إِنَّ اللَّهَ اصْطَفَى
آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ(33)
முஸ்லிம்களின் அடிப்படைகளை தகர்க்க எல்லா வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிற காலம் இது,
( மோசமான விமர்சனங்கள், அச்சுறுத்தல்கள்
இடையூறுகள்)
இந்த முயற்சியில் பலரும் ஈடுபடுகிறார்கள்.
(இந்துத்துத்துவா,
மீடியாக்கள்,
மேற்கத்திய அரசுகள்)
(மஹாராஷ்டிரா மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மாட்டிறைச் சிக்கான தடையானது. உண்மையில் முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளை சிக்கலானதாக ஆக்குவதற்கான முய்றசியேயாகும். இதைப் பயன்படுத்தி பெருமளவில் கலவரங்களை உண்டு பண்ணி விட வேண்டும் என்று திட்ட மிட்ட சக்திகளுக்கு முஸ்லிம்களின் அமைதி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது,
இப்போதும உத்தர பிரதேசத்தில் அடுத்து வருகிற தேர்ந்தலில் ஆட்சியை பிடிக்க நினைக்கிற பிஜேபி அங்கு மதவெறியை தூண்டி விட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பசுமாட்டிறைச்சியை பிரிட்ஜில் வைத்திருக்கிறார் என்று வதந்தியை பரப்பி நெய்டா மாவட்டத்தைச் சார்ந்த அஷ்ரப் என்பவரை கொலை செய்து அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.
இதை எல்லாம் தீவிரவாதத்தின் பட்டியலில் சேர்க்கத் தயாராக இல்லாத மீடியாக்கள் மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு தூக்கு என்ற செய்தியை மட்டும் பிரதானமாக போடுகின்றன,)
அரசியல் ரீதியாலன் சதித்திட்டங்கள் இப்படி ஒரு புறம் நடக்க , முஸ்லிம் சமூகத்திற்குள்ளாகவே பெரும் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்த
சில முஸ்லிம்களே ஈடுபடுகிறார்கள்
(மஹாராஷ்டிரா மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மாட்டிறைச் சிக்கான தடையானது. உண்மையில் முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளை சிக்கலானதாக ஆக்குவதற்கான முய்றசியேயாகும். இதைப் பயன்படுத்தி பெருமளவில் கலவரங்களை உண்டு பண்ணி விட வேண்டும் என்று திட்ட மிட்ட சக்திகளுக்கு முஸ்லிம்களின் அமைதி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது,
இப்போதும உத்தர பிரதேசத்தில் அடுத்து வருகிற தேர்ந்தலில் ஆட்சியை பிடிக்க நினைக்கிற பிஜேபி அங்கு மதவெறியை தூண்டி விட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பசுமாட்டிறைச்சியை பிரிட்ஜில் வைத்திருக்கிறார் என்று வதந்தியை பரப்பி நெய்டா மாவட்டத்தைச் சார்ந்த அஷ்ரப் என்பவரை கொலை செய்து அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.
இதை எல்லாம் தீவிரவாதத்தின் பட்டியலில் சேர்க்கத் தயாராக இல்லாத மீடியாக்கள் மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு தூக்கு என்ற செய்தியை மட்டும் பிரதானமாக போடுகின்றன,)
அரசியல் ரீதியாலன் சதித்திட்டங்கள் இப்படி ஒரு புறம் நடக்க , முஸ்லிம் சமூகத்திற்குள்ளாகவே பெரும் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்த
சில முஸ்லிம்களே ஈடுபடுகிறார்கள்
(தவ்ஹீத் போர்வையிலுள்ள அமைப்புக்கள் – தம்மை உயர்வாக நினைத்துக் கொள்ளும் குழு மனப்பான்மை கொண்ட ஆலிம்கள்)
இந்த உட்புற சக்திகள் ஏற்படுத்தும் குழப்பங்கள் தான் முஸ்லிம்களின் மனோபலத்தை வெகுவாக பாதித்து மக்களிடையே மேலும் பிளவை ஏற்படுத்து கின்றன.
முஸ்லிம்களின்
பெருநாளிலிருந்து கபரஸ்தான் வரை வாழ்வு நிலையை மேலும் சிக்கலாக்கி காட்டுகின்றன,
இஸ்லாமின் அடிப்படைகளை தகர்க்கும் இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் அது முஸ்லிம் உம்மத்திற்கு பலத்த சோதனையாக அமையும்,
இந்தச் சதி முயற்சிகளை தடுக்கும் சக்தி ஆலிம்களால் மட்டுமே சாத்தியமானது,
காரணம் தீனின் அடிப்படைகளையும் அதில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் தூர நோக்கோடு உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் அவர்களே! தீனைப் பாதுகாக்கும் பொறுப்பை தமது தோளில் சுமந்து கொண்டவர்களும் அவர்களே!
ஆலிம்கள் தமது இந்த கடமையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள் எனில் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டியது சமுதாயத்தினுடையவும் தலைவர்களுடையவும் பொறுப்பாகும்.
முஸ்லிம்கள் குழப்பம்
அடையத் தேவையில்லாத அளவு தெளிவான மார்க்கத்தை முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் நமக்கு தந்துள்ளார்கள்.
َنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ
أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ يَقُولُ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا
الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا
تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا
لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا
كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ
الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ
عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ
انْقَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ
الْمِسْمَعِيُّ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا
بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ –
إبن ماجة – 45
அந்த வகையில் சமுதாயத்திற்கு தெளிவை தர க்கூடிய ஒரு பிரதான கருத்தை இன்றை ஜும்ஆ உரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.
நமது மார்க்கத்தின் பாரம்பரியம் என்பது சிறந்த முன்னோர்களின் வழி தீனைப் பின்பற்றுவதாகும்.
அல்லாஹ் நினைத்திருந்தால் நம்மில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு மலக்கை அனுப்பி நமக்கு தேவையான வழிகாட்டுதல்களை தர முடியும்,
அல்லாஹ்வுக்கு அந்த சக்தி இருக்கிறது
நம்மில் ஒவ்வொருவரையும் மஹ்ஷருக்கு கொண்டு வருவதற்கு ஒரு மலக்கையும் சாட்சி சொல்வதற்கு ஒரு மலக்கையும் அல்லாஹ் வைத்திருக்கிறான்,
وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ(21)
நபி மார்களுக்கு வஹியை கொண்டு சேர்க்கிற ஜிப்ரயீல் அலை ஆண்டுக்கு ஒரு நாள் நம்மை தேடி இறங்கி வரவே செய்கிறார்.
تَنَزَّلُ الْمَلَائِكَةُ
وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ
அல்லாஹ் நினைத்திருந்தால் அவ்வப்போது நமக்கு தேவைப்படுகிற வழிகாட்டுதல்களை நேரடியாக மலக்குகளின் மூலம் நமக்கு தர முடியும்
ஆனால் அப்படிச் செய்யாமல் மனிதர்களில் சிறந்தவர்கள் தேடித்தேர்ந்தெடுத்து அவர்களை நபியாக அனுப்பி அவர்கள் மூலம் மக்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்கினான்.
இது வே அல்லாஹ்வின் நடை முறையாகும்.
إِنَّ اللَّهَ اصْطَفَى
آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ(33)
இஹ்தார் என்ற வார்த்தைக்கு ஏதாவது ஒன்றை
தேர்ந்தெடுத்தல் என்று பொருள்.
ஒரு தட்டில் டீ யும் குளிர்பானமும் இருக்கிறது,. அதில்
டீ தேர்ந்தெடுப்பது இஹ்தியார்.
ஒரு தட்டில் பலவகைப்பட்டது இருக்கிறது. அதில்
சிறந்ததை பொறுக்கி எடுப்பது இஸ்திபா
அல்லாஹ் மிகச்சிறந்த மனிதர்களை நபிமார்மார்களாகத்
தேர்ந்தெடுத்தான்,
அவர்களை முஃஜிஸாக்களைக் கொண்டு உறுதிப்படுத்தினான்,
அந்த முஃஜிஸாக்கள் நபியை மறுக்க முடியாத
வகையில் வலுவானவையாக அமைந்தன.
சாலிஹ் அலை அவர்களின் சமூகத்தினர், விளையாட்டாக
இந்தப் பாறையிலிருந்து ஒரு கர்ப்பிணி ஒட்டகை வர வை பார்க்கலாம் என்றார்கள்,
வந்தது.
ஈஸா அலை அவர்கள் இறந்தவனை உயிர்ப்பித்தார்கள்,
ஒரு இளைஞனுடைய பிரேத ஊர்வலம் சென்று கொண்டிருந்தது, அவனுடைய
தாய அதன் பின்னே அழுதபடி ஓடிக்கொண்டிருந்தாள், ஈஸா அலை அவர்கள்
அந்த பிரேதத்தை பார்த்து قم قم என்றார்கள் அவன் உயிர் பெற்று எழுந்தான்,
ஊர்க்காரர்களுக்கு ஆச்சரியம் என்றாலும் சந்தேகப்பட்டார்கள், இது நாடகமோ என நினைத்தார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அடக்கம் செய்து பல நூறு ஆண்டுகளை கடந்த சாம் பின் நூஹின் மண்ணரையிலிருந்து அவரை எழுப்பிக் காட்டினார். (குர்துபி) وَأُحْيِي
الْمَوْتَىٰ بِإِذْنِ اللَّهِ ۖ
فلما رأوا ذلك قالوا : إنك تحيي من كان موته قريبا فلعلهم لم
يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح . فقال لهم : دلوني على قبره ، فخرج
وخرج القوم معه ، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه
நபிமார்கள் தெளிவான அற்புதங்களை செய்து காட்டினார்கள், அதன் பிறகு அவர்களை நிராகரிப்பது முடியாது எனும் அளவுக்கு தெளிவான அற்புதங்களாக அவை இருந்தன,
இவ்வாறு
முஃஜிஸாக்களால்
உறுதிப்படுத்தப்பட்ட
மனிதர்களையே அல்லாஹ் மனித குலத்தின் வழிகாட்டிகளாக ஆக்கினான்.
அந்த
மனிதர்கள் சுட்டிக்காட்டிய திசையில் செல்வதே இஸ்லாமாகும். நபிமார்களுக்குப் பின் அவருடைய தோழர்கள் அவர்களுக்குப் பின் அவர்களைப் பின் பற்றியோர் என வழி வழியாக சிறந்த மனிதர்களைப் பின்பற்றுவதே தீனாகும்
நல்ல
மனிதர்கள காட்டித் தந்த வழியில் செல்வதே தீன் என்ற அடிப்படை தத்துவம் ஆதம் அலை அவர்களிலிருந்து நடையில் கையாளப்பட்டுவருகிற சத்திய மாகும்.
யாகூப்
அலை தனது இறுதி நிமிடங்கள் மக்களை அழைத்து யாரை வணங்கு வீர்கள் என்று கேட்டார்கள்.
அவருடைய
மக்கள் அல்லாஹ்வை வணங்குவோம் என்று ஒற்றை வரியில் பதில் சொல்ல வில்லை வில்லை
அவர்கள்
சொன்ன பதிலை திருக்குர் ஆன் காட்டுகீறது.
أَمْ كُنتُمْ شُهَدَاءَ
إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي
قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ
إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ(133)
நாங்கள் உன்னுடைய இறைவனை , உனது முன்னோர்களான இபுறாகீம். இஸ்மாயீல் இஸ்ஹாக், (அலை) ஆகியோருடைய ஒரே இறைவனை வணங்குவோம் என்றார்கள்.
இதை ஒரு சராசரியான பதிலாக அல்ல. தீனின் மரபாக பார்க்க வேண்டும்.
தீன் என்பது அல்லாஹ் ரசூலுக்கு உகந்த சிறந்த மனிதர்களை பின் பற்று வதாகும்.
நீங்களோ,
நானோ தீனை எப்படி படித்துக் கொண்டோம்?
.புத்தகத்தைப் பார்த்தா ஒளு செய்து பழகினோம்?.
தொழுக்
கற்றுக் கொண்டது ஆட்களைப் பார்த்தா ? ஹதீஸ்களைப் பார்த்தா?
நெஞ்சைத்
தொட்டு பதில சொல்ல வேண்டும்.
ஆட்கள்
வழியாகத்தான் மார்க்கம் நமக்கு கிடைத்தது.
ஆம்!
அந்த ஆட்கள் சரியானவர்களா என்பதை தேடிப்பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நம்முடைய
இமாம்கள், மார்க்க சட்ட நூல்களின் ஆசிரியர்கள், முன்னோடிகள் என நாம் சிறப்பானவர்களாக கருதும் அனைவருமே அவர்களுடைய பலம் பலவீனம் ஆகிய அனைத்தும் நம் கண் முண்ணே திறந்த புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிற நிலையில் இவர்கள் சிறந்தவர்கள் என முடிவு செய்து அவர்கள் சொல்வதை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
உங்களுடைய
ஊரில் மாநிலத்தில் நாட்டில் மார்க்கத்தை சொன்ன முன்னோடிகள் யார்? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் ?
தீன் விசயத்தில் அவர்களது அக்கறை என்ன என்பதை கொஞ்சம் சீர் தூக்கிப் பாருங்கள். அவர்கள் மார்க்கத்தை எப்படி நடை முறைப் படுத்தி னார்கள் என்பதை கவனியுங்கள் , அதையே மார்க்கமாக கருதிச் செயல்படுங்கள், அதுவே மார்க்கத்தின் பின்பற்றும் சிறந்த நடை முறையாகும்.
இதற்கு
மாற்றமாக யாராவது புதிதாக ( முப்ததிஃகள்) வந்து புரட்சியாக சொல்வதாக நினைத்துக் கொண்டு நீங்கள் பாரம்பரியமாக செய்து வருகிற செயலை விமர்ச்சிப்பார்கள் – குறை சொல்வார்கள் எனில் முன்னோர்களையும் இவர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
உதாரணத்திற்கு மீலாது
மவ்லூது தர்ஹா சியாரத்து தொழுக்கைகளுக்குப் பின் துஆ ஓதுவது, ஜனாஸா தொழுகைக்குப் பின் துஆ ஓதுவது ஆகிய விசயங்களில் – இவை எல்லாம் பித் அத் து என்று சொல்லிக் கொண்டு சில ஆலிம்களே பேசுகிற போது சமுதாயம் குழப்ப மடையந்து விடக் கூடாது
அவசர
கதியில் இதை புரட்சி என்று கருதி அவர்களுக்குப் பின்னே சென்று விடக் கூடாது. அது தெளிவான வழி கேடாகும்.
நின்று
நிதானித்து யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த நடைமுறைகள் விவரமில்லாதவர்களால் தொடங்கப்பட்ட செயலா? அல்லது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆலிம்களின் செயலா என்பதை
யோசித்து ப் பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு மீலாது
மவ்லூது தர்ஹா சியாரத்து தொழுக்கைகளுக்குப் பின் துஆ ஓதுவது, ஜனாஸா தொழுகைக்குப் பின் துஆ ஓதுவது ஆகிய விசயங்களில் வேலூர் அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாஹ் உட்பட தென்னிந்தியாவின் அனைத்து மதரஸாக்களும் (விதி விலக்காக இருந்த ஒன்றிரண்டு தவிர) ஆதரவான கருத்துடையவர்களே ! தமிழ்கத்தின் மூத்த முன்னோடி ஆலிம் பெருமக்கள் அனைவரும் இந்த நடைமுறைகளை தம் வாழ்வில் செயல்படுத்தியவர்களே !
இவ்வாறு
ஆலிம்களின் ஆங்கீகரிக்கப்பட்ட நடை முறையில் இருக்கிற ஒரு செயலை யாராவது ஒருவர் புதிதாக வந்து மறுப்பாரானால் – இத்தகைய பிரச்சனையை ஆலிம்கள் முன் வைத்து தீர்வு காணாமல் மக்களிடையே நேரடியாக கொண்டு வருவாரானால் அவரை ஒரு முப்ஸித் குழப்ப வாதி என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.
போதிய
தெளிவும் ஆய்வும் செய்யாமல் தம் மனம் விரும்பிய படிக்கு இத்தகையோருக்கு ஆதரவு தரும் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் செய்கிற தீமையாகும்.
போலி
தவ்ஹீதிய அமைப்புக்களுக்கும், சில ஆலிம்களுக்கும் மக்களில் ஒரு சாரார் யோசிக்காமல் கொடுக்கிற அதரவு முஸ்லிம்களின் நகரங்களுக்குள்ளும். சமூகத்திற்குள்ளும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி அமைதியை சிதைக்கின்றன,
உங்களுக்கு
பிடித்த படி, அல்லது அவர்களது மனதுக்கு தோன்றியதை அல்லது அவர்கள் சீர்திருத்தம் என்று கற்பனை செய்து கொண்டு சொல்வதை நீங்கள் மார்க்கம் என்று ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் அதன் எதிர் விளைவாக யாரை மார்க்கம் அற்றவர்கள் என்று சொல்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்!.
தீனின்
பெயரைச் சொல்லியே தீனுக்கு குழி பறிக்கிறவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வதில் சமுதாயம் அலட்சியமாக இருந்து விடக் கூடாது.
கடந்த
சில வருடங்களுக்கு முன் ஒரு பள்ளிவாசல் தலைவர் பரா அத் அன்று போன் செய்து “ மஃரிபுக்குப் பிறகு யாசீன் ஓதுகிறோமே அதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்டார், எதற்கு என்றேன், எங்களது இமாம் ஓதக் கூடாது என்கிறார் அவரிடம் பேச என்றார், யாசீன் ஓதுவது ஒரு தடவை அல்ல. நூறு தடவை ஓதுவது , அதுவும் மஃரிபுக்குப் பின்னே இஷாவுக்குப் பின்னோ ஓதுவது கூடும் என்பது கேள்விக்குரிய ஒரு விஷயமே அல்ல. நீங்கள் ஒரு தலைவராக இருந்து கொண்டு இமாமிடம் தர்க்கம் செய்வது சரியல்ல. அவரிடம் இப்படிக் கூறுங்கள். “ இத் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், மற்ற சுன்னத் ஜமாத் பள்ளிவாசலகளில் நடை பெறுகிற நடை முறை இங்கும் இருக்க வேண்டும். உங்களுக்கு இது விசயத்தில் கருத்து வேறுபாடு இருக்குமானால் நீங்கள் ஆலிம்கள் ஒன்றாக பேசி ஒரு முடிவெடுத்து தெரிவியுங்கள். அதை நாங்கள் பின்பற்றுகிறோம். அப்படி இல்லாமல் நீங்களாக தன்னிஷ்டத்திற்கு ஒரு முடிவை செய்து ஜமாத்தை குழப்பத்தில் ஆழ்த்தி விடாதீர்கள், உங்களை இமாமாக சேர்த்த்தற்காக எங்களுக்கிடையில் பிளவை உண்டு பண்ணி விடாதீர்கள் என்று சொல்லுங்கள் என அந்த தலைவருக்குச் சொன்னேன்,
அவர்
இது நல்ல யோசனை என்றார்,
நான்
சொன்னேன். இது என்னுடைய யோசனை அல்ல. இது தான் மார்க்கத்தை கடைபிடிக்க மார்க்கம் கற்றுத் தந்த வழி முறை,
சிறந்தவர்களைப் பார்த்து
தீனை கடைபிடிப்பது,
எங்களுக்கு
நேர்வழி காட்டு என்று கேட்கிற பாத்திஹா அத்தியாயத்தின் பிரார்த்தனை, அடுத்து என்ன வார்த்தைகளை சொல்லுகிறது என்பதை கவனித்துப் பாருங்கள்
உன்னுடைய
அருளைப் பெற்றவர்களின் வழி!
உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்களுடைய வழி அல்ல. வழி தவறிச் சென்றவர்களுடைய வழியுமல்ல.
யா
உன்னுடைய நேர் வழி என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு போயிருக்கலாமே!
நல்லவர்கள்,
தீனில் சிறந்தவர்களுடைய வழி முறைய கடை பிடிக்க வேண்டும். தீனில் குழப்பம் செய்து பிரிந்து போகிறவர்களுடைய வழியை தவிர்க்க வேண்டும் என்ற பிரதான வழிகாட்டுதலை இது தருகிறது.
வாதம்
பேசுகிறவர்கள்
எப்படி வேண்டுமானாலும் பேசலாம் . சமுதாயம் எச்சரிக்கை அடைய வேண்டும். வார்த்தை நியாயம் போல தெரியலாம். நியாயம் வார்த்தை களில் அல்ல,
கத்ரிய்ய
என்றொரு பிரிவினர் ஒரு காலத்தில் முஸ்லிம்களில் இருந்தனர்,
அவர்கள்
ஒவ்வொரு தொழுகையின் பாங்கிலும் அஸ்ஸலாத்து கைருன் மின னவ்ம் என்று கூற வேண்டும் என்றனர்,
அதற்கும்
அவர்களிடம் ஒரு நியாயம் இருந்தது,
ஏனெனில்
மக்கள் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்கள்,
சிறந்த
முன்னோர்களின்
வழி மார்க்கத்தைப் பின்பற்றுதல்
என்ற உஷாரன நடையும் தெளிவும் நம்மிடம் இல்லை என்றால் சீக்கிரத்தில் இத்தகைய சாத்தானிய வாதங்களில் நாம் சரிந்து விடுவோம்.
அதே
போல வாதம் செய்வோர் தமக்கும் சார்பாக சிலரைக் காட்டலாம் சில நூல்களை நிட்டலாம். ஆனால் அவை கருத்து வேறுபாடுகளின் ஒரு சிறிய அம்சம் என்பதை தவிர வேறு இல்லை. அந்த கருத்து வேறுபாட்டை நமது
முன்னோர்கள் ஏற்க வில்லை என்பதை கவனிக்க வேண்டும், ஏற்கப்படாத அந்தக் கருத்துக்களை கொண்ட் வந்து சமூகத்தில் திணிப்பவர்களை போலி ரூபாய நோட்டுக்களை புழக்கத்தில் விடுகிறவர்கள் என்று தானே சொல்ல வேண்டும்.
ஒரு
தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது ஹதீஸீன் கருத்து. அதையே
மார்க்கத்தின்
அத்தனை முன்னோடிகளும் சஹாபாக்களிலிருந்தும் அவர்களுக்குப் பின் வந்த தாபிஃகள் தபவுத்தாபிஃகள்லிருந்தும் இமாம்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
மார்க்கத்தின் முன்னோடிகள் மிகப் பெரும்பான்மையாக ஒன்றாக ஒப்புக்கொண்ட முடிவு இது என இப்னு ஹஸ்ம் கூறுகிறார்.
اتفق العلماء من السلف والخلف على أن الزكاة تتكرر
بتكرر الأعوام على الأموال من الذهب والفضة ونحوها .
قال ابن حزم في مراتب الإجماع : " واتفقوا على أن الزكاة تتكرر
في كل مال عند انقضاء كل حول
,
அன்றிலுர்து இன்று வரை இதற்கு மாற்று நடைமுறை சமுதாயத்தில் இல்லை,
நிலமை
இப்படி இருக்கிற போலி தவ்ஹீதிய அமைப்புக்கள் வெளியிடும் பத்ரிகை சொல்கிறது,
2005 ல் கடைய நல்லூரில் கூடிய எங்களது அறிஞர் குழு ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு இரண்டாவது தடவை ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ப்தையே சரியானது என்று முடிவு செய்கிறது,
புத்தியுள்ளவர்கள் யோசிக்க
வேண்டாமா ?
இந்த
அறிஞர்கள் (?) யார் ? இவர்களுடைய தகுதி என்ன ? இவர்கள் சத்தியவான்களா? இவர்களில் ஒருவருக்கொருவர் மோசடிப் பேர்வழிகள் என்றும் களவானிகள் என்றும் ஏசிக் கொண்டவகளாயிற்றே!
இவர்களின்
கூட்டு ஆய்வும் அதன் முடிவும் மார்க்கமாகுமா?
இதை
ஏற்றுக் கொள்வதன் மூலம் இது காறும் தகுதியும் திறமையும் மிக்க நமது முன்னோர்களை ஒதுக்கி தள்ள வேண்டியது வருகிறதே என்ன செய்ய?
சமுதாயம்
சற்று சிந்திக்கும் என்றாலும் தெளிவு அதன் காலடியில் இருக்கும்.
நாம்
நமது சிறந்த முன்னோர்களின் வழி மார்க்கத்தை பின்பற்றுவோம். அவர்களே இறையருள் பெற்ற சீதேவிகள்
அல்லாஹ்வின்
சாபத்திற்கு ஆளனவர்களுடைய வழியையும் , வழி தவறியவர்களுடைய வழியையும் புறக்கணிப்போம்.
இன்றைய சமுதாயத்தின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும்.
விஞ்ஞான ஊடகங்களின் வளடர்ச்சியின் பின்னணியில் முஸ்லிம் சமுதாயம் அறிவும் தெளிவும் பெற்றதை விட குழப்பமடைந்ததே அதிகம். பிளவுகளுக்கு ஆளானதே அதிகம். அதற்கு காரணம் இந்த தெளிவை தவற விட்டதே யாகும்,
இந்த தெளிவை உறுதியாக விளங்கிக் கொண்டு அதன் படி நடந்தால், “நாங்கள் யார் பேச்சைத்தான் கேட்பது? இவர் அப்படி பேசுகிறார். அவர் இப்படி பேசுகிறார், எங்களது பள்ளியின் இமாமே இப்படிச் செல்லுகிறார் அந்தப் பள்ளியின் இமாம் அப்படிச் சொல்லுகிறார் என மக்கள் குழப்பமடைய த் தேவையிருக்காது,
இன்றைய நடைமுறை எதார்த்தத்தை படம் பிடித்துக்காட்டுகிறது பதிவு.மாஷா அல்லாஹ்.
ReplyDeletesyed sulthan by telgram
மாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteவரலாறு பேசும் நல்ல பதிவு
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ் காலத்திற்கேற்ற கருத்து.
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ் அருமையான எதார்த்தத்தை விளக்கும் கட்டுரை
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ் அருமையான எதார்த்தத்தை விளக்கும் கட்டுரை
ReplyDelete