வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 24, 2015

தக்பீரில் உருகும் உயிர்

தக்பீர் முழக்கம்.
ஹஜ்ஜுக்காக ஹாஜிகள் 40 நாட்கள் பயணம் செய்தாலும் ஹஜ் 5 நாட்களில் நடைபெறுகிற வணக்கமாகும்.

துல் ஹஜ் 8 லிருந்து 12 வரை உண்டான 5 நாட்கள்
எட்டாம் நாளுக்கு தர்வியா என்று பெயர் – தண்ணீர் நிரப்பிக்கொள்ளுதல் என்று பொருள், ஹாஜிகள் மினாவில் அன்றைய தினம் ஹஜ்ஜுக்கா தம்மை தயார்படுத்திக் கொண்டிருப்பர்.

ஒன்பதாம் நாளுக்கு அரபா நாள் என்று பெயர். ஹாஜிகள் அன்றைய தினம் அரபாவில் தங்கியிருப்பார்கள்.

பத்தாம் நாளுக்கு யவ்முன் நஹ்ர் என்று பெயர். குர்பானி கொடுக்கும் நாள் என்று பொருள்.

அதற்கடுத்த மூன்று நாட்களுக்கு அய்யாமுத் தஷ்ரீக் என்று பெயர்.
  - وأيام التشريق هي الأيام الثلاثة التي تلي العيد - الفقه علي المذاهب الأربعة 

கறியை காய வைக்கும் நாள் அல்லது உப்புக்கண்டம் போடும் நாள். பெருள்.
سميت بأيام التشريق لأن الناس كانوا يشرّقون فيها اللحم.
அய்யாமுத் தஷ்ரீக்கின் மூன்று நாட்களும் இஸ்லாமிய சட்டப்பட பெருநாட்களைப் போலவாகும்.

இந்த நாட்களில் நோன்பு வைப்பது கூடாது. கழா நோன்பும் கூடாது.
وروى أبو داود (2418) عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ أَنَّهُ دَخَلَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَلَى أَبِيهِ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَرَّبَ إِلَيْهِمَا طَعَامًا ، فَقَالَ : كُلْ . فَقَالَ : إِنِّي صَائِمٌ . فَقَالَ عَمْرٌو : كُلْ فَهَذِهِ الأَيَّامُ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِإِفْطَارِهَا ، وَيَنْهَانَا عَنْ صِيَامِهَا . قَالَ الإمام مَالِكٌ : وَهِيَ أَيَّامُ التَّشْرِيقِ . وصححه الألباني في صحيح أبي داود .
இது உண்டு மகிழ்வதற்குரிய நாட்களாகும்.
இந்த நாட்களில் என்ன செய்யனும்
1.   உண்டு மகிழனும்
2.   அதிகமாக திக்ரு செய்யனும்
وَعَنْ نُبَيْشَةَ الهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنهُ قالَ: قالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «أيَّامُ التَّشْرِيقِ أيَّامُ أكْلٍ وَشُرْبٍ، وَذِكْرٍ؟». أخرجه مسلم.
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.
எனவே குர்பானி இறைச்சியை பத்திரப்படுத்தி சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதே!
குர்பானி இறைச்சியை இந்த நாட்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு தக்பீர் அதிகமாக சொல்ல வேண்டும்.
ஹஜ்ஜின் அமல்களைப் பற்றி பேசிவருகிற இடத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என குர் ஆன் கூறுகிறது.
(وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ)(البقرة: من الآية203)
அது இந்த மூன்று நாட்களையே குறிக்கிறது.
அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜை முடித்து விட்டு மினாவில் தங்கியிருக்கிற நாட்களில் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டு தமது முன்னோர்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருந்தனர். அதை மாற்றி அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறு அல்லாஹ் கூறினான்.
 فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْراً )(البقرة: من الآية200)
இதன் பிறகு மினா தக்பீரால் அதிர ஆரம்பித்தது.
وقد كان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد فيكبرون, ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً.
وكان ابن عمر رضي الله عنهما يكبر بمنى تلك الأيام, وخلف الصلوات , وعلى فراشه, وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً
இவ்வாறு அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருப்பது மினாவில் மட்டுமல்ல் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டிய சுன்னத் என்பதை சஹாபாக்கள் நடை முறைப்படுத்திக் காட்டினார்கள்.

இமாம் புகாரி அவர்கள்

بَاب فَضْلِ الْعَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ

எனும் பாடத்தில்

وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا

என்று கூறுகிறா. அத்தோடு பர்ளு தொழுகைக்குப்பின் தக்பீர் சொல்லும் இருப்பது போல சிலர் நபில் தொழுகைக்குப் பின்னரும் தக்பீர் சொல்லி வந்தனர் என்ற செய்தியையும் குறிப்பிடுகிறார

وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ
பெண்களும் தக்பீர் சொல்லினர்

وكانت ميمونة رضي الله عنها تكبر يوم النحر وكان النساء يكبرن خلف أبان بن عفان وعمر بن عبد العزيز ليالي التشريق مع الرجال في المساجد  - صحيح البخاري 
சஹாபாக்கள் முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்த நடைமுறைகளின் படி பர்ளு தொழுகைக்களுக்குப்பின் தக்பீர் சொல்வதை இமாம்கள் சுன்னத் என அறிவித்தனர்.

بل بلغ من أهمية التكبير المقيد بأدبار الصلوات أن العلماء قالوا: يقضيه إذا نسيه, فإذا نسي أن يكبر عقب الصلاة فإنه يكبر إذا ذكر ولو أحدث أو خرج من المسجد ما لم يطل الفصل بين الصلاة والتكبير.
முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்த நடை முறை இப்படி இருக்க சமூகத்தில் பேஷன் மார்க்கத்தை கடைபிடிக்கும் ஒரு சாரார் இதை தவிர்ப்பது துரதிஷ்டவசமானது, இமாம்களின் வழியை பின்பற்றுவதா இந்த புதிய குழப்பவாதிகளின் வழிமுறையை பின்பற்றுவதா  எது சிறந்தது என்பதை அறிவுள்ள மக்கள் யோசித்து செயல்பட வேண்டும்.

(ஆலிம்கள் சில நேரத்தில் மார்க்கத்தில் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்திய தீய சக்திகளைப் பற்றி பேசுகிற போது இதை ஏன் பேசுறீங்க என்று சிலர் கேட்கின்றனர், சமுதாயத்திற்கு இதை தவிர வேறு பிரச்சினை இல்லையா என்று வாதிடுகின்றனர்.

உண்மையில் அத்தகையோ, தீன் விச்யத்தில் இது ஹதீஸில் இல்லாதது, குர் ஆனில் இல்லாதது என்று சொல்லி குழப்பத்தை முதல் கட்டமாக உண்டு பண்ணியவர்களைப் பார்த்து  “ ஏம்பா நம்ம முன்னாள் வாழ்ந்த அறிஞர்ப் பெருமக்கள் எல்லாம் ஒன்றை செய்திருக்க – உம்மத் ஒரு காரியத்தில் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற போது ஏன் தேவையில்லாம குழப்பத்தை ஏற்படுத்தறீங்க என்று கேட்டிருக்க வேண்டும்.  

குழப்பத்தை தொடங்கி வைத்தவர்களைப் பார்ர்த்து கேள்வி கேடக துப்பில்லாதவர்கள் குழப்பத்திற்கு பதில் கொடுக்க முனைகிறவர்களைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் பேசி வருகிறார்கள். இது அநீதியாகும்

தக்பீர் முஸ்லிம்களுடைய உள்ளத்தை நிலைப் படுத்தும் ஒரு சொல்லாகும்.

தகீபீரை அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
وَكَبِّرْهُ تَكْبِيراً } الإسراء111 
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ{1} قُمْ فَأَنذِرْ{2} وَرَبَّكَ فَكَبِّرْ{3} ﴾ المدثر

இஸ்லாத்தில் தக்பீரின் மகிமை பல வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

பாங்கு, தொழுகை, பெருநாட்கள், மகத்தான் சந்தர்பங்களின் அடையாளமாக தக்பீர் ஆக்கப்பட்டுள்ளது.  

முஸ்லிமுடைய் வாழ்வில் தக்பீர் அதிகம் தொடர்புடைய சொல்லாகும்
நான்கு ரக அத் தொழுகையில் 22 உறை தக்பிர் சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளின் பர்ளு தொழுகைகளில் மட்டும் ஒரு முஸ்லிம் 94 தடவை அல்லாஹ் அக்பர் சொல்கிறார்.

சுன்னத்துக்களையும் நபில்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும்.
வழக்கமான சுன்னத்துக்களையும் நபில்களையும் வித்ரையும் தொழுதால் ஒரு நாளில் 342 முறை ஒரு முஸ்லிம் தக்பீர் சொல்கிறார்.

இது தவிர பாங்கிலும் இகாமத்திலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன. இவற்றிற்கு பதில் சொல்வதிலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன.

இதை தவிர தக்பீரை தனியாக சொல்லும் சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கின்றன அந்த வகையில் ஒரு நாளைக்கு ஒரு முஸ்லிம் எத்தனை தக்பீர் சொல்கிறார் என்கிற கணக்கு அல்லாஹ்விற்கே தெரியும்

தொழுகை மட்டுமல்லாது ஹஜ்ஜு குர்பானி போன்ற வணக்கங்கள் தக்பீரினால் நடைபெறுகின்றன,

ஹாஜி சைத்தானை கல்லெறிவது வரை தல்பியா சொல்லுவார் . முதல் கல்லை எறிந்த நிமிடத்திலிருந்து தக்பீருக்கு மாறிவிடுவார்,

தவாபை தொடங்கும் போது, சைத்தானை கல்லெறியும் போது என அவரது அமல்களில் தக்பீர்  முக்கிய இடம்பிடித்திருக்கீறது.

குர்பானியின் முக்கியக் கட்டத்தில் தக்பீர் இடம் பிடித்திருக்கிறது,

இதனால் தான் உமர் ரலி கூறீனார்கள்


عن عمر بن الخطّاب رضي الله عنه أنّه قال: قول العبد: « قول العبد : الله أكبر، خيرٌ من الدنيا وما فيها »
.

பிறையை பார்த்ததும் பெருமானார் தக்பீர் சொல்வார்கள்

كان رسول الله إذا رأى الهلال قال :" الله أكبر ، اللهم أهله علينا بالأمن و الإيمان ، و السلامة و الإسلام ، و التوفيق لما تحب و ترضى ، ربنا و ربك الله"
الراوي: عبدالله بن عمر 

பயணம் புறப்படுகிற போதும் தக்பீர் சொல்வார்கள் பெருமானார்

ففي صحيح مسلم عن ابن عمر رضي الله عنهما أن " رسول الله  صلى الله عليه وسلم كان إذا استوى على بعيره خارجا إلى سفر كبر ثلاثاً ...)) 

மேட்டில் ஏறுகிற போது தக்பீர் சொல்வதும் பள்ளத்தில் இறங்கு கிற போது சுப்ஹானல்லா சொல்வதும் பெருமானாரின் பழக்கம்.

عن ‏ ‏جابر بن عبد الله ‏‏رضي الله عنهما ‏ ‏قال : " ‏كنا إذا صعدنا كبرنا وإذا نزلنا سبحنا"فتح الباري

அதிர்ச்சியளிக்கிற செய்திகளை கேட்கிற போது அல்லாஹ் அக்பர் என்று சொல்கிற பழக்கம் சஹாபாக்கள்டம் இருந்தது.

யஃஜூஜ் மஃஜூஜ் களைப் பற்றி பெருமானார் சொன்ன போது நாங்கள் அல்லாஹு அக்பர் என்று சொன்னோம் என அபூஸஈதில் குதிரி ரலி கூறுகிறார்.

மய்யித்துகளுக்கான தொழுகையாக நான்கு தக்பீர்கள் மட்டுமே ஆக்கப்பட்டிருக்கிறது,

நெருப்பு பற்றிக் கொள்வதைப் பார்த்தால் தக்பீர் சொன்னால் அது நெருப்பை அனைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸல்)
عن عبدالله بن عمر 
قال النبي صلى الله عليه وسلم :" إذا رأيتم الحريق ، فكبروا ، فإن التكبير يطفئه "


என்னுடைய அனுபவத்தில் தக்பீர் மகத்தான சக்தியாக இருந்ததை ஒரு தடவை உணர்ந்தேன்.

2008 ஹஜ்ஜின் போது 12 ம்நாள் ஜவாலுக்குப்பின் சைத்தானை கல்லெறிந்த போது ஜம்ரா பாலம் மிக சவுகரிமாக கல்லெறிய சிரமமில்லாமல் இருந்தது.  அதற்குப் பிறகு மக்காவில் தங்குமிடத்திற்கு செல்ல திரும்பிக் கொண்டிருந்த போது மக்காவிற்கான தரீக்குல் மஷாத் தின் தொடக்கத்திலிருந்த ஒரு சின்ன சப்வேயில் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. வழியில் ஒரு மரணம் ஏற்பட்டிருக்கிறது என்று இராணுவ வீரர் சைகை செய்து கொண்டிருந்தார். பின்னால் கூட்டம் வந்து மோதிக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரத்தில் நெரிசல் அதிகரித்து அதிகரித்து எல்லோர் கண்களிலும் ஒரு அச்சம் பரவத் தொடங்கியது. மெளனம் கோலோட்சிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மெல்ல ஒருவர் தக்பீர் சொன்னார். தொடர்து அனைவரும் கூறினர். கூட்டத் தின் அழுத்தம் எப்படித்தான் குறைந்ததோ தெரியவில்லை. அனைவரும் அச்சத்திலிருது விலகி ஒரு நிதானத்திற்கு வந்தனர்,  வழி ஏற்பட்ட பிறகு தள்ளு முள்ளூ இல்லாமல் அணியணியாக வெளியேறினர்.

தக்பீரின் மகிமைய அனுபவித்து உணர்ந்த ஒரு வாய்ப்பு அது.

நேற்று மினாவில் சைத்தானை கல்லெறிகிற இடத்திற்கு அருகே மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 717 பேர் ஷஹீதாகியுள்ளனர், 800 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர், இந்திய நாட்டை சார்ந்த 6 பேர் ஷஹீதாகி இருக்க கூடும் என்று தெரிகிறது. தமிழ்நாடு  வடகரையைச் சார்ந்த ஷம்சுத்தீன் என்பவர் ஷஹீதாகி இருப்பதாக முதல் கட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் உலகம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி நிற்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் வெள்ளிக்கிழமை ஹரம் ஷரீபில் திடீரென நிகழ்ந்த கிரென் விபத்தில் 107 பேர் ஷஹீதான துக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில் மாபெரும் அதிர்ச்சியாக இந்த விபத்து நடந்துள்ளது.

கடந்த 2006 லிருந்து ஹஜ் பாதுகாப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துக்கள் முஸ்லிம்கள ஆழ்ந்த துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

விபத்துக்கான காரணம்   

சைத்தானை கல்லெறியச் செவதற்கு ஒரு வழியும் திரும்புவதற்கு இன்னொரு வழியையும் அரசாங்கம் நிர்ணயித்திருக்கிறது. இதில் இன்று 10 ம் நாள் காலை சைத்தானை சைத்தானை கல்லெறிந்து விட்டு திரும்புவதற்கான வழியை தவிர்த்து விட்டு மக்கள் உள்ளே வரக்கூடிய பாதையில் மக்கள் குறிப்பாக – ஆப்ரிக்காவைச் சார்ந்தவர்கள் சென்று கொண்டிருந்ததே கல்லெறிய உள்ளே வந்த கூட்டம் சேர்ந்து கொள்ள மக்கள் ஒரு குறுகிய பாதையில் அடைத்துக் கொண்டு நின்றதே காரணம் என மினாவில் நிகழ்வை நேரிட்டுப் பார்த்த அல் அரபிய்யா செய்திச் சேனலின் நிருபர் ஒரு வர் கூறுகிறார்;
قالت مصادر "العربية" إن الحادثة سببها بعض الحجاج من الجنسيات الإفريقية.

இறந்தவர்களில் அதிகம் பேர் நைஜீரியர்கள் என பி பி சி உருது செய்தி கூறுகிறது
سعودی حکام نے تاحال ہلاک شدگان کی شناخت ظاہر نہیں کی ہے تاہم منیٰ میں موجود بی بی سی کے نامہ نگار الا اسوفو کا کہنا ہے کہ مرنے والوں میں نائجیریا سے تعلق رکھنے والے حاجیوں کی بڑی تعداد شامل ہے۔

இந்த சாலையில் ஒரு விபரீதம் நடப்பதற்கான அனுமானம் இருந்தது காரணம் அந்தச் சாலையில் கூடிய அளவு கடந்த கூட்டம் என்று ஒருவர் கூறுகிறார்.

இந்தச் சாலையைப் பயன்படுத்த வேண்டாம் அதிகாரிகள் கூறிச் சென்றதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகிறார்.

وروى شاهد عيان لـ"العربية" أنه عند الساعة السابعة صباحاً تواجد رجال الأمن في الشارع الذي وقعت فيه الحادثة وسارعوا في تنبيه الحجاج في عدم دخول هذا الشارع الضيق.

கடுமையான வெப்பத்தின் காரணமாக பலி எண்ணிக்கை உயர்ந்து விட்டதாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைத்தானை கல்லெறிகிற இடத்தில் எச்சரிக்கையை கையாளுமாறு ஆயிரத்து நானூறு வ்ருடங்களுக்கு முன்பே பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் (அபூதாவூத்)
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ عَمْرِو بْنِ الْأَحْوَصِ عَنْ أُمِّهِ قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي الْجَمْرَةَ مِنْ بَطْنِ الْوَادِي وَهُوَ رَاكِبٌ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ وَرَجُلٌ مِنْ خَلْفِهِ يَسْتُرُهُ فَسَأَلْتُ عَنْ الرَّجُلِ فَقَالُوا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ وَازْدَحَمَ النَّاسُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ لَا يَقْتُلْ بَعْضُكُمْ بَعْضًا وَإِذَا رَمَيْتُمْ الْجَمْرَةَ فَارْمُوا بِمِثْلِ حَصَى الْخَذْفِ
மக்கள் வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்காததே இம்மாபெரிய விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விபத்து பற்றி பல தவறான வீடியோக்கள் ஊடகங்களில் பரப்பட்டு வருகின்றன. அவற்றை பரப்புவதை நிறுத்துவோம். காஷ்மீரில் இதன் காரணமாக இணையம் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன  
இத்தனை களோபரத்திற்கு நிகழ்வை பற்றி முழு விசாரனைக்கு சவூதி அரசு உத்தரவிட்டிருக்கிறது. விபத்து நடந்த பகுதியில் போக்கு நிறுத்தி மாற்றுப் பாதையில் ஹஜ்ஜின் பிரதான அமல்கள் வழக்கம் போல நடை பெற அரசு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.
இஹ்ராமுடைய ஆடையில் மக்கள் குவியல் குவியலாக சடலங்களாக கிடக்கிற காட்சி அலற வைக்கிறது.
எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இறைவா!
காப்பாற்றுவாயாக! காப்பாறுவாயாக! ஹாஜிகளை பாதுகாப்பாயாக! ஹஜ்ஜை பாதுகாப்பாயாக!
அல்லாஹ் ஷஹீதானவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குவான, இஹ்ராமுடைய உடையில் ஷஹீதான அவர்கள் தல்பியா சொன்னவர்களாக எழுப்பப் படுவார்கள்.
அவர்களுடை குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல அல்லாஹ்வே போதுமானவன்.
காயம் பட்டவர்களுக்கு யா அல்லாஹ் விரைவான நிறைவான நிவாரனத்தை கொடு!
யா உன்னுடைய பூமியில் எஞ்சியுள்ள ஹாஜிகளை உன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்து பத்திரமாக அவரகளது குடும்பத்தாரிடம் சேர்பாயாக!
யா அல்லாஹ் எங்களுக்கு ஏற்பட்ட இந்தச் சோதனையிலிருந்து உயர்த கூலியையும் தகுந்த படிப்பினையை தந்தருள்வாயாக!


2 comments:

  1. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  2. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete