகியவை உணவில் சேர்க்கப்பட வேண்டும்.
·
கொழுப்பு மற்றும்
சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
·
வறுத்த மற்றும்
உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நோன்பினால் உடலின் ஆரோக்கியத்தை
பாதுகாத்து கொள்வதோடு ரமலானை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நற்செயல்களில் நாம்
கவனம் செலுத்துவோம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
அருமையானவர்களே!
நோன்பின் பிரதான நோக்கத்தை குர் ஆன்
குறிப்பிடுகிறது.
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
நோன்பு நம்மை அல்லாஹ்வை பயப்படக் கூடியவர்களாக ஆக்க வேண்டும்
யா அல்லாஹ் எங்களை இந்த ரமலானின் பரக்க்கத்தால் நோன்பின் புண்ணியத்தால்
உன்னை பயப்படக் கூடியவர்களாக மாற்று!
யா அல்லாஹ் எங்களை இந்த ரமலானின் பரக்க்கத்தால் நோன்பின் புண்ணியத்தால்
உன்னை பயப்படக் கூடியவர்களாக மாற்று!
யா அல்லாஹ் எங்களை இந்த ரமலானின் பரக்க்கத்தால் நோன்பின் புண்ணியத்தால்
உன்னை பயப்படக் கூடியவர்களாக மாற்று!
நம்முடைய இன்றயை காலச் சூழல் அல்லாஹ்வை பயப்படுவதிலிருந்து வெகு
தூரம் விலக்கி வைக்கிறது.
நமது சுதந்திரம் நமது பெருமை நமது சொத்து சுகம்,
நம்மை அல்லாஹ்வை பயப்படாதவரகளாக ஆக்கிவிடக் கூடாது.
நமது தனிப்பட்ட வாழ்வில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது கூட இரண்டாம்
பட்சம். நம்முடைய பொதுவாழ்க்கையில் அல்லாஹ்வை பயப்படாதவர்கள் என்ற பெயர் நமக்கு
வந்து விடக் கூடாது.
அது இந்த உலகிலேயே நமக்கு எதிராக நாமே விட்டுச் செல்கிற
சாட்சியகும்.
நான் இன்று நமது திருமண வைபவங்களை மட்டுமே உதாரனத்திற்கு எடுத்துக்
கொள்கிறேன்.
அல்லாஹ்வை பற்றிய அச்சம் குறைந்து வருவதற்கான ஒரு உதாரணத்திற்காகவேஎ
திருமண விழாக்களை எடுத்து காடுகிறேன். இது மட்டுமே நமது எல்லை மீறுதல் இல்லை .
இன்னும் பலது இருக்கிறது. ஆனால் இந்த எல்லை மீறுதல் அருவருப்பான அளவில் அதிகரித்து
வருகிறது. அதனால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொண்டோம்
பொது வெளியில் நாம் அல்லாஹ்வை பற்றிய பயம் கொஞ்சமும் இல்லாது
வாழ்கிறோமோ என்ற கவலையை ஏற்படுத்துகிற வகையில் நமது திருமணங்கள் ஆகி வருகின்றன.
மிகப் பெரிய ஆடம்பரங்கள், கணக்கற்ற செலவு, வேதனையளிக்கும் வீண்
விரயங்கள், இவற்றோடு அல்லாஹ்வுக்கு பொருக்காத ஆட்டம் பாட்டங்கள் என நமது திருமண
வைப்வங்கள் மாறிவருகின்றன.
ஆமீன் எதற்கு சொல்ல வெண்டும் என்று கேளி எழுகிற நிலையில் அந்த
ஆடம்பரங்கள் அமைகின்றன.
.இவை எதும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம்
இல்லை.
இந்த உலகில் நடை பெற்ற திருமணங்களிலேயே அதிக ஆடம்பர திருமணம்
தற்போதைய இங்கிலாந்தின் அரசர் சார்லஸுக்கும் அவருடைய முன்னாள் மனைவி டயானாவுக்கும்
நடந்த திருமணம்.
ஆனால் அது நிலைக்க வில்லை. மிக பரிதாபமான முடிவுக்கு வந்தது.
நமது அன்றாட அனுபவத்திலேயும் கூட மிக ஆடம்பரமான பல திருமணங்களில்
திருமணம் முடிந்த பிறகு தம்பதிகளும் அவரக்ளுடைய குடும்பத்தினர்களும் நிம்மதியற்று
இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு சில இடங்களில் இவ்வளவு சிறப்பாக திருமணத்தை நடத்தி
விட்டு இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மன வாழ்க்கை சரியில்லை என்று சொல்வது
என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு திருமணத்தின் அதிகப்படியான செலவாக மஹர் மட்டுமே இருக்க
முடியும் என்பது தான் இஸ்லாமிய திருமணத்தின் அழகாகும். அந்த மஹரையும் மனைவியை
கைப்பிடிக்கிற மாப்பிள்ளையே தயார் செய்து கொடுப்பது தான் சிறப்பாகும்.
அத்தகையோர் தான் பாரக்கல்லாஹு லக வ பாரக அலைக்க என்ற துஆ விற்கு உரியவர்கள்.
மக்காவிலிருந்து அகதியாக வந்த அப்துர்ரஹ்மான் பின் அப்பான் ரலி
தனது உழைப்பால் ஈட்டிய காசில் ஒரு பேரீத்தம் பழ கொட்டையளவு தங்கம் கொடுத்து
திருமணம் செய்து கொண்ட போது தான் பெருமானாருடைய துஆ வைப் பெற்றார்கள்.
கல்யாணப் பத்ரிகையில் இந்த துஆ வை வெறுமனே அச்சிடுவதால் இந்த
பாக்கியம் கிடைத்து விடுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
தேவையின்றி அதிக பணம் செய்து அச்சடிக்கப்பட்ட ஒரு திருமண பத்ரிகையை
கையில் வாங்கி படித்தார் ஒரு மூத்த ஆலிம். அதில் திருமண துஆ அரபியில்
அச்சடித்திருப்பதை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டார். இந்த சமுதாயம் எப்படி ஏமாளியாக
இருக்கிறது பாருங்கள்!. பரக்கத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே பரக்கத்தை
எதிர்பார்க்கிறது என்றார்.
இசை பாட்டு கூத்து கும்மாளம் செலிபிரிட்டீஸ் வருகை என அந்த ஒரு
நாளில் நாம் அடிக்கும் கூத்து அல்லாஹ்வுக்கு பொருக்குமா என்று நாம் சிந்திக்க
தவறினால் நாம் அல்லாஹ்வை பயப்பட வில்லை என்றே பொருள்.
அத்தகை கூட்டங்களை நாம் புறக்கணிக்காமல் நாமும் கூடியிருந்து
மகிழ்ந்தால் நாமும் அல்லாஹ்வை பயப்பட வில்லை என்றே அல்லவா அர்த்தமாகும் ?
எனவே இந்த ரமலானில் நோன்பு நோற்றிருக்கிற திருநாளில் நாம்
அல்லாஹ்வை பயப்படுவோம் என்று உறுதி ஏற்போம்.
மீண்டும் நினைவூட்டுகிறேன். அல்லாஹ்வை நாம் பயப்படாமல் இருப்பதன்
ஒரு அடையாளமாக திருமண வைபவங்களை குறிப்பிட்டேன்.
அது மட்டும் இல்லை. இன்றைய நம்முடைய வாழ்க்கையில் பல கட்டத்திலும்
தொழுகையாளியாக இருந்தும் ஜகாத் கொடுப்பவர்களாக இருந்தும் ஹாஜிகளாக இருந்தும்
அல்லாஹ்வை பயப்படுகிறோமா என்பது பெரிய கேள்விக் குரியாக இருக்கிறது.
நம்மில் ஒவ்வொருவரும் தனித்தனியாக நமது மனதிற்குள் கேட்டுக் கொள்ள
வேண்டிய கேள்வி இது?
குடும்பத்தில், வியாபாரத்தில், பொதுப்பணிகளில் அல்லாஹ்வுடைய அச்சம்
நம்மை வழிநடத்துகிறதா ? நம்முடைய மனோ இச்சை நம்மை வழிநட்த்துகிறதா என்று நமக்கு
நாமே யோசித்துக் கொள்ள வேண்டும்.
அந்த பரிசோதனையை அடிப்பட்டயாக வைத்து இறைவா எங்களுக்கு உனது
அச்சத்தை தா என்று துஆ கேட்போம். அதன் படி நடக்க கூடுமானவரை உறுதி ஏற்போம். அதுவே
நோன்பு நோற்பதின் உண்மையான தத்த்துவமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில ஹதீஸ்கள் இந்த இறையச்சப்
பாதையில் பயணிக்குமாறு நம்மை தூண்டிவிட போதுமானது.
இந்த உலகில் அச்சமற்ற போக்கு (ஜாலி) என்றால் மறுமையில் அச்சம்.
மறுமையில் அச்சமற்ற போக்கு (ஜாலி) என்றால் இந்த உலகில் அச்சம். இரண்டையும் ஓரிடத்தில்
வைக்கவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
عن أبي هريرة رضي الله عنه عن النبي - صلى الله عليه وسلم - فيما يرويه عن
ربه جل وعلا أنه قال : ( وعزتي لا أجمع على عبدي خوفين ولا أجمع
له أمنين ، إذا أمنني في الدنيا أخفته يوم القيامة ، وإذا خافني في الدنيا أمنته
يوم القيامة ) أخرجه ابن حبان في صحيحه
நபி (ஸல்) அவர்கள் மேலும் எச்சரிக்கிறார்கள். அபூதர் ரலி அறிவிக்க
பெருமானார் (ஸல்) கூறினார்கள்.
إنِّي
أرَى ما لا ترَونَ وأسمعُ ما لا تسمَعون ، أطَّتِ السماءُ وحق لها أن تَئِطَّ ؛ ما
فيها موضِعُ أربعِ أصابِعَ إلا ومَلَكٌ واضِعٌ جبهَتَهُ لله ساجدًا . واللهِ لو
تَعلمونَ ما أعْلَمُ لضَحِكْتُمْ قليلًا ولبَكَيتُمْ كثيرًا ، وما تَلَذَّذْتُمْ
بالنساءِ على الفُرُشِ ، ولخَرَجْتُمْ إلى الصَّعُدَاتِ تجْأَرونَ إلى اللهِ
الراوي
: أبو
ذر الغفاري | المحدث
: الترمذي
நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன், நீங்கள் கேட்காததை நான் கேட்கிறேன். வானம் முனகுகிறது. அது முனகாமல்
இருக்க முடியாது. ஏனெனில் வானத்தில் நான்கு விரல் அளவுவுக்கு ஒரு இடம் இருக்கும்
எனில் ஒரு
மலக்கு
அங்கே சஜ்தா செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் அறிந்ததை நீங்கள் அறிவீர்கள் எனில் நீங்கள் குறைவாகவே சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள், உங்கள் படுக்கைகளில் பெண்களை நீங்கள் ரசிக்க மாட்டீர்கள், மேலும் மலை சிகரங்களுக்கு சென்று அல்லாஹ்விடம் கூக்குரலிடுவீர்கள்.
இமாம் கஸ்ஸாலி அவர்கள் கூறுவார்கள்
قال
الإمام الغزالي:• الخوف هو النار المحرقة
للشهوات
அல்லாஹ்வை பற்றிய பயம் தான் நாம் மனம் போன பாடி நடப்பதிலிருந்து
நம்மை தடுக்க கூடியது.
மா பெரும்
சாதனைகளுக்கு சொந்தக் காரரான இரண்டாம் கலிபா உமர் ரலி அவர்கள் “ அல்லாஹ்வின் வேதனை
வந்தே தீரும் என்ற திருக்குர் ஆனிய வசனத்தை ஓதினால் அழுது தீர்ப்பார்கள். அவரது
உடல் நிலை குன்றி விடும். மக்கள் வந்து நோய் விசாரிக்கும் அளவுக்கு
நோயாளியாகிவிடுவார்கள் .
وهذا عمر بن الخطاب قرأ سورة الطور إلى
أن بلغ : إن عذاب ربك لواقع )سورة الطور : 77 ] فبكى واشتد بكاؤه حتى مرض وعادوه
.
அதே உமர் ரலி அவர்கள் மற்றொரு முறை சொன்னார்கள். பூமி நிறைய தங்கம்
எனக்கிருந்தால் நான் அதை கொடுத்து அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அதை பார்ப்பதற்கு
முன்பே தப்பி விட முயற்சிப்பேன்.
قال عمر بن الخطّاب- رضي اللّه عنه- لمّا
طعن:
«لو أنّ لي طلاع الأرض ذهبا لافتديت به من
عذاب اللّه قبل أن أراه !»
رواه البخاري
முஸ்லிம் சமூகத்தில் மாபெரிய மனிதர்கள் அல்லாஹ்வை
பற்றி எவ்வளவு அச்சப்பட்டு வாழ்ந்தார்கள் என்பதை பேசிக் கொண்டிருந்தால் காலம்
போதாது. அது நமக்கு தெரியாததும் அல்ல.
எனவே இந்தப் புனிதம்மிக்க ரமலானை இந்த புன்னியம் நிறைந் நோன்பை
அல்லாஹ்வை பற்றிய பயத்தை நமக்குள் ஏற்படுத்தக் கூடியதாக ஆக்கிக் கொள்ள நாம்
முயற்சி செய்வோம்.
அப்போது ரமலானை உண்மையாக பெற்றுக் கொண்டவர்களாக நாம் ஆகிவிடலாம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக1
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் கடல் ஆழத்தை போன்றது ஹஜ்ரத் அவர்களின் கல்வி ஞானம்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteالحمد لله على كل حال
ReplyDeleteமிக மிக பொருத்தமான தலைப்பு!