எங்களது உஸ்தாது பூவார் ஹனீப் ஹஜ்ரத் அவர்கள் நேற்று வபாத்தாகி விட்டார்கள். இன்று நல்லடக்கம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமையாக இருப்பதால் பல ஆலிம்களும் நேற்றே சென்று ஹழரத்தைப் பார்த்து விட்டு வந்து விட்டனர் இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெறுகிற ஜனாஸா வில் சுற்றுப் புரத்தில் இருப்போர் கலந்து கொள்ள வாய்ப்புண்டு. வாய்ப்புள்ளோட்ர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம், மற்ற இடங்களில் காயிப் ஜனாஸா தொழுகை, அல்லது ஈஸால் தாவாபு மஜ்லிஸ் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹழரத் அவர்கள் வேலூரு பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் பேராசிரியாராக பல்லாண்டுகள் பணியாற்றினார்கள், முஹக்கிகான ஆலிமாக திகழ்ந்தார்கள்.
No comments:
Post a Comment